சமய கருத்துகளை சமூக நடைமுறையில் புரிந்துக் கொள்ள ஒரு முயற்சி

சமூகத்தில் உள்ள மேலாண்மை செய்யும் கருத்துகள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் கருத்துகளே!

நிலவுடமை சமூக அமைப்பில் ஏற்பட்ட சமய கருத்துகளை முதலாளித்துவ சமூகத்தில் பரப்பும் பிற்போக்கு அரசியலை மாறாநிலை அரசியலை இந்துவெறி கட்சியான பி.ஜே.பி கற்பனையான ராம ராஜ்ஜியதிற்கு அழைத்து செல்ல பட்டினியும் பசியுமான மக்களுக்கு மதத்தை(விற்பனை செய்கின்றனர்) முன்நிறுத்தி ஏமாற்றுகின்றனர் என்றால் உழைக்கும் மக்களின் சுரண்டலின் வடிவமான கருத்துருவம்தான் மதம் அதனை அப்படியே தூக்கி பிடிக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மந்திரி  என்ன சொல்ல வருகிறார், "உண்மையான பக்தர்களைக் கண்டறிவது மிக எளிதானது. பகவத் கீதையின் 12-வது அத்தியாயத்தில் 13 முதல் 20 வரையிலான எட்டு ஸ்லோகங்களில் பக்தர்களின் பண்புகள் பற்றி கூறப்பட்டுள்ளன.சாந்தோக்ய உபதேசத்தில் இந்த வசனத்தின் பொருள் 'நீ அதுவாக இருக்கிறாய்' என்பதாகும். நானும் நீயும் ஒன்றாக ஆகிறோம் என்று சொல்லும்போது நம்ம வேறு அல்ல என்பது அர்த்தமாகும்". 

உன் உழைப்பை சுரண்ட அனுமதி கேட்பதை தவிர வேறென்ன?

இதற்கான சில தேடலே இங்கு... நம் மத சிந்தனையின் அடிப்படைகளையும் அதற்கான சமூக அமைப்பையும் சற்று தேடுவோம்...

அரியும் சிவனும் ஒண்ணு

 இது அறியாதவன் வாயிலே மண்ணு.

இந்த தமிழ் பழமொழியின் சாரம் சமய நல்லிணக்கமே. இது மட்டும் அல்ல அரியையும் சிவனையும் இது திடப்படுத்தவும் செய்கிறது. சமய நல்லிணக்கமும் ஒருபடி பேசும் அதே வேளையில் சமயத்தை உயர்த்தி பிடிக்கும் வேலையையும் செய்கிறது.

ஆக இந்துத்துவத்தை கருத்துரு அளவில் எதிர்க்க வேண்டுமெனில் சமயம் சாராத சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டும். இந்துத்துவா எதிர்ப்பு அரசியலை முன்னிலைப் படுத்தி நடத்துபவர்கள் சமயம் சாராத சிந்தனையை அதன் அடுத்த கட்டமாக சமயத்தின் தோற்றம் அதன் செயல் சமூகத்தில் தாக்கம் புரிந்திருக்க வேண்டும். அவையன்றி சமயம் சார்ந்த கருத்துகளில் சமரமாகி சுரண்டல் வர்க்க சித்தாந்த அடிமையாகி போனால் அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று எப்படி சொல்ல???..

பிறரையும் நமக்குள் ஏற்றுக் கொள்ளும்போது வேற்றுமை இல்லாமல் ஆகிறது. அனைவரும் ஒன்று என்ற விழிப்புநிலை ஏற்படுகிறது. இதுதான் சபரிமலை வெளிப்படுத்தும் தத்துவமாகும்-கேரள சி.பி.எம் முதன்மை அமைச்சர் பிரனாய் விஜயன் கூற்று. இவரை விமர்சிக்க வேண்டிய அவசியம் ஏனெனில் மதம் பற்றிய மார்க்சிய ஆய்வை புறகணித்து மதத்தை ஆரத்தழுவி தன் இயால நிலையை போக்க மதவாதிகள் சொல்லும் அதே உபதேசம் என்ன பயன்?

அதனால் என் தேடல் சமய கருத்துகள் சமூகத்தில் எப்படி பரந்துக் கிடக்கிறது என்பதனை பின்னர் வாசியுங்கள் அதற்கு முன் என் முகநூல் பகுதியில் நேற்று எழுதிய சிறிய தேடலை முதலில் வாசிக்க தோழர்களே,
மார்க்சியத்திலிருந்து எவ்வளவு விலகி போயுள்ளனர் இங்கு கம்யூனிஸ்ட் கட்சியினர். கேரள சி.பி.எம் ஐய்யப்ப பக்தர்களை திரட்டி நிதி ஆதாரங்களை திரட்டுவார்களா? சோசலிசத்தை படைக்க போகிறார்களா? பொதுவுடைமையின் நோக்கம் மத நல்லிணக்கனம் அல்ல சுரண்டலை ஒழிப்பது ஆனால் நிலவுடமை சமூகத்தின் பிற்போக்கு கருத்துகளை ஏற்று நடக்க சொல்பவர்கள் எப்படி இயக்கவியல்வாதியாக இருக்க முடியும் அதாவது சமூக மாற்றத்தை விரும்பாத மாறநிலைவாதிகளின் கண்ணோட்டம் அல்லவா அவை? அதனை நம்பும் தோழர்களுக்கே இவர்களின் செயல்கள் வெளிச்சம்.
ஆனான் மார்க்சிய ஆசான்கள் இதுபோன்ற திருத்தல்வாத சந்தர்ப்பவாத முதலாளித்துவ அரசியலை மிகத்தெளிவாக என்றோ அம்பலப்பலப்படுத்தி விட்டனர். இருந்தும் இவர்களை நம்பி வாழும் கூட்டம் இவர்களை தூக்கி எறியாதவரை இவர்களும் உழைக்கும் மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பர்.
ஆசான் லெனின் சொல்கிறார்," சமூக ஜனநாயக கட்சிகளிடத்தே சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சியானது, மார்க்சியத்தை திரித்து பதனம் செய்யப்படுதலை ஊக்குவித்து, சந்தர்ப்பவாதத்துக்கு எல்லா வழிகளிலும் விட்டுக் கொடுத்து மார்க்சியத்தை அவர்களுகேற்ப தகவமைக்கிறது". என்கிறார். மேலும் லெனினே கூறுகிறார், "மார்க்சியத்தின் அடிப்படைகளை பகிரங்கமாக எதிர்க்காமல், மார்க்க்சியத்தை ஏற்றுக் கொள்வதாக பாசாங்கு செய்து.... முதலாளி வர்க்க புனித பூசை அறைபடமாக மாற்றுவது".
இவ்வாறு பெயரில் கம்யூனிஸ்டுகளாகவும் செயலில் முதலாளித்துவ வாதிகளாக இருக்கின்றனர் என்பேன்.
மேலும் ஆசான் லெனின் நூலிலிருந்தே, "தொழிலாளி வர்க்கத்தின் சமூக ஜனநாயக ஸ்தாபனங்களது தலைவர்களாக தம்மை கூறிக் கொண்ட அந்த முதலாளி வர்க்க கையாட்களிடமிருந்து இக்குரல்கள் எழுந்தன. கண்ணைத் திறந்துவிடும்படியான ஒரு காட்சி, புரட்சிப் போராட்டத்துக்கு வழி காட்டுவதற்காக வேறு ஒரு வகை ஸ்தாபனங்கள். சட்டவிரோத ஸ்தாபனங்கள் அவசியம் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கு கூட முடியாத அளவுக்கு முதலாளித்துவச் சட்டமுறையினால் ஆட்கள் சீரழிந்து வீணாகி விடுகிறார்கள். போலீஸ் அனுமதியுடன் இருந்து வரும் சட்டபூர்வமான சங்கங்களே இறுதி எல்லை - கடக்க முடியாத எல்லை- என்பதாக கற்பனை செய்து கொள்ளும் அளவுக்கு- இம்மாதிரியான சங்கங்களை நெருக்கடி காலத்தில் தலைமை தாங்கும் உறுப்புகளாக இருக்கும் படி பாதுகாப்பது நினைக்க கூட சாத்தியம் என்பது போல அந்த அளவுக்கு - இவர்கள் கெட்டழிந்துவிடுகிறார்கள்! சந்தர்ப்பவாதத்தின் உயிருள்ள இயக்கவியலை இங்கே காண முடிகிறது. சட்டப்பூர்வமான சங்கங்கள் பல்கிப் பெருகும் இந்த நிகழ்ச்சியே, அசட்டுத்தனமான, ஆனால் கடமை உணர்வுள்ள அற்பவாதிகள் கணக்கு எழுதி வைக்கும் பணிக்குள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டுவிடும் இந்த பழக்கமே நெருக்கடி காலத்தில் இந்த கடமை உணர்வு உள்ள அற்பவாதிகள் துரோகிகளாகவும் காட்டிக் கொடுக்கும் வஞ்சகர்களாகவும் மக்கள் பெருந்திரளினரது புரட்சிகர ஆற்றலை வெளிப்படாத படி அடக்கி ஒடுக்குவராகவும் மாறும்படியான சூழ்நிலையை உண்டாக்கி விடுகின்றன" "...... புரட்சிகர ஸ்தாபனத்தை கட்டி அமைக்கும் பணியை துவங்கியாக வேண்டும். புதிய வரலாற்று நிலைமையாலும் பாட்டாளிவர்க்க, புரட்சிகர செயலூக்கமான சகாப்ததாலும் இது கோரப்படுகிறது. ஆனால் புரட்சிகர ஆற்றலை அடக்கி ஒடுக்கும் பழைய தலைவர்களது தலைக்கு மேல் தான், பழைய கட் சியின் தலைக்கு மேல் தான். அதை ஒழித்துக் கட்டுவதன் மூலம் தான் இப்பணியை தூவங்க முடியும்". லெனின் நூல் திரட்டு தொகுதி 26 பக்கங்கள் 209-265.
ஆக மார்க்சியத்தை மறுத்தவர்கள் மார்க்சியவாதிகளே அல்ல... துரோகிகளே... இவர்க்ளை ஒழித்துக் கட்டினால் மட்டுமே சரியான கட்சியை கட்ட முடியும்.


பம்பையில் நடைபெற்ற உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியில் கேரள சி.பி.எம் சி.எமின் ஆன்மீக பிரசங்கம்.

பி.ஜே.பி எதிர்க்க மதத்தையே ஆயுதமாக்கி உழைக்கும் மக்களுக்கு ஆன்மீக போதையூட்டி அதானிக்கு சேவகம் செய்ய சொல்கிறாரா?







உழைக்கும் மக்களுக்கான நாளிதழா இவை?
உழைக்கும் மக்களை காவு (உழைப்பு சுரண்டல்) கேட்கிறது சமயம் சார்ந்த எல்லா கருத்துகளும். அதைதான் உழைக்கும் மக்களுக்கான பத்திரிக்கையும் செய்யுமென்றால் அவை யார் நலனுக்கானது அவர்களே சொல்லட்டும்.

ஆங்கிலேயரின் ஆட்சி முறையானது இந்திய சமூகத்தில் சிறிது சஞ்சலத்தை ஏற்படுகிறது. அதாவது அரசியலில் ஜனநாயகத்தையும் சமூகத்தில் சமத்துவ உணர்வையும் சிந்தனையில் சமய சார்பற்ற முறைகளும் அறிமுகப்படுத்தியது.

ஐரோப்பிய சமூகங்களில். முதலாளிய வளர்ச்சி அந்த நாடுகளின் சுய தேவையை அடிப்படையாக கொண்டு அங்குள்ள நிலஉடமை முறையை அழித்து உருவாயிற்று. ஆனால் இந்தியாவில் ஏற்பட்ட முதலாளிய வளர்ச்சி, அன்னிய வளர்ச்சி வல்லரசுகளின் நலன்களுக்காக ஏற்பட்டதனால் அது நில உடமை முறையை முற்றாக அழித்து விடாமல் ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்ப திரித்து கொண்டது. எனவே ஐரோப்பிய நாடுகளில் கண்ட ஜனநாயக சமத்துவ உணர்வு சமய சார்பற்ற சிந்தனையை நாம் இங்கு அப்படியே பொருத்துக்கான இயலாது.

அதனால் நம்மில் ஆம் நமது சமூகத்தில் காணும் நடைமுறைகளிலிருந்து இதனை தேடுவோம்.

நம் சமூகத்தில் காணும் சமய சிந்தனையின் வரலாற்றைத் தொகுத்துக் காணும் பொழுது நம் சமயம் சார்ந்த கருத்துகள் ஏன் இப்படி இருக்கின்றது என்பதனை புரிந்துகொள்ள முடியும். அதற்கான காரணங்களை கீழ்க்காணும் சில வகை முடிவுக்கு வர வேண்டியதாக உள்ளது.

சமுதாயத்திலுள்ள மேலாதிக்கம் செய்யும் எல்லா கருத்துகளும் ஆளும் வர்க்கத்தின் நலன் சார்ந்த கருத்துகளே. சாதிய கருத்தாக்கட்டும் சமூக நடைமுறையில் உள்ள பலவற்றை சமய சாத்திரங்களின் அடிப்படையில் இருப்பதோடு சமய நம்பிக்கைகளையும் கட்டிக் காத்து கொண்டிருக்கும் கருத்துருவாக்கமே.

1). நமது பண்டிகைகள்,விழாக்கள், சடங்குகள் அனைத்தும் சமயம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. ஏன் பொங்கல் கூட ஒரு சமயத் திருவிழாவாக ன்று மாறி கொண்டுள்ளதைக் காணலாமே?

2). நம்ம குழந்தை வளர்ப்பு முறையில் தொடங்கி வாழ்க்கை கல்வி எல்லாவற்றிலும் பகுத்தறிவு சிந்தனை அறுபட்டு மூட நம்பிக்கையின் அடிப்படையிலேயே இருக்கின்றன. இது குழந்தைகளின் அச்சத்தை பயன்படுத்திக் கொள்வதற்காகவும். மக்கள் பிரச்சினைகளை தீர்க்க இயலாத சில பிரச்சினைகள் பூதகரமாக தலைவித்தாடுவதை தீர்க எதையையும் செய்யாமல் மறைத்து மாயையில் ஆழ்த்தும் மத நம்பிக்கைகள் காலம் தோறும் தொடர்கிறது.

3).பாரம்பரியமாக நமக்கு கதைகள்,பல மொழிகள், நம்பிக்கைகள், முன்னோர்களின் அனுபவங்கள் ஆகியவையின் மூலம் வழங்கப்பட்டு உறுதிப்படுத்தும் சிந்தனை முறை நம்மை இந்த சமூக சட்டகத்துக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளது. நம் கல்விமுறை முழுமையாக சமயத்தில் இருந்து விடுபடாது அறிவியல் சிந்தனை அற்று மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே உள்ளது.

இது போல சமய சிந்தனை முறை, நமது சமூக அடிப்படைகளாக இருக்கின்றன. அதேபோல சமயம் சாராத சிந்தனை முறையின் வளர்ச்சி சில சமூக அடிப்படைகள் இருக்க வேண்டும், இருந்தாக வேண்டும்.

சமய சிந்தனை ஒரு கருத்து என்ற அளவில் மட்டுமே இருந்து வளரவில்லை. அவற்றுக்கான சமூக அடிப்படைகள் உண்டு. நம் தமிழ்ச் சமூகத்தில் சமூக அடிப்படைகள், சமயம் சாராத சிந்தனையை வளர்க்க முட்டுக்கட்டையாக இருந்திருக்கின்றன. பண்டைய தமிழகத்தில் மட்டுமல்லாது எல்லா தேசத்திலும் சமயம் சமூகத்தோடு பின்னிப் பிணைந்து இருந்ததை காணலாம். அதில் தமிழ் சமுதாயமும் விதிவிலக்காக இல்லை. இங்கு ஓரளவு செழித்து வளரத் தொடங்கிய சமணத்தையும், பௌத்தத்தையும் சைவ வைணவ இணைப்பு முறியடித்தது. மக்களுக்கு இடையிலான கருத்து மோதல்,சமய தத்துவத்துக்கு இடையிலானதாகவும் மோதல்கள், வெளிப்பட்டன. இவற்றுக்கு அடிப்படையாக இருந்தது நிலஉடமை முறையும் அதற்கான அரசு அதிகார முறையும் ஆகும். நிலம்,கோயில், கிராமிய மைய, அரசு அதிகாரம் ஆகியவற்றை மட்டுமே சுற்றி வாழ்க்கை அமைந்தது. நில உடைமை முறையிலும் குறிப்பிடத்தக்க எவ்வித மாற்றங்களும் இல்லை. உற்பத்தி முறை ஒரே விதத்தில் அமைந்தது. புதிய புதிய தொழில்நுட்பங்கள் மலர்வதற்குரிய வாய்ப்புகள் இல்லை. நீண்ட காலமாக. கீழ்த்திசை நாடுகள் அரசு அதிகாரத்தின் கீழ் இது போல் இருந்தது என்று ஐரோப்பிய ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

இந்த உற்பத்தி முறைக்கும் அரசுமுறைக்கும் ஏற்பவே கருத்துருவாக்கம் அமைந்தது. அது சமய நெறியிலேயே அமைந்தது. பன்னிருதிருமுறைகள் திவ்யபிரபந்தம் காப்பியங்கள், புராணங்கள், சமய மற்றும் சைவ சமய சாத்திரங்கள், சங்கரர், இராமானுஜர் மத்துவர் ஆகியோரின் தத்துவங்கள் என எல்லாவற்றையும் கண்டால் அவை சமய அடிப்படையில் அமைந்தவை ஆகும். எனினும் இக்காலத்திலும். இதற்கு மாற்றான கருத்துகள் இதற்கு எதிரான அறிவு சார்ந்த சில கருத்துகள் எடுத்துக்காட்டுகள் உள்ளன. இருந்தும் சமயம் சாராத சமய எதிர்ப்பு நூல்கள் நமக்கு நேரடியாகக் கிடைப்பதில்லை. அவை மறுப்பு நூல்கள் மட்டுமே கிடைப்பதை நாம் அரிதாக காணலாம்.

சிங்காரவேலரின் வழிவந்தவர்கள் அவரின் சமயம் சாரா கருத்துகளை கூட உள்வாங்காமை வருத்தத்தை அளிக்கிறது, நான் மார்க்சை அழைக்காமைக்கு காரணம் இவர்கள்தான் மார்க்சை கைவிட்டு பல காலம் ஆகிவிட்டதே என்ன செய்ய?














No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்