சித்தாந்த போராட்டத்தின் அவசியம்-1

 

சித்தாந்த போராட்டத்தின் அவசியம்

லெனின் தனது நாட்டில் புரட்சிகர கம்யூனிஸ்ட்கட்சி உருவாக்கும் பொழுது இருந்த பல தடைகளான மார்க்சிய விரோதமான போக்குகளை அம்பலப்படுத்தி அவர்களை அப்புறப்படுத்தினார்.
அன்றிருந்த திருத்தல்வாத நிலைமைகளை அம்பலப் படுத்தியதோடு அல்லாமல் அவை புரட்சிக்கு பயனளிக்காது என்று தெளிவுபடுத்தினார்.
புரட்சியை நேசிப்பவர்களுக்கான போதனை அதற்கான புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி அது செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பதை மிகத் தெளிவாக அரிதியிட்டு குறிப்பிட்டு தெளிவுப்படுத்தினார் லெனின்.
அவர் போதித்த மார்க்சிய தத்துவத்தைதான் நாம் நடைமுறை தந்திரம் என்கிறோம். அதனை செயல்படுத்த வேண்டியவர்கள் கற்பதும் அதனை உழைக்கும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று செயல்படுத்தும் அதற்கான் பணியினையும் அதன் அவசியத்தையும் லெனின் வழிக்காட்டியுள்ளார்.
நமது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றை பார்த்தால் கட்சி கட்டப்பட்ட போதிலிருந்து ஆழ்ந்து கவனித்தால் ஒவ்வொரு பிளவுகளும் அடுத்து உடைவுகளும் ஒரு சிலரின் அமைப்பு பிரச்சினையாகவும் அந்த தனி நபர்களின் தவறுகளாக மட்டுமே சித்தரிக்கப்படுகிறது அந்த நபரில் ஏற்பட்டுள்ள தவறான போக்குகள் ஏற்பட்டதற்கான புறநிலையின் எதார்த்தம் மற்றும் அமைப்பு செய்ய வேண்டிய விமர்சனம் சுய விமர்சனம் எங்கேயும் பெரிதாகக் காணப்படவில்லை எனலாம்.
சி பி ஐ யிலிருந்து சிபிஎம் உருவாவனதும் அதன்பிறகு அவர்களுக்கான சித்தாந்த வழிகாட்டுதல் என்பது அவர்களின் எழுத்தும் நடைமுறையும் வேறாக உள்ளதை காணலாம். ஆனால் நடமுறையில் இரண்டு கட்சிகளும் பாராளுமன்றம் மூலமே சமூக மாற்றத்தை முன்வைத்தனர்.
ஆக இரண்டு கட்சியின் நடைமுறையும் தேர்தலுக்காக மக்களை தயார் செய்வது அதற்கான தொழிற்சங்கம் விவாசாய சங்கம் இத்தியாதி...
இதிலிருந்து வெளியேறிய நக்சல்வாரி எனும் சிபிஐ எம் எல் அமைப்பானது தன்னை ஒரு கட்சியாக அமைக்கும் பொழுது எவ்வித சித்தாந்த போராட்டத்தையும் இவர்களுக்கு எதிராக நடத்தவில்லை. இவர்களின் நடைமுறையை விமர்சித்து புரட்சிக்கான பாதை பாராளுமன்றத்துக்குள் அல்ல... இந்த சமூகத்தின் கொடுமைகளுக்கு காரணமான இந்த அமைப்புமுறையை மாற்ற வேண்டும் புரட்சியின் மூலம் என்றனர்.
அவர்களும் எவ்வித சித்தாந்த போரையும் நடத்தவில்லை. அதேபோல் லெனின் வழிகாட்டிய மூன்றாம் அகிலத்தை பற்றியோ; ஏன் மாவோ அன்று ரசிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடத்திக் கொண்டிருந்த சித்தாந்த போரைக் கூட கணக்கில் கொள்ளவில்லை என்பேன்.
இவர்களும் நடைமுறைக்கு போய்விட்டார்கள் பொது எதிரி யார் என்பதனையோ அல்லது சமூக மாற்றத்திற்கு யாரை அழித்தால் சமூகம் மாறும் என்பது பற்றியோ மார்க்சிய லெனினியத்தை அன்று அவர்கள் கற்றுதேறாமலே நடைமுறை என்று தனிநபர் அழித்தொழிப்பு மூலம் மக்கள் சக்தியை ஒன்றிணைக்கும் உத்தியை கையாண்டனர்.
இவை அன்று சீனா போன்ற ஒருமுகப்படுத்தப்பட்ட அரசு இல்லாத பகுதிக்கு சில பொருந்தலாம் ஆனால் இங்கோ ஒன்றுபட்ட பலம் வாய்ந்த இராணுவம் மற்றும் ஒற்றை அரசு உள்ள போது அதனை பற்றி தெளிவான முடிவெடுக்கவில்லை என்பேன்.
ஆக ஒவ்வொரு பிளவும் உடைவுகளும் நாம் கணக்கில் கொள்ளும் பொழுது அவர்கள் சித்தாந்தத் போராட்டத்தையும், விமர்சனம் சுயவிமர்சம் என்ற மார்க்சிய கோட்பாடுகளை யாரும் கையாளவே இல்லை.
ஆக பிரச்சினையின் ஆணி வேர் தனிநபர்கள் அல்ல சமூக முரண்பாட்டு விதிகளை நாம் அறிந்திருப்பதோடு அணிகளுக்கும் போதித்திருக்க வேண்டும். அவர்கள் பிரள்வுக்கு உட்படும் புறநிலையை எதார்த்தஓடு சித்தாந்த ஆய்வு செய்து அணிகளுக்கும் அந்த தனிநபரையும் அம்பலப்படுத்தும் பொழுது அணிகள் மத்தியில் சித்தாந்த தெளிவி பெற முடியும் அதேநேரத்தில் அந்த குழப்பவாதியின் தவறான போக்கும் அம்பலப்பட்டு போகும்.
இங்கு பேசப்படும் அ.மார்க்ஸோ அல்லது மற்றவர்களை அம்பலப்படுத்தும் அதேவேளையில் அவர்கள் இந்தநிலைக்கு காரணங்களையும் ஆராய வேண்டும் என்கிறேன் தோழர்களே.
YCL பற்றிய நேற்றைய விவாதம் அவர்களை மற்றும் குற்றவாளியாக்குவதற்கு முன் அவர்கள்போல் பலர் சித்தாந்த தெளிவில்லாமல் வெளியேறி எதைஎதையோ மார்க்சியம் என ஏமாற்றிக் கொண்டுள்ளனர்.
ஆக அவர்கள் வளர்ந்த அணி அவர்களை சரியாக வளர்க்காமைக்கு அணி(கட்சி) பொருப்பில்லையா தோழர்களே?
ஆக இதுபோன்ற பிளவுகளை தவிர்க்க சித்தாந்த பணியை ஆற்றுவதுடன் விமர்சனம் சுயவிமர்சனம் என்ற மார்க்சிய ஆயுதத்தையும் கையாளுவோம் தோழர்களே.
தொடர்ந்து விவாதிப்போம்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்