தோழர்களே இந்த இதழில் பேசப்பட்டவை
1).திறந்தநிலை மார்க்சியம் யாருக்கான மார்க்சியம்
2). மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் பயிலுவோம் - பகுதி -8 மெய்ஞான ரீதியான பொருள்முதல்வாதம்.
3). குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின்தோற்றம்.-எங்கெல்ஸ்- பாகம் 1.
4).“நக்சல்பாரி ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல”-நூல் விமர்சனம் ஜீவா அவர்களின் முகநூலிலிருந்து.
5).பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல் ஏகாதிபத்தியங்களின்கூட்டு சதியே
6). தொலைத்தொடர்புச் சட்டம் 2023 மோடி அரசின் டிஜிட்டல் சர்வாதிகாரம்-அபர் குப்தா
7). இந்திய பாசிசம் ஒரு மார்க்சிய ஆய்வு- பிரேம சந்திரன்
பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும் நூலை ஏன் பயிலத் தொடங்கினேன் என்றால் இங்கு "திறந்தநிலை மார்க்சியம்" என்று பேசிக் கொண்டே இவர்கள் மார்க்சியத்தை மறுக்க முயலுவதை தெளிவுப்படுத்தவும் மேலும் அந்த நூலின் உண்மை தன்மையை அவர்களே அவர்களின் எழுத்து மூலம் உணர்த்தியுள்ளனர்.
உண்மையில் நான் இவர்களை விமர்சிக்க நமது ஆசான் லெனின் நூலையே துணைக்கு எடுத்துக் கொண்டுள்ளேன். அதனை பற்றி நீண்ட கட்டுரை எழுதியுள்ளேன் அதனை வாசிக்கும் முன்னர் நமது ஆசான் லெனின் இது போன்ற துரோகிகளை அம்பலப்படுத்தி எழுதியுள்ள பகுதியிலிருந்து வாசியுங்கள். நேரமுள்ள தோழர்கள் இந்த பகுதியை வாசியுங்கள் உங்களை நீங்கள் சரியாக்கி கொள்ள பயன்படும் தோழர்களே.
லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்”என்ற நூலை 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி துவங்கி அக்டோபர் மாதத்தில் எழுதி முடித்தார்.1909-ஆம் ஆண்டு அந்நூல் பிரசுரமாகி வெளிவந்தது. மிகவும் சிக்கலான தத்துவப் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது.
இந்த நூல் வெளிவந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவில் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு,புதிய தொழிலாளி விவசாயிகளின் வர்க்க அரசு ஆட்சிக்கு வந்தது.அந்த அரசுக்கு லெனின் தலைமை ஏற்றார்.இந்த காலங்கள் முழுவதும் புரட்சிக்கான தயாரிப்பு பணிகளும் போராட்டங்களும் நிறைந்த காலமாக இருந்த நிலையில் ஒரு தத்துவ நூல் எழுத வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?அதிலும் புரட்சியின் தலைமையில் நின்று, முழுமூச்சாக செயல்பட்டு வந்த லெனின், அந்தப் பணியை ஏன் மேற்கொண்டார்?
அன்றைய காலக்கட்டத்தில் எழுந்த தத்துவப் பிரச்னைகள் புரட்சி வெற்றியோடு இணைந்த பிரச்சினைகள் என்று லெனின் கருதினார். தத்துவப் பிரச்சினைகளில் அக்கறை செலுத்தாமல் அவற்றைக் கைவிட்டால்,புரட்சி முன்னேற்றம் அடையாது என்ற ஆபத்தினை அவர் உணர்ந்ததால்தான் இந்தக் கடினமான பணியில் ஈடுபட்டார்.
மார்க்சிய நோக்கிலான அவரது தீர்க்கதரிசனம் பின்னர் உண்மையானது.தத்துவத் துறையில் மார்க்சிய தத்துவத்தை திரித்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தோரின் கருத்து நிலைபாடுகளோடு இந்த நூல் வலிமையான கருத்து யுத்தத்தை நடத்தி, அந்தக் கருத்துக்களை முறியடித்தது. அதன் விளைவாக ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் மார்க்சிய தத்துவத்தின் உயிர்நாடியான இயக்கவியல் பொருள் முதல்வாதத்தை இறுகப் பற்றிகொண்டு புரட்சியை நோக்கி முன்னேறியது.
இலக்கு 50 இணைய இதழ் பிடிஎப் வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக்கொள்ளுங்கள் தோழர்களே
No comments:
Post a Comment