ஹாலந்தின் வர்த்தக ஆதிக்கம் மற்றும் அதன் காலனித்துவ வளர்ச்சி எவ்வாறு ஐரோப்பிய பொருளாதாரத்தை மாற்றியமைத்தது என்பதை இப்பகுதிகள் விளக்குகின்றன. பொதுக் கடன் முறைகள் மற்றும் தேசியக் கடன்கள் அரசாங்கங்களின் மூலம் முதலாளித்துவ சகாப்தத்திற்கு வலுவான அடித்தளமிட்டன. இதன் காரணமாக உருவான அதிகப்படியான வரிவிதிப்பு மற்றும் வர்த்தகப் போர்கள் பொதுமக்களின் உடைமைகளைப் பறித்து அவர்களைக் கடுமையான வறுமைக்குள்ளாக்கின. மேலும், குழந்தைத் தொழிலாளர்களின் கொடூரமான சுரண்டல் மற்றும் அடிமை வர்த்தகம் ஆகியவை ஆரம்பகாலத் தொழிற்சாலைகளின் பெருக்கத்திற்கும் மூலதனத் திரட்சிக்கும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை இந்நூல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இன்றைய வகுப்பில் வாசிக்க வேண்டிய பகுதி ஒலி வடிவில்
நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு மூலதனமாக மாற்றப்பட்டன. காலனி அமைப்பை முழுமையாக வளர்த்திருந்த ஹாலந்து ஏற்கெனவே 1648ல் அதன் வாணிகப் பெருமையின் உச்சியில் நின்றது.
அது, "கிழக்கிந்திய வர்த்தகத்தையும், ஐரோப்பாவின் தென் மேற்க்கும் வட கிழக்குக்கும் இடையிலான வாணிகத்தையும் கிட்டத்தட்ட முழுமையாகத் தன்னிடம் வைத்திருந்தது. இதன் மீன்பிடித் துறை, கப்பற்றுறை, பட்டறை உற்பத்தி ஆகியவை வேறு எந்த நாட்டிலும் இருந்த அவற்றைவிட விஞ்சியதாக இருந்தன. இந்தக் குடியரசின் ஒட்டுமொத்த மூலதனம் ஐரோப்பாவின் இதர பகுதிகள் எல்லாம் சேர்ந்து வைத்திருந்ததைக் காட்டிலும் ஒருவேளை அதிக முக்கியமானதாகும்."
1648க்குள் ஐரோப்பாவின் இதர பகுதிகள் அனைத்திலுமான மக்களைக் காட்டிலும் ஹாலந்து மக்கள் அதிகக் கொடுமையாக ஒடுக்கப்பட்டார்கள், மிகையாக வேலை வாங்கப்பட்டார்கள், மேலும் அதிக ஏழைகளானார்கள் என்பதை இதோடு சேர்க்க மறந்து விடுகிறார் குலிஷ்.
இன்று தொழில்துறையில் தனி முதல் ஆதிக்கம் என்றால் வர்த்தகத்தில் தனி முதல் ஆதிக்கம் என்று பொருளாகும். மறுபுறம் பட்டறைத் தொழில் என்று சரியாகவே அழைக்கப்படும் காலகட்டத்தில் வர்த்தகத் தனி முதல் ஆதிக்கமே தொழில்துறைக்கு உயர் முக்கியத்துவத்தைத் தருகிறது. அந்தக் காலத்தில் காலனி அமைப்பு வகித்த அதி முக்கியமான பாத்திரத்தை இது குறிக்கிறது. ஐரோப்பாவின் பழைய கடவுள்களுடன் அக்கம் பக்கமாக வழிபாட்டு மேடையில் நின்றிருந்த "இந்த விசித்திரமான கடவுள்" அறியாதோர் நாளில் அவர்களை எல்லாம் தள்ளி உதைத்து விரட்டி ஓட்டிவிட்டார். உபரி மதிப்பை உருவாக்குவதே மனித குலத்தின் ஏக லட்சியமும் முடிவும் என்று பிரகடனம் செய்யப்பட்டது.
பொதுக் கடன் அமைப்பு அதாவது தேசியக் கடன்களின் முறை பட்டறைத் தொழில் காலகட்டத்தின் போது பொதுவாக ஐரோப்பாமுழுதிலும் வியாபித்திருந்தது. இதன் தோற்றத்தை மிகவும் முன்பாகவே, மத்திய காலங்களிலேயே நாம் ஜினோவா மற்றும் வெனிஸ் நகரங்களில் காண முடிந்தது. காலனி அமைப்பும் அதனுடன் சேர்ந்த கடல் வாணிகம் மற்றும் வர்த்தகப் போர்களும் இதை வளர்க்கும் கேந்திரங்களாக உதவின. இவ்வாறாக இது முதலில் ஹாலந்தில் வேரூன்றியது. தேசியக் கடன்கள் அதாவது அரசாங்கத்தின்—அதன் வடிவம் ஏதேச்சாதிகார, அரசியல் சட்ட அல்லது குடியரசு அமைப்பு கொண்ட எதுவாக இருப்பினும் சரி —பராதினம் தனது முத்திரையைக் கொண்டு முதலாளித்துவ சகாப்தத்தைக் குறித்தது. இன்றைய மக்களின் கூட்டு உடைமைகளுக்கு உண்மையில் இடம் பெறும் தேசியச் செல்வத்தின் ஒரே பகுதி அவர்களது தேசியக் கடனாகும்.* எனவே இதன் அவசியப் பின்விளைவாக, ஒரு நாடு எத்துணை ஆழமாகக் கடனில் இருக்கிறதோ அந்தளவுக்கு அதிகச் செல்வந்த நாடாகிறது என்ற நவீன போதனை எழுந்தது. பொதுக் கடன் மூலதனத்தின் நம்பிக்கைக் கோட்பாடாகி விடுகிறது. தேசியக் கடன் திரட்டல் பெருகுந்தோறும், தேசியக் கடன்மீதான நம்பிக்கையின் பரிசுத்த ஆவிக்கு எதிரான தெய்வநிந்தனையின் இடத்தைப் பெறுகிறது. இது மன்னிக்க முடியாதது.
தேசியக் கடன் புராதனத் திரட்சியின் ஆக வலிமை வாய்ந்த நெம்புகோல்களில் ஒன்றாக ஆகிவிடுகிறது. மந்திரக் கோலால் தட்டுண்டது போன்று இது வறட்டுப் பணத்திற்கு உற்பத்தி செய்யும் சக்தியை வழங்கி தொழில் துறை அல்லது கடுவட்டிக் தொழிலில் இது ஈடுபடுத்தப்படுவதில் பிரிக்க வொண்ணாத வகையில் நேரக் கூடியதான தொந்தரவுகள் மற்றும் அபாயங்களுக்குத் தன்னைத் தானே இடர்ப்படுத்திக் கொள்ளும் அவசியம் இல்லாமலே அதை மூலதனமாக.
> * இங்கிலாந்தில் எல்லாப் பொது அமைப்புகளும் "மன்னருக்குரியவை" என்று பெயரிடப்படுவதாக வில்லியம் காபெட் கூறுகிறார். இதனை ஈடு செய்யும் முறையில் "தேசியக்" கடன் இருக்கவே செய்கிறது. மாற்றுகிறது. அரசாங்கக் கடன் திரட்டுவோர் உண்மையில் எதையும் கையிலிருந்து கொடுத்து விடுவதில்லை, ஏனெனில் கடனாகத் தரப்பட்ட தொகை எளிதில் மாற்றத்தக்கதான பொதுக் கடன் பத்திரங்களாக உருமாற்றப்படுகின்றது. இத் தொகை இவர்களது கரங்களில் ரொக்கப் பணம் போன்று தொடர்ந்து செயல்படுகிறது. ஆனால், ஆண்டு தோறும் வட்டி பெறும் சோம்பேறி வர்க்கம் இவ்வாறு சிருஷ்டிக்கப்படுகிறது மற்றும் அரசுக்கும் நாட்டுக்குமிடையிலான இடைத்தட்டுக் காரர்களான பணம் கொடுக்கல் வாங்கல் செய்வோர் நொடியில் குபேரர்களாகி விடுகின்றனர் என்பது தவிர—ஒவ்வொரு தேசியக் கடனின் கணிசமான பகுதியும் வரி வசூலிக்கும் இடைத்தட்டுக்காரர், வர்த்தகர்கள், தனிப்பட்ட பட்டறைதிபர்களுக்கு வானத்திலிருந்து விழுந்த மூலதனம் போலச் சேவை புரிகிறது என்பது தவிர—இதற்கும் மேலதிகமாக தேசியக் கடன்தொகையானது கூட்டுப் பங்கு நிறுவனங்கள் உதயமாவதற்கும், எல்லாவிதமான பேர முயற்சிகளுக்கும், செலாவணி பங்கு வாணிகங்களுக்கும், சுருங்கக் கூறின் பங்கு மார்க்கெட் சூதாட்டம் மற்றும் நவீன வங்கி ஆதிக்கத்துக்கும் வகை செய்கிறது.
அவை தோன்றிய கட்டத்தில் தேசியப் பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொண்ட இந்தப் பெரிய வங்கிகள் தனிப்பட்ட வர்த்தகச் சூதாடிகளின் சங்கங்களாகவே இருந்தன; அவர்கள் அரசுக்கு ஆதரவாக நின்றார்கள், தாம் அடைந்த தனிச் சலுகைகள் காரணமாக அரசாங்கத்துக்குப் பணம் கொடுக்கும் நிலையில் இருந்தார்கள். எனவே தேசியக் கடனின் திரட்சிக்கு உறுதியான அளவுகோல், இந்த வங்கிகளின் பங்குகளின் தொடர்ச்சியான அதிகரிப்பே. 1694ல் இங்கிலாந்து வங்கி நிறுவப்பட்டதோடு அவை தமது முழு வளர்ச்சியை எட்டின. இங்கிலாந்து வங்கி அரசுக்கு சேதலிகித வட்டிக்குப் பணம் கடனாக வழங்கியதோடு தன் பணியைத் துவங்கியது; அதே சமயம் இதற்கு நாடாளுமன்றம் அதே மூலதனத்திலிருந்து பணம் அடித்து அதையே மறுபடியும் மக்களுக்கு பாங்கு நோட்டுகள் வடிவில் கடன் கொடுப்பதற்கு அதிகாரத்தை வழங்கியது. இந்த நோட்டுக்களைப் பயன்படுத்தி உண்டியல்களுக்குப் பணம் கொடுக்கவும், பண்டங்களுக்கு முன்பணம் தரவும், அரிய உலோகங்களை வாங்கவும்.இந்த வங்கி அனுமதிக்கப்பட்டது. விரைவிலேயே வங்கி தானாகவே உருவாக்கிய இந்த நோட்டுக்கள் இங்கிலாந்து வங்கி அரசாங்கத்துக்கு வழங்கிய கடனுக்கும், அரசின் கணக்கில் கொடுக்கப்பட்ட தொகைக்கும் பொதுக் கடனுக்குச் செலுத்திய வட்டிக்கும் பயன்படுத்தப்பட்ட முத்திரை நாணயமாயிற்று. இந்த வங்கி ஒரு கையால் கொடுத்து அதைவிட அதிகமாக இன்னொரு கையால் வாங்கிக் கொண்டது என்பது மட்டும் போதாமல், அவ்வாறு வாங்கும் போதுங்கூட முன் பணமாகத் தரப்பட்ட கடைசி வீதியில் வரையில் நாட்டுக்கு நிரந்தரமான கடன்வழங்கும் நிறுவனமாக அது நீடித்தது. படிப்படியாக இது தவிர்க்க முடியாத வகையில் நாட்டின் உலோகச் சேமித்தின் ஏகமாகவும் எல்லா வாணிகக் கடன்களின் ஈர்ப்பு மையமாகவும் ஆகியது. இந்த வங்கி ஆதிக்கக் குழு, பணம் கொடுக்கல் வாங்கல் செய்வோர், வட்டிவாங்கி சுகஜீவனம் நடத்துவோர், இடைத்தரகர்கள், பங்குலாப வேட்டைக்காரர்கள் ஆகியவர்களின் கூட்டம் திடீரென எழுந்ததால் அவர்களது சம காலத்தவர்கள் மீது என்ன விளைவு ஏற்பட்டது என்பதை அந்தக் காலத்திய நூல்கள், உதாரணமாக பாலிங்பிராக்கின் நூல்கள் நிரூபித்துக் காட்டின.*
தேசியக் கடனுடன் கூடவே ஒரு சர்வதேச கடன்வசதி அமைப்பும் உதித்தது, இது பெரும்பாலும் இந்த அல்லது அந்த மக்களின் புராதனத் திரட்சியின் மூலாதாரங்களில் ஒன்றை அடிக்கடி மறைத்துவைக்கிறது. இல்லாதாக வெளிச்சின் திருட்டு முறையின் நீசத்தனங்கள் ஹாலந்தின் மூலதனச் செல்வத்தின் இரகசிய அடிப்படைகளில் ஒன்றாக இருந்தது. ஹாலந்துக்கு வெனிஸ், தனது நசிவு காலத்தில் பெருந் தொகையான பணம் கடனாகத் தந்திருந்தது. ஹாலந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நிலவிய உறவுகளும் இத்தகையவையே. 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்துக்குள்ளேயே டச்சுப் பட்டறைத் தொழில்களை இங்கிலாந்து பெருமளவு
> * "வர்த்தகர்கள் இன்று மீண்டும் ஐரோப்பாவைப் படைகொடுத்துப் பிடிக்கும் பட்சத்தில் தம்மிடையில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்வோரின் பங்கு என்ன என்பதை அவர்களுக்கு விளங்குவது மிகவும் கடினமாகும் விஞ்சி விட்டது. ஹாலந்து வாணிகத்திலும் தொழில் துறையிலும் மேம்பட்ட ஆற்றல் கொண்ட தேசமாக இருந்த நிலை போய்விட்டது. எனவே 1701 முதல் 1776 வரையில் அதன் பிரதான அலுவல்களில் ஒன்று, அதன் மாபெரும் போட்டி நாடான இங்கிலாந்துக்கு மிகப்பெரும் தொகைகளிலான மூலதனத்தைக் கடனாக வழங்குவது என்பதாகவே இருந்தது. இதே காரியம் தான் இன்று இங்கிலாந்துக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. எங்கிருந்து பிறந்தது என்பதற்கு எவ்வித அத்தாட்சியும் இன்றி இன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் தோற்றமளிக்கும் மூலதனத்தில் பெரும் பகுதி நேற்று இங்கிலாந்தில் குழந்தைகளின் குருதியிலிருந்து எடுத்த மூலதனமாக இருந்ததேயாகும்.
தேசியக் கடன் பொது வருவாயின் ஆதரவு பெறுவதாலும்—இந்த வருவாயிலிருந்து வட்டித் தொகை ஆகியவற்றின் கொடுப்பல்களை ஆண்டுதோறும் செலுத்த வேண்டியிருப்பதால்—நவீன வரிவிதிப்பு முறை தேசியக் கடன்கள் அமைப்புக்கு இன்றியமையாத நிரப்புக் கூறாக இருந்தது. இந்தக் கடன் திரட்டல், வரிசெலுத்துவோர் உடனடியாக எண்ணிக்கையார்க்க முடியாத நிலையில் அரசு அசாதாரணமான செலவினங்களைச் சமாளிக்க உதவுகிறது. ஆனால் இதன் பின் விளைவாக வரிகள் உயர்த்தப்படுவது அவசியமாகிறது. மறுபுறம் ஒன்றுக்குப்பின் ஒன்றாகப் பெற்றுக் கடன்கள் திரட்சி அடைவது காரணமாக வரிகள் அதிகரிக்கப்படுவது, புதிய அசாதாரண செலவுகளுக்காக புதிய கடன்களே நாடும்படி அரசை எப்போதும் கட்டாயப்படுத்துகிறது. ஆக அவசியமான பிழைப்புச் சாதனங்கள் மீது வரி போடுவதை (இதன் மூலம் அவற்றின் விலைகளே அதிகரிக்கப்பட்டன) சுழற்சியாகக் கொண்ட நவீன வரிவருவாய் அமைப்பு தனக்குள் சுயவளர்ச்சியின் கரு மூலங்களை உடையதாய் இருக்கிறது. அமித-வரி விதிப்பு தற்செயலானதல்ல, மாறாக அது ஒரு கோட்பாடாகும். எனவே இந்த முறை முதன் முதலாக துவக்கி வைக்கப்பட்ட ஹாலந்தில் மாபெரும் தேசபக்தரான டிவிட் என்பவர் தமது Maxims* இதுவே கூலித் தொழிலாளியை அடக்க ஒடுக்கமாய், சிக்கனமாய், சுறுசுறுப்பாய் இருக்கும்படி செய்யவும் மற்றும் அவன் மீது மிகையான உழைப்பைச் சுமத்தவுமான ஆகச் சிறந்த முறை என்று புகழாரம் பாடினார். கூலித் தொழிலாளர்கள் மீது இம்முறை செலுத்திய நாசகரச் செல்வாக்கை விடவும் நமக்கு அதிக அக்கறைக்குரியதாக இருப்பது இதன் விளைவாக விவசாயிகள், கைவினைஞர்கள், சுருங்கக் கூறின் கீழ் நிலை நடுத்தர வர்க்கத்தின அனைவரின் உடைமைகளும் பலவந்தமாகப் பறிமுதல் செய்யப்பட்டதேயாகும். இதைக் குறித்து முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களிடையில் கூட இரண்டு வெவ்வேறு கருத்துக்களில்லையே. இதன் உடைமை பறிமுதல் திறன் இதன் அங்கப்பகுதியாக அமைந்துள்ள காப்பு முறை காரணமாக மேலும் அதிகரித்தது.
செல்வத்தை மூலதனமாக மாற்றுவதிலும், வெகு ஜனங்களின் உடைமையைப் பறிமுதல் செய்வதிலும் இந்தப் பொதுக் கடனும் அதோடு இசைந்த வரிவருவாய் அமைப்பும் வகிக்கும் மாபெரும் பங்கினைக் கண்டு கோபட், டிபின்டே மற்றும் இதர எழுத்தாளர்கள், இன்றைய மக்களின் அவல நிலைக்கு அடிப்படைக் காரணம் இதுவே என்ற தவறான முடிவுக்கு வந்துள்ளனர்.
காப்பு முறை என்பது, பட்டறையதிபர்களை உற்பத்தி செய்வதற்கும், சுதந்திரமான தொழிலாளர்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்வதற்கும், உற்பத்திக்கும் பிழைப்புக்குமான தேசிய சாதனங்களை மூலதனமாக மாற்றுவதற்கும், மத்திய கால உற்பத்தி முறையிலிருந்து நவீன உற்பத்தி முறைக்கு மாறிச் செல்லும் கட்டத்தை பலவந்தமாகக் சுருக்குவதற்குமான ஒரு செயற்கையான சாதனமாகும். இந்தப் புதுப்புனைவின் உரிமைக் காப்பு குறித்து ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று பிய்த்துப் பிடுங்கிக் கொண்டன; உபரி மதிப்பைப் பெறுவோரின் சேவையில் இறங்கியவுடனேயே, இந்த நோக்கத்தைத் தாண்டி தமது சொந்த மக்களையே—காப்பு வரிகள் மூலம் மறைமுகமாயும் ஏற்றுமதி வரிகள் மூலம் நேரடியாயும் சுரண்டுவதோடு அவை நிற்கவில்லை. அவை தமது சார்பு நாடுகளில் எல்லாத் தொழில்களையும் வலுவித்தமாக வேரோடு பறித்தெறிந்தன. உதாரணம்! இங்கிலாந்து அயர்லாந்தின் கம்பளி உற்பத்தித் தொழிலை அழித்தது. ஐரோப்பா கண்டத்தில் கோல்பர்டின் உதாரணத்தைப் பின்பற்றி இந்த செயல் முறை மேலும் எளிதாக்கப்பட்டது. இங்கு ஆரம்ப தொழில்துறை மூலதனத்தின் ஒரு பகுதி அரசாங்கக் கஜானாவிலிருந்து நேரடியாக வந்தது.
"ஏன்" என்று கூக்குரலிடுகிறார் மிராபோ, "போருக்கு முந்திய சாக்ஸனியின் பட்டறைத் தொழிலுற்பத்தியின் புகழுக்கான காரணம் தேடி அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும்? மன்னர்கள் பெற்ற 180,000,000 கடன்கள்!"*
காலனி அமைப்பு, பொதுக் கடன்கள், பளுவான வரிகள், காப்பு முறை, வாணிகப் போர்கள் ஆகிய உண்மையான பட்டறைத் தொழில் உற்பத்திக் காலகட்டத்தின் இந்தக் குழந்தைகள் நவீனத் தொழில் துறையின் பாலப் பருவத்தில் பிரம்மாண்டமான அளவில் அதிகரிக்கின்றன. இதன் பிறப்பு பிரம்மாண்டமான அளவில் குழந்தைகளைக் களவாடுவதுடன் ஆரம்பமாகும். மன்னனின் கடற்படை போல ஆளுகளுக்கான ஆட்களும் பலவந்தமாகத் திரட்டப்பட்டனர். 15ஆம் நூற்றாண்டின் இறுதி மூன்று பத்தாண்டுகள் தொட்டு அவரது சொந்தக் காலகட்டம் வரையில் நிலத்திலிருந்து விவசாய மக்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்ட கொடுமைகள் கண்டு தெவிட்டிக் போன சர் எப்.எம்.ஈடன் முதலாளித்துவ விவசாயத்தை நிறுவுவதும், "சாகுபடி நிலத்துக்கும் மேய்ச்சல் நிலத்துக்குமிடையே உரிய விகிதாசாரத்தை" ஏற்படுத்துவதும் "இன்றியமையாத" இந்த வளர்ச்சிப் போக்கில் சுய திருப்தியுடன் பெரு மகிழ்ச்சி கொள்கிறார். ஆனால் பட்டறைத் தொழில் சுரண்டலை ஆலைத் தொழில் சுரண்டலாக மாற்றுவதற்கும் மூலதனத்துக்கும் உழைப்புச் சக்திக்கும் இடையில் "உண்மை உறவினை" நிலைநாட்டுவதற்கும் குழந்தைகளைத் திருடுதல் மற்றும் குழந்தைகளின் அடிமைத்தனம் அவசியமா என்பது குறித்து அவர் இதே பொருளாதாரத் துண்ணறிவைக் காட்டவில்லை. அவர் கூறுகிறார்:
> "பட்டறைத் தொழிலை வெற்றிகரமாக நடத்தும் பொருட்டு, ஏழைக் குழந்தைகளைத் தேடி வீடுகள் மற்றும் வேலைவிடுதிகளே உடைத்துச் சோதனைவிட வேண்டுமா, அவர்களே இரவு நேரங்களில் பெரும் பகுதி முறைபோட்டு வேலை செய்ய வைத்து, எல்லோருக்கும் இன்றியமையாத இளைஞருக்கு மிகவும் அவசியமான ஓய்வுப் பறிக்க வேண்டுமா, வெவ்வேறு வயதும் விருப்பங்களும் உடைய ஆண் பெண் இருபாலினரும் சேர்த்து வைக்கப்பட்டு அவர்கள் வைக்கப்பட்ட்துள்ள தன்மையால் ஒழுக்கக் கேடும் சிற்றின்ப வெறியும் ஏற்படும்படி செய்ய வேண்டுமா, இது தனிப்பட்டவர் வாழ்க்கை நலன் அல்லது தேசிய வாழ்க்கை நலனைப் பெருக்குமா? இது பொது மக்கள் கவனித்து ஆய்ந்து பார்க்கத் தகுதிவாய்ந்த ஒரு விஷயமாகக் கூடுமல்லவா?"* "டெர்பி ஷயர், நாட்டிங்காம் ஷயர், மேலும் குறிப்பாக லங்கா ஷயர் மாவட்டங்களில் புதிதாகப் புனையப்பட்ட யந்திரங்கள் நீர் விசைச் சக்கரத்தை உருளச் செய்யும் ஆற்றுத்துடைய ஆறுகளின் பக்கத்தில் கட்டப்பட்டுள்ள பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டன" என்று கூறுகிறார் ஃபீல்டென். "நகரங்களிலிருந்து தொலைவிலிருந்த இந்த இடங்களில் ஆயிரக்கணக்கான வேலையாட்கள் திடீரென்று தேவைப்பட்டார்கள், குறிப்பாகவும் லங்கா ஷயர், அது வரையில் ஒப்பு நோக்கில் சிறிய மக்கள் தொகையே கொண்டதாய் ஜனநடமாற்ற மற்றதாய் இருந்தப்படியால் இப்போது அதற்கு வேண்டுவதெல்லாம் மக்கள் பெருக்கமே. சிறு குழந்தைகளின் சிறிய சுறுசுறுப்பான விரல்களே மிகவும் அதிகமாக வேண்டப்பட்டதால் லண்டன், பிர்மிங்ஹாம் ஆகியவற்றின் பல்வேறு வட்டார வேலைவிடுதிகளிலிருந்து பழகுனர்களைத் திரட்டிப் பெறும் வழக்கம் திடீரென உதித்தது. பல பல ஆயிரக்கணக்கான இந்தச் சின்னஞ் சிறு மகிழ்ச்சி காணாத ஜீவன்கள் 7 முதல் 13 அல்லது 14 வயது வரை எட்டியவர்கள் வட பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். எஜமானர் அவர்களை ஆலைக்குகுலுள்ள 'பழகுனர் விடுதியில்' தங்கவைத்துத் தமது பழகுனர்களுக்கு உணவும் உடையும் அளிப்பது வழக்கமாக இருந்தது. வேலைகளைக் கவனிக்க வேண்டி மேலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் பெறும் சம்பளம் அவர்கள் கட்டிக்கட்டி வாங்கும் வேலையின் அளவின் விகிதாசாரத்தில் இருந்ததால் அவர்கள் இச்சிறுவர்களைக் கசக்கிப் பிழிந்து அதிகமான வேலை வாங்குவதில் அக்கறை கொண்டிருந்தார்கள். இதன் விளைவு துன்புறுத்தலே என்பது கண்கூடு. பல பட்டறைத் தொழில் மாவட்டங்களில் குறிப்பாக நான் பிறந்த மாவட்டமான லங்கா ஷயரில் இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட திங்கு சுருதா உற்றுர் உறவற்ற இந்த ஜீவன்கள் நெஞ்சையுருகத்தக்க கொடுமைகளுக்கு இலக்காக்கப்பட்டார்கள்; மிக உழைப்பால் அவர்கள் சாவின் விளிம்புக்கு சரியானவுக்குத் தொல்லைப்படுத்தப்பட்டார்கள்... கசையடி பெற்றார்கள்; அப்படியான கொடுமையையே கூவிச் சொல்லும் வகையில் செத்திரவதை செய்யப்பட்டார்கள். பெரும்பாலும் பட்டினி போடப்பட்டு எலும்பும் தோலுமாக இருந்த அவர்கள் கசையடி கொடுக்கப்பட்டு வேலையாங்கப்பட்டனர்... சிலர் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்குத் துன்புறுத்தப்பட்டனர்...
இப்போது மக்களின் கண்ணில் படாதவையாக இருந்த டெர்பிஷயர், நாட்டிங்காம் ஷயர் மற்றும் லங்கா ஷயரின் எழில் கொஞ்சும், கற்பனைக் கானியப் பின்னணியுடைய பள்ளத்தாக்குகள் சித்திரவதையின், பல படுகொலைகளின் துயரார்த்த தனிவிடங்களாயின. பட்டறைதிபர்களின் லாபங்கள் அரியகமாக இருந்தன. இது அவர்களுக்குத் திருப்தியளிப்பதற்கு மாறாக மேலும் லாபப் பேராசையைத் தூண்டியது. எனவே அவர்கள் வரைமுறை என்ற சாத்தியக்கற்றே இல்லாத அளவுக்கு லாபம் அடைவதற்கான ஒரு வழிமுறையைக் கையாளத் தொடங்கினார்கள், அதாவது "இரவு வேலை" எனப்படும் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார்கள். இதன்படி பகல் பூராவும் வேலை வாங்கி ஒரு பகுதியினரைச் சேர் வடையச் செய்துவிட்டு இரவு முழுவதும் வேலைசெய்வதற்கு இன்னொரு பகுதியைத் தயாராக வைத்திருந்தார்கள். இதன் மூலம் இரவு வேலை பகுதியினர் இப்பொழுதுதான் விடுத்துச் சென்று படுக்கைகளில் பகல் வேலைப் பகுதியினர் படுக்கச் செல்வர், அதேசமயம் அவர்கள் கால்வேல் படுக்கைகளில் இரவு வேலையாக்கரர்கள் மறுபடியும் வந்து படுப்பார்கள். லங்கா ஷயரில் படுக்கைகள் எப்போதுமே ஆறிப் தண்மை பெறுவதில்லை என்பது பொது மரபாகிவிட்டது."*
> * John Fielden, The Curse of the Factory System, London, 1836, pp. 5, 6. ஆகிய முறையின் முந்திய இழிபற்றி Dr. Aikin, (1795) மேற்குறிப்பிட்ட நூல், பக்கம் 219 மற்றும் Gisborne, Enquiry into the Duties of Men, 1795, தொகுதி II ஐப் பார்க்க. நீராவி என்ஜின் ஆங்கில நாட்டுப்புற நீர் வீழ்ச்சிகள் இருந்த இடத்திலிருந்து நகரங்களின் நடுப்பகுதிக்கு மாற்றி நிறுவிய பொழுது "மேட்டான" உபரி மதிப்பு தயாரிப்பாளர் வேலைவிடுதிகளிலிருந்து அடிமைகளைத் தேடிப்பெறும் கட்டாயமின்றி குழந்தை உழைப்பாளர்கள் தாராளமாகக் கிடைப்பதைக் கண்டார்கள். சர். ஆர். பீல் ("நேர்மை வாத அமைச்சர்" என்ற சொற்பிரயோகத் தின் மூலவர்) 1815ல் நாடாளுமன்றத்தில் குழந்தைகளின் பாதுகாப்புக்கான தமது மசோதாவைக் கொண்டுவந்தார். அப்பொழுது "புல்லியன் (தங்கப்பவுன்) கமிட்டியின்" முக்கிய உறுப்பினரும் ரிக்கார்டோவின் நெருக்கிய நண்பருமான பிரான்சில் ஹார்னர் காமன் சபையில் கூறியதாவது: "ஓர் ஓட்டாண்டியான ஒருவரின் சொத்துக்களுடன் பட்டறைத் தொழில் காலகட்டத்தில் முதலாளித்துவப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததோடு ஐரோப்பாவின் பொதுஜன அபிப்பிராயம் அதன் வெட்கத்தின், மனச் சாட்சியின் கடைசி மீதிச்சத்தையும் இழந்து விட்டது. முதலாளித்துவத் திரட்சிக்கு சாதனமாக உதவிய எல்லா இழிபழிகளையும் குறித்து இந்த நாடுகள் வக்கிரமாகத் தற்பெருமை பேசின. உதாரணத்துக்கு மதிப்புக்குரிய அ. ஆண்டர்சன் எழுதிய அப்பாவித்தனமான Annals of Commerce படித்துப் பார்க்கவும். இதில் உட்ரெஷ்த் சமாதானத்தின் போது இங்கிலாந்து, அஸியெந்தோ உடன்பாடு மூலம் அது கறும் ஆப்பிரிக்காவுக்கும் ஆங்கில மேற்கு இந்தியத் தீவுகளுக்குமிடையே, ஆப்பிரிக்காவுக்கும் ஸ்பானிய அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்றுவந்த நீக்ரோ வாணிகத்தை நடத்துவதற்குரிய தனியுரிமையை ஸ்பானியரிடமிருந்து வலுவுந்தமாகப் பெற்றதை ஆங்கில ராஜாங்கதிரத்தின் வெற்றி என இந்த வரலாற்றுப்பதிவேடுகள் எக்காளமுதின. இதன் மூலம் இங்கிலாந்து ஸ்பானிய அமெரிக்காவுக்கு 1743 வரை ஆண்டுக்கு 4,800 நீக்ரோக்களை விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றது. இது பிரிட்டனின் கள்ளக் கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஓர் அதிகாரப்பூர்வப் போர்வையினைத் தந்தது. அடிமை
குழந்தைகளின் ஒரு கும்பலை (இந்தச் சொல்லைப் பயன்படுத்த முடியுமானால்) விற்பனைக்காக வைத்திருந்ததும், அவர்கள் சொத்தின் ஒரு பகுதியாக பகிரங்கமாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்ததும் இகழார்த்த செயல்களாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இங் பெஞ்சு நீதிமன்றத்தின் முன்பாக மிகவும் கொடூரமான ஒரு சம்பவம் கொண்டுவரப்பட்டது. எண்டனில் ஒரு வட்டாரத்தில் ஒரு பட்டறையதிபரிடம் பழகுனர்களாகச் சேர்ந்திருந்த பல பையன்கள் இன்ஜெருவுக்கு மாற்றித் தரப்பட்டார்கள். இங்கே அவர்கள் முழுப் பட்டினியால் தவிப்பதைக் கருதியுள்ள சில நபர்கள் காண நேர்ந்தது. நாடாளுமன்றக் கமிட்டியில் இருந்த பொழுது இன்னொரு சம்பவம், மேலும் கோரமான ஒரு சம்பவம் அவருக்குத் தெரியவந்தது... அதாவது சில ஆண்டுகள் முன்பு ஒரு எண்டன் வட்டாரத்துக்கும் ஒரு எங்கா ஷயர் பட்டறையதிபருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டிருந்தது; இதன்படி ஒவ்வொரு 20 ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஒரு முட்டாள் குழந்தைச் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்."*
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக