கம்யூனிஸ்டுகளே கம்யூனிஸ்டாகுங்கள்-இலக்கு 72 கட்டுரை

 நாம் வாழும் சமூகத்தில் பல்வேறு விதமான கண்ணோட்டங்களும் நடைமுறையும் உள்ளன. அவை தான் மக்கள் மத்தியில் பேசு பொருளாகவும் வழிகாட்டியாகவும் உள்ளது. இவையெல்லாம் சமூகத்தின் ஆளுவோரின் கருத்துகளே கண்ணோட்டங்களே. இதனைத் தான் மார்க்சியம் மிகத் தெளிவாக தனக்கான கண்ணோட்டத்தையும் அதற்கான நடைமுறையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தியது ரஷ்யாவும் சீனாவும் இன்னும் சில சோசலிச நாடுகள் அதன் புரட்சியின் வழியில். இதனைத் தான் லெனின் தன் நாட்டின் புரட்சியின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் தெளிவுபடுத்தி இருப்பார் .

இதற்கு முன் நடந்தேறியே பல்வேறு நாட்டில் நடந்தேறிய சமூக மாற்றங்கள் புரட்சிகள் பற்றி தெளிவுபடுத்தும் அவர் பழைய சமூகத்தின் பிற்போக்கு சமூக மிச்சங்களை அவர்கள் அழித்தொழிக்கவில்லை அதனை தங்களின் சுரண்டலுக்காக கட்டிக் காக்கும் நிலையை காணலாம். இதனை முழுமையாக துடைத்தெறிந்ததாக ரஷ்ய புரட்சியை பற்றி லெனின் விளக்கி கூறுவார்.

ஆகவே சமூக மாற்றம் விரும்பும் ஒவ்வொருவரும் இங்குள்ள பிற்போக்கு முந்தைய சமூக முடைநாற்றம் பிடித்த குப்பைகளை இல்லாது ஒழிக்க மார்க்சிய லெனினிய தத்துவத்தின் அடிப்படையில் நடைபெறும் புரட்சியால் மட்டுமே சாத்தியம் என்பது தான் மார்க்சிய லெனினிய தத்துவவாதிகளின் கண்ணோட்டம். ஆக அந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நடைமுறை காணுவது தான் உண்மையாலுமே புரட்சி நேசிப்போரின் பணியாக இருக்கும். நமது கண்ணோட்டம் மார்க்சிய தத்துவ அடிப்படையில் இருந்தால் மட்டுமே விவாதம் சரியான பாதையில் செல்லும்.

மார்க்சிய லெனினிய தத்துவ அடிப்படையில் செய்யாததன் விளைவு தான் இங்கு நம் இடையே காணப்படும் பல்வேறு விதமான போக்குகள் உள்ளன ஒவ்வொன்றாக பரிசீலிப்போம்.

1). சாதி பிரச்சினை.

2). தேசிய இனப்பிரச்சினை.

3). சோசலிசப் புரட்சியா?

4). புதிய சனநாயகப் புரட்சியா?

5). இந்திய சமூக வர்க்க பற்றி

6). புரட்சி என்றால் என்ன?

7). இன்னும் நம் சமூகத்தை புரிந்துக் கொள்வதில் பல்வேறு விதமான குழப்பங்கள் நீடிக்கிறது. இதன் தொகுப்பாக காணுமிடத்து. மார்க்சிய லெனினிய தத்வத்தை புரிந்துக் கொள்வதில் எங்கோ பிரச்சினை என்று நினைத்து அடிப்படை மார்க்க்சிய லெனினிய தத்துவத்தை முதலில் பார்ப்போம் தோழர்களே..

இங்கு பல்வேறு குழுக்கள் இடையில் பொதுவாக விரவிக் கிடக்கும் தகவல்களின் அடிப்படையில் சிறிது பார்ப்போம்.

மார்க்சிய-லெனினிய தத்துவ அடிப்படை யில் பரிசீலிக்க முன் வாருங்கள்.

கம்யூனிஸ்ட்டுகள் கம்யூனிசத்தை கற்றறிய வேண்டும் அதற்கு மார்க்சிய ஆசான்களிடமிருந்து கற்று தேற நிறையவே உள்ளன, அவற்றை கற்றுதேறுவதோடு நடைமுறைபடுத்து வதற்கான நமக்கான அறிவை அவர்களிடமிருந்தே நாம் பெற்றால் மட்டுமே சிறப்பாக இருக்கும். அவைதான் சரியானவையாகவும் இருக்கும். அவையின்றி இரவல் வாங்கும் முதலாளித்துவ தத்துவங்கள் உழைக்கும் மக்களை ஏய்க்க மட்டும்தான் உதவும் மக்களின் துன்பதுயரங்களுக்கு அவர்கள் மீது இழைக்கும் கொடுமைகளுக்கு விடுதலை தராது. நமக்கான தத்துவம் மார்க்சியம் மட்டும்தான் அவைதான் நமக்கான நடைமுறையாகவும் இருக்கும்.

உலகின் பல நாடுகளில் ஏன் ஜப்பானில் சாதி இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஒழிக்கப்பட்டதே! ஆனால் இங்கு அதனை முதலாளித்துவ சமூகத்திற் கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய அதிகாரம்படைத்தவர்கள் அதை செய்யாமல் முட்டுக்கட்டை போட்டு ஏகாதிபத்திய சந்தை திறந்து விட்டு ஏகாதிபத்திய சரக்குகளான குப்பைகள் இங்கே கொண்டு வந்து கொட்டப்படுகிறது. உற்பத்தி சக்திகளின் எந்த பங்களிப்பும் இல்லாத நுகர்வு அவர்களின் வாழ்வதற்கான வழிவகை இந்த அரசு முறை செய்யாததன் விளைவு பிளவுவாதம் மக்கள் மூளையில் திணிக்கிறது. அதற்கு சாதி முறை அவசியமாகிறது.

நம்மிடையே முக்கிய விவாத பொருள்கள்

1). சாதி பிரச்சினை.- வர்க்க சமூகத்தில் சுரண்டலின் தேவையில் தோன்றிய சாதி பிரிவினை நிலவுடைமை சமூகத்தில் உற்பத்தியின் அடிதளமாக இருந்த சாதிமுறை சமூக வளர்ச்சி போக்கில் இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் உலகில் எங்கேயும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. குலதொழில் வழி பணி புரிந்தால் மட்டும்தான் வாழ முடியும் என்ற நிலை மாறி தான் விரும்பும் எந்த பணியையும் எந்த சாதியினரும் செய்ய முடியும் என்ற நிலை இன்றுள்ளது. இருந்தும் சாதி தீண்டாமையும், சாதி ஒடுக்குமுறையும் நீடிக்கவே செய்கிறது இதற்கான சமூக அமைப்பின் அடிப்படையில் ஆராயாமல் சில சாதி கட்சிகளை விமர்சிப்பதனால் இதற்கு தீர்வு கிடைகாது.

இன்று சாதி ஏற்றதாழ்வை பேசுவதனால் அந்த சாதிய ஒடுக்குமுறையை கடைப்பிடிக்கும் போக்கு யார் ஏன் கடைபிடிக்கின்றனர். இதனை ஆய்வு செய்யும் பொழுது சாதியின் இருத்தலுக்கு யார் யார் எவையெல்லாம் காரணம் என்று புலப்படும்.

இவை இல்லாதொழிக்க மார்க்சிய புரிதல் அவசியம். மேலும் சாதி தோற்றம் பற்றி புரிதல் இல்லாதவர்களிடம் வைக்கும் கேள்வி. i) வட தமிழகத்தில் உள்ள சாதியான வன்னியர் தென் தமிழகத்தில் இல்லை அதேபோல் அங்குள்ள மறவர், தேவர் இங்கில்லை ஏன் தென் இந்தியாவில் கேரளாவில் உள்ள முக்கிய சாதிகள் தமிழகத்திலோ மற்ற தென் மாநிலங்களிலோ இல்லாதது போலவே அந்தந்த மாநிலங்களில் உள்ள சாதிகள் வேறு மாநிலங்களில் இல்லை ஏன். தென் இந்திய நிலை இவை எனும் பொழுது வட இந்தியாவில் இந்தி பேசும் மாநிலங்கலான மத்திய பிரதேஷ், உ.பி, ராஜஸ்தான் மற்றும் ஹரியானவில் ஒன்றுபோல் சாதி இல்லையே ஏன்?

ii). சாதி இன்று நிலைத்து நிற்பதும் அதனை கட்டிக்காப்பதும் யாரின் நலனுக்கானது?

சாதி இருப்பிற்குகான காரணங்கள்:-

சாதி அமைப்பு பாரம்பரியம், சமூக அமைப்பு, மதம், பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்ற பல காரணிகளால் பாதிக்கப் பட்டுள்ளது. சாதி அமைப்பு இன்னும் இருப்பதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:அ. பாரம்பரியம் மற்றும் பண்பாடு- சாதி அமைப்பு பல நூற்றாண்டுகளாக இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இது மதம், பண்பாடு மற்றும் சமூக வாழ்க்கை முறையுடன் இணைக்கப் பட்டுள்ளது. பாரம்பரியமாக, சாதி ஒரு நபரின் அடையாளம் மற்றும் சமூக நிலையை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது.

ஆ. திருமணம் மற்றும் குடும்ப அமைப்பு - இந்தியாவில் பெரும்பாலான திருமணங் கள் இன்றும் சாதி அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. குடும்பங்கள் தங்கள் சாதிக்குள் மட்டுமே திருமணங்களை ஏற்பாடு செய்வதை விரும்புகின்றன. இது சாதி அமைப்பை பலப்படுத்துகிறது; சாதியை (விட்டொழிவது) மாற்றுவதை கடினமாக்குகிறது.

இ. அரசியல் மற்றும் சமூக அதிகாரம் - சாதி அமைப்பு அரசியல் மற்றும் சமூக அதிகாரத்திற்காக, பல அரசியல் கட்சிகள் சாதி அடிப்படையிலான வாக்குகளைப் பெறுவதற்காக சாதி அமைப்பைப் பயன்படுத்துகின்றன. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் மற்றும் சலுகைகள் சில சாதிகளுக்கு பலனளிக்கின்றன, இது சாதி அமைப்பை ஒழிபதற்கு பதில் மேலும் பலப்படுத்து கிறது.

ஈ. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்- சாதி அமைப்பு பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுடன் நெருக்கமாக இணைக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, பட்டியல் இன சாதிகள் மற்றும் பழங்குடியினர் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்கின்றனர். சாதி அடிப்படையிலான தொழில்கள் மற்றும் பொருளாதார நிலைகள் இன்னும் பல பகுதிகளில் நீடிக்கின்றன.

உ. சமூக மாற்றங்களின் மெதுவான வேகம் - சாதி அமைப்பு பல நூற்றாண்டுகளாக இருப்பதால், அதை மாற்றுவது மிகவும் மெதுவான செயல்முறையாகும். சமூக மாற்றங்கள் மற்றும் கல்வி அதிகரித்தாலும், பலர் இன்னும் சாதி அடிப்படையிலான நம்பிக்கைகளை விடாது பின்பற்று கின்றனர்.

ஊ. சாதி அடிப்படையிலான பாகுபாடு - சாதி அடிப்படையிலான பாகுபாடு இன்னும் பல பகுதிகளில் நீடிக்கிறது.

இது சாதி அமைப்பை மேலும் பலப்படுத்துகிறது அதை ஒழிப்பதை கடினமாக்குகிறது.

சாதி அமைப்பு இன்னும் இருப்பதற்கு பல சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் மத காரணங்கள் உள்ளன. இருப்பினும், கல்வி, சமூக விழிப்புணர்வு மற்றும் சட்டபூர்வமான முயற்சிகள் மூலம் சாதி அமைப்பின் தாக்கத்தை குறைக்க முடியும். சாதி அமைப்பை முற்றிலுமாக ஒழிப்பது ஒரு நீண்ட மற்றும் சிக்கலான செயல் முறையாகும், அது சாத்தியமானது. அதனை பின்னர் பார்ப்போம்.

2). தேசிய இனப்பிரச்சினை.-பிரிட்டிஷ் ஆட்சியில் அதன் வாளின் வலிமை கொண்டு ஒற்றை நாடு என்று பல்தேசிய இனங்களை ஒன்றுபடுத்தி இந்தியாவை உருவாக்கியது அதன் ஆட்சி சுரண்டல் எளிதாக இருக்க. இன்றைய பல்வேறு ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் தீர்வு தனக்கான அதிகாரம் படைத்த சுதந்திர அரசும் அதற்கான வழிமுறை பற்றி சில கீழே.

மார்க்சிய - லெனினியவாதிகள் அனைத்து ஒடுக்கப்பட்ட நாடுகளின் பெரிய சிறிய நாடுகளின் சுதந்திர உரிமையை உயர்த்திப் பிடிக்கின்றனர். பிரிந்து போவதை உள்ளடக்கிய சுய நிர்ணய உரிமையை, தங்களுக்கான சொந்த நாடுகளை உருவாக்கிக் கொள்ளும் உரிமையை ஆதரிக்கின்றனர்.

“ரஷ்யாவில் நாம் நமது சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டத்துடன் தேசிய இனப் பிரச்சனைக்கான புரட்சிகரத் திட்டத்தையும் கட்டாயம் இணைத்துக் கொள்ள வேண்டும்” என்று லெனின் கூறினார். மேலும், “ஜார்ஆட்சியினால் ஒடுக்கப்பட்ட அனைத்து நாடுகளும் பிரிந்து சென்று சுதந்திரம் அடைவதற்கான கோரிக்கையை ரஷ்யா பாட்டாளி வர்க்கம் முன்வைக்க வேண்டும். இல்லையெனில், சோசலிசத்திற்கான நமது புரட்சிகர போராட்டம், ஜனநாயகத்திற்கான தேசிய இனங்களின் பிரச்சனை களுக்கான புரட்சிகர நடைமுறைகளோடு இணைக்கப் படாத நிலையில் வெறும் முழக்கமாகவே அமைந்து விடும் என்றும் லெனின் கூறினார்.

உலகில் உள்ள அனைத்து தேசங்களையும் ஒன்றிணைப்பதற்கு ஒவ்வொரு தேசங்களுக்கும் சுய நிர்ணய உரிமை அதாவது பிரிந்து போகும் உரிமையைக் கொடுத்து அவர்களது சுதந்திரமானவிருப்பத்தின் அடிப்படையில் கூட்டரசை உருவாக்கி,முழுமையானஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் இடைக்கட்டத்தின் மூலமாகவே தேசங்களை ஒன்றிணைத்து ஓர் உலக தேசத்தை உருவாக்க முடியும் என்பதே லெனினியம் காட்டும் வழியாகும். இதற்கு மாறாக ஒவ்வொரு தேசத்தையும் அதன் சுய நிர்ணய உரிமையை மறுத்துவிட்டு கட்டாயப் படுத்தி ஒன்றிணைப்பதன் மூலம் நிச்சயமாக ஓர் உலக தேசியத்தை நாம் படைக்க முடியாது. ஆகவே கம்யூனிஸ்டு களின் லட்சியம் ஒரு இந்திய தேசியம் அல்ல, மாறாக ஓர் உலக தேசியமே கம்யூனிஸ்களின் லட்சியமாகும். அதை அடைவதற்கு தேசங்களின் சுயநிர்ணய உரிமையை கட்டாயமாக கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டியது கம்யூனிஸ்ட்களின் கடமையாகும். தேசிய இனங்களின் சுய நிர்ணய உரரிமையை ஆதரிக்காதவர் எவரும் கம்யூனிஸ்டாக ஆகமுடியாது. அவர்கள் மக்களை சுரண்டி ஒடுக்கும் முதலாளித்துவவாதியாகவே தான் இருக்க முடியும்.

3). சோசலிசப் புரட்சியா? 

4). புதிய சனநாயகப் புரட்சியா?- எந்த வகை புரட்சி என்பதில் என்ன உள்ளன? பெயரில் ஒன்றுமில்லை. ஆக புரட்சிக்கான பணியை ஆற்ற வேண்டியவர்கள் தங்களுக்கான திட்ட பிரச்சினையில் தீர்க்க வேண்டியவை இவை. இவை கட்சிக்கான வழிமுறை. இவை கட்சியின் வளர்ச்சி கட்டத்தில் சரியான புரிதலோடு புரட்சிக்கான பணி செயவர்.

5). இந்திய சமூக வர்க்க பற்றி- மார்க்சியத்தை ஏற்பவர்கள் இந்திய சமூகமும் வர்க்க சமூகம் என்பதும் இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் அதன் சுரண்டலின் வடிவிலான அரசாகதான் இங்குள்ள பொழுது. அதன் வர்க்க சாரம் அதன் குண நலன் நாம் எளிதாக புரிந்துக் கொள்ள முடியும்.

இன்னும் நம் சமூகத்தை புரிந்துக் கொள்வதில் பல்வேறு விதமான குழப்பங்கள்- நாம் கொண்டுள்ள கண்ணோட்டம் அதாவது தத்துவ புரிதலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களே இதற்கு காரணம். உண்மையில் சமூக விஞ்ஞானம் நாம் வாழும் சமூகத்தை வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட் டத்தில் ஆய்வு செய்ய சொல்கிறது. அதன் அடிப்படையில் தமக்கான கொள்கை கோட்பாடுகளை வகுக்காமல் மார்க்சியம் அல்லாத தத்துவ கண்ணோட்டத்தின் அடிப்படையில் சமூகத்தை ஆய்வு செய்யும் பொழுது குழப்பத்தைதான் அடைவார்கள். ஆக தவறு அவர்களின் கண்ணோட்டதிந்தான் உள்ளன.

1).கம்யூனிச கட்சிகள் இன்று வரை பின்னடைவு, தேக்கம், பிளவுக்கான காரணம் என்று பேசுகின்றனர் அவர்களுக்கான பதில்:- இடதுசாரிகள் இடதுசாரிகளாக இல்லாததே இதற்கு காரணம் தங்களின் பணியை செய்யாத இடதுசாரிகள் தேக்கம் அடையவில்லை எதிரிமுகாமிற்கு ஏற்ற வகையில் செயல்படுவதனால் தங்களின் பணியை செய்யாமல் ஒதுங்கி எதிரிக்கு சாதகமாக நடந்துக் கொண்டுள்ளனர். அவர்கள் உண்மையில் மார்க்சிய ஆசான்கள் வகுத்தளித்துள்ள பாதையில் பயணிக்கவேயில்லை. அதற்கான இலக்கை அடைய மார்க்சிய லெனினியம் என்ற வழிகாட்டியை அடிப்படையாக கொண்டு செயல்பட்டால் மட்டுமே நமக்கான இலக்கை அடைய முடியும். இங்குள்ள ஒவ்வொரு பிரச்சினையும் தனித்தனியானவை அல்ல இவை அனைத்தும் நாம் வாழும் சமூகத்தில் உள்ள பிரச்சினையே! ஆக அதற்கான தீர்வை இங்கேதான் தேட வேண்டும். மார்க்சியமே வெல்லும் மார்க்சியத்தை பின்பற்றாமல் கைவிட்டதன் விளைவே.

2). சுதந்திரம் அடைந்தது என்பது பற்றி: சுதந்திரம் பெரும்முதலாளிகளுக்கு கிடைத்தது உழைக்கும் மக்களுக்கு கிடைக்கவில்லை.

3). இந்தியா ஒரு தேசம் என்பது பற்றி:- இந்தியா ஒரு துணைக் கண்டம், தேசம் இல்லை. பிரிட்டிஷ் காலத்திலும் அல்லது அதற்கு முன்னும் பின்னும் தேசமாக இல்லை. பல தேசங்களை கொண்ட ஒற்றை ஆட்சியின் கீழ் உள்ளது.

4).மொழி வழி தேசிய புரட்சி என்றால்:-தேசம் பற்றி தெளிவடைய மார்க்சிய ஆசான் ஸ்டாலின் கூறியவை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் அதன் வழிபட்ட முறையில்தான் விடுதலைக்கு உலகில் நடைமுறையில் காண்கிறோம்.

5).சாதி பிரச்சினை ஒரு காலத்தில் சாதியே வர்க்கமாக இருந்த நிலைமாறி இன்று ஒவ்வொரு சாதியிலும் மக்கள் வர்க்கமாக பிளவு பட்டு நிற்கின்றனர். அந்த வர்க்கமாக ஒன்றுபடுத்த வேண்டியதை செய்யாமல் சாதியாக ஒன்று சேர்க்கும் வேலையை ஆளும் வர்க்கம் செய்கிறது ஏனெனில் உழைக்கும் ஏழை ஏளிய மக்கள் வர்க்கமாக ஒன்று திரண்டுவிட்டால் ஆட்சியில் இவர்கள் காலம் தள்ள முடியாது அதற்குதான் மதவாதிகள் பேசும் மத ஒற்றுமை, இங்கே மதத்தில் ஒரு சிலருக்காக பெரும்பான்மையினோர் ஒடுக்கப்பட்டு வாழும் அவலம் இதனை இதே மதவாதிகள் மத தேவைகென்று மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி சுரண்டுகின்றனர் அவர்களை வர்க்கமாக ஒன்று திரள்வதை மறைப்பது போல் இங்கே சாதியாகபேசுவதும் புரிந்துக் கொள்ள...

6). மனிதன் என்பவன் தனி படைப்பு என்று கூறிக் கொள்ளவே விரும்புகின்றனர். ஆனால் தற்கால விஞ்ஞானிகள் பரிணாம பாதையில் வெற்றி பெற்ற பாலூட்டி இனங்களில் ஒன்றுதான் மனித இனம் என்று நிரூபித்துள்ளனர். உடற்கூறுரீதியாக ஹோமோசெபியன் (Homo sapiens) என்றழைக்கப்படும் நவீனமனிதர்கள் (அறிவுக் கூர்மையுடைய மனிதன்) ஆப்பிரிக்காவில் தோன்றினர். இந்த நவீன மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர் இடப்பெயர்வால் பரவியதாக நம்பப்படுகிறது. இவ்வாறு மனிதனின் வளர்ச்சி போக்கை அறியும் நாம் மனிதன் மூலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அவன் விலங்கினத்தை சேர்ந்தவன் என்பதில் ஐயமில்லை. அந்த ஆதிமனிதனின் உழைப்பின் வளர்ச்சியில் இன்று பிரமாண்ட நிலையில் வளர்ந்து நிற்கிறது மனித சமூகம்.

மார்க்சியம் எனும் சமூக விஞ்ஞானத்தை புரிந்துக் கொண்டால் இந்த சமூகத்தை புரிந்துக் கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. நமக்கான கண்ணோட்டம் மார்க்சியமாக இருந்தால்.

சுருக்கமாக நமது தவறான பக்கமாக நாங்கள் கணிப்பது

கேள்வி :- இந்தியாவில் உள்ள கம்யூனிச குழுக்களின் தேக்கத்திற்கும், பிளவிற்கும், பின்னடைவிற்கும் அடிப்படையான காரணம் என்ன?

அதற்கான எங்களின் பதில்

1). மார்க்சிய அமைப்புகள் மார்க்சிய போதனைகளின் அடிப்படையை புரிந்துக் கொள்ள தவறினார்கள்

2). மார்க்சிய அடிப்படையில் சமூக வர்க்க ஆய்வு நடத்த தவறினார்கள்.

இந்திய சமுக பொருளாதார அரசியல் வரலாற்றை புரிந்துக் கொள்ள தவறினார்கள்.

3). இந்திய சமூக மாற்றதிற்கான விஞ்ஞான பூர்வமான திட்டத்தை உருவாக்க தவறினார்கள்

4). அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டத்தை சோதித்து அதில் உள்ள குறைகளை புரிந்துக் கொள்ளவும் தவறினார்கள்.

5). திட்டத்தில் காணப்பட்ட குறைகளை களைந்து புதிய செழுமை படுத்தப்படுத்தப்பட்ட திட்டத்தை உருவாக்கவும் தவறினார்கள்.

6). அரசு பற்றி மார்க்சிய போதனைகளை உள்வாங்கி அணிகளுக்கு போதித்து அதன் அடிப்படையில் நடைமுறை வகுத்து செயல்பட மறுத்தார்கள்.

7). நிலவுகின்ற அரசமைப்பு மக்களுக்கு எதிரானது இதனை தகர்க்க வேண்டும் என்று மக்களுக்கு போதிக்கவும் மறுத்தார்கள்.

8). இந்த நிலவுகின்ற பிற்போக்கு அரசிற்கு மாற்று புரட்சிகர பாட்டாளி வர்க்க அரசே என்பதை மக்களுக்கு போதித்து அதற்காக மக்கள் பாடுபட வேண்டுமென்று மக்களை அணித்திரட்ட மறுத்தார்கள்.

9). தொழிலாளர்களை தொழிற்சங்க வகைப்பட்ட பொருளாதார போராட்டங்களிலே ஈடுபடுத்தி வர்க்க அதிகாரதிற்கான போராட்டங்களில் ஈடுபடுத்த தவறி தொழிலாளி வர்க்கத்தின் பாட்டாளி வர்க்க உணர்வை மழுங்கடித்தனர்.

10). இந்த பாராளுமன்ற தேர்தலில் பங்கெடுத்து நிழவுகின்ற அரசமைப்பை பாட்டாளி வர்க்கம் தனது நலனுக்கு பயன்படுத்த முடியாது என்ற பாரீஸ் கம்யூன் அனுபவதை முற்றிலும் நிராகரித்த பாராளுமன்றத்தை முழுமையாக பயன்படுத்த முடியும் என்ற திருத்தல்வாத நிலை எடுத்து செயல்பட்டனர்.

11). இதற்கு நேர் எதிராக மா-லெ கட்சியினர் மக்களின் நம்பிக்கையை பெற்ற தேர்தல் நிராகரித்து தேர்தலில் கலந்துக் கொண்டு இந்த பாராளுமன்ற ஆட்சி முறை மக்களுக்கனது அல்ல. என்பதனை மக்களிடம் அம்பலபடுத்த தவறினர் அதனால் மக்களிடமிருந்து இவர்கள் தனிமைபட்டனர்.

12). தேர்த்தல் முறைகள் மூலம் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று கருதி ஆட்சிக்கு வந்தவர்கள் கார்ப்ரேட் முதலாளிகளின் விருப்பங்களை நடைமுறை படுத்துவதை தவிர வேறு வழியில்லாத நிலையில் மக்களிம் மீது தாக்குதல் தொடுத்து மக்களிடம் அம்பலப்பட்டு மக்களின் செல்வாக்கை இழந்தனர்.

13). பாட்டளி வர்க்க கொள்கை கோட்பாடுகளை முன் வைத்து ஒரு பாட்டாளி வர்க்க கட்சியாக வளர்க்காமல் முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டு வைத்து மக்களின் நம்பிக்கை இழந்தனர்.

14). கட்சி அமைப்பில் உள்ள தோழர்களிடம் பாட்டாளி வர்க்க பண்பை வளர்க்காமல் அவர்களை உள்ள சமூக நிலைமைகளை புரிய வைக்கவில்லை.

15). கட்சிகுள் உருவான கருத்து வேறுபாடுகளை உட்கட்சி சித்தாந்த போராட்டம் நடத்தி தீர்வுகாண தவறினார்கள்.

16). உட்கட்சி போராட்டம் என்றாலே தனிநபர்கள் மீதும் நடத்தும் தாக்குத்தலாகவும் தனிநபர்களை கட்சியிலிருந்து தூக்கி எறிவதற்கான போரட்டமாகவே அல்லது கட்சியை பிளவு படுத்தும் நடவடிக்கையாகவே இருந்தது.

17). கருத்து வேறுபாடுகளை எதிர்த்து கட்சியை ஒற்றுமை படுத்துவதற்கான முயற்சி சிறிதும் இல்லை.

18). கட்சியில் தலைவர்கள் பற்றியோ அல்லது கட்சியை பற்றியொ யாரும் விமர்சனம் செய்தால் விமர்சனம் செய்தவரை எதிரியாகவும் அந்த விமர்சனத்தை கட்சிக்கு எதிரானதாகவும் பார்க்கப்பட்டது.

19). கட்சின் மீதும் தலைமையின் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களை பரிசீலித்து அதில் தவறு இருக்குமானல் சுய விமர்சனம் செய்துக் கொண்டு தவறுகளை களைவதற்கு முயற்சி எடுத்ததே இல்லை.

20) மர்க்சிய லெனினிய ஆசான்களின் போதனைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்து போராடி மார்க்சிய விரோதிகளையும் மார்க்சிய விரோத கருத்துகளையும் மக்களிடம் அம்பலப்படுத்தி முறியடிக்கவே இல்லை இதன் பயனாய் மார்க்சிய விரோதிகளும் மார்க்சிய விரோதக் கருத்துகளும் மக்களிடம் ஆழமரமாக வேர்விட்டு வளர்ந்திருக்கிறது

தற்பொழுது இந்திய சமூக மாற்றதிற்கு மார்க்சியம் மட்டும் போதாது என்றும் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கருத்துகளையும் மார்க்சிய கருத்துகளோடு களந்து செயல்பட வேண்டும் எனற கலைப்புவாத கொள்கை முடிவுகளுக்கு செயல்படுகின்றனர்.

21). தேசிய சுய நிர்ணய உரிமை என்ற லெனினிய கோட்பாட்டை ஏற்க மறுத்து ஆளும் வர்க்க கருத்தான ஒற்றை அரசு கோட்பாட்டை கடைபிடித்து செயல்படுகின்றனர்.

22). கட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதாரவாளர்களிடம் சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து உழைக்கும் மக்கள் அனைவரும் ஓர் அணியில் திரண்டு தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும் மத சிறுபான்மையினர் மீது தொடுகப்படும் தாக்குதலுக்கு எதிராகவும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்ற உணர்வூட்டி போராட்டம் நடத்த தவறினர்.

23). நிலகின்ற அரசுக்கு மாற்றாக பாட்டாளி வர்க்க அரசில் எந்தெந்த வர்க்கங்கள் பங்குபெற வேண்டும் அதற்கான நிறுவனங்கள் என்னென்ன வேண்டும் அந்த அரசில் உழைக்கும் வர்க்கம் எப்படி பக்குகொள்ள வேண்டும்? அந்த அரசை உழைக்கும் வர்க்கம் எப்படி கண்காணிக்க வேண்டும்? அந்த அரசு தவறு செய்தால் உழைக்கும் வர்க்கம் எந்த வகையில் போன்ற பல பிரச்சினைகளை பற்றி ஆய்வு செய்து அது பற்றிய தீர்மானகரமான முடிவுகளை அணிகளுக்கும் மக்களுக்கும் தெரிவித்து விவாதங்கள் நடத்தி முடிவு காண தவறினர்.

24) கட்சியில் தலைமை பதவிக்கு போட்டி இட்டு கட்சிக்குள் பிளவுவேலைகள் சுயநலவாதிகளால் நடத்தப்பட்டது அதன் காரணமாக கட்சி பிளவுபட்டது. பிளவுபட்ட கட்சிகளுக்கு இடையில் கொள்கை ஒற்றுமை இருந்த பொழுதும் அந்த கட்சிகள் ஒன்றுபடுவதற்கு தடையாக தலைமை வெறிபிடித்தவர்கள் காரணமாக இருக்கிறார்கள்.

இதற்கு அடிப்படை காரணம் கட்சி அணிகளிடையே சோசலிச சிந்தனைமுறையும், சோசலிச வர்க்க உணர்வும் வளர்த்து பயிற்சி அளிக்கப்படாததே காரணம்.

25). சமூக மாற்றதிற்கான மக்களின் எதிரிகள் யார் மக்களின் நண்பர்கள் யார் என்பது பற்றி மிகத் தவறான அதாவது எதிரிகளை நண்பர்களாகவும் நண்பர்களை எதிரிகளாகவும் பார்த்து கொள்கை முடிவெடுத்து செயல்பட்டார்கள்.இவர்களித்தில் பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் இல்லை.

26) குட்டிமுதலாளித்துவ சிந்தனைப்படைத்த குறுங்குழுவாதிகளின் தலைமை கம்யூனிச இயக்கத்தை பல குழுக்களாக சிதறட்டுத்து, ஒன்றுபட வேண்டிய மக்களை பிளவுப்படுத்தி எதிரிகள் முன் பலமிழந்த கோழைகளாக மாற்றி விட்டனர். இதற்கு காரணம் இந்த தலைவர்களின் சுயநலம் பதவியின் மீது மோகம் முதன்மையான காரணமாகும். கட்சியின் ஒற்றுமையை பாதுகாப்பதற்கான சித்தாந்த போராட்டம் நடத்துவதற்கு வக்கற்ற சித்தாந்த ஓட்டாண்டிதனம் ஒரு காராணம்.

தொடரும் அடுத்த இதழில்...

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்