ஆசான் எங்கெல்ஸ் கூறியதை கூறா இவர்களை என்ன சொல்ல?

சில நாட்களுக்கு முன்னர் ஒரு கருத்தரங்கில் அதன் முன்னணி தோழர் மூச்சுக்கு முன்நூறுதரம் எங்கெல்ஸ் எங்கெல்ஸ் என்றார். ஆனால் மார்க்சிய ஆசான் எங்கெல்ஸ் விளக்கி உள்ள "குடும்பதம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" நூலுக்கும் அவரின் விளக்கதிற்கும் பொருத்தப்பாடே இல்லை. மேலும் இது போன்ற ஒரு ஆய்வை இதுவரை எந்த மார்க்சியவாதியும் செய்யவில்லை என்று மார்தட்டிக் கொள்வது வேறு.

அதுபோன்ற தோழர்கள் மார்க்சியம் எனும் கடலில் அவர்களுக்கான பகுதியை ஒரு பக்கமாக புரிந்துக் கொண்டு மார்க்சியத்தையே மறுக்கும் அளவிற்கு சென்று விடுகின்றனர். ஏனெனில் அவர்களின் நோக்கம் சமூக பிரச்சினைகளை பேசுவதோடு சரி இதனை மாற்றி அமைப்பதை பற்றி

துளியும் அக்கரை இன்மையால் மார்க்சியத்தை வெட்டி சுருக்கி தன் தேவையைபோல் மாற்றி பேசும் தந்திரம் மார்க்சிய வழிமுறைகளை வளர்க்க அல்ல என்பது திண்ணம்.

மார்க்சியம் என்பது சமூக விஞ்ஞானம், இச் சமூகத்தில் தனி சொத்தின் தோற்றம் அதன் தேவையை ஒட்டிய ஒவ்வொன்றும் எப்படி தோன்றியது என்பதனை விளக்கும் மார்க்சியம் மிகத் தெளிவாக ஒவ்வொன்றின் வளர்சியையும் அதன் இருபிற்கான காரணத்தையும் விளக்குவதோடு வர்க்க அரசை வர்க்க மற்ற சமூக தேவைக்கு எப்படி பயன்படுத்திக் கொள்வது அதேபோல் குடும்ப அமைப்பில் உள்ள ஏற்றதாழ்வை இல்லாதொழிப்பது எப்படி என்று ஆசான் மிகத் தெளிவாக விளக்கி இருப்பார்.

முழு நூல் கீழே பிடிஎப்பில்(PDF) தேவைப்படுவோர் வாசிக்க...

பரிணாம வளர்ச்சியைப் பற்றி டார்வின் கண்டுபிடித்தது, உபரி மதிப்பைப் பற்றி மார்க்ஸ் கண்டுபிடித்தது ஆகியவற்றிற்கு இணையாக ஆதிகாலத்தில் தாய் உரிமை குலம் இருந்தது என்ற கண்டுபிடிப்பை எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.


இந்திய புராண, இதிகாசங்களில் காணப்படுவதை “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற இந்த நூலில் காணப்படும் ஆய்வுமுறையின் வழியில் ஆராயந்தால், மகாபாரதத்தில் காணப்படும் திரௌபதியை மணந்த ஐவர்களின் கதையை அந்த காவியக் கண்ணோட்டத்தில் அணுகாமல், திபெத்தில் இன்றுவரையிலும் காணப்படுகின்ற பலகணவர் முறையின் மூலம் விளங்கிக் கொள்ள முடியும் அதற்கு ஆய்வுமுறை கண்ணோட்டம் மார்க்சியமாக இருந்தால்.
இனி நூலின் முன்னுரையில்...

குடும்பம்‌, தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின்‌ தோற்றம்‌

நூல்‌ அறிமுகம்‌

 “குடும்பம்‌, தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின்‌ தோற்றம்‌” என்ற இந்நூலை பி. எங்கெல்ஸ்‌ 1884ஆம்‌ ஆண்டு மார்ச்‌ இறுதி முதல்‌ மே இறுதி வரையிலான இரண்டே மாதங்களில்‌ எழுதினார்‌. மார்க்சின்‌ கையெழுத்துப்‌ பிரதிகளைப்‌ புரட்டி பார்த்த பொழுது எங்கெல்ஸ்‌, முற்போக்கு அமெரிக்க விஞ்ஞானி லூ. ஹெ. மார்கன்‌ எழுதிய பண்டைக்காலச்‌ சமூகம்‌ என்ற நூலின்‌ சுருக்க குறிப்பைக்‌ கண்டுபிடித்‌ தார்‌. அதை 1880--1881இல்‌ மார்க்ஸ்‌ எழுதியிருந்தார்‌. அதில்‌ மார்க்சின்‌ பல விமர்சன குறிப்புகளோடுகூட சொந்த கருத்துகளும்‌, பிற நூல்கள்‌, கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்ட கூடுதல்‌ விவரங்களும்‌ இடம்‌ பெற்றிருந்தன. அச்சுருக்க குறிப்பைப்‌ படித்து, அது மார்க்சும்‌ தானும்‌ சேர்ந்து உருவாக்கிய வரலாற்றுப்‌ பொருள்முதல்வாதக்‌ கருத்தையும்‌ பூர்விக சமூதாயம்‌ பற்றிய தம்‌ கண்ணோட்‌ டங்களையும்‌ ஊர்ஜிதப்படுத்துவதைக்‌ கண்ட எங்கெல்ஸ்‌, மார்க்சின்‌ குறிப்புகளையும்‌ மார்கனின்‌ நூலில்‌ அடங்‌ தியுள்ள ஒரு சில முடிவுகள்‌, உண்மை விவரங்களையும்‌ பரவலாகப்‌ பயன்படுத்தி ஒரு தனி நூலை எழுதுவது அவசியம்‌ என்ற முடிவிற்கு வந்தார்‌. இது மார்க்ஸ்‌விட்டுச்‌ சென்ற ஒரு பணியைச்‌ செய்து முடிப்பதாக அமையுமென்று எங்கெல்ஸ்‌ கருதினார்‌. இந்நூலை எழுதும்‌ பொழுது, கிரீஸ்‌, ரோம்‌, பண்டைய அயர்லாந்து, பண்டைய ஜெர்மானியர்கள்‌ பற்றியெல்லாம்‌ தான்‌ நடத்‌திய ஆராய்ச்சிகளின்‌ மூலம்‌ கிட்டிய ஏராளமான விவரங்‌ களையும்‌ எங்கெல்ஸ்‌ பயன்படுத்தினார்‌.

மார்க்சிய இலக்கியத்‌திலேயே முதன்முதலாக எங்‌கெல்ஸ்‌ இந்நூலில்‌ குடும்பத்தின்‌ பரிணாம வளர்ச்சியை வரலாற்றுப்‌ பொருள்முதல்வாத நோக்கு நிலையிலிருந்து விளக்குகிறார்‌. குடும்பம்‌ என்பதை ஒரு வரலாற்று கருத்‌தினமாக அணுகும்‌ எங்கெல்ஸ்‌, அதன்‌ பல்வேறு வடிவங்‌களுக்கும்‌ பண்டைய குழுமணத்திலிருந்து துவங்கி, தனியுடைமை தோன்றிய பின்‌ நிலைபெற்ற ஒருதாரக்‌ குடும்பம்‌ வரை--சமுதாய வளர்ச்சியின்‌ பல்வேறு கட்டங்‌களுக்கும்‌ இடையிலான அங்கக ரீதியான தொடர்பையும்‌, இந்த வடிவங்கள்‌ உற்பத்திமுறையின்‌ மாற்றங்களை எப்படி சார்ந்தவை என்பதையும்‌ சுட்டிக்காட்டுகிறார்‌. உற்பத்திச்‌ சக்திகள்‌ வளர வளர சமுதாய அமைப்பின்‌ மீது இரத்த உறவுமுறையின்‌ தாக்கம்‌ எப்படி குறைந்து வந்தது, தனியுடைமை வெற்றி பெற்ற பின்‌ “சொத்‌துடைமை அமைப்பு குடும்ப அமைப்பின்‌ மீது முழுமையாக ஆதிக்கம்‌ செலுத்தும்‌''* சமுதாயம்‌ எப்படித்‌ தோன்றியது என்றெல்லாம்‌ காட்டுகிறார்‌.

 பூர்ஷ்வாக்‌ குடும்பத்தை எங்கெல்ஸ்‌ கடுமையாக விமர்சிக்கிறார்‌. தனியுடைமை ஆதிக்கம்‌ செலுத்தும்‌ சூழ்நிலையில்‌ பெண்களுடைய சமமின்மையின்‌ பொருளாதார அடிப்படையை சுட்டிக்‌ காட்டும்‌ அவர்‌, முதலாளித்துவ உற்பத்தி முறை ஒழித்துக்‌ கட்டப்பட்டால்தான்‌ பெண்கள்‌ உண்மையான விடுதலையை அடைய முடியும்‌ என்று கூறுகிறார்‌. சோஷலிச சமுதாயத்தில்தான்‌, பெண்கள்‌ சமூக உற்பத்தியில்‌ பரவலாக ஈடுபடுத்தப்படுவதையடுத்து, சமுதாய வாழ்க்கையின்‌ எல்லா துறைகளி லும்‌ பெண்களுக்கு முழு சமத்துவம்‌ அளிக்கப்படும்‌, வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள்‌ விடுவிக்கப்படுவர்‌, இப்‌ பணியை சமுதாயம்‌ மேன்மேலும்‌ அதிகமாக தான்‌ எடுத்துக்‌ கொள்ளும்‌, அப்பொழுதுதான்‌ முழு சமத்துவம்‌, பரஸ்பர மதிப்பு, உண்மையான அன்பு ஆகியவற்றின்‌ அடிப்படையிலான உயரிய வகையான புதிய குடும்பம்‌ நிலைபெறும்‌ என்றார்‌ எங்கெல்ஸ்‌. பல்வேறு வகையான சொத்துடைமை வடிவங்கள்‌ தோன்றி, வளர்ந்ததைப்‌ பற்றி ஆராயவும்‌, சமுதாய (* இப்பதிப்பில்‌ பக்கம்‌ 12ஐ பார்க்க. ப-ர்‌.) அமைப்பின்‌ பல்வேறு வடிவங்கள்‌ எப்படி இவற்றைப்‌ பொறுத்துள்ளன என்பதை ஆராயவும்‌ நூலின்‌ கணிசமான பகுதியை எங்கெல்ஸ்‌ ஒதுக்குகிறார்‌. தனியுடைமை அமைப்பு ஒன்றும்‌ என்றென்றைக்கும்‌ நிரந்தரமானதல்ல, பூர்விக வரலாற்றின்‌ நீண்ட காலகட்டத்தில்‌ உற்பத்திச்‌ சாதனங்கள்‌ பொதுவுடைமையா ௧ இருந்தன என்று எங்‌கெல்ஸ்‌ காட்டுகிறார்‌. உற்பத்திச்‌ சக்திகள்‌ வளர்ந்து, உழைப்பின்‌ உற்பத்தித்‌ திறன்‌ அதிகரிப்பதையடுத்து பிறருடைய உழைப்பின்‌ விளையொருளை அபகரிக்கும்‌ வாய்ப்பு ஏற்படுகிறது, எனவே னியுடைமையும்‌ மனினை மனிதன்‌ சுரண்டுவதும்‌ தோன்றுகின்றன, சமுதாயமானது பகைமுரண்பாட்டு வர்க்கங்களாகப்‌ பிரிகிறது என்கிறார்‌ எங்கெல்ஸ்‌. இதனுடைய முதல்‌ விளைவுதான்‌ அரசின்‌ தோற்றமாகும்‌.

அரசின்‌ தோற்றம்‌ மற்றும்‌ அதன்‌ சாரம்‌ பற்றிய பிரச்சனைதான்‌ எங்கெல்சின்‌ நூலில்‌ மையப்‌ பொருளாகும்‌. இப்பிரச்சினையை எங்கெல்ஸ்‌ பன்முக ரீதியில்‌ ஆராய்ந்ததானது அரசைப்‌ பற்றிய மார்க்சியப்‌ போதனையை உருவாக்குவதில்‌ ஒரு முக்கியக்‌ கட்டமாக அமைந்தது. இந்த நோக்கில்‌ இது லுயீ போனப்பார்ட்டின்‌ பதினெட்டாம்‌ புரூமேர்‌, பிரான்சில்‌ உள்நாட்டுப்‌ போர்‌ என்ற மூலச்சிறப்புள்ள மார்க்சின்‌ நூல்களுடனும்‌ எங்கெல்ஸ்‌ எழுதிய டூரிங்குக்கு மறுப்பு நூலுடனும்‌ ஒரே வரிசையில்‌ நிற்கிறது. அரக என்பதை வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாக சித்தரித்து, இது ஏதோ எல்லா மக்களின்‌ நலன்களையும்‌ சமமாகப்பாதுகாப்பதாக விளக்கமளிக்கும்‌ விஞ்ஞானிகளுக்கு எங்கெல்சின்‌ நூல்‌ க்க பதிலடி தருகிறது. பண்டைய ஏதன்ஸ்‌, ரோமாபுரி மற்றும்‌ ஜெர்மானியர்களிடையே அரசு தோன்றிய உதாரணங்‌களின்‌ அடிப்படையில்‌ எங்கெல்ஸ்‌, அரசு என்பது தான்‌ பிறக்கும்‌ தருணத்திலிருந்தே, எந்த வர்க்கங்களின்‌ கரங்‌களில்‌ உற்பத்திச்‌ சாதனங்கள்‌ உள்ளனவோ அந்த வர்க்கங்களின்‌ ஆதிக்க கருவியாகத்‌ திகழுகிறது என்று தெட்டத்‌ தெளிவாயும்‌ ஆணித்‌ தரமாயும்‌ மெய்ப்பித்தார்‌. தன்னுடைய நூலில்‌ எங்கெல்ஸ்‌, அரசின்‌ பல்வேறு திட்ட வட்டமான வடிவங்களை, உதாரணமாக, முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள்‌ ஜனநாயகத்தின்‌ உயர்‌ வடிவ மாக சித்தரிக்கும்‌ பூர்ஷ்வா-ஜனநாயகக்‌ குடியரசை ஆராய்கிறார்‌. இகச்குடியரசின்‌ வர்க்கத்‌ தன்மை ஜன நாயகப்‌ போர்வையின்‌ பின்‌ மறைந்துள்ள பூர்ஷ்வா - ஆதிக்கத்தின்‌ வடிவம்‌ என்கிறார்‌ எங்கெல்ஸ்‌.

நாடாளுமன்ற மாயைகள்‌ அத்தருணத்தில்‌ ஏற்‌கெனவே தொழிலாளர்‌ இயக்கத்‌ தலைவர்களில்‌ ஒரு சிலருக்கு இடையில்‌, குறிப்பாக ஜெர்மன்‌ சமூக-ஜன நாயகத்தின்‌ சந்தர்ப்பவாதிகளின்‌ மத்தியில்‌ பரவியிருந்தன. இதற்கெதிராக எச்சரித்த எங்கெல்ஸ்‌, மூலதனத்தின்‌ ஆதிக்கம்‌ நிலைத்திருக்கும்‌ வரை எவ்வித ஜனநாயக சுதந்‌ திரமும்‌ உழைப்பாளிகளுக்கு உண்மையான விடுதலையைப்‌ பெற்றுத்‌ தராது என்றார்‌. அதே நேரத்தில்‌, அவர்‌ இந்த ஜனநாயக சுதந்திரத்தை ஜனநாயக உரிமைகளை. பேணிக்‌ காத்து வளர்ப்பதில்‌ பாட்டாளிகளுக்குள்ள அக்கறையையும்‌ கோடிட்டுக்‌ காட்டினார்‌; இந்த உரிமைகள்‌, சமுதாயத்தைப்‌ புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்‌ கான விடுதலைப்‌ போராட்டத்திற்கு அதிகபட்சம்‌ அனுகூலமான சூழ்நிலைகளைத்‌ தோற்றுவிக்கும்‌. உற்பத்திச்‌ சக்திகள்‌ வளர வளர பொருளாயதச்‌ செல்வங்களின்‌ உற்பத்திமுறை மாறுகிறது; குறிப்பிட்ட ஒரு கட்டத்தில்‌ தனியுடைமை தோன்றி, சமுதாயம்‌ எதிரெதிர்‌ வர்க்கங்களாக பிளவுறுவது தவிர்க்க இயலாததாக, நியதியானகாக மாறுகிறது; முதலாளித்துவ சமுதாயத்தில்‌ உற்பத்திச்‌ சக்திகள்‌ மேற்கொண்டு வளர்ச்சியடையும்‌ பொழுது, தனியுடைமையும்‌ சுரண்டும்‌ வர்க்கங்‌ களும்‌ உற்பத்தியின்‌ வளர்ச்சிக்கு நேர்த்‌ தடைகளாக மாறுகின்றன என்பதை எல்லாம்‌ எங்கெல்ஸ்‌ இந்நூலில்‌ விளக்குகிறார்‌. இது பாட்டாளி வர்க்கப்‌ புரட்சியை தவிர்க்க இயலாததாக ஆக்குகிறது; மார்க்கம்‌ எங்கெல்‌சும்‌ பன்முறை சுட்டிக்காட்டியபடி, ‌ இப்புரட்சியின்‌ பொழுது பழைய பூர்ஷ்வா அரசு இயந்திரம்‌ உடைக்கப்‌ பட்டு, ஜனநாயகத்தின்‌ உயர்‌ வடிவமாயெ பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்‌ என்னும்‌ புதிய வகையான அரசு தோற்றுவிக்கப்படுகிறது. மூலச்சிறப்பான வடிவத்தில்‌ அரசைப்‌ பற்றி எங்கெல்‌ சால்‌ முன்வைக்கப்பட்ட மார்க்சியக்‌ கருத்தமைப்பு புதிய வரலாற்று சகாப்தச்‌ சூழ்நிலைகளுக்கேற்ப வி. இ. லெனினால்‌ அரசும்‌ புரட்யும்‌ என்ற நூலில்‌ பன்முக ரீதியில்‌ வளர்க்கப்பட்டது. 1890இல்‌, பூர்விக சமுதாய வரலாறு பற்றி புதிய விவரங்கள்‌ கிட்டியதையடுத்து; இந்நூலின்‌ புதிய பதிப்‌ பைத்‌ தயாரிக்கும்‌ பணியில்‌ எங்கெல்ஸ்‌ இறங்கினார்‌. இப்பணியில்‌ அவர்‌ நவீன நூல்கள்‌, கட்டுரைகள்‌ அனைத்‌ தையும்‌ படித்தார்‌, உதாரணமாக, ருஷ்ய விஞ்ஞானி ம.ம. கவலேவ்ஸ்கியின்‌ நூல்களைப்‌ படித்தார்‌, பூர்வாங்க வாசகத்தில்‌ பலவற்றைத்‌ திருத்தினார்‌, மாற்றினார்‌, கணிசமான கூடுதல்‌ விவரங்களை-—குறிப்பாக, நவீன புதைபொருள்‌, மானுடவியல்‌ ஆராய்ச்சிகளின்‌ பின்னணி யில்‌, குடும்பத்தைப்‌ பற்றிய அத்தியாயத்தில்‌ சேர்த்‌ தார்‌. இந்த மாற்றங்கள்‌, திருத்தங்களினால்‌ எங்கெல்சின்‌ முடிவுகள்‌ மாறவில்லை, இவை புதிய ஊர்ஜிதத்தைப்‌ பெற்றன, அவ்வளவே. மார்கனின்‌ நூலிலிருந்து எடுக்கப்‌ பட்ட ஒரு சில கருத்துகள்‌ (உதாரணமாக, பூர்விக வர லாற்றைப்‌ பற்றி மார்கன்‌ தரும்‌ காலவரையறுப்பு, அவர்‌ பயன்படுத்தும்‌ சொற்றொடர்கள்‌ போன்றவை) புதிய விஞ்ஞான தகவல்களின்‌ பின்னணியில்‌ சரிபார்க்கப்பட வேண்டும்‌ என்றாலும்‌ எங்கெல்சின்‌ நூலில்‌ குறிப்பிடப்‌ படும்‌ முடிவுகள்‌ பின்னரும்‌ தம்‌ முக்கியத்துவத்தை இழக்கவில்லை; இம்முடிவுகள்‌ சரியானவை என்று விஞ்ஞான வளர்ச்சி மெய்ப்பித்தது. எங்கெல்சுடைய நூலின்‌ திருத்தப்பட்ட, புதிய விவரங்களடங்கிய நான்காவது பதிப்பு 1891ஆம்‌ ஆண்‌டின்‌ இறுதியில்‌ ஷ்டுட்கார்ட்டில்‌ வெளிவந்தது, பின்னர்‌ இதில்‌ எவ்வித மாற்றங்களும்‌ செய்யப்படவில்லை; இந்த நான்காவது பதிப்பிற்காக எங்கெல்ஸ்‌ புதிய முன்னுரையை எழுதினார்‌. இந்த நூல்‌ 1891ஆம்‌ ஆண்டின்‌ 4வது ஜெர்மன்‌ பதிப்‌ பிற்கேற்ப, முதலாவது, நான்காவது பதிப்புகளுக்கு எழுதப்பட்ட முன்னுரைகளுடன்‌ வெளியிடப்படுகிறது.

முதற்‌ பதிப்புக்கு 1884இல்‌ எழுதிய முன்னுரை

ஓர்‌ அர்த்தத்தில்‌, பின்வரும்‌ அத்தியாயங்கள்‌ மார்க்ஸ்‌ விட்டுச்‌ சென்ற ஒரு பணியைச்‌ செய்து முடிக்கும்‌ வகை யில்‌ அமைந்தவையே. வரலாற்றைப்‌ பற்றித்‌ தன்‌ னுடைய எங்களுடைய என்று சில வரம்புகளுக்குட்பட்டு நான்‌ சொல்லக்‌ கூடும்‌- பொருள்முதல்வாத ஆராய்ச்சி யின்‌ மூலம்‌ தான்‌ கண்ட முடிவுகளின்‌ தொடர்பில்‌ மார்‌ கனது ஆராய்ச்சி விளைவுகளை மக்களுக்கு முன்பாக வைத்து அதன்‌ மூலம்‌ அவற்றின்‌ முக்கியத்துவம்‌ முழு வதையும்‌ தெளிவாக்க வேண்டும்‌ என்று மார்க்ஸ்‌ இட்ட மிட்டிருந்தார்‌. ஏனென்றால்‌ நாற்பது ஆண்டுகளுக்கு முன்‌ மார்க்ஸ்‌ கண்டுபிடித்திருந்த வரலாற்றுப்‌ பொருள்முதல்‌ வாதக்‌ கருத்தோட்டத்தைத்தான்‌ மார்கன்‌ தன்னுடைய வழியில்‌ அமெரிக்காவில்‌ மறுபடியும்‌ கண்டுபிடித்தார்‌. மார்கன்‌ அநாகரிகத்தையும்‌ நாகரிகத்தையும்‌ ஒப்பிட்டுப்‌ பார்த்த பொழுது மார்க்ஸ்‌ எந்த முடிவுகளைச்‌ செய்‌ தாரோ பிரதான விஷயங்களில்‌--அதே முடிவுகளுக்கு வருமாறு இந்தக்‌ கருத்தோட்டம்‌ செய்தது. மேலும்‌, ஜெர்மனியில்‌ அதிகார வர்க்கச்‌ சார்புள்ள பொருளிய லாளர்கள்‌ எப்படி பல ஆண்டுகளாக மூலதனம்‌ என்ற நூலிலிருந்து ஆர்வத்துடன்‌ திருடிய போதிலும்‌ அந்த நூலைப்‌ பற்றி விடாப்பிடியாக மெளனம்‌ சாதித்து அமுக்‌ கியும்‌ வந்தார்களோ, அதே மாதிரியாக இங்கிலாந்தில்‌வரலாற்றுக்கு முந்திய'' விஞ்ஞானத்தின்‌ சார்பாகப்‌ பேசியவர்கள்‌ மார்கன்‌ எழுதிய பண்டைக்காலச்‌ சமூகம்‌ என்ற நூல்‌* விஷயமாக நடந்து கொண்டார்கள்‌. காலஞ்‌ * Ancient Society, or Research in the Lines of Human Progress from Savagery through Barbarism io Civilization. By Lewis

சென்ற என்னுடைய நண்பர்‌ செய்ய முடியாமல்‌ போன பணிக்குப்‌ பதிலாக நான்‌ செய்திருக்னெற பணி அற்பமாகத்தான்‌ இருக்க முடியும்‌. மார்க்ஸ்‌ மார்கனுடைய நூலிலிருந்து விரிவான பகுதிகளை* எடுத்து அவற்றுக்கு விமர்சனக்‌ குறிப்புகளை எழுதியுள்ளார்‌. அவை எனக்கு முன்னால்‌ இருக்கின்றன. இந்நூலில்‌ சாத்தியமான இடங்‌ களில்‌ அவற்றை அப்படியே வெளியிட்டிருக்கிறேன்‌. பொருள்முதல்வாதக்‌ கருத்தமைப்பின்படி- கடைசி யாகப்‌ பார்க்கும்‌ யொழுது- உடனடி வாழ்க்கையின்‌ உற்பத்தியும்‌ புனருற்பத்தியுமே வரலாற்றில்‌ தீர்மான கரமான காரணியாகும்‌. ஆனால்‌ இது இருவகையான தன்மை கொண்டது. ஒரு பக்கத்தில்‌, வாழ்க்கைக்குத்‌ தேவையான சாதனங்களை உற்பத்தி செய்வது அதாவது உணவு, உடை, வீடு ஆகியவற்றையும்‌ அவற்றைப்‌ பெறு வதற்குத்‌ தேவையான கருவிகளையும்‌ உற்பத்தி செய்‌ வது; மறு பக்கத்தில்‌, மனிதர்களையே உற்பத்தி செய்வது _— அதாவது மனித இனத்தைப்‌ பெருக்குவது. ஒரு திட்ட வட்டமான வரலாற்றுச்‌ சகாப்தத்தைச்‌ சேர்ந்த, ஒரு திட்டவட்டமான நாட்டைச்‌ சேர்ந்த மக்கள்‌ எந்த சமூக அமைப்பின்‌ கீழ்‌ வாழ்ந்து வருகிறார்களோ அந்த சமூக அமைப்பை உற்பத்தியின்‌ இரண்டு வகைகளும்‌ கட்டுப்‌ படுத்துகின்றன. ஒரு. பக்கத்தில்‌, உழைப்பின்‌ வளர்ச்சி எந்தக்‌ கட்டத்தில்‌ இருக்கிறது என்பதும்‌ மறு பக்கத்தில்‌, குடும்பத்தின்‌ வளர்ச்சி எந்தக்‌ கட்டத்தில்‌ இருக்கிறது என்பதும்‌ இந்த அமைப்பைக்‌ கட்டுப்படுத்துகன்‌ றன. எந்த அளவுக்கு உழைப்பின்‌ வளர்ச்சி குறைவாக இருக்‌ கிறதோ, எந்த அளவுக்கு உழைப்பின்‌ உற்பத்தியளவு குறுகியதாகவும்‌ அதன்‌ காரணமாக சமூகத்தின்‌ செல்வ மும்‌ குறுகியதாகவும்‌ இருக்கிறதோ அந்த அளவுக்கு சமூக அமைப்பின்‌ மீது குலமரபு உறவுகள்‌ ஆதிக்கம்‌ பெற்றிருப் பதாகத்‌ தோன்றும்‌. எனினும்‌ குலமரபு உறவுகளை அடிப்‌படையாகக்‌ கொண்ட இந்தச்‌ சமூகக்‌ கட்டுக்கோப்புக்குள்‌ ளாகவே உழைப்பின்‌ உற்பத்தித்‌ திறன்‌ மேன்மேலும்‌ வளர்கிறது; அத்துடன்‌ கூடவே தனிச்சொத்தும்‌ பரிவர்த்‌ தனையும்‌ வளர்கின்றன; செல்வத்தில்‌ வேற்றுமைகளும்‌ மற்றவர்களுடைய உழைப்புச்‌ சக்தியைப்‌ பயன்படுத்திக்‌ கொள்வதற்குரிய வாய்ப்பும்‌, அதன்‌ மூலம்‌ வர்க்க முரண்‌ பாடுகளின்‌ அடிப்படையும்‌ வளர்கின்றன. இவை புதிய சமூக அம்சங்கள்‌; இவை தலைமுறைக்குப்‌ பின்‌ தலை முறையாக பழைய சமூகத்தின்‌ கட்டுக்கோப்பைப்‌ புதிய நிலைமைகளுக்கேற்பத்‌ திருத்தியமைக்கப்‌ பார்க்கின்றன. முடிவில்‌, அவ்விரண்டிற்கும்‌ இடையிலுள்ள யொருந்தா நிலை ஒரு முழுமையான புரட்சிக்கு இட்டுச்‌ செல்கிறது. புதிதாக வளர்ச்சியடைந்த சமூக வர்க்கங்களின்‌ மோதலில்‌ குலமரபுக்‌ குழுக்களின்‌ அடிப்படையில்‌ அமைந்திருந்த பழைய சமூகம்‌ வெடித்துச்‌ சிதறி விடுகிறது. அந்தப்‌ பழைய சமூகத்தின்‌ இடத்தில்‌ அரசாக அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய சமூகம்‌ தோன்றுகிறது. அந்த அரசின்‌ கீழ்நிலை அங்கங்களாக குலமரபுக்‌ குழுக்கள்‌ இனி இல்லை, வட்டார அடிப்படையில்‌ அமைந்த குழுக்களே இருக்‌கின்றன. இந்தப்‌ புதிய சமூகத்தில்‌ சொத்துடைமை அமைப்பு குடும்ப அமைப்பின்‌ மீது முழுமையாக ஆதிக்கம்‌ செலுத்துகிறது. மேலும்‌, இந்த சமூகத்தில்‌ வர்க்க முரண்‌ பாடுகளும்‌ வர்க்கப்‌ போராட்டங்களும்‌ இப்பொழுது சுதந்திரமாக வளர்கின்றன. இந்த வர்க்க முரண்பாடுகளும்‌ வர்க்கப்‌ போராட்டங்களுமே இதுவரை ஏடறிந்த எல்லா வரலாற்றுக்கும்‌ உள்ளடக்கமாக இருக்கின்றன.

உலகத்தை விளக்குவதற்கு மட்டுமல்லாமல்‌ அதை மாற்றி அமைப்பதற்கான கடமையே முதன்மைப்‌ படுத்தும்‌ ஒரு சமூக விஞ்ஞானம்‌ மார்க்சியம்‌. இது ஒரு சமூக விஞ்ஞானம்‌ என்பதனாலயே இதற்கு முன்னிருந்து வந்த கோட்பாடு களைக்‌ கேள்வ்விக்குள்ளாக்கியது. இது ஒரு சமூக விஞ்ஞானம்‌ என்பதாலேயே இதன்‌ காலத்திலும்‌ இதற்குப்‌ பின்னரூம்‌ எழுந்த பலகேள்விகளுக்கும்‌ இது உள்ளாகியது. விஞ்ஞானம்‌ என்ற சிந்தனைப்‌ பிரிவின்‌ பண்பும்‌ பயனுமே அது தான்அதாவது கேள்வி கேட்பதும்‌ கேள்விக்குள்ளாவதும்தான்‌ . இப்‌ பரிசோதனையில்‌ ஆதாரமற்ற கருதுகோள்‌ வாழ்வதற்‌கானதகுதியை இழக்கின்றன. உண்மையை அடிப்படையாகக்‌ கொண்ட கோட்பாடுகள்‌ வளர்ச்சி பெறுகின்‌றன.

மார்க்சியத்தை இவ்வாறு ஒரு சமூக விஞ்ஞானம்‌ என்று கூறும் பொழுது மார்க்சியத்துக்கும்‌ நவீன வீஞ்ஞானத்துக்கும்‌ எத்தகையதொரு நேரிடையான உறவும்‌ அதன் வளர்ச்சியையும் புரிந்திருக்க வேண்டும். தத்துவ ஆராய்ச்சியின்‌ அடிப்படைகளைக்‌ கற்பதற்கு மிகச்‌சிறந்த வழி, முற்காலத்தில்‌ தத்துவச்‌ சிக்கல்களுக்குத்‌ தத்துவ ஞானிகள்‌ என்ன விடைகள்‌ அளித்தார்கள்‌ என்பதைத்‌ தெரிந்து கொள்வதே யாகும்‌. அவர்களுள்‌ பலர்‌ திருப்திகரமான விடைகள்‌ அளிக்கத்தவறி யிருக்கலாம்‌. தத்துவ ஆராய்ச்சியின்‌ தன்மையையும்‌போக்கையும்‌ விளக்குவதில்‌ ஏற்படும்‌ வெற்றிகளைப்‌ போலவே தோல்விகளும்‌ பயனுடையனவாகும்‌. இவ்வகையில்தான்‌ தத்துவ ஆராய்ச்சியில்‌ தத்துவ வரலாற்றுப்‌ பயிற்சி பொருளுடையதாகிறது, என்று மனிதனுடைய அறிவு தோன்றியதோ அன்றே தத்துவ ஆராய்ச்சியும்‌ தோன்றியது. எவ்வளவு எளிய தொடக்க நிலையிலிருந்தாலும்‌ பழங்காலத்திலிருந்தாலும்‌ எந்தச்‌ சமூகமும்‌ தத்துவ ஆராய்ச்சியில்‌ ஈடுபடாமவில்லை. இவ்வகையில்‌, உண்மையாகவே, மக்கள்‌  அனைவரும்‌--அவர்கள்‌ விரும்பினும்‌ விரும்பாவிடினும்‌-- தத்துவ அறிஞர்களாயிருக்கின்றனர்‌. அவர்களுள்‌ ஒருசிலர்‌ இவ்‌வாராய்ச்சிக்குத்‌ தங்கள்‌ வாழ்க்கையில்‌ முதலிடம்‌ தருகின்றனர்‌; தங்களுடைய சமூகம்‌, மரபுகள்‌ இவற்றின்‌ அடிப்படைத்‌ தத்துவஆராய்ச்சியின்‌ குவிமுனைகளாக இவர்கள்‌ விளங்குகின்‌றனர்‌.


குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் நூல் PDF வடிவில் இந்த லிங்கில் அழுத்தி பெற்றுக் கொள்ளலாம்










No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்