மார்க்சியத்தை மறுத்துவிட்டால் நீங்கள் கற்பனைவாதிதான் கருத்துமுதல்வாதிதான் ஆம் ஆத்திகவாதிதான் அவன் கடவுள்தான் உலகை படைத்தது என்கிறான் அதேபோல் ஜாதியை பார்பாரனன்தான் படைத்தான் என்கின்றீர்கள். அவனுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு சொல்லுங்க? மனிதகுல வளர்ச்சியின் அடிபடையை ஏற்க மறுக்கும் சமுக மாற்றம் எப்படி புரிந்துக் கொள்ள போகிறீர்? ஜாதியை எப்படி புரிந்துக் கொள்ள போகிறீர்?
சமூக வளர்ச்சி போக்கில் தொழிற்பிரிவினையும் அரசு உருவாக்கத்தில் சுரண்டலுகேற்ப வர்க்க பேதமும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தொழிலே ஜாதியாகவும், ஜாதியே வர்க்கமாகவும் செயல்பட்டது. இந்த சமூக பிரிவினை நீண்டகால வரலாற்றில் உலகில் பலப்பகுதியில் இருந்தவையே. ஆனால் அங்கெல்லாம் ஏற்பட்ட வளர்ச்சி தேவையை ஒட்டி இந்த பிரிவினைகள் ஒழிக்கப்பட்டது ஜப்பானில் 1945 க்கு பிறகு சட்டபூர்வமாக்கப்பட்டு ஒழிக்கப்ப்ட்டுள்ளது.
இந்திய போன்ற நாட்டில் ஜாதி இருப்பிற்கு பெரும் காரணங்கள் உள்ளது அதனை பற்றி விரிவாக பேசுவோம். இப்பொழுது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஜாதியானது தொழிலாக வளர்ந்துள்ளதை சங்க நூல்களில் காணலாம் அவை அவர்களுக்கு ஜாதி எனும் கோட்பாட்டில் கோர்க்கும் பணியை கி.மு. 2 லிருந்து கி.பி 2க்குள் நடைந்தேறியுள்ளது. அவைதான் ஜாதியை கட்டிக்காக்கும் பணியை அரசனுக்கும் அதனை புனிதப்படுத்தி கோட்பாடு உருவாக்கிய பணி சனாதன மதம் பார்ப்பனியம்தான். ஆக சமூகத்தில் இருந்த நடைமுறைக்கு கோட்பாட்டை வழங்கியது. அவை என்ன தேவைக்கு உருவானதோ அந்த தேவை இல்லாதொழியும் பொழுது அவையும் இல்லாமல் போகும் ஆக ஜாதியின் தோற்றம் வளர்ச்சி இன்றைய இருப்பை புரிந்துகொள்ளும் திறன் உள்ளவர்களே அந்தளவு சிந்திக்க முடியும். தொடர்ந்து விவாதிப்போம்...
மேலும் விவாதத்தை புரிந்துக் கொள்ள வாசியுங்கள் தோழர்களே.
Palani Chinnasamy சிறப்பு! சாதி.. ஆரியர்கள் வருகைக்கு பின்னர் இந்தியா என்ற நிலப்பரப்பு வரையறுக்கப்படாத நிலப்பகுதிகளில் எங்கெல்லாம் அவர்கள் மக்களை கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் அடிமை படுத்திய பின்னர் அதை தக்க வைக்க சாதி பிரிவுகளையும் அவர்களுக்கு வேலைபிரிவினைகளையும் வரையறுக்கப்பட்டன!
இதை தனக்கு அடிமையான சத்திரியர்களான மன்னர்கள் மூலம் சமூகத்தில் நிலைபெறச் செய்தார்கள்!
இன்றைக்கும் சாதி நிலைபெற்று கோலோச்சுகிறது!
காரணம் பார்ப்பனியம் தனது மேலாதிக்கத்தை (அது மன்னராட்சி ஒழிந்து ஜனநாயகத்தில் மக்கள் இருந்தாலும் கூட) பார்ப்பனீயம் சாதி அமைப்பு முறை சிதிலமடையாமல் பார்த்து கொள்கிறது!
இதற்கு இடையில் பிராமணர்களுக்கு அடிமையான சத்திரியர் வைசியர் சூத்திரர்கள் பிராமணர்களுக்கு அடிமையாக இருப்பதை புனிதமாக கருதுவது டன் தனது சாதி மனநிலையை தக்க வைத்து கொள்ள தனது அரசியல் பொருளாதார பண்பாடு வளர்ச்சிக்காக ஒடுக்கப்பட்ட மக்களிடம் அதை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்!
பார்ப்பனீய த்தை வீழ்த்த இடைவிடாத போராட்டத்தை மக்கள் நடத்தாதவரை அதை பின்னுக்கு தள்ளுவது என்பது எளிதான காரியமல்ல! ஆக சாதிக்கெதிரான போராட்டமும் பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கான போராட்டமும் ஒரு சேர நடத்த வேண்டிய அவசியம் உள்ளது!
மாறாக சாதி இல்லை அது பிரச்சினை இல்லை என்று நீங்கள் சொல்வீர்களனால் 1000 வருடங்கள் ஆனாலும் வர்க்க போராட்டம் இந்தியாவில் சாத்தியம் இல்லை!
மறுத்து சொல்வீர்களனால் விவாதிப்போம்!
Palani Chinnasamy
Tamil Selvan மார்க்சியம் வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற ஆயுதத்தை கொண்டு சமூகத்தை ஆய்வு செய்கிறது அதன் அடிப்படையில் சமூகம் வர்கங்களாக பிரிவதும் அதன் தொடர்ச்சியாக வர்க்க ஒடுக்குமுறையையும் போதிக்கிறது. உலகில் தோன்றிய எல்லா சமூகங்களுக்கும் இவைதான் இதில் இந்தியா வேறுபட்டவை அல்ல தோழர் மேலும் ஆரியர்கள்தான் ஜாதியை தோற்றுவித்தார்கள் என்ற உங்களின் வாதத்தை நேரடியாக மறுக்கிறேன். இலங்கையில் ஜாதி உள்ளது ஆனால் ஆரியர்கள் இல்லை ஜப்பானில் ஜாதி இருந்தாது அங்கே பார்பனர்கள் இல்லை ஏன் தெங்கிழக்கு ஆசிய எங்கும் ஜாதி இருந்தாது அங்கெல்லாம் நீங்கள் பேசும் பார்ப்பனர்கள் ஆம் ஆரியர்களின் இருப்பு தென்பட்வில்லை தோழர்? சற்று உங்களின் புரிதலிலிருந்து தொடருங்கள். பார்ப்பனர்களின் பணி என்பது தொழிற்ப்பிரிவினையால் பிரிந்து கிடந்த மக்களை ஜாதி எனும் கோட்பாட்டால் பிரித்து வைத்த வேலையை செய்தான் அதற்காக ஜாதியையே அவந்தான் உருவாக்கினான் என்பது கடவுள்தான் உலகை படைத்தான் என்ற கருத்துமுதல்வாத குப்பையை போன்றதே சமூக இயக்கத்தை புரிந்துக்கொள்ளாதவையே... தொடரும்
Tamil Selvan
Palani Chinnasamy இலங்கையில் சாதி உள்ளது ஆரியர்கள் இல்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? ஒரியா விலிருந்து மன்னர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கிறார்கள்! அங்கு அவர்கள் பார்ப்பனர்கள் என்ற பெயரில் இல்லை! ஜெயவர்த்தனே/ சந்திரிகா குமாரதுங்க/ அனில் விக்ரமசிங்க/ இராசபட்சே உள்ளிட்ட அனைவரும் ஆரியர்கள் எங்கள் மூதாதையர்கள் என்றும் எங்கள் மூலம் ஒரிசா என்றும் இன்றும் பெருமை பேசி வருகின்றனர்!
அதே... பார்ப்பனர்கள் அடுத்து தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணம் வடகிழக்கு பகுதி தமிழர்கள் சாதியை தாங்கி கொண்டு இலங்கைக்கு வருகின்றனர்! இது... நடக்கின்றது! புத்தமதத்தினரில் பலபேர் இந்தியாவிலிருந்து சென்றதால் சாதி நிலை கொள்கிறது விரிவடைகிறது. முதலில் சாதி உருவாக்கம் பார்ப்பனர்கள் உருவாக்கியது என்பதற்கு ஆயிரம் ஆவணங்கள் உள்ளன!
மநுதர்மத்தில் சாதி... சாதி க்குள் சாதி/ தொழிற் பிரிவினை தீண்டாமை பிராமணர்கள் எத்தகையவர்கள்! அவர்களுக்கு சலுகைகள் /உரிமைகள் மற்றவர்கள் அவர்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டிய அவசியம் குறித்து நிறையவே இருக்கின்றன
Palani Chinnasamy
Tamil Selvan மார்க்சியம் என்பது நாம் வாழும் உலகையும், அதன் அங்கமான மானுட சமூகத்தையும் குறித்த ஒருபொதுவான கோட்பாடாகும், அல்லது சித்தாந்தமாகும். இந்த சித்தாந்தத்திற்கு அடிப்படை இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவமாகும். மார்க்சிய சித்தாந்தமானது மனித சமூகம் என்றால் என்ன? அது ஏன் மாறுகிறது? இதற்கு மேலும் என்னென்னமாற்றங்கள் மனிதகுலத்திற்கு ஏற்படப்போகிறது என்பதை தொடர்ந்து கண்டறிவதற்கு பயன்படும் சித்தாந்தமாகும். இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் தற்செயலானவையல்ல. அவைசிலநுண்ணியவிதிகளின் அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இயற்கை பற்றிய விஞ்ஞானங்கள் நமக்கு தெளிவுப் படுத்துகிறது. அது போலவே சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும் சில நூண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என்றும் அந்த பொதுவான விதிகளை மார்க்சியம் கண்டறிந்து சமூகத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு முன்னால் வைத்துள்ளது. சமூக மாற்றத்திற்கான பொதுவான காரணம் என்ன? எந்த அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்ற பொதுஉண்மையை, பொதுவான வழிகாட்டு தலையை,பொதுவானகண்ணோட்டத்தைமார்க்சியம்வழங்குகிறது. தொடரும்...
Palani Chinnasamy
Tamil Selvan ஏனென்றால் இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால் தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும், அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது ,மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல்பாடுகளின் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கியமான பங்கிருக்கிறது. ஆகவேதான் சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலை, அவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. மனிதசமூகம் உயிர்வாழ மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமானால், அதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடவேண்டும். ஆகவே மனித சமூகத்தின் வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு மார்க்சிய சமூகவிஞ்ஞானம் போதிக்கிறது.
மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடும்போது உற்பத்திச் சாதனங்களின் துணைகொண்டே உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். ஆரம்பகாலங்களில் இந்த உற்பத்திச் சாதனங்கள் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருந்தது. அதனால் மக்களிடையே வர்க்கப்பிரிவுகளோ ஏற்றத்தாழ்வுகளோ இல்லை. உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் பல்வேறுவேலைப் பிரிவினைகள் தோன்றியது. அதன் தொடர்ச்சியாக மனிதர்களிடையே உடமையுள்ளவர்கள் மற்றும் உடமையற்றவர்கள் உருவாகிறார்கள் மேலும் சமூகத்தின் தேவைக்கு அதிகமான உற்பத்தி நடந்தது. இந்த உபரியையும் உற்பத்திச் சாதனங்களையும் திறமையானவர்கள் தனியுடமையாக கைப்பற்றிக் கொண்டு பலரை உடமையற்றவர்களாகமாற்றி அவர்களை சுரண்டி வாழ ஆரம்பித்தனர். இப்படித்தான் வர்க்கங்கள் தோன்றின. இதன் பின்பு சமூக உற்பத்தியானது மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இந்த வர்க்கங்களுக்கு இடையிலான உறவின் அடிப்படையிலேயே நடக்கிறது. இதனைத்தான் உற்பத்தி உறவு என்கிறோம். இந்த உற்பத்தி உறவுதான் சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது. இதனை ஆய்வு செய்து மாற்றியமைப்பதன் மூலமே சமூகத்தை மாற்றியமைக்க முடியும்.
வர்க்க சமூகத்தில் பல்வேறு உடமை வர்க்கப்பிரிவுகள் இருந்தாலும் எந்த வர்க்கங்களின் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கிறதோ அந்த வர்க்கங்கள்தான் அந்த சமூகத்தின் ஆளும் வர்க்கமாகும். இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே சமூகத்திலுள்ள பிறஅனைத்து வர்க்கங்களையும் கட்டுப்படுத்தி சுரண்டி உற்பத்தியை நடத்துகிறது. இந்த வகையில் தனது சுரண்டலை நியாயப்படுத்தவும் தொடர்ந்து சுரண்டலை நடத்துவதற்கான கருத்துக்களை உருவாக்கி அதனை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கான அரசியல் கட்சிகள் மற்றும் சாதி மத நிறுவனங்களையும் கலை இலக்கியங்களையும் மற்றும் வன்முறை கருவியான அரசையும் உருவாக்குகிறார்கள். இவ்வாறு அடித்தளத்திலுள்ள தனது உற்பத்தி உறவை பாதுகாக்கவும் பலப்படுத்தவுமான இந்த அமைப்புகளையும் சித்தாந்த நிறுவனங்களையும் மேல்தளம் என்கிறோம். இதனை வேறொருதளத்தில் விவாதிப்போம். இப்பொழுது மேலும் சுருக்கமாக மனித சமூகம் அறிவோம்.
Tamil Selvan
Palani Chinnasamy மார்க்சிய தத்துவமும் கோட்பாடுகள் குறித்து இங்கே விவாதம் இல்லை!
இந்தியாவில் சாதிகள் குறித்து மார்க்சியர்கள் என்று சொல்லி கொள்வோர்கள் பார்வை என்ன?
அனைத்து சாதிகளையும் நானே படைத்தேன்.. அதை நானே,.. நினைத்தாலும் அழிக்க முடியாது என்று பகவான் பகவத் கீதையில் சொல்லி இருக்கிறார் (அத்தியாயம் 4-13)
ஒரு இந்திய பெரும்பான்மை மதத்தின் புனித நூல் என்று சொல்லக்கூடிய நிறுவப்பட்ட.. மதமே... அதாவது இந்துமதம்.. அனைத்து சாதிகளையும் நானே படைத்தேன் என்று சொல்கிறது என்று சொன்னால்.. நீங்கள் பிராமணர்கள் இந்தியாவில் சாதி படைக்கப்படவில்லை என்று சொல்கிறீர்கள்!
மேலும் மார்க்சிய உற்பத்தி உற்பத்தி உறவுகள் குறித்து இதனோடு விவாதிக்கிறீர்கள்!
எந்த மதத்திலாவது சாதியை மேன்மைபடுத்தும் புனிதத்துவப்படுத்தும் புனிதங்கள் ஏதேனும் உண்டா?
Palani Chinnasamy
Tamil Selvan மார்க்சியத்தை மறுத்துவிட்டால் நீங்கள் கற்பனைவாதிகள் ஆத்திகவாதிகள் ஆக உங்களுக்கான பதில் தேடி பயனே இல்லை. ஏனென்றால் கடவுள்தான் உலகத்தை படைத்தான் என்கின்றனர் அதேபோல் ஜாதியை பார்பாரனன்தான் படைத்தான் என்கின்றீர். என்ன வேறுபாடு அவனுக்கும் உங்களுக்கும் சொல்லுங்க?
சமூக வளர்ச்சி போக்கில் தொழிற்பிரிவினையும் அரசு உருவாக்கத்தில் சுரண்டலுகேற்ப வர்க்க பேதமும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தொழிலே ஜாதியாகவும், ஜாதியே வர்க்கமாகவும் செயல்பட்டது. ஜாதியை கட்டிக்காக்கும் பணியை அரசனுக்கும் அதனை புனிதப்படுத்தி கோட்பாடு உருவாக்கிய பணியை சனாதன மத பார்ப்பனியம்தான். ஆக சமூகத்தில் இருந்த நடைமுறைக்கு கோட்பாட்டை வழங்கியது. அவை என்ன தேவைக்கு உருவானதோ அந்த தேவை இல்லாதொழியும் பொழுது அவையும் இல்லாமல் போகும் ஆக ஜாதியின் தோற்றம் வளர்ச்சி இன்றைய இருப்பை புரிந்துகொள்ளும் திறன் உள்ளவர்களே அந்தளவு சிந்திக்க முடியும்.
No comments:
Post a Comment