இலக்கு 84 இணைய இதழ்

உலகம் என்பது முன்னரே தயாரிக்கப்பட்ட, முழுமையான பொருட்களின் தொகுதி என்றவாறில்லாமல் நிகழ்வுப் போக்குகளின் தொகுதி, இதில் நம்முடைய மூளைகளில் அவற்றின் பிம்பங்களுக்கு, கருத்தமைப்புகளுக்கு சிறிதும் குறையாத அளவில் வெளித்தோற்றத்தில் நிலையாகத் தோன்றுகின்ற பொருட்கள், மறைதல் என்னும் இடையிடில்லாத மாற்றத்துக்கு உள்ளாகின்றன.

மனித அறிதல் எனப்படுவது நேர்கோடு அல்ல, ஆனால் அது ஒரு வளைகோடு, அது தொடர்வரிசையான வளையங்களை, ஒரு சுழலேணியை முடிவில்லாதபடி நெருங்கி வருகின்றது. இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். சமூக அசைவியக்கத்தைப் பற்றிய போதனையை சுருக்கிட முடியாது. வர்க்கப் போராட்டம் என்பது பற்றி மார்க்சியர்களின் கண்டுபிடிப்பு அல்ல. அவர்கள் பேசுவது சமூகக் கட்டம் பற்றியதே. அதைப் பற்றிய ஆய்வே மூன்று தத்துவக்கூற்றில் ஒன்றாகும். நீதி, மதம் அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகள், பிரகடனங்கள், வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவது ஒரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதை மக்கள் கண்டு கொள்ள வேண்டும். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும், அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு, அது நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்புமுறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டே இருப்பார்கள். வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன? பழமையைத் துடைத்தெறியவும், புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவர்கள் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படி படைத்து தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றவையுமான சக்திகளை, நம்மை சூழ்ந்துள்ள இதே சமுதாயதிற்குள்ளேயே நாம் கண்டு பிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்து அணி திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி.


இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்

1). கம்யூனிஸ்டுகளும் கம்யூனிஸ்ட் கட்சியும்

2). புதிய இடது போக்குகள், மற்றும் தன்னார்வக் குழுக்கள் பற்றி தோழர் கோ.கேசவன் பாகம் 2.

3). அரசு பற்றி லெனின் பாகம் 6

4). சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? -பகுதி 9

அரசியல் தத்துவ துறையில் நம்மவர்கள் முரண்பட்டுள்ளனர், குறிப்பாக மார்க்சிய லெனினிய தத்துவ புரிதலிலே வேறுபட்டு நிற்கின்றனர். உண்மையில் இங்கு கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் கம்யூனிச நோக்கத்தை புரிந்துள்ளனரா என்பதே முதல் கேள்வி அடுத்து கம்யூனிஸ்டுகள் என்ன நடைமுறையில் உள்ளனர்? ஆக அவர்களின் பணியையும் நோக்கத்தையும் ஆராய்ந்தால் மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்டு நடைமுறையில் உள்ளனரா? என்பதுதானே?

எதேச்சிகாரத்தை வீழ்த்துவதும், அரசியல் சுதந்திரம் பெறுவதற்காகப் பாடுபடுவதுதான் கம்யூனிஸ்டுகளின் உடனடிக் கடமை என்றார் லெனின். ஜனநாயகத்தை மறுக்கும் எதேச்சதிகரமான முறையில் ஆட்சி நடக்கும் போது கம்யூனிஸ்டுகள் எதேச்சிகார ஆட்சியை அம்பலப்படுத்தி மக்களைத் திரட்டி எதேச்சதிகாரத்துக்கு எதிராக போராடி வீழ்த்த வேண்டும் அதற்கான பணிதான் புரட்சிகான கட்சி அதற்கான திட்டமிடல் சதி வேலை செய்வதல்ல விடுதலைக்கான பணி செய்வதே!.

கம்யூனிஸ்டுகளின் நோக்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற போதிலும், நிலவுகின்ற அமைப்பிற்குள்ளேயே உடனடிப் போராட்டமாக விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அரசியல் சுதந்திரம் வேண்டும் அவர்களை ஒன்றினைக்கும் பிரச்சினைகளின் அடிப்படையில் ஓன்றுபட்டு போராட வேண்டும்.

பொருளாதாரப் போராட்டமே முதன்மையானது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பணிகள் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இது தவறானது என்றார் லெனின்.

இப்போதும் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் தொழிற்சங்கங்கள் மூலமாக தொழிலாளர்களைத் திரட்டி கூலி உயர்வு போனஸ் போன்றகோரிக்கைகளை முன்வைத்து பொருளாதாரப் போராட்டங்களையே நடத்திக்கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம். தொழிலாளர்களை அரசியல் போராட்டத்திற்கு தயார் செய்வதில்லை; அது போலவே விவசாயகளின் சங்கத்தையும் மாணவர்களின் சங்கத்தையும் பொருளாதாரப் போராட்டத்திற்கே வழிநடத்துகிறார்கள். இந்த வர்க்கங்களுக்கு இந்த அரசைப் பற்றியும், அரசு நிறுவனங்களைப் பற்றியும், அரசு அதிகாரிகளுக்கும், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சுரண்டும் முதலாளிகளுக்கு இடையிலான உறவுகள் பற்றியும் இந்த நிறுவனங்களெல்லாம் முதலாளிகளின் நலன் காக்க எவ்வாறெல்லாம் செயல்படுகிறார்கள் என்பதையும் உழைக்கும் மக்களை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் என்னென்ன வகையான சதித்திட்டங்கள் தீட்டி செயல்படுகிறார்கள் என்பதை விளக்கி இந்த பாராளுமன்ற ஆட்சி முறையின் மூலம் மக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்காது ஆகவே உழைக்கும் மக்களுக்கு நன்மை கிடைப்பதற்குத் தேவையான அரசானது எப்படி இருக்கும் என்பதை விளக்கி அத்தகைய அரசை உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து பாடுபட்டுத்தான் உருவாக்க வேண்டும் என்று மக்களுக்கு விளக்கி மக்களை அணிதிரட்டிட வேண்டியது கம்யூனிஸ்டுகளின் பணியாகும். இத்தகைய அரசமைப்புக்கான அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டியது தொழிலாளி வர்க்கத்தின் கடமையாகும். இத்தகைய அரசியல் போராட்டங்களை தொழிலாளர்கள் நடத்தும் பொருளாதாரப் போராட்டத்தோடு இணைத்திட வேண்டும் என்பதே லெனினது வழிகாட்டலாகும்.

தொழிலாளர்களுக்கு அல்லது உழைக்கும் மக்களுக்கு என்று சுயேச்சையான அதாவது சுதந்திரமாகச் செயல்படக்கூடிய கட்சி வேண்டும் என்றார் லெனின். அந்தக் கட்சியானது உழைக்கும் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும்.

இலக்கு 84 இணைய இதழை இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே










No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்