சாதி அன்றும் இன்றும்-மார்க்சிய பார்வையில்-2

நூலின் அறிமுகம் 

கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்பர் குதர்க்கவாதிகள் ஆனால் உயிரின் தோற்றம் வளர்ச்சி விதிகள் இதில் மனிதன் விலங்கிலிருந்து மனிதனாக மாறிய காலம். மனிதன் காட்டுமிராண்டி நிலையிலிருந்து நாகரீக நிலைக்கு மாறியது போலவே! மனித உழைப்புதான் மனிதனை இந்நிலைக்கு உயர்த்தியுள்ளது இருந்தும் இந்த உழைப்பு சார்ந்த ஆம் தொழில் சார்ந்த வாழ்க்கை குறிப்பிட்ட சமூகத்தில் நிலைப்பெற்றிருந்தது. அந்த தொழில் பிரிவினையின் அடிப்படையில் உலகெங்கும் மக்கள் பல்வேறு கட்டங்களில் வாழ்ந்தனர். அவை தேவையொட்டி மாறியும் போய்விட்டது. இன்று மன்னர்களையோ மன்னர் ஆட்சியோ இல்லை ஆனால் மன்னர்கள் நாடண்ட காலமும் இருந்ததுதானே? இந்தியா போன்ற நாடுகளில் தொழிலாள் தோன்றிய பிரிவினை பின்னர் சாதியின் பெயரால் நிலை பெறலாயின. இதற்கு மத சாயமும் அரசின் அவசியத்திலும் கெட்டிப்படுத்தப்பட்டு பிறப்பின் அடிப்படையில் தொடரலாயிற்று...


உலகெங்கும் மனித சமூகம் உழைப்பினால் வளர்ச்சியுற்றது. அதில் சில பகுதி மிக வேகமாகவும் வேறு சில பகுதி மந்த கதியிலும் நடந்தேரியது. நம் நாட்டிலும் சமூக வளர்ச்சியானது மற்றெல்லா உலக நாடுகளில் நடந்தேறியவை போன்றதே என்பதற்கான நிரூபணங்கள் இவை சுட்டிக்காட்டுகின்றன. இதில் சாதியின் தொடக்கம் எப்படியிருந்தது என்பதனை அறிதல் அவசியம்.
தொடக்ககால கைத்தொழில்கள் சரக்கு உற்பத்திமுறை ஆகிய இவற்றோடு மக்கள் தொகையும் பெருகியது, இத்துடன் செல்வ விசயத்தில் பெருத்த வேறுபாடுகள் சேர்ந்தன. இதற்கு முன்னால் இருந்த கூட்டுச் சமுதாய அமைப்புக்குள் உயிரோட்டமாக நிலவிய ஜனநாயக முறைக்குள்ளேயே இச்செல்வ வேறுபாடுகள் எல்லாம் ஒரு தனிப்பட்ட ஏற்றதாழ்வான சிலரை உயர்விக்கும் அம்சத்தை தோற்றுவித்தது. அன்றைய உற்பத்திச் சாதனமான நிலங்களை விஸ்தீரணம் செய்ய வேண்டியிருந்தது. இன்னும் நன்கு விளையக்கூடிய முறையிலான இடத்தை அதாவது நிலத்தை, பிரதேசத்தை மையமாகக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வேளாண்மை சமூகத்தில் பிரதான உற்பத்திச் சாதனமாக நிலம் விளங்கியது.
வேளாண்மை சார்ந்த உற்பத்தியில் ஈடுபடும் பல்வேறு விதமான போக்குகள் தொடங்கின. தொழில் வகுப்புகளான, மூளை உழைப்பு, உடல் உழைப்பு என உழைப்புத் திறன் அதன் செயல் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது, இரண்டும் அதற்கான தனித்தனியான திறனுக்கானவையாக. நிலஉடைமை சமூக அமைப்பின் தொடக்கத்தில் வேளாண்மை, மற்றும் வேளாண்மைச் சார்பு கைவினை ஆகியவை மட்டுமின்றி தொண்டூழியத் தொழிலும் இருந்தன. ஒவ்வொரு தொழில் பிரிவினையும் அவர்கள் சார்ந்த தொழில் நுட்ப அறிவும் அந்தக் குறிப்பிட்ட தொழில் பிரிவினருக்கே உரியதாக இருந்தது. மேலும் நிலஉடைமை உற்பத்தி முறையில் ஒவ்வொரு தொழிலும் முழுமையான ஒருசுய உள்ளாற்றல்களையும் இயங்குதல்களையும் கொண்டிருந்தது. அதே நேரத்தில் பொதுவான அமைப்புக்குள்ளும் அது இயங்கிக் கொண்டும் இருந்தது.
ஒவ்வொரு தொழிலும் தன் சுயேச்சை தன்மையைப் பேணிக் கொண்டிருந்ததோடு நிலஉடைமை பொருளாதாரத்தில் ஒரு கண்ணியாகவும் இருந்தது. பொதுசமூகத்தில் அங்கமாக உள்ள தொழில் வகுப்புகள் தொழில் ரீதியாக தங்களுக்கான தனித்தனி தொழில் வகுப்பின் அடிப்படையில் செயல்பட்டன. அதனால் ஒரு தொழில் பிரிவு இன்னொரு தொழில் பிரிவுடன் ஒன்று கலக்கவே இல்லை. ஆனால் ஒரு தொழில் வகுப்பின் உற்பத்திதிறனில் உருவான முழுபொருளும் இன்னொரு தொழில் பிரிவின் நுகர்வு பொருளாக அல்லது அதன் உற்பத்திக்கு ஆதாரப்பொருளாக அமைந்தன. கலப்பை செய்ய தச்சர் ஈடுபடும் போது வேளாளர் அதில் ஒன்று செய்ய முடியாது. ஆனால் தச்சரின் கலப்பையை பயன்படுத்தி வேளாளர் வேளாண்மை செய்து விளைவிக்கும் விளைப்பொருளை அனைத்து தொழில் பிரிவினரும் பயன்படுத்த முடியும். தொழில்முறையில் தச்சரின் ஏர் கலப்பையை ஒரு குயவர் நேரடியாக நுகரமுடியாது. ஆனால் தச்சரின் கலப்பை பயன்படுத்தி வேளாண்மையால் விளைவிக்கப்பட்ட விளைப்பொருளை குயவரும் நுகர முடியும்.
நிலஉடமை சமூகத்தில் வேளாண்மை வகைப்பட்ட கிராமங்களில் வேளாளர்கள் உடல் உழைப்பாளர்களாகவும் நிர்வாகிப்பவராகவும் இருந்தனர். இந்த கிராமஉற்பத்தி முறையில் மூளை உழைப்பாளர்களும் உடல் உழைப்பாளர்களும் ஆகிய இருபிரிவினர் கொண்டதாக இருந்தது. கிராம நிர்வாகத்தையும் பொருளாதாரத்தையும் ஒழுங்கமைக்க புரோகிதர்களாக இருந்தனர். அதேபோல தொழில் பிரிவினை அடிப்படையில் கைவினைஞர்களும் சேவைபிரிவினரும் இதே நிர்வாக அமைப்பில் கட்டுண்டு இருக்க வேண்டிய தேவை இருந்தது(17).
அரசியல் அதிகாரம் கையில் இருந்த புரோகிதர்களும், வேளாளர்களும் கைவினைஞர்களின் உழைப்பையும் சேவை பிரிவினர் உழைப்பையும் ஒரு வகையில் குத்தகை என்ற பெயரில் அபகரிக்கத் தொடங்கினர்.
புரோகிதரும் வேளாளரும் தமக்கான உரிமையை பாதுகாப்பது போலவே, தொழில்பிரிவினர் தமக்குரிய தொழில்பிரிவின் ரகசியத்தையும் தனக்கான தேவையாக கருதி அதனை ரகசியமாக காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நிலஉரிமை கொண்ட பிரிவினர் பெண்கள் உற்பத்தியில் இருந்து ஒதுக்கப்பட்டனர். ஆனால் சேவை தொழில் செய்பவரும் கைத்தொழில் செய்பவரும் தங்களது பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்தினர். தங்களின் தொழிலைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தொழில் ரீதியான மேலாண்மையை தங்களுக்குள் நிர்வகித்துக் கொள்வதற்காகவும் இக்குழுவுக்குள்ளேயே தங்களுக்கான தொழில் வகுப்புகள் அகமணமுறையைக் கட்டிக்காத்துக் கொண்டன. நிலஉரிமை வகுப்புகளான புரோகிதர்களும், வேளாளர்களும் தங்களுடைய சந்ததிகளின் காப்புரிமைக்காக அகமணமுறையை தேர்ந்தெடுத்தனர். கைவினை பிரிவினரும் சேவைபிரிவினரும் தங்களுக்குள்ளே அனைத்துவித பரிபாலனைகளையும் மேற்கொள்ள வேண்டிய தேவையே இதற்குரிய காரணமாக இருந்தது. (இங்கு கவனித்தில் கொள்ள வேண்டியது அன்றைய தேவையை ஒட்டியே சமூக உழைப்பு பிரிவினை தோன்றியதும் அதனை அச் சமூக மேல்நிலை அமைப்பு கட்டிக்காக்க செய்தது)
குலசமூகம் உற்பத்தியில் ஈடுபடலானபோது அவர்களுக்கு இடையிலேயான வேலைப் பிரிவினையின் அடிப்படையில் செயல்பட்டதன் விளைவே சாதியின் ஆரம்ப வடிவம், பிரிவினை. குலசமூகதிற்குள்ளே இருந்த சமத்துவம் குழைந்து தலைமை பொருப்பில் இருந்த தலைவர், பூசாரி என்ற பிரிவினரிடம் உபரியான சொத்து சேரலாயிற்று. ஒரு பக்கம் சொத்துள்ளவர்களுக்கும் இன்னொரு பக்கம் சொத்தற்றவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வேலை பிரிவினை காரணமாக ஏற்றதாழ்வு உருவாயிற்று. அன்று இந்தப் பிரிவினை சாதியாக இருக்கவில்லை பல நூறு ஆண்டுகள் மற்றும் பல்வேறு மாற்றங்களின் ஊடாக சாதி உருதிரண்டநிலை கி.மு 2 நூற்றாண்டில் பல்வேறு தொழில் பிரிவுகளாக கூறுகளாக இருந்தாலும் தெளிவாக கி.பி. 2 நூற்றாண்டில்தான் சாதி என்ற பிரிவினையும் அதற்கான நிறுவன மயப்படுத்தலும் கோலோச்ச ஆரம்பித்தது எனலாம்.
சோழர் காலத்தில் முழுமுற்றான நிலவுடைமைக் காலத்தில் சாதியின் பாரம்பரிய வேலை பிரிவினை இருந்தது மிகவும் கராராக இருந்தது. நாயக்கர் காலத்தில் சாதி ஆதிக்கம் விரிவடைந்ததை காணலாம். மக்களிடையே ஏற்றதாழ்வு தோன்றி நேற்றுவரை ஒன்றாக இருந்தவர் பிரிவினைக் கண்டனர். இதனை புரிந்துக் கொள்ள, எங்கெல்ஸின் வார்த்தைகளில் சொல்வதானால், "செல்வத்தின் மீது ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக சமுதாய அமைப்பு பாதிக்கப்பட்டது. பரம்பரை பிரபுத்துவத்திற்கும் அரசமுறைக்கும் கொழுந்துகள் துளிர்த்தன, அடிமைமுறை போர்க்கைதிகளோடு நின்று இருந்தபோதிலும், ஏற்கனவே குலத்தின் உறுப்பினர்களையும் கூட அடிமைப்படுத்துவதற்கு வழிவகைச் செப்பனிட்டு வந்தது. கால்நடைக்கு நடைபெற்ற சண்டைகள் நிலத்துக்கான திட்டமிட்ட படையெடுப்புகளாக இழிந்து முறையான ஒரு தொழிலாகிவிட்டது. உயர்விலும் உயர்வான சம்பத்தாக செல்வம் புகழப்பட்டது. தனிநபர்கள் புதிதாக சேர்த்த சொத்தை பாதுகாக்கவும் அதைப் பெருக்குவதற்கும் படிப்படியாக வளர்ந்து வரும் புதிய வடிவங்களுக்கும் பொதுமக்கள் அங்கீகாரம் எனும் முத்திரையைப் பதிக்க வைப்பதற்கும் வேண்டிய ஒரு நிறுவனம் இல்லாதிருந்தது. சமுதாயத்தில் எழுந்த வர்க்க பிரிவினையை நிரந்தரமாக்குவதோடு மட்டுமல்லாமல் உடைமை அற்றவர்களை உடைமை உள்ளவர்கள் சுரண்டுவதற்கான உரிமையை நிரந்தரமாக்கும் நிறுவனம் வரத் தொடங்கியது அதுதான் அரசு என்பது.(குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்).
சாதி என்பது மக்கள் தோன்றிய காலம் தொட்டே இருந்த ஒன்று அல்ல. இது நிலவுடைமை சமூகத்தில் தனிஉடைமை தேவையை ஒட்டி சொத்து சேர்க்கும் ஒரு கூட்டம் தோன்றிய பொழுது, தோன்றியதே. அடுதவர்களின் உழைப்பை சுரண்டுவதற்காக தேவையானதாக பலவகை சுரண்டல் முறைகளை உலகெங்கும் காண முடியும். அதில் இந்திய துணை கண்டத்தில் அந்த சுரண்டல் முறையின் ஒரு வடிவம்தான் சாதியாக உருதிரண்டு நிலவுடைமை சமூகத்தில் அவை உருபெற்றது.(20).
வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் காணும் பொழுது உலகில் உள்ள மற்றச் சமூக அமைப்புகள்போலவே இந்தியச் சமுக அமைப்பும் வர்க்க அமைப்பே. அதில் சில தனிச் சிறப்புகள் உண்டு இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி நிலவி வந்தாலும் அதன் செயல்பாடும் வடிவமும் எல்லாக் காலங்களிலும், ஒரே மாதிரியாக இருந்ததில்லை. நிலப்பிரப்புத்துவ அமைப்பு முறையில் தொழிற்பிரிவினை அடிப்படையில் சாதியம் உறுதியாக செயல்பட்டது. இன்று வர்க்க அரசின் சார்பினால் சாதி உயிர்பிக்கப் படுகின்றது. தங்களின் சுரண்டலுக்கு துணையாக சாதி ஒடுக்குமுறை இருப்பதால் சாதியை கட்டிக்காக்கிறது.
இந்த நூலின் விலை 225/- தனி சலுகை விலை 110 + 50 கொரியர் (₹160) 9095136356 என்ற எண்ணிற்கு செலுத்தி அனுப்ப வேண்டிய விலாசத்தை 7010134299 என்ற எண்ணிற்கு அனுப்பி வைக்கவும் தோழர்களே நுலினை பெற.














No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்