1. 1951இல் அஜய் கோஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட கட்சித் திட்டம் கொள்கை அறிக்கை செயலுத்தி வழி ஆகிய ஆவணங்கள் பி.டி. ரணதிவேயின் வழியையும் சீன பாதையும் நிராகரித்தது
3. நேருவின் வெளிநாட்டுக் கொள்கையை பாராட்டி அதை வலுவடைய செய்வதற்கான தனது முழு ஆதரவை 1955 ஜுனில் கூடிய மத்தியக் குழு பெரும்பான்மையாக தீர்மானம் நிறைவேற்றியது
4. நில பிரபுத்துவத்துக்கும் முதலாளித்துவத்திற்குமான முரண்பாடு கூர்மையடைவதாக காரணம் காட்டி அதன் அடிப்படையில் ஒரு ஜனநாயக முன்னணியை கட்டுவதற்கான திட்டத்தை முன்வைத்தது.
5. கட்சியின் பாலக்காடு அமிர்தசரஸ் விஜயவாடா பேராயங்கள் கட்சியை முற்றிலும் ஒரு பாராளுமன்ற வாத முதலாளிய சீர்திருத்தவாத கட்சியாக மாற்றி அமைக்கும் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.
6. இந்த நேரத்தில் சர்வதேச ரீதியில் ரஷ்ய திரிபுவாதத்தை சமாதான சகவாழ்வு சமாதான போட்டி சமாதானம் மாற்றம் என்ற வர்க்க சமரசக் கொள்கைகளை உயர்த்தி பிடித்து தேசிய சர்வதேச கொள்கைகளின் வர்க்க போராட்டக் கொள்கைகளை கைவிட்டது.
7. இந்திய சீன எல்லைப் பிரச்சனையில் சீன எதிர்ப்பு தேசிய வெறிக் கொள்கையை பின்பற்றியது.
8. எனினும் வலது சந்தர்ப்பவாத வர்க்க சமரச கொள்கைக்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் முற்போக்கு பிரிவுடன் பாராளுமன்ற கூட்டு முதலாளி சீர்திருத்தம் சமரச பாதையை பின்பற்றுவதை ஆதரிப்பது என்ற கொள்கையும் நவீன ரஷ்ய திரிபுவாத கொள்கைகளை ஆதரிப்பதற்கும் இந்திய சீன எல்லை பிரச்சினைகளில் பின்பற்றப்பட்ட தேசிய வெறிக் கொள்கைக்கும் கட்சிக்குள் எதிர்ப்புகள் இருந்தன இதன் தவிர்க்க முடியாத விளைவாக விஜயவாடா பேராயத்திற்குப் பின் 1964 கட்சி பிளவுக்கு உள்ளாகி இ, பொ க (மா) தோன்றியது.
9. 1964 இல் ஏற்பட்ட பிளவுக்கு பின் கொல்கத்தாவில் கூடிய கட்சி பேராயம் தேசிய சர்வ தேசிய திரிபுவாதங்களை எதிர்த்து போராடிய பொதுவுடமைவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தியது.
10. அதே நேரத்தில் அதை ஆண்டில் சர்வ தேசிய திருத்தல் வாதத்தை உயர்த்தி பிடித்தவர்கள் ஏழாவது பேராயத்தை கூட்டி மேலும் தனது வர்க்க சமரச பாதை முன் எப்போது விட உறுதிப்படுத்திக் கொண்டது.
No comments:
Post a Comment