நேபாளத்தில் போராட்டமும் நமக்கான படிப்பினைகளும்

செய்திதாள்களின் அடிப்படையில் செய்தியை தொகுத்தாலும் இந்த பிரச்சினைகளை இவைகள் கூறுகின்றன்வா என்றால் தேடினால்தானே விடைக்கிடைக்கும். 239 ஆண்டுகளாக முடியாட்சியின் கீழ் வாழ்ந்த நேபாள மக்கள், கடந்த 17 ஆண்டுகளாக பாராளுமன்ற ஜனநாயகத்தை அனுபவித்து வருகின்றனர். அதன் வர்க்க சார்ப்பும் ஏகாதிபத்தியங்களின் அடிபணிதலும் ஆட்சியில் உள்ளவர்களின் செயல்பரப்பு ஏழை எளிய உழைக்கும் மக்களின் பிரச்சினையை அணுகவில்லை அவர்கள் முடியாட்சியின் கொடுமைகளை அனுபவிக்காத இளைஞர்கள்தான் அதனால்தான் சுரண்டலின் உயர் மட்டத்தை தகர்க்காமல் ஏதோ ஒரு வகையில் ஆட்சியில் உள்ளவர்களை மட்டுமே குறியாக இருந்துள்ளனர் ஆனால் இந்த சுரண்டலின் வடிவமான அரசை பற்றி துளியும் இவர்கள் உணரவில்லை என்பேன்.

ஆட்சியில் இருந்த கட்சிகள் உண்மையில் உழைக்கும் மக்களுக்கான கட்சிதான? பெயரில் அல்ல அவர்களின் வர்க்க சார்ப்பை புரிந்துக் கொள்க. ஊழலும் சுரண்டலும் தலைவிரித்தாடியதாக கூறும் பொழுது அன்று பெண்கள் தங்களின் வாழ்வியலுக்கு இந்திய விபசார சந்தையை நம்பியும் ஆண்கள் இந்திய குர்க்கா படைபிரிவை நம்பியும் வாழ்ந்ததாக படித்திருந்தேன், அதே கேவலமான நிலைதான் இந்த ஆட்சியிலும் என்றால் இவர்கள் யாருக்கான ஆட்சியாளர்கள் நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

ஆட்சி மாற்றம் என்பது முடியாட்சியிலிருந்து குடியாட்சியாக பாரளுமன்ற ஜனநாயக ஆட்சியாக மலர்ந்தாலும் உழைக்கும் மக்களை சுரண்டும் ஆட்சியாகவே இருந்து வந்தது அதனைதான் இன்று தகர்த்துள்ளனர். இவையும் உழைக்கும் மக்கள் அரசுதான் ஆக உழைக்கும் மக்களுக்கான அரசமைக்க அதற்கான கட்சி வேண்டும் அவையின்றி பெயரில் கம்யூனிஸ்ட் செயலில் முதலாளித்துவ கட்சி யாரின் நலனுக்கானது நீங்களே புரிந்துக் கொள்க.

விரிவாக பின்னர்.. இனி செய்திகளின் சாரம்....

நேபாளத்தில் நடந்ததென்ன?

நேபாள தலைநகர் காத்மண்டு மற்றும் பிற முக்கிய நகரங்களில் கடந்த சில வாரங்களாக பரபரப்பான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இளம் தலைமுறை, குறிப்பாக ஜென்-இசட் வாலிபர்கள், சமூக வலைத்தளங்களுக்கான தடையை நீக்க கோரி பெரும் அளவில் சாலைகளில் குதித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேபாள அரசு, இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் இளைஞர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்றன என்ற காரணத்தால் தற்காலிகமாகத் தடை விதித்தது.

நேபாள வன்முறை

ஆனால், தகவல் தொடர்பு சுதந்திரத்தை மீறுவதாகக் கருதி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்மண்டு உட்பட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், அரசு கடும் அழுத்தத்துக்குள் சிக்கியது. இறுதியில், சமூக வலைத்தளத் தடை உத்தரவை நேபாள அரசு வாபஸ் பெற்றது.

ஆனாலும், தடை நீக்கப்பட்ட பிறகும் போராட்டக்காரர்கள் அமைதியாகவில்லை.  அரசின் மீது நம்பிக்கை இல்லாததால், இளைஞர்கள் மேலும் தீவிரமாக சாலைகளில் இறங்கி, காவல்துறையுடன் மோதல்களில் ஈடுபட்டனர். பல இடங்களில் கற்கள் எறிதல், வாகனங்கள் சேதப்படுத்துதல், கடைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்படுதல் போன்ற வன்முறைகள் வெடித்துள்ளன. இதனால் நேபாளத்தில் சட்டம்-சமாதான நிலைமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ராணுவ ஆட்சி

நேபாளத்தில் சமூக வலைத்தளத் தடை நீக்கப்பட்டாலும், அதன் பின்னணியில் எழுந்த வன்முறைகள் அந்நாட்டின் உள்நிலையை சீர்குலைத்து விட்டன. பாதுகாப்பு காரணங்களால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதோடு, இந்திய அரசு தனது குடிமக்களை நேபாளப் பயணத்திலிருந்து விலகுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலைமை சீராகும் வரை இருநாடுகளுக்கிடையேயான மக்கள் இடமாற்றமும் சுற்றுலா போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்படும் என்பது நிச்சயமான ஒன்றாகும்

இதற்கிடையே நேபாள பிரதமர் கே.பி. ஒலி மற்றும் அந்நாட்டு அதிபர் ராம் சந்திர பவுதெல் ஆகியோரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றன. ஆட்சி கவிழ்ப்பு என்றே இதனை சொல்லலாம். இதை நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனா். இதற்கிடையே நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி கவிழும் நிலை உருவான நிலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த ராணுவ ஆட்சி அமல்படுத்தப்படடு உள்ளது. இனி நேபாளம் முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.பி.சி என்ன சொல்கிறது?.

ஜென் Z' போராட்டத்தின் போது ஊடகங்களும் குறிவைக்கப்பட்டன. நேபாளத்தின் முன்னணி நாளிதழான காந்திபூரின் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது.

போராட்டத்தின் போது, ரபி லாமிச்சானேவின் ஆதரவாளர்கள் அவரை சிறையிலிருந்து விடுவித்தனர். காத்மாண்டுவில் உள்ள நக்ஹூ சிறையிலிருந்து அவர் மட்டும் அல்ல, அங்கிருந்த பல கைதிகளும் வெளியே வந்தனர். நேபாளத்தின் பல சிறைகளிலிருந்தும் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

காத்மாண்டுவின் பனேஷ்வர் பகுதியில் உள்ள நேபாள நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து இன்னும் எரிந்த வாசனை வருகிறது.

இந்த நாடாளுமன்றம், நேபாளத்தில் 239 ஆண்டுகள் நீண்ட மன்னராட்சி முடிவுக்கு வந்ததற்கான அடையாளமாகவும், கடந்த 17 ஆண்டுகளாக ஜனநாயகத்தின் கதையைச் சொல்லும் சின்னமாகவும் இருந்து வந்தது. ஆனால் இன்று, அந்தக் கட்டடத்திலிருந்து புகை மட்டுமே எழுகிறது.

2008-ஆம் ஆண்டு நேபாள மக்கள் முடியாட்சியை ஒழித்தபோதும், நாராயண்ஹிட்டி அரச அரண்மனை தீக்கிரையாக்கப்படவில்லை. அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, வளாகத்தில் குடியரசு நினைவுச் சின்னமும் அமைக்கப்பட்டது.

ஆனால் அதே நேபாள மக்கள், வெறும் 17 ஆண்டுகள் பழமையான ஜனநாயகத்தின் நாடாளுமன்றத்தைத் தீயிட்டு சிதைத்தனர்.

நாடாளுமன்ற சுவர்களில் தேவநாகரி எழுத்தில் கே.பி. ஒலி மற்றும் பிரசண்டாவை அவமதிக்கும் வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.

அந்த சுவர்களை பார்த்துக் கொண்டிருந்தபோது, நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர், 'ராஜா மீதுகூட இத்தனை வெறுப்பு இல்லை' என்றார்.

நேபாள அரசியலின் திருப்புமுனை

நிராஜன் குன்வர், விஷ்ணு சர்மா மற்றும் சுபாஷ் சர்மா ஆகிய மூன்று ஜென் Z போராட்டக்காரர்கள் சோகமான நிலையில் அமர்ந்திருந்தனர்.

மூவரும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள். போராட்டத்தில் நிராஜன் குன்வர் காயமடைந்திருந்தார்.

"அரசு கட்டடங்களுக்கு தீ வைத்தது நாங்கள் அல்ல, வேறு சிலர்தான். நிறைய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. உண்மையைச் சொல்லப் போனால்,இப்போது நாங்கள் வருந்துகிறோம். இந்தக் கட்டடங்களை அமைக்க நேபாளத்துக்குபல ஆண்டுகள் எடுத்தது. அதனால் நாங்கள் மிகவும் சோகமாக உள்ளோம்" என்று நிராஜன் கூறுகிறார்.

அந்த 'மற்றவர்கள்' யார்? என்று கேட்டபோது, நிராஜனும் விஷ்ணுவும், ரவி லாமிச்சானேயின் ஆதரவாளர்கள் மற்றும் ஆர்பிபி (RPP) ஆதரவாளர்கள் என்று சொன்னார்கள்.

ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) முடியாட்சி ஆதரவு கட்சியாக அறியப்படுகிறது. அது நேபாளத்தை ஒரு இந்துத் தேசமாக்க கூறுகிறது.

பின்னர் நிராஜன் மற்றும் விஷ்ணுவிடம் 'ஜனநாயக நேபாளமா வேண்டுமா, முடியாட்சி வேண்டுமா? மதச்சார்பற்ற நேபாளமா வேண்டுமா, இந்துத் தேசம் வேண்டுமா?' என்று கேட்கப்பட்டது.

இருவரும் வெளிப்படையாகவே, 'முடியாட்சி முறை, இந்துத் தேசம்' என்றனர்.

ஆனால் அங்கு இருந்த சுபாஷ் சர்மா, தான் ஜனநாயக நேபாளத்தை ஆதரிக்கிறேன் என்று தெளிவாகச் சொன்னார்.

இந்த 'ஜென் Z' போராட்டத்தில், இளைஞர்களுக்கு நல்லது–கெட்டது என்ன என்பதைச் சொல்லி வழிகாட்டக்கூடிய, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமை யாரும் இல்லை. அதனால், யார் என்ன நினைத்தார்களோ அதைச் செய்தார்கள்.

இளைஞர்களுடன் பேசினால், அவர்கள் குழப்பமடைந்தவர்களைப் போலத் தெரிகிறார்கள்.

நேபாளத்தில் அடுத்த அரசு எப்படி அமைக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்க்கியின் பெயர் அடிபடுகிறது, ஆனால் இளைஞர்களிடையே அதற்கு ஒருமித்த ஆதரவு இல்லை.

வியாழக்கிழமை, 'ஜென் Z' போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் சுசிலா கார்க்கியின் பெயரை எதிர்த்து ராணுவத் தலைமையகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

ஜென் Z போராட்டக்காரர்கள் காத்மாண்டு மேயர் பாலேன் ஷா முன்வர வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால், முதலில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பது தான் அவர்களின் முக்கிய கோரிக்கை. ஆனால் நாடாளுமன்றம் ஏன், எப்படிக் கலைக்கப்பட வேண்டும் என்பதற்கான பதில் அரசியலமைப்பில் இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

குறிப்பு:-ஜென் Z மற்றும் ஜென் ஆல்பா தலைமுறைகளைச் சேர்ந்த இளைஞர்கள் பேசும்போது பெரும்பாலும் வெவ்வேறு புதிய வார்த்தைகளையும், சொல் அல்லது வாக்கியத்தின் சுருக்கத்தையும் பயன்படுத்துகின்றனர். இந்த வார்த்தைகளை சமூக ஊடகங்களிலும் காணலாம் மற்றும் கேட்கலாம். இந்த வார்த்தைகள் எங்கிருந்து வந்தன? மொழியில் இந்த மாற்றங்கள் எப்போது, எப்படி ஏற்பட்டன?997 முதல் 2012 வரையிலான காலகட்டத்திற்குள் பிறந்தவர்கள் ஜென் Z என்றும், 2013 மற்றும் 2024 வரையிலான காலகட்டத்திற்குள் பிறந்தவர்கள் ஜென் ஆல்பா என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இணையத்தின் வளர்ச்சி உச்சத்தில் இருந்த காலத்தில் ஜென் Z தலைமுறை வளர்ந்தது, இந்தத் தலைமுறைக்கு மொபைல் ஃபோன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இல்லாத ஒரு உலகம் தெரியாது.

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சற்றுமுன் செய்தி 14-09-2025(19:30)

நேபாள நாடாளுமன்றத்தில் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அடுத்த 6 மாதங்களில் பொறுப்பை ஒப்படைக்க தயாராக உள்ளதாக புதிய பிரதமர் சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக தேர்தெடுக்கப்பட்டுள்ள சுஷிலா கார்கி, காத்மாண்டுவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயர் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அடுத்த 6 மாதங்களில் பொறுப்பை ஒப்படைக்க தயாராக உள்ளேன் எனக் கூறினார்.

"எனக்கும் இந்த பதவியில் ஆசையில்லை. தெருக்களில் திரண்டிருந்த மக்களின் குரல்கள் வற்புறுத்தியதால்தான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்" என தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதத்தால் வருந்துவதாக அவர் தெரிவித்தார். நாட்டின் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் திட்டமிட்ட தாக்குதல் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் "இதை நினைத்தால் வெட்கக்கேடாக உள்ளது. ஒரு நேபாளி பொதுசொத்தை சிதைத்து சீரழித்திருந்தால் அவர் எப்படி தன்னை நேபாளி என சொல்லிக்கொள்ள முடியும். இந்த நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை" எனக் கூறினார். இதில் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இதுவரை 3 போலீஸ் அதிகாரிகள் உட்பட 72 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சுஷிலா கார்கி தலைமையிலான இடைக்கால அரசு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.
















"6 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்