லெனின் தேர்வு நூல்கள் மற்றவைகளும் இந்த இணைப்பில்
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின்
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 01
ஹிட்லர் என்ற பாசிச சர்வாதிகாரியின் அச்சுறுத்தலில் இருந்து இந்த உலகத்தை தனது வீரத்தாலும், தியாகத்தாலும் மீட்டது சோசலிச சோவியத் ரஷ்யா. தோழர் ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியும், ரசிய மக்களும் பெரும் தியாகங்களை ஈந்து இந்த உலகை பாசிச அபாயத்திலிருந்து மீட்டனர். இன்று இந்தியா உள்ளிட்டு உலகம் முழுவதும் வலதுசாரி பாசிச அரசுகள் உருவாகிவரும் இந்தச் சூழலில் பாசிசத்தை வீழ்த்தவல்லதாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டுமெனில் அது எப்படி இருக்க வேண்டும் என்பதை தோழர் லெனின் கட்சி நிறுவனக் கோட்பாடுகள் எனும் தனது நூலில் வரையறுத்துள்ளார்.
இந்நூலின் முதல் பகுதியில் ஜனநாயக மத்தியத்துவம் என்பது ஒரு கட்சிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும், ஜனநாயகமும் மத்தியத்துவமும் தனித் தனியே பிரிக்க முடியாதது என்பதையும் பெயரளவிலான ஜனநாயகம் என்பது ஒரு கட்சிக்கு எவ்வளவு ஆபத்தானது என்பதையும் எளிமையாக விளக்கியுள்ளார் லெனின் !
அறிமுகக் குறிப்பு
தோழர் லெனினது வழிகாட்டுதலின்கீழ் எழுதப்பட்டு, தோழர் லெனின் தலைமை தாங்கிய பொதுவுடைமை அகிலத்தின் மூன்றாவது பேராயத்தில் (1921-ல்) நிறைவேற்றப்பட்ட இந்த ஆவணம், புரட்சிகர பொதுவுடைமைவாத நிறுவனக் கோட்பாடுகளை வரையறுத்துத் தருகின்றது. “லெனினிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்” என்ற நூலில் தோழர் ஸ்டாலின் இந்தப் பொதுக் கோட்பாடுகளைச் சுருக்கமாக, எளிமையாக விளக்கியுள்ளார்.
பொதுவுடைமைவாத நிறுவனங்களுக்கான கோட்பாடுகள் சாரமாக வழங்கப்பட்டுள்ள இந்த ஆவணத்தில், பெரும்பாலும் முதலாளித்துவ நாடுகளைப் பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு படிக்க வேண்டும். எனவே, நாடாளுமன்ற வடிவங்களைப் பயன்படுத்துவது, மையமான பெரிய நகரங்களில் குவிந்து வேலை செய்ய வேண்டும் என்பன போன்று வருகின்ற அனுபவங்களை, அந்த நாடுகளின் போர்த்தந்திரம், செயல்தந்திரம் ஆகியவைகளோடு இணைத்து புரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டிற்குப் பொருத்தும்போது, நமது நாட்டு புதிய ஜனநாயகப் புரட்சிக்கான நீண்டகால மக்கள் யுத்தப் பாதை எனும் போர்த்தந்திரம் மற்றும் செயல் தந்திரம் ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.
இந்த ஆவணத்தில் வருகின்ற சோசலிஸ்டுக் கட்சிகள் என்பவைகள் சீர்திருத்தவாத கட்சிகளாகச் செயல்பட்டவை; இவைகளில் ஒரு சிலவோ, அல்லது பகுதிகளோ பொதுவுடைமைக் கட்சிகளாக மாற்றம் பெற்றன.
♦ ♦ ♦
பாட்டாளி வர்க்கக் கட்சியின் நிறுவனமும் கட்டமைப்பும்
1.பொதுவான கோட்பாடுகள்
1. நிலவுகின்ற சூழ்நிலைகளுக்கும் கட்சியினுடைய நடவடிக்கைகளின் குறிக்கோளுக்கும் பொருத்தமாகக் கட்சியின் நிறுவன அமைப்பு இருத்தல் வேண்டும். புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் எல்லாக் கட்டங்களிலும், அதைத் தொடர்ந்து சோசலிசத்தை அடைவதற்கான இடைக்காலத்திலும், அதாவது பொதுவுடைமைச் சமுதாயத்தின் முதல் கட்டத்திலும் பொதுவுடைமைக் கட்சியானது, பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகவும் முன்னேறிய முதல் படைவரிசையாகவும் விளங்க வேண்டும்.
2. முழுக்க முழுக்க தவறற்றதும் மாற்றக்கூடாததுமான ஒரு நிறுவன வடிவம் ஏதும் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு இருக்க முடியாது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட சூழ்நிலைகள் தொடர்ச்சியான பரிணாம நிகழ்வு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இந்த மாற்றங்களுக்கு ஏற்ற பொருத்தமான வடிவங்களை பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையினுடைய நிறுவன அமைப்பு இடையறாது மேற்கொள்ள வேண்டும். இதுபோலவே ஒவ்வொரு நாட்டினுடைய தனிவகைப்பட்ட சூழ்நிலைகள், குறிப்பிட்ட நாட்டு கட்சிகள் மேற்கொள்ள வேண்டிய நிறுவன அமைப்பு வடிவங்களைத் தீர்மானிக்கின்றன.
ஆனால், இத்தகைய பாகுபாட்டுக்கு நிச்சயம் குறிப்பிட்ட வரம்புகள் உள்ளன. தனிச்சிறப்புத் தன்மைகள் எதுவாயினும், பல்வேறு நாடுகளிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பல்வேறு இடைக்கட்டங்களிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்ட சூழ்நிலைகளின் தன்மை, உலகப் பொதுவுடைமை இயக்கத்திற்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது, அனைத்து நாடுகளிலுமுள்ள பொதுவுடைமைக் கட்சிகளின் நிறுவன அமைப்புக்கு பொதுவான அடிப்படையைத் தோற்றுவிக்கின்றது.
இந்த அடிப்படையில் பொதுவுடைமைக் கட்சிகளின் நிறுவனத்தைக் கட்டி வளர்ப்பது அவசியம். ஆனால், இப்போது உள்ளவற்றுக்கு முற்றிலும் மாறாக, புதிய மாதிரியிலான கட்சிகளை நிறுவுவதற்கோ, முற்றிலும் முழுதான சரியான நிறுவன வடிவம் மற்றும் உன்னத அமைப்பு விதிகள் என்று ஏதோ ஒன்றுக்கு முயலவோ கூடாது.
புரட்சிக்கான கருவி
3. ஆகப் பெரும்பான்மையான பொதுவுடைமைக் கட்சிகளும், இதன் விளைவாக புரட்சிகர உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட கட்சியான பொதுவுடைமை அகிலமும், தமது போராட்டச் சூழ்நிலைகளில் பொதுவான குணாம்சத்தைப் பலம் வாய்ந்த முதலாளித்துவ வர்க்கத்தை இன்னமும் எதிர்த்துப் போரிட வேண்டியதாக இருப்பதைக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ வர்க்கத்தை வெற்றி கொள்வதும், அதனிடமிருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்தெடுப்பதுமே – புதிய மாற்றங்கள் ஏற்படும்வரை – எல்லா பொதுவுடைமைக் கட்சிகளுக்கும் பொதுவுடைமை அகிலத்திற்கும் வழிகாட்டுகின்ற மற்றும் தீர்மானிக்கின்ற பிரதான லட்சியமாக இருக்கும். இதற்கேற்ப முதலாளித்துவ நாடுகளில் உள்ள பொதுவுடைமைக் கட்சிகளினுடைய நிறுவன நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் காரணி என்னவென்றால், உடைமை வர்க்கங்களின் மீதான பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றியைச் சாத்தியப்படுத்தும் மற்றும் உத்திரவாதப்படுத்தும்படியான நிறுவனங்களைக் கட்டியமைப்பதாகும்.
தலைவர்களின் நிறுவனம்
4. எந்தப் பொது நடவடிக்கைக்கும் தலைமை என்பது அவசியமான நிபந்தனை. ஆனால், உலக வரலாற்றில் அதி மகத்தான போரில் (போராட்டத்தில்) தலைமை என்பது, அதிமிக புறக்கணிக்க இயலாத ஒன்று. பொதுவுடைமைக் கட்சி நிறுவனம் என்பது, பாட்டாளி வர்க்கப் புரட்சியில் பொதுவுடைமைவாதத் தலைமையளிக்கும் நிறுவனம் ஆகும்.
பொதுவுடைக் கட்சி நிறுவனத்தில் உள்ள ஜனநாயக மத்தியத்துவமானது, – மத்தியத்துவம், பாட்டாளி வர்க்க ஜனநாயகம் ஆகியவற்றின் உருக்கு வார்ப்படமாக, உண்மையான ஒன்றிணைப்பாக இருத்தல் வேண்டும். இந்த ஒன்றிணைப்பு கட்சி நிறுவனம் முழுவதன், இடையறாத பொது நடவடிக்கையை, இடையறாத பொதுப் போராட்டத்தை அடித்தளமாகக் கொண்டே சாதிக்கப்பட முடியும்.
சிறந்த தலைவர்களாக இருக்க கட்சி சிறந்த தலைமைப் பண்பைக் கொண்டிருக்க வேண்டும். அதையொட்டி நமது நிறுவன வேலையின் பிரதானப் பணியானது, பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கத்தின் தலைமையிடத்திற்குத் திறமையுள்ள பொதுவுடைமைக் கட்சிகளைக் கொண்டுவர தகுதி வாய்ந்த, நெறிப்படுத்துகின்ற உறுப்புகளின் (organs) கீழ் கல்வியளித்தல், அமைப்பாக்குதல் மற்றும் பயிற்றுவித்தல் ஆகும்.
5. எப்பொழுதும் மாறிக் கொண்டிருக்கும் போராட்டச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொதுவுடைமைக் கட்சியும் அதன் தலைமை நிறுவனங்களும் ஆகப்பெரும் அளவில் தாக்கும் சக்தி கொண்டதாக இருக்கும் வகையிலும் தனது அங்கக் சேர்க்கையைக் கொண்டிருப்பது புரட்சிகர வர்க்கப் போராட்டத்திலுள்ள தலைமைக்கு முன்நிபந்தனைகளாகும். மேலும், வெற்றிகரமான தலைமைக்குப் பாட்டாளி வர்க்கத்துடன் முற்று முழுதாக நெருக்கமான உறவைக் கொண்டிருப்பது அவசியம். இத்தகைய நெருக்கமான உறவு இல்லாவிடில், தலைமையானது பரந்துபட்ட மக்களுக்குத் தலைமை ஏற்றுச் செல்லாது. மாறாக, அதிகபட்சம் போனால், மக்களுக்குப் பின்னால் செல்வதாக இருக்கும்.
ஜனநாயக மத்தியத்துவத்தின் வாயிலாக பொதுவுடைமைக் கட்சியில் அங்ககச் சேர்க்கையானது அடையப்பட வேண்டும்.
2. ஜனநாயக மத்தியத்துவம் பற்றி
இது எப்படி இருக்க வேண்டும்?
6. பொதுவுடைக் கட்சி நிறுவனத்தில் உள்ள ஜனநாயக மத்தியத்துவமானது, – மத்தியத்துவம், பாட்டாளி வர்க்க ஜனநாயகம் ஆகியவற்றின் உருக்கு வார்ப்படமாக, உண்மையான ஒன்றிணைப்பாக இருத்தல் வேண்டும். இந்த ஒன்றிணைப்பு கட்சி நிறுவனம் முழுவதன், இடையறாத பொது நடவடிக்கையை, இடையறாத பொதுப் போராட்டத்தை அடித்தளமாகக் கொண்டே சாதிக்கப்பட முடியும். பொதுவுடைமைக் கட்சி நிறுவனத்தில் உள்ள மத்தியத்துவம் பெயரளவிலான மற்றும் இயந்திரகதியான மத்தியத்துவம் என்று பொருள்படாது.
படிக்க:
♦ சோசலிச சமூகம் அமைப்பதற்கான போராட்டத்தில் மாவோவின் பங்களிப்பு !
♦ மரணத்தை வென்றவன் நினைவைத் துரத்துகிறான் !
ஆனால், பொதுவுடைமைவாத நடவடிக்கைகளின் மத்தியத்துவமாக, அதாவது, போர் நிலைமைக்கும் அதேவேளையில் எந்த நிலைமைக்கும் மாறிக் கொள்வதற்கும் தயாராக உள்ள பலமான தலைமையை உருவாக்குவதாகும். பெயரளவிலான அல்லது இயந்திரகதியான மத்தியத்துவம் என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரது கரங்களில் ‘அதிகாரத்தை’ மத்தியத்துவப்படுத்தும் தொழிற்துறை அதிகாரத்துவம் ஆகும். இது, பிற உறுப்பினர்கள் மீது அல்லது கட்சி நிறுவனத்திற்கு வெளியில் உள்ள புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதாகும். பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை நடத்துகின்ற, பொதுவுடைமைவாதத் தலைமையை மத்தியத்துவப்படுத்துகின்ற பொதுவுடைமைக் கட்சியானது, புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதாக பொதுவுடைமைவாதிகளின் எதிரிகள் மட்டுமே குற்றம் சாட்டுவர். அவர்களது இத்தகைய கூற்று அப்பட்டமான பொய்யாகும். பொதுவுடைமை அகிலத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஜனநாயக மத்தியத்துவ அடிப்படைக் கோட்பாடுகளுக்கு, அதிகாரத்துக்கான போட்டியோ அல்லது மேலாதிக்கத்துக்கான போட்டியோ அறவே பொருத்தமற்றதாகும்.
அதிகாரத்துவமும் அல்ல, பெயரளவிலான ஜனநாயகமும் அல்ல
புரட்சிகரமற்ற பழைய தொழிலாளர் இயக்க நிறுவனங்களில், முதலாளித்துவ அரசில் உள்ளது போன்ற இயல்புடைய, எங்கும் விரவிய இருமைவாதம் (இருமைவாதம் – தனித்தனியாகப் பிரிந்திருப்பது – மொழிபெயர்ப்பாளர்) அதாவது, அதிகாரத்துவத்துக்கும் ‘மக்களுக்கும்’ இடையிலான இருமைவாதம் வளர்ச்சியுற்று இருந்தது. முதலாளித்துவச் சூழலின் இந்த நச்சுச் செல்வாக்கின்கீழ் செயல்பாடுகள் பிரிந்திருப்பது – பொது முயற்சியுடைய உயிரோட்டமான அமைப்புக்குப் பதில், பயனற்ற பெயரளவிலான ஜனநாயகத்தை வைப்பதும், ஊக்கமான நிர்வாகிகள், செயல்படாத மக்கள் என்று அமைப்பைப் பிளவுபடுத்துவது – வளர்ச்சியுற்றது. முதலாளித்துவ சூழலின் காரணத்தால், புரட்சிகர தொழிலாளர் இயக்கம் கூட இருமைவாதம் மற்றும் சம்பிரதாயவாதம் என்ற போக்கைத் தவிர்க்கவியலாதபடி வழிவழியாகப் பெற்றுள்ளது.
முறையான மற்றும் விடாப்பிடியான அரசியல், அமைப்புப் பணிகள் மூலமாகவும் இடையறாது செழுமைப்படுத்துவது மற்றம் சரிசெய்வது மூலமாகவும் பொதுவுடைமைக் கட்சி இந்த எதிர்மறையான பண்புகளை அடியோடு வெற்றி கொள்ள வேண்டும்.
7. சோசலிஸ்டுக் கட்சியை பொதுவுடைமைக் கட்சியாக மாற்றியமைக்கும்போது பழைய கட்சி அமைப்பை அப்படியே விட்டு வைத்துவிட்டு தனது மத்தியத் தலைமையின் கரங்களில் அதிகாரத்தைக் குவிப்பதுடன் மட்டும் கட்சியானது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. மத்தியத்துவம் ஏட்டளவில் மட்டும் இல்லாமல் உண்மையில் உணர்வு பூர்வமாகக் கடைபிடிக்கப்படுவதாக அமைய வேண்டும். இதைச் சாதிப்பது எப்போது சாத்தியமாகும் என்றால், தமது பொது நடவடிக்கைகளிலும், போராட்டத்திலும் இந்த அதிகாரம் (Authority) அடிப்படையிலேயே திறனுள்ள கருவியாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் உணரும்போதுதான். அப்படியில்லையெனில், மத்தியத்துவமானது பரந்துபட்ட மக்களுக்கு, கட்சிக்குள்ளேயே உள்ள அதிகாரத்துவமாகத் தோன்றும். எனவே, இது அனைத்து வகையான தலைமைக்கும் அனைத்து வகையான உருக்குக் கட்டுப்பாட்டுக்கும் எதிர்ப்புணர்வைத் தூண்டுவதாக அமையும். அராஜகவாதமானது அதிகாரத்துவத்தின் எதிர்துருவமாகும்.
கட்சி நிறுவனத்தில் வெறும் பெயரளவிலான ஜனநாயகம் இருப்பது அதிகாரத்துவ போக்குகளையோ அல்லது அராஜகவாதப் போக்குகளையோ ஒழிக்காது. ஏனெனில், பெயரளவிலான ஜனநாயகம்தான் அந்தப் போக்குகளுக்கு செழுமையான விளைநிலமாக இருக்கிறது. எனவே, பெயரளவிலான ஜனநாயகத்தினை அடிப்படையாகக் கொண்டு கட்சி நிறுவனத்தின் மத்தியத்துவம், அதாவது பலமான தலைமையைப் படைக்கும் நோக்கம் வெற்றிகரமாகச் சாதிக்கப்பட முடியாது. கட்சிக்குள்ளேயே தலைமை நிறுவனங்களுக்கும் உறுப்பினர்களுக்கு இடையிலேயும் – அதுபோலவே கட்சிக்கும் வெளியில் உள்ள திரளான பாட்டாளி வர்க்கத்துக்கும் கட்சிக்கும் இடையிலும் உயிரோட்டமான இணைப்புகளையும் பரஸ்பர உறவுகளையும் வளர்ப்பதும் நிலைநிறுத்துவதும் இதற்கான மிக அவசியமான முன்நிபந்தனைகள் ஆகும்.
++++++
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 02
3. பொதுவுடைமைவாத நடவடிக்கையின் கடமைகள் பற்றி
கட்சி உறுப்பினரின் கடமை
8. புரட்சிகர மார்க்சிய பயிற்சிப் பள்ளியாக பொதுவுடைமைக் கட்சி விளங்க வேண்டும். கட்சி நடவடிக்கைகளில் அன்றாட பொது வேலைகள் வாயிலாக கட்சி நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இடையிலும், கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலும் உயிரோட்டமுள்ள உறவுகள் நிறுவப்படுகின்றன.
கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் கட்சி உறுப்பினர்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் பங்கேற்பது சட்டபூர்வ பொதுவுடைமைக் கட்சிகளில் இன்றும் கூட குறைவாக உள்ளது. இது இந்தக் கட்சிகளின் தலையாயக் குறைபாடாகும். அவற்றின் முன்னேற்றத்தில் தொடர்ச்சியான உத்திரவாதமின்மைக்கு அடித்தளமாக இக்குறைபாடு விளங்குகிறது.
9. பொதுவுடைமைவாதத்துக்கு மாறும் ஆரம்பக் கட்டங்களில் ஒவ்வொரு தொழிலாளர் கட்சியும் பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பது, தனது பிரச்சாரத்தில் பழைய கோட்பாட்டுக்குப் பதில் பொதுவுடைமைவாத போதனைகளைக் கடைபிடிப்பது, எதிர் முகாமைச் சேர்ந்த நிர்வாகிகளிடமிருந்து பொதுவுடைமைவாத நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை மாற்றுவது ஆகியவற்றுடன் மனநிறைவு அடையக் கூடிய அபாயம் உள்ளது. பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொள்வது என்பது பொதுவுடைமைவாதியாவதற்கான விருப்பதைக் குறிப்பது மட்டுமேயாகும். பொதுவுடைமைவாத நடவடிக்கை இல்லாமலிருந்தால், பரந்துபட்ட கட்சி உறுப்பினர்கள் இன்னமும் செயலின்றி இருந்தால், பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உறுதிமொழியில் கட்சியானது ஒரு சிறு பகுதியைக் கூட நிறைவு செய்யவில்லை என்றே ஆகும். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தொடர்ச்சியான அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பதே பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை நேர்மையாக அமல்படுத்துவதன் முதல் நிபந்தனை ஆகும்.
பொதுவுடைமைவாத நிறுவனக் கலை எதில் அடங்கியிருக்கிறது என்றால், பாட்டாளி வர்க்கம் போராட்டத்திற்காக ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்ளும் திறமையில் அடங்கியிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சி வேலையைப் பகிர்ந்தளிப்பதிலும், அவர்கள் வாயிலாக புரட்சி இயக்கத்தின்பால் மென்மேலும் பரந்துபட்ட பாட்டாளி வர்க்கத்தினரை ஈர்ப்பதிலும் இருக்கிறது. மேலும், பொதுவுடைமைக் கட்சியானது, இயக்கம் முழுவதன் திசைவழியைத் தனது பிடியில் வைத்திருக்க வேண்டும். இதைத் தனது பலத்தைக் கொண்டல்ல, தனது அதிகாரத்துவத்தின் மூலம் (அளவற்ற) சக்தியின் மூலம், மகத்தான அனுபவத்தின் மூலம், பன்முக அறிவாற்றலின் மூலம், திறன்களின் மூலம் செய்தல் வேண்டும்.
10. பொதுவுடைமைக் கட்சியானது, உண்மையிலேயே செயல் திறனுள்ளவர்களை மட்டுமே கொண்டிருக்க முயல வேண்டும். கட்சியின் தேவைக்கு உட்பட்டு தனது அணிவரிசையிலுள்ள கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது முழு பலத்தையும் காலத்தையும் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் அவர்களால் முடிந்தவரை கட்சி வேலைகளுக்காக ஒதுக்கி தன்னையே அர்ப்பணிக்க வேண்டும். தனது மிகச் சிறந்த சக்திகளை கட்சிப் பணிகளுக்காக ஒதுக்க வேண்டும் எனக் கோர வேண்டும்.
உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய பல்வேறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அன்றாட வேலைகளை இடையறாது செய்யாவிடில், பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்கும் எத்தகைய தீவிர முயற்சிகளும் இப்போராட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளும் தோல்வியுறும்..
பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக இருப்பது என்பது இயல்பாகவே பொதுவுடைமைவாத நம்பிக்கைகளுடன் சேர்ந்து முதலில் தேர்வுநிலை உறுப்பினராகவும், பின்னர் உறுப்பினராகவும் அதிகார பூர்வமாகப் பதிவு செய்வது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை முறையாகச் செலுத்துவது, கட்சிப் பத்திரிகைகளுக்குச் சந்தா செலுத்துவது போன்றவற்றையும் கொண்டதாகும். ஆனால் மிகமிக முக்கியமானது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்சியின் அன்றாட வேலைகளில் ஈடுபடுவதாகும்.
ஒவ்வொருவரும் ஒரு கட்சியின் ஒரு குழுவில் இருப்பது
11. கட்சி வேலைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக ஒரு விதி என்ற முறையில் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குழு, கமிட்டி, கமிஷன், பெரிய குழு, பிராக்சன் அல்லது கருக்குழு போன்று செயல்படும் குழு ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே கட்சி வேலைகளைச் சரியாகப் பகிர்ந்தளிக்க முடியும். வழிகாட்ட முடியும். நிறைவேற்ற முடியும்.
உள்ளூர் அமைப்பின் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதைக் கூறவே வேண்டியதில்லை. சட்டபூர்வ சூழ்நிலைகள் நிலவும்போது, குறிப்பிட்ட காலக்கிரமத்தில் நடைபெறும் இக் கூட்டங்களுக்கு பதிலாக, உள்ளூர் பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்துவது உசிதமானதல்ல. அனைத்து உறுப்பினர்களும் இந்தக் கூட்டங்களில் முறையாகக் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் இது மட்டும் போதுமானதல்ல. இந்தக் கூட்டங்களுக்கான தயாரிப்பு என்பதே சிறு குழுக்களாக வேலையைப் பிரித்து செய்வது அல்லது குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய சில தோழர்கள் ஒதுக்கப்படுவது என்பதை முன் அனுமானமாகக் கொண்டிருக்கிறது. இவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தியே தொழிலாளர்களின் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்கள்திரள் நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் செய்யப்படுகின்றன. இந்நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பலதரப்பட்ட கடமைகளை சிறு குழுக்கள் மட்டுமே எச்சரிக்கையாக ஆய்வதும், ஆழமாக நடைமுறைப் படுத்துவதும் இயலும். உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய பல்வேறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அன்றாட வேலைகளை இடையறாது செய்யாவிடில், பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்கும் எத்தகைய தீவிர முயற்சிகளும் இப்போராட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளும் தோல்வியுறும். இவ்வாறே ஒன்றுபட்ட திறன்மிக்க பொதுவுடைமைக் கட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் உயிரோட்டமுள்ள புரட்சி சக்திகள் அனைத்தையும் கொண்டுவந்து கெட்டிப்படுத்துவது இயலாது.
ஆலை செல்களின் (Factory Cells) முக்கியத்துவம்
12. கட்சி நடவடிக்கைகளின் பல்வேறு கிளைகளில் அன்றாட வேலைகளைச் செய்ய பொதுவுடைமைக் கருக்குழுக்களை அமைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் கிளர்ச்சிகளை நடத்துதல், கட்சி ஆய்வு, செய்திப் பத்திரிகை வேலை, கட்சி வெளியீடுகளை விநியோகித்தல், தகவல் சேகரிப்பு, தொடர்ச்சியான பணிகள் – இன்னும் இதுபோன்றவற்றைக் கருக்குழுக்கள் செய்யும்.
பொதுவுடைமைக் கட்சிக்கு ஒருசில உறுப்பினர்கள் அல்லது தேர்வுநிலை உறுப்பினர்கள் உள்ள இடங்களில் எல்லாம் தொழிற்சாலை மற்றும் பணிமனைகளில் உள்ள தொழிற்சங்கங்களில், பாட்டாளி வர்க்க அமைப்புகளில், இராணுவப் பிரிவுகளில், அன்றாட கட்சி வேலைகளைச் செய்வதற்கான சிறு குழுக்களே பொதுவுடைமைவாதக் கருக்குழுக்களாகும். ஒரே தொழிற்சாலை அல்லது தொழிற்சங்கத்தில் பெரும் எண்ணிக்கையில் கட்சி உறுப்பினர்கள் இருந்தால், கருக்குழுவானது பிராக்சனாக மாற்றப்பட்டு, அது சிறு குழுக்களின் வேலைகளை வழிநடத்தும்.
பரந்த தன்மையுடைய எதிர்த்தரப்பு பிராக்சனை அமைப்பதோ, அல்லது ஏற்கெனவே உள்ளதில் பங்கேற்பதோ அவசியமாகும்போது சிறப்புக் கருக்குழுவின் வாயிலாக தொழிற்சங்கத் தலைமையைக் கைப்பற்ற அல்லது தலைமை ஏற்க பொதுவுடைமையாளர்கள் முயற்சிக்க வேண்டும். தனது சொந்த சுற்றுச்சூழலைப் பொருத்து கருக்குழு வெளிப்படையாக வருவதா, அல்லது பொதுமக்கள் மத்தியில் கூட வெளிப்படையாக வருவதா என்பது விசேட சூழ்நிலைகளைக் கணக்கிலெடுத்து அவ்வாறு வருவதன் அபாயங்கள் மற்றும் சாதகங்களை ஆழமாகப் பரிசீலிப்பதைச் சார்ந்திருக்கும்.
13. பொதுக் கடமையான வேலைகளைக் கட்சியில் அறிமுகப்படுத்துவதும், சிறு வேலைக் குழுக்களைக் கட்டியமைப்பதும் மக்கள்திரள் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு (மிகக் குறிப்பாக) கடினமான பணியாகும். இதை எடுத்த எடுப்பிலேயே சாதித்துவிட முடியாது. இதற்கு சலிப்பற்ற விடாமுயற்சி, முதிர்ச்சி பெற்ற அறிவு, மகத்தான ஆற்றல் ஆகியவை வேண்டும்.
இந்தப் புதிய வடிவிலான நிறுவனத்தைத் துவக்கத்திலிருந்தே எச்சரிக்கையுடனும் முதிர்ச்சியான அறிவுடனும் கட்டியமைப்பது குறிப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் பெயரளவிலான திட்டத்தின்படி கருக்குழுக்களாகவும், சிறு சிறு குழுக்களாகவும் பிரித்து உடனடியாகக் கட்சியின் அன்றாட பொது வேலைகளைச் செய்யுமாறு அவற்றை அறைகூவி அழைப்பது என்பது மிகச் சுலபமான வேலையாகும். ஆனால், இத்தகைய தொடக்கம் என்பது தொடங்காமல் இருப்பதைவிட மோசமானது. இந்த மகத்தான கண்டுபிடிப்புகளின்பால் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மன நிறைவின்மையும் வெறுப்பையுமே இது தூண்டிவிடும்.
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 03
பொதுவுடைமைவாத செல்(Cell) களை எப்படிக் கட்டியமைப்பது?
உறுதியான நம்பிக்கையும் ஊக்கமும் உடைய பொதுவுடைமைவாதிகளான செயல்திறனுள்ள பல அமைப்பாளர்களுடன் கலந்தாலோசித்து – நாட்டின் பல்வேறு மையங்களில் உள்ள இயக்கத்தின் நிலைமையை அறிந்தவர்களைக் கலந்தாலோசித்து இந்தப் புதிய விசயங்களை அறிமுகப்படுத்துவதற்கான விவரமான அடிப்படைகளை விரிவாக வகுக்க வேண்டும் என்பதை நாம் சிபாரிசு செய்கிறோம். இதன்பின்னர், பயிற்றுவிக்கப்பட்ட அமைப்பாளர்கள் அல்லது அமைப்புக் கமிட்டிகள், களத்தில் வேலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குழுக்களின் முதல்தரமான தலைவர்களைத் தெரிவு செய்து கொண்டு ஆரம்ப வேலைகளைத் துவக்க வேண்டும். அதன்பின்னர் கட்சி நிறுவனங்கள், வேலைக்கான குழுக்கள், கருக்குழுக்கள், தனிப்பட்ட உறுப்பினர்கள் அனைத்துக்கும் பருண்மையான, குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட கடமைகள் முன்வைக்கப்பட வேண்டும். இவற்றை முன்வைக்கும்போது, அவை அவர்களுக்குப் பயனுள்ளவையாகவும், விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகவும் அமல்படுத்தக் கூடியவையாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவசியமான இடங்களில் இக்கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். அப்போது தவிர்க்கப்பட வேண்டிய தவறான நடவடிக்கைகள் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும் வேண்டும்.
பொதுவுடைமைவாத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள், தோழர்கள் பொதுவாக அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது மட்டும் போதாது. சிறப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்றதான குறிப்பிட்ட திசைவழியில் வேலை பற்றிய நடைமுறை அறிவுடன் இத்தகைய பணிகளைச் செய்ய உதவவும், அவற்றை முறைப்படி வழிநடத்தவும் வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் தமது சொந்த நடவடிக்கைகளில் இருக்கக்கூடிய தவறுகளைக் கண்டறியவும் வேலைமுறைகளை இடையறாது செழுமைப்படுத்தவும் போராட்டத்தின் நோக்கத்தை ஒருகணமும் மறவாதிருக்கவும் அவர்கள் முயற்சிக்க வேண்டும்.
14. இந்த மறு ஒழுங்கமைப்பு வேலைகள் நடைமுறையில் படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆரம்பத்தில் எண்ணற்ற கருக்குழுக்கள் அல்லது வேலைக்கான குழுக்களை உள்ளூர் நிறுவனங்களில் அமைக்கக் கூடாது. தனியாகப் பிரிக்கப்பட்ட முக்கியமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சங்கங்களில் அமைக்கப்பட்ட சில கருக்குழுக்கள் சரியாக இயங்குவதையும், கட்சி நடவடிக்கைகளின் பல்வேறு கிளைகளில் அவசியமான அளவு அவை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதையும் (எடுத்துக்காட்டாக, தகவல் சேகரிப்பு, தகவல் தொடர்பு, மகளிர் இயக்கம், கிளர்ச்சித்துறை, பத்திரிகை வேலை, வேலையின்மை எதிர்ப்பு இயக்கம் போன்றவை) நிரூபணமாக்க வேண்டும். புதிய நிறுவன எந்திரம் குறிப்பிடத்தக்க நடைமுறை அனுபவம் பெறும்வரை பழைய நிறுவனக் கட்டமைப்பு அவசர கோலமாகக் கலைக்கப்படக் கூடாது. அதேவேளையில், கட்சி நிறுவன வேலைகளின் இந்த அடிப்படைக் கடமைகள் ஒவ்வொரு இடத்திலும் மீமிகு ஆற்றலுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இவை சட்டபூர்வமாக இயங்கும் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக இயங்கும் கட்சிகளுக்கும் மகத்தான கடமைகளை சுமத்துகின்றன.
பாட்டாளி வர்க்கப் போராட்ட மையங்கள் அனைத்திலும் பொதுவுடைமைவாத கருக்குழுக்கள், பிராக்சன், தொழிலாளர் குழுக்கள் பரந்துவிரிந்து வலைப்பின்னல் ஆக அமைக்கப்பட்டு இயங்கும் வரையில், கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் அன்றாட புரட்சி வேலையில் தனது பங்கைச் செய்யும் வரையில் இவ்வாறு செய்வது உறுப்பினர்களுக்கு இயல்பானதாகவும் வழமையானதாகவும் ஆகும் வரையில் இக்கடமைகளை நிறைவேற்றுவதில் கடின உழைப்பைச் செலுத்துவதிலிருந்து கட்சியானது ஓய்வாக இருக்க தன்னைத்தானே அனுமதிக்கக் கூடாது.
சோதித்தறிவது
15. இந்த அடிப்படையிலான நிறுவனக் கடமையானது கட்சித் தலைமை உறுப்புகளின் மீது ஒரு கடப்பாட்டைச் சுமத்துகின்றது. கட்சி வேலைகளின் மீது முறையான, தொடர்ச்சியான, செல்வாக்கு செலுத்தும்படியான முறையில் இடையறாது வழிகாட்டுவதும் தனது கட்டுப்பாட்டை செலுத்துவதுமே அக்கடப்பாடு. கட்சி நிறுவனங்களின் தலைமையில் இருக்கும் செயலூக்கமிக்கத் தோழர்கள் தமது பங்குக்கு பன்முக செல்வாக்கு செலுத்துவதானது இதற்குத் தேவைப்படுகிறது. பொதுவுடைமைவாத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள், தோழர்கள் பொதுவாக அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது மட்டும் போதாது. சிறப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்றதான குறிப்பிட்ட திசைவழியில் வேலை பற்றிய நடைமுறை அறிவுடன் இத்தகைய பணிகளைச் செய்ய உதவவும், அவற்றை முறைப்படி வழிநடத்தவும் வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் தமது சொந்த நடவடிக்கைகளில் இருக்கக்கூடிய தவறுகளைக் கண்டறியவும் வேலைமுறைகளை இடையறாது செழுமைப்படுத்தவும் போராட்டத்தின் நோக்கத்தை ஒருகணமும் மறவாதிருக்கவும் அவர்கள் முயற்சிக்க வேண்டும்.
மேலிருந்து அறிவிப்பதும் கீழிருந்து அறிக்கை பெறுவதும்
– தலைமையின் மையக் கடமை
16. நமது கட்சி வேலைகள் முழுவதும் சித்தாந்த அல்லது நடைமுறைப் போராட்டங்களாகவோ அல்லது போராட்டத்துக்கான தயாரிப்பு வேலையாகவோ இருக்கின்றன. இதுவரையில் இப்பணியில் தேர்ச்சி என்பது மிகவும் குறைபாடுள்ளதாகவே இருந்து வருகிறது. கட்சி நடவடிக்கைகள் அரிதாகவே இருப்பது என்பது மிக முக்கிய துறைகளில் கூட காணப்படுகின்றன. உதாரணமாக, இரகசிய உளவாளிகளை எதிர்ப்பது என்ற விசயத்தில் சட்டபூர்வமாக இயங்கும் கட்சிகள் மிகச் சிறிய அளவு பணிகளையே செய்துள்ளன. நமது கட்சித் தோழர்களுக்கு ஒரு விதி என்ற முறையில் செய்ய வேண்டிய அறிவுறுத்தும் (Instruct) வேலை எப்போதாவது செய்யப்படுகிறது – அல்லது இரண்டாம் பட்சமாக செய்யப்படுவதாக இருக்கிறது. இது எந்த அளவு மேலோட்டமாகச் செய்யப்படுகிறது என்றால், கட்சியின் தீர்மானங்களும் ஏன் கட்சித் திட்டமும் பொதுவுடைமை அகிலத்தின் தீர்மானங்களும்கூட மிகப் பெருமளவில், மிகப் பரவலான பிரிவினரான கட்சி உறுப்பினர்களுக்குத் தெரியாமலேயே இருக்கின்றன. மிக உயர்ந்த அளவில் தேர்ச்சி பெறுவதற்காக கட்சி நிறுவனக் கட்டமைவு முழுவதிலும் கட்சியின் செயல்பாட்டுக் கமிட்டிகள் அனைத்திலும் முறையாகவும், இடையறாதும் அறிவுறுத்தும் வேலை செய்யப்பட்டாக வேண்டும்.
17. (கீழிருந்து) அறிக்கைகள் சமர்ப்பிப்பது என்பதும் பொதுவுடைமைவாத நடவடிக்கையில் கடமைகளைச் சேர்ந்ததாகும். இது, கட்சியின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் உறுப்புகளின், இதுபோலவே ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரின் கடமையாகும். குறுகிய காலத்துக்கான பொது அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கட்சியின் விசேடமான கமிட்டிகளின் வேலைகளைப் பற்றி விசேடமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முறையாகவும் தொடர்ச்சியாகவும் அறிக்கை சமர்ப்பிப்பது என்பதை எந்த அளவு அவசியமானதாக செய்ய வேண்டும் என்றால், இது ஒரு நிரந்தரமாக நிறுவப்பட்ட வழிமுறை என்ற அளவுக்கு, பொதுவுடைமை இயக்கத்தின் மிகச் சிறந்த பாரம்பரியம் என்ற அளவுக்கு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நிறுவனமும் தனது மேல்மட்ட கமிட்டிக்கு வேலை அறிக்கை சமர்ப்பிப்பது
18. ஒவ்வொரு கட்சியும் தனது காலாண்டு வேலை அறிக்கையை பொதுவுடைமை அகிலத்தின் தலைமை உறுப்புக்குத் தருதல் வேண்டும். கட்சி நிறுவனம் ஒவ்வொன்றும் தனக்கு அடுத்த மேல் கமிட்டிக்கு (எடுத்துக்காட்டாக, பகுதி அடிப்படையிலான ஒவ்வொரு கிளையும் தனக்கு மேலான கட்சிக் கமிட்டிக்கு) மாதாந்திர வேலை அறிக்கையை அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு கட்சிக் கருக்குழுவும், பிராக்சனும், தொழிலாளர் குழுவும் எந்தக் கட்சி உறுப்பின் பொறுப்பில் இருக்கின்றனவோ, அவற்றுக்குத் தமது அறிக்கையை அனுப்புதல் வேண்டும். தனி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாம் அங்கம் வகிக்கும் கருக்குழு அல்லது தொழிலாளர் குழுவுக்கு (முறையே அவற்றின் தலைவருக்கு) அறிக்கை அளிக்க வேண்டும். இதுபோலவே குறிப்பிட்ட விசேட பொறுப்பை நிறைவேற்றியது பற்றி எந்தக் கட்சி உறுப்பு அந்த வேலையை ஒப்படைத்ததோ, அதற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இந்த அறிக்கையானது எப்போது சாத்தியப்பட்ட அளவுக்கு முதல் சந்தர்ப்பத்திலேயே அளிக்கப்பட வேண்டும். வேலையைச் செய்யுமாறு பணித்த கட்சி உறுப்பு அல்லது தோழர் எழுத்து பூர்வமான அறிக்கை வேண்டுமெனக் கோரினால் ஒழிய, அறிக்கை வாய் மூலமாகவே இருக்க வேண்டும். அறிக்கைகள் குறிப்பாகவும் விசயத்தை விட்டு விலகாமலும் இருக்க வேண்டும். வெளியிடப்படக் கூடாத அறிக்கைகளைப் பத்திரமாக வைத்திருக்கவும், முக்கியமான அறிக்கைகளைக் காலதாமதமின்றி சம்பந்தப்பட்ட கட்சி அங்கங்களுக்கு அனுப்புவதும் அறிக்கைகளைப் பெறுபவரின் பொறுப்பாகும்.
வேலை அறிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்?
19. இந்த அறிக்கைகள் அனைத்தும் இயல்பாகவே, அறிக்கை அளிப்பவரின் வேலைகளைப் பற்றிய விவரங்களுடன் வரம்பிட்டுக் கொள்பவையாக இருக்க வேண்டும். நமது வேலையின்போது கவனத்துக்கு வந்த, நமது எதிர்காலப் போராட்டத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவமுடைய விசேட சூழ்நிலைகள், நமது எதிர்கால வேலைகளில் மாற்றம் அல்லது முன்னேற்றத்தைக் கொண்டுவரத்தக்கதான குறிப்பான பரிசீலனைகள், வேலையை நிறைவேற்றும்போது உணரப்பட்ட முன்னேற்றத்துக்கான ஆலோசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இவை அனைத்தும் பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாக அறிக்கைகள் இருக்க வேண்டும்.
பொதுவுடைமைவாத கருக்குழுக்கள், பிராக்சன், தொழிலாளர் குழுக்கள் அனைத்திலும் எல்லா வேலை அறிக்கைகளும் – அவை பெறுகின்றவையும், அதுபோலவே அவை அனுப்புபவையும் – முற்று முழுதாக விவாதிக்கப்பட வேண்டும். இத்தகைய விவாதங்களை நடத்துவது ஒரு முறையான பழக்கமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான நிறுவனங்களின் குறிப்பாக குட்டி முதலாளித்துவ தொழிலாஈளர் நிறுவனங்களின் அதிலும் முக்கியமாக சோசலிஸ்டு கட்சிகளின் நடவடிக்கைகள் பற்றி கண்காணிப்பதையும், அவை பற்றி அறிக்கை செய்வதையும் கருக்குழுக்களிலும் தொழிலாளர் குழுக்களிலும் உள்ள தனிப்பட்ட கட்சி உறுப்பினர்களும் அல்லது குழுவாக உள்ள கட்சி உறுப்பினர்களும் கவனமாகச் செய்ய வேண்டும்.
+++++++++++
8. கட்சி நிறுவனக் கட்டமைப்பு பற்றி
43. பரந்து விரிந்ததாக எஃகுறுதி வாய்ந்ததாக கட்டியமைக்கப்படும் கட்சி நிறுவனமானது, வெறும் புவியியல் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்படக் கூடாது. மாறாக, குறிப்பிட்ட மாவட்டத்தின் யதார்த்தமான பொருளாதார, அரசியல் மற்றும் போக்குவரத்து நிலைமைகளுக்குப் பொருத்தமாக அமைக்கப்பட வேண்டும். பிரதானமான மாநகரங்கள், பெரிய தொழிற்சாலை மையங்கள் கட்சி நிறுவனத்தின் ஈர்ப்பு மையமாக்கப்பட வேண்டும்.
ஒரு புதிய கட்சியைக் கட்டியமைக்கும்போது எடுத்த எடுப்பிலேயே நாடு முழுவதும் பரந்து விரிந்த கட்சி நிறுவனத்தைக் கட்டியமைக்கும் போக்கு தோன்றுவதுண்டு. கட்சியின் வசம் உள்ள ஊழியர்கள் வரம்புக்குட்பட்டிருப்பதையும், மிகச் சிலவாக உள்ள இந்த ஊழியர்கள் எல்லா திக்குகளிலும் சிதறி இருப்பதையும் புறக்கணிப்பதாக உள்ளது இப்போக்கு. இது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் திறனையும் வளர்ச்சியையும் பலவீனப்படுத்துகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில் பரந்த அளவில் கட்சி அலுவலகங்கள் தோன்றுகின்றன. ஆனால், கட்சியானது மிகமிகப் பிரதானமான எந்தவொரு தொழில் நகரத்திலும் வேர்விட்டு வளர்வதில் வெற்றி பெறுவதில்லை.
மாநில மற்றும் மாவட்ட நிறுவனங்கள்
44. கட்சி நடவடிக்கை அதிகபட்ச அளவு மையப்படுத்துவதை சாத்தியமாக்குவதற்கு ஒன்றுக்கொன்று கீழ்படிதலுள்ள மேலிருந்து கீழ்வரை கிரமமான பல குழுக்களைக் கொண்டதாக கட்சித் தலைமை பிரித்து அமைப்பது உசிதமானதல்ல. ஒரு பொருளாதார, அரசியல் அல்லது போக்குவரத்து மையமாக விளங்கும் ஒரு மாநகரை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதி முழுவதையும் – அடுத்தடுத்த மாவட்டங்களை உள்ளடக்கி – அரசியல் பொருளாதாரத் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு விரிந்து பரந்ததாக வலைப்பின்னல் போன்ற நிறுவனங்களை அமைக்க வேண்டும். பெரிய மையத்தைச் சேர்ந்த கட்சிக் கமிட்டி, கட்சியின் பொதுப் பேரவைக்குத் தலைமை அமைப்பாக விளங்க வேண்டும். அங்கிருந்து மாவட்டத்தின் நிறுவன நடவடிக்கையை நடத்த வேண்டும். பகுதி உறுப்பினர்களின் நெருங்கிய தொடர்புடன் தனது கொள்கைகளை வழிநடத்த வேண்டும்.
மாவட்ட மாநாட்டினால் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சி மத்தியக் கமிட்டியால் உறுதி செய்யப்பட்ட இத்தகைய ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பாளர்கள் உள்ளூர் நிறுவனங்களின் கட்சி வாழ்க்கையில் ஊக்கமான பாத்திரமாற்ற கடமைப்பட்டவர்கள் ஆவர். அந்தப் பகுதியைச் சேர்ந்த கட்சி ஊழியர்கள் அம்மாவட்டத்தினுடைய கட்சிக் கமிட்டிக்கு இடையறாது சேர்க்கப்பட வேண்டும். இதனால் அந்தக் கமிட்டிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த பெரு எண்ணிக்கையிலான மக்கள் திரளினருக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் ஏற்படும். வளர்ந்துவரும் போக்கில் மாவட்டத்தின் தலைமைக் கமிட்டியானது அப்பகுதியின் அரசியல் தலைமை உறுப்பாக வளர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு மாவட்டக் கமிட்டியானது மத்தியக் கமிட்டியுடன் இணைந்து பொதுவான கட்சி நிறுவனத்தில் உண்மையான தலைமைப் பாத்திரத்தை ஆற்றும் உறுப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இயல்பாகவே கட்சி மாவட்டங்களின் எல்லைகள் அப்பகுதியுடனேயே வரம்பிட்டுக் கொள்வதாக இராது. ஒரு மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள உள்ளூர் நிறுவனங்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் சீரான முறையில் வழிநடத்துகின்ற நிலையில் மாவட்டக் கமிட்டி இருப்பதே இதைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்க வேண்டும். இந்த நிலை சாத்தியமற்றதானவுடன் மாவட்டமானது பிரிக்கப்பட்டு, புதிய கட்சி மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
பெரிய நாடுகளில் மத்தியக் கமிட்டியையும் உள்ளூர் நிறுவனங்களையும் இணைப்பதற்கான குறிப்பிட்ட இடைநிலை நிறுவனங்களை அமைப்பதும் அவசியமாகும். குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் இந்த இடைநிலையிலுள்ள நிறுவனங்களுக்கு, எடுத்துக்காட்டாக மிக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாநகரத்துக்கு முக்கிய இடம் கொடுப்பது அவசியமாகும். மையப்படுத்தலைப் பலவீனப்படுத்தும் என்பதால் ஒரு பொதுவிதி என்ற முறையில் இது தவிர்க்கப்பட வேண்டும்.
உள்ளூர் நிறுவனங்கள்
45. நாட்டுப்புற குழுக்கள், சிறு நகரக் கமிட்டிகள், மாவட்டக் கமிட்டிகள், மாநகரத்திலேயே பல்வேறு பகுதிக் கமிட்டிகள் ஆகிய உள்ளூர் நிறுவனங்களில் இருந்து பெரிய இடைப்பட்ட நிலையிலுள்ள நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.
சட்டபூர்வமான கட்சியாக இருக்கையில் உள்ளூர் கட்சி நிறுவனம் ஒன்று தனது உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கக் கூடிய பொதுக்கூட்டங்களை நடத்த இயலாத நிலையை அடையும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்குமானால், அந்த உள்ளூர் நிறுவனம் பிரிக்கப்பட வேண்டும்.
எந்தவொரு கட்சி நிறுவனத்திலும் அதனுடைய உறுப்பினர்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கான குழுவாக அமைக்கப்பட வேண்டும். பெரிய நிறுவனங்களில் பல்வேறு குழுக்களைச் சேர்த்து கூட்டு அமைப்புகளாக நிறுவுவது உசிதமானது. பொதுவாக, இத்தகைய உறுப்பினர்கள் அவர்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு குழுவுக்குள் சேர்க்கப்பட வேண்டும். அல்லது வெவ்வேறு இடங்களில் இருப்பவர்களானால், தமது அன்றாட நடவடிக்கையில் ஒருவரையொருவர் சந்திக்கும்படியான குழுவாக அமைக்கப்பட வேண்டும். இத்தகைய கூட்டுக்குழுவின் நோக்கம் பல்வேறு சிறிய அல்லது வேலைக்கான குழுக்களுக்கிடையில் கட்சி வேலைகளைப் பகிர்ந்தளிப்பது, பல்வேறு நிர்வாகிகளிடமிருந்து வேலை அறிக்கைகளைப் பெறுவது மற்றும் தேர்வுநிலை உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பது ஆகியவையாகும்.
பொதுவுடைமை அகிலத்தின் செயற்குழு
46. கட்சி முழுவதுமே பொதுவுடைமை அகிலத்தினுடைய வழிகாட்டுதலின் கீழ் இருக்க வேண்டும். அகிலத்தில் இணைந்துள்ள கட்சிகளின் வேலைகளை நெறிப்படுத்துகின்ற அகிலத்தினுடைய செயற்குழுவின் அறிவுறுத்தல்களும் (கட்டளைகளும்) தீர்மானங்களும் 1. கட்சியின் மத்தியக் கமிட்டிக்கு அல்லது 2. மத்தியக் கமிட்டியின் வாயிலாக விசேடமான கமிட்டிக்கு அல்லது 3. கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் என்று அனுப்பப்பட வேண்டும்.
அகிலத்தினுடைய அறிவுறுத்தல்களும் (கட்டளைகளும்) தீர்மானங்களும் கட்சியை, இயல்பாகவே கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரையும் கட்டுப்படுத்தும்.
++++++++++++
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 12
சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் :
தயாராயிருத்தல்
- போராட்டங்களின் சூழ்நிலைகளில் ஏற்படக் கூடிய எல்லா மாற்றங்களுக்கும் ஏற்ப தன்னை எப்போதும் விரைந்து மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடியவாறு கட்சி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்கப்பட்டுள்ள பெரு எண்ணிக்கையில் உள்ள எதிரியுடன் வெளிப்படையான மோதலைத் தவிர்க்க இயலக் கூடியதான போர்க்குணமிக்க நிறுவனமாக பொதுவுடைமைக் கட்சி வளர்க்கப்பட வேண்டும். ஆனால், மற்றொருபுறம் எதிரி குவிந்திருப்பதையே பயன்படுத்திக் கொள்வது எப்படி இருக்க வேண்டுமெனில், எதிரி எதிர்பாராத இடத்தில் தாக்குதல் தொடுக்கும்படியாக இருக்க வேண்டும். கலகங்கள் மற்றும் தெருச் சண்டைகள் அல்லது கடுமையான அடக்குமுறை சூழ்நிலைகளை மட்டுமே நம்பியிருப்பது கட்சி நிறுவனத்தின் மிகமிகப் பெரிய தவறாகும். திடுதிப்பென்று வரும் எதிர்கால நிலைமைகளை சமாளிக்கத் தயாராய் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் பொதுவுடைமையாளர்கள் ஆரம்பகட்ட புரட்சிகர வேலைகளைத் துல்லியமாக செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், பெரும்பாலும் புயல் போன்ற மற்றும் அமைதியான காலங்கள் என்று மாறுவதை முன்கூட்டியே கண்டறிவது கிட்டத்தட்ட அசாத்தியமானதாகும். முன்கூட்டியே அறிவது சாத்தியமாக இருந்தாலும்கூட, பல சந்தர்ப்பங்களில் புனரமைத்தலுக்கு இந்தத் தொலைநோக்கைப் பயன்படுத்துவது இயலாது. ஏனெனில், ஒரு பொதுவிதி என்ற முறையில் மாற்றம் மிகமிக விரைவாகவும் அடிக்கடியும் திடுதிப்பென்றும் நிகழ்வதாக உள்ளது.
சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைகளை இணைப்பது :
54. ஆயுதப் போராட்டத்திற்கு அல்லது பொதுவாக சட்டவிரோதமான போராட்டத்திற்கு முறையாகத் தயாரிக்கின்ற கட்சியின் முன்னுள்ள முக்கியத்துவம் வாய்ய்த இக்கடமையை முதலாளித்துவ நாடுகளிலுள்ள சட்டபூர்வமாக இயங்கும் பொதுவுடைமைக் கட்சிகள் வழக்கமாகவே கிரகிக்கத் தவறுகின்றன. தாம் நிலைப்பதற்கு நிரந்தரமான சட்டபூர்வ அடிப்படையைச் சார்ந்திருப்பது மற்றும் சட்டபூர்வ கடமைகளைச் செய்வதற்கு ஏற்ப தமது வேலைகளைச் சார்ந்திருப்பது என்ற பிழையை பொதுவுடைமை நிறுவனங்கள் அடிக்கடி இழைக்கின்றன.
மறுபுறம் சட்டவிரோதமாக இயங்கும் கட்சிகள் புரட்சிகர மக்கள்திரளினருடன் இடையறாத தொடர்புடைய ஒரு கட்சியைக் கட்டி முடிப்பதற்கு சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்துவதற்கு அடிக்கடி தவறுகின்றன. இந்த முக்கிய உண்மைகளை அலட்சியப்படுத்தும் தலைமறைவுக் கட்சிகள் வியர்த்தமான கடமைகளுக்காக தமது உழைப்பை வீணாக்குகின்ற வெறும் சதிகாரக் குழுக்களாகிவிடும் அபாயத்திற்கு உள்ளாகின்றன.
இவ்விரு போக்குகளுமே பிழையானவை. தலைமறைவாக இருந்து இயங்குவதற்கான மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, புரட்சி வெடிப்புகளுக்கான, முழுமையான தயாரிப்புகளை எவ்வாறு நிச்சயப்படுத்திக் கொள்வது என்பதை சட்டபூர்வமாக இயங்குகின்ற ஒவ்வொரு பொதுவுடைமைக் கட்சியும் அறிந்திருக்க வேண்டும். மறுபுறம், தீவிரமான கட்சி நடவடிக்கைகளின் மூலம் மகத்தான புரட்சிகர மக்கள் திரளினருடைய நிறுவன ரீதியிலான மற்றும் உண்மையான தலைவன் ஆவதற்கு ஒவ்வொரு சட்டவிரோதமாக இயங்கும் பொதுவுடைமைக் கட்சியும் சட்டபூர்வமான தொழிலாளர் இயக்கம் வழங்குகின்ற அனைத்து சாத்தியப்பாடுகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சட்டவிரோதமான – சட்டபூர்வமான கட்சி நிறுவனங்கள் முழுக்க முழுக்க தனித்தனியானவை அல்ல :
- சட்டபூர்வமாக இயங்குகின்ற தலைமறைவாக இயங்குகின்ற இரு கட்சி வட்டாரங்களிலுமே சட்டவிரோதமான பொதுவுடைமைவாத நடவடிக்கைகள் பற்றி ஒரு தவறான போக்கு உள்ளது. பிற கட்சி நிறுவனங்களிலிருந்தும் நடவடிக்கைகளிலிருந்தும் முற்றாகத் துண்டிக்கப்பட்ட தூய்மையான இராணுவ நிறுவனத்தை நிறுவுவதும் நிலை நிறுத்துவதும் என்ற போக்கே இது. இது முழுக்க முழுக்கப் பிழையானது. மாறாக, புரட்சிக்கு முந்திய காலத்தில் போர்க்குணமிக்க நிறுவனங்களை உருவாக்குவது என்பது பொதுவுடைமைக் கட்சியின் பொதுவான வேலைகளின் வாயிலாகவே பிரதானமாக சாதிக்கப்படுகிறது. புரட்சிக்கான போர்க்குணமிக்க நிறுவனமாக முழுக் கட்சியும் வளர்க்கப்பட வேண்டும்.
புரட்சிக்கு முந்திய காலத்தில் முந்திரிக்கொட்டைத் தனமாக அமைக்கப்படும் தனித்தனியான இராணுவ நிறுவனங்கள் கலைந்துபோகும் போக்குகளையே வெளிப்படுத்தித் தீரும். ஏனெனில், அவற்றுக்கு நேரடியான மற்றும் பயனுள்ள கட்சி வேலை என்று எதுவுமில்லை.
தனது உறுப்பினர்களையும் கட்சி நிறுவனங்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்துவிடாமல் பாதுகாப்பதும், இவ்வாறு கண்டுபிடிப்பதைச் சாத்தியமாக்குகின்ற பதிவு செய்தல், கவனக்குறைவாக நிதி மற்றும் நன்கொடை சேகரிப்பது, புரட்சிகர வெளியீடுகளைத் தராதரமின்றி கவனக்குறைவாக விநியோகிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பதும் ஒரு தலைமறைவுக் கட்சி செய்ய வேண்டியது அவசியமே. இந்தக் காரணங்களால் ஒரு தலைமறைவுக் கட்சியானது சட்டபூர்வமான கட்சியின் அளவுக்கு வெளிப்படையான நிறுவன முறைகளைக் கடைபிடிக்க முடியாது. இருப்பினும் நடைமுறை வாயிலாக நிறுவன முறைகளில் மேலும்மேலும் தேர்ச்சி பெற முடியும்.
மறுபுறம், ஒரு சட்டபூர்வமான மக்கள்திரள் கட்சியானது, சட்டவிரோதமான வேலைகளுக்கும் போராட்டக் காலங்களை எதிர்நோக்கியும் முழுமையான தயாரிப்புகளுடன் இருக்க வேண்டும். எந்த விதமான சூழ்நிலைகளிலும், அது தனது தயாரிப்பைத் தளர்த்தவே கூடாது. அதாவது, உறுப்பினர்களின் கோப்புகளுக்குப் பிரதி எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கடிதங்களை அழித்துவிட வேண்டும். முக்கிய ஆவணங்களைப் பத்திரமாக வைக்க வேண்டும். செய்தி எடுத்துச் செல்பவர்களுக்கு இரகசிய முறைகள் பற்றி பயிற்சி அளிக்க வேண்டும்.
சட்டபூர்வமான அதுபோலவே சட்டவிரோதமான கட்சி வட்டாரங்களில், சட்டவிரோதமான நிறுவனங்களானவை முழுக்க முழுக்க இராணுவ நிறுவனங்களாக கட்சிக்குள்ளேயை மிகமிகத் தனிமைப்பட்டவையாக அமைக்கப்பட வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த ஊகம் முழுக்கவும் பிழையானது. புரட்சிக்கு முந்திய காலத்தில் நமது போரிடும் நிறுவனங்களை உருவாக்குவது என்ற பொதுவுடைமைக் கட்சியின் பொதுவான வேலையைப் பிரதானமாகச் சார்ந்திருக்க வேண்டும். முழுக் கட்சியுமே புரட்சிக்காகப் போரிடும் நிறுவனமாக ஆக்கப்பட வேண்டும்.
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | இறுதிப் பாகம்
புரட்சி நடவடிக்கைகளுக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும்.
57. எனவே புரட்சிக்கு முந்திய காலத்திலேயே புரட்சியின் தேவைகளுக்குப் போதுமான ஒரு போரிடும் நிறுவனத்தை உருவாக்கி உறுதிப்படுத்துவதை உத்திரவாதப்படுத்தக் கூடிய முறையில் நமது பொதுவான கட்சி வேலைகள் பிரித்தளிக்கப்பட வேண்டும். பொதுவுடைமைக் கட்சியை வழிநடத்தும் தலைமையானது தனது நடவடிக்கைகள் அனைத்திலும், புரட்சியின் தேவைகளால் வழிநடத்தப்படுவது மகத்தான முக்கியத்துவமுடையதாகும். இத்தேவைகள் என்னவாக இருக்குமென்று முன்கூட்டியே சாத்தியப்பட்ட அளவு காண முடிவது மகத்தான முக்கியத்துவம் உடையதாகும். இது இயல்பாகவே எளிய விசயமல்ல. ஆனால் இது எந்த விதத்திலும் பொதுவுடைமைவாத நிறுவனத் தலைமையில் இந்த முக்கிய விசயத்தைக் கவனத்தில் கொள்ளாமல் விடுவதற்கான காரணமாக இருக்கக் கூடாது.
பகிரங்கமான புரட்சி எழுச்சிகளின் காலத்தில், கட்சி இயங்குவதில் பெரு மாற்றங்களுக்கு உள்ளாவது என்ற மிகக் கடினமான மற்றும் சிக்கலான கடமைகளை மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்சி கூட எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தனது சக்திகள் அனைத்தையும், புரட்சி நடவடிக்கைகளுக்காக ஒருசில நாட்களில் திரட்ட வேண்டிய அவசியம் நமது அரசியல் கட்சிக்கு எழுவது சாத்தியமே. தனது சக்திகளைத் திரட்டுவதுடன் கூடவே தனது சேமிப்புச் சக்திகளையும் ஆதரவான நிறுவனங்களையும், அதாவது நிறுவனமாக்கப்படாத புரட்சிகர மக்கள் திரளினரையும் கட்சியானது திரட்ட வேண்டியிருக்கும். முறையான செஞ்சேனையை அமைப்பது என்பது இன்னமும் நிகழ்ச்சிநிரலில் எழாத பிரச்சினையாகவே இருக்கும். ஏற்கெனவே நிறுவி அமைக்கப்பட்ட படையின்றி ஆட்சித் தலைமையின் கீழான மக்கள் திரளினரைக் கொண்டே நாம் வெற்றியடைய வேண்டியிருக்கும். இக்காரணத்தினால் ஒரு எழுச்சிக்காகச் சிறப்பாகத் தயாரிப்பு செய்யப்பட்டு ஒழுங்கமைக்கப்படாமல் இருந்தால் கட்சியின் மிகத் தீர்மானகரமான முயற்சிகூட வெற்றி பெறாது.
விசேடமான இரகசிய எந்திரத்தைக் கட்டியமைப்பது
58. புரட்சிகர மையத் தலைமை உறுப்புகள் கூட புரட்சி நிலைமைகளைத் தாக்குப்பிடிக்க இயலாதவை என்று நிரூபிக்கப்பட்டிருப்பதை கண்டிருக்க முடியும். சிறு கடமைகளைப் பொருத்தவரை பாட்டாளி வர்க்கம் மகத்தான புரட்சி நிறுவன அமைப்பாக்குதலைப் பொதுவாக சாதிக்க முடிந்துள்ளது. ஆனால், தலைமையகங்களில் எப்போதும் கிட்டத்தட்ட ஒழுங்கின்மை, குழப்பம், அராஜகம் ஆகியவை இருந்துள்ளன. சில நேரங்களில் மிகமிக எளிய வேலையைப் “பிரித்தளிப்பது” கூட போதுமான அளவு இல்லாமல் இருந்திருக்கிறது. உளவு அறியும் துறை எந்த அளவு மோசமாக ஒழுங்கமைக்கப்பட்டு இருக்குமென்றால், அடிக்கடி அது நன்மை செய்வதை விட தீமையே கூடுதலாகச் செய்திருக்கிறது. இரகசிய அஞ்சல் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் நம்பகமானதாக இல்லை. இரகசிய அலுவலகம் மற்றும் அச்சிடும் வேலைகள் பொதுவாகவே அதிர்ஷ்டவசமான அல்லது தூரதிருஷ்டவசமான வாய்ப்புகளின் தயவில் உள்ளன. எதிரி சக்திகளின் “தூண்டிவிட்டுக் காட்டிக் கொடுக்கும் ஏஜெண்டுகளுக்கு” இவை சிறந்த வாய்ப்புகள் அளிப்பவையாக உள்ளன.
குறிப்பிட்ட இத்தகைய வேலைகளுக்காக கட்சியானது தனது நிர்வாகத்தில் விசேடமான துறையை ஒழுங்கமைக்காவிட்டால், இக்குறைகளைச் சரிப்படுத்த முடியாது. இராணுவ உளவறியும் வேலைக்கு நடைமுறை அனுபவம், விசேடப் பயிற்சி, கூர்மதி ஆகியவை வேண்டும். அரசியல் போலீசுக்கு எதிரான இரகசிய வேலைக்கும் இதுவே பொருந்தும் என்று கூறலாம். நீண்டகால அனுபவத்தின் வாயிலாக மட்டுமே மனநிறைவுறத்தக்க முறையில் இரகசியத் துறை உருவாக்கப்பட முடியும். இந்தச் சிறப்புத் தன்மையுடைய புரட்சி வேலைகள் அனைத்தையும் செய்ய சட்டபூர்வமாக இயங்கும் ஒவ்வொரு பொதுவுடைமைக் கட்சியும் தயாரிப்புகள் (அது எவ்வளவு குறைவாக இருந்தாலும் சரி) செய்ய வேண்டும். மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முழுக்கவும் சட்டபூர்வமான நடவடிக்கைகளின் வாயிலாகவே இத்தகைய இரகசிய நிறுவனங்களைப் படைக்க முடியும்.
எடுத்துக்காட்டாக, கூர்மதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டு சட்டபூர்வ பிரசுரங்கள் விநியோகிப்பது மற்றும் பத்திரிகைகளின் தொடர்பு ஏற்பாடுகள் ஆகியவற்றில் குறியீடு முறையைக் கடைபிடிப்பதன் மூலம் இரகசிய அஞ்சல் மற்றும் போக்குவரத்து செய்தித் தொடர்புகளை நிறுவுவது முற்றிலும் சாத்தியமே.
ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரையும் புரட்சிக் கடமைகளுக்காக வளர்த்தெடுப்பது
பொதுவுடைமைவாத அமைப்பாளர் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரையும் ஒவ்வொரு புரட்சிகர தொழிலாளியையும் எதிர்காலப் புரட்சிப் படையின் போராளி என்று நோக்க வேண்டும். இக்காரணத்தால் எதிர்காலத்தில் அவர் ஆற்றப் போகின்ற பாத்திரத்துக்கு ஏற்ப ஒரு இடத்தை அவருக்கு ஒதுக்க வேண்டும். அவருடைய இப்போதைய நடவடிக்கை உபயோகமானதாக – கட்சியின் இப்போதைய வேலைக்கு அவசியமானதாக – இருக்க வேண்டும். மற்றபடி, வெறும் (வறட்டுத்தனமான) பயிற்சியாக இருக்கக் கூடாது. ஏனெனில், நடைமுறை ஊழியர் இதை நிராகரித்து விடுவார். இத்தகைய நடவடிக்கை ஒவ்வொரு பொதுவுடைமைவாதிக்கும், மிக அத்தியாவசியமான இறுதிப் போராட்டத்துக்கான ஆக மிகச் சிறந்த தயாரிப்பு என்பதை யாரும் மறக்கவே கூடாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக