கட்சி தோழர்கள் மத்தியில் காணப்படும் அடிப்படையிலேயே பிழையான கருத்துகள் யாவை.
கட்சியில் சேருபவர்கள் வெவ்வேறு வர்க்கத்திலிருந்து வந்தவர்களாக இருப்பதுடன் தமது வர்க்க நிலையிலும் மாறுபட்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தம்முடன் வெவ்வேறு வகையிலான நோக்கங்களையும், தப்பெண்ணங்களையும் கட்சிக்குள் கொண்டு வருகின்றனர். கம்யூனிசத்தை கொண்டு வருவதற்காகவும், பாட்டாளி வர்க்கத்தையும் முழு மனிதகுலத்தையும் விடுவிக்கும் மகத்தான லட்சியத்திற்காகவும் பலரும் கட்சியில் சேர்க்கின்றனர் என்பது உண்மை தான். ஆனால், சிலர் வேறு காரணங்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் சேர்க்கின்றனர் என்பதும் உண்மைதான். எடுத்துக்காட்டாக விவசாயி பின்னணி கொண்ட சில தோழர்கள் உள்ளூர் கொடுங்கோலர்களின் உடமைகளை பறிமுதல் செய்வதும், நிலங்களை விநியோகிப்பதும் தான் கம்யூனிசம் என்று நினைக்கின்றனர். முதலில் அவர்கள் நம்மோடு சேரும்போது கம்யூனிசத்தின் உண்மையான பொருள் என்னவென்று அவர்களுக்கு புரிந்து கொள்வதே இல்லை. இன்னும் சிலர் தமக்கென ஒரு எதிர்காலத்தை பெற விரும்பி கட்சியில் சேருகின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு வாழ்வதற்கு எந்த வழியும் இல்லை. நிரந்தரமான தொழில் ஏதும் அவர்களுக்கு இல்லை. வேலை இழந்து தவிக்கின்றனர். கல்வி கற்க வழியில்லை அல்லது குடும்பத்தில் இருந்து பிரச்சனை. இன்னும் சிலர் எதிர்காலத்தில் தான் பிரபலம் அடைந்து விடலாம் என்று கருதி தமது நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து விட்டால் கட்சியில் இணைந்தனர். இத்தகைய தோழர்கள் தெள்ளத் தெளிவானதும் உறுதியானதும் கம்யூனிசம் உலக கண்ணோட்டம் இல்லாமல் இருக்கின்றனர். கம்யூனிச லட்சியத்தின் வல்லமை அதை அடைவதில் உள்ள அளவிடமுடியாத இடையூறுகளைத் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர் என்பதெல்லாம் உண்மைதான். உறுதியான பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை எடுப்பதில் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர் என்பதெல்லாம் இயல்புதான். இவர்களில் சிலர் ஊசலாடுபவர்களாகவும் சூழ்நிலைகளில் சில நெருக்கடியான சந்தர்ப்பங்களில் சந்தர்ப்பவாதமாக மாறிக்கொள்ளும் நடக்க கூடியராவதும் எல்லாவகையான கருத்துகளையும் கட்சிக்குள் அவர்கள் கொண்டு வருவதால் அவர்களுக்கு கற்பிப்பதும், பயிற்சிப்பதும் மிக மிக அவசியம். அவர்களும். தம் பங்குக்கு தம்மை புடம் இட்டுக் கொள்வதும் அவசியம். அப்படி இல்லாவிட்டால் அவர்களால் பாட்டாளிவர்க்க புரட்சிப் போராளிகள் ஆக முடியாது.
தனி நபர் வாதம், careerism, அதிகாரத்துவம், தாராளவாதம், பொறுப்பின்றி இருத்தல், பழிவாங்கும் தன்மை, புகழ் நாட்டம், தன்னை முன்நிறுத்திக் கொள்வது, தோழர்களுக்கு பயிற்றுவிக்க தவறுவது ஆகியவற்றை குறிப்பிடுகிறார்.
பல வகையான நபர்கள் கட்சியில் சேருகின்றனர். கம்யூனிசத்தை கொண்டு வருவதற்கு, நிலப் பங்கீட்டை உறுதி செய்ய, ஏன் வரிகளை குறைக்க, கட்சி மிக உயர்ந்த அமைப்பு என்ற கனவில், போரை நிறுத்த, தனது சொந்த எதிர்காலத்தை உறுதி செய்ய, சொந்த வாழ்க்கை ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பிக்க கட்சியில் சேருகின்றனர். அவர்களுக்கு திருத்தமான ஒரு பாட்டாளி வர்க்க உலகப் பார்வை இல்லாமல் இருக்கலாம். ஆனால் பரவாயில்லை, அதை அவர்கள் கட்சிக்குள் கற்றுக் கொள்வார்கள். கட்சியில் தவறுகளை களையும் வகையில் அவர்களை பயிற்றுவிக்கலாம். துரோகிகளையும், உளவாளிகளையும் மட்டுமே வெளியேற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்சி வாழ்க்கையை விட்டு வெளியேறுவதற்கு யாருக்கும் உரிமையும், சுதந்திரமும் உள்ளது. ஆனால் உள்ளே வருவதற்கு உரிமையும் சுதந்திரமும் இல்லை.
சில உறுப்பினர்களிடம் தனிநபர் வாதமும், சுயநலமும் வெளிப்படுகிறது. இரண்டாவதாக, குறுங்குழுவாதம், தனது குழு, தனது அரங்கு பற்றி மட்டும் சிந்திப்பது, செயல்படுவது. மூன்றாவதாக, தனிநபர் சாகசம், புகழ், ஹீரோ ஆக வேண்டும் என்று நினைப்பது. வேலையை செய்வது நமது கடமை. நமது சாதனைகளை பற்றி பீற்றிக் கொள்ளக் கூடாது. இது கோடிக்கணக்கான மக்களின் கூட்டுத்துவ முயற்சி. ஒருவர் தனியாக புரட்சியை செய்ய முடியாது. இதை புரிந்து கொள்ள வேண்டும்.
spirit of enterprise – பாட்டாளி வர்க்க வகையினதும், தனிநபர் வாத வகையினதும் இடையேயான வேறுபாடு. கட்சி தோழர்கள் தனிநபர் வாத ஹீரோயிச தோழர்களை தலைவர்களாக ஏற்றுக் கொள்வதில்லை அவர்களின் வழிமுறையை அவர்களின் தத்துவ செயல்பாட்டிற்கான கண்ணோட்டத்தைதான் ஏற்கின்றனர் அங்கே தனிநபர் அல்ல தத்துவமும் நடைமுறையும்தான். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ கூட இந்த மகத்தான லட்சியத்திற்கு பங்களிப்பு செய்தனர்.
ஐந்தாவதாக, அற்பவாதம், அற்ப விஷயங்கள் பற்றி சண்டை போடுவது. அன்பு இதற்கு சரியான உதாரணம். இதைப் பற்றி விரிவாக பேச வேண்டுமா?
குட்டி முதலாளித்துவ ஊசலாட்டம், உதிரி வர்க்கத்தின் அழிவு சக்தி சில தோழர்களிடம் வெளிப்படுகிறது.
கட்சிக்குள் கனவுகளோடு வந்த தோழர்கள் இதை எல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி இப்படி இருக்குமா, தோழர்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா என்று சோர்வடைகிறார்கள்.
ஆனால், அது தேவையில்லை. கட்சிக்குள் பல்வேறு வர்க்கங்களில் இருந்து தோழர்கள் வருகின்றனர். தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டம் இங்கு பிரதிபலிக்கிறது. பாட்டாளி வர்க்கத்திலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிரிவு, குட்டி முதலாளித்துவ பிரிவிலிருந்து சேர்பவர்கள், மேட்டுக்குடி என்று பிரிவுகள் உள்ளன. இவற்றின் தாக்கம் உள்ளது.
கட்சிக்குள் இது போன்ற போக்குகள் இருப்பதை நாம் மூடி மறைத்து விட முடியாது.
இந்த தவறான சித்தாந்தம் தொடர்பாகவும், உட்கட்சி போராட்டம் பற்றியும் நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்.
தவறுகளை, குறைகளை, விரும்பத்தகாத அம்சங்களை கண்டு கொள்ள மாட்டார்கள்.
சில உறுப்பினர்கள் தவறான கருத்துக்களை ஏற்றுக் கொண்டு, தவறான முன் உதாரணங்களை பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள்.
சிலர் தவறுகளை திருத்துவதற்கு எதுவும் செய்யாமல் அக்கறையின்றி இருப்பார்கள்.
சிலர் கடும் வெறுப்புடன் தாக்கி தகர்க்க முயற்சிப்பார்கள். பேரழிவை ஏற்படுத்தி விட்டுச் செல்வார்கள். இவர்கள் இந்த குறைகள் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்.
தாராளவாதம், அதிகாரத்துவம் மூலம் தவறுகளை கையாளக் கூடாது. அவற்றின் அடிப்படை காரணங்களை கண்டறிந்து அவற்றை களைவதற்காக போராட வேண்டும்.
கம்யூனிசத்தின் சிறப்பு, கம்யூனிஸ்டுகளின் தனித்தன்மை, கம்யூனிஸ்டுகள் தம்மை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊக்குவிப்பதாகவும், நம்மை மகிழ்விப்பதாகவும் இருக்கும் விஷயங்களை 5-வது அத்தியாயத்தில் ஆரம்பித்து பின்னர் 1-4 அத்தியாயங்களில் முடித்தோம். அடுத்து வருவது இதில் இருக்கும் நடைமுறை சிக்கல்கள், பிறருடன் உறவாடும் போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றியது.
கம்யூனிஸ்ட் என்பவர் உலகைப் பற்றி வியாக்கியானம் சொல்வதாக மட்டும் இல்லை, அவர் உலகை மாற்றி அமைக்க வேண்டும். எனவே, உலகை அறிவியல் ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கட்சியில் உறுப்பினராக செயல்பட வேண்டும். அப்படி செயல்படும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன?
கட்சியின் நலன்களுக்கும், புரட்சியின் நலன்களுக்கும், சமூகத்தின் நலன்களுக்கும் தன்னுடைய சொந்த நலன்களையும் விருப்பு வெறுப்புகளையும் நிபந்தனையின்றி கீழ்ப்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில்நுட்ப வேலைகள் செய்வதில் இருக்கும் தயக்கம், சுணக்கத்தை களைந்து கொள்ள வேண்டும். எல்லா வேலைகளும், மேடையில் பேசுவதோ, பத்திரிகைக்கு எழுதுவதோ, ஆவணங்களை பராமரிப்பதோ, சமைப்பதோ எல்லாமே புரட்சிக்கு பங்களிக்கின்றன என்ற வகையில் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். அவற்றை அவ்வாறு மதிக்க வேண்டும், முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.
அதன் பிறகு 3 அத்தியாயங்கள் கட்சியில் நிலவும் தவறான சித்தாந்தங்கள், அவற்றின் தோற்றுவாய்கள், அவற்றை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றி. அற்பவாதம், தாராளவாதம், கம்யூனிஸ்ட் ஆக வளர்வதை புறக்கணிப்பது இவற்றுக்கு உதாரணங்கள். அதிகாரத்துவம், சொந்த நலனுக்காக கட்சிக்குள் வருவது, அதை அடிப்படையாக வைத்து கம்யூனிசத்தை பயில்வது, புகழ், அதிகாரம் இவற்றின் மீது நாட்டம் வைத்து செயல்படுவது, குறுங்குழுவாதம் என்று பல்வேறு போக்குகள் இருக்கின்றன.
இவை ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருக்கின்றனவா என்று கனவுகளுடன் வந்த இளைஞர்கள் அதிர்ச்சியடையவும், சோர்வடையவும் நேரிடலாம். இவை எங்கிருந்து தோன்றுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உறுப்பினர்களின் வர்க்கப் பின்னணி, பாட்டாளி வர்க்கத்திலேயே இருக்கும் பல்வேறு பிரிவுகள், சமூகத்தில் நிகழும் வர்க்கப் போராட்டம் ஏற்படுத்தும் தாக்கம் இவற்றை புரிந்து கொள்ள வேண்டும். தன்னை மேலும் தீவிரமாக சுய பரிசீலனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் போகும் போது திரிபுவாதத்துக்கான விதை உள்ளே போடப்படுகிறது.
சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? நுலின் 7 வது அத்தியாயம் சில பகுதி