சோவியத் யூனியனில் சோசலிசத்தை நிர்மாணிக்க லெனின் திட்டம்

சோவியத் யூனியனில் சோசலிசத்தை நிர்மாணிக்க லெனின் திட்டம்


பெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சி ரஷ்யாவில் 1917 அக்டோபர் 25-*ம் தேதி வெற்றியடைந்தது. அதிகாரம் உழைக்கும் மக்களின் வசம் வந்தது. மனித இன வரலாற்றிலேயே முதல் தடவையாக உழைக்கும் மக்கள் சோஷலிச சமுதாயத்தை நிர்ணயிக்கத் தொடங்கினார்கள். புது வாழ்வு எத்தகையதாய் இருக்குமென்பதை அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஆவல் கொண்டிருந்தனர்.

....சோவியத் ஆட்சி தோன்றிய ஆரம்ப காலத்தில் ஒரு நாள் புரட்சிகர பெட்ரோகிராடு நகரின் ஜனசநடியான நாற்சந்தியொன்றில் மிகவும் காரசாரமான விவாதம் நடைபெற்றது. புகழ் பெற்ற பாட்டாளி வர்க்க எழுத்தாளரான மாக்கிம் கார்க்கி அங்கே இருந்தார். பழைய ஜார் இராணுவத்தைச் சேர்ந்த ஒரு போர் வீரர் அங்கே குழுமி இருந்த மக்களிடையே ஆர்வத்தோடும் நெஞ்சையுள்ளும் சாதுர்யமுடனும் பேசுவது கார்க்கியின் கவனத்தை ஈர்த்தது. "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று எழுத்தாளர் அவரிடம் வினவினார்.

"அதைப்பற்றி உங்களுக்கென்ன?" என்று போர் வீரர் கடுமையாக பதிலளித்தார்; காலை பலமாக தரையில் மிதித்துக் கொண்டே மேலும் கூறினார்: "நான் இந்த நாட்டைச் சேர்ந்தவன்தான், அதனலென்ன? நான் ஒரு போர் வீரர், உங்களுக்குத் தெரியவில்லையா? நான் ஜப்பானை எதிர்த்துப்போரிட்டேன். மறுபடியும் போராடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இனிமேலும் நான் தொடர்ந்து போராடப் போவதில்லை. என்னுடைய கண்கள்... இப்போது திறந்து விட்டன. தொப்பியணிந்திருக்கும் கனவானே, உங்களிடம் திட்டவட்டமாகச் சொல்கிறேன்: எல்லா முறைகளையும் மேற்கொண்டு நாட்டைக் கைப்பற்றுவோம்—ஆம் எல்லா முறைகளையும் மேற் கொண்டுதான். நாட்டிலுள்ள எல்லாவற்றையும் நாங்கள் புனர் நிர்மாணிப்போம்....."

_________________________________________

 * ரஷ்யாவில் கிரிகோரியன் காலண்டர் 1918 பிப்ரவரி முதல் தேதியிலிருந்து கடைபிடிக்கப்பட்டது. அதன்படி புரட்சியின் ஆண்டுவிழா நவம்பர் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

    1904-05 வருட ரஷ்ய ஜப்பானிய யுத்தம்.

___________________________________________

"தர்பூசணியைப் போல உருண்டையாகவும் மழுமழுப்பாகவும் அதைச் செய்யப் போகிறீர்களாக்கும்" என்றார் கூட்டத்திலிருந்த ஒருவர்-வாயைச் சப்பிக் கொட்டிக் கொண்டே. ஒருவேளை முன்னாளைய எஜமானர்களில் ஒருவராக இருக்கலாம் அவர்.

"நாங்கள் அப்படியே செய்வோம்!" என்றார் போர் வீரர் உறுதியான குரலில்.

"நீங்கள் மலைகளை வெட்டிப் பெயர்த்து சமமாக்கி விடுவீர்களோ?"

"ஏன் கூடாது? மலைகள் எங்களுக்கு இடையூறாக இருந்தால், அவையும் போக வேண்டும்."

"நதிகள் எல்லாம் மேடு நோக்கிப் பாயுமோ?"

"நாங்கள் வழி காட்டும் திசையில் அவை பாய்ந்து செல்லும்....."

அக்காலத்தைச் சேர்ந்த ஒரு பாட்டில் கீழ்க்காணும் வரிகள் இருந்ததில் வியப்பேதுமில்லை:

"மலைகளை நகர்த்த வந்தோம்,

மாபெரும் நதிகளை மடக்க வந்தோம்..."

 முதல் சோஷலிச சீர்திருத்தங்கள்

சோஷலிச நிர்மாணத்தின் முன்னணியில் கட்சி

மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர், போல்ஷிவிக் கட்சி* இளம் சோவியத்துக் குடியரசின் ஆளும் கட்சியாயிற்று. புரட்சிகர முன்னணிக் கட்சியாக இருந்தது சோஷலிச நிர்மாணத்தின் தலைவனாக மாற்றமடைந்தது. சுரண்டல்காரர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு வழிவகுப்பதற்கும், அரசியல் அதிகாரத்தை வென்று கொள்வதற்குமன்றி, தீவிரமான, சமூக, பொருளாதார, கலாசார சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கும், சோஷலிசத்தையும் கம்யூனிசத்தையும் நிர்மாணிப்பதற்கும்கூட, உழைக்கும் மக்களின் நலன்களைப் பிரதிபலித்த போர்க்குணமிக்க புரட்சிகரக் கட்சி அத்தியாவசியமாகும்.

தனது வழிகாட்டு பாத்திரத்தை நிறைவேற்றுகையில் கம்யூனிசப்புக் கட்சியை பல பிரச்சினைகள் எதிர்நோக்கின; சோஷலிச சமுதாய நிர்மாணத்திற்கு வழிகாட்டிக் அதனை மேற்பார்வையிட்ட முதல் கட்சியாக—வரலாற்றிலேயே முதல் கட்சியாக—அது இருந்ததால் இத்தகைய பிரச்சினைகள் எழுந்தன. மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் ஆளும் கட்சியாகிவிட்ட அதனிடம், புதிய நிலைமைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தகவல் அறிவும் அனுபவமும் கொண்ட கட்சி ஊழியர்கள் குறைவாக இருந்தார்கள். "சோஷலிசத்தைப் நமக்குத் தெரியும். ஆனால், பத்து லட்சக்கணக்கான அளவில் நிறுவனங்கள் அமைப்பது பற்றிய தகவல் அறிவும், பண்டங்களின் சேகரம் விநியோகம் பற்றிய தகவல் அறிவும் முதலீடன நம்மிடம் இல்லை....போல்ஷிவிக் கட்சி தன்னுடைய வரலாற்றில் இதைப் பற்றி பெருமை அடித்துக்கொள்ள முடியாது. இந்தப் துறையில் நாம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை."(* வி. இ. லெனின், தொகுப்பு நூல்கள், மாஸ்கோ, தொகுதி 27, பக்கம் 296-297.) என்று லெனின் எழுதினார். மேலும், ஆளும் கட்சிக்குள் சில சமயங்களில் பலரகமான குருட்டுத் துணிச்சல்காரர்களும், சுய நலமிடுகளும், எத்தன்களும் கூட ஊடுருவி விடுகிறார்கள். மாபெரும் வெகுஜன இயக்கம் களைச் சுற்றி இத்தகைய இழிவான கழிசடைகள் சில சமயங்களில் தவிர்க்க இயலாதவாறு சேர்ந்து விடுகிறார்கள். புராட்சிகர மாற்றத்தின் தர்க்கவியலைப் புரிந்து கொள்ளாமல், அன்றாட ஸ்தாபன வேலையை வெறுத்து ஏளனம் செய்யக்கூடிய தன் அணிகளிலிருந்தும் குட்டி பூர்ஷ்வா புரட்சிவாதத்தைப் பரப்புவர்களுக்கு எதிராக மிகத் தீவிரமான போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது.

_______________________________________

* மார்க்சிய வட்டங்களையும் குழுக்களையும் ஒன்றிணைத்ததின் விளைவாக, 1898-ல் ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி உருவாயிற்று; சோஷலிச வெற்றியை சாதிப்பதுதான் தனது குறிக்கோள் என்று இது நிர்ணயித்தது. 1908-ம் ஆண்டில் நடைபெற்ற அதனுடைய இரண்டாவது காங்கிரஸில் இது இரண்டு குழுக்களாகப் பிளவுண்டது: முரணற்ற புரட்சியாளர்கள் (அல்லது போல்ஷிவிக்குகள்), சீர்திருத்த வாதிகள் (அல்லது மென்ஷிவிக்குகள்) அந்த இரண்டு குழுக்களும் பின்னர் தனித்தனிக் கட்சிகளாக அமைந்தன.

_______________________________________

கடந்த காலத்திலும், நிகர காலத்திலும் கூட, சோஷலிசத்தை நிர்மாணிப்பதில் புரட்சிகரக் கட்சியின் இடம் பற்றியும் பாத்திரம் பற்றியும் கடுமையாக விவாதிக்கப்பட்டது. சோஷலிசத்தின் பகைவர்கள் கூட, வரலாற்றின் போதனைகளிலிருந்து கற்றுக் கொள்கிறார்கள். ஜனநாயகத்துக்காகவும் சோஷலிசத்துக்காகவும் நடைபெறும் போராட்டத்தில் வெற்றிக்கு அடிக்கல்லாக இருப்பது செயலாக்கமுள்ள புரட்சிகரக் கட்சிகள் தான் என்பதை உணர்ந்துள்ளவர்கள், இந்தக் கட்சிகள் மீது உழைக்கும் மக்களுக்குள்ள நம்பிக்கையை சீர்குலைக்கவும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவற்றின் செல்வாக்கை பலவீனப்படுத்தவும் முயலுகின்றனர்.

தொழிலாளர்-விவசாயிகள் அரசின் கட்சித் தலைமையை கட்சியின் சர்வாதிகாரம் என்று பூர்ஷ்வா சித்தாந்தவாதிகள் வர்ணிக்க மேற்கொண்ட முயற்சிகளை லெனின் உறுதியுடன் கண்டித்தார். சர்வாதிகார உரிமைகள் கட்சிக்கு அளிக்கப்படுவதை கம்யூனிஸ்டுகள் அடிப்படையிலேயே எதிர்க்கிறார்கள்; ஆணைகள் மூலம், கட்டளைகள் மூலம் ஆட்சி நடத்துவதை அவர்கள் நிராகரிக்கிறார்கள். தொழிலாளர்கள் விவசாயிகள்பால் கவனமான பரிவான கண்ணோட்டம், கட்சியின் கொள்கை எவ்வளவு சரியானது என்பதை அவர்களே பார்க்கும்படி செய்தல் ஆகியவற்றைத்தான் கட்சியின் வழிகாட்டு பாத்திரம் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

கம்யூனிசப்புக் கட்சியின் வரலாியையும் சோவியத் யூனியனில் சோஷலிச நிர்மாணத்தைப் பற்றி பொய் கூறுகிறவர்கள், சோவியத் ரஷ்யாவில் ஒரே கட்சி அரசியல் அமைப்பு ஏற்படுவதற்குப் பொறுப்பாக இருந்த உண்மையான காரணங்களைத் திருத்திப் புரட்டுகிறார்கள். வரலாற்று உண்மயைப் புறக்கணித்துவிட்டு அவர்கள், ரஷ்யக் கம்யூனிஸ்டுகள் தங்களுடைய சொந்த சர்வாதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளும் பொருட்டு எதிர்க்கட்சிகள் அனைத்தையும் வேண்டுமென்றேயொதுக்கித் தள்ளிவிட்டார்கள் என்று அவதூறு பொழிகிறார்கள்.

ஒரே கட்சி அமைப்புதான் சோஷலிசப் புரட்சியின், முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறிச்செல்லும் காலகட்டத்தின் பொதுவான சட்டம் என்று லெனினுடைய கட்சி கருதவில்லை. உழைக்கும் மக்களின் பல்வேறு பகுதியினருடைய ஆதரவைப் பெற்றிருக்கும் இதர கட்சிகளுடன் ஒத்துழைப்பது பற்றிய சாத்தியக் கூறுகளை தத்துவத்திலும் நடைமுறையிலும் அது ஒப்புக்கொண்டிருந்தது. இப்போதும் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், ஜனநாயகத்துக்காகவும் சோஷலிசத்துக்காகவும் கம்யூனிசப்புக் கட்சியுடன் சேர்ந்து செயலாக்கமாயும் முரணின்றியும் போராடுவதற்கு இந்தக் கட்சிகள் விருப்பப்பட்டால்தான் இத்தகைய ஒத்துழைப்பு சாத்தியமாகும்.

மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் சமூக அடிப்படையை விஸ்தரிக்கும் பொருட்டு, ஜனநாயகக் கட்சிகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள ரஷ்யக் கம்யூனிஸ்டுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். முதலில் கம்யூனிசப்புக் கட்சியைத் தவிர மீதியுள்ள எல்லா அரசியல் கட்சிகளையும் தடை செய்யும் உத்தரவு எதையும் சோவியத் அரசு பிறப்பிக்கவில்லை. சோவியத் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் (1917-1918) பல அரசியல் கட்சிகள் அரசு அதிகாரத்தின் மிக உயர்ந்த உறுப்பினான அகில ரஷ்ய மத்திய நிர்வாகக் கமிட்டியில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தன.

மத்திய நிர்வாகக் கமிட்டியைப் போலன்றி சோவியத் சர்க்கார் ஆரம்பத்திலிருந்தே ஒரே கட்சி அடிப்படையில்தான் அமைந்திருந்தது. சோவியத்துக்களில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த இதர கட்சிகளை சோவியத் சர்க்காரில் சேர்த்துக்கொள்ள கம்யூனிஸ்டுகள் விரும்பவில்லை என்ப தல்ல இதற்கான காரணம். மென்ஷிவிக்குகளும், வலது சோஷலிசப் புரட்சியக்காரர்களும்* சோவியத் சர்க்காரை அங்கீகரிக்க மறுத்ததும், இடது சோஷலிசப் புரட்சிகாரர்கள்* சர்க்காரில் சேர ஆரம்பத்தில் மறுத்துவிட்டதுமே.

* சோஷலிசப் புரட்சிகாரர்களின் கட்சி 1902-ல் அமைக்கப்பட்டது. மிகப் பெரும்பாலும் விவசாய மக்களின் ஆதரவுதான் அதற்கிருந்தது. கிராமப்புறத்திலிருந்து சமூகப் பிரிவுகளின் காரணமாகவும், புரட்சி நிலையின் வளர்ச்சி காரணமாகவும் 1917-ல் இக்கட்சி வலது, இடது என இரண்டாகப் பிளந்தது. வலது இதற்கான காரணங்களாகும், சர்க்காரில் சேரும்படி இடது சோஷலிசப் புரட்சிகரக்ளுக்கு அழைப்பு விடுத்தபோது, அவர்கள் தற்காலிகமான, நிலையில்லாத கூட்டாளிகளாகத்தான் இருப்பார்கள் என்பதைக் கம்யூனிஸ்டுகள் உணர்ந்திருந்தார்கள். ஆனால், மென்ஷிவிக்குகளையும் வலது சோஷலிசப் புரட்சிகாரர்களைப் போலல்லாமல் அவர்கள் விவசாயிகளில் ஒரு சில பகுதியினரின் ஆதரவைப் பெற்றிருந்தார்கள். அந்த விவசாயிகளுடைய உணர்வுகளைப் பிரதிபலித்த இடது சோஷலிசப் புரட்சிகாரர்கள் சோவியத் சர்க்காரை அங்கீகரித்தனர். இதர குட்டி பூர்ஷ்வா கட்சியினரைக் காட்டிலும் இவர்கள் நிலப்பிரச்சினைக்கு மிகவும் தீவிரமான பரிகாரம் காணவேண்டுமென்று அறை கூவினார்கள்.

1917 நவம்பர் 11-25-ம் திகதிகளில் நடைபெற்ற விவசாயிகள் பிரதிநிதித்துவ சோவியத்துக்களின் அகில ரஷ்ய விசேஷக் காங்கிரஸில், போல்ஷிவிக்குகளுடன் சேர்ந்து சர்க்கார் அமைக்கும்படி லெனின் இடது சோஷலிசப் புரட்சிகரக்ளை அழைத்தார். 1917 டிசம்பரிலிருந்து, சோவியத் சர்க்காரில்—அப்போது இதற்குப் பெயர் மக்கள் கமிசார்களின் கவுன்சில்—11 கம்யூனிஸ்டுகளும் 7 இடது சோஷலிசப் புரட்சிகாரர்களும் அங்ககம் வகித்தார்கள்.

இந்தக் கூட்டு சிறிது காலத்திற்குத்தான் நீடித்தது. எனினும், ஒரு பகுதி விவசாயிகளின் ஒரு பகுதி போர் வீரர்களின் ஆதரவைப் பெற்றிருந்த இடது சோஷலிசப் புரட்சிகாரர்களுடன் இருந்த இந்தக் கூட்டு சோவியத் சர்க்காரின் நிலையைப் பலப்படுத்தியது; அதனுடைய பகைவர்களின் சக்திகளை பலவீனப்படுத்தியது. நாளாவட்டத்தில், இடது சோஷலிசப் புரட்சிகாரர்களின் ஊசலாடும், நிலையற்ற தன்மை சோஷலிசப் புரட்சிகாரர்கள் அதிகப் பிற்போக்கானவர்கள். இவர்கள் பூர்ஷ்வாக்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு குலாக்குகளின் நலன்களைப் பாதுகாத்தனர். இடது சோஷலிசப்புரட்சிகரர்கள் விவசாய மக்களிடையே தமது செல்வாக்கைக் காக்க முயன்றார்கள்; எனவே போல்ஷிவிக்குகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர்.

கொள்கையைக் கம்யூனிசப் புரட்சிரக் கட்சி விமர்சிக்கத் தொடங்கியது. சோஷலிசப் புரட்சி மேலும் முழுமையாக மலர்ந்து, விவசாயிகளிடையே ஆழமான பிரிவுகளை உண்டாக்கிய போது, இடது சோஷலிசப் புரட்சிகரக்ள் குலாக்குகளின்* நலன்களை மேன்மேலும் அதிகமாகப் பிரதிபலிக்கத் தொடங்கினார்கள். 1918 ஜூலை மாதத்தில் அவர்கள் சர்க்காரிலிருந்து விலகி எதிர்ப்பு புரட்சிக் கலகம் செய்தார்கள். அதை சோவியத் சர்க்கார் அடக்கி நசுக்கியது. ஆனால் அப்போதும் கூட, சோவியத்துகள் இடது சோஷலிசப் புரட்சிகரர்களின் கட்சியை ஒட்டுமொத்தமாக வெளியேற்றவில்லை. கலகக்காரர்களை ஆதரித்தவர்களை மட்டுமே வெளியேற்றியது.

தங்களுடைய சோவியத் எதிர்ப்பு கொள்கையின் காரணமாக இடது சோஷலிசப் புரட்சிகரக்ள் உழைக்கும் விவசாயிகளை விரோதித்துக் கொண்டனர்; எனவே அவர்கள் தமது சமூக அடிப்படையை இழந்து, அரசியல் அரங்கிலிருந்தே மறைந்து விட்டார்கள். மென்ஷிவிக்குகள், வலது சோஷலிசப் புரட்சிகாரர்கள் உட்பட இதர குட்டி பூர்ஷ்வா கட்சிகளின் தலைவர்கள் பயங்கரமான உள்நாட்டு யுத்தத்தின் போது எதிர்ப்பு புரட்சியின் பக்கம் சேர்ந்து நின்றதால், மக்களின் அவமதிப்புக்கு ஆளானார்கள்; நாட்டை விட்டு வெளியே விரட்டப்பட்டார்கள்.

சோவியத் ரஷ்யாவில் ஒரே கட்சி அமைப்பு உருவானதற்கு காரணம், பாட்டாளி வர்க்கக் கட்சிகளல்லாதவற்றுடன் ஒத்துழைக்க கம்யூனிஸ்டுகள் மறுத்தது அல்ல என்பதைம், இந்தக் கட்சிகள் புரட்சியை வெறுத்து ஒதுக்கியதும், மக்களுடைய இலட்சியங்களுக்கு துரோகமிழைத்ததும்தான் காரணம் என்பதையும் இந்த உண்மைகள் எடுத்துக் காட்டிடுகின்றன.

____________________________________

* குலாக்குகள்: கிராமப்புறத்துள்ள பணக்கார விவசாயிகள். தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலமும், நிலத்தையும் உழு கருவிகளையும் குத்தகைக்கு விடுவதன் மூலமும் ஆதாயம் சம்பாதித்தவர்கள்.

_____________________________________

வெவ்வேறுவரலாற்று நிலைமைகளில் சோஷலிச நிர்மாணத் துறையில் ஈடுபட்ட பல்கேரியா, ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு, வியத்நாம் ஜனநாயகக் குடியரசு, கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசு, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா முதலிய நாடுகளில் பல்கட்சி அமைப்பு அபிவிருத்தியடைந்தது. ஜெர்மன் பாசிஸ்டும் ஜப்பானியப் படையெடுப்பாளர்களையும் எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது, இந்த நாடுகளிலிருந்த பிற்கோக்கு சக்திகள் முறியடிக்கப்பட்டன. பழைய அரசியல் அமைப்பின் இடிப்பாகங்களிலிருந்து ஸ்திரமான கூட்டணிகள் தோன்றின. உழைக்கும் மக்களில் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்திராத பிரிவுகளின் நலன்களையும் இக்கூட்டணிகள் பிரதிபலித்தன. சோஷலிசத்தை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டமும், தொழிலாளர் வாக்கத்தின் மற்றும் அதனுடைய முன்னணியின் படையான மார்க்சிய-லெனினியக் கட்சியின் பாத்திரத்தை அங்கீகரித்ததும் இந்தக் கூட்டணிகளின் அரசியல் அடிப்படையாக விளங்கின. உழைக்கும் மக்களிடையே அரசியல் போட்டியை ஏற்படுத்துவதற்கு பதிலாக, ஒத்துழைப்பையும் ஐக்கியத்தையும் இக்கூட்டணிகள் வளர்த்தன; இது அவற்றின் சிறப்பும்சமாகும்.

பல சோஷலிச நாடுகளில் சோஷலிச சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் காரணமாக, மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படையில் கம்யூனிசப்புக் கட்சிகளும் சமூக ஜனநாயகக் கட்சிகளும் ஒன்று சேருவது சாத்தியமாயிற்று. கடந்த காலத்தில் பூர்ஷ்வாக்கள் தங்களுடைய ஆதிக்கத்தைப் பேணிக் காத்து நீடிக்கும் பொருட்டு, தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி பயன் அடைந்து வந்தார்கள். அதற்கு இவ்வாறு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது

குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசேஷ நிலைமைகளையும், அதனுடைய வரலாற்று அபிவிருத்தியின் குறிப்பிட்ட கட்டத்தையும் பொறுத்து, சோஷலிச சமுதாயத்தில் கட்சியின் வழி காட்டும் பாத்திரம் திட்டவட்டமான வடிவங்களை மேற்கொள்கிறது.

எதிர்ப்பு புரட்சி சக்திகளை முறியடித்தல், நாடு முழுவதும் சோவியத் ஆட்சியை நிலைநாட்டுதல், பழைய பூர்ஷ்வா-நிலப்பிரபு அரசாங்க இயந்திரத்தை அகற்றிவிட்டு அதன் இடத்தில் உழைக்கும் மக்களால் நடத்தப்படும் அரசாங்க இயந்திரத்தை அமைத்தல், பொருளாதாரக் கலாசாரத் துறைகளில் முதல் சோஷலிச சீர்திருத்தங்களை நிறைவேற்றுதல் முதலையானது அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் கம்யூனிசப்புக் கட்சியின் முன்னுரிமை பெற்ற கடமைகளாக இருந்தன. எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு சீக்கிரத்தில், உலக ஏகாதிபத்திய யுத்தத்திலிருந்து நாட்டை விலக்கிக் கொள்வதும், சோஷலிசத்தை நிர்மாணிப்பதற்கும், உலகப் புரட்சிகர இயக்கத்தின் வன்மைமிகு தளமாக அதை மாற்றுவதற்கும் சாதகமாயுள்ள சர்வதேச சூழ்நிலையை சிருஷ்டிப்பதும்கூட இன்றியமையாத கடமைகளாக விளங்கின. உலகின் முதல் சோஷலிச சமுதாயத்தை நிர்மாணிக்கும் பொருட்டு கட்சியின் தலைமையின் கீழ் உழைக்கும் மக்கள் நிறைவேற்ற வேண்டிய பிரம்மாண்டமான பணியின் தொடக்கம் இது. இதுகாறும் எவரும் பிரயாணம் செய்திராத புதிய மார்க்கத்தின் வழியே நாடு முன்னேறத் தொடங்கியது.

புது முறையான சர்க்கார் அமைப்பு

சோவியத்துக்களின் இரண்டாவது அகில ரஷ்யக் காங்கிரஸ்* தான் தேர்ந்தெடுத்த அரசாங்க அதிகாரத்தின் உண்மையில் ஜனநாயக உறுப்புக்களான அகில ரஷ்ய

* தொழிலாளர்கள், போர்வீரர்கள் பிரதிநிதித்துவ சோவியத்துக்களின் இரண்டாவது அகில ரஷ்யக் காங்கிரஸ் 1917 அக்டோபர் 25-ம் தேதி மாலையில் ஆரம்பமாயிற்று. சமாதானம், நிலம் பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசாணைகளை அது ஊர்ஜிதம் செய்தது. தொழிலாளர் விவசாயி சர்க்காரை-லெனினின் தலைமையில் மக்கள் கமிசார்களின் கவுன்சிலை-அமைத்தது.

மத்திய நிர்வாகக் கமிட்டி, மக்கள் கமிசார்களின் கவுன்சில் ஆகியவற்றிடம் நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தது. லெனினின் தலைமையிலிருந்த மக்கள் கமிசார்களின் கவுன்சில் அரசாங்க நிர்வாகத்தின் கேந்திர உறுப்பாகத் திகழ்ந்தது. இந்தக் கவுன்சில் சோவியத் அரசின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளை நிறைவேற்றியது.

சோவியத் அதிகாரத்தை உறுதி செய்யும் பொருட்டு பழைய அரசாங்க அமைப்பை ரத்து செய்ய வேண்டியதும், புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டியதும் மிகவும் முக்கியமாய் இருந்தது. "இதற்கு முந்திய எல்லாப் புரட்சிகளும் அரசாங்க இயந்திரத்தை முழு நிறைவாக்கின; ஆனால் அதை உடைத்து நொறுக்க [வேண்டியது அவசியம்]" என்று லெனின் எழுதினார். "அரசு பற்றிய மார்க்சிய தத்துவத்தில் இந்த முடிவுதான் பிரதானமான மற்றும் அடிப்படையான அம்சமாகும்."*( * வி. இ. லெனின், தொகுப்பு நூல்கள், தொகுதி 26, பக்கம் 406.)

1917 அக்டோபரிலிருந்து 1918 பிப்ரவரி வரை, பழைய சர்க்கார் அமைப்பை அகற்றுவதிலும் சோவியத் அரசாங்க இயந்திரத்தை நிர்மாணிப்பதிலும் பிரம்மாண்டமான வேலையை கம்யூனிசப்புக் கட்சி நிறைவேற்றியது.

போலீசுக்குப் பதிலாக தொழிலாளர்-விவசாயி கண்காணிப்புக் படை அமைக்கப்பட்டது. பூர்ஷ்வா நீதிமன்றங்களுக்குப் பதிலாக, உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் சோவியத் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

புதிய அரசாங்க இயந்திரத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்ப்பு புரட்சி சக்திகளின் உறுதியான எதிர்ப்பையும், அதிகார வர்க்கத்தினரின், நிபுணர்கள் மற்றும் அலுவலக சிப்பந்திகளில் ஒரு பிரிவினரின் நாச வேலையையும் சோவியத் சர்க்கார் சமாளிக்க வேண்டியிருந்தது. அலுவலக சிப்பந்திகள் வேலைக்கு வரவில்லை; தஸ்தாவேஜ்களும் மற்றும் அரிய பொக்கிஷங்களும் வைக்கப்பட்டிருந்த பெட்டங்களின் அருகில் செல்ல முடியாதபடி சோவியத் சர்க்காரின் பிரதிநிதிகளை அவர்கள் தடுத்தார்கள்; தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் தர முடியாது என்று மறுத்தனர்; உணவு, போக்குவரத்து மற்றும் இதுபோன்று தொழில் துறைகளை சீர்குலைத்தனர். நியூ டைம் என்ற பூர்ஷ்வா பத்திரிகை மக்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த வண்ணம் இவ்வாறு வினவியது: "தியேட்டர்களை யார் நடத்துவார்கள்? பிட்டர் தொழிலாளியா? சுய வேலைக்காரன் ராஜ தந்திரத்தில் ஈடுபடுவானா? இதெல்லாம் சாத்தியமா? போல்ஷிவிக்குகளுடைய இத்தகைய விவேகமில்லாத பிரச்சினைகளுக்கு வரலாறு கண்டிப்பான விடையை அளிக்கும்."

ஆம், வரலாறு உண்மையிலேயே விடையை அளித்தது; ஆனால் புரட்சியின் பகைவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாதிரியான விடையை அல்ல. முன்னேறிய தொழிலாளர்கள், போர் வீரர்கள், மாலுமிகள் முதலியோரை புதிய அரசாங்க இயந்திரத்தை நிர்மாணிக்கும் பணியில் கட்சி ஈடுபடுத்தியது; தவர்களில் பலர் தலைசிறந்த ஸ்தாபன அமைப்பாளர்களாகப் புகழ் பெற்றார்கள். இவ்வாறு, நாட்டிலிருந்த மிகப்பெரிய தொழிற்சாலையான புத்திಲೋவ் ஆலைத் தொழிலாளர்கள் உள் விவகாரங்களுக்கான மக்கள் கமிசார் இலாகாவை ஏற்படுத்துவதில் பங்குகொண்டு கொண்டார்கள். பால்ட்டிக் கப்பற்படையைச் சேர்ந்த மாலுமிகள் வெளி விவகாரங்களுக்கான மக்கள் கமிசார் இலாகாவை அமைப்பதில் பங்குகொண்டு கொண்டார்கள். பெட்ரோகிராடு ரயில் சந்திப்பில் பணியாற்றிய தொழிலாளர்களின் செயலாக்கமான உதவியுடன் ரயில்வே மக்கள் கமிசார் இலாகா ஏற்படுத்தப்பட்டது. தொழிலாளர்களுக்குங் மாலுமிகளுக்கும் தேவையான தகவல் அறிவும் அனுபவமும் இல்லாதிருந்தது; பிரம்மாண்டமான கஷ்டங்களே அவர்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனால், கட்சியின் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அவர்களுக்கிருந்த இந்தப் பற்றுக் குறையை, அவர்களுடைய புரட்சிகர உற்சாகமும், உறுதியான மனோதிடமும் ஈடு செய்தன.

* அலெக்சாண்டர் கிரிகோரியேவிச் ஷிலிக்தோர் (1868-1940), 1891-லிருந்து கம்யூனிசப்புக் கட்சி உறுப்பினர். 1905-1907 புரட்சியில் செயறூக்கத்துடன் பெங்கெடுத்துக் கொண்டார். மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சி நடைபெற்றபோது, மாஸ்கோ புரட்சிகர இராணுவக் கமிட்டியில் உறுப்பினாயிருந்தார். 1917-18-ல் ரஷ்ய சமஷ்டியில் உணவு சப்ளைக்கான மக்கள் கமிசார். 1919-ல் உக்ரேனில் உணவு சப்ளைக்கான மக்கள் கமிசார். பிந்திய ஆண்டுகளில், அரசிலும் கட்சியிலும் பல முக்கியமான உயர்ந்த பதவிகளை வகித்தவர். புகழ்பெற்ற அறிஞர். கட்சி விஷயங்களைப் பற்றி பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

1917 நவம்பரில், பழம்பெரும் புரட்சியாளரான எ. ஜி. ஷிலிக்தோருக்கு உணவு சப்ளைக்கான மக்கள் கமிசார் பதவி அளிக்கப்பட்டது. அன்னாட்களிலிருந்த நிகழ்வுகள் பற்றி தம்மினேவுக் குறிப்புகளில் அவர் இவ்வாறு எழுதுகிறார்:

"உணவுப் பண்டங்களுக்கான அரசாங்க இலாகா—அதாவது உணவு சப்ளைக்கான மக்கள் கமிசார் இலாகா—தோன்றிய ஆரம்ப மாதங்களில் நான் சமாளிக்க வேண்டியிருந்த கஷ்டங்களில் பத்தில் ஒரு பங்கைப் பற்றிகூட, இந்தப் பதவி எனக்கு அளிக்கப்படும் சமயத்தில், நான் எதிர் பார்த்திருக்க முடியாது. பாட்டாளி வர்க்கம் அப்போது தான் கைப்பற்றியிருந்த அரசியல் அதிகாரத்தின் எதிர்காலம் பற்றிய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியிருந்தது. எனவே, எங்கள் அனைவரையும் அப்போது எதிர்நோக்கியிருந்த பிரச்சினை, இந்த அல்லது அந்தக் கடமைப் பொறுப்பைச் சமாளிக்க முடியுமா என்பது அல்ல. (கடமைகள் பிரம்மாண்டமானவையாயும் பல சந்தர்ப்பங்களில் எங்களுக்குப் பரிச்சயமற்றதாயும் இருந்தன.) மாறாக, இதை நாங்கள் செய்யவேண்டுமென்று புரட்சியின் நலன்கள் கோருவதால் எங்களால் இயன்றவரை சிறப்பாக இதை நிறைவேற்ற வேண்டும். புரட்சியின் நலன்கள்தான், எனக்கு அளிக்கப்பட்ட இந்தப் பதவிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி இறுதியில் என்னைத் தூண்டின."

"அனிச்சோவ் மாளிகைக்கு என் முதல் விஜயம் பற்றிய நினைவுகள் இன்னும் என் உள்ளத்தில் பசுமையாக இருக்குகின்றன. பூர்ஷ்வா தற்காலிக சர்க்காரின் உணவு சப்ளைக்கான அமைச்சகம் அந்த மாளிகையில் இருந்தது. 1917 நவம்பர் 21-ம் நாள், உணவுத் தொழிலை உடனடியாகத் தனது கரங்களில் எடுத்துக்கொள்ள சோவியத் சர்க்கார் செய்த முடிவை அமைச்சகத்திலிருந்து அதிகாரிகள் அறிந்திருந்த ரகளா இல்லையா என்பது எனக்கு அப்பொழுது தெரியாது. ஆனால், நுழைவு வாயிலிலும், மாடிப்படிகளிலும், ஊடு வழிகளிலும் நான் அவர்களைத் தாண்டிச் சென்றபோது விந்தை மனிதரைக் காண்பதுபோல் வஞ்சகப் பார்வையுடன் என்னை முறைத்துப் பார்த்தார்கள். அவர்களுடைய கண்களில் நான் கண்ட ஏளனம்....

"ஊழியர்களின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களை அழைத்து, ஓர் ஊழியர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி கூறினேன். என்னுடைய யோசனையை நிராகரிப்பதற்கு அவர்கள் என்ன காரணங்கள் கூறினார்கள் அல்லது உண்மையில் ஏதாவது காரணங்கள் கூறினார்களா என்பதெல்லாம் எனக்கு நினைவில்ில்லை. இதுதான் அவர்கள் அளித்த பதில்: 'இப்போது எந்தக் கூட்டத்தையும் நடத்த முடியாது.'

"'சரி அப்படியானால் நீங்கள் இல்லாமல் நடத்திக் கொள்கிறேன்' என்று கூறி அவர்களைப் போகச் சொல்லிவிட்டேன்."

"'அவர்களை நான் கைது செய்யவில்லை, சந்தேகத்துக்குக்கிடமின்றி இது ஒரு தவறுதான்.'

"'நாச வேலைக்காரர்களின் தலைவர்களை பெரும்பான்மையான ஊழியர்களிடமிருந்து முன் கூட்டியே பிரித்திருந்தால், முன்னதாகவே நாச வேலையை சுலபமாகத் தடுத்திருக்க முடியும்.'"

"'எல்லாப் பிரிவுகளையும் உப பிரிவுகளையும் சுற்றிப் பார்க்க முடிவு செய்தேன். ஒரு பிரிவுக்குள் நாங்கள் நுழைந்ததும், 'சோவியத் ஆட்சியின் பெயரால் நான் கூறுவதுவிரும்புவது...' என்று பேசத் தொடங்கினேன். உடனே எல்லா ஊழியர்களும் மிரண்டுபோன முயல் குட்டிகளைப் போல எதிர்திசையிலிருந்து கதவை நோக்கி ஓடினார்கள்."

"அந்தப் பிரிவின் மேலாளராக உணவுக்கொள்முதல் விசேஷத் தூதனை* நாங்கள் நியமித்தோம். வெளியில் ஓடிப்போன ஊழியர்கள் திரும்பி வந்ததும் உடனே அவர்களிடம் இருந்து பைகளைக் வாங்கிக் கொள்ளும்டியும் மேஜைகளைப் பூட்டி விடும்டியும் அவருக்கு உத்தர விட்டோம்.

"நாங்கள் சென்ற வேறு பிரிவுகளிலும் இதே காட்சியைத்தான் கண்டோம்: பிதுங்கிய கண்கள், பயத்தால் விகாரமடைந்த முகங்கள், மிக அருகிலிருந்த கதவுகள் வழியாகத் தப்பித்தோம் பிழைத்தோம் என்ற ஓட்டங்கள்.

"ஊழியர்கள் ஸ்தாபன ரீதியாக நன்கு ஒன்று திரட்டப்பட்டிருந்தார்கள் என்பதை அவர்களுடைய நடத்தை எடுத்துக் காட்டியது. அல்லது, ஒருவேளை தங்களுக்குப் புலனாகாததைப் பற்றிய, இதற்குமுது என்றுமே நேர்ந்திராத நிகழ்வுகளைப் பற்றிய பீதியாகவும் இது இருக்கலாம்.

"ஒரே ஒரு திசையை நோக்கித்தான் எல்லா ஊழியர்களும் தப்பித்துச் சென்றதால், அவர்கள் எல்லோரையும் ஒரே அறையில் சந்தித்து, நான் கூற வேண்டியதை அவர்களிடம் தெரிவித்துவிடலாம் என்று நினைத்தேன். என்னுடைய ஊகம் சரியாகத்தான் இருந்தது.

"ஒவ்வொரு அறையாகச் சென்றபின் இறுதியில் நான் அவர்களைக் கண்டுபிடித்தேன். அங்கே அவர்கள் நாற்பது, ஐம்பது பேர் இருந்தார்கள். எரிச்சலூட்டாமலும், ஊழியர்களுடன் பரஸ்பர மனோபாவத்தோடு பேசவேண்டுமென்ற ஆர்வத்தோடும் நான் தொடங்கினேன். ஊழியர்கள், அவர்களுடைய நாசவேலைத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டிருப்பது போல் தோன்றியது. சோவியத் சர்க்கார் அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை அவர்களுக்கு விளக்கிக் கூறினேன். அலுவலகத்தில் என்னுடைய முதல் நாள் பணி இவ்வாறு முடிந்தது."

* உணவுக்கொள்முதல் விசேஷ தூதர்கள் என்பவர்கள் போர்க்களத்திலிருந்த இராணுவத்திற்கு உணவுப் பண்டங்களைப் பெறுவதற்காக உணவு சப்ளை அமைச்சகத்திற்கு இராணுவ யூனிட்டுகளால் அனுப்பப்பட்ட பிரத்யேக இராணுவப் பிரதிநிதிகள் ஆவர்.

"மறுநாள் அமைச்சகத்தைச் சேர்ந்த சுமார் 20 தொழில் நுட்ப ஊழியர்கள் என்னைப் பார்க்க வந்தார்கள்—வாயிற் காப்பார்கள், பியூண்கள், கணப்பு அடுப்பு பராமரிப்பவர்கள், காவலாளிகள், துப்புரவு செய்பவர்கள் போன்றோர் வந்தார்கள்.

"'காம்ரேட் கமிசார், வேலை நிறுத்தக்காரர்களோடு நாங்கள் சேரமாட்டோம் என்பதையும் எங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் சோவியத் சர்க்காரின் சேவைக்கே அர்ப்பணிப்போம் என்பதையும் தெரிவிக்க நாங்கள் விரும்புகிறோம்' என்று அவர்களில் ஒருவர் குறிப்பிட்டார்.

"'போல்ஷிவிக்குகள் 'ஒரு சில வாரங்களுக்குள் விரட்டி அடிக்கப்படுவார்கள்' என்று அரசியல் அஞ்ஞானிகளும், நேர்மையற்ற ஒருதலைக் கருத்துக்கொண்ட துவேஷிகளும் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த அந்த நாட்களில் நாசவேலைக்காரர்களைப் பின்பற்றுவது தவறாவது, ஒருவருடைய குடும்பத்தின் பொருளாதார அந்தஸ்துக்கு தீங்கு விளைவிப்பது என்று அர்த்தமாகும். ஏனெனில், சோவியத் சர்க்கார் தோற்றுவிட்டால், அந்த சர்க்காருடன் ஒத்துழைத்த எல்லோரையும் நாசவேலைக்காரர்கள் வேலையிலிருந்து தள்ளிவிடுவது மட்டுமின்றி சிலரைக் சுட்டுக் கொல்லவும் செய்வார்கள். இதுவரை யிலும் துரும்புபோலக் கருதப்பட்டவர்களும் அந்த அக்டோபர் நாட்களில் கிளர்ந்தெழுந்து வெற்றிபெற்ற லட்சோப லட்சக்கணக்கான தொழிலாளர்களுடன் சேர்ந்து கொண்டனர்....'*

எதிர்ப்பு புரட்சியையும், நாசவேலையையும், கள்ளச் சந்தையையும் எதிர்த்து முறியடிப்பதற்காக 1917 டிசம்பரில் அகில ரஷ்ய விசேஷக் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. உண்மை யான லெனினியவாதியும் பழம்பெரும் புரட்சி வீரருமான

* லெனின், விருது பெற்ற மத்திய புரட்சி பொருட்காட்சிச்சாலை, ரோட்டியும் ரோஜாக்களும், மாஸ்கோ, 1972, பக்கம் 16, 18-20 (ரஷ்யனில்). எப்.இ. ஜெர்ஜின்ஸ்கி இதற்குத் தலைமை தாங்கினார். சோவியத் சர்க்காரால் வரையறுக்கப்பட்ட கடமைப் பொறுப்புகளிலிருந்து விசேஷக் கமிஷனின் செயல்பாடுகளும் முறைகளும் சன்னமாய் உருவாகின, அவை யாவன: "குற்றங்களைத் தடுப்பது, எதிர்ப்பு புரட்சி போராட்ட நிறுவனங்களை முறியடிப்பது, எதிர்ப்பு புரட்சிக்காரர்களுடைய திட்டங்களைக் குலைப்பது, பகையைப் போர்விழிகளை நிராயுதபாணியாக்குவது."

கட்சி மற்றும் சோவியத் நிறுவனங்களின் வழிகாட்டுதலின் கீழும், கண்டிப்பான கட்டுப்பாட்டின் கீழும் விசேஷ கமிஷன் இயங்கியது; பெருந்திரளான உழைக்கும் மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் அது ஆதரவாய்க் கொண்டிருந்தது. அதனுடைய ஸ்தல உறுப்புகள் சோவியத்துகளுடன் இணைக்கப்பட்டிருந்தன. அசாதாரண அதிகாரங்களைப் பெற்றிருந்த இந்தக் கமிஷன் உள் விவகாரங்களுடன், நீதிமன்றங்களுக்குமான மக்கள் கமிசாரகங்களுடன்* இணைந்து பணியாற்றியது.

இராணுவப் படைகளை அமைப்பதுதான் மிகவும் கடினமான பொறுப்புகளில் ஒன்றாக இருந்தது. பழைய இராணுவம் முதலாளித்துவ முற்றுகையிலிருந்து சோவியத் அரசைப் பாதுகாக்கும் திறனற்றிருந்தது. போர் வீரர்களின் கமிட்டியை ஆதாரமாகக் கொண்டு சோவியத் சர்க்கார் இராணுவத்தில் ஜனநாயக சீர்திருத்தத்தை நிறைவேற்றியது. எதிர்ப்புரட்சிகரமான ஆபீசர்கள் மாற்றப்பட்டு, தளபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பழைய இராணுவம் 1918 ஜனவரியில் படைக்கப்பு செய்யப்பட்டது. அதே சமயம், விருப்ப ஆர்வ அடிப்படையில் தொழிலாளர்-விவசாயி செஞ்சேனையையும், சிவப்புக் கடற்படையையும் அமைப்பதென அரசுக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

* 1922 பிப்ரவரியில், அகில ரஷ்ய மத்திய நிர்வாகக் கமிட்டியானது அகில ரஷ்ய விசேஷக் கமிஷனை உள் விவகாரங்களுக்கான மக்கள் கமிசாரகத்தின் பிரதம நிர்வாகப் உறுப்பாகத் திருத்தி அமைத்தது.

சோவியத் இராணுவப் படைகளை அமைப்பதில் வர்க்கக் கோட்பாட்டினை இது ஊர்ஜிதம் செய்தது. இராணுவத் தலைவீட்டு அபாயம் அதிகரித்து வருவதற்குக் கண்ட சோவியத் சர்க்கார், இராணுவத்தை அமைப்பதில் விருப்ப ஆர்வக் கோட்பாட்டுக்குப் பதிலாக கட்டாய இராணுவக் கவசக் கோட்பாட்டை அமல் நடத்துவதென முடிவு செய்தது.

முழுமையான சோஷலிசக் கடமைகளை நிறைவேற்றி வருகையில், பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியின் வேலைத் திட்டத்தையும் சோவியத் சர்க்கார் நிறைவேற்றியது. நிலவாரக் வர்க்கத்தை அது அகற்றியது, எல்லா வர்க்கங்களையும் பட்டங்களையும் ரத்து செய்து, ரஷ்ய சோவியத் குடியரசின் பிரஜை என்ற பட்டத்தை ஏற்படுத்தியது, மாதர்களின் சரிசமமான அந்தஸ்தை சட்ட முறைமைப்படுத்தி எல்லா அவமானகர சட்டங்களையும் ரத்து செய்து தது. சமூக வாழ்வியலின் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு சரிநிகரான அந்தஸ்தில் மாதர்களுக்கும் எல்லா உரிமைகளையும் வழங்கியது, விசேஷமான அரசுக் கட்டளையின் மூலம் சோவியத் சர்க்கார் சமயக் கோல்களின் சலுகை உரிமைகளை ரத்து செய்தது; அரசினிடமிருந்தும் பள்ளிக்கூடத்திலிருந்தும் அதைத் தனியே பிரித்தது; அதே சமயம், பரிபூரணமான மனச்சாட்சி சுதந்திரத்தையும், தெய்வ வழிபாட்டு சுதந்திரத்தையும் வழங்கியது. சோவியத் சர்க்காரின் இந்த முதல் நடவடிக்கைகள் புதிய சோஷலிச அரசின் ஆழ்ந்த புரட்சிகர, ஜனநாயகத் தன்மையை சிறப்பாக எடுத்துக் காட்டின.

ரஷ்யாவல்லாத தேசிய இனங்களின் ஒடுக்கப்பட்ட நிலையையும் அசத்துவ நிலையையும் அக்டோபர் புரட்சி அறவே அகற்றியது. புரட்சியின் ஒப்பற்ற பயன்களில் இதுவும் ஒன்றாகும். 1917 நவம்பர் 15-ம் தேதி அறிவிக்கப்பட்ட அகில ரஷ்ய மக்களின் உரிமைப் பிரகடனம், அன்றிலிருந்து சோவியத் நாட்டில் ஒடுக்கும் மக்களோ அல்லது ஒடுக்கப்பட்ட மக்களோ இல்லை என்று பல சாற்றியது. ரஷ்யாவிலுள்ள எல்லா தேசிய இனங்களும் முழுமையான சமத்துவம் பெற்றுள்ளன என்றும், சுதந்திரமாக வளர்ச்சியடைவதற்கு வாய்ப்பு பெற்றுள்ளன என்றும் சோவியத் சர்க்கார் சட்டம் இயற்றியது. எல்லா தேசங்களுக்கும், தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையும் சுதந்திர அரசுக்களை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமையும் உள்பட சுயநிர்ணய உரிமை அளிக்கப்பட்டது. பிரகடனத்திற்கு ஏற்ப சோவியத் சர்க்கார் உக்ரேனும் பின்லாந்தும் சுதந்திர அரசுக்கள் என்று 1917 டிசம்பரில் அங்கீகரித்தது. பாட்டாளி வர்க்க சர்வதேச உணர்வில் தேசிய இனப் பிரச்சினைக்குக் காணப்பட்ட தீர்வானது, பலவீன சோவியத் மக்களின் நட்புமுறையையும் நம்பிக்கையையும் உறுதிப்படுத்தியது; சோஷலிசத்திற்காக நடைபெற்ற போராட்டத்தில் வல்லமைமிக்க அம்சமாகத் திகழ்ந்தது.

சோவியத் ஜனநாயகத்தைப் பேணி வளர்ப்பதற்கும், செயலாக்கமான சமூக அரசியல் வாழ்க்கையில் பெருந்திரளான உழைக்கும் மக்கள் பங்கெடுத்துக் கொள்ளும்படி செய்வதும் கட்சி தீர்மானமான முக்கியத்துவம் அளித்தது. எல்லா தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்தும் தங்களுடைய பிரதிநிதிகளைத் திரும்பப் அழைத்துக்கொள்ள வாக்காளர்களுக்கு உள்ள உரிமையைப் பற்றி அகில ரஷ்ய மத்திய நிர்வாகக் கமிட்டி அரசாணையைப் பிறப்பித்தது. உண்மையிலேயே ஜனநாயகப் பிரதிநிதித்துவத்துக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிலாளர், விவசாயி, போர் வீரர் பிரதிநிதிகளோது சோவியத்துக்களில் இத்தகைய பிரதிநிதித்துவத்துக்கு உத்தரவாதமளிப்பதை இந்த அரசாணை நோக்கிக் கொண்டிருந்தது.

சோவியத் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதிலும் பழைய அரசைப் புரட்சிகரமான முறையில் மாற்றிமைக்கும் பணியைப் பூர்த்தி செய்வதிலும் அரசியல் நிர்ணய சபைக் கலைப்பு முக்கிய நிகழ்வாக விளங்கியது. அரசியல் நிர்ணய சபை துவக்கப்படவிருந்த சமயத்தில் அகில ரஷ்ய மத்திய நிர்வாகக் கமிட்டிக் சுரண்டப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைப் பிரகடனத்தை நிறைவேற்றியது. இது லெனினால் வகுக்கப்பட்டதாகும். நாட்டிலிருந்த அரசு அதிகாரம் அனைத்தும் சோவியத்துக்களுக்கே சொந்தம் என்று பிரகடனம் கூறியது; சமாதானம், நிலம், தொழிற்சாலைகளில் தொழிலாளர் கட்டுப்பாடு, இன்னும் இது போன்ற விஷயங்களில் சோவியத் சர்க்கார் பிறப்பித்த அரசாணைகளை ஊர்ஜிதம் செய்தது; சோவியத் சர்க்கார் கடைப்பிடித்த அயல் நாட்டுக் கொள்கையை அங்கீகரித்தது. மத்திய நிர்வாகக் கமிட்டியின் தலைவரான ஒய். எம். ஸ்வெர்த்லோவ் பிரகடனத்தை நிறைவேற்றவென்று அரசியல் நிர்ணய சபையில் பிரேபித்தார். ஆனால் அங்கே பெரும்பான்மையினராக இருந்த எதிர்ப்புரட்சிகர மென்ஷிவிக்குகளும், வலது சோஷலிசப் புரட்சிகரர்களும் அரசாணையை நிராகரித்தனர். இதன் எதிர்ப்பூத் தன்மையை வெளிப்படுத்தினர். இதற்குப்பழி வாங்குமுகமாக மத்திய நிர்வாகக் கமிட்டி அரசியல் நிர்ணய சபையை 1918 ஜனவரியில் கலைத்துவிட்டது. அரசியல் நிர்ணய சபைக் கட்சியின் சோவியத்துக்களின் மூன்றாவது அகில ரஷ்யக் காங்கிரஸ் ஆதரித்தது; அதற்கு ஒப்புதல் அளித்து, உழைக்கும் மக்களின் உரிமைப் பிரகடனம் வெற்றிபெற்றது.

___________________________

* 1917-ல் வருட நவம்பர் மாத மத்தியில் அரசியற் நிர்ணய சபைக்கு நடைபெற்ற தேர்தல்கள் அக்டோபர் சோஷலிசப் புரட்சி முன்னர் தொகுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி

_________________________________

மனிதனை மனிதன் சுரண்டும் எல்லாவற்றையும் ரத்து செய்தல், சமுதாயத்தை வர்க்கமற்றதாய் பரிபூரணமாக ஒழித்தல், சமுதாயத்தை சோஷலிச பாதையில் மாற்றியமையை எதிர்க்கும் எந்தவகைப்பட்ட எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி நசுக்கி சோஷலிசத்தின் வெற்றிக்காகவும் போராடுவதை வரலாற்றுக்கடன் பறைசாற்றியது. சோவியத் ரஷ்யாவில் அகில ரஷ்யக் காங்கிரசினால் 1918 ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட ரஷ்ய சோஷலிசக் குடியரசின் முதல் அரசியல் சட்டமாக—கட்டளை இந்தப் பிரகடனம் விளங்கியது.

தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் சட்டம் முறைப்படுத்தியது; பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பாட்டாளி வர்க்கக் அரசை உறுதிப்படுத்தியது. சோஷலிசத்தின் எல்லா உழைக்கும் மக்களும் அரசாங்க விவகாரங்களில் பங்கெடுத்துக்கொள்வதற்கு உத்தரவாதத்தை அளித்த சமயம், சுரண்டல்காரர்களின் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்தது. நாட்டில் புயலென வீசிவரும் தீவிரமான வர்க்கப் போராட்டத்தின் காரணமாக, நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்ததால், சுரண்டல்காரர்களின் உரிமையைக் கட்டுப்படுத்தும் பிரகடனம் இது.

வலது சோஷலிசப் புரட்சிக்காரர்களும் அவருடைய பிரேரணையை நிராகரித்தனர். இதன் மூலம் தங்களுடைய சோவியத் எதிர்ப்புத் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டனர். இதற்குப்பழி வாங்குமுகத்தான், மத்திய நிர்வாகக் கமிட்டி அரசியல் நிர்ணய சபையை 1918 ஜனவரி 6ம் தேதியன்று கலைத்துவிட்டது. அரசியல் நிர்ணய சபையின் பால் கட்சியும் சோவியத் சர்க்காரும் கடைப்பிடித்த கொள்கையை சோவியத்துக்களின் மூன்றாவது அகில ரஷ்யக் காங்கிரஸ் ஆதரித்தது; அதற்கு ஒப்புதல் அளித்தது; சுரண்டப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைப் பிரகடனத்தை நிறைவேற்றியது.

மனிதனை மனிதன் சுரண்டும் எல்லாவித முறைகளையும் ரத்து செய்தல், சமுதாயத்தை வர்க்கங்களாகப் பிரிப்பதை பரிபூரணமாக ஒழித்தல், சமுதாயத்தை சோஷலிச முறையில் மாற்றியமைப்பதை எதிர்க்கும் சுரண்டல்காரர்களின் எத்தகைய எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி நசுக்குதல், சோஷலிசத்தின் வெற்றிக்காகப் போராடுதல் முதலவற்றைப் பிரகடனம் பறைசாற்றியது. சோவியத்துக்களின் ஐந்தாவது அகில ரஷ்யக் காங்கிரசினால் 1918 ஜூலை 10-ம் தேதியன்று நிறைவேற்றப்பட்ட ரஷ்ய சோஷலிச சமஷ்டி சோவியத் குடியரசின் முதல் அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பிரகடனம் விளங்கியது.

தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் வெற்றியை அரசியல் சட்டம் முறைப்படுத்தியது; சோவியத் ஆட்சியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்தியது. சோவியத் குடியரசிலிருந்த எல்லா உழைக்கும் மக்களும் அரசாங்க நிர்வாகத்தில் பங்கெடுத்துக்கொள்வதற்கு உத்தரவாதமளித்தது. அதே சமயம், சுரண்டல்காரர்களின் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்தது. நாட்டில் புயலென பரவிக்கொண்டிருந்த தீவிரமான வர்க்கப் போராட்டத்தின் காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது. "வாக்களிக்கும் உரிமையைக் கட்டுப்படுத்தும் பிரச்சினை தேசிய அளவில் பிரத்தியேகமான ஒரு பிரச்சினையாகும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் பொதுவான பிரச்சினையல்ல இது" என்று லெனின் சுட்டிக் காட்டினர். ரஷ்யப் புரட்சியின் பிரத்தியேகமான நிலைமைகளையும், அதனுடைய வளர்ச்சியின் பிரத்தியேகமான பாதையையும் ஆராய்வதன் மூலம்தான் வாக்குரிமையைக் கட்டுப்படுத்தும் பிரச்சினையை அணுக வேண்டும் என்று அவர் கூறினார். இதர நாடுகளில் நடைபெறவிருக்கும் புரட்சிகளின்போது, பூர்ஷ்வாக்களின் வாக்குரிமையின் மீது கட்டாயம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று முன்கூட்டியே உத்தரவாதமாய்க் கூறுவது தவறு என்றும் அவர் குறிப்பிட்டார். "'சர்வாதிகாரத்தின்' வரலாற்று ரீதியான வர்க்கக் கண்ணோட்டத்தில் இது தவிர்க்க இயலாத நிலையாக இருக்கவில்லை..."*( * வி. இ. லெனின், தொகுப்பு நூல்கள், தொகுதி 28, பக்கம் 256.)

ஆளும் வர்க்கங்கள் தங்களுடைய அதிகாரத்தை இஷ்டபூர்வமாக விட்டுக் கொடுப்பதில்லை. வர்க்கப் போராட்டத்தினுடைய தீவிரத்தன்மையின் அளவு, முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறிச் செல்லும் காலகட்டத்தில் தொழிலாளர் வர்க்கம் பிரயோகிக்கும் நிர்ப்பந்தத்தின் அளவு, சுரண்டல்காரர்களுடைய எதிர்ப்பின் தீவிரத்தன்மையின் மீதும், அவர்கள் உபயோகிக்கும் நிர்ப்பந்தத்தின் மீதும்தான் சார்ந்திருக்கிறது—பாட்டாளி வர்க்கச் செயலின் மீது அல்ல.

சோவியத் சர்க்கார், அரசுகளுக்கிடையிலான உறவுகளில் புதிய கொள்கையை முதன் முதலில் பிரகடனம் செய்தது. லெனினுடைய சமாதானம் பற்றிய அரசாணை முதலில் பிரகடனமாயிற்று. பிறநாடுகளின் பிரதேசங்களை இணைத்துக் கொள்ளுதல் அல்லது நஷ்டஈடு உத்தரவாதம் கோருதல் முதலிலன் இல்லாமல் பொதுப்படையான ஜனநாயக சமாதானத்திற்கான போராட்டம் ஆரம்பமாயிற்று. பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா ஆகிய நேசநாடுகள் ஆஸ்திரியா—ஜெர்மன் கூட்டணி நாடுகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க மறுத்தபோது, சோவியத் சர்க்கார் ஜெர்மனியுடனும் அதன் கூட்டாளி களுடனும் தனியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டது.

இளம் சோவியத் குடியரசைப் பாதுகாக்கும் பொருட்டும், தன்னுடைய நிலையை உறுதிப்படுத்திக் கொண்டு சோஷலிசத்தை நோக்கித் தொடர்ந்து முன்னேறுவதை சாத்தியமாக்க அதற்கு ஓய்வு கொடுக்கும் பொருட்டும் ரஷ்யாவுக்கு சாதகமில்லாத நிபந்தனைகளின் அடிப்படையிலும்ூட ஜெர்மன் ஏகாதிபத்தியத்துடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமென்று லெனின் வலியுறுத்தினார். "இடது சாரிக் கம்யூனிஸ்டுகளை" அவர் வன்மையாக எதிர்த்துப் போராடினார். தீதப் புரட்சிகரச் சொற்களை அள்ளி வீசிய அவர்கள் சக்திகளின் வலுநிலையைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமலேயே ஜெர்மனுடன் "புரட்சிகர யுத்தம்" நடத்தவேண்டுமென்று அறை கூவினார்கள். டிராட்ஸ்கியினுடைய* "'சமாதானம் இல்லை, யுத்தமும் இல்லை" என்ற நிலையையும் லெனின் அம்பலப்படுத்தினார். டிராட்ஸ்கியினுடைய நிலை சோஷலிச ஆதாயங்களை ஒழித்துவிடும் அபாயமாய் திகழ்ந்தது. எனவே அது தேசத் துரோகத்திற்கு ஒப்பானது.

ஏகாதிபத்தியத்தின் கொள்கைக்கு, கொள்ளையடித்தல் நிர்ப்பந்தப்படுத்துதல் ஆகிய கொள்கைக்கு மாற்றாக

__________________________________

* லியான் டிராட்ஸ்கி (உண்மைப் பெயர் லெல்டி. பிரான் ஸ்லென் (1879–1940) சமூக ஜனநாயக இயக்கத்தில் 1897ல் சேர்ந்தார். 1917 கோடையில் போல்ஷிவிக் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1917 லிருந்து 1926 வரை மத்திய கமிட்டியின் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்தார். அக்டோபர் புரட்சியின்போது பெட்ரோகிராடு சோவியத்தின் தலைவராக இருந்தார். முதல் சோவியத் சர்க்காரில் வெளி விவகாரங்களுக்கான மக்கள் கமிசார் பதவி வகித்தினார். பின்னர், தரைப்படை கப்பற்படை விவகாரங்களுக்கான மக்கள் கமிசார் ஆனார். கட்சிக்கொள்கையை அவர் திரும்பத்திரும்ப கண்டித்த வண்ணமிருந்தான். இதன் விளைவாக லெனினுடைய கடுமையான விமர்சனத்திற்காளானார். 1927ல் டிராட்ஸ்கி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

_____________________________________________

சோவியத் சர்க்கார் தேசங்களுக்கிடையே சமாதானப் நட்புறவு, ஒத்துழைப்புக் கொள்கையை முன் வைத்தது. பாட்டாளி வர்க்க அரசின் அயல் நாட்டுக் கொள்கையினுடைய அடிப்படைகளை லெனின் வரையறுத்த பொழுது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பலப்படுத்தி சோஷலிசத்தை நிர்மாணிக்கும் கடமைகளுக்கும், உலக விடுதலை இயக்கத்தை முன்னேற்றச் செய்யும் கடமைக்கும் அது கீழ்ப்படிந்து இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டினார்.

அயல்நாட்டு உறவுகள் துறையில், வெவ்வேறு சமூக அமைப்புகளைக் கொண்ட அரசுகளுக்கிடையே சமாதான சகவாழ்வு எனும் கோட்பாடு சோவியத் மக்களின் நலன்களுக்கும், எல்லா நாடுகளிலும் உள்ள உழைக்கும் மக்களின் நலன்களுக்கும் முற்போக்கு மனிதகுலம் அனைத்தின் நலன்களுக்கும் முழுமையாக இசைந்திருக்கிறது என்பதை லெனின் ஐயந்திரிபற நிரூபித்தார். லெனினுடைய இந்தக் கோட்பாட்டின் பிரகாரம், தகராறான பிரச்சினைகளுக்கு அரசுகள் இராணுவ பலத்தை உபயோகித்தோ அல்லது பயங்கரமான யுத்தங்கள் மூலமோ தீர்வு காணக்கூடாது; சோஷலிச நாடுகளும் முதலாளித்துவ நாடுகளும் சகஜமாக சமாதான பூர்வமான வர்த்தக உறவுகளை வைத்துக்கொள்ள வேண்டும். சமாதானத்தைப் பேணிக்காத்து உறுதிப்படுத்தும் கொள்கைதான், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வெற்றியடைந்த ஒரு நாட்டில் சோஷலிசத்தை வெற்றிகரமாக நிர்மாணிப்பதற்கு சாதகமான சர்வதேச நிலைமைகளை சிருஷ்டிக்கும் என்று லெனின் ஊர்ஜிதம் செய்தார். பாட்டாளி வர்க்க அரசு சமாதானத்தின்பால் கொண்டிருக்கும் உண்மையான நாட்டம் சோவியத் அமைப்பின் இயல்பான தன்மையிலிருந்து தோன்றுகிறது. ஆக்கிரமிப்பும், இதர நாடுகளின் பிரதேசங்களைக் கைப்பற்றுவதும், மக்களை அடிமைப்படுத்துவதும் சோவியத் அமைப்பின் இயல்புக்கே மாறானவை.

மேற்கு நாடுகளுக்குப் புரட்சியை "ஏற்றுமதி" செய்வதில் முனைப்புக் காட்டிய டிராட்ஸ்கியவாதிகளின் "இடதுசாரிக் கம்யூனிஸ்டுகளின்" நாசகரமான கொள்கையை பகிரங்கமாகப் பழித்துக்கூறுவதில் லெனின் உறுதியாக இருந்தார். வெளியிலிருந்து வரும் உத்தரவு மூலமோ, ஒப்பந்தம் மூலமோ அல்லது தூண்டுதல் மூலமோ ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட்டுவிட முடியும் என்று நினைப்பவர்கள் "பைத்தியக்காரர்களாக இருப்பார்கள் அல்லது ஆத்திரமூட்டுபவர்களாக இருப்பார்கள்"*(* வி. இ. லெனின், தொகுப்பு நூல்கள், தொகுதி 27, பக்கம் 480.) என்று லெனின் கூறினார். சர்வதேசப் புரட்சிக்கு சோவியத் சர்க்காரின் உதவி தேவைப்பட்டது என்றும், ஆனால் சோவியத் சர்க்கார் தன்னுடைய சக்திக்குட்பட்ட உதவியை, பொருத்தமான வடிவங்களில் அளிக்கவேண்டுமென்றும் அவர் விளக்கினார். வெற்றி பெற்ற பாட்டாளி வர்க்க அரசானது, பிரதானமாகத் தன்னுடைய பொருளாதாரக் கொள்கையின் மூலமாகத்தான் விடுதலை இயக்கம் மேலும் வளர்ச்சி யடைவதன் மீது செல்வாக்கு செலுத்துகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொருளாதார சீர்திருத்தங்களின் துவக்கம்

சோவியத் அரசு நிறுவப்பட்டது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் வெற்றியைக் குறித்தது. ஆனால் ஆதிக்க வர்க்கம் மாவதற்கு-அந்த சொல்லின் முழு அர்த்தத்தில்-அது உற்பத்தி சாதனங்களில் பூர்ஷ்வா வர்க்கம், மற்றும் நிலப்பிரபுக்களின் தனி உடைமையை ஒழித்து கட்டவேண்டியிருந்தது; முதலாளித்துவத்திற்கு எதிராக பொருளாதார வெற்றி அடைவதற்கான அடித்தளமிடுவதற்கு சோஷலிசப் பொருளாதாரக் கட்டமைப்பு விரைவாக வளர்ச்சி அடைவதை உறுதி செய்யவேண்டியிருந்தது.

சோஷலிச நிர்மாணத்திற்கு ஏற்பட்டிருந்த மிகப் பெரிய கஷ்டங்களானவை, ரஷ்யாதான் ஏகாதிபத்தியச் சங்கிலியை உடைத்ததில் முதல் நாடாக இருந்ததிலும், ஒரு புதிய சமுதாயத்தை அமைக்கத் தொடங்கிய முதல் நாடாக இருந்ததிலும் அடங்கியிருந்தன. சோஷலிசத்திற்கு இட்டுச் செல்லும் பாதையின் பொதுவான திசை வழியைக் கம்யூனிசப்புக் கட்சி அறிந்திருந்தது. ஆனால் அந்த பாதையில் ஒவ்வொரு அரங்கிலும் ஏற்படவிருந்த எல்லாப் பிரச்சினைகளையும் அது அறிந்திருக்கவில்லை, அதனால் அறிந்திருக்க முடியாது; எனவே இந்தப் பிரச்சினைகளுக்கான தயார் நிலைப் பரிகாரங்கள் எதையும் பற்றிக் கூட அது அறிந்திருக்கவில்லை.

சோஷலிச நிர்மாணத்தின் முன்னுதாரணம் இல்லாத்தும் அதில் எத்தகைய அனுபவமும் இல்லாததும் கஷ்டங்களையும், சில தவறுகளையும் விளைவித்தன என்பதில் ஐயமில்லை; ஆனால், அதே சமயத்தில் அது சோஷலிசத்தின் பொதுவான தத்துவார்த்தக் கோட்பாடுகளுக்கு ஒரு சோதனை களத்தை, அவை மேலும் படைப்பு ரீதியில் வளர்ச்சிபெறுவதற்கான ஓர் அடிப்படையை வழங்கியது.

ஆரம்ப சோஷலிசப் பொருளாதார சீர்திருத்தங்கள் மூர்க்கமான வர்க்கப் போராட்டத்தினூடே நடைபெற்றன. நாட்டின் பொருளாதார வாழ்க்கையை சீர்குலைப்பதற்கும், ஒரு பொருளாதார விபத்தைத் தோற்றுவிப்பதற்கும் பூர்ஷ்வா வர்க்கம் தன்னாலான யாவற்றையும் செய்தது. எனவே, பூர்ஷ்வா வர்க்கத்தின் உடைமைகளைப் பறிமுதல் செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் பொருளாதார நிர்வாக அமைப்புகளும், பயிற்சி பெற்ற தனித் தேர்ச்சியாளர்களும், நிர்வாக வழிவகை அறிவும் இல்லாமையின் விளைவாக சகல முதலாளித்துவத் தொழில்களையும் சோவியத் சர்க்காரால் உடனே தேசவுடைமையாக்க முடியவில்லை; எனவே அது, உற்பத்தியின் மீது தொழிலாளரின் கட்டுப்பாட்டை அமைக்குவது, பங்குகளை தேசவுடைமையாக்குவது, அயல்துறை வர்த்தகத்தில் ஏகபோகத்தைப் பெறுவது போன்ற பல இடைக்கால தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

தொழிலாளர்களின் கட்டுப்பாட்டை நிறுவுவதானது சோஷலிசத்தை நோக்கிய ஆரம்ப நடவடிக்கைகளில் ஒன்றாகும், தொழிலөрдைக் கொள்ளுவதில் ஆரம்ப கட்டமாக அது அமைந்தது, அவற்றை தேசவுடைமையாக்குவதற்கு அது கட்டியங் கூறியது. தொழிலாளர் கட்டுப்பாட்டுக் கமிட்டிகள் முதலாளிகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தின. தொழிற்சாலைகளையும், சகல பொருளாயத ஆஸ்திகளையும் பூர்ஷ்வாக்களும் அவர்களது ஏஜெண்டுகளும் அழிப்பதின்றியும் கொள்ளையடிப்பினின்றும் பாதுகாக்கும் பொறுப்பு அவற்றிடம் ஒப்படைக்கப்பட்டது. முதலாளிகளின் செயல்பாடுகள் வெகுஜனங்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. இதோடுகூட, தொழிலாளர் கட்டுப்பாடானது தொழிற்சாலைகளின் நிர்வாகத்திற்கான ஒரு வெகுஜனப் பள்ளியாகச் சேவை புரிந்தது. அதனுடைய உதவியுடன் சோவியத் சர்க்கார் தொழிலாளர்களைப் பொருளாதார நிர்வாகத்தில் ஈடுபடுத்தியது; முதலாளிகளின் நாசவேலை முயற்சிகளைக் குலைத்தது, சகல தொழில்களையும், போக்குவரத்தையும் சோவியத் அரசுக்கு மாற்றுவதற்கான ஆதாரத்தைத் தயார் செய்தது.

தொழிலாளர் கட்டுப்பாட்டைச் செயல்படுத்துவதில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வடிவமும் நடைமுறையும் 1917 நவம்பர் 14-ல் சோவியத் சர்க்கார் இயற்றிய தொழிலாளர் கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைகளில் விளக்கப்பட்டிருந்தன. இந்த சட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பலவகையான தொழிலாளர் அமைப்புகள் மூலம் தொழிலாளர் கட்டுப்பாட்டைச் செலுத்த முடியும். தொழிற் துறை நிர்வாகத்தில் செயறூக்கமான பங்கெடுத்துக் கொள்ளவும், நிர்வாகத்தின் ஆணைகளில் தலையிடுவதற்கும் உரிமை பெற்றுள்ள தொழிலாளர் கட்டுப்பாடு அமைப்புகள் தொழிலாளர்களையும், தொழில்நுட்ப ஊழியர்களையும் கொண்டிருந்தன. பூர்ஷ்வா வர்க்கத்தின் பிரதிநிதிகள் அவற்றினின்றும் விலக்கப்பட்டனர். ஒழுங்கு முறைகள் கட்டுப்பாடு ஸ்தாபனங்களின் ஆக்கபூர்வமான முன் முயற்சியின் மீது எத்தகைய தடைக் கட்டுகளையும் விதிக்கவில்லை, அவை தமது நடவடிக்கைகளில் புரட்சிகர நடைமுறை உசிதத்தை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும் என்று விதித்துள்ளன.

தேசவுடைமையாக்கப்பட்ட தொழில்களை நிர்வாப்பதற்கு தேசியப் பொருளாதாரத்தின் சுப்ரீம் கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது; அதற்கு விரிவான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. ஒரு திட்டமிட்ட அடிப்படையில் சோஷலிசப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்குமாறு அவை பணிக்கப்பட்டன. 1917 டிசம்பர் முதல் தேசப் பொருளாதாரக் கவுன்சில்கள் பிராந்தியங்களிலும், மாநிலங்களிலும், உயெஸ்ட்ங்களிலும் அமைக்கப்படலாயின. தொழிற்சாலைகளும் மற்றும் சோவியத் ஆட்சியின் ஸ்தல அமைப்புகளின் செயறூக்கமான பங்குடன் இவை அமைக்கப்பட்டன. இக் கவுன்சில்கள் சோவியத் அரசின் பொருளாதார ஸ்தாபனச் செயல்பாட்டை நிறைவேற்றின.

பாங்குகளை தேசவுடைமாக்கியது பூர்ஷ்வா வர்க்கத்தின் பொருளாதார சக்திக்கு மிகப் பெரிய அடியாக அமைந்தது. ஒரு முதலாளித்துவ அரசானது பாங்குகள் சிண்டிகேட்டுகள், டிரஸ்டுகள் ஆகியவற்றைக்கொண்ட ஒரு இயந்திரத்தைக் கொண்டுள்ளது: இது, பங்கு மார்க்கெட் கம்பெனிகள் பதிவு, விநியோகச் செயல்பாடுகளை ஆற்றுகின்றது. இந்த இயந்திரத்தை அழிக்க வேண்டியிருக்கவில்லை மாறாக இது முதலாளிகளிடமிருந்து சோவியத்துக்களின் கைகளுக்கு மாற்றப்பட்டது, திருத்தி அமைக்கப்பட்டு சோஷலிசத்தை நிர்மாணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.

1917 நவம்பர் 9-ல், சகல தனியார் வங்கிகளும் அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. ஆனால் பாங்குகள் இந்தப் கட்டுப்பாட்டைக் குலைப்பதற்குத் தங்களாலான யாவற்றையும் செய்தனர்: அவர்கள் தங்கள் பணத்தை அந்நிய வங்கிகளுக்கு மாற்றினர், அல்லது எதிர்ப்பு புரட்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்ட நாட்டின்

* மாநிலம் (குபெர்னியா) 'ஜார் ரஷ்யாவின் மிகப் பெரிய நிர்வாகப் பிரதேச யூனிட்; புரட்சிக்குப் பின்னர் சிலகாலம் இது நீடித்து வைத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

 உயெஸ்ட்: மாநிலத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்த நிர்வாகப் பிரதேசம்.

எல்லைப் பகுதிகளுக்கு மாற்றினர், தொழிலாளர் கட்டுப்பாடு நிறுவப்பட்ட தொழில் நிலையங்களுக்கு எதிராக நிதி சம்பந்தமான முற்றுகையை ஏற்பாடு செய்தனர். எனவே, அசாதாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் சோவியத் சர்க்காருக்கு ஏற்பட்டது. 1917 டிசம்பர் 27 விடியற்காலையில் செங்காவலர்களின் ஆயுதமேந்திய படைப் பகுதிகள் சகல தனியார் பாங்குகளையும் வசப்படுத்திக் கொண்டு விட்டனர்; அன்று மாலையே அனைத்து தனியார் பாங்குகளையும் தேசவுடைமையாக்குவது குறித்த ஓர் ஆணை வெளியிடப்பட்டது. லெனினுடைய கட்டளையின்படி தனியார் பாங்குகளைக் கைப்பற்றுவானது, அவற்றை தேசவுடைமையாக்குவது குறித்த ஆணை பிரகடனம் செய்யப்படுவதற்கு முன்பாகவே நிறைவேற்றப்பட்டது, பூர்ஷ்வாக்கள் தமது இருப்புத் தொகைத் திரும்ப எடுத்துக் கொண்டு பாங்கித் தொழிலை சீர்குலைப்பதைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டது.

பாங்குகள், சிண்டிகேட்டுகளின் முதுநிலை ஊழியர்களும் அது போன்றே முதலாளித்துவ உடைமையாளர்களும் எதிர்ப்பு காட்டினார்கள் என்பதை சோவியத் சர்க்கார் முன் கூட்டியே எதிர்பார்த்து, அவர்கள் விஷயத்தில் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று முடிவு செய்தது. ஆனால் அவர்கள் மிகச் சொற்பமானவர்களாகவே இருந்தனர். கணக்கு எழுதுவது, தணிக்கை செய்வது, பதிவு செய்வது, கணக்கு வைப்பது ஆகியவற்றின் நடைமுறை வேலையின் பெரும்பகுதி பெரும்பாலும் பாட்டாளி வர்க்க அல்லது அரைப் பாட்டாளி வர்க்கத் தகுதியை உடையவர்களாலேயே செய்யப்பட்டது. அவர்களை சோவியத் ஆட்சிக்கு ஆதரவாகத் திருப்பி, சோவியத் அரசில் சேவை செய்வதற்கு ஈர்க்க வேண்டியிருந்தது; ஆனால் அவ்வாறு இஷ்ட பூர்வமாகச் செய்வதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளாவிட்டால், அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டும். பாங்கி வர்த்தகத்தை ஒழுங்கமைப்பவர்கள், எஞ்சினியர்கள், தொழில் நிபுணர்கள், மற்றும் பிற தனித்தேர்ச்சியாளர்கள் ஆகிய பூர்ஷ்வா அறிவு ஜீவிகளை சோஷலிச நிர்மாணத்தில் பங்குகொண்டு கொள்ளுமாறு தூண்டுவதும் அவர்களுக்கு சாதகமான உழைப்பு நிலைமைகளை உருவாக்குவதும் அவசியம் என்று கட்சி கருதியது.

சோவியத் ஆட்சியின் ஆரம்ப மாதங்களில் செயலாக்கம்பெற்ற பொருளாதார சீர்திருத்தங்கள் (நிலப் பிரபுக்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பறிமுதல் செய்தல், உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றின் மீது அரசாங்க மற்றும் தொழிலாளர் கட்டுப்பாடு நிறுவப் பெற்றது; வங்கிகள் ரயில்வேக்கள், கடல் போக்குவரத்து, நதிப் போக்குவரத்து, அயல்துறை வர்த்தகத்தின் மீது அரசு ஏகபோகத்தை அலாக்கியது; ஜாரிஸ்ட் ஆட்சியின், மற்றும் பூர்ஷ்வா இடைக்கால சர்க்காரின் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மறுத்தது ஆகியவை), தனது வேலைத் திட்டத்தில் கனரகத் தொழில்களை தேசவுடைமையாக்குவதை நோக்கியிருந்த ஷரத்தை நிறைவேற்றும் நிலைக்கு கம்யூனிசப்புக் கட்சியைக் கொண்டு வந்தது. எதார்த்த நிலைமைகள் இந்த நடவடிக்கையை அவசியமாக்கின. ரஷ்யாவில் ஏகாதிபத்தியம் வளர்ச்சியுற்றதோடும் வங்கித் துறையின் பிரதான கிளைகளும், வர்த்தகமும் ஒன்றிணைந்து ஓர் ஒருங்கிணைந்த அமைப்பாக மாறின. பொருள் வர்த்தகத்தையும் பிற பிரதான தொழில்களையும் (சர்க்கரை, நிலக்கரி, இரும்பு, எண்ணெய் முதலியன) தேசவுடைமையாக்காமல் வங்கிகளை தேசவுடைமையாக்குவது சாத்தியமல்ல என்பதாகும். நாட்டின் பொருளாதாரப் முறைப்படுத்துவதற்கு அதே சமயத்தில் வங்கிகளையும் இந்தப் தொழில்களையும் தேசவுடைமையாக்குவது அவசியமாயிற்று. தனித் தனித் தொழில்கள்தயாராகியிருந்த தொழில்கள் முதலில் தேசவுடைமையாக்கப்பட்டன, உடைமையாளர்கள் கைவிட்டுப்போன, அல்லது கதவடைப்பு செய்த, அல்லது உற்பத்தியை நாசப்படுத்திய ஆலைகளும், தொழிற்சாலைகளும் இவற்றில்.

இவை நூலின் 30 பக்கம் வரை எழுத்து வடிவில் முழு நூலையும் எழுத்து வடிவமாக்கி அல்லது பிடிஎப்பில் பின்னர் பகிர்கிறேன் தோழர்களே

 தொடரும்...


தொடர்புடைய கட்டுரைகள்:



***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

இலக்கு இதழின் கட்டுரைகள்

"தென்னிந்திய அரசியல் நிறுவனங்கள் மற்றும் அரசியல் மாற்றம் 1880–1940" (South India: Political Institutions and Political Change 1880–1940)-02

சி. ஜே. பேக்கர் (C. J. Baker) மற்றும் டி. ஏ. வாஷ்புரூக் (D. A. Washbrook) ஆகியோர் எழுதிய "தென்னிந்திய அரசியல் நிறுவனங்கள் மற்றும் அரசிய...

செய்தியை சார்ந்த அலசல்