தமிழ் இனவாதிகளின் கண்ணோட்டம்
சாதி என்பது தமிழ்ச்சொல்லும் கொள்கையும் கோட்பாடுமல்ல. ஜாதி
என்னும் வடசொல்லைத் தமிழில் சாதி என்று தமிழ்ப் படுத்திக் கொள்வதும் ஏற்பதும் மடமை
என்று கூறுகின்றனர். தமிழ் இனகாவலர்களின் எழுத்துகள். மேலும் பார்ப்பனர் பிராமண
எதிர்ப்பு ஒன்றிய அரசை எதிர்பது என்ற இவர்களின் நிலைப்பாடு தமிழக ஆட்சி
அதிகாரத்தில் உள்ளவர்களை திராவிடர்கள் தமிழர்கள் என்ற பார்வையில் இவர்கள் அரசையும்
வர்க்கத்தையும் கைவிட்டுவிட்டு ஆளும் கும்பலின் நிழலில் மாற்றம் தேடும்பொழுதே
இவர்கள் தோல்வி அடைந்து விட்டனர்.
உயிர்களின் பரிணாம வளர்ச்சிபற்றிய அறிவியல் ஆய்வுகள்
மனிதனின் தோற்றக் காலத்தை திட்டவட்டமாக வரையறை செய்துள்ளன. உலகம் உருவான
காலத்தையும் கணிக்கின்றன. இம்முறையில் தமிழின் தொன்மையும் ஒரு காலவரையறைக்கு
உட்பட்டதுதான் என்கிறார் கைலாசபதி. கடவுள் ஆயினும் சரி, வேறு எத்தகைய மொழி அல்லது இலக்கியப் போக்காயினும் சரி -
எல்லாமே வரலாற்றில் குறிப்பிட்ட சூழலில் தோன்றுகின்றன என்ற மார்க்சியக் கருத்தை
ஆய்வு நெறியாக முன்வைக்கிறார். அடியையும் முடியையும் வரலாற்றில்தான் தேடிக்
கண்டறிய முடியும். வரலாற்றுக்கு வெளியில் வைத்து இலக்கியம் முதலிய ஆய்வைச்
செய்யமுடியாது. கடவுளும், கடவுட் கருத்தும் வரலாற்றுக்குக்
கட்டுப்பட்டதுதான் என்ற முறையில் இவரது ஆய்வு தொடர்கிறது.
வடமொழிக்கும், தென்மொழிக்கும்
வரலாற்றுக் காலம் முழுவதும் இருந்து வரும் பகைமையை விரிவாக எடுத்துக்காட்டுகிறார்.
பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் தமிழ் வாழ்த்து பாடலில் ஆரியத்துக்கு கடுமையான
எதிர்ப்பு இடம் பெற்றதை குறிப்பிடுகிறார். இந்தப்போக்கிற்கு மூலகாரணமாக டாக்டர்
கால்டுவெல்லின் ஆய்வை குறிப்பிடுவதோடு அவர் நிற்கவில்லை. இதன் வரலாற்றை
முற்காலத்திற்கும் கொண்டு செல்கிறார். ஆங்கிலேய அரசின் இனக்கொள்கையைக்
குறிப்பிடுகிறார். இந்தியர்களைப் பிளவுபடுத்தி தம் ஆட்சியை தக்கவைத்துக்
கொள்வதற்கு அவர்கள் இனக்கொள்கையைப் பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டுகிறார்(45).
இந்த வழிகாட்டல் நாம் தேடும் சாதியின் தோற்றம் வளர்ச்சி இன்றை இருப்புவரை இவரின் மார்க்சிய கண்ணோட்டம் பொருந்தும் தமிழ் பெருமை பேசுவோர் சமூக இயக்கத்தை புரிந்துக் கொள்ளவில்லை அவர்கள் ஆன்மீகவாதிகள் போல் அகநிலையில் மாறா சமூகத்தை பற்றி பேசுகின்றனர். ஆனால் சமூகம் மாறிக் கொண்டேயுள்ளது. சாதியயை தோற்றி வைத்தவர்கள் பார்ப்பனர்கள்தான் என்கின்றனர் இவை கடவுள்தான் உலகையும் உயிர்களையும் அபடைத்தார் என்பதனை ஒத்ததே.
வரலாற்றுக் காலமான சங்ககாலத்தில் கோலோச்சிய பின்னரும்
இச்சின்னங்களை எழுப்பும் பழக்கம் கொண்ட இப்பண்பாடு பொ.ஆ.பி. முதலாம் நூற்றாண்டு
வரை தொடர்ந்து வந்திருப்பதைத் தமிழகத்தில் அண்மையில் கிடைத்த பல்வேறு
அகழாய்வுச் சான்றுகள் புலப்படுத்துகின்றன(42).
சங்க இலக்கியப் பாக்கள் பலவும் - மருதப்பாடல்கள் உட்பட சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் வாழ்ந்த மன்னர்களை தலைமக்களாகக் கொண்டு பாடியவையாகும். மன்னர்களைப் பாடிய இலக்கியத்தில் மக்களைப் பற்றிய வரலாறும் தவிர்க்க முடியாத அளவுக்கு இடம்பெற்று விடுவதைக் காண்கிறோம். அவற்றைத் துருவித் தொகுப்பதன் மூலமே சங்ககாலச் சமுதாயத்தில் குறிப்பாக மருதநிலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் தன்மையை ஓரளவுக்கேனும் வெளிக்கொணர முடியும்.
தலைமக்கள் பெயர் இலக்கியங்களில் காணப்படுகிறது.
பொதுமக்கள் பெயர், குலப்பெயர் சாதிப் பெயராக இன்றும்
வழக்கில் இருக்கிறது, குலப்பெயர்கள் தொழிலால் அமைந்துள்ளன:
முல்லை நில மக்களின்
முக்கிய தொழில்- ஆடு மாடுகளை வளர்த்தல் — ஆயர், இடையர்.
குறிஞ்சி நில மக்களின்
முக்கியதொழில்- வேட்டையாடல் -- வேட்டுவர், வேடர்,
குறவர்.
மருத நில மக்களின் முக்கிய
தொழில்- உழவு, வேளாண்மை -- உழவர், வேளாளர்.
நெய்தல்நில மக்களின் முக்கிய
தொழில்-மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் -- பரதவர், உமணர்.
பாலை நில மக்களின் முக்கிய
தொழில்- ஆறலைத்தல் (வழிப்பறி), எயினர், மறவர்.
நிலத்துக்கு(ஊருக்கு)த் தகுந்த தொழில். தொழிக்குத்
தகுந்த பெயர், எல்லாமே இயற்கையாக அமைந்திருக்கின்றன.
குலப்பெயர்கள் எப்படி ஏற்பட்டன என்பதை விளக்கவே இவ்வளவு தூரம் தேடினோம்.
இன்னும் இவை போன்ற சில பல குடிப் பெயர்களும் குலப்பெயர்களும் உள்ளன.
அடல் அருந் துப்பின் ......... .
குருந்தே முல்லை என்று
இந்நான்கு அல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த்
தினையே
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர்
அவரையொடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன்,
கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி,
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்த்தென,
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. — 335
இப்பாடலின் வரிகளில் ‘துடியன்' பாணன், பறையன், கடம்பன்
என்று இந்நான்கல்லது குடியும் இல்லை” என்று பாடலாசிரியர் கூறுகிறார். குரவம், தளவு, குருந்தம், முல்லை - இந்நான்கு தவிர வேறு பூக்கள் இல்லை. வரகு, தினை, கொள்ளு, அவரை -
இந்நான்கு தவிர வேறு உணவில்லை. துடியன், பாணன், பறையன், சுடம்பன் - இத்நான்கு தவிர வேறு குடிகள்
இல்லை. வீரர்களின் நடுகல் தவிர வேறு கடவுள் இல்லை என்பது இப்பாடலின் பொருள்,
குறித்த நான்கு பூக்கள் தவிர வேறு பூக்கள் இல்லையா? நான்கு தானியங்கள் தவிர வேறு இல்லையா? நான்கு
குடிகள் தவிர வேறு இல்லையா? நடுகல் தவிர வேறு கடவுள்
இல்லையா? என்றால், இவர் பாடும் அந்த
ஊரில் இல்லை. இவ் விளக்கம் ஒளவை துரைசாமி பிள்ளை உரையால் தெரிகிறது.
பாடப்பெறும் அவ்வூரில் (அப்பகுதியில்) இல்லை எனப் பொருள் கொள்ளவேண்டும்,
அன்றிப் பொதுவாகக் குடியே இந்நான்குதான், இவையன்றி
வேறு இல்லை என்று பொருள் கொள்ளலாகாது.
மண் வேலை செய்வோர் குயவர், கல் வேலை செய்வோர் கற்றச்சா், மரவேலை செய்வோர்
தச்சர். பொன்வேலை செய்வோர் தட்டார் மற்றும் பொற்கொல்லர், இரும்பு வேலை செய்வோர் கருமார், கொல்லர் வெண்கலம்
முதலிய உலோக வேலை செய்வோர் கன்னார், இவர்களெல்லாம் பூணூல்
அணியும் உரிமை பெற்றவர்கள். இவர்களுள் குயவர் தவீர ஏனையோர் விஸ்வப்பிராமணர்
எனப் பெயர்பெற்றவர்கள். பள்ளர், பறையர், சக்கிலியர் தமிழ்நாட்டின் பழங்குடிகள். வயலில் - உழவு செய்வோர்
பள்ளர், இவர்களது வாழ்வு, பணியைப்
பற்றிய சிற்றிலக்கியம் (பிரபந்தம்) பள்ளு, வயலும் வயல்
சார்ந்த இடங்களும் மருதநிலத்தில் பள்ளர்கள் பலர் விவசாயத் தொழிலாளர்களாக -
விவசாயக் கூலிகளாக - இருந்தாலும் சிலருக்குச் சொந்தநிலம் உண்டு.
பள்ளர்களுக்கு மன்னர் என்ற பெயரும் உண்டு, இலக்கியங்களில்
காணப்படுகிறது, பறையறைவோர் பறையர். பறை வல்லிசை, துன்ப காலத்தில் முழங்கப்பெறுவது, பள்ளர்களுக்கு
உழவுத் தொழில். பறையர்களுக்கு இழவு வீட்டில் வேலை. பள்ளர்களுக்கு வயலில் வேலை,
பறையர்களுக்குச் சுடுகாட்டில் வேலை.
இன்னும் இவ்வாறு தொழிலாளர் பெயர்கள் நீள்கின்றன.
ஆக தமிழ் சமூகம் அன்றே தொழில் பிரிவின் அடிப்படையில் அமைந்த பெயர்களே சாதிகளாக தொடர்கிறது... இதனை மறுக்கும் தமிழ் இனவாதிகளை புரிந்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment