இலக்கு 80 செப்டம்பர் 2025 இணைய இதழ் பிடிஎப் வடிவில்

இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை

1). ஆசிரியர் பகுதி

2). புதிய காலனியம் பற்றிய இந்திய கம்யூனிஸ்டுகளின் குழப்பம்

3). நூல் அறிமுகம்.

4). சர்வாதிகாரப் பிரச்சினையின் வரலாற்றைப் பற்றி - லெனின்.

5). பாசிசமும் நம் முன் உள்ள படிப்பினைகளும்

தோழர்களே, இலக்கு இணைய இதழ்களில் வெளியாகும் கட்டுரைகள் மார்க்சிய லெனினியத்தை கற்றுதேர்வதற்கான அடிப்படையாக கொண்டே எழுத்தப்படுகிறது. இங்குள்ள இடதுசாரிகள், புரட்சிபேசும் பல்வேறு பிரிவினருடன் முற்போக்கு பேசும் பலரின் நிலைபாடுகளையும் முழுமையாக கவனித்தில் கொண்டே எமது இலக்கு இணைய இதழ் தயாரிக்கப்படுகிறது. இங்குள்ள இடதுசாரிகளாகட்டும் புரட்சி பேசுவோராகட்டும் குறுங்குழுவாத கண்ணோட்டத்திலே பயணிக்கினறர்; இவர்களின் கண்ணோட்டம் மார்க்சியம் இல்லை என்பதனை இவர்களின் நடைமுறை நிரூபிக்கிறது. ஆகையால் இவர்கள் தங்களின் தவறுகளிலிருந்து விடுபட்டு சரியான மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தை வளர்த்து தெளிவடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதற்கு தங்களிடம் உள்ள மார்க்சியம் அல்லாத போக்குகளை களைந்தெறிய திட சித்தம் பெற வேண்டும் தோழமைகளே.

நாம் நமது மார்க்சிய அறிவை ஆசான்கள் கொடுத்துள்ள அரசியல் தத்துவ போதனையிலிருந்து சரிபார்க்க வேண்டும். ஒவ்வொன்றையும் பகுத்தறிய மார்க்சிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆம் ஆசான் மார்க்ஸ் சொன்னதுதான் “இன்றைய சமுதாயம் மாறாத கல் உருவம் அன்று மாற்றத்திற்கு உரிய உயிர் அமைப்பே. அது இடைவிடாமல் மாறிக்கொண்டிருக்கிறது”. (மூலதனம் முதல் பாகம் புத்தகம் ஒன்னு பக்கம் 29) மற்றும், “முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வளர்ச்சியால் மட்டுமன்றி அந்த வளர்ச்சியின் அரைகுறை நிலைமையினாலும் அவதிப்படுகிறோம் நவீன கால தீமைகளோடு கூடவே காலத்துக்கு ஒவ்வாத சமூக அரசியல் முறைகளை தவிர்க்க முடியாதபடி உடன்கொணரும் பழமைப்பட்ட உற்பத்தி முறைகளின் முனைப்பொழிந்த மீத மிச்சங்களிலிருந்து மரபுரிமையாய் வந்த கேடுகளின் முழு வரிசையும் நம்மை வருத்துகிறது. வாழ்பவர் வாழ்பவற்றால் மட்டும் இன்றி மாண்டவற்றாலும் அவதிப்படுகிறோம். மாண்டவன் வாழ்பவனை ஆட்டி வைக்கிறான்”. (மூலதனம் மேல் காணும் நூல் பக்கம் 26).

இந்த வாக்கியத்தில் மார்க்ஸ் என்ற சமூக விஞ்ஞானி மனித சமூகம் தோன்றியதிலிருந்து ஒவ்வொரு அசைவிலும் அவைமாறியும் வளர்ந்தும் முன்னேறிக் கொண்டுள்ளதை விளக்கியுள்ளார். இதனை புரிந்துக் கொள்ள மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞான அறிவும் மார்க்சியம் லெனினியமாக வளர்ந்த காலகட்டத்தின் அதன் தத்துவ அரசியல் பொருளாதார நிலைமைகளை அறிந்துக் கொள்ளும் அறிவு வளர்ச்சியும் மார்க்சியவாதிகளுக்கு அவசியம் அன்றோ? ஆனால் மதவாதிகள் மாண்டுபோனவற்றின் மரபுரிமையையும் அதன் பெருமையையும் பேசி, இன்று வாழ்வதற்கான வழியை சொல்லாமல் பழைமையில் மூழ்கி ஏழ்மை, பசி, பட்டினிக்கு காரணமான ஆளும் வர்க்க கொடூரத்தை முதலாளி மூடிமறைக்க பார்க்கிறனர். ஆனால் பழைமையின் கோரமுகத்தை கிழித்தெறிந்து வருங்கால தேவைக்கு போராட வேண்டியத்தை கைவிட்டுள்ள பலர்; அதே மதவாதிகள் போல் பழம்பெரும் கோட்பாடுகளால் மக்களை மயக்க நினைக்கினர். இன்றைய பல பிரச்சினைக்கு அன்றைய காலத்தின் தேவையிலிருந்த சமூக அமைப்பின் மிச்ச சொச்சங்கள் இன்றைக்கு வேண்டாத அழுகிபோன சதை பிண்டங்களாக நாற்றமெடுத்து வாழ்கிறது (சாதி,மதம் போன்ற) அவைதானாக மறைந்தொழியாது அதனை சுத்தப்படுத்த வேண்டும் அதற்கு தேவை சமூகத்தை மாற்றி அமைக்கும் புரட்சி ஒன்றேதான். அதனின்றி இந்த சீழ் ஒழுகி நாற்றம் பிடித்துள்ள சமூகத்திலே வாழ இடம் கேட்கும் சீர்திருத்தம் எல்லா சீர்கேடுகளையும் அவலங்களையும் தாங்கிக் கொண்டே வாழ சொல்லும் முறையானது சாக்கடையில் வாழந்துக் கொண்டே நாற்றமடிக்குதே என்பதுதான். ஆகையால் இந்த பழம் சாக்கடைகள் நமக்கு வேண்டாம். இதனை இல்லாதொழிக்க இதனில் மேலான ஒரு சமூக அமைப்புதான் நமக்கு வேண்டும் அதனை பற்றி சிந்திப்போம் செயல்படுவோம் தோழமைகளே, பழமைக்கு வழிவகை செய்வதால் இந்த அமைப்பு மாறாமல் இருக்க முயலுகின்றனர். தாங்கள் வாழவழியமைத்துக் கொடுத்துள்ள அமைப்புமுறைக்கு நன்றி சொல்லிக் கொள்கின்றனர் . ஆக இவர்களின் பணியை கவனித்தில் கொள்ளுங்கள். வர்க்க சமூகத்தில் வர்க்கம் சார எழுத்தும் பேச்சும் செயலும் எவையுமே இல்லை!

 பாசிசம் பற்றிய கட்டுரையில் லெனின் கூறியவாறு அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டது. யுத்தக் கடன், உணவுபற்றாக்குறை, மோசமான அறுவடை, பணவீக்கம், விலைவாசி உயா்வு போன்றவைகள் அந்தநாட்டை பொருளாதார ரீதியான திவால் தன்மைக்கு கொண்டு சென்றது. ஆறு லட்சம் இத்தாலிய படைவீரா்கள் யுத்ததத்தில் பலியாயினா். பத்து லட்சம் இத்தாலியா்கள் காயமடைந்தனா். 5 லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தனா். யுத்தத்தில் கிடைத்த ஆதாயத்தை விட யுத்தச்செலவுகள் மிக அதிகமானது. மேலும் யுத்தத்தின் கூட்டாளி நாடுகளால் உரிய ஆதாயத்தை முறையாக பங்கிட்டு கொடுக்காமல் துரோகம் இழைக்கப்பட்டது.. யுத்தத்தினால் ஏற்பட்ட சீரழிவுகளையும் கொடுமைகளையும் எதிர்த்து உழைக்கும் விவசாய வா்க்கத்தின் மற்றும்தொழிலாளா் வா்க்கத்தினுடைய போராட்டம் உக்கிரமாக நடந்தது. இந்நேரத்தில் சரியான வழிகாட்டும் சித்தாந்த பலம்பெற்ற கம்யுனிஸ்டு கட்சி இல்லாததன் விளைவாக அப்போராட்டங்களை தொழிலாளா் விவசாய வா்க்கம் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டமாக வளா்த்து செல்ல முடியவில்லை. ரஷ்யாவில் கம்யுனி்ஸ்டு கட்சி தலைமையில் சோசலிச அரசு அமைக்கப்பட்டதைகண்டு ஏகாதிபத்திய நிதமூலதனக் கும்பல் நடுங்கியது. இத்தாலிய நிதிமூலதனக்கும்பலின் நலனை பிரதிநித்துவப்படுத்திய முசோலினியின் பாசிஸ்டா கட்சியானது குட்டிமுதலாளிய வா்க்கத்தையும் வெகுஜனங்களையும் தங்களது வாய்ச்சவடால் பாசிசப் பிரச்சாரத்தினால் பொய்யையும் புரட்டையும் பிரச்சாரம் செய்தது. “அதாவது பழைய ரோமப் பேரரசு நிலவிய போது நம்மிடம் இருந்த மிகுதியான “கத்தோலிக்க மத உணா்ச்சியோடு கூடிய இத்தாலிய தேசபற்று” மற்றும் “இத்தாலிய தேசிய பெருமிதம்” இல்லை. அதனால்தான் நாம் யுத்தத்தினால் ஆதாயம் அடைய முடியவில்லை. நமக்கு இத்தாலிய தேசபக்தி இல்லாததன் விளைவாகத்தான் நாம் நமது ரோம சாம்ராஜ்யத்தை இழந்தோம்” என்ற முசோலினியின் ஆக்கிரமிப்புத்தன்மை கொண்ட வாய்ச் சவடால் பிரச்சாரத்தின் மூலம் அப்பாவி வெகுஜனங்கள் மற்றும் நடுத்தரவா்க்கம் ஏமாற்றப்பட்டனர். மேலும் தோ்தல் மூலமாக முசோலினியின் பாசிஸ்டா கட்சியானது அதிகாரத்திற்கு வந்தது. 1922-ல் முசோலினி இத்தாலியின் பிரதமரானான். 1925-ல் இத்தாலியின் சர்வாதிகாரி என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டான். தோ்தலில்தான் பெற்ற பெரும்பான்மையைக் கொண்டு கம்யூனி்ஸ்டு கட்சி, தொழிற்சங்கம் மற்றும் விவசாய சங்கம் உட்பட அனைத்து ஜனநாயக அமைப்புகள் கூடவே பாராளுமன்றத்தையும் எதேச்சதிகாரமாக கலைத்தான். ஜனநாயகமும் கம்யூனிசமும் தேசத்திற்கு ஆபத்து என்றான். அறிவும் அறிவியலும் சமுதாயத்திற்கு எதிரானது என்றான். தெய்வபக்திமிக்க மற்றும் கத்தோலிக்க தன்மை கொண்ட பழையரோமானியப் பேரரசை, அதாவது ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தைச்சேர்ந்த ஏறக்குறைய 40 நாடுகளில் இத்தாலிய பேரரசை நிறுவுவதே தனது பாசிஸ்டுகட்சியின் லட்சியம் என்று பகிரங்கமாக அறிவித்தான். தன்னை எதிர்த்து போராடியவா்களை வீதியில் தூக்கில் தொங்கவிட்டான்.

“பாசிஸ்டுகளால் ஒழுங்கமைக்கப்பட்டு அணி திரட்டப்பட்டு அவர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட மக்கள் ஒருநாள் காலையில் தாங்களாகவே பாசிசத்திலிருந்து விலகி, பாட்டாளி வர்க்கப் புரட்சியில் கலந்து கொள்ள நம்மிடம் வந்துவிடுவார்கள் என்று யாரும் நினைக்கக் கூடாது. அந்த மக்கள் வெளியே வருவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். நமது பக்கம் அவர்கள் வந்து சேருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.”

பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பல அடிப்படையான கொள்கைகள் குறித்து நமது முன்னோடிகள் பல நிர்ணயிப்புகளை உருவாக்கியுள்ளனர். “கோட்பாடு குறித்த சரியான நிலைப்பாட்டிற்கும்” சக்திகளின் உறவு குறித்த ஒரு சரியான மதிப்பீட்டிற்கும், “நடைமுறைக் கொள்கைப் பிரச்சினைகளில் சரியான தீர்வுகளுக்கும்” மிகுந்த முக்கியத்துவம் உடையது. “நடைமுறைக் கொள்கைப் பிரச்சினை”களுக்கான சரியான தீர்வுகளுக்கு அடிப்படையாக “சரியான கோட்பாட்டு நிலைப்பாட்டை” மேற்கொள்ள வேண்டும் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளில் தவறி விழுவதற்கு எதிரான எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உலக அனுபவம் என்ற பெட்டகத்தில் இருந்து குவிக்கப்பட்டிருக்கும் ஏராளமான சான்றாதாரங்களின் அடிப்படையில் டோக்ளியாட்டி பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார் :

  • பாசிசம் என்பது முதலாளித்துவ நாடுகளில் ஒரு அபாயமாக உள்ளது. ஆனால், அது தவிர்க்க முடியாததொரு வளர்ச்சிக் கட்டமல்ல.
  • பாசிசமானது, முதலாளித்துவத்தின் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் அடிப்படையில் தீர்க்க முடியாது. இதனால் அடிப்படையான வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் தொடரும்.
  • பாசிசம் அதிகாரத்திலிருக்கும் பொழுது, மிக மோசமான நிலைமைகளிலும் கூட ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி பாசிசத்தைத் தோற்கடிப்பதற்குப் போராடுவது சாத்தியமே.

பாசிசமானது தன்னுடைய சொந்த உள் முரண்பாடுகளால் நொறுங்கி விழுந்துவிடாது. ஆனால், அதை தோல்வியுறச் செய்ய அந்த முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இத்தாலிய பாசிசமானது கம்யூனிச எதிர்ப்பையும் இனவெறியையும் அதனுடைய பிரதான கருவிகளாகப் பயன்படுத்தி வருகிறது. எத்தியோப்பிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் மீது இத்தாலிய விமானங்களின் மிருகத்தனமான குண்டு வீச்சுத் தாக்குதலோடு சேர்த்து மிகவும் வன்முறைப்பட்ட இழிவான இனவெறிப் பிரச்சாரமும் தொடர்ந்து வந்தது.

இன்று பெரும் முதலாளிகள் “பிரித்தாள்வதற்காக” இனவெறியைப் பயன்படுத்துவதால், அமெரிக்காவிலுள்ள நாம், அந்த இனவெறியைப் “பிரித்தாளும் தத்துவார்த்த விஷயமாகவே” காணவேண்டும். அதே சமயம் பாசிசம் தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய மிகவும் ஆபத்தான சாதனமாகவும் அதைக் காண வேண்டும்.

தோழா் டிமிட்ரோவ் பாசிசம் நிகழ்ச்சி நிரலுக்கு வருவது குறித்து கூறும் போது "முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாசிசத்திற்கு மாறிச்செல்லும் போக்கு முடிந்து போன, தவிர்க்கவியலாத ஒன்று எனக்கருதாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஏகாதிபத்தியத்திலிருந்து பாசிச சா்வாதிகாரம் அவசியம் தோன்றியே தீரும் என்று கிடையாது. இங்கு நாம் சில நடைமுறை உதாரணங்களை காண்போம். உதாரணத்திற்கு இங்கிலாந்து பெரும் ஏகாதிபத்திய நாடு. அங்கு ஜனநாயகவகைப்பட்ட நாடாளுமன்ற அரசாங்கம் (இதிலும் கூட பிற்போக்கு அம்சங்கள் இல்லை எனக் கூறிவிட முடியாது.) உள்ளது. பிரான்சையும் அமெரிக்கைாவையும் எடுத்துக் கொள்வோம். இந்நாடுகளில் பாசிச வடிவில் சமூகத்தை உருவாக்கும் போக்கு உள்ளதை நீங்கள் காண்பீா்கள். ஆனால் இங்கே நாடாளுமன்ற வடிவங்கள் இன்னும் உள்ளன.

பாசிச வடிவிலான அரசாங்கத்தை நோக்கி செல்லும் போக்கு அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது என்றாலும் பாசிசம் எல்லா இடங்களிலும் வந்தே தீரும் என்று இதற்குபொருள் ஆகாது.”

மேலும் டிமிட்ரோவ் கூறுகிறார்:

பாசிசம் எத்தகைய ஒரு முகமூடியை (இனம், மதம், தேசம், மொழி......) அணிந்திருந்தாலும் எந்த வடிவத்தில் தன்னை அது காட்டிக்கொண்டாலும் எந்த வழிகளில் அது அதிகாரத்திற்கு வந்தாலும்:

பாசிசம் என்பது முதலாளித்துவமானது (நிதிமூலதனம்) உழைக்கும் மக்கள்(தொழிலாளர்கள், விவசாயிகள்) மீது மிகவும் கொடூரமாக, கோரமாக நடத்தும்தாக்குதல் ஆகும்.







இலக்கு 80 இணய இதழ் இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்