ஏகாதிபத்திய புரிதலுக்கும் மார்க்சிய ஆசான்களான ஸ்டாலின் மாவோவை அவதூறு செய்வதன் மூலம் என்ன செய்துக் கொண்டுள்ளனர்

 ஏகாதிபத்திய புரிதலுக்கும் மார்க்சிய ஆசான்களான ஸ்டாலின் மாவோவை அவதூறு செய்வதன் மூலம் என்ன செய்துக் கொண்டுள்ளனர்.

மார்க்சிய லெனினிய தத்துவ போராட்டத்தின் அவசியமும் நம்மிடையே மார்க்சிய புரிதலில் உள்ள குறைபாட்டை பயன்படுத்தி குழப்பும் வேலை செய்பவர்களை புரிந்துக் கொள்ளும் ஒரு முயற்சிதான் இந்த சிறு நூல்கள் விவாதத்தை முன்னெடுக்கும் அவசியதிற்கானதே.

1943 மே 15ம் தேதி மூன்றாம் அகிலத்தின் செயற்குழு தலைமைக் குழுவின் யோசனைக்கு ஆதரவாக அகிலத்தின் 31 நாட்டு கட்சி கருத்து தெரிவித்திருந்தனர். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கூட அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. கம்யூனிஸ்ட் அகிலம் கலைக்கப்படுவது பற்றி உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின். பொதுவான கொள்கை கோட்பாடுகளாக பாட்டாளி வர்க்க உறுதிப்பாடாக பாசிச எதிர்ப்பின் அவசியமாக அமைந்திருந்ததை காண்பிக்கிறது (கம்யூனிஸ்ட் அகிலம் சுருக்கமான வரலாறு பக்கம் 795).

லெனின் காலத்திலிருந்து சர்வதேசிய சூழ்நிலைகளில் உலகை அதிர செய்யும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. லெனினின் புரட்சிகர போதனைகள் சரியானவை என்பதையும், லெனினியப் பதாகை வெல்லற்கரியது என்பதையும், முழு உலக வரலாற்றினதும் வளர்ச்சி நிரூபித்துள்ளது. ஆனால் வரலாறு தனக்கே உரிய மாற்றங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எங்கெல்சின் மறைவுக்குப் பின் பெர்ன்ஸ்டைன் காவுத்ஸ்கி திரிபுவாதம் தோன்றியதுபோல் அது ஸ்டாலின் மறைவுக்குப் பின் குருசேவ் பிரஷ்னேவ் நவீன திரிபுவாதம் தோன்றியது. (மாபெரும் விவாதம் நூலின் பக்கம் 799).

 தேசிய விடுதலை இயக்கம் ஒரு புதிய கட்டத்தை அடைந்திருக்கிறது. ஆனால் இது எவ்வகையிலும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் குறிப்பிடுகிற புதிய கட்டமல்ல. புதிய கட்டத்தில் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க மக்களின் அரசியல் உணர்வு மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. புரட்சி இயக்கம் முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு வேகத்துடன் முன்னோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய சக்திகளும் தங்கள் சொந்த நாடுகளில் உள்ள ஏகாதிபத்திய அடிவருடிகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் உடனடி கோரிக்கையாக இருக்கிறது. ஒடுக்கபட்ட நாட்டு மக்கள் தங்களுடைய முழுமையான அரசியல், பொருளாதார சுதந்திரத்திற்காக பாடுபடுகின்றனர். ஏகாதிபத்தியம் பழைய மற்றும் புதிய காலனியம் இவர்களுடைய அடிவருடிகள் ஆகியோருக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுப்படுத்தவில் நாடுகளின் முதன்மையான, அவசரமான கடமையாக உள்ளது. இந்த போராட்டம் அரசியல், பொருளாதார, இராணுவ, கலாச்சார சித்தாந்த மற்றும் பிற தளங்களில் தொடர்ந்து தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. எல்லா தளங்களிலும் தொடர்ந்து தீவிரம் அடையப்படுகிறது. நடைபெறும் போராட்டங்கள் தீவிர அரசியல் போராட்டமாக வெளிப்படுகின்றன. ஏகாதிபத்தியவாதிகள் நேரடியாக அல்லது மறைமுகமான ராணுவ நடைமுறை ஒடுக்குமுறை காரணமாய் போராட்டங்களை தவிர்க்க முடியாதபடி ஆயுதப் போராட்டமும் மாறுகின்றன. புதிய  சுதந்திரமடைந்த நாடுகள். தங்களது சுதந்திரமான பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வது முக்கியமானது. ஆனால் ஏகாதிபத்தியம் பழைய புதிய காலனியம் மற்றும் அவர்களின் அடிவருடிகளுக்கும் எதிரான போராட்டத்தில் இருந்து இந்த கடமையை ஒருபோதும் ஒழித்துவிடாது. காலனியம் மறைவு என்ற கோட்பாட்டை போலவே ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி. தலைவர்கள் முன் வைக்கப்படும் புதிய கட்டம் என்ற கோட்பாட்டின் நோக்கம் அமெரிக்காவினால் பிரதிநிதிப்படுத்தும் புதிய காலனித்தால் ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆக்கிரமிக்கப்படுவதையும் கொள்ளையடிக்கப்படுவதையும் பூசி மெழுகுவதாகும். ஏகாதிபத்தியத்திற்கும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் இடையிலான கூர்மையான முரண்பாட்டை மூடி மறைத்துக் கண்டங்களின் மக்கள் நடத்தும் புரட்சிகர போராட்டங்களை செயல் இழக்கச் செய்வதாகும். (ஆதாரம் மாபெரும் விவாதம் நூல் பக்கம் 468).

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்