சீர்திருத்தவாதம் எழை எளிய உழைக்கும் மக்களின் மயக்க பிஸ்கட்டுகள்

 தோழர்களே,

செவ்வணக்கம். இலக்கு இணைய இதழ்களில் வெளியாகும் கட்டுரைகள் மார்க்சிய லெனினியத்தை கற்றுதேர்வதற்கான அடிப்படையாக கொண்டே எழுத்தப்படுகிறது. இங்குள்ள இடதுசாரிகள், புரட்சிபேசும் பல்வேறு பிரிவினருடன் முற்போக்கு பேசும் பலரின் நிலைபாடுகளையும் முழுமையாக கவனித்தில் கொண்டே எமது இலக்கு இணைய இதழ் தயாரிக்கப்படுகிறது. இங்குள்ள இடதுசாரிகளாகட்டும் புரட்சி பேசுவோராகட்டும் குறுங்குழுவாத கண்ணோட்டத்திலே பயணிக்கினறர்; இவர்களின் கண்ணோட்டம் மார்க்சியம் இல்லை என்பதனை இவர்களின் நடைமுறை நிரூபிக்கிறது. ஆகையால் இவர்கள் தங்களின் தவறுகளிலிருந்து விடுபட்டு சரியான மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தை வளர்த்து தெளிவடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதற்கு தங்களிடம் உள்ள மார்க்சியம் அல்லாத போக்குகளை களைந்தெறிய திட சித்தம் பெற வேண்டும் தோழமைகளே.

நாம் நமது மார்க்சிய அறிவை ஆசான்கள் கொடுத்துள்ள அரசியல் தத்துவ போதனையிலிருந்து சரிபார்க்க வேண்டும். ஒவ்வொன்றையும் பகுத்தறியும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

ஆசான் மார்க்ஸ் சொன்னதுதான் “இன்றைய சமுதாயம் மாறாத கல் உருவம் அன்று மாற்றத்திற்கு உரிய உயிர் அமைப்பே. அது இடைவிடாமல் மாறிக்கொண்டிருக்கிறது”. (மூலதனம் முதல் பாகம் புத்தகம் ஒன்னு பக்கம் 29) மற்றும், “முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வளர்ச்சியால் மட்டுமன்றி அந்த வளர்ச்சியின் அரைகுறை நிலைமையினாலும் அவதிப்படுகிறோம் நவீன கால தீமைகளோடு கூடவே காலத்துக்கு ஒவ்வாத சமூக அரசியல் முறைகளை தவிர்க்க முடியாதபடி உடன்கொணரும் பழமைப்பட்ட உற்பத்தி முறைகளின் முனைப்பொழிந்த மீத மிச்சங்களிலிருந்து மரபுரிமையாய் வந்த கேடுகளின் முழு வரிசையும் நம்மை வருத்துகிறது. வாழ்பவர் வாழ்பவற்றால் மட்டும் இன்றி மாண்டவற்றாலும் அவதிப்படுகிறோம். மாண்டவன் வாழ்பவனை ஆட்டி வைக்கிறான்”. (மூலதனம் மேல் காணும் நூல் பக்கம் 26).

இந்த வாக்கியத்தில் மார்க்ஸ் என்ற சமூக விஞ்ஞானி மனித சமூகம் தோன்றியதிலிருந்து ஒவ்வொரு அசைவிலும் அவைமாறியும் வளர்ந்தும் முன்னேறிக் கொண்டுள்ளதை விளக்கியுள்ளார். இதனை புரிந்துக் கொள்ள மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞான அறிவும் மார்க்சியம் லெனினியமாக வளர்ந்த காலகட்டத்தின் அதன் தத்துவ அரசியல் பொருளாதார நிலைமைகளை அறிந்துக் கொள்ளும் அறிவு வளர்ச்சியும் மார்க்சியவாதிகளுக்கு அவசியம் அன்றோ? ஆனால் மதவாதிகள் மாண்டுபோனவற்றின் மரபுரிமையையும் அதன் பெருமையையும் பேசி, இன்று வாழ்வதற்கான வழியை சொல்லாமல் பழைமையில் மூழ்கி ஏழைமை பசி.பட்டினிக்கு காரணமான ஆளும் வர்க்க கொடூரத்தை மூடிமறைக்க பார்க்கிறான். ஆனால் பழைமையின் கோரமுகத்தை கிழித்தெறிந்து வருங்கால தேவைக்கு போராட வேண்டியத்தை கைவிட்டுள்ள பலர்; அதே மதவாதிகள் போல் பழம்பெரும் கோட்பாடுகளால் மக்களை மயக்க நினைக்கினர். 

இன்றைய பல பிரச்சினைக்கு அன்றைய காலத்தின் தேவையிலிருந்த சமூக அமைப்பின் மிச்ச சொச்சங்கள்! இன்றைக்கு வேண்டாத அழுகிபோன சதை பிண்டங்களாக நாற்றமெடுத்து வாழ்கிறது. அவைதானாக மறைந்தொழியாது, அதனை சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு தேவை சமூகத்தை மாற்றி அமைக்கும் புரட்சி ஒன்றேதான். அதனின்றி இந்த சீழ் ஒழுகி நாற்றம் பிடித்துள்ள சமூகத்திலே வாழ இடம் கேட்கும் சீர்திருத்தம் எல்லா சீர்கேடுகளையும் அவலங்களையும் தாங்கிக் கொண்டே வாழ சொல்லும் முறையானது சாக்கடையில் வாழந்துக் கொண்டே நாற்றமடிக்குதே என்பதுதான். ஆகையால் இந்த பழம் சாக்கடைகள் நமக்கு வேண்டாம். இதனை சாக்கடைகள் கழிச்சடைதனங்கள் இல்லாதொழிக்க இதனில் மேலான ஒரு சமூக அமைப்புதான் நமக்கு வேண்டும். அதனை பற்றி சிந்திப்போம் செயல்படுவோம் தோழமைகளே. நாம் வாழும் சமூகத்தில் கோடான கோடி உழைக்கும் மக்கள் பசி பட்டினி என்று கிடக்க சிலர் பன்நாடுகளில் தங்களின் மூலதனமிட்டு ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கு தேவையான சொத்தை அதன் வளத்தை அனுபவிக்கிறார்களே!? இதற்கெதிராக கிளர்ந்தெழ வேண்டிய மக்கள் ஏன் மௌனமாக உள்ளனர்? அதற்கான பல காரணி இருந்தாலும் அவர்களின் வாழ்க்கையில் சில மயக்க பிஸ்கெட்டுகள் மதிமயங்கி வாழவைக்கிறது என்பது திண்ணம் அதன் ஒன்றான சீர்திருத்தம் பற்றி மட்டும் பார்ப்போம்.

சீர்திருத்தம் பற்றி ஆசான் லெனின் கூறியதே கீழே:-

சீர்திருத்தவாதம் பற்றி லெனின் என்ன சொன்னார் என்பதை நாம் அடிப்படையாக புரிந்துகொண்டு இந்தியாவில் ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்ட சீர்திருத்த கொள்கைகளின் விளைவுகளின் வரலாற்றையும் நாம் பார்க்கும் போது சீர்திருத்தவாதம் பற்றி லெனின் சொன்னது எவ்வளதூரம் உண்மையாக இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள முடியும்.

‘’சீர்திருத்தங்கள் என்றால் ஆளும் வர்க்கத்தின் ஆட்சியதிகாரத்தை அழிக்காமலேயே உழைக்கும் மக்களின் நிலைமைகளில் மேம்பாட்டையச் செய்வதாகும். அதாவது மூலதனத்தின் ஆதிக்கம் இருக்கும்வரைதனிப்பட்ட மேம்பாடுகள் ஏற்பட்டாலும்எப்போதும் கூலி அடிமைகளாகவே இருந்து வருவோரான தொழிலாளர்களை முதலாளித்துவ வழியில் ஏமாற்றுவதுதான் சீர்திருத்தவாதம் ஆகும்’’ என்றார் லெனின். 

லெனின் கூறியதுபோலவே இந்தியாவில் கடைபிடிக்கப்பட்ட கீன்சிய கலப்புப் பொருளாதாரக் கொள்கை என்ற சீர்திருத்தக் கொள்கையானது மக்களை அடிமைப்படுத்தி ஆளும் ஆட்சி அதிகாரத்தை முடிவிற்கு கொண்டுவரவில்லைமேலும் உழைக்கும் மக்களை கூலி அடிமைகளாகவே இருக்க வைத்து  ஏமாற்றிய மோசடிக் கொள்கைதான் என்று இந்திய வரலாறு நிருபித்துள்ளது.

‘’மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தார் ஒரு கையால் சீர்திருத்தங்களை வழங்கிவிட்டு மறுகையால் எப்போதும் அவற்றை திருப்பி எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்’’ என்றார் லெனின். 

லெனின் சொன்னது போலவே இந்தியாவில் கீன்சிய சீர்திருத்தக் கொள்களை 1950 ஆண்டில் அமல் படுத்தினார்கள். அரசே மக்களுக்கு கல்வி வழங்குவதுமருத்துவ வசதி செய்துகொடுப்பதுவேலைவாய்ப்புகளை ஏற்படுத்த அரசு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவது என்ற சீர்திருத்தக் கொள்கைகளை தற்போது கைவிட்டு விட்டதையும் தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கிவந்த சலுகைகளை பறித்துக்கொண்டு இருப்பதையும் நாம் காணலாம். இதிலிருந்து அன்று லெனின் சொன்னது போலவே முதலாளிகளின் அரசு வழங்கிய சலுகைகளை பறித்துக்கொள்வார்கள்  என்பது  இன்றும் உண்மையாக இருப்பதை நாம் காணலாம்.

‘’தொழிலாளர்களை அடிமைப்படுத்தவும்தனித்தனி கோஷ்டிகளாகப் பிளவுபடுத்தவும் கூலி அடிமை முறையை நிரந்தரமாய் நீடிக்கச் செய்யவும் இந்த சீர்திருத்த முறையை முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள். ஆகவே இந்த சீர்திருத்தமானது தொழிலாளர்களை சீர்கெடுப்பதற்கும்பலவீனப்படுத்துவதற்கும் முதலாளிகளால் பயன்படுத்தப்படும் ஆயுதமாக மாறிவிடுகிறது என்றும் சீர்திருத்தவாதிகளை நம்பும் தொழிலாளர்கள் எப்போதும் ஏய்க்கப்படுகிறார்கள் என்பதை அனைத்து நாடுகளின் அனுபவம் தெளிவாக்க் காட்டுகிறது’’ என்றார் லெனின்.

லெனின் கூறியபடியே இந்தியாவில் பிரிட்டீஷ் காலனி ஆட்சியாளர்களாலும் அவர்களுக்குப் பின்பு வந்த புதியகாலனி ஆட்சியாளர்களாலும் கொண்டுவந்து செயல்படுத்தப்பட்ட சீர்திருத்த கொள்கைகள் அனைத்தும் உழைக்கும் மக்களை ஏமாற்றுவதற்கே பயன்பட்டது. வேலையில்லாத பட்டாளம் எவ்வளவுக்கு பெருகுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு முதலாளிகள் உழைக்கும் மக்களுக்கு குறைந்த கூலி கொடுத்து சுரண்டி அவர்களின் மூலதனத்தை குவித்துக் கொள்வார்கள். ஆகவே முதலாளிகளும் அவர்களது அரசும் எப்போதும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க விரும்ப மாட்டார்கள். ஆனாலும் வேலையில்லாத் திண்டாம் அதிகரித்தால் உழைக்கும் மக்கள் அரசை எதிர்த்துப் போராடுவார்கள் என்பதை உணர்ந்து ஆட்சியாளர் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க ஆர்வம் உள்ளவர்கள் போல் காட்டிக்கொள்வதற்காக வேலை வாய்ப்பில் எளிய மக்களுக்கு (பிற்பட்டதாழ்த்தப்பட்ட சாதியினருக்கு) முன்னுரிமை கொடுக்கிறோம் என்று சொல்லி இடஒதுக்கீட்டுக் கொள்கை என்ற சீர்திருத்தக் கொள்கையை கொண்டுவந்து இந்தியாவில் செயல்படுத்தினார்கள். இதன் மூலம் இவர்களால் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்பை இவர்களால் கொடுக்க முடியாது அதற்கு இவர்கள் முயற்சி செய்ய மாட்டார்கள் என்ற உண்மையை உழைக்கும் மக்களிடம் மூடிமறைத்து ஏமாற்றினார்கள். அனைத்து மக்களுக்கும் இவர்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்தவே இல்லை. மேலும் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு செய்வதன் மூலம் உழைக்கும் மக்களை சாதிரீதியாக நிரந்தரமாக பிரிக்கும் மோசடியை செய்தார்கள். ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஒற்றுமையாக இருக்கவிடாமல் சாதி அடிப்படையில் சில சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைப்பதைப் பார்த்து பிற சாதியினர் போட்டி பொறாமை கொள்ளச் செய்து சாதி அடிப்படையில் வேற்றுமையையும் வெறுப்பையும் பகையையும் வளர்த்தார்கள். லெனின் கூறியதுபோல உழைக்கும் மக்களை கோஷ்டிகளாக சாதி அடிப்படையில் பிளவுபடுத்தினார்கள். கூலி அடிமைத்தனத்திலிருந்து உழைக்கும் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்ற உணர்வை உழைக்கும் மக்களிடம் மழுங்கடித்தார்கள். ஆட்சியாளர்களும்முதலாளிகளும் கொடுக்கும் சலுகைகளே போதுமானது என்ற சுயதிருப்தி மனப்பான்மையை மக்களிடம் ஏற்படுத்தினார்கள். இந்தகைய மன நிலையிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட மக்கள் இப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளை ஆட்சியாளர்கள் பறிக்கும் போது உழைக்கும் மக்கள் கையறு நிலையிலேயே நிற்கிறார்கள். இந்த அநீதிகளை எதிர்த்துப் போராடுவதற்கான நிறுவனங்கள் அதாவது கட்சிகள் இன்றி மக்கள் தனிமைப்பட்டுள்ளார்கள். ஆகவே இந்திய வரலாற்றில் உழைக்கும் மக்கள் இந்த சீர்திருத்தவாதிகளை நம்பி அவர்கள் பின்னால் சென்றதன் விளைவாக உழைக்கும் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளார்கள்உழைக்கும் மக்கள் சீரழிந்துள்ளார்கள் என்ற நடைமுறை உண்மையை அன்றே லெனின் பல நாடுகளின் அனுபவங்களிலிருந்து வழிகாட்டியதை நாம் பின்பற்றத் தவறியதன் பலனை இப்போது நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.

‘’அற்ப சலுகைகளின் மூலம் சீர்திருத்தவாதிகள் தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் ஏமாற்றவும் முயல்கிறார்கள். அவர்களை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசைதிருப்பிவிட முயலுகிறார்கள்’’ என்றார் லெனின். 

இங்கு சாதி அடிப்படையிலான அற்ப சலுகைகளுக்கான போராட்டங்களை சீர்திருத்தவாதிகள் முன்னெடுக்கிறார்கள். இத்தகைய சீர்திருத்தங்கள் மூலம் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த வெகுசிலருக்கு சலுகை கிடைத்தாலும் மிகப்பெருவாரியான ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு இந்த சலுகைகள் கிடைப்பதில்லை. எனினும் இந்த சீர்திருத்தைக் காட்டி ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெருவாரியான உழைக்கும் மக்களை ஏமாற்றுவதோடு பிற சாதி உழைக்கும் மக்களிடம் பொறாமை உணர்வை தூண்டி உழைக்கும் (ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த மக்களை இந்த சாதியவாதிகள் திரட்டி தங்களது சாதிக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்றும் தங்களது குறிப்பிட்ட சாதிக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு சாதி மக்களிடம் பகையை தூண்டுவது) மக்களிடம் பிளவை ஏற்படுத்துவதை நாம் காணலாம். மேலும் கூலி அடிமை முறையை ஒழிப்பதற்கான வர்க்கப் போராட்டம் தேவையில்லை சலுகைகளுக்காக மட்டும் போராடினால் போதும் என்ற மனோநிலையை உழைக்கும் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. ஆகவே லெனின் கூறியது போல இந்த சீர்திருத்தவாத கண்ணோட்டம் கொண்டவர்கள் இன்றும் மக்களை பிளவுபடுத்துவதையும் ஏமாற்றுவதையும் வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்புவதையும் அவர்களின் வர்க்கப் போராட்ட  உணர்வுகளை மழுங்கடிப்பதையும் நாம் காணலாம்.

‘’தொழிலாளர்களிடையே சீர்திருத்தவாதிகளின் செல்வாக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பலமாய் இருக்கிறதோஅவ்வளவுக்கு அவ்வளவு தொழிலாளர்கள் பலமிழந்தவர்களாகிவிடுகிறார்கள் முதலாளித்துவ வர்க்கத்தை அண்டி வாழ வேண்டிய அவர்களது சார்பு நிலை அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாகிவிடுகிறது. முதலாளித்துவ வர்க்கம் பல்வேறு தக்கடி வித்தைகளைக் கையாண்டுச் சீர்திருத்தங்களை தள்ளுபடி(பறித்துக்கொள்வது) செய்வது அவ்வளவுக்கு அவ்வளவு எளிதாகிவிடுகிறது’’ என்றார் லெனின். 

இங்கே உழைக்கும் மக்களிடையே சோசலிசக் கொள்கையில் உறுதியாக உள்ள மார்க்சிய லெனினியவாதிகளின் செல்வாக்கு உழைப்பாளர்களிடம் இல்லை. உழைப்பாளர்கள் சீர்திருத்தவாதத்தை அடிப்படையில் ஏற்றுக்கொண்ட திருத்தல்வாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகளின் செல்வாக்கில்தான் உள்ளனர். இவர்களின் செல்வாக்கின் கீழ் உழைப்பாளர்கள் இருப்பதால்தான் இந்த உழைப்பாளர்கள் பலமிழந்தவர்களாகவும் முதலாளித்து வர்க்கத்தாரை அண்டி வாழ்பவர்களாகவும் தொடர்ந்து பழக்கப்பட்டுவிட்ட காரணத்தால் இதுவரை உழைப்பாளர்கள் அனுபவித்து வந்த சலுகைகளை இன்றைய ஆட்சியாளர்கள் எளிதாக பறித்துக்கொண்டு இருக்கிறார்கள். லெனின் அப்போது சொன்னது இப்போதும் இங்கே எதார்த்த உண்மையாக இருக்கிறது.

‘’எல்லா நாடுகளிலும் சீர்திருத்தவாதிகள் இருக்கிறார்கள். ஏனெனில் எங்கும் முதலாளித்துவ வர்க்கத்தினர் ஏதேனும் ஒரு வழியில் தொழிலாளர்களை சீரழிக்க முனைகின்றனர்கூலி அடிமை முறையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தையே உழைப்பாளர்கள் கைவிட்டு விட்டு மனநிறைவு கொண்ட அடிமைகளாக உழைப்பாளர்களை மாற்ற முயலுகின்றனர்’’. என்றார் லெனின். 

லெனின் சொன்னது போலவே இங்கே சீர்திருத்தவாதிகள் உழைக்கும் மக்களை சீரழித்து கூலி அடிமை முறையிலேயே சுகம் காண்பவர்களாக மாற்றிவிட்டதையும் கூலி அடிமைத்தனத்தை முடிவிற்கு கொண்டுவர முன்வராததையும்  நாம் பார்க்கலாம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்று பாரதி பாடினாரே அந்த நிலையில்தான் இங்கு தொழிலாளி வர்க்கம் இருக்கிறது இதற்கு காரணமாக தொழிலாளி வர்க்கத்தை குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த நிலைக்கு தொழிலாளி வர்க்கத்திற்கு தலைமை ஏற்று வழிகாட்டிய இந்த சீர்திருத்தவாதிகளேதிருத்தல்வாதிகளே  காரணம் என்ற உண்மையை நாம் புரிந்துகொள்வோம்.

‘’சீர்திருத்தவாதம் உண்மையில் மார்க்சியத்தை கைவிட்டு அதற்குப் பதிலாக முதலாளித்துவ சமூக கொள்கையை பின்பற்றுவதைக் குறிக்கிறது என்றும் மார்க்சிய நிறுவனம் அதாவது கம்யூனிஸ்டு கட்சி அழிக்கப்படுவதையும் தொழிலாளி வர்க்கத்தின் ஜனநாயகக் கடமைகளை மறுத்துவிட்டு அவற்றுக்குப் பதிலாக மிதவாத தொழிலாளர் கொள்கை பின்பற்றுவதை குறிக்கிறது’’ என்றார் லெனின். 

லெனின் கூறியது போலவே இந்தியாவில் சீர்திருத்த கொள்கைகளை ஆட்சியாளர்கள் செயல்படுத்திக்கொண்டிருந்த காலங்களில் தொழிலாளி வர்க்க இயக்கமானது மார்க்சியத்தை கைவிட்டு விட்டு சீர்திருத்தவாத கொள்கையைப் பின்பற்றும் திருத்தல்வாதமாக மாறியது. பொதுவுடமை கட்சியானது திருத்தல்வாத கட்சியாக மாறியது வரலாறு. இதற்கு காரணம் பலஅவற்றில் ஒன்றுதான் கீன்சிய சீர்திருத்தவாத கொள்கையாகும். இவ்வாறு பொதுவுடமை கொள்கையையே கைவிட்டு விட்டு திருத்தல்வாத கொள்கை உருவானதற்கு காரணமான கீன்சிய சீர்திருத்த கொள்கையை இப்போது கொண்டுவந்து பின்பற்ற வேண்டும் என்று புதிதாக முளைத்த திருத்தல்வாதிகள் சொல்கிறார்களே அவர்களை நாம் இனம் கண்டுகொள்ள வேண்டும்.

எனினும் சீர்திருத்தங்களுக்கு கம்யூனிஸ்டுகள் எதிரானவர்களாஎன்ற கேள்வியை எழுப்பி இல்லை என்றும் சீர்திருத்தங்களை மார்க்சியவாதிகள் எப்படி பார்க்கிறார்கள் அதனை எப்படி அனுக வேண்டும் அதனை கடைபிடிக்க நாம் என்ன வகையான அனுகுமுறையை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு லெனின் கீழ் கண்டவாறு வழிகாட்டுகிறார்.

‘’மார்க்சிய தத்துவத்தை கிரகித்துக் கொள்ளும் தொழிலாளர்கள்அதாவது மூலதனத்தின் ஆதிக்கம் நீடிக்கும் வரை கூலி அடிமை முறை தவிர்க்க முடியாமல் நீடிக்கும் என்பதை உணர்ந்துகொள்ளும் தொழிலாளர்கள்முதலாளித்துவ சீர்திருத்தம் எதனாலும் ஏய்க்கப்பட்டுவிட மாட்டார்கள். எங்கே முதலாளித்துவம் தொடர்ந்து நீடிக்கிறதோ அங்கே சீர்திருத்தங்கள் நீடித்து நிலைக்கவோ அதிக பயனளிப்பனவாகவோ இருக்க முடியாதென்பதை உணர்ந்துகொள்ளும் இத்தொழிலாளர்கள்மேம்பாடான நிலைமைக்காகப் போராடிகூலி அடிமை முறைக்கு எதிரான போராட்டத்தை மும்முரமாக்குவதற்காக இம்மேம்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.’’ என்றார் லெனின். 

இந்தியாவில் தொழிலாளி வர்க்கங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் இந்த சீர்திருத்தங்கள் நீடித்து நிலைக்காது என்றும் அதிக பயன் கொடுப்பதாகவும் இருக்காது என்ற உண்மையை சொல்லி தொழிலாளர்களுக்கு மார்க்சிய லெனினியத்தை போதித்து அதனை தொழிலாளர்கள் கிரகித்துக்கொள்ளும்படி செய்திருந்தால் தொழிலாளர்களை ஆட்சியாளர்களும் சீர்திருத்தவாதிகளும் ஏமாற்றியிருக்க முடியாது. இந்த மூலதனத்தின் ஆதிக்கம் நீடிக்கும் வரை கூலி அடிமை முறை நீடிக்கும் என்பதை தொழிலாளர்களுக்கு எடுத்துச் சொல்லி கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதுதான் தொழிலாளர்களின் லட்சியம் என்பதை தொழிலாளர்களுக்கு உணர்த்தி அதற்கான போராட்டத்தில் இந்த முதலாளிகளையும் அதன் ஆட்சியாளர்களையும் எதிர்த்த வர்க்க அரசியல்  போராட்டத்தில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபடுபடுவதற்காக இந்த சீர்திருத்த சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறி தொழிலாளர்கள் வளர்க்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த வகையில்தான் சீர்திருத்தத்தை மார்க்சியவாதிகள் இந்தியாவில் அனுகியிருக்க வேண்டும். அப்படி லெனினிய முறையில் இங்கு தொழிலாளி வர்க்க இயக்கம் அனுகவில்லை அதன் விளைவுதான் இன்றைய இழிநிலையாகும். 

‘’தொழிலாளி வர்க்க இயக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு சுயேச்சையாக இருக்கிறதோஅதன் குறிக்கோள்கள் எவ்வளவுக்கு ஆழமாகவும் விரிவாகவும் உள்ளதோசீர்திருத்த குறுகிய நோக்கிலிருந்து அது எவ்வளவுக்கு எவ்வளவு விடுபட்டு இருக்கிறதோஅவ்வளவுக்கு அவ்வளவு தொழிலாளர்கள் மேம்பாடுகளை (சலுகைகளை) விடாது இருத்திக் கொள்வதும் (அதாவது முதலாளிகளால் பறித்துக்கொள்ள முடியாதபடி தடுப்பது) அதனை பயன்படுத்திக் கொள்வதும் எளிதாகிவிடுகிறது.’’ என்கிறார் லெனின். 

இதன் மூலம் லெனின் வலியுறுத்துவது என்னதொழிலாளி வர்க்க இயக்கம் மற்றும் அதன் கட்சியானது சுதந்திரமான கட்சியாக இருக்க வேண்டும்அது தனது கொள்கைகளை சுதந்திரமாக உழைக்கும் மக்களின் நலனிலிருந்து எடுக்க வேண்டும். முதலாளித்துவ ஆட்சியாளர்களால் எடுத்து கொண்டுவரப்படும் சீர்திருத்த கொள்கைகளை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது அந்த கொள்கைகளை உழைக்கும் மக்களின் நலனிலிருந்து பரிசீலித்து சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். உதாரணமாக சாதி அடிப்படையில் வேலை வாய்ப்பிற்கு சலுகை வழங்கும் கொள்கை உழைப்பாளர்களின் நலனுக்கான சீர்திருத்த கொள்கை இல்லைமாறாக உழைப்பாளர்களை ஏமாற்றுவதற்கும் சாதி அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கான கொள்கை என்று அதனை நிராகரித்து அனைத்து மக்களுக்கும் வேலை கொடுவேலை கொடுக்க முடியாதவர்களுக்கு நிவாரணம் கொடு என்ற சீர்திருத்த கொள்கையை முன்வைத்து தொழிலாளர்களின் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். சீர்திருத்த கொள்கை என்பது குறுகிய நோக்கம் கொண்டது என்பதை தொழிலாளர்களுக்கு உணர்த்தி அதற்கு தொழிலாளர்கள் பலியாகிவிடக்கூடாது என்று தொழிலாளர்களை எச்சரித்து இருக்க வேண்டும். அப்படி எச்சரித்து தொழிலாளர்கள் வளர்க்கப்பட்டிருந்தால் இப்போது இன்றைய ஆட்சியாளர்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை இவ்வளவு எளிதாக பறித்திருக்க முடியாது. தொழிலாளி வர்க்க இயக்கம் சீர்திருத்த குறுகிய நோக்கத்திலிருந்து விடுபடாமல் அந்த சீர்திருத்தத்திற்குள்ளேயே வீழ்ந்துவிட்டதாலேயே இன்றைய உழைக்கும் மக்களின் இழிநிலை ஆகும்.

‘’சீர்திருத்தங்களைப் பெறுவதற்கும் பயன்படுத்திக் கொள்வதற்குமான சாத்தியப்பாடு ஒன்றையேனும் தவறவிடாமல் மார்க்சியவாதிகள் அயராது வேலை செய்கின்றனர். அதே வேளையில் சீர்திருத்துவாத்த்துக்கு அப்பாற்பட்ட போராட்டங்களிலும் (அரசியல் போராட்டங்கள்கூலி அடிமை முறையை ஒழிப்பதற்கான போராட்டங்களிலும்) மார்க்சியவாதிகள் ஈடுபடுகிறார்கள். ஆனால் சீர்திருத்தவாதிகளும் திருத்தல்வாதிகளும் சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதோடு தங்களது போராட்டங்களை நிறுத்திக்கொள்கிறார்கள். அதற்கு மேல் போராட்டங்களில் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என்றால் அதனை எதிர்த்து பெருங் கூச்சல் போடுகிறார்கள்’’ என்றார் லெனின். 

இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னசீர்திருத்தங்களுக்காக குறிப்பாக உழைக்கும் மக்களை ஏமாற்றுவதற்கும்அவர்களை பிளவுபடுத்துவதற்கும்அவர்களது போர்குணத்தை மழுங்கடிப்பதற்கும் பயன்படும் சீர்திருத்தத்திற்கு எதிரான உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்பாடுத்தும்அவர்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் மேலும் உழைக்கும் மக்களின் வர்க்க உணர்வை வளர்ப்பதற்கு பொறுத்தமான சீர்திருத்தங்களை உழைக்கும் மக்களின் தலைவர்கள் சுதந்திரமாக சிந்தித்து உருவாக்கி அத்தகைய சீர்திருத்தங்களுக்காக உழைக்கும் மக்களை போராட வைத்திருக்க  வேண்டும். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் கூலி அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டுவதற்கான அரசியல் போராட்டங்களிலும் ஈடுபட வேண்டும். இந்த முறையில்தான் சீர்திருத்தத்திற்கான போராட்டங்களை நடத்திட வேண்டும் என்று லெனின் பிராவ்தா துருதாஇதழ் 2, ல் 1913 ஆண்டு லெனின் எழுதி உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டினார். ஆனால் இந்தியாவில் தொழிலாளி வர்க்க இயக்கம் தோன்றியது முதல் இன்றுவரை சீர்திருத்தவாதம் பற்றிய இந்த லெனினிய வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ளவும் இல்லைஅதனை பின்பற்றவும் இல்லை. இதன் விளைவுதான் இப்போது உழைக்கும் மக்களிடையே பிளவுஅவர்களிடத்திலுள்ள போர்க்குண இழப்புஅடிமை வாழ்விலான மோகம் போன்ற இழிநிலைகள். இப்போதாவது விழித்துக்கொண்டு தொழிலாளி வர்க்கம் சீர்திருத்தவாத்த்தை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும் என்று தொழிலாளி வர்க்கத்திற்கு இலக்கு கோரிக்கை வைக்கிறது. 

சீர்திருத்தம் என்பது தொழிலாளர்கள் மணி நேர வேலைக்கான போராட்டம்குறைவான பேருந்து கட்டணம் போன்ற சலுகைகளை குறிக்கிறது. சீர்திருத்தவாதம் என்பது கீன்சியம் போன்ற ஏகாதிபத்தியவாதிகளின் பொருளாதாரக் கொள்கைகளை குறிக்கிறது. மார்க்சியவாதிகள் உழைக்கும் மக்களின் மேம்பட்ட வாழ்க்கைகாக சீர்திருத்தங்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அதே வேளையில் முதலாளிகளின் (ஏகாதிபத்தியவாதிகளின்) சீர்திருத்தவாதக் கொள்கைகளை எதிர்த்தும் சீர்திருத்தவாதிகளை எதிர்த்தும் போராடுகிறார்கள். மார்க்சியத்தை பேசிக்கொண்டே ஏகாதிபத்திய முதலாளிகளின் நலன் காக்கும் சீர்திருத்தவாதக்  கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்குவது சித்தாந்தத் துறையில் கலைப்புவாதமே ஆகும். மேலும் அரசியலில் நிதிமூலதனக் கூட்டத்திற்கு அடிபணியும் சமரவாதமே ஆகும். இதுதான் இந்திய ஏகாதிபத்திய சார்பு சீர்திருத்தவாதிகளின் வரலாறாகும். இதனை விளக்கமாக புரிந்துகொள்ள வேண்டியது மார்க்சியவாதிகளின் கடமையாகும்.

குறிப்பு:- "திருத்தல்வாதம் எதிர்ப்போம்மார்க்சியம் காப்போம்" என்ற லெனின் நூலின் பக்கம் 119ல் "மார்க்சியமும் சீர்திருத்தவாதமும்" என்ற லெனினது கட்டுரையின் அடிப்படையிலேயே இந்த பகுதி எழுதப்பட்டது.

இலக்கு இணைய இதழ்கட்டுரையே

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்