மார்க்சியம் மட்டுமே தீர்வு

மார்க்சியம் மட்டுமே தீர்வு

சாதிய பிரச்சினையா?, பெண்ணிய ஒடுக்குமுறையா?, தேசிய இனப்பிரச்சினையா?... பல்வேறு சுரண்டல்முறை அடக்குமுறை ஒடுக்குமுறை எல்லாவற்றிக்கும் காரணம் நாம் வாழும் சமூக அமைப்புதான். ஆக இந்த எல்லாவித பிரச்சினையிலிருந்து விடுபட மார்க்சியம் வழிகாட்டுகிறது அதற்கான நீண்ட நெடிய பணியினை அவை வகுத்தளித்துள்ளது. அதனை புரிந்து நமக்கேற்ற சூழலுகேற்ப பயன்படுத்தும் கடமை உண்மையான மார்க்சிய லெனினியவாதிக்கு புரிந்திருக்க வேண்டும்
அதனை புரிந்துக் கொள்ளாமல் தனித்தனி பிரச்சினைக்கு தனித்தனி தீர்வு என்பது நோயால் துன்புற்றுக் கொண்டிருக்கும் ஒருவருக்கு நோயிலிருந்து விடிவிக்க மருத்துவம் பார்க்காமல் நோயை குறைக்கூறிக் கொண்டிருந்தால் நோய் போய் விடுமா? நோயை தீர்பதற்கு மருந்து ஒவ்வொரு நோய்கும் காரணமான அதன் ஆணி வேரை பிடிங்கி எறிய வேண்டும் அதற்குதான் மார்க்சியம் வழி காட்டுகிறது மற்றது அதில் உள்ள குறைகளை மட்டும் பேசி காலம் கடத்துகிறது....
சமூக மாற்றத்திற்கான இயக்கம் என்பது வர்க்கப் போராட்டமே. மானுட வரலாற்றை இயக்கும் சக்தியாகவும் இதே உள்ளது. வர்க்கம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே வர்க்க போராட்டமும் துவங்கி விட்டது. இன்று பொருளாதாரப் போராட்டத்திற்காக போராடிக் கொண்டிருப்பது தொழிற்சங்ககளின் பணியின் ஒரு பகுதி தான் அதனூடாக அரசியல் போராட்டத்தை நடத்த தேவை உள்ளது. அரசியல் போராட்டத்தை சரியான முறையில் கொண்டு செல்வதற்கு தத்துவ போராட்டமும் தேவைப்படுகிறது. இங்குள்ள சுரண்டல் முறை அடக்குமுறை ஒடுக்கு முறைக்கு தீர்வு என்பது பலாத்காரமான சமூகப் புரட்சி ஒன்றின் மூலம் தான் சாத்தியம். இதனைப் புரிந்து கொள்ள கவிஞர் பட்டுக்கோட்டையின் பாடலைப் பாருங்கள் "தனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா " இதிலிருந்து விடுபடாமல் நாம் தத்துவ போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தை இன்னும் நமது விடுதலைகான போராட்ட வடிவங்களை புரிந்து கொள்ளாமல் புரட்சியோ சமுக மாற்றமோ சாத்தியம் அல்ல.
உலகம் முழுவதிலும் வர்க்க வேறுபாடுகளை ஒழித்து வர்க்கமற்ற உலகை படைப்பதுதான் கம்யூனிஸ்டுகளின் இலக்கு. இந்த இலக்கை அடைவதற்கு பாட்டாளி வர்க்கத்திற்கும் பாட்டாளிவர்க்க கட்சியைச் சேர்ந்த கம்யூனிஸ்டுகளுக்கு அரசியல் அதிகாரம் தேவை. அரசியல் அதிகாரம் இல்லாமல் யாராலும் சமூகத்தை மாற்ற இயலாது. தற்போது யார் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கிறதோ அவர்கள்தான் சமூகமாற்றத்திற்கு எதிராக இருக்கிறார்கள்.
அவர்களின் கையில் உள்ள அரசின் பலத்தினால்தான் உழைக்கும் ஏழை எளிய கோடான கோடி மக்களை சில ஆயிரம் பெரும் முதலாளிகளுக்கும் ஏகாதிபத்திய பன்நாட்டு கார்ப்ரேட்டுகளுக்காகவும் பெருவாரியான உழைக்கும் மக்களை சுரண்டி அடக்குமுறைசெய்து உள்ள வர்க்க சமூகத்தை பாதுகாக்கிறார்கள். இவர்களுக்கான அரசு இல்லாமல் இவர்களால் மக்களை சுரண்டவும் முடியாது, வர்க்க சமூகத்தை பாதுகாக்கவும் முடியாது. ஆகவே வர்க்கமற்ற சமூகத்தை படைக்கவிரும்பும் கம்யூனிஸ்டுகள் நிலவுகின்ற அரசமைப்பை முதலில் தகர்க்க வேண்டும். அதனிடத்தில் வர்க்கமற்ற சமூகத்தை உருவாக்கும் லட்சியத்தைக் கொண்ட அரசை அதாவது பாட்டாளிவர்க்க அரசை உருவாக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்து செயல்படுபவரே உண்மையான கம்யூனிஸ்டாவார். அதற்கு நீண்ட நெடிய போராட்டம் உள்ளது. அவை அரசியல் தத்துவ பொருளாதார போராட்ட வடிவங்களாக இருந்தாலும் இறுதி லட்சியம் பாட்டாளி வர்க்க தலைமையில் இன்றுள்ள சுரண்டல் அடக்குமுறை ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டி ஏற்றதாழ்வற்ற வர்க்க பேதமற்ற சமூகம் படைப்பதே... அதற்கு ஆளும் வர்க்கம் பின் அணி திரள்வதல்ல ஆளும் வர்க்க கொடூரங்களுக்கு முடிவுகட்ட உழைக்கும் ஏழை எளிய மக்களை அணி திரட்டி இந்த சமூகத்தை மாற்றி அமைப்பதே தோழர்களே..
தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் தற்போதுள்ள முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை உள்ளவாறே எடுத்துத் தமது நலன்களுக்காக உபயோகிப்பதும் சாத்தியமில்லை. அரச இயந்திரம் முதலாளித்துத்தின் நலன்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டது. அதைத் தொழிலாள வர்க்க நலன்களைப் பாதுகாக்கப் பயன்படுத்த இயலாது. அதனால் தான் மார்க்ஸ், லெனின், மாசேதுங் ஆகியோர் முதலாளித்துவ அரசாங்க இயந்திரம் நிச்சயமாத நொருக்கப்படல் வேண்டும் என வலியுறுத்திக் கூறினர். அதனைச் சீர்திருத்தம் செய்யவோ அல்லது அதன் வரையறைக்குள் அமைப்பில் சீர்திருத்தம் செய்யவோ முடியாது. முதலாளித்துவ அரசு இயந்திரம் இருக்கவேண்டும் அல்லது பாட்டாளிவர்க்க அரசு இயந்திரம் இருக்க வேண்டும். இவற்றிற்கு இடைப்பட்டதாக ஒன்றும் இருக்க முடியாது. அதனால்தான் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பலாத்காரத்தினால் நொருக்கி அதனிடத்தில் பாட்டாளிகளின் அரசு இயந்திரத்தை தொழிலாளிவர்க்கமும் அதன் நேச அணிகளும் ஏற்படுத்தவேண்டியது பொறுப்பென மார்க்சிய - லெனினிய - மாவோ சிந்தனை போதிக்கின்றது. பாட்டாளிகளின் அரசாங்க இயந்திரத்தை மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என விவரித்தார்.இந்தக் கடமையைச் சரிவரச் செய்த புரட்சிகள் வெற்றி பெற்றன. அக்டோபர் புரட்சியும் சீனப் புரட்சியும் இதற்கு உதாரணங்களாகும். இந்த இரண்டிலும் பழைய அரசியல் அதிகாரத்தின் அழிவில் புதியது பெறப்பட்டது. பழைய அரசு இயந்திரத்தை அல்லது அதன் ஒரு பகுதியையாவது உபயோகிக்கும் முயற்சி நடைபெறவில்லை. ஜேர்மன் ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புக்கெதிராகப் போராடி நகரத்தைக் காப்பாற்றுமாறு லெனின் கிராட் தொழிற்சாலைகளிலிருந்த தொழிலாளர்களுக்கு லெனின் அறைகூவல் விடுத்து துப்பாக்கிகளை அவர்களுக்கு வழங்கியதன் மூலமே சோவியத் செஞ்சேனை உருவாகியது. அவர்கள் பழைய நீதித்துறையை தொடர்ந்தும் வைத்திருக்கவோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பற்றியோ அதிகம் புலம்பிக்கொண்டிருக்கவில்லை. சீனாவைப் பொறுத்தமட்டில் விடயம் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகவுள்ளது. சீனாவை முழுமையாக விடுதலை செய்யுமுன்னர் சீனக் கம்யூனிஸ்டுகள் சீனப் புரட்சியின் தொட்டில் எனஇன்று அழைக்கப்படும் யெனானில் 13 வருடங்கள் தோழர் மாவோ தலைமையில் தளமாக செயல்பட்டது. புதிதாக விடுதலை செய்யப்பட்ட பிரதேசங்களின் ஆளுமை மேற்கொள்ளும் பொருட்டு மக்கள் விடுதலைச் சேனையின் பின்னால் செல்வதற்காக ஒரு புதிய பாட்டாளி வர்க்க பரிபாலன அமைப்பை இங்கே பயிற்றுவித்துக் கட்டி அமைத்தனர். இது ஒரு முழுமையான புதிய பரிபாலன அமைப்பு. அது பழைய அமைப்புடன் எந்தவித தொடர்பையோ, உறவையோ வைத்துக்கொளாதது மட்டுமல்ல, பழைய ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரத்தை அடித்து நொருக்குவது என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டது..புரட்சியின் வெற்றிக்கு முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரம் அடித்து நொருக்கப்படுவது எவ்வளவு அவசியமோ, அதே போல புதிய பாட்டாளி வர்க்க அரசதிகாரம் நிலைத்து நிற்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியமாகும். லெனின் காலத்தில் அராஜக வாதிகள் எனப்பட்ட ஒரு பகுதியினர் முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசு அதிகாரத்தை புரட்சிமூலம் நிர்மூலமாக்கியபின் ஒரு பாட்டாளி வர்க்க அரசதிகாரம் வேண்டியதில்லை எனக் கூறினர். இந்தக் கோட்பாட்டின் பிரயோசனமற்ற தன்மையை லெனின் தனது பிரசித்தி பெற்ற “அரசும் புரட்சியும்” என்ற நூலின் ஒரு பகுதியில் விமர்சித்திருக்கின்றார். சந்தேகத்திற்கு உரிய வகையில் இந்தக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் கிட்டத்தட்ட ஒருவருமே இல்லையெனக் கூறலாம். ஆனால், நாம் பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகார உருவத்தில் முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் இடத்திற்கு வர வேண்டும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.. லெனின் குறிப்பிட்டதுபோல, வெற்றியடைந்த சகல புரட்சிகளும் சர்வாதிகாரத்தால் பின் தொடரப்பட்டன. ஏனெனில் தோற்கடிக்கப்பட்ட வர்க்கம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதும் இல்லை அல்லது இசைந்து போனதும் இல்லை. அது எப்பொழுதும் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக சதி செய்தும், சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கும். இம்மாதிரியான சகல முயற்சிகளும் ஓர் உருக்குப் போன்ற சர்வாதிகாரத்தினால் மட்டுமே அடக்கப்பட முடியும். அதனால்தான் தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை அழித்ததும் அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் தோற்கடிக்கப்பட்ட வர்க்கங்களினால் தூக்கியெறியப்படாமல் இருக்கவும், புரட்சியைப் பாதுகாக்கவும் முடியும். இதைச் செய்யத் தவறினால் புரட்சியின் வெற்றி பலவீனமடையும்.
eacti
May be an image of map and text
Like
Comment
Share
Facebook

 










No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்