இந்திய- பாக் மோதல் கம்யூனிஸ்டுகள் கண்ணோட்டம் என்னவாக இருக்க வேண்டும்?

நாட்டில் 144 கோடி மக்களில் 20 கோடி மக்கள் கூட சரியாக வாழ முடியாத நிலையில் நாட்டின் 40 கோடி மக்கள் அடுத்த வேளை உணவுக்கே அல்லாடும் நிலையில் அதனை பற்றி கவலைபடாத இந்த அரசாங்கம் பல லட்சம் கோடிகளை எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க செலவிடும் அவலம்!!! ஆனால் தன் நாட்டு மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருபதை தேசியவெறியால் மூழ்கடிக்கப்பார்க்கிறது. இதனையையே உழைக்கும் மக்களின் பாதுகவலனாக வலம் வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூறும் பொழுது என்ன சொல்ல? சற்று ஆராய்வோமே தோழர்களே!!!?

ஏகாதிபத்தியங்களின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உலகில் நாடுகளுக்கிடையே போரிட்டால்தான், தங்களுடைய ஆயுதங்களின் விற்பனை நடைபெறும்.

அந்த நிலையில் இந்திய- பாக் மோதல் திடீரென்று நின்று போனதற்கும் இந்த ஆயுத உற்பத்தி நிறுவனங்களும் அவற்றின் நாடுகளும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

உண்மையில் என்ன காரணமாக இருந்தாலும் உழைக்கும் மக்களை பற்றி அவர்களும் பேசவில்லை உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளாக வலம் வரும் இடதுசாரிகளும் இந்த போர் எதற்கு அதனால் பாதிக்கப்படுவோர் யார்? அதனை பற்றி எந்தளவு பேசியுள்ளனர் என்பதை ஆராயும் பொழுது வருத்தமாக உள்ளது. நமது மார்க்சிய ஆசான்களின் போர் பற்றிய புரிதல் அற்ற இவர்களை என்ன சொல்ல? 

நமது ஆசான் லெனின் சோசலிசமும் போரும் நூலிலிருந்து சில:- ஏகாதிபத்தியம் உள்ளவரை போரைத் தடுக்க முடியாது. சமூகம் வர்க்கமாக பிளவுண்டு கிடக்கும் வரை சமூகத்தில் போர் தவிர்க்க முடியாது.ஏகாதிபத்திய காலகட்டத்தில்  முதலாளித்துவமானது தேசியங்களை ஒடுக்கும் ஒடுக்கலின் மிகப்பெரிய ஒடுக்கல் காரனாக மாறிவிட்டது முன்னாள் முற்போக்கு  இயல்புகளில் இருந்த முதலாளித்துவம் இப்போது பிற்போக்கு இயல்பு பெற்றுவிட்டது. நிலமான முறையை எதிர்த்து போராடிய போராட்டத்தில் தேசங்களை விடுவிக்கும் விடுதலையாளனாக இருந்த முதலாளித்துவம் இங்கே பிற்போக்கு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது

போர் என்பது அரசியலின் தொடர்ந்த தொடரே தான் வேறு (வன்முறை)  வழியில் தொடர்ந்து செல்லும் தொடர்ச்சி தான்.காலணிகளை கொள்ளையடிப்பது பிரதேசங்களை ஒடுக்குவது தொழிலாளி வார்த்த இயக்கத்தை நசுக்குவது இவைதான் நாம் காணும் படிப்பினைகள் இந்த போக்கு இப்பொழுதும் தொடர தான் செய்கிறது.

அதே நூலில் ஏகாதிபத்தியம் உள்ளவரை போரைத் தடுக்க முடியாது. சமூகம் வர்க்கமாக பிளவுண்டு கிடக்கும் வரை சமூகத்தில் போர் தவிர்க்க முடியாது".

"தேசியங்களுக்குள், அவற்றுக்கிடையில்  நடைபெறும் போர்களை காட்டுமிராண்டித்தனமானவை, அதை முரட்டுத்தனமான கொடூரமானவை என்று கூறி சோசலிஸ்டுகள் எப்போதுமே அவற்றை கண்டனம் செய்து வந்துள்ளனர். எனினும் போரை பற்றி நாம் கொண்டுள்ள போக்கு பூர்ஷ்வா சமாதானவாதிகளிடையே (சமாதானத்தின் ஆதரவாளர்கள் அது வேண்டும் என்று சரியானது என்று எடுத்துரைக்க அதற்கான வாதிப்போர் ஆகியோரு டைய) போக்கினின்று அடிப்படையில் மாறுபட்டது.அராஜவாதிகளுடைய போக்கின்றும் அடிப்படையில் மாறுப்பட்டது. நாட்டிற்குள் நடக்கும் வர்க்க போராட்டத்திற்கும் போர்களுக்கும் உள்ள தவிர்க்க முடியாத தொடர்பினை நாம் அறிந்து புரிந்து கொண்டுள்ளோம் என்ற விஷயத்தில் நாம் முன்னர் குறிப்பிட்டவர்களிடமிருந்து பூஷ்வா  சமாதானவாதிகளிடமிருந்து மாறுபட்டவர்கள். வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டு சோசலிசம்  படைக்கப்பட்டால் இன்றி போர்கள் ஒழிக்க முடியாது என்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோம். மேலும் உள்நாட்டுப் போர்களை அதாவது ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒடுக்கும் வர்க்கத்தினை எதிர்த்து நடத்தும் போர்கள் , அடிமைகள் அடிமை உடைமையாளர்கள் எதிர்த்து நடத்தும் போர்.... ஆகிய போர்கள் முற்றிலும் முறையானவை முற்போக்கானவை தேவையானவை என்று நாம் கருதுகிறோம். ஒவ்வொரு போரினையும் அதன் வரலாற்றியல் அம்சத்திலே (மார்க்ஸ் அவர்களுடைய முரண்பாட்டியல் பொருள் முதல் வாதத்தின் நோக்கு நிலையில் இருந்து) தனித்தனியாக ஆராய்ந்து அறிய வேண்டும் என்று நாங்கள் கருதுவதில்லை. அனைத்து போர்களும் தவிர்க்க முடியாத வகையில் வரும் குரூங்கள் கொடுமைகளும் வேதனைகளும் துயர்களும் கோரங்களும் இருந்தபோதிலும் முற்போக்காக இருந்து அதாவது மிகவும் தீங்கிழைத்து வந்த பிற்போகன ஸ்தாபனங்களை உதாரணமாக ஒரு தனி மனித தன்னிச்சையாக ஆட்சி அதிகாரத்தை ஒழிப்பதற்கு உதவி செய்த மனித வர்க்கத்தின் வளர்ச்சி நன்மையை பயத்த போர்கள் கொடுங்கோன்மை ஆட்சியை ஒழிப்பதற்கு உதவிய மனித வர்க்கத்தின் வளர்ச்சிக்கு நடந்த கடந்த கால போர்கள் எடுத்து பரிசீலனை செய்ய வேண்டும் ஆராய வேண்டும்" என்கிறார்.

ஏகாதிபத்திய காலகட்டத்தில்  முதலாளித்துவமானது தேசியங்களை ஒடுக்கும் ஒடுக்கலின் மிகப்பெரிய ஒடுக்கல்காரனாக மாறிவிட்டது முன்னாள் முற்போக்கு  இயல்புகளில் இருந்த முதலாளித்துவம் இப்போது பிற்போக்கு இயல்பு பெற்றுவிட்டது. நிலமானிய முறையை எதிர்த்து போராடிய போராட்டத்தில் தேசங்களை விடுவிக்கும் விடுதலையாளனாக இருந்த முதலாளித்துவம் இங்கே பிற்போக்கு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது என்கிறார் லெனின்.

தேசியங்களை ஒடுக்கி வரும் அனைத்துவித ஒடுக்கல்களையும் எதிர்த்து போரிடாமல் சோசலிஸ்ட்கள் தம்முடைய மாபெரும் லட்சியத்தை சாதிக்க முடியாது.

இதனை இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் கம்யூனிஸ்டுகளும் எவ்வளவு புரிந்துக் கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை ஆனால் பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி தனது வர்க்க நிலையில் மிகத் தெளிவாக நமக்கு உணர்த்தியுள்ளதே கீழ் வரும் அவர்களின் அறிக்கை,

 முதலாளித்துவ சுரண்டல், பணவீக்கம், வேலையின்மை மற்றும் சமூக அமைதியின்மை ஆகியவற்றின் ஆழமடைந்து வரும் நெருக்கடியை மறைக்கும் ஒரு புகைத் திரை. இது பிற்போக்குத்தனமான தேசியவாதத்தைத் தூண்டவும், வர்க்க உணர்வின் எழுச்சி அலையை நசுக்கவும் முதலாளித்துவ ஆட்சிகள் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வரும் ஒரு செயல் உத்தி  ஆகும்.பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி, தெற்காசியா முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்தையும் முற்போக்கு சக்திகளையும் இந்தப் பொய்யான தேசியவாதத்தை நிராகரித்து, பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறது. நமது போராட்டம் எல்லைக்கு அப்பால் உள்ள தொழிலாளர்களுடன் அல்ல, மாறாக இரத்தக்களரியால் லாபம் ஈட்டும் தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவ எச்சங்கள் மற்றும் இராணுவ-தொழில்துறை வளாகங்களுடன் தான். எந்த மாயையும் வேண்டாம்… நீடித்த அமைதிக்கான பாதை போரிடும் நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர பேண்ட்-எய்ட்களில் அல்ல, மாறாக முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து சமூகத்தை புரட்சிகரமாக மாற்றுவதன் மூலம், முதலாளித்துவ இராணுவவாதத்தை அகற்றுவதன் மூலம், எல்லைகளுக்கு அப்பால் உள்ள தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையின் மூலம் மட்டுமே நீடித்த அமைதியை உருவாக்க முடியும்.

சர்வதேச ஒற்றுமையின் போர் முழக்கத்தால் பேரினவாதத்தின் போர் முரசுகள் மௌனமாக்கப்படட்டும்.

உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்!

நமது இந்திய கம்யூனிஸ்டுகளின் நிலை என்ன? லெனின் சொன்ன பூர்ஷ்வா வர்க்க கண்ணோட்டத்தில் அல்லவா? செயல்பட்டுக் கொண்டுள்ளனர்? மேலும் இரண்டாவது அகிலத்தின் தகர்வு நூலில் லெனின் காவுத்ஸ்கியை விமர்சனம் செய்துள்ள ஒவ்வொரு வாத்தையும் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு பொருத்தமாக இருக்கிறது அல்லவா? பின்னர் இவர்கள் கம்யூனிச ஆசான்கள் எவையெல்லாம் செய்யக்கூடாது எங்கின்றனரோ அதை செய்யுமிடது இவர்கள் யார்? 


அவர்கள் மட்டுமல்ல அரசில் பங்குக் கொண்டுள்ள சி.பி.எம் மட்டும் விதி விலக்க? உண்மையில் போர் பற்றி மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல்களை காற்றில் பறக்கவிட்டுவிட்டு லெனின் வார்த்தையில் சொல்வதென்றால் தேசிய வெறியர்களாக மாறி போன காவுஸ்கியை பின்பற்றும் இவர்களை என்ன பெயர் கொண்டு அழைப்பது கம்யூனிசத்தை நேசிப்போரிடம் விட்டுவிடுகிறேன்!
இவர்கள் உழைக்கும் ஏழை எளிய மக்கள் வாழ கல்வியோ வேலை வாய்ப்போ இல்லாத சூழலை உறுவாக்கியுள்ள அரசை பேசாமல் அவர்களிடம் சரணடைந்துள்ளது ஏன் இந்த அதிகாரத்தில் பங்காளி அதனால்தானே?

மேலும் இவர்கள் தமிழகத்தில் கடைபிடிக்கும் நிலைப்பாடு என்ன?

அங்கே காவிகள் என்றால் இங்கே மட்டும் என்னவாம்? மத நிறுவனங்களை அரசாங்கம் பயன்படுத்துவதாக்கட்டும் ஏன்-தமிழ்நாட்டில் காவல்துறை செய்யும் அட்டூழியங்களுக்கு முதல்வர் பொறுப்பாக முடியாதா? காவல்துறை அதிகார அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்தி வருவதால் மக்களுக்கு விரோதமாக காவல்துறையில் உள்ளவர்கள் நடந்துக் கொள்வதாக கூறி பலர் முட்டுக்கொடுத்து வந்த நிலையில்; அதே முட்டுகளால் திருப்பரங்குன்றம் மலை பிரச்சனையிலும் முதல்வர் தூக்கி நிறுத்தப்பட்டா அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதை ஊதி பெரிதாக்குவதாகவும் மக்கள் பாதுகாப்புக்காக உழைத்துக் கொண்டிருக்கும் காவல் துறைக்கு இழுக்கு ஏற்படுத்த முயல்கின்றனர் என்று கூறி தனது நேரடிகட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையில் தன்னை தாண்டி எதுவும் நடக்காது என்பதை தெளிவுபடுத்தினார். பின்னர் அரசை பற்றியும் அதன் குணத்தை பற்றி மூடி மறைக்க நினைப்போர் விஜய் கட்சிக்கும் கம்யூனிசதிற்கும் வித்தியாசம் தெறியாமல் போக வேண்டியதுதான்.

கட்சியின் அரசியல் திட்டம் என்ன?
கொள்கை கோட்பாடு என்ன?
''திரைப்படக்கதை - வசனம்'' எழுவோர் வேறொருவர் எனுமிடத்தில் 'தலைவர்' மீதுள்ள நம்பிக்கையில்! இலட்சக்கணக்கில் தொண்டர்கள் அதன் அடிப்படையில் அணிவகுத்து வருகின்றனர்?இந்த நம்பிக்கை ''எதனால்'' வந்தது? ''திரைப்பட அரசியல்'' ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி அப்படியா நினைத்து பாருங்கள் தோழர்களே?
நாட்டின் பொருளாதார அமைப்பு என்ன? அரசியல் சமுதாய அமைப்பு என்ன? உற்பத்தி வளர்ச்சி எந்த நிலையில் உள்ளது? விலைவாசி ஏன் இப்படி இருக்கிறது? வேலையில்லாத் திண்டாட்டம் விழிபிதுங்கி நிற்கிறது ஏன் நீடிக்கிறது? கல்வி மற்றும் மருத்துவக் கொள்கை என்ன? ஆட்சிமொழிக்கொள்கை என்ன? சாதியக் கொடுமைகள் ஏன் நீடிக்கின்றன? தேசிய இனங்கள் எப்படி, எந்தெந்த வகையில் பாதிக்கப்பட்டு இருக்கின்றன? பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏன் இந்தியா திறந்துவிடப்பட்டிருக்கிறது?
மேற்கூறிய சிக்கல்களுக்கு எல்லாம் அடிப்படை என்ன? சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மாற்றுவழி என்ன? மாற்றுப் பொருளாதார, அரசியல் திட்டங்கள் என்ன?
மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அடிப்படையான அரசியல் தெளிவைப் பெறுவதைத் தடுக்குகிறவகையில் தற்போதைய ''சமுதாய அமைப்பு'' திட்டமிட்டு செயல்படுகிறது அதில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் விதிவிலக்கல்ல!!!.
''அரசியலற்ற அரசியலை'' மக்கள்மீது பலவகைகளில் திணித்துள்ளது. இந்த 'அரசியலற்ற அரசியலுக்கு'' தெளிவான 'வர்க்க நலன்கள், பின்னணி '' உண்டு. இவற்றைத் தகர்க்காமல், தற்போதைய சமுதாயத்தை மக்களுக்கான சமுதாயமாக மாற்றுவதற்கான அரசியல் உணர்வை வளர்க்கமுடியாது.

போரில்லா உலகைப் படைப்போம்
அந்த போரிடும் ஏகாதிபத்தியங்களையும் அதன் அடிவருடிகளையும் குழித்தோண்டி புதைக்க வேண்டும்...
அதற்கான உழைக்கும் மக்களை ஆயத்தம் செய்ய வேண்டும். சோசலிச, கம்யூனிச உணர்வுள்ளவர்களாக...
இந்த ஏற்றதாழ்வான வர்க்க சமூகத்தை ஒழித்து பொதுவுடைமை சமூகம் மட்டுமே இதற்கு தீர்வு.







No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்