சாதி அன்றும் இன்றும் மார்க்சிய பார்வையில் - 5

 ‘தலித்’ பெயரில் இயங்கும் பலரும் அவர்களின் விடுதலைக்கு பங்களிக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.இன்று சாதி அடிப்படைவாதிகளான இந்துத்துவவை ஏற்று நடக்க பின்பற்ற ஒரு பிழைப்புவாத கூட்டம் இயக்கம் தலித் பெயரில் இயங்கும் பொழுது அவர்களின் நோக்கம் எந்த மக்களின் நலனுக்கானது புரிந்துக் கொள்ள வேண்டும். 

முன்னர் ஒருவரது உண்மையான சாதியை கண்டறிய இயலாத நிலையில் மரபுவழி தொழிலுடன் அவரை அடையாளப்படுத்தி சாதியை கண்டறிந்தோம். சாதிய முறையையும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளின் மீதான அதன் தாக்கத்தையும் நாம் கண்டிருக்கிறோம். அதே சமயம் நாம் கண்டிருக்கும் அமைப்பு முறைக்கு நாமே பெருமளவு பொறுப்பாவோம். நாம் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் சோனார் லோகார் போன்ற சாதியினர் காணாமல் போயிருப்பார்கள். அடையாளப் படுத்துவதிலும் வகைப்படுத்துவதிலும் அரசு காட்டிய ஆர்வம்

சாதி முறையை உறுதிப்படுத்துவதற்கு இட்டுச் சென்றது(35) என்கிறார். ஆங்கிலேயருக்கு முன் அவற்றில் பிரபத்துவ சாதிகளை தவிர மற்ற உறுதிப்படுத்தப்படாத நெகிழ்வுத் தன்மையில்தான் சாதிகள் இருந்தன. அரசாங்கம் சாதியை புறக்கணித்திருந்தால் கீழ்சாதியினரிடையே முற்றிலும் மாறுபட்ட வேறொன்று அவை படிப்படியாக மாற்றி இருக்கலாம்(35) என்கிறார் ஜி.எஸ். குரியே.

இங்கு அரசின் அதிகாரத்தால் இந்த சாதிப்பிரிவினை இருக்கம் பெற்றது. சாதி அரசின் அவசியமான உறுப்பாக மாறியது அவை மக்களை பிரித்து வைக்க காலனிய ஆட்சியாளர்களுக்கு தேவையாக இருந்தது. இதற்கான முழு தேவையும் அரசின் வர்க்க ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் பயன்பட்டது. இதில் மத நிறுவனங்களையோ மத தலைவர்களையோ ஏன் மத பூசாரிகளையோ (பிராமணர்களை) மட்டுமே குறை கூறுவது ஒடுக்குமுறை கருவியான அரசின் பணியை தன்மையை புரிந்து கொள்ளாமையே. அரசின் வர்க்க தன்மையும் அதற்கான பணியில் மத நிறுவனங்களின் பங்களிப்பையும் கணக்கில் கொண்டாலே விளங்கிக் கொள்ளலாம்.

‘தலித்’ பெயரில் இயங்கும் பலரும் அவர்களின் விடுதலைக்கு பங்களிக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.இன்று சாதி அடிப்படைவாதிகளான இந்துத்துவவை ஏற்று நடக்க பின்பற்ற ஒரு பிழைப்புவாத கூட்டம் இயக்கம் தலித் பெயரில் இயங்கும் பொழுது அவர்களின் நோக்கம் எந்த மக்களின் நலனுக்கானது புரிந்துக் கொள்ள வேண்டும். 

‘’தலித்’ பிரிவுகளுக்குள் உள்ள பல்வேறு சாதிபிரிவுகளை ஒன்றிணைக்காமல் பல பிளவை கண்டுள்ளது. அவற்றை கூட மாற்ற முடியாத இந்த தலித்தியம் சரி, ஒரு சாதியின் பெயரால் அமைப்பாகும் ஒரு சாதியும் சரி, இந்த சாதி அமைப்பைப் பேணுவதற்கும் அதன் மூலம் சில சலுகைகளை பெறுவதற்கும் அப்பால், இத் தலித்தியம் பட்டியலின மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய எதையுமே பெற்றுக் கொடுக்காது.

உயர்சாதிக்காரன் சாதிசங்கம் வைத்திருந்தால் நான் ஏன் வைத்திருக்க முடியாது என்று கேட்பது. சாதியை வேறு ஒரு வடிவில் பாதுகாப்பது என்பது உண்மையாக சமூக அக்கறை கொண்டவர்கள் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். மாறாக சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் (வர்க்கமாக) அணிதிரண்டு பதிலடி கொடுப்பதன் மூலம் தான், நாம் சாதியை கடந்து ஒரு பரந்துபட்ட விடுதலையை அடையமுடியும். இதை விடுத்து தலித்தாகவோ அல்லது ஏதோ ஒரு சாதியின் பெயரால் அணிதிரள்வது என்பது எப்படி ஒரு சாதியைக் கடந்து விடுதலை அடைய முடியும்? சாதியை ஒழிக்க மதத்தை விட்டு வெளியேறிவிட்டால் சாதி இருக்க வாய்ப்பில்லை என்கிறனர்! அவர்களுக்கு தெரியாத ஒன்றல்ல பௌத்தம் தழுவியர்களின் இன்றைய நிலை என்ன? கிருஸ்துவத்தில் உள்ளோர் நிலை என்ன? மதமாற்றம் தீர்வல்ல சாதி பிரச்சினைக்கு தற்காலிக இளைப்பாறுதலே. ‘தலித்’ மற்றும் தன்னார்வக் குழுக்களும் பேசும் அரசியல் சாதி ஒழிப்பில் தோல்வி கண்டுவிட்டன.

தலித் என்ற சொல் பிறப்பால் ஏற்றத்தாழ்வை கண்டிக்கும் சமூக அமைப்பில் சாதியின் பெயரால் கடைநிலையில் உள்ள மக்களை குறிப்பிடுவது ஆகும். இங்கே வர்க்கம் தவிர்த்து அந்த மக்களை ஒரே பெயரில் அழைப்பதனால் ஒரு முற்போக்கு முகமூடி கிடைக்கிறது, ஆனால் எந்தளவு ஒட்டுமொத்த தலித் மக்களுக்கு பயனளிக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. தலித்திய அமைப்பில் மேல்நிலையில் உள்ள ஆதிக்க வர்க்கத்தின் ஆதரவாளர்களும் செயல்பாட்டாளர்களும் கொடுக்கப்படும் மரியாதையும்அரவணைப்பும் கடைநிலையில் உள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை. ஆகவே தலித்திய முகமூடியும் ஒரு குறிப்பிட்ட ஆளும் வர்க்கத் தேவைக்காக செயல்படும் ஒரு குறிப்பிட்ட ஆட்களை கொண்டு இயக்கப்படுகிறது. அதிலும் கடைநிலையில் உள்ளவர்கள் ஒடுக்கப்பட்டடுதான் கிடக்கின்றனர் என்பது நடைமுறை உண்மை.

தலித்துகள் தம் அடிமை நிலையிலிருந்து மீள்வதையையே தலித் விடுதலை என்கிறோம். அதற்கான அரசியலை தலித் அரசியல் என்று குறிப்பிடுகின்றோம். இங்குள்ள ஒடுக்கு முறையில் இருந்து பொருளாதார, அரசியல், சமூக பண்பாட்டுத் தளங்களிலிருந்து விடுதலைப் பெறுவதையே சமூக விடுதலை என்கிறோம். அதாவது இங்கு தலித்துகள் மட்டுமல்லாது சமூகத்தில் பல்வேறு பிரிவு மக்களும் ஒடுக்கப்பட்டுள்ளனர். அவர்களும் இந்த சமூகத்தில் இருந்து விடுதலை பெறுவதே சமூக விடுதலை என்கிறோம். தலித் விடுதலையை சமூக விடுதலையிலிருந்து பிரித்து தனித்து துண்டித்து காணும் போக்கானது சரியானது அல்ல. நாம் வாழும் சமூக அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை முற்றாக மாற்றி அமைக்காமலேயே தலித்துகளுக்கு தனியான விடுதலை சாத்தியம் என்று இந்த பிற்போக்குத் தனமானது போக்கு கூறுகின்றது.

வர்க்க ரீதியாக மக்கள் சுரண்டப்பட்டு கொண்டுள்ளபோது இந்த சுரண்டலுக்கான அடித்தளத்தை முற்றாக மாற்றாமல், அரசு அதிகாரத்தையும் உற்பத்தி முறையையும் அவைகள் மீதான கருத்துருவாக்கத்தையும் பற்றி பேசாமல் தலித் விடுதலை என்பது கானல் நீரே. இன்றைய சமூக உற்பத்திமுறையை அதாவது ஏகாதிபத்திய நலன்களுக்கான இந்நாட்டு பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களுக்கு உகந்த முறையில் அரசு அதிகாரம் கோலோச்சும் பொழுது. அதற்கு எதிராக போராடாமல் அதற்குள்ளேயே சில சீர்திருத்தங்கள் மூலம் விடுதலை என்பது கற்பனையானதே. ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், ஏழை எளிய மக்கள், தலித் மக்கள் ஒன்று திரண்டு போராடாமல் கிளர்ந்தெழாமல் எவ்வகையான புரட்சியும் விடுதலையும் சாத்தியம் அல்ல.

சாதிகளைக் கடந்து அனைவரும் உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து போராட வேண்டும் இதற்கான ஒற்றுமை கட்டமைக்கப்பட்டாக வேண்டியுள்ளது. தலித் மக்கள் அனைவரும் ஒடுக்கப்படும் சாதியினர் என்பது சரி. சமூகப் புரட்சி என்பது சாதிய ஒழிப்பை உள்ளடக்கியதே தவிர, அது ஒன்றை மட்டும் கொண்டதல்ல. உற்பத்திமுறை மாற்றம், அரசு அதிகாத்தைக் கைப்பற்றுதல் என பல தளங்களில் இயங்கி சமூக, அரசியல், பொருளாதாரப் பண்பாட்டு கூறுகளோடு நெருங்கியதாகும். இங்குள்ள சூழலில் பாட்டாளி வர்க்கத்திற்கு நாம் இதற்கு முன்னர் கொடுத்த விளக்கத்தோடு இதையையும் இணைந்து காணும் பொழுது; உழைக்கும் வர்க்கத்தில் தலித் மக்கள் பெருந்திரளாக உள்ளனரே தவிர, தலித் மக்கள் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தினர் அல்ல. எல்லா சாதிகளிலும் உழைக்கும் வர்க்கத்தினர் உண்டு.

இங்கு தலித் தலைமை என்பது பிற சாதிகளின் உழைக்கும் மக்களையும் சனநாயக புரட்சிகர அரசியல் சக்திகளையும் நிராகரித்து விடுகிறது. அனைத்து சாதிகளின் உழைக்கும் மக்கள் மற்றும் சனநாயக புரட்சிகர அரசியல் சக்திகள் ஆகியோரின் தலைமையில் சமூக புரட்சி நடைபெற இயலும் இதில் தலித்துகளும் உள்ளடங்கிதான் தலித் அமைப்புகளுக்கு தலித் தலைமை கொடுக்க இயலும். அது சாதி எதிர்ப்பு போராட்டமாயினும் சமூக பிரச்சனையில் குறிப்பிட்ட எல்லைக்குள் தலைமை கொடுக்க முடியும். வர்க்கப் பிரச்சனைக்கு சமூகப் பிரச்சனைக்கு எல்லை விரிவாக்கப்படும் பொழுது சாதி கடந்து அனைத்து உழைக்கும் மக்களுக்கும் வர்க்க ரீதியாக புரட்சிகர சக்திதான் தலைமை கொடுக்க முடியும். திட்டவட்டமான வழிமுறையும் புரட்சிகரமான செயல் ஊக்கமும் உள்ள முன்னணியர் மட்டுமே தலைமை கொடுக்க முடியும். அதுதான் புரட்சிகரமான பாட்டாளி வர்க்க கட்சி. மார்க்சிய லெனினியத்தை வழிகாட்டியாக கொண்ட ஒரு புரட்சிகர கட்சியால் மட்டுமே தலைமைதாங்க முடியும். இங்கே புரட்சிக்கும் சீர்திருத்தவாததிற்குமான எல்லை கோட்டை மிக தெளிதாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

சமூக உற்பத்தி முறையில் கொண்டுவரும் அடிப்படையான மாற்றங்கள் சமூக உறவுகளை மாற்றி அமைக்க கூடியவை. ஆனால் அடிப்படையான மாற்றங்கள் நடைபெறாமல் அரசின் பொருளாதார நிர்வாக சமூக சீர்திருத்தங்களும் காலப்போக்கில் சில விளைவுகளை ஏற்படுத்தும். 1950 க்கு பின் கொண்டுவரப்பட்ட நிலச் சீர்திருத்தம், கல்வியில் வேலை வாய்ப்பு, இடஒதுக்கீடு, வரியவர்களுக்கான கடன் உதவி, ஐந்து ஆண்டு திட்டங்களில் தலித்துகளுக்கான நிதிஉதவி ஆகியவை சமூகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. அதுவரை சமூகத் கட்டமைப்புக்குள் கவுரவமான இடத்தை வகிக்காத தலித்துகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆகியோர் அத்தகைய இடத்துக்கு வர வாய்ப்புகளை ஏற்படுத்தியது. கல்வி கற்று ஏதேனும் நிரந்தர பணியில் இன்றும் அமர முடிகிறது. நடுத்தர வாழ்க்கை வாழ்வதற்குரிய பாதுகாப்பைதருகிறது. 

இங்குள்ள பல முதலாளித்துவ அறிவுஜீவிகள் மார்க்ஸ் இந்தியாவை புரிந்துக் கொள்ளவில்லை என்பதுடன் மார்க்சுடன் அம்பேத்கரை ஒப்புமைபடுத்தி பேசுவதும் இந்தியாவை அம்பேத்கர் புரிந்து வைப்பதிருபதை மார்க்சியவாதிகள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி பேசுவதை காணலாம். மார்க்சும் அம்பேத்கரும் ஒன்றல்ல, அவர்களின் நோக்கமும் தத்துவமும் வெவ்வேறு; இங்குள்ள எல்லா ஒடுக்குமுறைக்கான அடிதளம் சமூக, அரசியல், பொருளாதாரம் என்று தெளிவுப்படுதியது மார்க்சியம். சுரண்டலின் வடிவமான ஒடுக்குமுறை அமைப்பை மார்க்சியம் அம்பலப்படுத்துவதுடன் இந்த அடக்குமுறை ஒடுக்குமுறை அமைப்பை தூக்கி எறிய சொல்கிறது அவைதான் மார்க்சியம் போதிக்கும் புரட்சிக்கான திட்டம் வகைப்பட்டது. ஆனால் அம்பேத்கர் உள்ள அமைப்புமுறைகுள்ளே தீர்வை தேடும் பொழுது அவர் ஒடுக்கும் அரசுடன் சமரசமாகி சுரண்டலுக்கு காரணமான அரசு இயந்திரத்தில் பங்கேற்பதுடன் அதனை காக்கவும் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு ஆளும் வர்க்கதின் எல்லா தத்துவங்களையும் ஏற்கும்படி நிர்பந்திக்கிறார். ஆதாவது மார்க்ஸ் அம்பேத்கர் வெவ்வேறு அறிவுத் தளத்தைக் கொண்டவர்கள். அம்பேத்கரின் கோட்பாடு என்பது முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் முதலாளித்துவ சனநாயகத்தை முன்வைக்கத் தூண்டியது என்ற புரிதலைப் பெறாத காரணத்தினால் மார்க்சை குறைத்து மதிப்பிட முடிகின்றது. தத்துவவாதிக்கும் (philosopher) கல்வியாளருக்கும் (academic) நிறையவே வேறுபாடு உண்டு. அம்பேத்கர் பெரும் கல்வியாளர் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. புத்திசாலித்தனத்திற்கும் அறிவுஜீவிகளுக்கும் வித்தியாசம் உள்ளது போலவே தான் இதுவுமாகும். அம்பேத்கர் ஆளும் வர்க்க முதலாளித்துவ அறிவுஜீவி இதில் எவ்வித குறையும் இல்லை. ஆனால் மார்க்ஸ் உழைக்கும் மக்களான பாட்டாளி வர்க்க அறிவுஜீவி. அவரின் தத்துவம்தான் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆனால் சுரண்டும் வர்க்க தத்துவமான மாறாநிலை போதிக்கும் கருத்துமுதல்வாத தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர் அம்பேத்கர். மார்க்சியம் வர்க்க விடுதலை பேசுகிறது. மார்க்சியம் என்பது புரட்சிகர கோட்பாடு, புரட்சிகர நடைமுறை, புரட்சிகர திட்டம் இதனை அடிப்படையாக கொண்டு சமூகத்தில் உள்ள தனிசொத்தை ஒழித்து பொதுசொத்தாகவும் உழைப்பவனுக்கே அதிகாரம் எனும் அரசியல் பொருளாதார கட்டுமானத்தோடு தொடர்புடையது. இவை அனைத்தும் சுரண்டலிலிருந்து ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையாகும். அதற்கான நீண்ட பணி செய்ய வேண்டும். இங்கே அம்பேத்கர் உள்ள அமைப்பில் தனக்கான இடம் தேடி சமரச முறையில் வாழ சொல்கிறார். ஒரு சிலர் வாழ பலர் தொடர்ந்து துயருண்டு கிடப்பதுதான் இதன் அங்கீகாரம்.இந்த கொடிய அடக்குமுறையை சகித்து வாழ் என்பதே நாம் மேல் கண்ட மூன்று விதமான போக்கின் முடிவு. ஆனால் புரட்சி பேசும் மார்க்சியம் இந்த அடக்குமுறைக்கான சுரண்டல் அமைப்பை தூக்கி எறிய சொல்கிறது.

 இந்த நூலின் விலை 225/- தனி சலுகை விலை 110 + 50 கொரியர் (₹160) 9095136356 என்ற எண்ணிற்கு செலுத்தி அனுப்ப வேண்டிய விலாசத்தை 7010134299 என்ற எண்ணிற்கு அனுப்பி வைக்கவும் தோழர்களே நுலினை பெற.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்