இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்
1). திருத்தல்வாதம் செங்யென்சீ பாகம் 2பகுதி 1.
ரஷ்ய சோசலிசப் புரட்சிக்கு லெனின் மிகப் பலமான அடித்தளத்தைப் போட்டார். இந்த அடிப்படையான கடமையை செய்து முடித்த பின்புதான் ரஷ்யாவில் ஜாரின் கொடுங்கோன்மைக்கு முடிவுகட்டி, உழைக்கும் வர்க்கத்திற்கு விஞ்ஞான அடிப்படையில் வழிகாட்டி சோசலிசப் புரட்சியை லெனின் நடத்திக்காட்டினார். ஆனால் இந்தியாவில் இந்த அடிப்படையான பணிகளை இங்குள்ள கம்யூனிஸ்டுகள் இதுவரை செய்யவில்லை. அதாவது மார்க்சிய லெனினியத்தை உழைக்கும் மக்களிடம் பரப்பி மக்களுக்கு சோசலிச அறிவையும் உணர்வையும் ஊட்டவே இல்லை, தொழிற்சங்கமயமான போராட்டங்களிலேயே தொழிலாளர்கள் மயங்கிக்கிடக்கிறார்கள். சோசலிசத்தையும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தையும் ஒன்றிணைக்க தொடர்ந்து மறுத்துவருகிறார்கள். சோசலிசத்துக்கு எதிரான திருத்தல்வாத கொள்கைகளையே விவாதித்துக்கொண்டும் பரப்பிக்கொண்டும் இருக்கிறார்கள். இவ்வாறு சித்தாந்தத்துறையில் இவர்கள் மார்க்சியத்தைக் கற்றுக்கொண்டு அதனை தொழிலாளர்களிடம் கொண்டு செல்வதற்கு எதிராக திருத்தல்வாதம் மற்றும் குறுங்குழுவாதம் போன்ற மார்க்சியத்துக்கு எதிரான முதலாளித்துவ சீர்திருத்தவாதக் கருத்துக்களை கொண்டுசென்று தொழிலாளர்களை சீரழித்துவிட்டார்கள். இவ்வாறு ரஷ்ய மார்க்சியர்கள் செய்த முதன்மையான பணியை இந்திய மார்க்சியர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் செய்யாமல் அதற்கு எதிராகவே சித்தாந்தப் பணியை செய்ததன் காரணமாக இரண்டாவது பணியான மக்களை திரட்டி புரட்சியை நடத்தும் பணியை இவர்களால் செய்ய முடியவில்லை, மாறாக முதலாளிகளிடம் தொழிலாளர்களை அடகுவைத்துவிட்டு முதலாளிகளுக்கு கொத்தடிமையாக ஆக்கிவிட்டனர். இங்குள்ள திருத்தல்வாதிகளும் கலைப்புவாதிகளும், குறுங்குழுவாதிகளும் லெனினை மறந்துவிட்டனர்,
பெயரளவுக்கு லெனினது பெயரை உச்சரித்துக்கொண்டு உழைக்கும் மக்களிடையே பிற்போக்கு சிந்தனையை வளர்க்கிறார்கள், பிளவுகள் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள், புரட்சியிலிருந்து மக்களை திசைதிருப்பிக்கொண்டு இருக்கிறார்கள். புரட்சிகரமான ஒன்றுபட்ட கட்சி கட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டு அதற்காக எவ்விதமான பணி பற்றியும் சிந்திக்கக்கூட இவர்கள் தயாரில்லை. அதாவது மாபெரும் புரட்சியாளர் லெனின் செய்த ஆரம்பகட்ட வேலையைக்கூட இவர்கள் துவங்கவும் தயாரில்லை, ஆனால் வாய்ச்சொல் வீரர்களாகவே வலம்வருகிறார்கள்.
அன்றிருந்த ரஷ்ய மார்சியர்கள் மத்தியில் இந்த வரலாற்றுக் கடமை பற்றிய ஆழமான தெளிவான புரிதல் புரட்சியாளர் லெனினுக்கு மட்டுமே இருந்தது. 1894 அவர் எழுதிய “மக்களின் நண்பர்கள் யார் அவர்கள் எவ்வாறு சமூக ஜனநாயவாதிகளோடு போராடுகின்றனர்” என்ற நூலில் எப்பொழுது அதன் முன்னணி பிரதிநிதிகள் அறிவியல் சோசலிசத்தின் கருத்துக்களை ரஷ்ய தொழிலாளர்களின் வரலாற்றுக் கடமைகளை முற்றாக உணர்ந்து கொள்கின்றனரோ, எப்பொழுது இந்தக் கருத்துக்கள் பரவலாக உணரப்படுகின்றனவோ, இன்று அவ்வப்போது வெடிக்கும் தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டங்களை புரிதலோடு கூடிய வர்க்கப் போராட்டமாக மாற்றும் திறனுள்ள நிலையான நிறுவனங்கள் எப்பொழுது உருவாக்கப்படுகின்றனவோ அன்றுதான் அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் தலைமையேற்று, நடக்கும் ரஷ்ய கொடுங்கோன்மை ஆட்சியை தூக்கி எறிவார்கள். ரஷ்ய உழைக்கும் வர்க்கத்தை (அனைத்து நாடுகளின் உழைக்கும் வர்க்கங்களோடு) வெற்றிகரமான கம்யூனிச புரட்சிக்கான வெளிப்படையான அரசியல் போராட்டம் என்ற நேர்வழியில் நடத்திச் செல்வார்கள்.
இலக்கு 85 இணைய இதழை இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே
No comments:
Post a Comment