கம்யூனிஸ்டுகள் யார்? அவர்களின் பணி என்ன?

என் எழுத்தை படித்து சில நடைமுறைவாதிகள் கதறுகின்றனர் அவர்கள் என்ன நடைமுறையில் உள்ளனர் என்பதனை புரிந்துக் கொள்ளவே இந்தப்பதிவு
மார்க்ஸ், எங்கெல்ஸ் வகுத்தளித்த தத்துவ போதனைகளை நடைமுறையாக்கியவர்தான் லெனின்.
லெனின் அவர்கள் சமூகத்தில் உள்ள எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஆளும் வர்க்கமாய் உள்ள தனியுடமையை பாதுகாக்கும் சுரண்டல் அமைப்புதான் என்பதனை தெளிவுப்படுத்தி இந்த அமைப்பிலிருந்து சுரண்டப்படும் மக்கள் விடுதலைபெற சுரண்டல் இல்லா சமூகம் படைக்கவும்; இச்சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டுமென்றார்.
அதற்கு தேவை புரட்சி; ஆம் தனியுடமையை ஒழித்து பொதுவுடமையை நிர்மாணிக்கும் சுரண்டலை ஒழிக்கும் புரட்சி அந்த புரட்சிக்கான கட்சி கட்டி உலகிற்கு வழி காட்டியவர்தான் லெனின்.
லெனின் புரட்சிக்கு எதிரான பல்வேறு போலியான நடைமுறைகளை எதிர்த்து; மார்க்சியத்தை மறுக்கும் போக்குகளை அம்பலப்படுத்தி; புரட்சியை நடத்தும் சரியான புரட்சிகர கட்சியை கட்டினார்.
லெனின் மார்க்சியம் அல்லாத திருத்தல்வாதம், சந்தர்ப்பவாதம், பொருளாதாரவாதம் போன்ற போக்குகளை அம்பலப்படுத்தி கட்சி நடைமுறையிலிருந்து வெளியேற்றி; புரட்சியை நடத்திகாட்டினார்.
ஆனால் நம்மிடையேயுள்ளோர் நடைமுறையும் அவர்களின் கண்ணோட்டமும் லெனின் வகைபட்டதா? என்றால் இல்லைதானே?
புரட்சிகர கட்சிக்கு விரோதமானது எவையெல்லாம் வேண்டாம் என்று லெனின் சொன்னாரோ அந்த எல்லாவற்றின் பிரதிநிதிகளாக அல்லவா இங்குள்ளவர்கள் இருக்கிறார்கள்!
மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலை ஏற்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்டுகள் ஆவர்?.
லெனினியத்தை மறுக்கும் ஒருவர் ஏப்படி கம்யூனிஸ்டாக முடியும்?
சுரண்டலை ஒழிப்பதே தலையாய கடமை; இவைதான் கம்யூனிஸ்டுகளின் பணியும் அதற்கான நடைமுறையுமாய் உள்ளபோது அதனை ஏற்காதவர்கள் எப்படி கம்யூனிச நடைமுறை வாதிகளாவர்?.
மார்க்சியம் வறட்டு சித்தாந்தமல்ல செயலுக்கான வழிக் காட்டி.
மார்க்சியத்தை கற்பது என்பது சில சொற்றொடர்களையும் இலக்கணங்கள் மனப்பாடம் செய்வதாக ஒரு போதும் இல்லை. மாறாக சோசலிசத்திற்கான போராட்டத்தின் போக்கில் எவ்வாறு மார்க்சியதின் கோட்பாடுகள் வளர்க்கப்பட்டன; நமது பங்கிற்கு நமது சொந்தப் போராட்டத்திலும் எவ்வாறு நாம் நடைமுறைப் படுத்தவும் வளர்க்க முடியும் என்பதை கற்றறிவதாகும்.
நமக்கான நடைமுறை சோசலிசத்தை படைக்க நமக்கு வகுத்தளித்துள்ள வழிமுறையில் சுரண்டலுக்கு ஆட்பட்டுள்ள மக்களை ஒருங்கிணைத்து உள்ள சுரண்டல் அமைப்புமுறையை ஒழித்துக் கட்டுவதுதான்.
அதில் பாரிஸ் கம்யூன் மற்றும் ரசிய, சீன சோசலிச புரட்சி வழிகாட்டியுள்ளது.
இங்கு புரட்சியை நேசிப்போர் சுரண்டலில் பாதிக்கபட்டுள்ள பல்வேறு மக்களை ஒருங்கிணைப்புதான் முதன்மையான பணியாகும்.
அந்த ஒருங்கிணைப்பில் உழைக்கும் (ஏழை எளிய) மக்கள் தங்களின் உழைப்பை சுரண்டும் அட்டைபூச்சியாக (அவர்களின்) உதிரத்தை குடிக்கும் கூட்டத்தை அறிந்துக் கொண்டால்; உழைக்கும் மக்களாய் ஒன்று திரண்டிருந்தால் அவர்களே சூராவளியாக சுரண்டு அந்த சுரண்டும் கூட்டத்தை நசுக்கி விடுவர். அதற்கான நடைமுறை பணியை லெனின் மாவோ போன்றோர் செயல்முறையில் சாதித்துள்ளனர்.
இவைதான் நிரூபிக்கபட்ட தத்துவ நடைமுறை. இதனை உலக வரலாற்றில் ஆணித்தரமாக நிரூபிக்க பட்டவை. இதனை புரிந்துக் கொள்ள மார்க்சிய கண்ணோட்டம் வேண்டும். அவர்களின் வழியை பின்பற்றி நமக்கான பணியை செய்வதே மார்க்சியம், இல்லையேல் பயனில்லை அவை ஆளும் வர்க்க சேவையே.
மார்க்ஸ், எங்கெல்ஸ் வகுத்தளித்த தத்துவ போதனைகளை நடைமுறையாக்கியவர் தான் லெனின். அவர் சமூகத்தில் உள்ள எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஆளும் வர்க்கமாய் உள்ள தனியுடமையை பாதுகாக்கும் சுரண்டல் அமைப்புதான் இதிலிருந்து சுரண்டப்படும் மக்கள் விடுதலைபெற சுரண்டல் இல்லா சமூகம் படைக்கு இச்சமூக்த்தை மாற்றி அமைக்க வேண்டுமென்றும் அதற்கான புரட்சி; புரட்சிக்கான கட்சி கட்டி உலகிற்கு வழி காட்டியவர்தான் லெனின். அவர் புரட்சிக்கு எதிரான பல போலியான மார்க்சியத்தை மறுக்கும் போக்குகளை அம்பலப்படுத்தி ஒரு சரியான புரட்சிகர கட்சியை கட்டினார். அதில் திருத்தல்வாதம், சந்தர்ப்பவாதம், பொருளாதாரவாதம் போன்ற போக்குகளை வெளியேற்றி புரட்சி நட்த்திகாட்டினார். ஆனால் நம்மிடையேயுள்ளோர் லெனின் புரட்சிகர கட்சிக்கு விரோதமானது எவையெல்லாம் வேண்டாம் என்று சொன்னாரோ அந்த எல்லாவற்றின் பிரதிநிதிகளாக இருக்கும் இங்குள்ளவர்கள் எப்படி கம்யூனிஸ்டுகள் ஆவர்?. லெனினியத்தை மறுக்கும் ஒருவர் ஏப்படி கம்யூனிஸ்டாக முடியும்? சுரண்டலை ஒழிப்பதே தலையாய கடமை இவைதான் கம்யூனிஸ்டுகளின் பணி அதற்கான நடைமுறையும்.

 மார்க்சியம் வறட்டு சித்தாந்தமல்ல செயலுக்கான வழிக் காட்டி. மார்க்சியத்தை கற்பது என்பது சில சொற்றொடர்களையும் இலக்கணங்கள் மனப்பாடம் செய்வதாக ஒரு போதும் இல்லை. மாறாக சோசலிசத்திற்கான போராட்டத்தின் போக்கில் எவ்வாறு மார்க்சியதின் கோட்பாடுகள் வளர்க்கப்பட்டன; நமது பங்கிற்கு நமது சொந்தப் போராட்டத்திலும் எவ்வாறு நாம் நடைமுறைப்படுத்தவும் வளர்க்க முடியும் என்பதை கற்றறிவதாகும். நமக்கான நடைமுறை சோசலிசத்தை படைக்க நமக்கு வகுத்தளித்துள்ள வழிமுறையில் சுரண்டலுக்கு ஆட்பட்டுள்ள மக்களை ஒருங்கிணைத்து உள்ள சுரண்டல் அமைப்புமுறையை ஒழித்துக் கட்டுவதுதான். அதில் பாரிஸ் கம்யூன் மற்றும் ரசிய, சீன சோசலிச புரட்சி வழிகாட்டியுள்ளது. இங்கு புரட்சியை நேசிப்போர் சுரண்டலில் பாதிக்கபட்டுள்ள பல்வேறு மக்களை ஒருங்கிணைப்புதான் முதன்மையான பணி. அந்த ஒருங்கிணைந்த உழைக்கும் (ஏழை எளிய) மக்கள் தங்களின் உழைப்பை சுரண்டும் அட்டைபூச்சியாக (அவர்களின்) உதிரத்தை குடிக்கும் கூட்டத்தை அறிந்துக் கொண்டால்; உழைக்கும் மக்களாய் ஒன்று திரண்டிருந்தால் அவர்களே சூராவளியாக அந்த சுரண்டும் கூட்டத்தை நசுக்கி விடுவர். அதற்கான நடைமுறை பணியை லெனின் மாவோ போன்றோர் செயல்முறையில் சாதித்துள்ளனர். இவைதான் நிரூபிக்கபட்ட தத்துவ நடைமுறை. இதனை உலக வரலாற்றில் ஆணித்தரமாக நிரூபிக்க பட்டவை. இதனை புரிந்துக் கொள்ள மார்க்சிய கண்ணோட்டம் வேண்டும். அவர்களின் வழியை பின்பற்றி நமக்கான பணியை செய்வதே மார்க்சியம், இல்லையேல் பயனில்லை அவை ஆளும் வர்க்க சேவையே.

நமது சில தோழர்கள் நடைமுறைவாதிகள், நாங்கள் நடைமுறையில் உள்ளோம் நீங்கள் என்ன செய்துக் கொண்டுள்ளீர்?என்று கேள்வி கேட்கின்றனர்! உங்களுக்கான நடைமுறை பணி என்னவென்றும் கேட்கின்றனர். அதனை பற்றி விரிவாக அடுத்த பகுதியில் தேடுவோம். அதற்கு முன்னர் கம்யூனிஸ்டுகளின் நடைமுறை என்னவென்பதே இந்த பகுதி

உலகில் பல கண்ணோட்டக்கங்கள் பல நடைமுறைகள் உள்ளன. ஏன் மதவாதிகள் சாதிவாதிகள் கூட மக்களை ஏமாற்ற மத கோட்பாடுகளை மக்களின் வாழ்வியலுக்கு தேவையானதாக அவைதான் உன்னதமானதாக போற்றி புகழ்ந்து கொன்டுள்ளனர். உண்மையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலுக்கு அவை பயனளிக்கிறதா என்று பார்த்தால் இல்லைதானே? உலகெங்கும் உள்ள பல்வேறு மதங்கள் பண்டைய மரபுகளை பேணுவோர் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். உழைக்கும் மக்களை அறியாமையில் வைத்திருக்க அவர்களின் பிரச்சினைக்கு காரணமான சமூக அமைப்பை மூடிமறைத்து விதி கோட்பாட்டை பேசி சுரண்டலையும் அவர்கள் மீது ஏவப்படும் ஒடுக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழமல் இருக்க ஆளும் வர்க்க சேவை செய்கின்றனர். இதனை ஆளும் வர்க்கம் ஆரத்தளுவி பயன்படுத்திக் கொள்கிறதல்லவா?  இதனை எதிர்த்து போரிட்ட முந்தைய கால சில நடைமுறைகள் மத கோட்பாடுகளை எதிர்த்து முன்னணிக்கு வந்தாலும் இந்த அமைப்பில் உள்ள சுரண்டலுக்கு காரணத்தை புரிந்துக் கொள்ளாமல் மதத்தின் கேடான பக்கங்களை மட்டும் சாடியது. இவையும் ஆளும் வர்க்கத்தின் முற்போக்கு வேடமணித்து உழைக்கும் மக்களை சுரண்ட ஏதுவாக பயன்பட்டது.  ஆக நடைமுறையில் இந்த இரண்டு கோட்பாடுகளும் பிற்போக்கு முற்போக்கு பாத்திரமாற்றினாலும் இறுதியில் ஆளும் வர்க்க தேவையை பூர்த்தி செய்யும் தத்துவ நடைமுறையாக உள்ளதை காண்கிறோம்.

ஆனால் மார்க்சிய தத்துவம் இதுவரையில் உள்ள தத்துவ நடைமுறைகளை தெளிவாக ஆராய்ந்து பிரச்சினைகளை பேசுவதோடு அல்லமல் பிரச்சினையை ஆராய்ந்து அதிலிருந்து விடிவிக்கும் வழிமுறையை உழைக்கும் மக்களுக்கு வழங்கியுள்ளது. அந்த விடுதலை ஏன் என்பதனையும் அவை எப்படி என்பதனையும் மார்க்சிய ஆசான்கள் நடைமுறையில் நிரூப்பித்துள்ளனர். 


 இன்று பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தாலும். உண்மையாலுமே ஏகாதிபத்தியவாதிகள், பாசிஸ்டுகள், நிலப்பிரப்புகள் என்று பல்வேறு விதமான சுண்டலாளர்கள், ஒடுக்கு முறையாளர்கள் உலகெங்கும் பல்வேறு நாடுகளில்  பல்வேறு வகையில் அடக்கி ஒடுக்கி கொண்டிருக்கின்றனர். இது எந்த அளவுக்கு நடக்கிறது என்றால் உழைக்கும் மக்கள் உயிர் வாழ்வதே பெரும் பாடாகிவிட்டது. வாழ்க்கையில் முன்னேறுவது மட்டுமல்லாமல் உயிரோடு இருப்பதற்கே அவர்களுக்கு வேறு வழியின்றி போராட வேண்டியுள்ளது. எனவே இந்த போராட்டம் வரலாற்று வழியில் தவிர்க்கமுடியாததாக உள்ளது. அதே நேரத்தில் இதற்கான திர்வாக வரலாற்று வழியில் மகத்தான லட்சியம் கொண்ட கம்யூனிசமும் சமூகம் அவசியமானது. இந்த மனித குல விடுதலையின் நோக்கத்தில் அதுதான் உண்மையான பணி.

 பல நூறு ஆண்டுகளாக உற்பத்தி சாதனங்களில் தனியுடமை இருந்து வரும் சமுதாயத்தில் சுரண்டுபவர்கள் தமது அதிகாரத்தைக்கொண்டு வாழ்வின் எல்லா துறைகளிலும் தமது அதிகாரத்தை நிறுவி வானத்துக்கு கீழே உள்ள எல்லாவற்றையும் அடாவடியாக கைப்பற்றிக் கொண்டுள்ளனர்.அவர்களுடைய நீண்ட கால ஆட்சி மனித சமுதாயத்தின் பின்தங்கிய நிலை, அறியாமை குறுகிய சுயநலம் ஒருவரை ஒருவர் சந்தேகித்தல் ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல், ஒருவருக்கு ஒருவர் ஊறு விளைவித்தல், ஒருவரை ஒருவர் படுகொலை செய்தல் ஆகியவற்றை தோற்றுவித்து அவற்றை காலம் காலமாக நீடித்து நிலைப்பது செய்துள்ளது.

இந்த நிலைமையை கலைந்து ஒடுக்கப்படும் சுரண்டப்பட்டும் உள்ள மக்களை விடிவிப்பதே ஆகும். ஆனால் இச் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர்கள் மீது மிக ஆழமாக பதிந்துள்ளது இந்த கேடுகெட்ட தப்பெண்ணங்கள் உழைக்கும் ஏழை எளிய மக்களை சுரண்டி வாழும் கூட்ட நலன்களையும் ஆட்சியில் காத்துக் கொள்வதற்காக சுரண்டும் வர்க்கங்கள் மேற்கொண்ட கேடுகெட்ட முயற்சிகளின் தவிர்க்க முடியாத விளைவாக உள்ளது. பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மக்களையும் பின்தங்கிய நிலையிலும் அமைப்பு ரீதியாக திரட்டப்பட்டாலும், பிளவுப்படுத்தியும் அவர்களை தனித்தனியாக தமது ஆளும் நிலையை தொடர்ந்து நீடிக்க செய்ய வழி செய்கிறது. நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக விடாப்பிடியாக சித்தாந்த போர் நடத்தவும்; வாழ்வா சாவா என்றுள்ள மக்கள் இடையே நீண்ட காலமாக நிலவும் கேடுகெட்ட சுரண்டும் வர்க்க செல்வாக்கையும் பின்தங்கிய கருத்துகளையும் இன்னும் சிலபோக்கின் செல்வாக்குக்கு எதிராக போராட வேண்டும். இவ்வாறு செயல்படுவது மூலம் பரந்துபட்ட மக்களின் அரசியல் உணர்வையும் மேம்படுத்தி சுரண்டுபவர்களையும் தோற்கடிக்க முடியும். கம்யூனிசத்தை சாதிப்பதற்கான பாதையில் எவ்வளவு கடினமான விஷயங்கள் நிறைந்துள்ளன, இவை கற்பனை செய்வது போல பரந்துபட்ட மக்கள் அரசியல் உணர்வு மிக்கவர்களாகவும். ஐக்கியப்பட்டும் சுரண்டும் வர்க்கங்களின் செல்வாக்கிலிருந்து விடுபட்டும்  பின்தங்கிய நிலையில் இருந்து விடுபட்டு இருப்பார்களேயானால் புரட்சி என்பது கடினமாக இருக்காது. ரஷ்ய சீன படிப்பினைகள் நமக்கும் உள்ளது.

தொடர்ந்து விவாதிப்போம் தோழர்களே
















No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்