சாதி கட்டிக்காப்தில் ஆங்கிலேயர்கள்
ரிக்வேத காலத்தில் தொழில்பிரிவுகள் இல்லை:- ரிக் வேதத்தில் புருச சூக்தம் ஒன்றைத்தவிர வேறெந்தப் பகுதியிலும் சாதி
குறித்த குறிப்புகள் இல்லை எனவும் அக்காலத்தில் தந்தை, தாய், மகன் ஆகிய மூவரும் வேறு வேறான
தொழில்களில் ஈடுபடுவர் எனவும் அக்கால மக்கள் பரம்பரையாகத் தொழில் செய்து வந்தனர்
என்ற கொள்கை பொருந்தாது(25) எனவும் கோ. கைலாசநாத குருக்கள்
கூறுகிறார்.
ரிக் வேத காலம் என்பது மேய்ச்சல் நில வாழ்வை அடிப்படையாகக்
கொண்ட இனக்குழு காலம். அப்பொழுது தொழில் பிரிவுகளோ, வர்ணம் எனப்படும் வகுப்புகளோ தோன்றும் அளவு தொழில் வளர்ச்சி என்பது இருக்க
இயலாது. ஆக வேதகாலத்தில் சாதி இல்லை என்பது தெளிவு.
மேலும் சாதி பற்றிய அம்பேத்கர் கூற்றுதான் இன்று பலரும் ஏற்கின்றனர். ஆனால் உண்மையில் முழுமையான கருத்தாக அவை உள்ளதா எனும் பொழுது? அவர் அரசின் பாத்திரத்தை கணக்கில் கொள்ளவில்லை மதத்தை மட்டுமே முதன்மையாக கருதினார். இதோ அவரின் கூற்றே, "தந்திரமான புகழுரைகள் மூலம் சாதி இந்து அறிஞர்கள் இவற்றைக்
கடைப்பிடிப்பது புனிதமானது என்றும், வணக்கத்துக்குரியது
என்றும் கூறினர். இதன் விளைவாக தோற்றுவிக்கப்பட்ட சாதி அப்படியே நிலை
நிறுத்தப்பட்டு விட்டது. சாதியின் தோற்றுவாய் அல்லது தொடக்கப் புள்ளியாகப்
பார்ப்பனர்களே விளங்கினர்" என்பது அம்பேத்கர் நிறுவுகிற செய்தி.
மேலும் அவரே, "இன்றைய அய்ரோப்பாவில் அதிகாரத்தின் ஊற்றுக்கண்ணாக சொத்து
இருப்பதை வைத்து, நேற்றைய அய்ரோப்பாவிலும் இன்றைய
இந்தியாவிலும் சொத்துதான் அதிகாரத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்க முடியும் என
நம்புவது சோசலிஸ்டுகளின் தவறு. மதம், சமூக அந்தஸ்து, சொத்து ஆகியவை அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தின் ஊற்றுக் கண்களாக இருப்பவை.
ஒவ்வொரு சமயத்திலும் இவற்றில் ஒவ்வொன்று மேலோங்கி அதிகாரமளிப்பதாக இருக்கும். எனவே,
மதச்சீர்திருத்தம் மற்றும் சமூக சீர்திருத்தத்தின் (சாதி ஒழிப்பின்)
அவசியத்தை அவர்கள் உணர வேண்டும் என்று" அம்பேத்கர் கூறினார்.
“1857-ல் எழுச்சிக்குப் பிறகு ஆங்கிலேயே அதிகாரிகள் இந்திய மக்களை சாதி ரீதியாக பிரித்தாளும் கொள்கையை நடைமுறைப்படுத்தி ராணுவத்திலும் சாதியாக, பிரதேசமாக தனித்தனியாக பிரிக்கும் பணியில் அமர்த்துவது. நாட்டில் ஆங்கில ஆட்சி தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமென இராணுவ தளபதி எச்.டி.டக்கர் வலியுறுத்தினர்”
இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்தை தக்கவைப்பதற்கு இந்திய மக்களை சாதிரீதியில் பிளவுபடுத்துவது அவசியமாக இருந்தது. அரசியல் எழுச்சியை தடுத்திட சாதி பயனுள்ளதாக இருப்பதாக சர்.லேபிள் கிரிபின் போன்ற அதிகாரிகள் கருதினர். ஒட்டு மொத்தத்தில் சாதியின் இருப்பு நமது ஆட்சி நீடித்திருப்பதற்கு சாதகம் இல்லாததாக தோன்றலாம். மதிநுட்பத்துடன் நிதானமாக அதனை கையாண்டால் அதை நமக்கு சாதகமாக மாற்ற முடியும். அதன் உள்ளடக்கம் தேசிய ஒற்றுமைக்கு எதிரானது என 1865-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஜேம்ஸ் கேர் எழுதினார். இதுபோன்ற வரலாற்று ஆசிரியர்களும் பத்திரிக்கையாளர்களும் அதிகாரிகளும் பிரித்தாளும் கருத்தையே போதித்து வந்தனர். பிரித்தாளும் கொள்கையை பொதுக் கோட்பாடாக திருச்சபைகளும் கிறிஸ்தவ தேவாலயங்களும் பயன்படுத்தின (35).
பல்வேறு முரண்பாடுகளால் பிரிந்து கிடக்கும் மக்கள், தங்கள் நாட்டின் ஆட்சி அதிகார தேவையையொட்டி ஒன்றுபட்டு
போராடும் நிலையை தகர்க்க எண்ணினர். அவர்களுக்கு இடையிலே பல்வேறு விதமான
முரண்பாடுகளை கையாண்டு சாதிரீதியான பிரிவை நிரந்தரமாக்கும் வகையில் பல்வேறு
உத்திகளை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கையாண்டனர். இங்குள்ள மக்களை உயர்விக்க போவதாக
சில சட்ட திட்டங்களை கொண்டு வந்தது. அவை, எல்லோருக்குமான
கல்வி; அதில் இடஒதுக்கீடு சட்டமன்றங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பங்கெடுப்பு; ஒரே
மொழிபேசும் பல்வேறு சாதிகள் தங்களுக்கு இடையிலான சாதிசங்கங்களை அமைத்துக் கொண்டது.
இவ்வாறு மக்களை உயர்விக்கிறேன் என்ற பெயரில் நிரந்தர அடையாளத்தில் அவர்களை
சாதிகளாகக் கட்டிப் போட்ட பெருமை ஆங்கிலேய ஆட்சியாளர்களையே சாரும். அதனைத் பற்றி
விரிவாகத் தொடர்ந்து காண்போம்.
பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் 1870-களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினர். அவர்களின் நோக்கம்
அனைத்து சாதிகளிலும் உள்ள ஏழை எளிய மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு நன்மை செய்ய
வேண்டும் என்பதற்காக அல்ல. தங்களின் ஆட்சிகுகந்த வகையில் இந்த சாதிய முறையை
பயன்படுத்திக் கொள்ள விளைந்தனர் எனலாம். தங்கள் காலனிய ஆட்சி நீடிக்க பிரித்தாள,
மக்களை சாதிய ரீதியாக மட்டுமல்ல, மத
ரீதியாகவும் மோதவிட்டதன் மூலமாக தங்களின் ஆட்சியினை தக்க வைத்துக் கொள்ள
முயன்றனர்.
). 1920-களில் இடஒதுக்கீடு கொள்கை கல்வி
அளவில் ஏற்கப்பட்டது. 1927-ல் வேலைவாய்ப்பில் பதிவு துறையில்
இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. மொத்த மக்கள்தொகையில் மிக அற்பமாக அந்த
இடஒதுக்கீட்டை வழங்கியது. மக்கள் மத்தியில் அது சாதியாக ஒன்றிணைய வேண்டிய தேவையை
ஏற்படுத்தியது. பல்வேறு பிரிவுகளாக இருந்த மக்கள் சாதி அடிப்படையில் குறிபிட்ட
அட்டவணைக்குள் அடக்கப்பட்டனர். இன்று காணும் சாதிசங்கங்கள் அன்றைய பல சாதி
கலவைகளின் தொகுப்பே. அதனை ஒருங்கிணைத்து சாதியென்னும் ஒற்றை முத்திரை குத்தும்
பணியை அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செய்தனர். இவை நீண்ட நெடிய கால நிகழ்வுகள்
ஆகும். இதனை புரிந்துக் கொள்ள ஆங்கிலேய ஆட்சியின் ஆவணங்களை கருத்தூண்றி வாசிக்கும்
பொழுது புலப்படும். மேலும் இன்றைய ஆட்சியாளர்களின் செயலும்.
சாதி உருவாக்கத்தில் காலனிய ஆட்சியாளர்கள்.
நூல் ஆதாரம் “நமக்கேன் இந்த இழிநிலை ஜாதி மாநாடுகளில் ஜாதி ஒழிப்பு மாநாடுகளில் பெரியார்”இந்தியாவில் ஆட்சி புரிந்த முந்தைய சமூக அமைப்புகளில் சமூகக் குழுக்களின் மோதல்களை தீர்க்க அரசன் இருந்தான் அவனுக்கு தன் மக்களை பற்றி ஓரளவிலான வளமையும் தொடர்பும் தீர்ப்பளிப்பதற்கான அனுபவ ஆதாரங்களும் இருந்தன. ஆனால் காலனிய ஆட்சியில் அதிகாரம் முன் தொடர்ச்சியற்றதாகவும் இங்குள்ள முரண்களை புரிந்துக் கொள்ளும் வல்லமை அற்றதாக இருந்தது. அதன் காரணமாக நூல் ஆதாரங்களை சார்ந்து நிற்க வேண்டிய தேவை இருந்தது. அந்த நூல்கள் முழுமையாக சனாதன சமஸ்கிருத அடிப்படையிலானவையாகவும், அந்த சமூக ஒழுங்கின் முழுமையை புரிந்து கொள்ளாத, காலத்தால் பழமை வாய்ந்ததென, அந்தக் காலகட்டத்தின் சமூக அடையாளமாக சமூக உறவுகளாக சாதி அடையாளமாக அதன் அடிநாதமாக மதரீதியான தர்மநூல்களாக இவை காலனி ஆட்சியின் தூண்களாகளாயின. தங்களின் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து நடத்த அவர்கள் எதை எதையோ தேடி ஆவணப்படுத்தி இவைதான் இந்தியா என்று பிரகடணம் படுத்தியுள்ளனர்.
விசித்திரமான சாதி நிறுவனம் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயே
அதிகாரிகள் தங்கள் ஆய்வுகளை முன் வைத்தனர். எலியாட், டால்டன் ஷெர்ரிங், நெஸ்பீல்டு போன்ற சில அதிகாரிகள்
இதில் ஆர்வம் காட்டி தரவுகளை சேகரித்து தமது விமர்சனங்களுடன் அவற்றையும்
வெளியிட்டனர். சர் ஹெர்பெர்ட் ரைஸ்லின் வழிகாட்டுதலின் கீழ் 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமை அடைந்தது. 1891 ஆம் ஆண்டின் வகைப்பாட்டை, "தற்காலத்தில் சமூக
முன்னுரிமை உள்ளூர் பொதுக் கருத்தாக அங்கீகரிக்கப் பெற்றிருப்பது சில குறிப்பிட்ட
சாதிகளை இந்து அமைப்பு முறையில் உள்ள பிற சாதிகளின் நவீன பிரதிநிதிகளாக
மாற்றுவதில் வெளிப்படுத்தியுள்ளார்". என்கிறார்
ஜி.எஸ்.குரியே (35).
இனவாதம் பற்றி ரிஸ்லேயின் நூலுடன் ஜி.எஸ். குரியேயையும்
கணக்கில் கொண்டாலே இவர்கள் மக்களை எப்படி சாதி என்ற சாக்கடையில் மக்கள்
சமூத்திரத்தை மூழ்கடித்துள்ளனர் என்பதனை புரிந்துக் கொள்ள முடியும். ஆக அன்று
இருந்த சாதிய அடையாளங்கள் காலத்தால் மறைந்திருக்கும் இவர்கள் சாதிகளாக பிரித்து
அடையாளப்படுத்தாமல் இருந்திருந்தால் என்பதே அவர்களின் கூற்றும்.
சாதிய சமூகத்தில் ஒரு நபரிடம் அவர் சாதியை பற்றி வினவும்
பொழுது அவர் தனது சாதி, உபசாதி, புறமணமுறை,
அனலோமாகுழு ஆகியவற்றை கூறலாம். தமது சாதிப் பெயரை காட்டிலும் சிறந்த
பட்ட பெயர்களை குறிப்பிடலாம். தனது தொழில் அல்லது தான் வாழும் பகுதி பெயரை
குறிப்பிடலாம். இவ்வாறு குழப்பமான பதில் கிடைத்த போதிலும் ரிஸ்லி இந்த வழிமுறையை
தேர்வு செய்து மக்களை சாதியாக பிரிவினை செய்த கோட்பாடாகும் அவரின் இனவியல்
கோட்பாடாகும்.
அன்றைய சாதி கணக்கெடுப்பில் ஏதாவது ஒரு சாதியில் தன்னை
அய்க்கியப்படுத்திக் கொள்ளவே சாதி கணக்கெடுப்பு வழிவகை செய்தது. பல்வேறு சாதிகளை
சேர்ந்தவர்களும் தமது தகுதியை உயர்த்திக் கொள்ள இவ்வாய்ப்பை பயன்படுத்த முயன்றனர்.
தமது உறுப்பினர்களை திரட்டி மாநாடு நடத்தி அவர்களுக்கு கௌரவம் தரத்தக்க வகையில்
தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான குழுக்களை
அமைத்தனர். எதிர்குற்றச்சாட்டுகளும் முழு வீச்சில் எழுந்தன. சாதி அடுக்கில்
உயர்சாதியினை தவிர பிற சாதித் தலைவர்கள் மக்கள் தொகை கணக்கு எடுப்பை வாய்ப்பாக கருதி
உயர்சாதியினரால் மறுக்கப்பட்டு வந்த சமூக அங்கீகாரத்தை பெறுவதற்கான ஒன்றாக அதை
பயன்படுத்தினர். சென்னை மாகாண மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி 1911-ஆம் ஆண்டு இவ்வாறு எழுதினார் என்பதனை ஜி.எஸ்.குரியே
குறிப்பிடுகிறார், "கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக
தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சில அம்சங்களில் சாதி உணர்வுகள்
பெருமளவு மேலோங்கி வருவதை காண முடிகிறது. சாதிய சபைகள் உருவாகியுள்ளன ஒவ்வொன்றும்
தமது சமூகக் குழுவில் ஏராளமான மரியாதையை உயர்த்தி பிடிப்பதில் கவனம் செலுத்துகின்றன".
(35). இவ்வாறாக மக்கள் சாதி சங்கங்கள் பின் தமக்கான சாதியாக
திரட்டப்பட்டனர்.
மேலும் குரியே குறிப்பிடுகிறார், “1872- ஆம் ஆண்டு முதல் அடுத்தடுத்து
நடைபெற்று வந்த மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் சாதி உணர்வு மேலோங்கியதை இதன்
ஒட்டுமொத்த விளைவுகளை காணலாம். பொதுசட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் சில நிர்வாக
நடவடிக்கைகளின் மூலமும் சாதிகளுக்கு இடையில் நிலவிய சமத்துவமின்மை குறிப்பாக கீழ்சாதியினர்
மீது காட்டப்பட்ட பாரபட்சமாக அகற்றப்பட்டன. இருந்தும் நாமெல்லாம் இந்துக்கள் என்று
பேசிக் கொண்டாலும் கோயில்களில் இந்துக்கள் அனைவருக்குமான சமத்துவம் கொண்டு
வரமுடியவில்லை இதில் அரசு நிதி அளிக்கும் கோயில்களும் விதிவிலக்கு அல்ல” (35).
சமத்துவ சட்டம் இயற்றப்பட்ட அரசாலே கடைநிலை சாதிகளின்
உரிமைநிலைநாட்ட முற்படுகையில் அரசின் பாராமுகமாக உள்ளது. தனிநபர்கள் தாங்கள் இந்த
சாதியை சேர்ந்தவர்கள் என்று பழைய உணர்வை குறைத்துக் கொள்வார்கள் என
எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடைமுறைக்கு வரவில்லை. சாதிய பழக்கவழக்கங்களை மாற்ற
அரசாங்கத்தால் இயலவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்றவை சாதியக் குழுக்களின்
ஒருங்கிணைப்புக்கு ஊக்கமளித்தது. தொழில் ரீதியாக சாதிகளை வகைப்படுத்துவதற்கு
எதிராக பரந்தபட்டு கிளர்ச்சி ஏற்பட்டது. இச் சாதிகள் ஆங்கிலேய அரசாங்கத்தால்
பெருமளவில் கட்டமைக்கப்பட்ட தனித்த சாதிகளாக போற்றிப் பாதுகாக்கப்பட்டன. நிலபத்திரங்கள்
அரசு ஆவணங்கள் பழைய சாதி இறுக்கம் மேலும் கெட்டிபடுத்தும் விதத்தில்
அமைந்திருந்தன(35).
No comments:
Post a Comment