மார்க்சிய மெய்யியலும் சமூக மாற்றத்திற்கான புரட்சிகரப் பாதையும்-எழுத்து மற்றும் ஒலி வடிவில்

லெனினியம்: பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான வழிகாட்டி மற்றும் நடைமுறைத் தத்துவம்

இந்த ஆதாரங்கள் மார்க்சிய-லெனினிய தத்துவத்தின் அடிப்படை அம்சங்களையும், சமூக மாற்றத்தில் அதன் அவசியத்தையும் விரிவாக விளக்குகின்றன. ரஷ்யப் புரட்சியின் போது லெனின் எவ்வாறு சந்தர்ப்பவாதக் கருத்துக்களை முறியடித்து, பாட்டாளி வர்க்கத்திற்கான ஒரு புரட்சிகரக் கட்சியை உருவாக்கினார் என்பதை இக்கட்டுரை முதன்மைப்படுத்துகிறது. வெறும் தத்துவமாக மட்டுமில்லாமல், மார்க்சியத்தை அந்தந்த நாட்டின் சமூகச் சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதன் மூலமே உண்மையான விடுதலையைப் பெற முடியும் என்று இது வலியுறுத்துகிறது. குறிப்பாக, இந்தியச் சூழலில் கம்யூனிச இயக்கங்கள் எதிர்கொண்ட திருத்தல்வாதப் போக்கினை விமர்சிப்பதோடு, தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் எழுச்சியே புரட்சிக்கு வழிவகுக்கும் என்கிறது. இறுதியில், சுரண்டலற்ற சமூகம் படைக்க மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை அடிப்படையில் மக்களைத் திரட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை இப்பாடப்பகுதி எடுத்துரைக்கிறது. இந்த கட்டுரையை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே

லெனின் எவ்வாறு மார்க்சியத்தை ரஷ்யாவின் அன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்தார்?

இந்திய கம்யூனிச இயக்கங்கள் லெனினிய வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில் சந்தித்த சவால்கள் என்ன?

ஒரு புரட்சிகரமான கட்சியை உருவாக்குவதற்கு லெனின் முன்வைக்கும் அடிப்படை கோட்பாடுகள் யாவை?

இலக்கு 91 இணைய இதழை இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் வாசித்து கருத்தை சொல்லுங்கள் தோழர்களே

மார்க்சிய மெய்யியலும் சமூக மாற்றத்திற்கான புரட்சிகரப் பாதையும்

இந்த ஆதாரங்கள் இலக்கு இணைய இதழின் 91-வது பதிப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. இவை முதன்மையாக மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனைகளை விளக்குவதையும், உழைக்கும் மக்களிடையே புரட்சிகரமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, மனித உழைப்பிற்கும் விலங்குகளின் செயல்பாட்டிற்கும் இடையிலான தத்துவார்த்த வேறுபாடுகள், உற்பத்தி கருவிகளின் வளர்ச்சி மற்றும் சமூக உறவுகளின் பரிணாமம் குறித்து இக்கட்டுரைகள் விரிவாக ஆராய்கின்றன. சோவியத் புரட்சித் தலைவர் லெனினின் வாழ்க்கை, அவரது அரசியல் செயல்பாடுகள் மற்றும் அவர் திருத்தல்வாதத்தை எதிர்த்துப் போராடிய விதம் ஆகியவை இதில் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும், தத்துவத்தையும் நடைமுறைப் போராட்டத்தையும் இணைப்பதன் மூலம் மட்டுமே சுரண்டலற்ற சமூகம் மற்றும் சோசலிச அரசை உருவாக்க முடியும் என்பதை இந்த ஆவணங்கள் வலியுறுத்துகின்றன. சுருக்கமாகச் சொன்னால், இது மார்க்சிய சமூக அறிவியலைச் சமகாலப் பிரச்சினைகளோடு பொருத்திப் பார்க்கும் ஒரு அரசியல் வழிகாட்டியாக அமைகிறது.

விலங்குகளிலிருந்து மனிதனை வேறுபடுத்தும் உற்பத்திக்கான உழைப்பு என்றால் என்ன?ஆசான் லெனின் காட்டிய வழியில் ஒரு புரட்சிகரமான கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும்?

கம்யூனிச இயக்கத்தில் காணப்படும் திருத்தல்வாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்தை எதிர்கொள்வது எப்படி?

இலக்கு 91 இணைய இதழ் ஒலி மற்றும் எழுத்து வடிவில்

 இலக்கு இணைய இதழின்” நோக்கம் மார்க்சிய-லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் புரட்சிகர அறிவாளிகளோடு விவாதிப்பதும், சரியான மார்க்சிய அறிவியலை எல்லோரும் ஏற்கும் வகையில் புரிய வைப்பதுமே யாகும். "இலக்கு” இதழில் தங்களது விமர்சனங்களை விவாதங்களை மார்க்சிய-லெனினிய அடிபடையில் வைக்கும்படி அழைக்கிறோம். தங்களின் மேலான கருத்துகளை எழுதி அனுப்பும் படி கேட்டுக் கொள்கிறோம். அனுப்பி வைக்க இமெயில் cpalani.cpalani@gmail.com மற்றும் வாட்சாப் எண் 7010134299. மார்க்சிய-லெனினியத்தை கற்கும் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள அழைக்கின்றோம் தோழர்களே.


இலக்கு 91 இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்

1).முதலாளியமும் அதன் பிறகும். ஜார்ஜ் தாம்ஸன். பாகம் 1.

2).ஆசான் லெனின் நமக்கான வழிகாட்டி

3). திருத்தல்வாதம். செங்யென்-சி. பாகம் 1.

நாம் ஒரு கம்யூனிஸ்டாக என்னென்ன அடிப்படைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் அதற்கு ஆசான்கள் காட்டியுள்ள வழிமுறைகளையும் தேடிய பயணமே நமக்கான இலக்காக தொடர்ந்துக் கொண்டுள்ளோம் தோழர்களே...

இலக்கு 91 இணைய இதழை இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் வாசித்து கருத்தை சொல்லுங்கள் தோழர்களே

இலக்கு 91 இணைய இதழை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

மனித குலத்தின் வரலாற்று வளர்ச்சியில் தனிச்சொத்துடமையின் தோற்றம் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வினையும் வர்க்கங்களையும் உருவாக்கியது. இத்தகைய வர்க்கங்களிடையிலான முரண்பாடுகளும் போராட்டங்களும் பொதுவாகி போனது. மனித குலத்தின் வரலாறு வர்க்க போராட்டங்களின் வரலாறாகிக் கொண்டது. வர்க்க முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கின் விளைவுகளால் அரசு தோன்றியது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் மார்க்ஸ் விளக்கியது போன்று அரசென்றால் ஒரு வர்க்கம் வேறு ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான ஒரு கருவியாகும். அது வர்க்கங்களுக்கு மேலே, சமுதாயத்திற்கு மேலே உள்ள ஒரு நடுநிலை அமைப்பல்ல. சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை அடிமைத்தனமாக வைத்திருப்பதற்கான ஓர் அடக்குமுறைச் சாதனமே அரசு ஆகும். சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை கீழே வைத்திருப்பதற்காகப் படிப்படியாகக் கட்டப்பட்ட சாதனமே அரசு. வர்க்க சமுதாயத்தில் ஆட்சி செலுத்துவது உண்மையில் அதுவே. கட்சிகள் வரலாம் போகலாம். ஆனால் சுரண்டும் அமைப்புமுறை இருக்கும்வரை அரசு இயந்திரம் அவ்வாறே இருக்கும். அவர்கள் முதலாளியின் உயிரையும், உடமையையும் பாதுகாக்க வந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கியவர்களாக வந்திருக்கின்றார்கள். அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும், அவனது வர்க்கத்தையும் பாதுகாக்கின்றது. அதனை எதிர்த்த போராடும் வர்க்கம் தனக்கான போராட்டத்தில் எவ்வகையான சமூகம் அமைக்க போகிறோம்? அந்த போராடும் சக்தி யார் யார் ? அதனை விரிவாக அறிந்திருந்தாலே நமக்கான அரசியல் எளிதாக இருக்கும் தோழர்களே,






சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம் மார்க்சியமா?-03 (AI உதவியுடன் ஒலி வடிவில்)

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மாற்றி எழுத துணிந்துள்ள ஒரு மார்க்சிய விரோதிக்கு பதிலளிக்கவே இந்தப்பதிவு.

முதலில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் ஆசான்கள் கூறியுள்ளதை பார்ப்போம். எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னுரையில் எழுதியுள்ள வாசகமே...
"அறிக்கையானது ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை" இவை மூன்று முன்னுரையில் உள்ளன...
ஆனால் மார்க்சியத்தை மறுத்து ஆளும் வர்க்கதின் கைத்தடியாக மாறிப்போன காவுத்ஸ்கியின் வாரிசுகள் கம்யூனிஸ்ட கட்சியில் சொன்னது நடக்கவில்லை அதனால் கம்யூனிஸ்ட் கட்சியை மாற்ற வேண்டும் எனும் ஒருவனை பற்றியே விவாதம்...
தோழர்களே..
லெனின் "சந்தர்ப்பவாதமும் இரண்டாம் அகிலத்தின் தகர்வும்" என்ற கட்டுரையில் இவனின் முன்னோடிகளை வரிசை படுத்தியுள்ளார் இவனும் அவர்களின் வாரிசுதான் என்பதோடு இவனை போன்றோர் அன்றே விமர்சன சுதந்திரத்தின் பெயரில் மார்க்சியத்தை திருத்தம் செய்ய முனைந்த பெர்ன்ஸ்டைனை லெனின் அம்பலப்படுத்தி இருப்பார் என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் ஆகையால் இவன் அவர்களின் வாரிசுதானே அன்றி வேறல்ல தொடர் விவாதத்தில் இந்த மார்க்சிய விரோதியின் செயலை வன்மையாக கண்டிப்பதோடு இவனை போன்றோரை அம்பலப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டியுள்ளது

முதலில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் ஆசான்கள் கூறியுள்ளதை பார்ப்போம், பின்னர் அந்த மார்க்சியத்தை மறுக்கும் மார்க்சிய விரோதியின் கருத்தை பார்ப்போம் தோழர்களே...

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: திருத்தல்வாத எதிர்ப்பு அரண்


இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் அடிப்படை மாறாத தன்மையைப் பாதுகாப்பதே இந்த உரையின் முதன்மை நோக்கமாகும். கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரின் கூற்றுப்படி, இந்த அறிக்கை திருத்தப்பட முடியாத ஒரு வரலாற்று ஆவணம் என்பதை ஆசிரியர் வலியுறுத்துகிறார். சமகாலச் சூழலுக்கு ஏற்ப அறிக்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று கோருபவர்களை மார்க்சியத் துரோகிகளாகவும் திருத்தல்வாதிகளாகவும் இக்கட்டுரை கடுமையாகச் சாடுகிறது. வர்க்கப் போராட்டம் மற்றும் பாட்டாளி வர்க்க விடுதலை குறித்த மூலக் கோட்பாடுகள் இன்றும் செல்லுபடியாகும் என்பதைப் பல்வேறு முன்னுரைகளின் வாயிலாக ஆசிரியர் மெய்ப்பிக்கிறார். புரட்சிகரப் பாதையைக் கைவிட்டு, முதலாளித்துவத்திற்குத் துணைபோகும் சந்தர்ப்பவாதக் கருத்துக்களை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை இவ்வுரை உரக்கச் சொல்கிறது. இறுதியாக, மார்க்சியத்தை அதன் தூய வடிவத்தில் சிதைக்காமல் பின்பற்றுவதே உண்மையான கம்யூனிசப் பணியாகும் என்று இது வாதிடுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை திருத்துவது பற்றி மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் நிலைப்பாடு என்ன?

வர்க்கப் போராட்டம் மற்றும் சமூக விடுதலை குறித்து இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை கருத்துக்கள் யாவை?

நவீன சூழலுக்கு ஏற்ப மார்க்சியத்தை மாற்ற வேண்டும் என்பவர்களின் வாதங்களை இந்த ஆதாரம் எவ்வாறு விமர்சிக்கிறது? 

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ் 1872-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரையில்

அறிக்கையானது ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை. 1847-லிருந்து இன்றுவரையுள்ள இடைவெளியை நிரப்பும் ஒரு முன்னுரையோடு அடுத்து ஒரு பதிப்பு வெளிவரக்கூடும். தற்போது இந்த மறுபதிப்பு மிகவும் எதிர்பாராத நிலையில் வெளியாவதால், இப்பணியைச் செய்துமுடிக்க எங்களுக்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது.

கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

லண்டன், ஜூன் 24, 1872. 

என்று எழுதியுள்ளனரே தவிர வேறென்ன எழுதியுள்ளனர்?

1883-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை

அந்தோ! தற்போதைய பதிப்பின் இந்த முகவுரைக்கு நான் மட்டும் தனியே கையெழுத்திட வேண்டியுள்ளது. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் முழுமையும் வேறு எவரையும்விட அதிகமாகக் கடமைப்பட்டுள்ள அந்த மாமனிதர் மார்க்ஸ் ஹைகேட் இடுகாட்டில் உறங்குகிறார். அவருடைய கல்லறையின்மேல் முதலாவது பசும்புல் ஏற்கெனவே அரும்பிக் கொண்டிருக்கிறது. மார்க்சின் மறைவுக்குப்பின் அறிக்கையைத் திருத்தியமைப்பதும், புதியன சேர்ப்பதும் நினைத்துப் பார்க்கவும் இயலாதது. பின்வருவனவற்றை வெளிப்படையாக மீண்டும் இங்கே எடுத்துரைப்பது முன்னைக் காட்டிலும் அவசியமெனக் கருதுகிறேன்:

அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படையான கருத்து – ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும், அதிலிருந்து தவிர்க்க முடியாதபடி எழுகின்ற சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன. ஆகவே, (புராதன நிலப் பொதுவுடைமை அமைப்பு சிதைந்துபோன காலம்தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. அதாவது, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்), தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும், ஒடுக்கு முறையிலிருந்தும், வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.நான் இதனை ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன். என்றாலும், முக்கியமாக இப்பொழுது அறிக்கையின் முகவுரையிலேயே குறிப்பிட வேண்டியதும் அவசியமாகும்.

ஃபிரெடெரிக் எங்கெல்ஸ்

 ஜுன் 28, 1883.

இந்தப்பகுதியிலும் எங்கெல்ஸ் "மார்க்சின் மறைவுக்குப்பின் அறிக்கையைத் திருத்தியமைப்பதும், புதியன சேர்ப்பதும் நினைத்துப் பார்க்கவும் இயலாதது" என்கிறார்.

1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய முகவுரையிலிருந்து

1872-ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதிய முகவுரையிலிருந்து கீழ்க்காணும் பகுதியை இங்குத் தருகிறேன்:

"கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருந்த போதிலும், இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம். இந்தக் கோட்பாடுகளின் நடைமுறைப் பயன்பாடு என்பது, இந்த அறிக்கையே குறிப்பிடுவதுபோல, எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில் முன்மொழியப்பட்டுள்ள புரட்சிகர நடவடிக்கைகள் மீது தனிச்சிறப்பான அழுத்தம் எதுவும் தரப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தைப் பல கூறுகளில் இன்றைக்கு மிகவும் வேறுபட்ட சொற்களில் எழுத வேண்டியிருக்கும். 1848 முதலே நவீனத் தொழில்துறை மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது; அதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் மேம்பட்ட, விரிவடைந்த அமைப்பு வளர்ச்சி பெற்றுள்ளது [1872-இல் எழுதப்பட்ட முகவுரையின் ஜெர்மன் மூலத்தில் இந்த வாக்கியங்கள் சற்றே மாறுபட்டுள்ளன. பார்க்க இந்நூலின் பக்கம் 2]; முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு அதனினும் முக்கியமாகப் பாட்டாளி வர்க்கம் முதன்முதலாக, முழுதாய் இரு மாதங்கள் அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும் சில நடைமுறை அனுபவங்கள் கிடைத்துள்ளன; - இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாக ஒன்றை நிரூபித்துக் காட்டியது. அதாவது, ’ஏற்கெனவே தயார்நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது’. (பார்க்கவும்: ஃபிரான்சில் உள்நாட்டுப் போர் - சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக்குழுவின் பேருரை, லண்டன், ட்ரூலவ், 1871. பக்கம் 15-இல் இந்த விவரம் மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது). தவிரவும், சோஷலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை போதுமானதல்ல என்பது கூறாமலே விளங்கும். ஏனெனில் 1847-ஆம் ஆண்டு வரைதான் அதில் அலசப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாட்டு அளவில் இன்றும் சரியானவையே. என்றாலுங்கூட, நடைமுறையில் காலங் கடந்தவையே. காரணம், இன்றைக்கு அரசியல் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. வரலாற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது, அப்பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப் புவிப்பரப்பிலிருந்தே துடைத்தெறிந்துவிட்டது”.

”ஆனாலும் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணமாக ஆகிவிட்டது, இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை”. மார்க்ஸின் “மூலதனம்” நூலின் பெரும்பகுதியை மொழிபெயர்த்தவரான திரு.சாமுவேல் மூர் தற்போதைய இந்த மொழிபெயர்ப்பினை உருவாக்கியுள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து இதனைத் திருத்தியமைத்தோம். வரலாற்றுக் குறிப்புகளை விளக்குகின்ற சில குறிப்புரைகளை நான் சேர்த்துள்ளேன்.

ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்

லண்டன், ஜனவரி 30, 1888.

”ஆனாலும் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணமாக ஆகிவிட்டது, இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை”. என்கிறார் அதனை உருவாக்கியதில் பங்களித்த எங்கெல்ஸ்.

நவீன முதலாளித்துவச் சொத்துடைமையின் தவிர்க்கவொண்ணாத் தகர்வினைப் பிரகடனப்படுத்துவதையே கம்யூனிஸ்டு அறிக்கை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. 

அறிக்கை எழுதப்பட்ட காலத்தில், இதனை நாங்கள் சோஷலிஸ்டு அறிக்கை என அழைக்க முடியவில்லை. 1847-இல் சோஷலிஸ்டுகள் எனப்பட்டோர் ஒருபுறம், பல்வேறு கற்பனாவாதக் கருத்தமைப்புகளைத் தழுவியோராக அறியப்பட்டனர்: இங்கிலாந்தில் ஓவனியர்கள் (Owenites)[16], ஃபிரான்சில் ஃபூரியேயர்கள் (Fourierists)[17]. இவ்விரு வகையினரும் ஏற்கெனவே வெறும் குறுங்குழுக்கள் நிலைக்குத் தாழ்ந்து, படிப்படியாக மறைந்து கொண்டிருந்தனர். மறுபுறம், மிகப் பல்வேறு வகைப்பட்ட சமூகப் புரட்டல்வாதிகள், மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் எந்தத் தீங்கும் நேராதபடி, எல்லா வகையான ஒட்டுவேலைகள் மூலம், அனைத்து வகையான சமூகக் குறைபாடுகளையும் களைவதாகப் பறைசாற்றினர். இந்த இரு வகையினரும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு வெளியே இருந்துகொண்டு, பெரும்பாலும் ''படித்த'' வர்க்கங்களின் ஆதரவையே எதிர்நோக்கியிருந்தனர். தொழிலாளி வர்க்கத்தின் எந்தப் பகுதி, வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் போதாது என்பதைத் தெளிவுபட உணர்ந்துகொண்டு, ஒரு முழுமையான சமுதாய மாற்றத்தின் தேவையைப் பறைசாற்றியதோ, அந்தப் பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக்கொண்டது. அது பக்குவமற்ற, செழுமைப்படாத, முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட கம்யூனிசமாகவே இருந்தது. என்றாலும், அது மூலாதாரமான கருத்தைத் தொட்டுக் காட்டியது. ஃபிரான்சில் காபேயின் (Cabet)[18], ஜெர்மனியில் வைட்லிங்கின் (Weitling)[19] கற்பனாவாதக் கம்யூனிசத்தைத் தோற்றுவிக்கும் அளவுக்குத் தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் ஆற்றல் பெற்றதாக விளங்கியது. இவ்வாறாக, 1847-இல் சோஷலிசம் என்பது நடுத்தர வர்க்க இயக்கமாகவும், கம்யூனிசம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கமாகவும் இருந்தன. சோஷலிசம், குறைந்தபட்சம் [ஐரோப்பா] கண்டத்தில் ”மரியாதைக்குரியதாக” விளங்கியது. ஆனால், கம்யூனிசம் அதற்கு மிகவும் நேர்மாறானதாக இருந்தது. மேலும், மிகத் தொடக்கத்திலிருந்தே எங்களுடைய கருத்தோட்டம், ''தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை என்பது தொழிலாளி வர்க்கத்தாலேயே பெறப்பட வேண்டும்'' என்பதாகும். எனவே, இவ்விரு பெயர்களில் [சோஷலிசம், கம்யூனிசம்] நாங்கள் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் எவ்வித ஐயமும் இருந்திருக்க முடியாது. அதோடு, அப்போதுமுதல் அப்பெயரை மறுதலிக்கும் எண்ணம் எப்போதும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை.

அறிக்கையானது எங்களுடைய கூட்டுப் படைப்பாக இருக்கும் நிலையில், இதன் மையக் கருவாக அமைந்த அடிப்படை வரையறுப்பு மார்க்சுக்கே உரியது என்பதைக் குறிப்பிட நான் கடமைப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். அந்த அடிப்படை வரையறுப்பு இதுதான்: வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், அப்போது பொதுவாக நடப்பிலுள்ள பொருளாதார உற்பத்தி முறையும் பரிவர்த்தனை முறையும், அதிலிருந்து தவிர்க்கவியலா வகையில் பெறப்படும் சமூக அமைப்புமுறையும்தான் அடித்தளமாக அமைகின்றன. அதன்மீதே அக்காலகட்டத்தின் அரசியல் மற்றும் அறிவுத்துறை வரலாறு எழுப்பப்படுகிறது. அந்த அடித்தளத்திலிருந்து மட்டுமே அவற்றை விளக்கவும் முடியும். இதன் காரணமாகவே, மனிதகுல வரலாறு முழுமையும் (நிலத்தைப் பொது உடைமையாகக் கொண்டிருந்த புராதனப் பழங்குடி சமுதாயம் சிதைவுற்ற காலம்தொட்டே) வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது. அதாவது, சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது. இந்த வர்க்கப் போராட்டங்களின் வரலாறானது பரிணாமங்களின் தொடர்வரிசையாக அமைகிறது. அது, இன்றைய காலகட்டத்தில், ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்படும், ஒடுக்கப்படும் வர்க்கம் அதாவது பாட்டாளி வர்க்கம், தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையுமே எல்லா விதமான சுரண்டல், ஒடுக்குமுறை, வர்க்கப் பாகுபாடுகள், வர்க்கப் போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றாகவும் முடிவாகவும் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டுகின்ற, ஒடுக்குகின்ற வர்க்கத்தின் அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து தன்னுடைய விடுதலையைப் பெற முடியாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது.

என் கருத்துப்படி, டார்வினுடைய கொள்கை உயிரியலுக்கு ஆற்றிய அதே பங்கினை, இந்த வரையறுப்பு வரலாற்றியலுக்கு ஆற்றப் போவது நிச்சயம். நாங்கள் இருவரும் 1845-க்குச் சில ஆண்டுகள் முன்பிருந்தே இந்த வரையறுப்பை நோக்கிப் படிப்படியாக நெருங்கி வந்துகொண்டிருந்தோம். நான் சுயேச்சையாக எந்த அளவுக்கு இந்த வரையறுப்பை நோக்கி முன்னேறி இருந்தேன் என்பதை, "இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை" (Conditions of the Working Class in England) என்னும் என்னுடைய நூல்மூலம் நன்கு அறியலாம். ஆனால், 1845-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் புரூசெல்ஸ் நகரில் மார்க்ஸை நான் மீண்டும் சந்தித்தபோது, அவர் இந்த வரையறுப்பைத் தயாராக வகுத்து வைத்திருந்தார். நான் இங்கு எடுத்துரைத்துள்ளது போன்ற அதே அளவு தெளிவான சொற்களில் என்முன்னே எடுத்துவைத்தார்.

மேலே இவை ஆசான் எங்கெல்ஸ் எழுதியதே.


இதனை எதனையும் புரிந்துக் கொள்ளாத ஒரு கழிச்சடை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மாற்ற வேண்டும் எனும் அவனின் வாதம் கீழே:-

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பொதுவுடைமை கொள்கை பிரகடனம் என்றவகையில் காலத்தால் அழியாது..... ஆனால் அதன் அமலாக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சொன்னது போல் நடக்கவில்லை....

ஐரோப்பிய தொழிலாளி வர்க்கம் புரட்சியின் உந்து சக்தியாக இல்லை...!

இரஷ்ய சீன பாட்டாளிவர்க்கம்புதிய பாதையை காட்டின!

ஆனால் நீடிக்க முடியவில்லை! எனவே கம்யூனிஸ்டுகளுக்கு கொள்கையை நிறைவேற்ற புதிய பாதை தேவை! இதை மறுப்பது பேதமை!!! மார்க்சியம் அறியாமை...!!!

மேலும் அடுத்த எழுத்து அவனுடையதே

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் பொதுவுடைமை சமூக உருவாக்கமும்  ஒரு மறு பரிசீலனை...!

1. மனிதகுல வரலாற்றின் வைகறையை உலகுக்கு அறிவித்த அறிவியல் சாசனம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சொன்னது போல் ஐரோப்பாவில் கம்யூனிசம் 150 ஆண்டுகள் ஆன போதும் வரவில்லை...ஏன்?

2. ஏகாதிபத்தியம், பாட்டாளி வர்க்க புரட்சிகர சகாப்தத்தில் பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்கம் சோஷலிச புரட்சியை நடத்தி வெற்றி கண்டாலும் அதனை கட்டி அமைப்பதில் தோல்வியை சந்தித்து உள்ளோம்....ஏன்?

4. சமூக ஏகாதிபத்தியம் கலைந்து, சீன முதலாளித்துவம் உலக உற்பத்தி கூடமாக்கொத்தடிமைகளின் கூடாரமாக மாறி ஐரோப்பிய தொழில்களை கலைத்தது.... நவதாராளமயத்தை அமல்படுத்தி அமெரிக்காவின் தலைமையில்  கார்ப்பரேட் நிலப்பிரபுத்துவம் உருவாக நவீன வாசலாக  மாறியது....!

4. அமெரிக்க கார்ப்பரேட் நிலப்பிரபுத்துவ உலக மேலாதிக்க பேரரசை, இரஷ்ய ஏகாதபத்தியமும்,  சீன கங்காணி ஏகாதிபத்தியமும் எதிர்த்து முறியடிக்குமா...? நவதாராளமய பேரழிவுக்கு மாற்று என்ன.... சிந்திக்க மறுப்பது ஏன்?

4. அகிலம் கலைப்பு, தொழிலாளி வர்க்கம் பிளவு, முதலாளித்துவ உலக ஒழுங்கு ஐ.நா.அவையும் முடக்கம், காரணம் அரசியல்....மேற்கத்திய மார்க்சியம் எனும் ஏகாதபத்திய ஆதரவு அடையாள அரசியல்.... கிழக்கத்திய மார்க்சியத்தின் மூன்றாம் அகிலம் தகர்வு...

கலைப்புவாதமா மார்க்சியமா... தீர்வு என்ன?

5. இன்றைய முதலாளித்துவம் உலகளாவிய முதலாளித்துவம் மட்டுமல்ல....- உற்பத்தி கேந்திர இடமாற்றம்... ஏஐ உடன் வேலை நேரத்தை அதிகரித்தல் எனும்  இரட்டை தாக்குதல்; - மேக மூலதனம் நாடுகளின்  எல்லையை தகர்ப்பது; - அரசு முதலாளித்துவம் ஒழிப்பு; - சமூகநல அரசு தகர்ப்பு என நவீன ஆதிக்குவிப்பு முதலாளித்துவ பேரழிவு...! கார்ப்பரேட் நிலப்பிரபுத்துவ பேய்களின் சதிராட்டம்....!

நாடாளுமன்ற நிழலிலேயே பாசிசத்தின் உக்கிரம்...!!! மதவெறி, இன வெறி  பாசிசத்தின் களியாட்டம்...!!!

6. ஏகாதிபத்தியங்களின் எதிர்ப்புரட்சி வெற்றி, பாட்டாளி வர்க்கத்தின்  பயங்கர தோல்வி....!

2025ல் 1970 களின் திட்டம், போர்த்தந்திரம், செயல்தந்திரம் துருபிடித்த ஆயுதங்கள் இன்றைய சூழலுக்கு பொருந்துமா...? சீனாவின் சமரசம் உலக பாட்டாளிகளுக்கு வழியாகுமா?

7. மார்க்சிய, லெனினிய வழியில் இந்த புதிய நிலைமைக்கு  உரிய மாற்றை முன் வைக்க  கம்யூனிஸ்டுகள் சிந்திக்க தயாரா...?

8. இல்லையேல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் கூட மாற்றத்துக்கு உள்ளாகும் காலத்தில் அதனை பூஜிப்பது... அதுவும் கைவிலங்காக அல்ல அறிவின் விலங்காகவே மாறும்!

தேவை மார்க்சிய வழியில் புதிய நிலைமைகள்  புதிய ஆயுதங்கள்வேண்டும்!

சிவப்பு புத்தகங்களை மறு வாசிப்பு போதாது மாற்றியும் வாசிக்க வேண்டும் சிந்தித்தால் உலகம் விடியும்...!!!

இவனின் இயலாமைக்கு காரணம் லெனின் சொன்னது போல் ,"இரண்டாம் அகிலத்தின் தலைவர்கள் ஏகாதிபத்திய கொள்ளை முறையினை பாதுகாக்கும் தலைமையா" உள்ளதாக (பார்க்க சந்தர்ப்பவாதமும் இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியும் நூலின் பக்கம் 17) மேலும் இதே நூலில் பக்கம் 23 ல் லெனின் குறிப்பிடுகிறார்,"புரட்சிகர எழுச்சி ஆரம்பித்துவிட்டால் அது ஓர் எதார்த்தாமன மெய்யான புரட்சிக்கு இட்டு செல்லுமா? எப்பொழுது இட்டு செல்லும் என்று யாராலும் கூற முடியாது என்று காவுத்ஸ்கி  எதிர்புரட்சிகர கருத்துகளை அலோசனை கொடுத்துக் கொண்டிருந்தார்" என்கிறார் லெனின்.

மார்க்சியத்தின் பெயரால் மார்க்சிய சிதைவை செய்யும் இவர்கள் அன்றைய திருத்தல்வாதிகளான பெர்ன்ஸ்டைன், காவுத்ஸ்கி மற்றும் பிரிட்டிஷ் பேபியன்களையும் மேலும் ரசியாவின் பல எதிர்புரட்சிகர சக்திகளை லெனின் குறிபிட்டிருப்பார். அந்த வரிசையில் இந்த சந்தர்ப்பவாத அரசியல் பேர்ம் இவரையும் சேர்த்துக் கொள்வோம்.

புரட்சி நடத்த புரட்சிகர தத்துவமும் புரட்சிகர கட்சியும் வேண்டும் என்பதே மார்க்சியம் காட்டும் வழிமுறை அதனை மறுத்து ஆளும் வர்க்கத்தின் அடிபணிந்து வாழ்ந்துக் கொண்டே மார்க்சியத்தை குறை கூறும் இவர்களை லெனின் என்ன செய்ய வேண்டும் என்பதில் முதல் அத்தியாயத்தில் விரிவாக விளக்கி இருப்பார் அடுத்து வரும் பகிதியில் அதனை பார்ப்போம். முடிவுரையாக இந்த எதிர்புரட்சியாளன் கம்யூனிஸ்ட் கட்சியின் சாரம் என்ன்வென்றே தெரியாமல் அதன் மீது கல்லெறிவதன் நோக்கம் என்னெ? தன்னை மார்க்சிய புலமை படைத்தவன் என்று காட்டி தன்னை முதலாளித்துவ திடம் மிக உயர்வான விலைக்கு விற்பனை செய்ய செய்யும் தந்திரம் தானே ஒழிய வேறொன்றும் இல்லை, இவனுக்கும் மார்க்சியதிற்கும் எந்த தொடர்பும் இல்லை இவன் தன் பிழைப்புக்காக மார்க்சியம் பேசுகிறான் எனலாம். 

இதனை இன்னும் முன்னேறி வாசிக்க கீழ்காணும் இணைப்பில் செல்க தோழர்களே

ஒலி வடிவில் சந்தர்ப்பவாதமும் இரண்டாம் அகிலதின் தர்வும் இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே

சந்தர்ப்பவாதமும் இரண்டாம் அகிலத்தின் தகர்வும் வாசிக்க கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

விவாதம் தொடரும்...

சந்தர்ப்பவாதமும் இரண்டாம் அகிலத்தின் தகர்வும்-நூல் பிடிஎப்பில் மற்றும் ஒலி வடிவில் AI உதவியுடன்

 இரண்டாவது அகிலத்தின் தகர்வும் புரட்சிகரப் பாதையும்


இந்த ஆதாரங்கள் புரட்சிகரச் சூழல்ஏகாதிபத்தியம் மற்றும் சோசலிச இயக்கத்தில் நிலவிய பல்வேறு போக்குகள் குறித்து விரிவாக ஆராய்கின்றன. முதலாம் உலகப் போர் போன்ற காலங்களில் நிலவிய கடுமையான வர்க்க முரண்பாடுகள் மற்றும் மக்களின் துயரங்கள் எவ்வாறு புரட்சிக்கான அடித்தளத்தை அமைத்தன என்பதை இவை விளக்குகின்றன. குறிப்பாக, கார்ல் காவுத்ஸ்கி போன்ற தலைவர்களின் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை விமர்சிக்கும் அதேவேளையில், சர்வதேசவாதம் மற்றும் தேசியவாதம் ஆகியவற்றுக்கு இடையிலான மோதல்களை இவை படம் பிடித்துக் காட்டுகின்றன. ரஷ்யா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவிய அரசியல் மாற்றங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சி பற்றிய வரலாற்றுப் பதிவுகள் இங்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இறுதியாக, மார்க்சியக் கோட்பாடுகளைத் திரிப்பவர்களிடமிருந்து விலகி, உண்மையான புரட்சிகர சமூக-ஜனநாயகப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.

இரண்டாவது அகிலத்தின் தகர்வுக்கு லெனின் கூறும் முக்கிய காரணங்கள் யாவை?

சமூக-தேசியவெறி மற்றும் சந்தர்ப்பவாதம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பு என்ன?

யுத்த காலங்களில் சோஷலிசவாதிகளின் கடமையாக லெனின் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

இந்த நூலை பிடிஎப்பில் பெற்று வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே

இந்த நூலி ஒலி வடிவில் AI துணையுடன் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே

தோழர் நல்லகண்ணு: கம்யூனிச வாழ்வும் தத்துவார்த்த விமர்சனமும் (ஒலி வடிவில்)

நான் இங்கே முதலில் பகிர்ந்தவை முகநூலில் பல்வேறு கருத்துகளை அதன் பின்னர் எனது விமர்சனம்.
ஒரு கம்யூனிஸ்டாக தொடங்கிய அவரின் பயணம் அதற்கான பணியில் அவரின் நடவடிக்கைகள் என்னவாக இருந்தது என்பதனை விரிவாக அலசுவதே எமது நோக்கம்.


நல்லகண்ணு: கம்யூனிச வாழ்வும் தத்துவார்த்த விமர்சனமும்

இந்தியக் கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவரான தோழர் ஆர். நல்லகண்ணுவின் வாழ்வு, அரசியல் நெறிகள் மற்றும் அவரது மறைவு குறித்த விரிவான பார்வையை இத்தொகுப்பு வழங்குகிறது. விடுதலைப் போராட்ட வீரரான இவரது எளிமை, தியாகம் மற்றும் வர்க்கப் போராட்ட அர்ப்பணிப்பு ஆகியவை பல்வேறு சமூக வலைதளக் கருத்துக்களின் வழியாக இங்கே போற்றப்படுகின்றன. அதே வேளையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வரலாற்றுப் பிளவுகள், தேர்தல் பாதை மாற்றங்கள் மற்றும் மார்க்சியக் கோட்பாடுகளிலிருந்து அவை விலகிச் சென்ற விதம் குறித்த விமர்சன ரீதியான விவாதங்களையும் இக்கட்டுரை முன்வைக்கிறது. லெனினது உரைகளின் அடிப்படையில் கம்யூனிச ஒழுக்கம் மற்றும் வர்க்கப் போர் குறித்த தத்துவ விளக்கங்கள் அளிக்கப்பட்டு, அதன் பின்னணியில் நல்லகண்ணுவின் பங்களிப்பு மதிப்பிடப்படுகிறது. இறுதியில், ஒரு தலைவரின் தனிப்பட்ட ஒழுக்கத்தைத் தாண்டி, பாட்டாளி வர்க்கப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதே அவருக்குச் செலுத்தும் உண்மையான வீரவணக்கம் என இப்பாடம் வலியுறுத்துகிறது. இத்தொகுப்பு ஒரு தலைவரின் மறைவை ஒட்டி எழுந்த அரசியல் மற்றும் தத்துவ ரீதியான உரையாடல்களின் வழிவாக அமைந்துள்ளது.

தோழர் ஆர். நல்லகண்ணுவின் வாழ்க்கை முறை மற்றும் அரசியல் எளிமை பற்றி விளக்குக.

இந்திய கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகள் மற்றும் அதன் வரலாற்றுப் பின்னணி என்ன?

லெனினின் கருத்துப்படி கம்யூனிச ஒழுக்க நெறி என்பது சாதாரண அறநெறியில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

ஒலி வடிவில் இந்த பகுதி தோழர் நல்லகண்ணு பற்றிய விமர்சன் தொகுப்பு இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே


இனி முகனூல் பகுதியிலிருந்து
விடுதலைப் போராட்ட வீரர்களின் கடைசிப் படை வீரராக இருந்தவர். இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் அனைவரும் தேசபக்த விடுதலைப் போரில் விளைந்தவர்கள் தான். அதற்கும் புறம்பான எதிரான இயக்கங்கள் ஒரு சில அக்காலத்தில் இருந்த போதிலும் அதற்கு வசப்படாத முற்போக்கு சிந்தனை உடையவர்கள் தான் காங்கிரஸிலிருந்து கம்யூனிஸ்ட்களாக மாறி விடுதலைப் போராட்டத்தில் இணைந்து அரசியல் பணியாற்றினர். அந்த பாரம்பரியத்தில் வந்த தேசபக்த அணியினரைச் சேர்ந்தவர் தான் ஆர். நல்லகண்ணு.

கடந்த கால அரசியல் நெறிகளையும் நிகழ்கால அரசியல் கடமைகளையும் வலியுறுத்தி கட்சி பேதமின்றி அனைத்து மக்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த தோழர் ஆர். நல்லகண்ணு இன்று நம்மை விட்டுப் பிரிந்தார் என்று கேட்கும்போதும் சரி ஊடகங்களில் பார்க்கும்போதும் சரி நமது மனத்தை கனமாக்குகிறது.

சுதந்திரப் போராட்டத்திலும் சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த மக்கள் போராட்டங்களிலும் தொடர்ந்து பங்கெடுத்ததால் சொந்த வாழ்க்கையை போராட்டக் களமாக்கிக் கொண்டவர். அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது இணையர் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி இறந்தார். அடுத்த பத்தாண்டுகள் கழித்து இன்று 25.02.2026 மதியம் காலமானார். இவரை எந்த கட்சியில் இருந்தாலும் மக்கள் மறப்பதில்லை. பொதுமக்கள் மறந்தாலும் உழைப்பாளி மக்கள் ஒருபோதும் மறக்க முடியாது இவரை.

வயதான காலத்திலும் தியாக சீலர்கள் இளைஞர்களாக விளங்க முடியும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம். கம்யூனிஸ்டு இயக்கத்தின் வீர வரலாற்றை வணங்குகிறவர்கள் தோழர் நல்லகண்ணு வை வணங்காமல் இருக்க முடியுமோ? எண்ணற்ற பாட்டாளி மக்களின் இதயத்தில் வைத்திருந்த தோழர் நல்ல கண்ணு ஒரு இடைவெளியை ஏற்படுத்தி விட்டு நம்மை விட்டுச் சென்றுவிட்டார். கம்யூனிச இயக்கத்தின் அடையாளமாகத் திகழ்ந்த நல்லகண்ணு நம்மை விட்டுப் பிரிந்தார். அவரது உடல் ஓய்வெடுக்கச் சென்றாலும் இயக்கத்தின் பொறுப்புக்களை அவர் வழி நின்று ஏற்று செயல்படுவோமாக!

குருட்டுக்கண்
மாலைக்கண்
காமாலைக் கண்
மாறுகண்
சாளேசுவரக் கண்
தூரப்பார்வை கண்
கிட்டப்பார்வை கண்
இத்தகைய கண்கள் எல்லாம்
தலைவர்களாக இருக்கும்
அரசியலில்
நல்லகண்ணு! நீ மட்டும்
நல்ல கண்

உறங்காத கண் நல்ல கண்ணுவே மரணம் உன்னை உறங்க வைத்து விட்டது.கனத்த இதயத்துடன் செ.பரத்வாஜ், க.அய்யாசாமி  

++++++++++++++++++=

தோழரை பற்றியே முகநூலில் எழுதியுள்ளவை இன்னும் சில

அரசியலுக்கு வந்தாலும் 1000 கோடி சேர்க்கத் தெரியவில்லை.
பட நிறுவனம் திறந்து நடிகர்களை வைத்து மக்கள் பணத்தை சூறையாடத் தெரியவில்லை.
தேசியம் பேசி தேசமெங்கும் பணஞ்சேர்க்கத் தெரியவில்லை.
பல பெண்டாட்டி வைத்து வாழ்வை கொண்டாடத் தெரியவில்லை..
ஆமா ராஜேந்திரன் ..இந்தமாதிரி பலான வேலைகள் அந்த மனிதரால் செய்யத் தெரியாத வெள்ளேந்தி மனிதர். சாகும் போதும் வாடகை வீட்டில் இருந்த பிழைக்கத் தெரியாத மனிதர்..
நீங்க எதிர்பார்க்கிற வியாபாரத் தாக்கத்தை அவரில் பார்க்க முடியாது !


+++++++++++++++++++++++++++++++
நல்லகண்ணுவின் எளிமை அரசியல் வெற்றி பெற்றிருந்தாலும் கால ஓட்டத்தில் அது இன்னொரு மே.வங்க சிபி எம் அரசியல் போலத்தான் மாறி இருக்குமே தவிர, சீன கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் போல முன்னேறி எல்லாம் இருக்காது.
காரணம் என்னவெனில்,இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கு உள்ளே ஊறிப்போன எளிமை,தியாகம் ,அரசியல்,துறவறம் கொண்ட சிந்தனைகள்.
இதைத்தான் கம்யூனிஸம் என்று இந்திய கம்யூனிஸ்டுகள் மனதுக்குள் யார் ஆழமாக பதிந்தார்கள் எனத்தெரியவில்லை.
அதனாலதான், விமர்சித்தாலே, விமர்சிப்பவர்களை பார்த்தாலும் குட்டி முதலாளி, சிந்தனை,பண்ணையார் மனோபாவம் என தமக்குள் விமர்சித்து,விமர்சித்து விலகி விலகி, மார்க்சிய அடிப்படைகளை விட்டு விலகி விட்டனர்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தோழர் சிறந்த கம்யூனிஸ்ட் அவர் எண்ணம்,சொல்,செயல் ஒன்றேயானவர் அதன்படி வாழ்ந்தவர்.

மார்க்சியத் தத்துவத்தின் விளக்கமாக விளங்கியவர்
தன்னொழுக்கம் கொண்டவர் அதனால் நூற்றாண்டு கடந்து வாழ்ந்தவர். நமக்கெல்லாம் வழிகாட்டியானவர்
புரட்சியை நேசித்தவர். பாட்டாளி வர்க்கத்தின் முன்னத்தி ஏராக செயல்பட்டவர். சமகால அரசியல் தலைவர்களில் உயர்ந்து திகழ்பவர் சமதர்மம் கொண்டு சமத்துவ சமுதாயம் வேண்டி வேறொன்று கொள்ளாதவர். அவர்தம் பணி முடிப்பதே அவருக்கான வீரவணக்கம்
வீரவணக்கம் செலுத்துவோம்
வீறுகொண்டு எழுவோம்

+++++++++++++++++++++++++++

15வயதில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர். 101வயது வயதில் பயணத்தை நிறுத்திக் கொண்டார்.

எளிமையான தலைவர். ஆனால் சிறந்த கம்யுனிஸ்ட்டு தலைவர் இல்லை.

அவரது கட்சி தேர்தல் பாதையில் பயணித்து புரட்சிக்கு துரோகம் செய்தது.

+++++++++++++++++++++

நம்முடைய விமர்சனதிற்கு வருவோம். நாம் தோழரை தனிநபரை விட கட்சியாகவும் அவரின் வழிகாட்டலில் கட்சியின் நிலையோடு தோழரின் செயலை புரிந்துக் கொள்ள வேண்டும்...

கம்யூனிச ஒழுக்க நெறியும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும்

கம்யூனிச ஒழுக்கநெறி என்பது மதக் கோட்பாடுகளையோ அல்லது முதலாளித்துவ வர்க்க நலன்களையோ அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பதை விளக்குகிறது. கம்யூனிஸ்டுகளின் அறநெறி என்பது பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் தேவைகளுக்கும், சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கும் முழுமையாகக் கட்டுப்பட்டதாகும். பழைய சமூகத்தின் சுயநலப் போக்குகளையும் அடிமைத்தனத்தையும் ஒழித்து, உழைக்கும் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவதே உண்மையான ஒழுக்கம் என இது வலியுறுத்துகிறது. வர்க்க வேறுபாடுகளைக் களைந்து, உழைப்பால் ஒன்றிணைந்த ஒரு புதிய கம்யூனிச சமூகத்தைக் கட்டியெழுப்புவதே இந்த உயர்ந்த அறநெறியின் முதன்மை நோக்கமாகக் கருதப்படுகிறது. தனியார் சொத்துரிமை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதன் மூலமே மனிதநேயமிக்க இந்த ஒழுக்க விழுமியங்களைப் பெற முடியும் என்று லெனின் கூறினார்.

கம்யூனிஸ ஒழுக்கம் கடவுள் மற்றும் மத அடிப்படையிலான அறநெறியிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

வர்க்கப் போராட்டத்திற்கும் கம்யூனிஸ அறநெறிக்கும் இடையிலான தொடர்பு என்ன?

பழைய சுரண்டல் சமூகத்தின் சுயநலப் பண்புகளை ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?

கம்யூனிஸ்டுகள் யார்?

கம்யூனிஸ்டுகளின் பணி என்ன?

இங்குள்ள நிலை என்ன?

நமக்கான வழிமுறை என்ன?

 

எல்லாப் புரட்சி வர்க்கங்களையும் -பிரிவினரையும்- மக்கள் திரளினரையும் அணிதிரட்டி இந்தப் பெரும் சிறப்பு வாய்ந்த போராட்டத்தில் இந்தியப் பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமை கொடுக்க வேண்டியது கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுக் கடமையாகும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  நம் நாட்டிலுள்ள நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்த நாட்டில் புரட்சிக்கு தலைமை ஏற்று நடத்தும் ஆற்றல் மிக்க கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைப்பதற்கான பாதையை அமைக்கும் கடமை இங்குள்ள கம்யூனிஸ்டுகள் முன் உள்ள பணி ஆனால் நிலைமை என்னவாக உள்ளது?

 சுருக்கமாக வரலாற்று பக்கங்களை திறப்போம்

ந்தியாவில், அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த பல்வேறு சக்திகளுக்கு 1917-ல் நடந்த ரஷ்யப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் வெற்றியானது, புதிய பார்வையையும் புதிய நம்பிக்கையையும் அளித்தது. அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன.அவை ஒன்றுபட வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)யானது, 1925 டிசம்பர் 25 அன்று கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவிக்கிறது. ஆனால் சி.பி.எம். கட்சியோ, 1920-ல், அன்றைய சோவியத் ஒன்றியத்தில் ஓர் அங்கமாக இருந்த உஸ்பெகிஸ்தானின் (துருக்கேஸ்தான்) தலைநகர் தாஷ்கண்டில் அக்டோபர் 17-ம் தேதி நடந்த கூட்டம்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாளாகும் என்று அறிவிக்கிறது. இவற்றில் எது சரியானது என்ற குழப்பம் இந்திய கம்யூனிச இயக்கத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் வரலாற்று ஆதாரங்களின்படி, 1925 டிசம்பர் 25-ல் கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது என்பதே சரியான முடிவாகும்.

1964-ல் சிபிஐ உடைந்து சிபிஐ(எம்) கட்சி ஏற்பட்டது. சிபிஐ(எம்) கட்சி மீண்டும் ஒருமுறை பிளவு கணடது ஏனெனில் சிபிஐ யிலிருந்து சிபிஎம் வைத்த குற்றசாட்டை தான் இதன் நிலைப்பாட்டை எதிர்த்து 1967ல் மீண்டும் உடைவு.... இவை தத்துவ அரசியல் போராடமா? அமைப்பின் தேவையா? அன்றை வரலாற்று பக்கங்களில் உள்ளன.

இதனை புரிந்துக் கொள்ள நாம் ஆசான் லெனினிடம் செல்வோம் நமது விமர்சனத்தை சரி பார்க்க...

கம்யூனிஸ ஒழுக்கம் என்பதாய் ஒன்று இருக்கிறதா? நிச்சயமாய் இருக்கிறது! நமக்கு என்று ஒரு தனி அறநெறி கிடையாது என்று அடிக்கடி பேசப்படுகிறது.

ஒழுக்கநெறி அனைத்தையும் நிராகரிப்பவர்கள் என்று கம்யூனிஸ்டகளாகிய நம் மீது முதலாளித்து வர்க்கத்தினர் அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள். பிரச்சனையை குழப்பதற்கான தொழிலாளர் விவசாயிகளில் கண்களில் மண்ணைத் தூங்குவதற்கான ஒரு உபாயமே இது. எந்த அர்த்தத்தில் நாம் அறநெறியை ஒழுக்க நெறியை நிராகரிக்கிறோம். முதலாளி வர்க்கத்தினர் அதற்கு அளித்திடும் அந்த அர்த்தத்தில் நிராகரிக்கிறோம். கடவுள் கட்டளைகளை அவர்கள் அறநெறி அடிப்படையாகக் கொள்கிறார்கள் எங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று நாம் கூறுகிறோம்.

மனிதனுக்கு புறம்பான வர்க்கத்திற்கு புறம்பான கருத்து இனங்கள் அடிப்படையாய் கொண்ட எந்த ஒழுக்க நெறியும் நாம் நிராகரிக்கிறோம். அது ஏமாற்று வித்தை மாய்மாலம் நிலப்பிரப்புத்துவ முதலாளிகள் நலனை முன்னிட்டு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மூடர்களாக்குவதற்கு உபாயம் செய்கிறார்கள். எங்களுடைய ஒழுக்க நெறி பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க போராட்டத்தில் நலன்களுக்காக முற்றிலும் கீழ்ப்படிந்தது என்று நாம் கருதுகிறோம்.

எங்கள் ஒழுக்க நெறி பாட்டாளி வர்க்க போராட்டத்தின் ஒழுங்கிலிருந்து உதிக்கிறது பழைய சமுதாயம் எல்லாம் தொழிலாளர் விவசாயின் மீதும் நிலப்பிரப்புகள் முதலாளித்துவ புரிந்த ஒடுக்கு முறையின் அடிப்படையில் அமைந்திருந்தது. நாம் அதை அடியோடு அழிக்க வேண்டி இருக்கிறது, அவர்களை வீழ்த்த வேண்டி இருக்கிறது. ஆனால் இதை செய்ய, நாம் ஒற்றுமையை உண்டாக்க வேண்டி இருக்கிறது. அது கடவுளால் உண்டாக்கப்பட கூடிய ஒன்று அல்ல. இந்த ஒற்றுமையை தொழிற்சாலைகளால் மட்டும்தான் அளித்திட முடியும். நீண்ட நெடிய உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தால்தான் உண்டாக்க முடியும். இந்த வர்க்கம் உருவான பிறகு வெகுஜன இயக்கம் ஒன்று தோன்றி மிகவும் பலவீனமான ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க புரட்சி வெற்றியடைந்திருப்பதை நாம் காண்கிறோம். இந்த வெற்றிக்கு வழி செய்தது இந்த பாட்டாளி வர்க்க புரட்சி அனைத்து உலகில் முதலாளித்துவ வர்க்கதினால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறவர்கள் இடையில் ஒற்றுமையும் மற்றும் சிதறுண்டுள்ள விவசாயிகளை தன்னை பின்பற்றி வர செய்துள்ளது. சுரண்டலாளர்களின் எல்லா தாக்குதலையும் சமாளித்து நிற்பது திடமான இச்சக்தியை பாட்டாளி வர்க்கம் தன் அணியில் அரவனைத்து வர்க்க சமூகத்தில் இன்று சிதறுண்டுள்ள உழைப்பாளிகள் வெகுஜனங்கள் ஒன்றுபடவும் தமது அணியில் ஒன்று திரட்டி கொள்ளவும் கம்யூனிச சமுதாயத்தை முடிவாய் பாதுகாத்துக் கொள்ளவும், முடிவாய் உறுதிப் பெரும்படியும் செய்ய, முடிவாய் பாட்டாளி வர்க்க கட்சி துணை புரிய முடியும்.

எனவேதான் மனித சமுதாயத்திற்கு மேலானது எந்த ஒழுக்க நெறி என்பதாய் நமக்கு ஏதுமில்லை என்று கூறுகிறோம்.

நமது ஒழுக்க நெறியானது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தினுடைய நலன்களுக்கு கீழ்ப்பட்டதாகும் இந்த வர்க்க போராட்டம் எதில் அடங்கி உள்ளது?

இன்றைய ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் சுரண்டும் வர்க்கத்தை ஒழித்தல் இதில் அடக்குவது.

வர்க்கங்கள் என்பவை யாவை சமுதாயத்தில் ஒரு பிரிவு மற்றொரு பிரிவின் உழைப்பை அபகரித்துக் கொள்ள வழி செய்வது இங்குள்ள ஒழுங்கு. சமுதாயத்தின் ஒரு பிரிவு எல்லாவற்றையும் அபகரித்துக் கொள்ளுமாறு அந்த வர்க்கதின் ஒழுங்காக இருக்க காண்கிறோம். சமுதாயத்தின் இந்த ஒருபிரிவை ஒழித்துக் கட்ட வேண்டிய தேவை இன்னொரு பிரிவுக்கு உள்ளது.

ஜாரை விரட்டுவது கடினமாய் இருக்கவில்லை ஒரு சில நாட்களை தேவைப்பட்டன. நிலப்பிரப்புகளை விரட்டுவது அதிக கடினமாய் இருக்கவில்லை ஒரு சில ஒரு சில மாதங்களில் இதில் செயல்பட்டுவிட்டது.  முதலாளிகளை விரட்டுவதும் அதிக கடினமாக இருக்கவில்லை. ஆனால் வர்க்கங்களை ஒழித்தல் இதையெல்லாம் விட சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் கடினமானதாகும்.

வர்க்கப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அதன் வடிவங்கள் மட்டுமே மாறி இருக்கின்றன. பழைய சுரண்டலாளர்கள் திரும்பி வந்து விடாப்படி தடுப்பதற்காக அறிவொளி இல்லாத விவசாயிகள் வெகுஜனங்களை ஒரே கூட்டணியாய் ஒன்று படுத்துவதற்காக நடைபெறும் வர்க்கப் போராட்டம் இது. தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு எல்லா நலன்களையும் கீழ்பட செய்வது நமது பணி. நமது கம்யூனிஸ்டுகளின் ஒழுக்க நெறியும் இப்பணிக்கு கீழ்ப்பட்டது தான். பழைய சுரண்டல் சமுதாயத்தை அழிக்கவும் ஒரு புதிய கம்யூனிஸ்ட் சமுதாயத்தை கட்டி அமைத்திடவும் பாட்டாளி வர்க்கத்தை மையமாகக் கொண்டு உழைப்பாளி மக்கள் அனைவரையும் ஒன்றுபட செய்யவும் உதவுவது ஒழுக்கநெறி என்று கூறுகிறோம். 

இந்தப் போராட்டத்திற்கு உதவி புரியும் உழைப்பாளி மக்களை எல்லாவித சுரண்டலையும் எதிர்த்து அற்ப தனியார் சொத்துரிமை அவற்றின் எதிர்த போராட்டம் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டமாகும்…

இல்லையேல் பழைய சமூக ஒழுங்காக கொள்ளையடி அல்லது கொள்ளைக்கு இலக்காகு; அனைவருக்கும் வேலை செய் அல்லது அனிவரையும் உனக்கு வேலை செய்யும்படி வை; அடிமை உடைமையாளனாய் இரு அல்லது அடிமையாக இரு. இந்த விதி தான் பழைய சமுதாயத்துக்கு அடிப்படையாய் இருந்தது. ஒன்று நீ அடிமை உடைமையாளன் அல்லது அடிமை இல்லையேல் சிறு உடைமையாளன் சிறு அதிகாரி அல்லது அறிவுத்துறையாளன் அதாவது சுருங்க கூரின் தன்னைப் பற்றி மட்டுமே நினைத்து ஏனையோர் பற்றியும் கவலைப்படாத தன்நல மனப்பான்மை கொண்டோர் கம்யூனிஸ்டாக இருக்க முடியாது. அதிகார வர்க்கத்தின் முன் அடிபணிந்து தன் வாழ்க்கை காப்பற்றிக் கொள்ள அடிமை சேவகம் செய்ய நினைப்போர் எப்படி கம்யூனிஸ்டாக இருக்க முடியும்.

சுரண்டலாளர்களுக்கு எதிரான உணர்வு பூர்வமான போராட்டத்தின் மூலமும் கம்யூனிஸ்ட்டுகள் பெறும் ஒழுக்க நெறி இச்சமூகத்தில் பேசும் ஒழுக்கநெறியிலிருந்து வேறானது. அவை சுரண்டலை ஒழித்து சமத்துவத்தை பேசும் மனித சமூக உயர்ந்த ஒழுக்க நெறியான கம்யூனிச ஒழுக்க நெறியாகும். இங்கே எழுத பயன்பட்ட கட்டுரை (இளைஞர் கழகங்கனின் பணிகள் அக்டோபர் 1920 லெனின் ஆற்றிய உரைகளிலிருந்து). சுருக்கமாக மூலத்திலிருந்தே.

 இவை புரிந்துக் கொள்ள நாம் கம்யூனிஸ்டாக வேண்டும் தோழர்களே..

வர்க்க சமூகத்தில் பொதுவான ஜனநாயகமோ!

பொதுவான அரசோ!

பொதுவான கல்வியோ!

பொதுவான அரசாங்கமோ!

இல்லை

ஆக தோழர் நல்லகண்ணு எந்த வர்க்க தேவைக்காக உழைத்தார் என்பதனை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள் உங்கள் வர்க்க புரிதல் உங்களுக்கான அளவுகோல் தோழர்களே!!!

ஆக இறந்த தோழர் நல்லகண்ணுவின் பணி இதன் அடிப்படையில் அலசி ஆராய்வது அவசியம். ஏனெனில் கட்சியின் மூத்த தோழரும் கட்சியை வழி நடத்தியவர் என்ற அடிப்படியிலும்...









இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்