இறந்தகாலம் நிகழ்காலத்தை ஆள்கிறது- நிகழ்காலம் இறந்தகாலத்தை ஆள்கிறது-விவாதிக்க

 மாண்டவன் வாழ்பவனை ஆட்டி வைக்கிறான்-மார்க்ஸ் (மூலதனம் முதல் பாகம் புத்தகம் 1 பக்கம் 26)

முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வளர்ச்சியால் மட்டுமன்றி, அந்த வளர்ச்சியின் அரைகுறை நிலைமயிலும் அவதிபடுகிறோம். நவீன காலத் தீமைகளோடு கூடவே காலத்துக்கு ஒவ்வாத சமூக, அரசியல் முறைகளை தவிர்க்க முடியாதபடி உடன் கொணரும் பழமைப்பட்ட உற்பத்தி முறைகளின் முனைப்பொழிந்த மீத மிச்சத்திலிருந்து மரபுரிமையாய் வந்த கேடுகளின் முழு வரிசையும் நம்மை வருத்துகிறது. வாழ்பவற்றால் மட்டுமின்றி மாண்டவற்றாலும் அவதிபடுகிறோம்- மார்க்ஸ்.
கனவான்களே இன்று நிழல் யுத்தம் நடத்தும் அயோக்கியர்களே...
நேரடியாக உழைக்கும் மக்களின் வாழ்வே பறிபோய் கொண்டுள்ளது அதனை பற்றி பேசாமல் என்னே சொல் விளையாட்டு?
நீங்கள் ஆரிய திராவிட மாயையில் பி.ஜே.பி வெர்சஸ் தி.மு.க வில் மூழ்கடிக்க பார்க்கின்றீர்.

சாதியாலும் மதத்தாலும் உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டி வாழ நினைக்கும் கூட்டம் அவர்களை அந்த பொய்மையில் வாழவைக்க நினைக்கும் அயோக்கியதனம் ....

மார்க்சியம் சொல்வது"முதலாளித்துவ சமூகத்தில் இறந்தகாலம் நிகழ்காலத்தை ஆள்கிறது" என்பதன் பொருள் பல்வேறு பிற்போக்கு முந்தைய சமூக மிச்ச சொச்சங்கள் ஆதிக்கம் செய்கிறது என்ப்தே. அவை சாதியாக, பெண்ணடிமைதனம் போன்ற மத அடிபடைகளாகட்டும் இனும் பல் வடிவங்களில் தொடர்கிறது; இன்று நிலவுடமை ஆட்சி அதிகாரம் நேரடியாக இல்லை. ஆனால் மத சமூக நடைமுறையின் ஆளுமை தொடரத்தான் செய்கிறது. அவை சுரண்டலை தொடர நில நிறுத்தப்படுகிறது; ஆம் அதேவேளையில் "பொதுவுடைமை சமூகத்திலோ, நிகழ்காலம் இறந்தகாலத்தை ஆள்கிறது" என்பது இந்த பிற்போக்கு குப்பைகளை ஒழித்துக் கட்டுவதே பொதுவுடமை சமூக அமைப்பின் நோக்கம் இலக்கு.

இந்த மார்க்சிய புரிதலை உள்வாங்காமையே பலர் இங்கே குழப்பும் நிலையில் உள்ளனர்.

பண்ணையடிமை முறை நிலவிய காலத்தில் பண்ணையடிமை, நகரத்தார் சமூக உறுப்பினனாகத் தன்னை உயர்த்திக் கொண்டான். இதற்கு மாறாக, [இன்றைய] நவீன காலத்துத் தொழிலாளி, தொழில்துறையின் முன்னேற்றத்தோடு கூடவே தானும் முன்னேறுவதற்குப் பதிலாக, தன் சொந்த வர்க்கம் நிலவுதற்குரிய [வாழ்வாதார] நிலைமைகளுக்கும் கீழே மேலும் மேலும் தாழ்ந்து போகிறான். அவன் பரம ஏழை ஆகிறான். பரம ஏழ்மை மக்கள் தொகையையும் செல்வத்தையும் விட அதிவேகமாக வளர்கிறது. இங்குதான் ஒன்று தெளிவாகிறது – முதலாளித்துவ வர்க்கம் இனிமேலும் சமுதாயத்தில் ஆளும் வர்க்கமாக நீடிக்கவும், தான் நிலவுதற்குரிய நிலைமைகளை அனைத்துக்கும் மேலான சட்டவிதியாகச் சமுதாயத்தின் மீது திணிக்கவும் தகுதியற்றது. முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியதிகாரம் செலுத்தவும் தகுதியற்றது. ஏனெனில், அதன் அடிமை, அவனுடைய அடிமை நிலையிலேயே தொடர்ந்து வாழ்வதற்குக்கூட வகைசெய்ய அதற்கு வக்கில்லை. மேலும், அதன் அடிமையிடமிருந்து தான் வாழ்வாதாரங்களைப் பெறுவதற்குப் பதிலாக, அந்த அடிமைக்கு வாழ்வாதாரங்களை வழங்கியாக வேண்டிய நிலைக்கு, அவன் தாழ்ந்து போவதை அதனால் தடுக்க முடியவில்லை என்பதும் காரணமாகும். சமுதாயம் இனிமேலும் இந்த முதலாளித்துவ வர்க்கத்தின்கீழ் வாழ முடியாது.வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கம் நிலவுவது இனிமேலும் சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது.
மூலதனத்துக்கு இன்றியமையாத நிபந்தனை கூலி உழைப்பாகும்.





























Murugai Mainthan
Palani Chinnasamy என்றைக்காவது நீங்கள் சாதிய சமுக சூழலைபற்றி
எழுதியது உண்டா ஐரோப்பிய சூழலை இங்கு பொருத்துவதை தான் நான் எதிர்க்கிறேன்
Palani Chinnasamy
Murugai Mainthan உங்களை போன்ற அதி புத்திசாலிகளுகாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து நான் எழுதிய நூல்தான் "சாதி அன்றும் இன்றும் மார்க்சிய பார்வையில்" உங்களுக்குதான் மார்க்சியம் என்றால் வேப்பங்காய் பின்னர் என்ன சொல்ல தோழர்?
Palani Chinnasamy
Murugai Mainthan இந்தியாவில் மனிதர்கள் மனிதர்களாக இல்லையா? அல்லது இந்தியர்களுக்கு அமெரிக்கா அய்ரோப்பிய கண்டுபிடிப்புகள் பயனணிக்காதா? ஏன் 4G, 5G வெளிநாட்டு கண்டுபிடிப்புதான் இங்கே மனிதர்கள் பயன்படுத்துவதில்லையா? அல்லது பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வெளிநாட்டு கண்டிபிடிப்புதான் அவை இங்கே பயன்படுத்துவதில்லையா? அதிலென்ன மார்க்சியம் மட்டும் இங்கு பொருந்தாது!? ஏனெனில் உங்களின் பிழைபிற்கான அம்பேத்கர் பெரியார் தேவையற்றவர்களாகி போவர் ஆகையால் இந்த கட்டுகதை நீங்களும் உங்கள் விவாதமும்!!!!

இன்னும் சில பார்ப்போம்- வர்க்க எதிரியை எப்படி அணுகின்றனர் புரிந்துக் கொள்ள!

கட்டுரையாளர் : க. கனகராஜ் CPIM மாநில செயற்குழு உறுப்பினர் 

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி பொது வெளியில் பேசும் ஒவ்வொரு பேச்சும் அவரது அரசியல் அறியாமையையும், ஆளுநர் என்கிற பதவிக்கு அவர் தகுதி இல்லாதவர் என்பதையும் மீண்டும் மீண்டும் உறுதி செய்கிறது. 

தான் ஏதோ திடுக்கிட வைக்கும் உண்மைகளைச் சொல்பவர் என்று காட்டிக்கொள்வதற்காக, ஆளுநர் ரவி மீண்டும் ஒருமுறை தன் அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால், ஒருவரை விமர்சிப்பதற்கு முன்னர், அவர்கள் எதைக்  கூறினார்கள், எந்தப் பொருளில் கூறினார்கள் என்பதை உள்வாங்காமல், மேலோட்டமான சில வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவதூறு பரப்புவது ரவியின் தகுதியின்மையையே காட்டுகிறது. 

தான் ஏதோ திடுக்கிட வைக்கும் உண்மைகளைச் சொல்பவர் என்று காட்டிக்கொள்வதற்காக, ஆளுநர் ரவி மீண்டும் ஒருமுறை தன் அறியாமையை வெளிப் படுத்தியுள்ளார்.

மார்க்சும் இந்தியாவும்:  ஆளுநரின் வரலாற்றுப் புரட்டு

காரல் மார்க்ஸ் ஆங்கிலேயர்களைப் பாராட்டியதாக ஆளுநர் ரவி கூறுகிறார். மார்க்ஸ் 1853-இல் ‘நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன்’ பத்திரிகையில் இந்தியா குறித்து எழுதிய கட்டுரைகளை அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

பிற்போக்குத்தனத்தை சாடிய மார்க்ஸ்: மார்க்ஸ், “மனிதன் குரங்கின் முன்னாலும், நாட்டின் (கோவிலின்) முன்னாலும் மண்டியிட்டுக் கிடப்பது பிற் போக்குத்தனம்” என்று சாடினார்.

 இப்போதும் நாம் அதையேதான் சொல்கிறோம். ஆர்.என்.ரவி ஆடு, மாடு, நாய், பூனை எதன் முன்னாலும் மண்டியிட்டுக் கிடக்கலாம். ஆனால், மனிதன் அப்படி கிடப்பது சரியல்ல என்று மார்க்ஸ் சொன்னது முற்றிலும் சரி. ஓரறிவு முதல் ஆறறிவு வரை அறிவுக்கு மதிப்பளிக்காத பிற்போக்குத்தனத்தைத்தான் மார்க்ஸ் கேள்விக்குள்ளாக்கினார்.

ஏகாதிபத்தியமும் முற்போக்கான அம்சமும்: மார்க்சும், ஏங்கல்சும் 1848-இல் வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யில் வரலாற்று ரீதியாக முதலாளித்துவம் முற்போக்கான பாத்திரத்தை வகித்தது என்று குறிப்பிட்டனர்.

 இதன் பொருள் முதலாளித்துவம் நல்லது என்பதல்ல. அது, அதற்கு முன் இருந்த நிலப்பிரபுத்துவ உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது என்பதாகும்.

அதேபோலத்தான், இந்தியாவில் இறுக்கமடைந்திருந்த சாதிய அடிப்படையிலான கிராமியப் பொருளாதாரக் கட்டமைப்பை, ஆங்கிலேயர்கள் தங்கள் லாப நோக்கத்திற்காக உடைத்தெறிந்ததை மார்க்ஸ்  சுட்டிக்காட்டினார்.

 இங்கிருந்த கிராமங்கள் சுய தேவையை பூர்த்தி செய்தன; ஆனால் பொருட்கள் சந்தைக்குப் போகாமல், தேக்கமடைந்த நிலையில் இருந்தன. இந்த இறுகிப்போன சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை ஆங்கிலேயர்கள் தங்கள் நலனுக்காக உடைத்தெறிந்தது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு வழியமைத்தது. அதைத்தான் மார்க்ஸ் சுட்டிக்காட்டினார்.

ஆனால், அதே கட்டுரைகளில் மார்க்ஸ் மிகத் தெளிவாகச் சொல்கிறார்: “ஆங்கிலேயர்கள் இங்கிருந்த சிறு, குறு மற்றும் கைத்தறித் தொழில்களை அழித்து, மூலப்பொருட்களை எடுத்துக் கொண்டுபோய், தங்கள் நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கி, இந்தியாவைச் சந்தையாகப் பயன்படுத்தினார்கள். இந்தியாவை ஒட்டச் சுரண்டினார்கள். 

மக்கள் மீது கந்து வட்டிக்காரன் போல வரிகளை விதித்து வாட்டி வதைத்தார்கள்.” 

இறுதியில், இந்தியா தன்னை சுதந்திரம் பெற்ற நாடாக அறிவித்துக் கொள்வதுதான் அடுத்த கட்டத்திற்குப் போக முடியும் என்றும் மார்க்ஸ் வலியுறுத்தினார்.
அதாவது, ஆங்கிலேயர்கள் இந்தியாவின் தேக்க மடைந்த பொருளாதாரக் கட்டமைப்பை உடைத்து உற்பத்தியைச் சந்தை நோக்கி உந்தினார்கள் என்று மார்க்ஸ் சொன்னதைத்தான், அவர் ஆங்கிலேயர்களைப் பாராட்டி விட்டதாக ரவி குமுறுகிறார்; 
ஆனால் அவர்களது ஒட்டுமொத்த ஏகாதிபத்தியச் சுரண்டலையும் வன்மையாகச் சாடி, விடுதலைக்கான தேவையை மார்க்ஸ் வலியுறுத்தினார் என்பதை வசதியாக மறந்துவிட்டார். 
இதை உள்வாங்காமல் மேலோட்டமாகப் பேசுவது ஆளுநரின் வரலாற்றுப் புரட்டையும், அரசியல் அறியாமையையும் காட்டுகிறது.
விடுதலைப் போராட்டமும்  ஆளுநரின் தத்துவமும்

ஆளுநர் ரவி, நாம் உடல் ரீதியாக விடுதலை பெற்றாலும், சிந்தனையில் இன்னமும் அடிமைச் சங்கிலி இருக்கிறது என்று பேசியிருக்கிறார். விடுதலைப் போராட்டத்தில் ஒரு துளியளவும் பங்கெடுக்காத, மாறாக ஆங்கிலேயரிடம் சொகுசான வாழ்வுக்காக ஓய்வூதியம் பெற்ற பாரம்பரியம் கொண்டவர்கள் இவரது தத்துவத்தில் ஊறியவர்கள்.
செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார், சிறைக்குள் கொடூரமான சித்ரவதைகளை அனுபவித்த சுப்பிரமணியசிவா போன்றோர் தங்கள் உடலையும் உயிரையும் அர்ப்பணித்தபோது, ரவி ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் தத்துவம் எங்கு இருந்தது? சிவாவின் வாய்க்குள் சிறுநீரை ஊற்றி ஆங்கிலேயர்கள் வக்கிரம் தீர்த்தபோது, இந்த அடிமைச் சேசவகர்கள் எங்கு இருந்தார்கள்? விடுதலைப் போராட்டத்தில் எந்தப் பங்களிப்பும் இல்லாதவர்கள், இன்று மற்றவர்களைப் பார்த்து, “உங்கள் மூளையில் விலங்கு உள்ளது” என்று சொல்வது அறமற்ற செயல்.
அறிவு உலகளாவியது. “சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்று பாரதி பாடியது, அறிவுக்கும், தத்து வத்திற்கும் அந்நியர், இந்தியர் என்ற வேறுபாடு இல்லை என்பதைத்தான். ஓட்டுக்காக 1980-இல் ‘காந்திய சோசலிசம்’ என்று கொள்கை அறிவித்த ஆர்எஸ்எஸ் பேர் வழிகள், இன்று சோசலிசத்தை ‘அந்நி யத் தத்துவம்’ என்று பேசுகிறார்கள். விடுதலையை உச்சரிப்பதற்கான தகுதி கூட இல்லாத கூட்டம் ஆளுநர் ரவியின் பின்னால் உள்ளது. எனவே, மார்க்ஸைப் பற்றி பேச அவருக்கு எந்த அருகதை யும் இல்லை.
நாகரிகத்தை அழித்ததா மார்க்சியம்?

ஆளுநர் ரவி, “மார்க்சியர்கள் நம்முடைய நாகரி கத்தை அழித்துவிட்டார்கள்” என்று கூறுகிறார்.

உங்கள் நாகரிகம் எது?
lகுரங்கு முன்னாலும், மாட்டின் முன்னாலும் மனிதன் மண்டியிட்டுக் கிடப்பது உங்கள் நாகரிகம் என்றால், அது மனித அறிவுக்கு விரோதமானது.
l மனுதர்மத்தின்படி பெண்களை, நம்பக்கூடாதவள், சபல புத்திக்காரி என்று முத்திரை குத்தி, அவர்க ளைத் தகப்பன் அல்லது கணவனின் நிரந்தரக் கண்காணிப்பிலேயே வைத்திருக்கச் சொல்வது தான், நாகரிகமா?

lகுழந்தைத் திருமணம், விதவை மறுமணத்தை மறுத்து, இளம் பெண்களை வெள்ளைச் சேலை கட்டிப் புழுவினும் கீழாக நடத்துவது தான், நாகரிகமா?

lகணவன் இறந்தால் உடன்கட்டை ஏறுவது, மறுக்கும் பெண்ணை உயிரோடு நெருப்பில் எரிப்பது தான் நாகரிகமா? l கோல்வால்கர் ‘பகவான் மனு’ என்று போற்றும் மனுஸ்மிருதி, மனிதர்களை வர்ணங்களாகப் பிரித்து, சூத்திரனுக்கு உழைப்பு மட்டுமே விதிக் கப்பட்டது என்று சொன்னது தான் நாகரிகமா?

இந்த நாகரிகம் என்பது சுரண்டலையும், ஒடுக்கு முறையையும், அடிமைத்தனத்தையும் கடவுளின் பெயரால் நியாயப்படுத்துகிறது. இது மனித நாகரிகத்தை மறுக்கிற அறமற்ற செயலில் ஈடுபடுகிறது. இதைத் துடைத்தெறிவது மனிதகுலத்தின் அடிப்ப டைப் பணி.

சுரண்டலை ஒழித்து, மனித சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து போராடுவார்கள். ஆளுநர் ரவி, மக்களின் வரிப்பணத்தைப் பயன் படுத்தி, ஆளுநர் மாளிகைக்குள் இருந்து கொண்டு, மனிதகுலத்திற்கு விரோதமான, மோசமான பிற்போக்குத்தனமான கருத்துக்களைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இது தகாத, அடாத, அறமற்ற செயல்.

நன்றி:
தீக்கதிர் நாளிதழ்


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்