அரசென்பது எந்த வர்க்கதிற்கானது என்பதனை புரிந்துக் கொள்ளாவிட்டால் இதுபோல்தான் முடியும்.
நீண்ட நெடிய இந்த துறைமுக எதிர்ப்பு போராட்டம் தெரிவிக்கிறது. இன்று அந்த ஒருமுதலாளிக்காக வலதுசாரி மோடியும் இடதுசாரி பிரனாயும் சந்திப்பது யாரின் நலனுக்கு தெரிந்தவர்கள் சொல்லாம்?
மற்றோருவிடயம் அறுக்கமட்டாதவன் இடுப்பை சுற்றி அம்பெத்தெட்டு அறுவாளாம் என்பர் எங்கள் பகுதியில் அதேபோல் மாமியா உடைத்த மண் சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்பர். ஒட்டுமொத்த நிலவுடைமை சமூக மிச்சசொச்சங்களை தலையில் சுமந்துக் கொண்டே கம்யூனிஸ்டாக வலம் வரும் பலரும் தங்களின் தவறுகளை அடுத்தவர் மீது குற்றம் சுமத்தியே தன் தவறை மறைத்துக் கொள்கின்றனர். தவறியும் தங்களை பற்றி சுயவிமர்சனம் செய்துக் கொள்ள துணிவற்றவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல அவர்கள் ஒட்டுண்ணி கூட்டமே. மேலே செல்வோம்.
NGO எதிர்ப்பு பேசும் கூட்டம் ஒன்றை அதன் பிரச்சாரத்தில் கண்டேன். தன் சுய வளர்ச்சியில் பங்குதாரர்கள் பற்றி அதனை கண்டுக்கொள்ளாத இந்த புதிய கூட்டணி, அவை NGO அரசியல் செய்வோரிடமே கூட்டு சேர்ந்துக் கொண்டு NGO எதிர்ப்பு வேசம் போடுவது போல்தான் இந்த சுரண்டும் அரசில் அங்கம் வைத்துக் கொண்டே உழைக்கும் மக்கள் நலம் பேசுவது.
இதனை மார்க்சிய ஆசான்கள் அன்றே அம்பலப்படுத்திவிட்டனர் நான் என்ன பேச?
வர்க்க சமூகத்தில் வர்க்க அரசுதான் அவை எந்த வர்க்கதிற்கான அரசு? அதானிக்கு எனும் பொழுது அதானி யார்? எந்த வர்க்க பின்புலம் கொண்டவர்? வர்க்கம் தெரிந்து பேச அழைக்கிறேன் தோழர்களே
உலக தொழிலாளர் தின வாழ்த்துகள் முதலாளியும் சொல்கிறான் உழைப்பை சுரண்டிக் கொண்டே ஏன் சட்டப்படி நடப்பதாக கூறும் ஆளும் வர்க்கமும் சொல்கிறது மே தின வாழ்த்து. உழைக்கும் மக்களை சுரண்டிக் கொண்டே அடக்கி ஒடுக்கிக் கொண்டே..... இந்த வாழ்த்துகள் சொல்ல இவர்களுக்கு தகுதி உள்ளதா?
See insights
No comments:
Post a Comment