தத்துவமும் நடைமுறையும் இணைந்ததே மார்க்சியம்
மார்க்சியம்
மானுட சமூக வரலாற்றையும் மானுட சமகால சமூக வாழ்வையும் அறிவியல் கண்ணோட்டத்தில்தான்
காண வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எந்த சமூகத்தை மார்க்சிய அணுகுமுறையில்
ஆய்வு செய்வதானாலும் இயக்கவியல்
பொருள்முதல்வாத அடிப்படை கோட்பாட்டை பின்பற்றியே ஆக வேண்டும். இதில்
“நாட்டுக்கு நாடு, மண்ணுக்கு மண் வேறுபடுவது” என்ற
கருத்துக்கே இடம் கிடையாது. இயக்கவியல் இடைவிடா இயக்கமும் மாற்றமும்
தான். மார்க்சிய தத்துவ நிலைபாட்டில் இருந்துதான் அனைத்து சமூகங்களையும் ஆய்வு
செய்ய வேண்டும். இயக்கவியல் விஞ்ஞான, அணுகுமுறையில், ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, மண்ணுக்கு மண் என்ற அம்சங்களின் அடிப்படையில் வேறுபாடு இருக்க இயலாது.
மார்க்சியத்தின்
இன்னொரு முக்கிய அம்சம் – பிற தத்துவங்களிருந்து மார்க்சியத்தை அடிப்படையில்
வேறுபடுத்துவது –
மார்க்சியத்தில் தத்துவமும் நடைமுறையும் பின்னிப் பிணைந்தவை
என்பதாகும். ஃபாயர்பாக் என்ற ஜெர்மானிய மெய்யியலாளர் தொடர்பான தனது 13 கருத்துருக்களில் மார்க்ஸ் முன்வைத்த ஒரு மிக முக்கியமான கருத்துரு,
“ இதுவரை மெய்யியலாளர்கள் உலகை வியாக்கியானம் செய்வதில் தான்
முனைந்தனர். ஆனால், விஷயம் என்னவெனில், உலகை மாற்றவேண்டும் என்பது தான்” என்பதாகும். இந்த அடிப்படையில் தனது
தத்துவ நிலைபாட்டில் இருந்து சமூகத்தை ஆய்வு செய்து, அதன்
அடிப்படையில் களம் இறங்கி செயல்படுவதும், அச்செயல்பாட்டின்
வாயிலாக படிப்பினைகளைப் பெறுவதும், பெற்ற படிப்பினைகளை
மார்க்சிய தத்துவத்தை வலுப்படுத்தவும் செழுமைப்படுத்தவும் பயன்படுத்துவதும்
மார்க்சிய அணுகுமுறையின் இன்றியமையாத அம்சங்கள் ஆகும். நடைமுறைக்கு வழிகாட்டியாக
தத்துவம் இருப்பதும், நடைமுறை மூலம் தத்துவம் மேன்மேலும்
செழுமை அடைவதும் இணைந்தது தான் மார்க்சியம்.
தோழர்களே, நாங்கள் நடைமுறையில் இருக்கிறோம் என்பவர்களே!!!
ரசியாவில் மார்க்சிய தத்துவத்தை நடைமுறை படுத்தியவர் லெனின். மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் போல்ஷ்விக் கட்சியை கட்டி மார்க்சிய தத்துவத்தினை நடைமுறையாக்கி புரட்சியை சாதித்தார்
லெனின்.
சீனாவில் மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் வழிகாட்டிய தத்துவத்தின் அடிப்படையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறையில்தான் நாட்டின் புரட்சியின் ஊடாக செஞ்சீனமாக்கினார் மாவோ .
ஆக அங்கே மார்க்சிய தத்துவத்தை நடைமுறையில் அவர்கள் புரட்சியை சாதித்தனர். ஆனால் இங்கு மார்க்சிய லெனினிய தத்துவத்தை நடைமுறையில் இருக்கிறது என்றால் ஆளும் வர்க்க செயலுக்கு வால் பிடிக்கும்
நோக்கம் என்ன? வர்க்க சமூகத்தில் வர்க்கம் அல்லாதவை எவையும் இல்லை எனும் பொழுது அண்மையில்
போர் பதட்டத்தில் வர்க்க அடிப்படையில் வர்க்கம்
ஏன் ஏகாதிபத்தியம் உள்ளவரை போர் தவிர்க்க முடியாதவை என்ற லெனின் வார்த்தையின் புரிதல்
இல்லையோ?
மார்க்சியம் எல்லா பிரச்சினைக்கும் அடிப்படையான வர்க்க சமூகத்தை ஆய்வு செய்து நண்பர்கள் எதிரிகள் அடிப்படையில் நட்பு சக்திகளை வளர்த்தெடுத்து எதிரிக்கு எதிரான போராட்டத்தில் ஓரணியில் திரள வேண்டும் என்பதே மார்க்சிய லெனினிய தத்துவம்.
இடதுசாரிகளான சி.பி.அய். சி.பி.எம் இரண்டின் தத்துவம் என்ன? இதுவரை தனக்கான நடைமுறை பணியில் ஆளும் வர்க்க
தேவை ஒட்டி அல்லாத ஏதாவது பணி செய்துக் கொண்டுள்ளதா? தனது எல்லா அமைப்புகளின் போராட்டமும் அரசிடம் சரண்டையும் முதலாளித்துவ பாணியிலான நடைமுறை மட்டுமே, இறுதி இலக்கு பாராளுமன்ற தேர்தல் தேவைக்கானவை மட்டுமாக சுருங்கி விடும் பொழுது இவர்களின் நடைமுறை மார்க்சிய லெனினிய தத்துவமா? பல்வேறு நடைமுறையில் உள்ளோர் பதில் அளிப்பீர்களா?
அடுத்து தமிழகத்தில் உள்ள பாராளுமன்றத்தை பின்வாசல் வழியாக போக நினைக்கும் மா-லெ கட்சிகள் மார்க்சியத்தை விட மார்க்சியம் அல்லாத முதலாளித்துவத்தை தூக்கி சுமக்கும் சிலரை (அம்பேத்கர் பெரியார் இன்னும் சிலரை) பின்பற்றும் பொழுது அவர்களுக்கான நடைமுறை என்ன?
இவை கடந்து மா-லெ பேசும் சில குழுக்கள் நேரடியாக ஆளும் கட்சிகளுக்கு பல்லக்கு தூக்குகிறது அவர்களின் நடைமுறை என்னவாக இருக்கும்?
இறுதியாக புரட்சி பேசிக் கொண்டிருக்கும் ஒரு சில குழுக்கள் மட்டும் என்ன நடைமுறையில் உள்ளன. வறட்டுதனமாக தாங்கள் மட்டுமே புரட்சியாளர்கள் என்ற மமதையில் ஆளுக்கொரு அமைப்பு எந்த தத்துவப் போராட்டத்திற்கும் தயார் இல்லை ஒருங்கிணையவும் தயார் இல்லை. இவர்கள் கட்சி அல்ல, குழு அப்படி இருந்தும் தாங்கள் ஏதோ கட்சி என்பது போல் இவர்கள் விடும் அறிக்கைகள் கேவலமாக இருக்கும்.
ஆக ஆளும் வர்க்கத்தின் செயல்களுக்கு இவர்கள் வால் பிடித்து சில ஆர்ப்பாட்டங்கள், கண்டன முழக்கங்கள் இறுதியாக எந்த தீர்வும் இல்லாமல் களைந்து செல்வது இவைதான் இவர்களின் நீண்ட கால நடைமுறை பணி தோழர்களே முதலில் எதிரிக்கு எதிரான போராட்டத்தில் வலிமை வேண்டும் அதற்கு பலம் வாய்ந்த கட்சி மார்க்சிய லெனினிய தத்துவத்தை முழுமையாக கற்று தேர்ந்த குழாமை கொண்ட புரட்சிகர கட்சி வேண்டும் அதற்கான பணியை இந்த நடைமுறைவாதிகள் செய்வதில்லை ஏன்?
அதனால் பொத்தாம் பொதுவாக நடைமுறையில் உள்ளோம் என்பதனை விட்டுவிட்டு என்ன வகையான நடைமுறையில் உள்ளீர் என்பதனையும் குறிப்பிடவும் தோழர்களே?.
இங்குள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் தேவையின் பின்னால் ஓடுவது எதற்கான நடைமுறை யாருக்கானது? தத்துவத்தை நடைமுறை படுத்துகின்றனர்
என்பவர்கள் விளக்குவார்களா?
"புரட்சிகரத் தத்துவம் இல்லாவிட்டால், புரட்சிகர இயக்கம் என்பது இருக்க முடியாது" என்று லெனின் அவர்கள் நமக்குப் போதித்துள்ளார்.
தத்துவம் என்பது வரட்டு வேதாந்தம் அல்ல. அது செயலுக்கு ஒரு வழிகாட்டி, "இது வரையில் தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் மாத்திரம் செய்துள்ளனர். நமது கடமை அதை மாற்றுவதாகும்" என்று மார்க்ஸ் அவர்கள் கூறினர்.
ஒருபுறம் சொத்துடைய கூட்டம் இன்னொறுபுறம் வாழ்வா சாவா தினம் தினம் வாழ்க்கை வாழ போராடிக் கொண்டிருக்கும் கூட்டம்.
பாட்டாளி வர்க்க சித்தாந்தம் மக்கள் திரளை ஒன்றிணைப்பதும் இத்தத்துவத்தின் பால் அவர்களை கிரகித்து அவர்களை புரிய வைத்தலும், உழைக்கும் மக்கள் தமக்கு சொந்தமான தத்துவத்தை கிரகித்துக் கொண்டு அதன்படி நடக்கத் துணியும் போது தமது குருதியை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சுக்கிருமிகளையும் மாபெரும் புயலான சீறி எழுந்து ஒரே அடியாகத் துடைத்தொழிப்பர். (அவைதான் தத்துவம் நடைமுறை பெற்று புரட்சியாக பரிணாமம் பெறல்).
மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தை கிரகிக்க முடியாது. உழைக்கும் மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலனை பற்றி போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பு ரீதியான திரட்டுவதுமான இந்த இமாலய பணியை மக்களுக்கு இடையேயான பணி என்கின்றோம். இவையைதானே நடைமுறை பணி என்று நமது ஆசான்கள் போதித்தனர்.
மக்களிடையேலான பணியின் பாத்திரம் தத்துவார்த்த ரீதியில் நிலைநாட்டல் தான் நடைமுறை பிரச்சனை.
இக்கடமையை ஒரு பொதுவுடைமை கட்சி நேர்மையான முறையில் கடமை ஆற்ற வேண்டியுள்ளது. அந்தக் கட்சியின் ஊழியர்களுடைய பணிதான் நடைமுறை.புரட்சிகர தத்துவத்தில் தேர்ச்சிபெறுவதன் முக்கியத்துவம் நடைமுறை பணி புதைந்து கிடக்கின்றது. நமது தோழர்களை புரட்சிகர தத்துவத்தால் ஆயுதபாணிகளாக்க இது துணை செய்யும்.
ஆனால் இங்குள்ள இடதுசாரிகள் என்னவகை நடைமுறை கையாள்கிறார்கள் தோழர்களே நீங்களே புரிந்துக் கொள்ள!.இங்கு நடைமுறையில் உள்ளவர்கள் என்னவாக உள்ளனர்? உங்களிடமே கேள்வியை முன் வைக்கிறேன்
மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாஒ சேதுங் ஆகிய சர்வதேசிய கம்யூனிஸ் புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவர்களின் போதனைகளை நாம் சுருக்கிக் கூறினால், பின்வருமாறு தொகுக்கலாம்:-
நாம் எல்லாரும் வர்க்க சமுதாயத்தில் வாழ்கிறோம் சமுதாயத்தில் ஒரு வர்க்கம்இன்னொறு வர்க்கத்தை அடக்கி ஒடுக்குகின்றது;சுரண்டுகின்றது.இன்னொறு வர்க்கத்தை அடக்கி ஒடுக்கி,நசுக்கும் ஒரு வர்க்கம் அதன் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் உதவியாக ஒரு யந்திரத்தைப் பெரும் செலவில் கட்டியமைத்திருக்கிறது.இந்த யந்திரம் அரசு யந்திரம் என அழைக்கப்படுகின்றது. இதன் பிரதான பகுதி ஆயுதப் படைகள்.அரசு யந்திரத்தின் பிரதான பணி சுரண்டலைப் பாதுகாப்பது சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக அடக்கி ஒடுக்கப் பட்ட வர்க்கங்கள் கொந்தளித்து எழும்போது அவற்றைத் தடுத்து நசுக்குவது.சுரண்டும் வர்க்கங்களின் காவல் நாய்களின் கரங்களில் துப்பாக்கிகள் இல்லாவிட்டால், சுரண்டல் ஒரு கனம் கூடத் தொடர்ந்து நடக்க முடியாது. ஆகவே,அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் தம்மை விடுதலை செய்து கொள்ள விரும்பினல்,தம்மை நசுக்குகின்ற அடக்குமுறை அரசு யந்திரத்தை பலாத்காரத்தால் சுக்கு நூருக்கவேண்டும்; அதாவது, அவர்கள் புரட்சியை நடத்தி,அடக்குமுறை முதலாளித்துவஅரசு யந்திரத்துக்குப் பதிலாக தொழிலாளர் வர்க்கத்தின் அரசு யந்திரத்தை அமைக்க வேண்டும். இதைத்தான் மார்க்ஸ் அவர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று வருணித்தார்.
கடைசியாக,இதைப் புரட்சியால் அன்றி,பாராளுமன்ற வழிகளில் சமாதான மாற்றத்தின் மூலம் செய்ய முடியாது.பாராளுமன்றம் என்பது மூலதனத்தின் அம்மணமான சர்வாதிகாரத்தை அலங்கரிக்க, நமது வர்க்க உணர்வை மழுங் கடிக்க, நம்மைக் குழப்பிகாட்ட, ஆயுதப் படைகள் என்ற உண்மையான அதிகாரபீடத்திலிருந்து நமது கவனத்தைத் திசைதிருப்பு, பிற்போக்குவாதிகள் கண்டுபிடித்த ஒரு ஆயுதம். இது ஆயுதப் போராட்டத்துக்குப் பதில் சொற் போராட்டத்தை வைக்கும் ஒரு முயற்சி. எனவே, இந்தப் பாராளுமன்ற மாயைகளால் நாம் ஏமாந்துவிடக்கூடாது.
மார்க்ஸி்ய லெனினியத்தை யார் ஏற்றுக்கொள்ளவில்லையோ,யார் எதிர்க்கிறார்களோ அவர்கள் திருத்தல்வாதிகள்; திரிபுவாதிகள், இதுதான் மா-லெவாதிகளையும், நவீன திரிபுவாதிகளையும், புரட்டல்வாதிகளையும், திருத்தல்வாதிகளையும் பிரித்துக் காட்டும் எல்லைக் கோடாகும். இவற்றிற்குப் பதில், ஒரு மத்திய பாதையைக் காண, நடு வழியைக் காண முயல்கின்ற, பாலங்கள் அமைக்க,மாலெ திற்கும் நவீன திரிபுவாதத்துக்கும் இடையில் சமரசம் கொண்டுவர முயல்கின்ற சிலரும் இருக்கின்றனர். இது சந்து செய்ய முடியாதவற்றை சந்து செய்ய முயல்கின்ற, நீரையும் நெய்யையும் கலக்கின்ற ஒரு முயற்சியன்றி வேறல்ல.
யார் நவீன திரிபுவாதத்தை எதிர்க்கவில்லையோ,அவர் இன்றே நாளையோ ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதை நிறுத்துவது நிச்சயம். இந்த விஷயத்தில் மயக்கம் இருக்கக்கூடாது. லெனின் தமது காலத்தில்,திரிபுவாதம் என்பது தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் முதலாளிவர்க்க இயக்கத்தின் செல்வாக்கே என்று தெளிவாக விளக்கியுள்ளார்.
உலக ஏகாதிபத்தியத்தைப் போல, நவீன திரிபுவாதமும் அழிவது திண்ணம். நவீன திரிபுவாதிகள் எவ்வளவுதான் காட்டிக் கொடுத்த போதிலும்,உலகப் புரட்சி இயக்கம் தொடர்ந்து முன்னேறுகின்றது. மரம் அமைதியை விரும்பு கின்றது; ஆனால் காற்று ஒய்வதில்லை. அதேபோல நவீன திரிபுவாதிகள் சமாதான சகவாழ்வு, சமாதான போட்டி,சோஷலிஸத்துக்கு சமாதான மாற்றம் ஆகியவை பற்றி எவ்வளவுக் குச் செபம் செய்தாலும்,வர்க்கப் போராட்டத்தின் உண்மைகள் வாழ்வை வேறு திசையில் செலுத்துகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான உலக ஏகாதிபத்தியம், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை பிரதான மையமாகக் கொண்ட நவீன திரிபுவாதம், பிற்போக்குவாதம் இவற்றுக்கெதிரான புரட்சிப் போராட்டங்களின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.(மாவோவின் சிந்தனைகள் நூலிலிருந்து)
தத்துவமும் நடைமுறையும் என்ற இடத்தில் தத்துவத்தை நடைமுறையோடு உரசி பார்க்க வேண்டும் என்பதே நமது மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல்.
இங்கே தத்துவம் இல்லாத எந்த நடைமுறையும் இல்லை அப்படியெனும் பொழுது பல போக்கில் ஏன் உள்ளனர் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
அப்படியெனும் பொழுது இங்கு நடைமுறையில் உள்ள தத்துவங்களும் இங்குள்ள கருத்துகளும் ஆளும் வர்க்கத்து தத்துவங்களே அது மக்களுக்கான விடுதலைக் காணவை அல்ல.
மேலும் இவை இங்குள்ள அமைப்பு முறையை கட்டி காப்பதற்கான வழிமுறையை போதிப்பதோடு சுரண்டப்படும் மக்களை ஒடுக்கவும் அடக்கவும் சில நேரங்களில் சில சலுகைகள் மூலம் மக்கள் கொந்தளிப்பை மட்டுபடுத்தவும் செய்யும் சீர்திருத்தம் சில சட்டங்கள் என்ற பெயரில் காட்டும் கரிசனம்தான்.
இவை மக்களுக்கு விடுதலை தவிர மற்ற எல்லா ஆன்மீகவாதிகளை போல போதனை தருகிறது இந்த அனைத்து முறைகளையும் அடங்கி ஒடுங்கி அவர்கள் கொடுக்கும் சன்மானம் பெற்றுக் கொண்டு வளமாக வாழ போதிக்கிறது. இதனைதான் நமது தோழர்கள் மேன்மையானது என்கின்றனர் அவைதான் அவர்களின் நடைமுறையாகவும் உள்ளது.
இந்த இடத்தில் மார்க்சியம் இந்த எல்லா ஒடுக்குமுறை சுரண்டல்முறைக்கு காரணமான சமூகத்தை சமூகத்தை மாற்றி அமைக்க சொல்கிறது அதற்கு தேவை புரட்சி அப்படியெனும் பொழுது புரட்சிக்கான திட்டமும் அதை நடைமுறைப்படுத்த கட்சியும் வேண்டும்.
அப்படியென்றால் இங்கு கட்சி இல்லையா என்பீர்? இருக்கிறது அதன் செயல்பாடுகள் மார்க்சிய வகைபட்ட புரட்சியை நோக்கியதாக செயலில் உள்ளதா என்பதுதான் கேள்வியாக உள்ளது!
சமூக மாற்றமும் மக்களுக்கான விடுதலையா? அல்லது சீர்திருத்தம் என்றால் உள்ள அமைப்புமுறைகுள்ள சில சலுகைகள் பெற்று அடிமையாக வாழ்வதா?
நாம் வாழும் இந்த சமூகத்தில் எப்படியாவது சொத்து சேர்த்து நாமும் சுகபோகமாக வாழ்ந்து விடலாம் என்று எல்லோரும் ஓடிக் கொண்டுதான் உள்ளார்கள் அதுதான் இந்த சமூகத்தின் தத்துவமாக உள்ளது. ஆனால் எல்லோரும் முன்னேறி விடுகிறார்களா? ஏன் இல்லை? என்பதை நீங்களே தேடிக் கொள்ளுங்கள்!
ஆக பெரும்பான்மையான மக்களை ஏமாற்றி சிறுபான்மையான சொத்து சேர்பதற்கு உழைக்கும் மக்களை ஏய்பதற்காக உருவானது தான் இந்த தத்துவம் நாம் வாழும் சமூகத்தின் ஆளும் சுரண்டும் வர்க்கத்தின் தத்துவம்.
ஏதோ ஒரு வகையில் இதற்குள்ளே சுழன்று சுழன்று அடிமையாக வாழ வைப்பது தான் இந்த தத்துவத்தின் மகிமை.
இதைப் புரிந்து கொள்ளாமலே பெரும்பானமையிலான உழைக்கும் ஏழை எளிய மக்களும் ஓடிக்கொண்டுதான் உள்ளார்கள் எப்படியாது இதில் வாழ வேண்டும் என்று. ஆனால் அவர்களை ஒட்ட சுரண்டுவதுதான் இந்த தனிஉடமை சமூகத்தின் தத்துவம் என்பதனை அறியாமலே இதற்குள்ளே ஓடியோடி தேய்ந்து ஓய்ந்துப்போவதைதான் காண்பீர் இவையை நாமும் புரிய வைப்பதில் தூரமாகவே உள்ளோம். ஏனென்றால் நாம் கை கொள்ள வேண்டிய தத்துவம் மார்க்சிய தத்துவம், அவை தனி உடமையற்ற பொதுவுடமை நோக்கியதாக உள்ளது. அப்படி என்னும் போது இந்த சிறு உடைமை வர்க்கம் அதை விட்டு ஓடி வந்து விடுமா அவர்களை எப்படி நீங்கள் கரை சேர்க்கப் போகிறீர்கள்? அவர்கள் பின் ஓடப்போகிறீர்களா அல்லது அவர்களின் இந்த கொடூரமான சுரண்டல்முறைக்கான காரணத்தை விளக்கி இந்த அவலங்களுக்கு முற்று புள்ளி வைக்க போகிறீர்களா?
அதில் தான் அடங்கி உள்ளது உங்களது செயலும் பணியும் அதுதான் தத்துவம் நடைமுறையும் என்கிறேன்.அதனைதான் மார்க்சிய இயங்கியல் போதிக்கிறது.
தொடர்ந்து விவாதத்தின் நோக்கம் இங்கு சிலர் கூறுவது போல் நாங்கள் நடைமுறையில் உள்ளோம் என்பவர்கள் எந்த வகையான தத்துவத்தில் நடைமுறையில் உள்ளார்கள் என்பதை கேள்வி?.
No comments:
Post a Comment