அரைகாலனி. புதிய காலனி மறுகாலனி குழப்பங்களும் தெளிவும்- நூல் அறிமுகம்

மிக விரைவில் வரவுள்ள நூல் பற்றிய அறிமுகமே.

கம்யூனிஸ்ட்டு கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்டுகளான நம்மத்தியில் இந்திய ஆட்சி அதிகாரத்தையும் இந்த அரசையும் புரிந்துக் கொள்வதில் உள்ள குழப்பங்களை தீர்க்க ஒரு சிறு முயற்சி இந்த சிறிய வெளியீடு. வாசிக்க கருத்து தெரிவிக்க அழைக்கிறேன் வாருங்கள் உங்கள் கருத்துகளை பகிருங்கள். நூல் தேவைக்கு அழையுங்கள் தோழர்களே. 

இந்தியாவைப் பொறுத்தவரை காலனி இந்தியாவாக இருந்த நிலை 1947 க்கு பிறகு புதிய காலனி இந்தியாவாக மாறியது. வெளிப்படையான சுரண்டல் முறைக்கு பதிலாக கபடத்தனமான சுரண்டல் முறைக்கு மாறியது தான் 1947 ஆகஸ்ட் 15 சுதந்திரம் தங்களால் பயிற்றுவிக்கப்பட்ட ஏஜென்ட்களிடம் அதிகாரம் மாற்றப்பட்டது. எனவே ஆகஸ்ட் 15 சுதந்திரமும் அல்ல. விடுதலையும் அல்ல. பகத்சிங் போன்ற வீரம்செறிந்த மாவீரர்களை பலிகொடுத்து அதிகாரம் மாற்றப்பட்டது. ஓநாய் முன் வாசல் வழியே வெளியேற வஞ்சக புலி கொள்ளை புறம் வழியாக உள்ளே நுழைந்து விட்டது.- மாவோவின் வரையறை படி (1963 மாபெரும் ஆவணம் அடிப்படையில்)

புதிய காலனியம் பற்றிய இந்திய கம்யூனிஸ்டுகளின் குழப்பம்

சிபிஐ, சிபிஐ (எம்) போன்ற கட்சிகள் புதிய காலனியம் பற்றிய புரிதலை கொண்டிருக்கவில்லை. வர்க்க சமரச பாதையை அவர்கள் மேற்கொண்டு விட்டதால் அவர்களுக்கு புதிய காலனியம் பற்றிய அக்கறையும் இல்லை. மாபெரும் விவாத காலகட்டத்தில் அவர்கள் குருசேவிய திரிபுவாதத்தை ஆதரித்தனர். அதிகாரம் மாற்றத்தை சுதந்திரம் என்றும் ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலை என்றும் பேசி வருகின்றனர். 1965-ல் சாருமஜும்தார் தனது எட்டு கட்டுரையில் புதிய காலனிய தொடக்கம் பற்றி எழுதியிருந்தார். 1969-ல் வெளியிடப்பட்ட அரசியல் தீர்மானத்திலும் புதிய காலனியம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தவறி தமது கட்சித் திட்டத்தில் அரைக்காலனி புதிய காலனி என்ற இரண்டு நிலைப்பாடு இடம் பெற்றிருந்து.

ஒடுக்கப்பட்ட நாடுகள் புதிய காலனி நாடுகளாக உள்ளன என சில மா-லெ குழுக்களும், ஒடுக்கப்பட்ட நாடுகள் அரைக்காலனியாகவும் புதிய காலனியாகவும் உள்ளது என சிபிஐ (மாவோயிஸ்ட்) குழுவும், அரை காலனியிலிருந்து (அரை சுதந்திரம்) புதிய காலனி எனவும் போல்ஷ்விக் குழுவும், ஒடுக்கப்பட்ட நாடுகள் அரசியல் சுதந்திரம் பெற்றுள்ளது ஆயினும் புதிய காலனி சுரண்டலுக்கு ஆட்பட நேரிடும் என்று லிபரேஷன் குழுவும், அரை காலனியிலிருந்து மறுகாலனிக்கு உடனடியாகவும் எதிர்காலத்தில் புதியகாலனியாக மாறக்கூடும் என்று மாநில அமைப்பு கமிட்டினரின் கருத்தாகவும் உள்ளது. எல்லா மா-லெ குழுக்களும் புதிய காலனியத்தை ஏதோ ஒரு வகையில் ஒத்துக் கொண்டாலும் இவர்களின் புரிதல்களில் வேறுபாடுகள் உள்ளன. தமிழக அளவில் செயல்பட்டு வரும் புரட்சிகர மா-லெ குழுக்களில் போல்ஷ்விக் குழு 70 திட்டம் அடிப்படையில் சரி ஆனால் அது விஞ்ஞானபூர்வமாக்க வேண்டும் என்று கூறியது. மற்றவை நூலில்...


இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஏகாதிபத்தியத்துக்கும் சோசலிசத்துக்கும் இடையிலான முரண்பாடு சிறிது காலம் நீடித்தது. இன்று உலகில் சோசலிச நாடுகள் மற்றும் சோசலிச முகாம் இல்லாத சூழலில் தற்போது அத்தகைய முரண்பாடு இல்லை. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அதுவும் தற்போது உள்ள சூழலில் உலகில் சோசலிச நாடுகள் எதுவும் இல்லா சூழலில் லெனின் சுட்டிக்காட்டிய ஏகாதிபத்தியம் பற்றிய தன்மைகளில் எத்தகைய மாற்றங்கள் வந்துள்ளது என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவது கம்யூனிஸ்டுகளின் கடமையாக உள்ளது.

காலனி ஆதிக்க கொள்கையின் வேறுபாடுகள்:

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பழைய முதலாளித்துவ காலனியாதிக்க கொள்கை செலவு மிக்கதும், ஆபத்தானதுமாகும். ஏனெனில் காலனி அரசுகள் தங்களது படைகளை கொண்டும் அரசு மூலமும் ஆட்சி நடத்தும் அவசியம் இருந்தது.

  • உலகின் பங்கீடானது எந்த முதலாளித்துவ அரசாலும் கைப்பற்றப்படாத பிரதேசங்களுக்கு தங்கு தடை இன்றி பரவி செல்லும் காலணி ஆதிக்க கொள்கை(1860 - 1890).
  • பண்ட ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளித்தல்.
  • வியாபார வர்க்கத்தின் பாத்திரம் முக்கியமானதாக இருத்தல்.
  • முதலாளித்துவ வர்க்கத்தில் ஏகபோகத்தை பெற்றதனால் காலனி முறை ஏற்படுவது.
  • காலனி நாடுகளில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்துக்கொண்டிருந்த உள்நாட்டு பொருளாதாரத்தை அழித்தல். இதற்காக வன்முறையை பயன்படுத்துதல். காலணிகளின் மூலப் பொருட்களை கொள்ளையடித்தல்.

ஏகாதிபத்திய காலனி ஆதிக்க கொள்கை

  • உலகின் பங்கீட்டுக்கும் மறு பங்கீட்டுக்கும் ஆன காலனி ஆதிக்க கொள்கை (1914 -1945)
  • மூலதன ஏற்றுமதி முக்கியத்துவம் பெறுதல்.
  • வணிகர் மீது நிதி அதிபர் ஆதிக்கம் செய்தல்.
  • விவசாய பிரதேசங்களை கைப்பற்றியதோடு மட்டுமில்லாமல் தொழில் வளர்ச்சி பகுதிகளையும் கைப்பற்றுதல்.
  • மேலாதிக்கம் பெறுவதற்காக நடக்கும் போட்டியாக மட்டுமில்லாமல் தமது எதிராளியை பலவீனம் படுத்துவதற்காகவும் எதிரியின் மேலாதிக்கத்திற்கு குழி பறிப்பதற்காகவும் எழும் போட்டியாகவும் இருத்தல்.

ஏகாதிபத்திய புதிய காலனியக் கொள்கை

  • நேரடி காலனி ஆட்சி முறையை கைவிடுதல்.
  • தங்களால் உருவாக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட தரகு வர்க்கங்களை பங்காளியாக கொண்டு ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை மேற்கொள்ளுதல்.
  • மூலதன ஏற்றுமதியில் கடன் மூலதனம் முக்கிய பங்கு வகித்தல்.
  • தரகு மூலதனம் சர்வதேச மூலதனத்துடன் ஒன்றிணைதல்.
  • பிரதேச கைப்பற்றல்கள் தேவைப்படாத பொருளாதார ஆதிக்கம், ஏகாதிபத்திய முதலாளிகளும் ஒடுக்கப்பட்ட நாட்டு முதலாளிகளும் செய்து கொள்ளும் பிற்போக்கு ஒப்பந்தங்கள். உற்பத்தியும் மூலதனம் சர்வதேசியமயமாவதின் விளைவாக பன்னாட்டு நிறுவனங்கள் உலக வங்கி- ஐ எம் எப் போன்றவை உருவாகி புதிய காலனிய சுரண்டல் முன் வருதல்.
  • புதிய காலனி கொள்கையை புரிந்து கொள்வதற்காகவே மேற்கண்ட எமது புரிதலை முன்வைத்தோம்.

    முதலாளித்துவம் பற்றிய அடிப்படை நிலைப்பாடு ஏகாதிபத்தியும் பற்றி அடிப்படை நிலைப்பாடு காலனியாதிக்க கொள்கையின் வளர்ச்சி என்ற நிலைப்பாடுகளை புரிந்து கொள்வதன் மூலம் புதிய காலனியம் பற்றி புரிந்து கொள்வோம்.

    இரண்டாம் உலகப் போருக்கு பின் ஏகாதிபத்திய அமைப்பில் வந்த மாற்றங்கள்

    +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    இரண்டாம் உலகப்போருக்கு பின் உலகம் இரு பெரும் வளர்ச்சி நிலையை கொண்டிருந்தது. பாசிசத்துக்கு எதிரான யுத்தத்தில் சோசலிச சோவியத் யூனியன் வெற்றி பெற்றதை அடுத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் உத்வேகம் கண்டது. குறிப்பாக காலனி-அரைக்காலனி நாடுகளின் விடுதலைப் போராட்டம் வெற்றி அடைந்தது. உலகில் சோசலிச சக்திகளின் கை ஓங்கி வளர்ந்திருந்தது. மறுபக்கம் புதிதாக உருவெடுத்த அமெரிக்க ஏகாதிபத்திய முகாமானது. சோசலிசத்தின் தாக்குதலை முறியடித்திடவும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை நிலை நிறுத்திடவும் புதிய திட்டத்தை வழி வகுத்தது. இதுவரையிலும் உலகை ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பின்னுக்கும் தள்ளப்பட்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னிலைக்கு வந்தது, புதிய சக்திகளை தனக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொண்டு எதிர் புரட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஏகாதிபத்திய அமைப்பின் அகமுரண்பாடுகளை தீர்த்திடவும், அவ்வப்போது எழும் சிக்கல்களை தீர்த்திடவும் முயற்சிகளை மேற்கொண்டது.

    இதன் ஒரு பகுதியாக 1955-ல் பிரிட்டன் வுட்ஸ் ஒப்பந்தம் மூலம் ஐ.எம்.எப் உலக வங்கி போன்ற நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. ஐநாவையும் அதன் அமைப்புகளும் ஏகாதிபத்தியத்தின் கருவிகளாக மாற்றியது. 1948-ல் காட் அமைப்பு உருவாக்கப்பட்டது இவையாவும் புதிய காலனி ஆதிக்கத்தின் தொடக்கமாக அமைந்தது.

    ஏகாதிபத்தியவாதிகள் சில இடங்களில் தங்களது பழைய முறையிலான நேரடி காலனி ஆட்சி வடிவத்தை கைவிடுமாறும், தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்ட ஏஜென்ட்கள் மூலம் ஒரு புதிய வகை காலனி ஆட்சியையும் சுரண்டலையும் மேற்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டு இருப்பது புதிய காலனியத்தின் முக்கிய குணாம்சமாகும்”. “அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் இராணுவ முகாம்களை உருவாக்கியும். ராணுவ தளங்களை உருவாக்கியும், கூட்டமைப்புகள், பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றை நிறுவியும், பொம்மை அரசுகளை வளர்த்துவிட்டும் தங்கள் காலனி நாடுகளையும் சுதந்திரம் அடைந்த நாடுகளையும் அடிமைப்படுத்துகிறார்கள் அல்லது கட்டுப்படுத்துகிறார்கள் பொருளாதார உதவி மூலமாக அல்லது வேறு வடிவங்களில் இந்த நாடுகளை தங்கள் பொருள்களை பெறுவதற்கான ஆதாரமாகவும் தங்கள் மூலதன ஏற்றுமதிக்கான வாசலாகவும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடுகளின் செல்வங்களை கொள்ளையடித்து செல்கின்றனர் இந்த நாட்டு மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள் மேலும் இந்நாடுகளில் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கும் இந்நாடுகளின் மீது ராணுவ பொருளாதார கலாச்சார ஆக்கிரமிப்பு தொடுப்பதற்கும் ஐநா சபையை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன. இன்நாடுகளில் சமாதான முறையிலான தங்களுடைய ஆட்சியை தொடர முடியவில்லை எனில் ராணுவ ஆட்சி கவிப்புகளை செய்து ஆட்சிகளை மாற்றுகின்றனர். சீர்குலைவு வேலைகளில் ஈடுபடுகிறார்கள் அல்லது நேரடியான ராணுவ தலையீட்டையோ ஆக்கிரமிப்பையோ நடத்துகிறார்கள்”.

    புதிய காலனியத்தை உருவாக்குவதில் மிகுந்த திறமையுடனும் தந்திரத்துடனும் அமெரிக்கா செயல்படுகிறது. இதனை ஆயுதமாகக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் பிற ஏகாதிபத்தியங்களின் காலனிகளையும் செல்வாக்கு மண்டலங்களையும் பறித்துக் கொள்ள கடுமையாக முயன்று வருகின்றன. இந்த புதிய காலனியம் என்பது மிக மிக அபாயகரமானது கொடூரமான காலனி வடிவம் ஆகும்.. (-மாபெரும் விவாதம் நூலிலிருந்து).

    மாபெரும் விவாதத்தில் இடம்பெற்றுள்ள இந்த கருத்துக்கள் 1963 அக்டோபர் 22-ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தினசரி செங்கொடி இதழ்களில் வெளியானது. தோழர் மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி காலகட்டத்தில்.

    இன்னும் விரிவாக வாசிக்க நூலில் தொடர்ந்து உங்கள் முன் வைக்க முயலுகிறேன்.









No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்