முதற்கண் நீங்கள் கம்யூனிஸ்ட் இல்லை-அதேபோல் நீங்கள் குறிப்பிடும் அவர்களும் முழுமையாக கம்யூனிச வழிபட்டவர்கள் அல்ல... நீங்களோ பெரியாரை உயர்த்தி பிடித்துக் கொண்டே கம்யூனிஸ்டாக நடிக்க பார்கிறீர்கள். பெரியார் அடிப்படையில் மார்க்சிய(தத்துவத்தை)த்தை மறுத்தவர் அவர் அன்றைய ஏகாதிபத்திய சீர்திருத்தத்தையே கொள்கையாய் கொண்டவர். ஆகையால் நீங்கள் பேசுவதும் உங்கள் எழுத்துகளும் எள்ளவும் கம்யூனிசதிற்கும் கம்யூனிச நடைமுறைக்கும் எந்த தொடர்பும் அடிப்படையும் இல்லை. ஆக நீங்கள் எப்படி பெரியார் பின்னால் ஒளிந்துக் கொண்டு கம்யூனிஸ்டாய் நடிக்கிறீர்களோ அதேபோல் நீங்கள் எதிர்க்கும் அவர்கள் மார்க்சியம் காட்டும் வழிமுறையை பின்பற்றாமல் திருத்தல்வாதிகளாகவும் சீர்திருத்தவாதிகளகவும் ஏன் புரட்சியை மறுத்த கூட்டத்தை பற்றி அன்று லெனின் கூறீய எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளோர் எப்படி கம்யூனிஸ்டாக இருக்க முடியும்? இன்று உழைக்கும் எழை எளிய மக்கள் வாழவே முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். அதற்கெதிராக போராடாமல் ஆளும் வர்க்கதிற்கேற்ற வகையில் செயல்படும் இவர்கள் எந்த வர்க்க நலனுக்கு போரிடுகின்றனர் அவர்களுக்கே வெளிச்சம்
கம்யூனிஸ்டுகள் யார்? கம்யூனிசத்தின் பெயரில் ஏமாற்றும் கூட்டம் எது?
2000ம் ஆண்டு பாரிஸ் நகரில் இருந்து புறப்பட்ட வேறொரு விமானத்தில் இருந்து ஒரு அடி நீளமுள்ள ஒரு விமான துண்டு பாகம் கீழே ஓடுதளத்தில் விழுந்துவிட்டது. யாரும் கவனிக்கவில்லை. ஐந்து நிமிடம் கழித்து அதே ஓடுபாதையில் இருந்து அதி வேகத்தில் கிளம்பிய கன்கார்ட் விமானத்தின் டயரில் அந்த உலோக துண்டு மாட்டி, டயர் வெடித்து விமானத்தின் அடிபாகத்தை தாக்கி, அது எரிபொருள் டேங்கை தாக்கி, இடது என்ஜின் தீப்பிடித்து, மேலெழும்பிய விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து என்று சில நிமிடங்களில் 113 நபர்களை பலி வாங்கி விமானம் சாம்பலாகிப் போனது.
+++
விக்ரமாதித்தனிடம் இதை சொன்ன வேதாளம் உன்னிடம் இப்போது ஒரு முக்கியமாக கேள்வி என்று ஆரம்பித்தது..
விடுதலை சிறுத்தைகளுக்கு வாக்கு வங்கி என்று பெரிதாக இல்லை என்றாலும் நாலு சீட்டு கொடுத்தால் திருமாவை தலைவர் என்று நம்பும் பட்டியலின மக்களின் வாக்கை தமிழகம் முழுவதும் இருந்து பரவலாக பெறலாம் என்பது கணக்கு. கொங்கு பெல்ட்டில் எல்லா கட்சிகளுமே எப்படியும் யாராவது கொங்கு ஆளைத்தான் நிறுத்தும், அதனால் கொங்கு தேச மக்கள் கட்சிக்கு ஒரு சீட்டு கொடுத்தால் அதை வைத்து மற்ற இடத்திலும் கொங்கு ஓட்டு வாங்கலாம் என்று ஒரு கணக்கு இருக்கலாம். அட டிடிவி தினகரனுக்குக் கூட அவர் சொந்த ஊரில் கணிசமாக ஓட்டு இருக்கும் அவருக்கு ஒரு சீட்டு கொடுப்பதில் உள்ள நியாயத்தை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த வைகோ கட்சி, விஜயகாந்த் கட்சி, கமல் கட்சி இதற்கெல்லாம் எதற்காக சீட்டு கொடுக்கப் படுகிறது. மூன்றுமே எதற்கு என்று யாருக்குமே தெரியாமல், ஒத்தை மனிதனின் ஈகோவை திருப்திப் படுத்த என்று இயங்கிக் கொண்டிருக்கும் உப்புமா கட்சிகள். அவைகளின் மொத்த தொண்டர்களையும் ஒரு டெம்போவில் ஏத்தினாலும் மிச்சம் பத்து பேருக்கு இடம் இருக்கும் அளவுக்குதான் தொண்டர் பல(வீன)ம். தனியாக நின்றால் வாக்கை பிரித்து எந்த ஒரு கட்சிக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு தனி வாக்கு வங்கியோ செல்வாக்கோ இல்லாதவை. அப்படியிருக்க இந்த கட்சிகளை எல்லாம் ஒரு பொருட்டாக மதித்து எதற்காக பெரிய கட்சிகள் சீட்டு கொடுக்கிறார்கள்?
பத்து பைசா பெறாத சின்ன உலோக துண்டுகள்தான் ஆனால் இதையெல்லாம் ரன்வேயில் அனாதையாக விட்டுப் போனால் ஒரு வேளை டயரில் மாட்டி எழவைக் கூட்டினாலும் கூட்டும், அதற்கு பதிலாக அதை பொறுக்கி டிக்கில பத்தோட ஒன்னு பதினொன்னுன்னு மத்த ஸ்பேர் பார்ட்ஸ்ல ஒன்னா போட்டுட்டு போவோம், அது பாட்ல கிடக்கட்டும் அதான் நமக்கு சேஃப்டி என்று பெரிய கட்சிகள் நினைக்கிறதா?
இதற்கு பதில் தெரிந்தும் சொல்லாமல் போனால் வரும் தேர்தலில் முதல்வர் விஜய்தான் என்றது...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இலக்கு இதழின் கட்டுரைகள்
செய்தியை சார்ந்த அலசல்
-
தோழர்களே இலக்கு இதழாசிரியர்களான நாங்கள் நடந்து முடிந்த தேர்தலில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி/குழுவின் பணியை புரிந்துக் கொள்ள ஆசான் லெனின் நூல்களைய...
-
முந்தைய பகுதியின் தொடர்ச்சியே ..... இங்குள்ளோர் பலவகையில் கம்யூனிசம...
-
இலக்கு இணைய இதழில் உள்ளவை மார்க்சிய லெனினிய கல்விக்கான விவாதத்திற்கான, அடிப்படைகளை கொண்ட கட்டுரைகளும் பல்வேறு மார்க்சிய முன்னோடிகள்னின் எழ...
-
இலக்கும்- இலக்கு இணையதள தொடங்கியதிலிருந்து இன்றுவரை நாங்கள் எங்களை திரும்பிப் பார்க்கிறோம்... இலக்கு பத்திரிக்கையின் தொடக்கம் மற்றும் பணி...
-
இந்த பகுதியில் ஒவ்வொரு பகுதியின் தலைபின் கீழ் உள்ள இணைப்பை அழுத்தினால் அந்தப்பகுதி ஒலி வடிவில் கேட்க முடியும் தோழர்களே. வாசிக்க நேரமில்லாதோர...
-
இந்திய கம்யூனிஸ்டுகளின் தத்துவ-நடைமுறை நெருக்கடி பற்றிய விரிவான அலசலும் இடம்பெற்றுள்ளது கம்யூனிஸ்டுகள் யார்? அவர்களின் வரலாற்றுப் பணி என்ன?...
-
ஆசான் லெனினை பயிலுதல் என்றால் அவரின் வழிகாட்டுதல் அவரின் செயல் முழுமையாக புரிந்து செயல்படலுக்கே இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை...