கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பணிதான் என்ன?- 01

இங்குள்ளோர் நிலையை புரிந்துக் கொள்ள மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலும் இவர்களின் செயலையும் ஒருங்கிணைத்தே புரிந்துக் கொள்ள முயலுவோம்.
கார்ல் மார்க்ஸ், பிரெட்றிக் ஏங்கெல்ஸ் அவர்கள் காலத்தில் கருத்துமுதல்வாதம் (ஹெகல்), புரூத்தோனியம் (விஞ்ஞானத் தன்மையற்ற) பக்கூனியம் (அராஜகவாதம்) புருத்தோன் போன்ற அராஜகவாதிகளுடன் கருத்து மோதல் செய்த கால கட்டம். ஹெகலியவாதிகளுடன் தம்மை முற்றாக முறித்துக் கொண்டு பொருள்முதல்வாததிகளாக முன்னேறிச் சென்றார்கள். கற்பனாவாத சோசலிசத்திற்கு மாற்றாக விஞ்ஞான சோசலித்தை முன்வைக்கின்றார்கள்.  

1848இல் பொதுவுடமைக்கட்சி அறிக்கை வெளிவந்தது.  இந்தக் காலத்தில் முடியரசுவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் குடியரசுவாதிகளுடன் இணைந்து செயற்பட்டார்கள்.  1848- 1871 காலப் பகுதியில் முதலாளித்துவ வர்க்கப் புரட்சியை ஆதரித்து நின்றார்கள். ஜேர்மனி மதச் சார்பற்ற குடியரசு ஆகியதை வரவேற்றார்கள். முதலாளித்துவ வளர்ச்சி புரட்சியை முன்னோக்கி நகர்த்தும் என்ற கோட்பாட்டுப் புரிதலுக்கு வந்து சேர்ந்தார்கள். இது முதலாளித்துவ வளர்ச்சியானது நிறுவனப்பட்ட உரிமையை மக்களுக்கு சலுகையாக வழங்கும் முறை உருவாக்கப்பட்டது. அமெரிக்க அடிமைமுறையை ஒழித்தது. இது எங்கும் வர்க்க பேதம் இருக்கின்றது என்பதை வெளிப்படையானதாக வெளிப்படுதிய காலமாகும்.

ரசியாவில் மார்க்சிய வழியில் அமைப்புகளை உருவாக்கிக் கொண்ட (1890) கால கட்டத்தில் பிளெக்நொவ் மார்க்சியத்தை அறிமுகப்படுத்துகின்றார்ரசியாவில் தத்துவார்த்த துறையில் பின்தங்கியிருந்த நிலையானது மேலும் லெனின் காலத்தில் இரண்டாம் அகிலத்தின் திரிபுவாதத்தையும் எதிர்த்தும் மார்க்சிய தத்துவத்தை வளர்த்தெடுக்கிறார். லெனினுக்கு முன் இருந்தவர்கள் மார்க்சியம் போல மார்க்சியத்தை பேசிக் கொண்டிருக்கின்றார்கள். போராட்டம் வளர்ந்து கொண்ட போதிலும் தத்துவார்த்தத்தில் வளர்ந்திருக்கவில்லை. இவ்வாறான உலகக் கண்ணோட்டத்திற்கு மாற்றான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இதில் அவர்கள் வந்தடைந்த சிந்தாந்த வெற்றி என்பது மனிதகுலத்திற்கு இன்றுவரையில் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது. அவைதான் மார்க்சிய லெனினியம்.

மேற்கு ஐரோப்பாவில் (1848-1871 காலப்பகுதி) முற்போக்குப் பாத்திரம் வகிந்திருந்த முதலாளித்துவத்தின் வளர்ச்சி ஏகாதிபத்தியமாக மாறிய காலத்தில் ஏற்பட்ட மாறுபாடுகளை  கவனத்தில் கொள்கின்றார்கள். 1882- 1904 காலகட்டத்தில் மேற்கில் முதலாளித்துவ சனநாயகத்தின் அடிப்படை உரிமைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தொழிற்சங்கம் அமைக்கவும், சட்டரீதியாக  கட்சி நடத்தவும், பிரச்சாரங்களை மேற்கொள்ளக் கற்றுக் கொண்டனர். சிக்காக்கோ தொழிலாளி வர்க்கத்தினால் 8 மணி நேரவேலை அறிமுகப்படுத்தப்பட்டது. மார்க்சியமும் பல நாடுகளில் பரவிக் கொண்டது.  இந்தக் காலத்தில் நாடாளுமன்ற சனநாயகத்தை, முதலாளித்துவ சனநாயகத்தை ஏற்கவும், அமைதி வழியில் உரிமையை பெறமுடியும் எனக் கற்பிக்கப்பட்டது என்கின்றார் தோழர் லெனின்.  இன்றும்  அமைதி வழியில் உரிமைகளைப் பெற முடியும் என்று ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகள் கருத்துரைத்துக் கொண்டு வருகின்றார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ("liberty, equality, fraternity") என்ற பிரெஞ்சு வகை சுதந்திரம் இன்று வரையில் உயர்வானது என்றே பேசப்பட்டு வருகின்றது. யுத்தங்கள், ஆக்கிரமிப்புகள், சந்தைக்கான போட்டி என்று நடைபெற்றே வந்துள்ளது. உலகப் போர்கள் தொடக்கம் இன்றைய யுத்தங்கள் வரையில் அவ்வாறே பேசி ஏய்கின்றனர்.

இப்போது முழுநிறைவாக அம்பலமாக்கப்பட்டுவிட்ட முதலாளித்துவ சுதந்திரம், முதலாளித்துவ சமத்துவம், முதலாளித்துவ ஜனநாயகம் ஆகியவற்றின் சுரண்டும் தன்மையை மக்களிடமிருந்து மூடிமறைக்க முடியாது.” (லெனின் தேர்வு நூல் 9 பக்கம் 175)

வரலாற்றுப் போக்கில் அம்பலப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகத்தைக் கொண்டு பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கப்படுகின்றது. முதலாளித்துவமே தன்னை நிலைநிறுத்தப் போராடுகின்றது. முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நாடுகளில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கான போராட்ட முறை, தீர்வுகள் பற்றிய நிலைப்பாட்டினை காலச் சூழலை, வரலாற்றை மார்க்சியர்கள் அறிய வேண்டும். இந்திய பொதுவுடமைக் கோட்பாட்டுப் பிரச்சனையில் பின்தங்கே உள்ளார்கள். ஒவ்வொரு நாடும் தமக்குப் பொருத்தமான கோட்பாட்டை வகுக்க வேண்டும்.

சமூகத்தின் குறிப்பான சூழல், மற்றும் வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கில் மார்க்சியத்தை உள்வாங்குவதிலும் சிக்கல்கள் உண்டு. ஆனால் மூலவர்களின் வழிகாட்டலை மீள மீள கற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத அறிவுத் தேடல் சோம்பேறிகள் நிறைந்த சமூகமாக இருக்கின்றது. மூன்றாவது பாதை இல்லை என்பதை அறிந்து கொள்ளாது இருக்கின்றார்கள். இதனை ஏகாதிபத்தியவாதிகள் சிறப்பாக விளங்கிக் கொண்டுள்ளார்கள். முதலாளித்துவம் ஏற்படுத்துகின்ற முரண்பாடுகளை தீர்ப்பதற்கு மார்க்சியம் வழிகாட்டுகின்றது. ஆனால் பற்பல உதிரிக் கோட்பாடுகளும் முன்னிறுத்தப்படுகின்றது. இதில் சீர்திருத்தவாதம், அராஜகவாதம், சட்டவாதம், கவற்சிவாதம் போன்ற போக்குள் நாடாளுமன்றதை நாடியே தேடியே உள்ளன. உழைக்கும் மக்களுக்கான அரசு எவ்வகையான அரசு வேண்டும் அதனை எப்படி உருவாக்க போகின்றனர் பேசுவதே இல்லை?

முதலாளித்துவம் (தொழிற்துறை) வளர்ச்சியடைந்த நாடுகளில் தான் புரட்சி ஏற்படும் என்று மார்க்ஸ் கருதினார். இதற்கு மாறாக தொழிற்துறை முழுமையடையாத நாட்டில் புரட்சியை வென்றெடுக்க தலைமை தாங்கினார் லெனின். லெனின் வெற்றியடைந்த பாதையில் பயணித்து சீன நிலப்பிரபுத்துவம் இறுகிய நிலையில் இருந்த காலனிய அடக்குமுறைக்கு உள்ளாகியிருந்த நாட்டில் புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்றியது.

மார்க்சியம் என்பது உலகை ஆராய்வதோடு தத்துவ நடைமுறைக்கான வழிகாட்டும் திறன் படைத்தது. மார்க்சியம் உள்ள சமூக அமைப்பு சுரண்டல் மயமானது அதனை உழைக்கும் மக்களின் அதிகாரம் கொண்ட சுரண்டலற்ற சமூகமாக மாற்றியமைப்பதற்கு வழிகாட்டும் தத்துவமாகும்.  

உலகில் கம்யூனிசம் என்பதனை 1848 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியான பிறகே சுரண்டலில் ஆட்பட்டு ஒடுக்கப்பட்டு அடக்கபட்டு கிடக்கும் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தத்துவம் ஒரு கட்சி அவசியம் என்பதனையும் பாரிஸ் கம்யூன் படிப்பினைகளையும் உலகில் முதல் புரட்சியை சாதித்த ரசிய கம்யூனிஸ்ட் கட்சி புரட்சியை சாதிக்கும் கட்சியாக அதற்கு முந்தைய மார்க்சியத்தை மறுக்கும் பல்வேறு போக்குடைய நிலையை தகர்த்து புரட்சிக்கான கட்சி எப்படி யார் தலைமையில் புரட்சி சாதிப்பது என்பதை லெனின் வழிக்காட்டியுள்ளார்.

அந்த படிப்பினைகளிலிருந்து ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியம் நமக்குள்ளது. பெரும்பான்மையிலான உழைக்கும் மக்கள் அதிகாரம் படைத்த அரசமைப்பிலா அல்லது சிறுபான்மையினார் உழைக்காமல் அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டி வாழும் இன்றைய அமைப்புமுறையா என்பது உண்மையில் கம்யூனிசத்தை நேசிப்போருக்கு தெரியும். அதற்கு சரியான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடித்து மா-லெ தத்துவ ஒளியில் புரட்சிக்கான கட்சி வேண்டும். அதற்கு புரட்சியை நேசிக்கும் உண்மையில் உழைக்கும் மக்களின் விடுதலையை விரும்புவோர் ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சியை கட்ட வேண்டும் அதற்கு ஆசான் லெனின் வழிகாட்டியுள்ளார். மேலும் அவரே அதனை நடைமுறையில் ரஷ்யாவில் சாதித்துக் காட்டினார். அவர் மார்க்சிய தத்துவத்தை நடைமுறைபடுத்த பாட்டாளிவர்க்க கட்சி எப்படி இருக்க வேண்டும் அது எப்படி செயல்பட வேண்டும் என்று உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு லெனின் வழிகாட்டினார். அதனை முழுமையாக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே கம்யூனிஸ்டாவர் அதனை மறுப்பவர்களோ திருத்துபவர்களோ புரட்டுபவர்களோ ஏன் குழப்புபவர்களோ கம்யூனிஸ்டுகளா?

ஆசான் லெனின் எழுத்துகளை உள்வாங்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் நீங்களே சொல்லுங்கள்? அரசும் புரட்சியும் நூலில் அரசை பற்றியும் புரட்சியை பற்றியும் தெளிவுப்படுத்தியிருப்பார் அதனை முழுமையாக பேசாமல் அவரின் சில வார்த்தைகளை வெட்டியெடுத்து லெனினின் உண்மையான பொருளை மறைக்கும் ஆளும் வர்க்க சிப்பந்திகள் புரட்சியை நேசிப்பவர்களா? ஜனநாயக பொதுவாக பேசுவோர் வர்க்க ஏற்ற தாழ்வுகளை மறைத்து ஆளும் வர்க்க சேவை செய்யும் காவுத்ஸ்கிகளே! அவரை(களைதான்) லெனின் மார்க்சிய தத்துவத்தை துறந்து விட்ட "ஓடுகாலி காவுத்ஸ்கி" என்றார். இங்கு பலர் அப்படிதான் உள்ளனர். மார்க்சிய லெனினிய ஆசான்களின் பெயரில் பிழைப்பு நடத்தும் கட்சிகள் அவரின் தத்துவ போதனைகளை கைவிட்டுவிட்டு மார்க்சியம் அல்லாத சீர்திருத்தவாத நடைமுறையை கைக்கொள்ளும் பொழுது அவர்கள் எப்படி கம்யூனிஸ்டுகள் அவர்கள் சீர்திருத்தவாதிகள்தானே?

அதேவேளையில் பின்நவீனத்துவவாதிகள், அடையாள அரசியல்வாதிகள், இனவாதிகள், தலித்தியவாதிகள், கலைப்புவாதிகள், திருத்தல்வாதிகள், டிராட்ஸ்கியவாதிகள் போன்ற மார்க்சியத்தை மறுக்கின்ற எதிரிகளோடும் துரோகிகளோடும் கூடிக் குலாவுகிறார்கள். 

இந்த குறுங்குழுவாத கூட்டத்தின் நோக்கம் கூட்டம் சேர்ப்பதாகவே இருக்கிறது. இதனால் ஒரு புரட்சிக்கான ஆயத்த பணியை இவர்களால் செய்ய முடியுமா? இவர்களின் கூட்டாளிகள் மார்க்சிய வழியை மறுத்து ஒடுக்கும் ஒட்டுண்ணி கூட்டத்தின் கருத்தியலை ஏற்கும் பொழுது இவர்கள் ஏகாதிபத்திய ஆதரவும் ஆளும் வர்க்க சேவையையுமே செய்ய முடியும் என்பது திண்ணம்.

இவர்களை எதிர்த்து களமாட மார்க்சிய லெனினிய தத்துவம் நமக்கான வழிகாட்டி

மார்க்சியதை முழுமையாக புரிந்துக் கொள்ளாத கோளாறு சமூக இயக்கத்தை புரிந்துக் கொள்ளாத அரைகுறையான புரிதலில் இவர்கள் பிடித்த முலுக்கு மூன்றுகால் அவ்வளுவேதான்.

இவர்கள் போன்றவர்களுக்கு நான் சாதி நூலில் எழுப்பியுள்ள இந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன் சற்று திருப்பி பாருங்கள். சாதி பிரச்சினை இன்றுள்ள அமைப்புமுறை எப்படியெல்லாம் கட்டிகாக்கிறது. அதில் கோயில் ஆகமவிதி செயல்படுகிறது. அதில் ஜனதிபதி உட்பட யாரும் கோயில் விவகார்த்தில் தலையிட முடியாத நிர்வாக பிரச்சினை. இவை இந்த சமூக அமைப்பின் விதி அதை ஏற்றுதான் இந்த பிழைப்புவாதகள் ஆட்சி அதிகாரத்தில் இணைகின்றனர். இதனை எதிர்த்தோ ஒழிக்கவோ அல்ல. ஆக நீங்கள் பேசுவது சமூக கட்டம் அதன் செயல்பாட்டை புரிந்துக் கொள்ளாமல் ஏமாற்றுவதே வேறொன்றுமில்லை. ஆக மனிதர்கள் உலகில் உள்ள எல்லோரும் உயிர் வாழ உணவு சாப்பிட்டு ஆக வேண்டும். அந்த உணவுக்காக ஏதோ ஒரு வகையில் உழைக்கின்றனர். அவர் அதற்குரிய சமூக பாத்திரத்தை வகிக்கின்றனர். பலர் உழைக்கின் சிலர் உழைக்காமல் அடுத்தவர் உழைப்பை சுரண்டி வாழ்கின்றனர். உழைக்காமல் வாழும் கூட்டம் உழைக்கும் கூட்டத்தை சுரண்டி வாழ அதிகாரம் படைத்தவர்களாக பல கருத்தியல்களை தத்துவங்களை கடவுள் கோட்பாடுகளை ஏன் ஆளும் வர்க்கமாய் நிலைத்து நிற்க சமத்துவ கோட்பாடுகளை பேசுகின்றனர். இவை சுரண்டல் இல்லாத உலகை படைக்க போகிறதா என்றால் இல்லை என்பதுதானே? ஆக உழைக்கும் மக்கள் தங்களை தாங்களே நிர்வகிக்கும் அதிகாரமும் சுரண்டலை ஒழித்த சமூகமும் வேண்டி நிற்பதே கம்யூனிஸ்டுகளின் பணி

இங்குள்ள சிலர் மார்க்சியம் இந்தியாவிற்கு பொருந்தாது எங்கின்றனர் அவர்களுக்கான விளக்கம் இவை.

பொது அறிவியலை பேசுகிறேன். இவை உலகு தளுவியதா இல்லையா? ஆக
F = ma நியூட்டனின் இரண்டாம் விதி,
(a+b)² = a² + b² + 2ab is a fundamental concept in algebra.
மற்றும் The formula H2O represents water. It means that one molecule of water is composed of:- 2 hydrogen atoms (H) - 1 oxygen atom (O) This is the chemical formula for water.
ஆக எப்படி ஒவ்வொரு அறிவியல் துறைக்கான விதி உலகெல்லாம் ஒன்றோ அதே போன்றதுதான் விஞ்ஞானத்தின் தலையாய சமூக தேவைக்கான விஞ்ஞானம் மார்க்சியம். அந்த விஞ்ஞான விதி உலகு தளுவியதே இதனை மறுக்கும் மார்க்சியத்தை குழப்புவோர் புரிந்துக் கொள்ள நமக்கு மார்க்சிய புரிதல் வேண்டும்...
தொடரும்








 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்