இலக்கு 49 இணைய் இதழ் PDF வடிவில்

இலக்கு இதழ் தொடங்கி இந்த இதழோடு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து மூன்றாம் இதழாக இவை வெளிவருகிறது. இதுவரை எங்கள் பணி நாங்கள் தொடங்கிய பொழுது வைத்த அதே தலையங்கத்தை முன் வைத்தே தொடர்ந்து எங்கள் முயற்சி இருக்கும்.

மனிதகுல வரலாற்றில் மனித சமூகம் வளர்வதற்கான அதன் வளர்ச்சி விதிகளை கண்டுபிடித்து உழைக்கும் மக்களுக்கு வழங்கியவர்கள் காரல்மார்க்சும், எங்கெல்சும் ஆவார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட தத்துவத்தின் மூலம் சமூக வளர்ச்சிக்கு முரணின்றி பாடுபடக்கூடிய வர்க்கம் பாட்டாளி வர்க்கம் என்றும் அந்த வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டங்களின் மூலமே சமூகம் வளர்ச்சியடையும் என்று தெளிவாக விஞ்ஞானப் பூர்வமாக ஒரு சித்தாந்தத்தை முன்வைத்தார்கள்.

இந்த பொதுவான தத்துவத்தை உள்வாங்கி ரஷ்ய சமூகத்தை இந்த கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்து ரஷ்யப் புரட்சிக்கான சித்தாந்தத்தை லெனின் தலைமையிலான தொழிலாளர் கட்சி உருவாக்கி அந்த சித்தாந்தத்தை அதாவது கட்சியின் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியை கட்டி, ரஷ்ய தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அணிதிரட்டி புரட்சிகரமான போராட்டங்களை நடத்தியதன் மூலம் அங்கே தொழிலாளி வர்க்கத்தின் ஜனநாயக ஆட்சி நிறுவப்பட்டது.

இந்தப் புரட்சியால் ஈர்க்கப்பட்டு உலகில் பல நாடுகளிலும் கம்யூனிஸ்டு கட்சிகள் கட்டப்பட்டது. இந்தியாவிலும் கம்யூனிஸ்டு கட்சி கட்டப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாளர்களும் விவசாயிகளும் திரட்டப்பட்டு பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. பிரிட்டீஷ் ஆட்சியின் பயங்கரவாதத்தால் தொழிலாளர்களும் விவசாயிகளும் கம்யூனிஸ்டுகளும் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு பல தியாகங்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி செய்தபோதும் அதனால் ரஷ்ய, சீனக் கம்யூனிஸ்டுகள் போல் வெற்றியடைய முடியவில்லை.

அதற்கு முதன்மையான காரணம் மார்க்சிய லெனினிய தத்துவ வெளிச்சத்தில் இந்திய சமூகத்தை பருண்மையாக ஆய்வு செய்து இந்திய சுதந்திரத்திற்கான ஒரு விஞ்ஞானப்பூர்வமான சித்தாந்தத்தை உருவாக்க (வேலைத்திட்டத்தை) இந்திய பொதுவுடமை இயக்கம் தவறியதுதான். அத்தகைய திட்டத்தை உருவாக்க வேண்டுமானால் பொதுவுடமையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் ஒரு பொது தளத்தில் விவாதித்து ரஷ்ய கம்யூனிஸ்டுகள் செய்தது போன்ற முயற்சியில் ஈடுபடுவதன் மூலமே அதனை சாதிக்க முடியும். அதற்கு நாம் அனைவரும் விவாதிப்பதற்கு ஒரு பத்திரிக்கை தேவை. இந்த தேவையை இலக்கு இணையதள பத்திரிக்கை மூலம் துவங்க வேண்டும் என்ற நிலையிலிருந்தே இலக்கு கொண்டுவரப்படுகிறது. ஆம் இன்றும் கொண்டுவரப்படுகிறது.

ஆக தோழமைகளே,

இவை எங்களுக்கான பணி மட்டும் அல்ல, சமூக மாற்றத்தை நினைக்கும் உழைக்கும் சுரண்டப்பட்டு கிடக்கும் கோடான கோடி மக்களின் விடுதலைக்கான தத்துவம் மார்க்சிய- லெனினியம் மட்டுமே.

ஆக அதற்கான பணி என்பது இங்குள்ள மார்க்சியம் அல்லாத போக்குகளை அம்பலப்டுத்தி அப்புறப்படுத்துவதோடு சரியான மார்க்சிய - லெனினியம் என்னவென்றும் சொல்ல வேண்டுமல்லவா? அவையின்றி வெற்று விமர்சனம் பயனளிக்காது அல்லவா?

இதற்கான பணி மார்க்சிய -லெனினியத்தை உள்வாங்கியுள்ளவர்கள் அனைவரும் அறிந்ததே.

ஆக அதற்கு விவாதகளமாக உங்களின் கருத்துகளை முன் வைக்க சரியான வற்றை முன் வைக்க அனைவரையும் ஆம் இடதுசாரிகள் கம்யூனிஸ்ட்டுகள் அவர்கள் சார்ந்த கட்சி அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

நமது ஆசான்களின் வழி நின்று உண்மையாலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான பணியாற்ற.

தத்துவ போராட்டமும் ஒரு பணி என்பதனையும் ஏற்க வேண்டும் அதற்கு அழைப்பு விடுக்கிறோம் வாருங்கள் விவாதிக்க.

தத்துவ போராட்டம் அரசியல் போராட்டம் வழியில் சமூக மாற்றதிற்கான வழியை தேடுவோம் தோழர்களே.

ஜீன் 2024

தோழமையுடன்

ஆசிரியர் குழு


இந்த இதழை PDF வடிவில் நீங்கள் பெற்றுக் கொள்ள இந்த இணைப்பை அழுத்தவும் 

இதை எழுத்து வடிவில் குறிபிட்ட இணைய பகுதிகளில் உள்ளன. நூல் வடிவில் பிடிஎப்பாக உள்ளன. தேவைபடும் தோழர்கள் அந்த குறிப்பிட்ட கட்டுரைகளை குறிப்பிட்ட பகுதியில் சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் தோழர்களே.

மேலும் இதுவரை வெளியான இணைய இதழ்களுக்கான லிங்க் PDF வடிவில் உள்ளன தேவைபடும் இதழ்களை வாசிக்க அந்த பகுதியை அழுத்தி நீங்கள் அந்த இதழை பெற்றுக் கொள்ள முடியும்.

இலக்கு இதழ் PDF வடிவில்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்