1. தீவட்டிபட்டி கிராமத்தில் தலித் சாதியினரும் தலித்தல்லாத பிற சாதியினரும் ஒற்றுமையாககோவில் திருவிழாவில் பங்கேற்று வந்தனர். இந்தஒற்றுமைக்கான காரணம் என்ன?
2. உழைக்கும் மக்களுக்கு இடையில் இயல்பாக சாதிய உணர்வின் அடிப்படையில் பகைஇருந்திருக்குமானால்
இந்த ஒற்றுமை சாத்தியப்பட்டிருக்குமா? ஆகவே உழைக்கும் மக்களுக்குஇடையில் இயல்பாக சாதிய வெறுப்பு இல்லை என்பதே கடந்த
கால நடைமுறைஉண்மையாகும்.
3. சமீபத்தில்தான் இந்த ஊரில் உள்ள மக்களிடையே சாதியப் பகைமை தோன்றியுள்ளது.
இந்தப் பகைமைக்கான காரணம் என்ன? இந்த மக்களை தூண்டிவிட்டதாலேயே இந்தப்பகைமை உருவாகி இருக்கிறது. இந்தப்
பகையைத் தூண்டியவர்களை அடையாளம்காண்பதற்கான முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை என்றே
கருத வேண்டியுள்ளது. அந்த சமூக
விரோதிகளை அம்பலப்படுத்துவதற்கு
யாரும் தயாரில்லை. மாறாக அந்த சமூக விரோதிகளைபாதுகாக்க விரும்புபவர்களே மக்களின்
நண்பர்கள் போல் வேடமணிந்து வருகிறார்கள் என்றுகருதத் தோன்றுகிறது.
4. தலித் மக்களுக்குத்தான் அந்த ஊர் திருவிழாவில் முதல் மரியாதையை இவ்வளவு காலம்கொடுத்து
வந்தார்கள். இதற்கு காரணம் என்ன?
5. கோவில் திருவிழாவுக்காக தலித் மக்கள் வரிகொடுப்பதில்லை என்று சொல்லப்படுகிறதுஅதற்கு
என்ன காரணம் விளக்கப்படவில்லையே ஏன்? கோவில் திருவிழாக்களில் தலித் மக்கள்சில பணிகளைச் செய்வார்கள், மேளம் வாசிப்பது, போன்ற
செயல்களுக்கு அவர்கள் பணம்வாங்கிக்கொண்டு இந்தப் பணியை செய்வார்களா? அல்லது பணம் வாங்காமல் செய்வார்களா?
என்பதைப் பற்றி இவர்கள்
விசாரிக்கவில்லையே ஏன்?
6. தலித் மக்களுக்கு கங்கணம் கட்டுவதை இந்த ஆண்டு பூசாரியால் மறுக்கப்பட்டது
என்றும்இந்த ஆண்டு தலித் மக்களை கோவில் விழாவிலிருந்து புறக்கணிக்க வேண்டும்
என்றும் பிறசாதி மக்கள் ஒன்றுகூடி முடிவு செய்ததாக அறிக்கை வாசிக்கும் இவர்கள், தலித் சாதி மக்களுக்கு
எதிராக பிற சாதி மக்கள்
அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டதாக அறிவித்து பிற சாதி மக்கள்அனைவரையும் தலித் சாதி
மக்களுக்கு எதிரானவர்ளாகவே சித்தரிக்கிறார்கள். அப்படியானால்இதுவரை இரு சாதி
மக்களும் ஒன்றுபட்டு இருந்தனரே, பிற சாதி மக்கள் அனைவரும் தலித்மக்களுக்கு எதிரானவர்களாக இருந்திருந்தால் இந்த
ஒற்று நடந்திருக்குமா? என்ற
கேள்விக்கு
இவர்கள் பதில் தேடுவதற்கு முயற்சி செய்யாமல் பிற சாதி மக்கள் அனைவரின் மீதும் குற்றம்சுமத்துவதன் நோக்கம் என்ன? உழைக்கும் மக்களிடமுள்ள ஒற்றுமையை ஆளும்வர்க்கங்களைப் போலவே இவர்களும் சீர்குழைக்கவே விரும்புகிறார்கள் என்றே கருதவேண்டியுள்ளது..இதுவரை பிற சாதி மக்கள் தலித் சாதி மக்களோடு ஒன்றுபட்டு நின்றுவிட்டுதிடீரென்று மாறியதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்யவில்லையே ஏன்?
இவ்வாறு திடீரென்று மக்களிடம் மாறுதல் ஏற்படுவதற்கு காரணமானவர்கள் அதற்கானநீண்டகால முயற்சி இல்லாமல் இது சாத்தியமே இல்லை என்பதை சிந்தித்து அத்தகையமுயற்சியில் ஈடுபட்டவர்களை இனம்காண முயற்சி செயாயாததற்கு காரணம் என்ன? இவர்கள்உண்மையை அறியும் நோக்கம் கொண்டவர்களா? அல்லது இவர்களிடத்திலுள்ள தலித்தியம்பற்றிய கருத்தை நியாயப்படுத்தும் நோக்கம் கொண்டவர்களா?
7. தலித் மக்களின் பல்வேறு வகையான கோவில் வழிபாட்டை பிற சாதி மக்கள் தடுத்தனர்என்று அறிக்கை கூறுகிறது. இத்தகைய தடையை சில குறிப்பிட்ட நபர்களை குறிப்பிட்டுசாதிஆதிக்கவாதிகள் என்று இவர்களுக்கு அடைமொழி கொடுக்கிறது இந்த அறிக்கை. பிறசாதி மக்களுக்கும் இந்த சாதி ஆதிக்கவாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை இந்தஅறிக்கை அலசி ஆராயவில்லையே ஏன்? போகிற போக்கில் இந்த சாதி ஆதிக்கவாதிகளை இந்த அறிக்கை குறிப்பிட்டுவிட்டு செல்வதன் நோக்கம் என்ன? இந்த சாதி ஆதிக்கவாதிகள்தான் பிற சாதி மக்களிடம் சாதிய உணர்வை தூண்டிவிட்டு சாதிக்கலவரத்துக்கு காரணமானவர்கள் என்பதை ஆய்வு செய்வதை மறுக்கும் இந்த அறிக்கையின்நோக்கம் இந்த சாதி ஆதிக்கவாதிகளை அம்பலப்படுத்தி, இந்த சாதி ஆதிக்கவாதிகள்தான் தலித்உழைக்கும் மக்களுக்கும் பிற சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கும் பொதுவான எதிரிகள்என்பதை அம்பலப்படுத்த விரும்பவில்லை, அல்லது இரு சாதி மக்களுக்கும் பொதுவானஎதிரிகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்ட தவறி இருப்பதற்கு என்ன காரணம்?. இரு சாதியைச்சேர்ந்த மக்களுக்கும் பொதுவான எதிரியைஅம்பலப்படுத்தாமல் மூடிமறைப்பதுதான் இந்தஅறிக்கையின் நோக்கமாக இருக்கிறது என்று கருத தோன்றுகிறது.
9. சமாதான பேச்சுவார்த்தையில் அதிமுக கட்சியைச் சேர்ந்த தலித் சாதியைச் சேர்ந்தவர்இதுவரை நாம் ஒற்றுமையாகத்தானே இருந்தோம் இப்போது ஏன் பிரச்சனை வருகிறது என்றுகேள்வி எழுப்பியதாக கூறும் அறிக்கையானது இப்போது இந்தப் பிரச்சனையைகிளப்புபவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதற்கான முயற்சியை அந்த அதிமுக பிரமுகர்செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டவில்லையே ஏன்? அதற்கான முயற்சியிலும் இந்தஅறிக்கையை தயாரித்தவர்களும் ஈடுபடவில்லையே ஏன்? அவர்கள் யார் என்ற உண்மையைமூடிமறைப்பதுதான் இந்த அறிக்கையை தயாரித்தவர்களின் நோக்கம் என்று எண்ணத்தோன்றுகிறது.
10. கலவரம் நடந்தபோது போலீஸ் தடியடி நடத்தியதாகவும் தலித் சாதி மக்கள் வசிக்கும்குடியிருப்பு பகுதியால் போலீஸ் சென்று தலித் சாதி மக்களைத் தாக்கியதாக அறிக்கைகூறுகிறது. இதன் மூலம் காவல்துறையை பிற சாதியைச் சேர்ந்தவர்களின் நண்பர்களாகஅறிக்கை சித்தரிக்கிறது. ஆனால் காவல்துறை உட்பட அனைத்து அரசு நிறுவனங்களும்உழைக்கும் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி அவர்களுக்கு இடையில் மோதலைஏற்படுத்தும் நோக்கிலேயே செயல்படும் என்பதை இந்த அறிக்கை மூடிமறைக்கிறதே ஏன்?
சாதிய மோதல்களுக்கு உழைக்கும்
மக்களே காரணம் என்ற கருத்தை விதைத்து தலித் மக்கள்அனைவரும் பிற சாதி மக்களை
எதிரிகளாகப் பார்க்க வேண்டும் அதேபோல் பிற சாதி மக்கள்அனைவரும் தலித் சாதி மக்கள்
அனைவரையும் எதிரிகளாகவே பார்க்க வேண்டும் என்ற தீயநோக்கம் கொண்டவர்களாகவே இந்த
அறிக்கையை தயாரித்தவர்கள் இருக்கிறார்கள் என்றுஎண்ணத் தோன்றுகிறது.
11. தலித் சாதி மக்கள் வாழும் பகுதிக்கு சென்று விசாரித்தபோது இதுவரை நாங்கள்ஒற்றுமையாகத்தான் இருந்தோம் என்றும் இப்போது பிற சாதியைச் சேர்ந்த இளைஞர்கள்கேவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்ததால்தான் பிரச்சனை எழுந்ததாகச் சொல்கிறார்கள் என்றுஅறிக்கை கூறுகிறது. மேலும் தலித் மக்களை சாதிப் பெயரை குறிப்பிட்டுஇழிவுபடுத்தியதாகவும் தலித் மக்கள் கூறியதாக இந்த அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் பிறசாதி இளைஞர்களின் நோக்கம் தலித் சாதி மக்களை இழிவுபடுத்துவதுதான் என்று அறிக்கைகூறுகிறது. இந்த சாதிப் பிரச்சனை தவிர வேறு ஏதாவது பிரச்சனைகள் உள்ளதா? என்றுகண்டறிவதற்கு இந்த அறிக்கை தயாரித்தவர்கள் முயற்சி செய்யவில்லையே ஏன்? ஏனென்றால்இந்தப் பிரச்சனையானது வெறுமனே சாதிப் பிரச்சனைதான் என்றும் இந்த சாதிப்பிரச்சனைக்கு காரணம் பிற சாதியைச் சேர்ந்த அனைத்து மக்களுமே என்ற தலித்தியவாதக்கருத்துக்கு வலு சேர்க்கும் நோக்கம் கொண்டவர்களாகவே இந்த அறிக்கையை தயாரித்தவர்கள்உள்ளார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
12. காவல்துறையானது தலித் மக்களை கடுமையாக தாக்கியது என்று அறிக்கை கூறுகிறது.
காவல்துறையின் இந்த
தாக்குதலுக்கான நோக்கத்தை இந்த அறிக்கை அம்பலப்படுத்தவில்லை.
அதற்கு காரணம் என்ன? இந்த காவல்துறையானது தலித் மக்களை மட்டும்தான் தாக்குகிறதா?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து சாதியைச்சேர்ந்த மக்களையும் தாக்கி துப்பாக்கி சூடு நடத்தியதே ஏன்? இந்த காவல்துறையானதுஉழைக்கும் மக்களுக்கு எதிராக ஆளும் சுரண்டும் வர்க்கத்தின் நலனுக்காகவே செயல்படுகிறதுஎன்ற உண்மையை இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் மூடிமறைத்துவிட்டுகாவல்துறையானது தலித் மக்களுக்கு மட்டும் எதிரானதாக காட்டுவதற்கு முயற்சி செய்வதுஏன்? காவல்துறையின் உண்மையான வர்க்கத் தன்மையை மூடிமறைக்கும் நோக்கம்கொண்டவர்களாகவே இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் உள்ளார்கள் என்றே கருதவேண்டியுள்ளது.
13.கிராம நிர்வாக அலுவலர் அவரின் பெயர் அம்பேத்கார் மாது, இந்தப் பெயரைக் கேட்டால்அவர் ஒரு தலித் சாதியைச் சேர்ந்தவர் என்று எண்ணத்
தோன்றுகிறது இவர் தலித் சாதிமக்களின் மீதே குற்றம் சுமத்தியுள்ளார். இவர் தலித்
சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவர்ஒரு அரசு அதிகாரியாக இருப்பதால் இந்த அரசின்
நோக்கங்களையே செயல்படுத்துவார் என்ற
கருத்தை முன்வைத்து இந்த அரசை அம்பலப்படுத்த இந்த அறிக்கை முயற்சி செய்யவில்லையேஏன்? ஏனென்றால் இந்த அறிக்கை தயாரித்தவர்களின் நோக்கம் இந்த சாதிக் கலவரத்துக்கும்இந்த அரசுக்கும் இடையிலான உறவு பற்றி அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்துவதற்கு இந்தஅறிக்கை தயாரித்தவர்கள் தயாரில்லை என்தையே எடுத்துக் காட்டுகிறது. இந்த சாதிக்கலவரங்களுக்கு முடிவுகட்டிட இந்த அரசை களைந்துவிட்டு உழைக்கும் மக்களுக்கான அரசைஉருவாக்குவது அனைத்து சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் கடமை என்பதைஉழைக்கும் மக்களுக்கு உணர்த்துவதற்கு இவர்கள் தயாரில்லை. இதன் மூலம் இந்த சாதிக்கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது இவர்களது நோக்கம் இல்லை. மாறாக எப்போதும்இதுபோன்ற சாதிக் கலவரங்கள் நடந்துகொண்டே இருக்கவேண்டும் அதன் மூலம் இவர்களதுபிழைப்பை ஓட்ட வேண்டும் என்றே இவர்கள் கருதுகிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது.
14. ராதாகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றஎண்.258/2024 கீழ்153B IPC மற்றும் பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்1989 3(1)(za)(C) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 10 பேர் மீதுபுகார் கூறப்பட்டுள்ளது. இவர்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவில் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். என்று அறிக்கை கூறுகிறது அதே சமயம் தலித் மக்கள் மீது தாக்குதல்நடத்திய சாதி இந்துக்களின் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கேட்டபொழுது,"யாரும் புகார் அளிக்கவில்லை என்று காவல்துறையினர் கூறியதாக முன்னுக்குப் பின்முரணாக அறிக்கை கூறுவது ஏன்?
15. சென்ற ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது சாதிப்பெருமை பேசும் பாடல்ஒலிபரப்பியதால் தகறாரு ஏற்பட்டதாக தெரிவிக்கும் அறிக்கையானு, இந்த ஆண்டிலும் தகறாருவரலாம் அதனை அடக்குவதற்கு போலீஸ் முயற்சி செய்யவில்லை என்றும் கூறும்அறிக்கையாது, இந்த ஓர் ஆண்டுக்குள் இந்தப் பிரச்சனையை அமைதியாக தீர்ப்பதற்கு இந்தசமூக சீர்திருத்தவாதிகள் எவரும் முயற்சி செய்யவில்லையே ஏன் என்ற கேள்வியைஎழுப்பவில்லையே ஏன்? இதுபோன்ற பிரச்சனைகள் வரும் போது கள ஆய்வு செய்பவர்கள்,அதனை அடிப்படையாகக் கொண்டு மக்களிடம் ஒற்றுமை ஏற்படுத்துவதற்கு முயற்சிசெய்யவில்லையே ஏன்? இத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்துவது அவசியம் என்றும் அதற்காகஎன்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த அறிக்கை பேசவில்லையே ஏன்? இந்த மக்களிடம்ஒற்றுமை ஏற்படுத்துவதன் மூலமே இது போன்ற கலவரங்கள் ஏற்படாது தடுக்க முடியும் என்றஉணர்வும் புரிதலும் இல்லாத இவர்கள் இந்த அறிக்கையை முன்வைப்பதன் நோக்கம் என்ன?
நிச்சயமாக இது போன்ற கலவரங்கள்
இனிமேல் நடக்கக் கூடாது என்பது இவர்களது நோக்கம்இல்லை. மாறாக இது போன்ற கலவரங்கள்
தொடர்ந்து நடக்க வேண்டும் உழைக்கும்மக்களுக்கு இடையை ஒற்றுமை எக்காரணத்தைக்
கொண்டும் வந்துவிடக் கூடாது என்பதேஇந்த அறிக்கை தயாரித்தவர்களின் நோக்கமாக
இருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது.
16. இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட கோவிலில், ஒரு குறிப்பிட்ட பிரிவினர், மற்றசமூக மக்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறிய பொழுது, வட்டாட்சியரும் காவல்ஆய்வாளரும் நடந்து கொண்ட முறை வியப்பளிக்கிறது. என்கிறது
இந்த அறிக்கை. இதன்மூலம் இந்த அறிக்கையை தயாரித்தவர்களுக்கு இந்த அரசைப் பற்றி
என்ன புரிதல் உள்ளது
என்பதை நாம் புரிந்துகொள்ள
முடியும். மேலும் இந்த அரசின் வர்க்க அடக்குமுறையை இந்தஅறிக்கையை தயாரித்தவர்கள்
மூடிமறைக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
17. இந்த கலவரத்தின் போது காவல்துறையின் நடவடிக்கையை பட்டியலிடும் அறிக்கையானதுஇந்தக்
காவல்துறையானது ஆளும் வர்க்கங்களின் நலன்காக்கும் இயந்திரம் என்றுஅம்பலப்படுத்தவே
இல்லையே ஏன்? அரசை அம்பலப்படுத்தினால் வர்க்க
அமைப்பை பற்றிபேச வேண்டிவரும். ஆகவே இவர்கள் வர்க்க சமூகத்தில் நடைபெறும் வர்க்கப்
போராட்டத்தை மறைத்துவிட்டு
இங்கு நடப்பது சாதிப் போராட்டமே என்று சித்தரித்து உழைக்கும் மக்களை வர்க்கப்
போராட்த்தில் ஈடுபடவிடாமல் திசைதிருப்பும் நோக்கம் கொண்டவர்களாகவேஇருக்கிறார்கள்
என்று எண்ணத் தோன்றுகிறது.
18. இறுதியாக கோவில் திருவிழாக்களில் ஏற்படும் சாதிய மோதல்களை தடுப்பதற்கு
அரசுக்குசில பரிந்துரை செய்துள்ளார்கள். எனினும் இந்த அரசானது இந்த பரிந்துரைகளை
ஏற்றுசெயல்படுமா? இந்த அரசு இதனை செய்யாது ஆகவே
இதுபோன்ற கலவரங்கள் வராமல்தடுப்பதற்கு உழைக்கும் மக்களின் கடமையை முன்வைத்து
உழைக்கும் வர்க்கத்துக்கு வழிகாட்டவில்லையே
ஏன்? இவர்களது நோக்கம் உழைக்கும்
மக்களுக்கு வழிகாட்டிஉழைக்கும் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதல்ல. மாறாக இவர்கள்
வழிபடும் அரசுக்குஆலோசனை செய்து இந்த அரசை பாதுகாப்பதுதான் இவர்களது நோக்கமாகும்.ஆகவே
இந்த அறிக்கை தயாரித்தவர்களின் நோக்கமானது தலித் மக்களுக்கு மட்டுமல்லாது
உழைக்கும் மக்கள் அனைவருக்கும்
எதிரானதே, துரோகமானதே என்பதைப் பற்றி
உழைக்கும்மக்கள் சிந்திக்க வேண்டும். மேலும் இந்த அரசுக்கும் ஆளும்
வர்க்கங்களுக்கும் இவர்கள்

No comments:
Post a Comment