திறந்தநிலை மார்க்சியம் யாருக்கான மார்க்சியம்- வகுபிற்கு -2 ஒலி வடிவில்

 இந்த புத்தகம் எதை குறித்தான கேள்விக்கு எழுப்புகிறது என்று அதன் மொழிபெயர்பாளார் மா.சிவக்குமாரின் வார்த்தைகள் விளக்கப்படுத்தி இணைய பகுதியில் பேசியதை முன்வைத்தே இந்த பகுதியை எழுதியுள்ளேன். அதன் குறிப்பான விசயங்களுக்குள் போவது நுனிபுல் விசாரணையாக மாறிவிடும். ஏன் இந்த புத்தகத்தையே சுற்றி சுற்றி வர வேண்டும் என்று விரும்ப வேண்டும். சமூகமாற்றத்துக்கான என்ன தீர்வை இவைமுன்வைத்துள்ளது? எந்த மார்க்சிய கேள்விகளுக்கு இது மறு விசாரணையை கோருகிறது. மார்க்சிய-லெனினியத்தை மறுத்து அதன் மீது கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பிவிட்டுபிறகு மார்க்சிய வேசம் எதற்கு?எந்த வழியில் நின்று தீர்வு காணப்போகிறீர்கள்?. இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை நூலினை வாசித்து அடுத்தப் பகுதியில் வைக்க முயற்ச்சிகிறேன்.

இறுதியில அறிந்தோ அறியாமலோ முதலாளித்துவமுறைகளை மார்க்சியத்தின் எதிர்நிலை வழிமுறைகளையே கைக்கொள்ளவேண்டி வரும் உங்களின் நோக்கம் புரட்சி முன்னெடுத்து செல்லவல்ல என்பது திண்ணம்.

சரி இதே நிலைப்பாட்டை கொண்டிருந்தவர்களை லெனின் விமர்சனம் செய்தார் ஏன் தெரியுமா? நீங்கள் வைக்கும் இதே விமர்சனத்தை அன்று வைத்தவர்களை பார்த்து அவர்களின் நிலைபாடு என்னவென்பதனை லெனின் தெளிவுப்படுத்தியுள்ளார் நேரம் உள்ளவர்கள் வாசித்து கருத்திடுங்கள் காத்திருக்கிறேன்.

இன்று பின்நவீனத்துவவாதிகளும், காண்ட் ஹெகைல வாசிக்க அழைக்கும் திறந்த நிலை மார்க்சியம் பேசுவோரின் நிலைக்கு எதிராக அவர்களின் நிலைப்பாடு மார்க்சியம் அல்ல என்பதனை விவரிக்க நமது ஆசானின் லெனின் கட்டுரை பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் பகுதியிலிருந்து எடுத்து கையாளுகிறேன்.

சரி திறந்த நிலை மார்க்சியம் தொகுதி-1 இயக்கவியலும் வரலாறும் என்ன சொல்கிறது பார்ப்போம். பளப்பளக்கும் பதிப்புரையில் என்னென்னவோ இட்டுகட்டும் பதிப்பாசிரியர் நேர்மையாக இந்த நூல் மார்க்சியத்தின் எந்த பணியை செழுமை படுத்தப் போகிறது என்பதைச் சொல்லவே இல்லை.

கீன்ஸியம், பிந்தைய மார்க்சியம், கட்டமைப்புவாதம்,பின்நவீனத்துவம் இப்படியான மார்க்சியம் அல்லாத புதைசேற்றில் மார்க்சியத்தை தள்ளியவர்களின் மூலமாகவே மார்க்சியத்தை மீட்க புறப்பட்டுள்ளனர் என்பதனை இவர்களின் ஒப்புதல் தெளிவாக முன் வைக்கிறது.

மார்க்சிய ஆசான்களின் தத்துவத்தை பேச முன்வராத இவர்கள் மார்க்சியத்தை மறுத்து முதலாளித்துவ அறிஞர்கள் முன் வைத்துள்ள கருத்துகளை முறியடிக்க மார்க்சியதிற்கு முந்தைய காண்டிடமும், ஹெகலிடமும் மார்க்சிய இயக்கவியலை மீட்டெடுக்க போக செல்லும் இவர்கள் ஏன் மார்க்சிய ஆசான் லெனின் போதித்துள்ள ‘பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்றோரு நூல் வெளிவந்து இதுபோல் குறைபேசி அன்று எழுதியவர்களுக்கு அளித்துள்ள பதில் இவர்களுக்கு போதவில்லையா? அன்று மார்க்சியத்தை மறுத்தவர்களின் கண்டுபிடிப்பைவிட இவர்கள் புதிய கண்டு பிடிப்பு என்னவென்றால் சில பெயர்கள் மாற்றம் தானே தவிர அதேவார்த்தைகள்தான் மீண்டும் வெளிகாட்டுகிறது, அதாவது “பழைய கள்ளு புதிய மொந்தை” என்பர் அதே சரக்குதான் பெயர் மாறியுள்ளது அவ்வளவே.

திறந்தநிலை மார்க்சியம் வைக்கும் கேள்விகளும் அதன் நோக்கங்களும் இடதுசாரிகளின் வளர்ச்சிக்குதானா?

லெனின் (பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற அவரது நூலில் 323 ஆம் பக்கம் பார்க்க)

ஆகவே இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது புறநிலையில் அதாவது நமது விருப்பங்களுக்கும், நமது சிந்தனைகளுக்கும் வெளியில் பொருள்கள் உள்ளது என்பதுதான் பொருள்முதல்வாதிகளின் கருத்தாகும். உதாரணமாக நமக்கு முன்னே ஒரு மேஜை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், நாம் சிந்திப்பதால்தான் மேஜை அங்கு இருக்கிறதா? இல்லை, நாம் சிந்திக்காவிட்டாலும் அங்கு மேஜை இருக்கும் என்பதுதானே உண்மை. நாம் சிந்திக்காவிட்டால் அல்லது அங்கு மேஜை இல்லை என்று கருதினால் அங்கு மேஜை இல்லாமல் போய்விடுமா? அங்கு மேஜை இல்லாமல் போய்விடாதல்லவா? இந்த எளிமையான உண்மையைக் கூட கருத்துமுதல்வாதிகள் ஏற்க மறுக்கிறார்கள். ஆகவேதான் கருத்துமுதல்வாதிகளில் ஒரு பிரிவினர் உண்மை என்பது எங்குமே கிடையாது என்றும் நாம் காண்பதெல்லாம் மாயையே என்று சொல்லி உழைக்கும் மக்கள் படும் துண்பங்களையே மூடிமறைத்து அந்தத் துண்பங்களிலிருந்து உழைக்கும் மக்கள் தங்களின் விடுதலைக்காகப் போராடுவதிலிருந்து திசைதிருப்புகிறார்கள். இந்த வகையில்தான் கருத்துமுதல்வாதமானது உழைக்கும் மக்களுக்கு எதிரான தத்துவமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவேதான் பொருள்கள் எல்லாம் மனது என்ற ஒன்று இல்லாமலேயே இருக்க முடியும் என்றும் பொருள்கள் இருப்பதற்கு மனது என்று ஒன்று தேவையே இல்லை என்றும் அடித்துச் சொல்கிறார்கள்.

இந்த சமூகமானது பகைமையான வர்க்கங்களைக் கொண்ட வர்க்க சமூகமாக இருப்பதால் சுரண்டும் வர்க்கங்கள் ஏழை உழைக்கும் வர்க்கங்களை சுரண்டுவதற்கு பலாத்காரமான ஒடுக்குமுறையோடு கூடவே உழைக்கும் மக்களிடம் தத்துவ குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்தியல் ஒடுக்குமுறையையும் கையாளுகிறார்கள். இத்தகைய கருத்துக் குழப்பத்தை மக்களிடம் ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் தங்களது வறுமைக்கும் துண்பங்களுக்கும் காரணமான உண்மைகளை அறிந்துகொண்டு தங்களது விடுதலைக்காகப் போராட முன்வந்துவிடக் கூடாது என்று ஆளும் வர்க்கங்களும் அவர்களுக்கு துணைபோகும் துரோகிகளும் கருதுகிறார்கள். அந்த நோக்கத்தை நிறைவேற்றவே கருத்துமுதல்வாதக் கருத்துக்களையும் சிந்தனை முறையையும் மக்களிடம் பரப்புகிறார்கள். ஆகவே கம்யூனிஸ்டுகள் இதற்கு எதிராக இயக்கவியல் பொருள்முதல்வாத சிந்தனை முறையை மக்களிடம் பரப்ப வேண்டும்.

“புறநிலையில் யதார்த்தமாக இருக்கும் தன்மை நமது மனதுக்கு வெளியே இருக்கும் தன்மை, என்று பொருளுக்கு ஒரு குணாம்சத்தை அங்கீகரிப்பதோடு மெய்ஞான ரீதியான பொருள்முதல்வாதம் சம்பந்தப்பட்டிருக்கிறது எனலாம்” என்று லெனின் சொல்லியிருக்கிறார்.(அதே நூல் பக்கம் 317).

ஆனால் இங்கே திறந்த நிலை மார்க்சியம் பேசுவோர் இதனை எப்படி தவறாக பேசி என்னென செய்துக் கொண்டுள்ளனர்.

ஹெகலையும் காண்டையும் உயிர்பிக்கும் இவர்கள் அதே 1700 பெர்கிளிப் பாதிரியாரையும் துணைக் கழைகின்றனர் ஆனால் அவர்களிடமிருந்து முன்னேறிய அவர்களை புறம்தள்ளி வளர்ந்து ஒரு புரட்சியை சாதித்து முதலாளித்துவம் என்ற மூலதன ஆதிகத்திற்கு சாவு மணி அடித்து சோசலிசம் என்ற பொதுவுடமையை நோக்கிச் செல்லும் பணியை மார்க்சிய ஆசான்கள் நிறுவினர். அதற்கு சான்றுகளாக ரசிய மற்றும் சீனா உள்ளிட்ட உலக பல நாடுகளில் நடந்தேறிய சோசலிசம் நோக்கிய அவர்களின் பயணம் அந்த பயணத்தில் தற்காலிக முட்டுக்கட்டை அதன் தலைமையின் துரோகத்தால் அந்த நாட்டின் புரட்சி வீழ்ச்சி அடைந்து எதிர்புரட்சிக்கு வித்திட்டு இருக்கலாம், அதற்கு காரணம் மார்க்சியத்தின் தோல்வி அல்ல மார்க்சியத்தை பயன்படுத்தியோர் செய்த தவறே. அந்த படிப்பினையிலிருந்து விடுபட்டு முன்னேற மார்க்சியம் மட்டுமே வழிகாட்டி மார்க்சிய விரோதிகளின் எழுத்துக்கள் எவ்வகையிலும் பயனளிக்காது என்று உறுதியாக கூறுகிறேன்.

நேற்றைய வகுப்பு அல்லது விவாதம் குறித்து ஒலி வடிவி கேட்க இந்த லிங்கில் லிஸன்ரை அழுத்தி கேடகவும் தோழர்களே

திறந்த நிலை மார்க்சியம் என்ற இந்த நூல் மார்க்சியத்தை வளர்க்க நிச்சயமாக இல்லை என்பேன் ஆனால் இவை ஆளும் வர்க்கதிற்கு சேவை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்டதே என்று ஆணிதரமாக விளக்க முடியும் அந்த முயற்ச்சி வரும் இதழிகளிலும் தொடரும்...

மேலும் தோழர் ரவீந்திரன் முகநூல் பகுதியிலிருந்து

மார்க்சியமானது குறைபாடான தத்துவம், மார்க்சியத்தில் பல குறைகள் இருக்கிறது, இன்றைய கால சமூகப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தகுதி மார்க்சியத்திடம் இல்லை, மார்க்சியத்துக்கு இனிமேல் வளர்ச்சி இல்லை என்று மார்க்சிய தத்துவம் மற்றும் அரசியலைப் பற்றி பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகளை முதலாளித்து அறிவாளிகளும் (முட்டாள்களும்) மார்க்சிய அமைப்புகளிலுள்ள துரோகத்தனமான அறிவாளிகளும் (முட்டாள்களும்) தொடர்ந்து முன்வைத்து மார்க்சியத்தை மறுத்து புதிய புதிய கருத்துக்களை முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணமாக பின்நவீனத்துவமும் தற்போதைய திறந்தநிலை மார்க்சியத்தை குறிப்பிடலாம். இவ்வகையான மார்க்சியத்துக்கு எதிரான மாற்றுக் கருத்துக்களை மார்க்சிய ஆசான்களும், அவர்களைப் பின்பற்றிய சிறந்த உண்மையான மார்க்சியவாதிகளும் மக்களிடம் அம்பலப்படுத்தி முறியடித்தார்கள் என்பதுதான் வரலாறாகும். மார்க்சியம் ஒரு மூடுண்ட தத்துவம் என்றும் அது இனிமேல் வளராது என்று கூறும் இந்த கயவர்களின் கருத்து தவறானது என்றும் பொய்யானது என்பதையும் லெனின் ஏகாதிபத்தியம் பற்றிய அவரது ஆய்வுகளின் மூலம் முறியடித்து மார்க்சியத்தை லெனினியமாக வளர்த்தார். ஏகாதிபத்தியமானது முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்றார் லெனின். முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்தபோது, முதலாளித்துவத்தை அடுத்து சோசலிசம் வரும் என்ற மார்க்சியம் பொய்யாகிவிட்டது என்று முதலாளித்து அறிவாளிகள் கூச்சலிட்டபோது, அதனை மறுத்த லெனின் முதலாளித்துவத்தின் இயக்கப் போக்கில் ஏகபோகம் உருவாகும் என்று மார்க்ஸ் சொல்லியுள்ளார், அதுதான் இங்கு நடந்துள்ளது, ஆகவே மார்க்சியமானது மிகவும் சரியான தத்துவமாகும் என்று லெனின் எடுத்துச் சொல்லி மார்க்சியத்தை பாதுகாத்துக்கொண்டே மார்க்சியத்தை ஏகாதிபத்திய காலக்கட்டத்துக்கு பொருத்தமாக லெனினியமாக வளர்த்தார். அதன் மூலம் மார்க்சியத்தை வளர்க்க முடியும் என்றும், அதற்கு மார்க்சியத்தின் அடிப்படைகளை பாதுகாத்துக்கொண்டே புதிய சூழலுக்குப் பொருத்தமாக வளர்க்க வேண்டும் என்று லெனின் நமக்கு வழிகாட்டியுள்ளார். ஆனால் லெனினது இந்த வழிகாட்டுதலுக்கு எதிராக மார்க்சிய இயக்கத்திலுள்ள துரோகிகள் மார்க்சியம் இன்றைய சூழலுக்குப் பொருந்தாது என்றும் மார்க்சியத்தை மறுத்துவிட்டு பல்வேறுவிதமான கதைகளைச் சொல்லி நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி மார்க்சியத்தை நாம் மறுக்க வேண்டும் என்றும் மார்க்சியத்தை நாம் பின்பற்றக் கூடாது என்றும் பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஏகாதிபத்தியங்கள் ஒழிக்கப்பட்டு ஏகாதிபத்திய காலக்கட்டம் முடிவுக்கு வரும்வரை ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியக் கோட்பாடுகள் உயிர்வாழும். ஏகாதிபத்தியங்கள் வீசியெறியும் எச்சில் காசுக்கு விலைபோன மார்க்சிய எதிரிகளும், துரோகிகளும் மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளை மக்கள் புரிந்துகொள்ளவிடாமல் குழப்பங்களை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த கயவர்களை ஆதரித்து இவர்களது நூல்களை கம்யூனிஸ்டுகள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டிருக்கும் திருத்தல்வாதிகளும் வெளியிடுகிறார்கள். வெட்க்கம் இல்லாமல் உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்யும் இவர்களை உழைக்கும் மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். மார்க்சியத்தை மறுக்கும் இவர்களும் இவர்களது தத்துவம் மற்றும் அரசியலும் இதுவரை எங்குமே வெற்றி பெற்ற வரலாறு இல்லை. வெற்றிபெற்ற மற்றும் ரஷ்யாவிலும் சீனாவிலும் சாதனை படைத்த மார்க்சியத்தைப் பற்றிப் பேசுவதற்கு இந்தக் கயர்வர்களுக்கு எவ்விதமான தகுதியும் இல்லை. தொடரும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்