நாம் தத்துவமரபிலிருந்து மார்சியத்தை கண்டடைந்தது போலவே இன்றைய ஆட்சி அதிகாரம் தேர்தல் அரசு பற்றி ஒரு புரிதலுக்கு அதனை பற்றியும் தெளிவடைய தேடுவோம்.
இன்று பாராளுமன்ற தேர்தலை ஒட்டி மக்கள் மத்தியில் ஊடகங்களும் பல்வேறு வகைப்பட்ட முதலாளித்துவ அறிஞ்ஞர்கள் தொடங்கி முற்போக்கு ஏன் இடதுசாரி என்பவர்களும் இந்த தேர்தல் அரசியலை நுணுக்கமாக கவனித்து கருத்திடுவதும். பாராளுமன்ற ஜனநாயகத்தின் உண்மையான வடிவத்தை தவறியும் பேசாமல் இதில் உள்ள ஒருபிரிவினரின் வெற்றிக்கும் அவர்களும் இங்குள்ள ஒரு கட்சியின் நலனிலிருந்து பேசுவதும். வர்க்க சமூகத்தில் எந்த வர்க்கத்தின் தேவைக்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது? இதில் வெற்றி தோல்வியால் யாருக்கு பலன் என்பதை பேசாமல் பொதுவாக எல்லோருக்குமான தேர்தலாகவும் இந்த தேர்தல் மூலம் ஏதோ ஏழைஎளிய மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்பதும். மார்க்சியவாதிக்கும் ஒரு முதலாளித்துவ வாதிக்கும் உள்ள வேறுபாடை கூட எத்தனை பேர் தெரிந்து செயல்படுகிறார்கள் பார்ப்போம்.
யார்ஆட்சிக்கு வந்தாலும் தொடரும் முதலாளிதுவ வர்க்க சேவகம்தான் இந்த அரசே! அதனால் இதனின் அடிவேரை தேடி செல்வோமே!
அரசுஎங்கின்ற இந்த ஏற்பாடு (நீதி, நிர்வாகம், இராணுவம், போலிஸ்) ஏன் எதற்க்கு எப்போது தோன்றியது என்பதனை குறித்து அறிவோம்.
வரலாற்றுபக்கம் தேடினால், மனித இனம் தோன்றி 30 லட்சம் வருடங்கள் ஆகின்றன ஆனால் எழுத்து வடிவிலான வரலாறோ எழுதி சில ஆயிரம் வருடங்களே ஆகின்றன. மனிதன் முதன்முதலாக தோன்றியது ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்த காட்டுமிராண்டிக்கும் இடம்பெயர்ந்த பூர்வகுடிகளுக்கும் அரசுதேவைபடவில்லை தண்ணீரும் உணவும் தேடி குழுக்களாக கூட்டம் கூட்டமாக நடக்கதொடங்கிய ஆதிகால மனிதன் கூட்டாக வேட்டையாடி கூட்டமாக பகிர்ந்துண்டனர். அப்போது வேட்டையாடும் மிருகம் மற்றும் பழம் கிழங்கு ஒரே நாளில் தின்றுவிடவோ அல்லது அடுத்த நாள் தேவைக்கு சேமிக்கவோ தெரியாத அவர்கள் சமமாக பங்கிட்டுக் கொண்டனர், அங்கே தனி மனித வாழ்க்கையோ அல்லது தனி சொத்தோ பாதுகாக்கபடவில்லை அன்றோ எல்லாம் பொதுசொத்தாக இருந்தது எல்லோரும் சமமாக நடத்தபட்டனர் இதனை ஆதிகால பொதுவுடைமை சமூகம் என்பர்.
ஆணும்பெண்ணும் சேர்ந்தே வேட்டையாடினர், பிரசவகாலங்களில் பெண்கள் குகையில் தங்க நேரிடும் அப்போது மரம் செடி கொடிகளை கவனித்து பயிரிட கற்று தேர்ந்த மக்கள் விவசாயம் செய்ய தொடங்கினர். குகையைவிட்டு காட்டை நோக்கி நடந்த மனித சமூகம் காட்டை அழித்து விவசாயம் செய்யவும் அவன் ஆடு மாடுகளையும் வளர்க்கவும் தெரிந்து கொண்டான். அவன் விளைசலின் தானியங்கள் பண்டங்களையும் அளவுக்கு அதிகமாக, சேமிக்க தொடங்கி அதன் வழி அவையே “தனி சொத்தாகி” காட்டை வளைத்துப் போட்டு தனியுடைமையாக்குகிறான், இயற்கை கொடுத்த பொதுவுடமையை மனிதன் “தனியுடைமையாக்குகிறான்”. பொதுவுடைமை காலத்தில் எந்த மரத்திலும் கனிகாய்களை பறிக்கலாம் ஆனால் தனியுடைமை காலத்தில் சண்டையும் அடித்து கொள்ளவும் தொடங்கினர். சொத்துடையவன் சொத்தற்றவன் அதாவது உடைமையுள்ள ஒரு கூட்டம் உடைமை அற்ற பெரும் கூட்டம் உழைத்தால் மட்டும் வாழமுடியும் என்ற நிலை உருவானது.இரண்டுநேர் எதிரான சமூக பிரிவு அதாவது காடுகளையெல்லாம் ஒரு சிலர் வளைத்து போட மற்றவர்கள் உழைத்து வாட ஏங்கும் நிலை உருவானது. சொத்துள்ளவன் உடைமை கூட்டத்தினன்(வர்க்கம்), உடைமையற்ற உழைப்பாளர்கள் உழைக்கும் வர்க்கம்(கூட்டம்). ஒருவர் மற்றவருடன் மோதல் உருவானது அதனை நிர்வகிக்க நிர்வாகம், சட்டம், நீதி என்ற அரசின் தூண்கள் தோன்றின (இவை முழு வடிவமும் ஆரம்பத்தில் தோன்றவில்லை போலிஸ் இராணுவம் சிறைசாலை இவையெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியது. இவற்றின் சில வடிவங்கள் அந்த புரதான சமூகத்தில் பொதுவானதாக இறுத்திவைக்க சில நியதிகள் தோன்றின).
இப்படியாகதனிசொத்து என்ற ஒன்று வந்த பிறகுதான் அதைப் பாதுகாப்பதற்க்காக நீதி, நிர்வாகம், இராணுவம்,போலிஸ், ஜெயில் எல்லாம் வந்தது, சொத்தை பாதுகாக்க அதாவது உள்ளவனை இல்லாதவனிடமிருந்து பாதுகாக்கஉருவாக்க பட்டதே அரசு வடிவம்.
இதனை மார்க்சிய மொழியில் சொல்வதென்றால் ”வர்க்கப்பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆனதன் விளைவாய்த் தொன்றியதே அரசு” என்கிறார் லெனின். “அரசுஎன்பது ஒரு ஒழுங்கு செய்யப்பட்ட வன்முறைக் கருவி” என்றார் லெனின்.
ஆதிகாலத்தில்இயற்கையோடு போராடியபோது மனிதர்கள் எல்லோரும் ஆயுதங்களை வைத்திருந்தார்கள், தனியுடைமை (சொத்துடைமை) சமுக அரசு உருவாக்கியதுடன் செய்த முதல்வேலை பொது மக்களிடமிருந்த ஆயுதங்களை பறித்ததுதான். பின்னர் இராணுவமும் போலிசும் சீருடை அணிவித்து தன் சேவைக்கு (உடைமையாளர்களின் பணிக்குதான் என்பதனை அறியாமலே எதிரிக்காக அடியாளாக பல்லாயிரம் இராணுவத்தினர் மடிந்து கொண்டுள்ளனர்) வைத்து கொண்டது. ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்க்கான உறுப்பே அரசு.
இதனை தெளிவாக புரிந்துக் கொள்ள நமது அரசின் செயல்பாடுகளை சற்று உற்று நோக்குங்கள்.
இந்திய அதிகார வர்க்கத்தின் சில உதாரணங்களுடன் விளக்கலாம். ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் இராணுவ அதிகாரியான சிலர் பின்னர் இராணுவ ஜெனரல்களாகவும், முன்னர் ICS லும் பின்னர் IAS ம் பதவி வைத்தவர்கள் நிரந்தரமாக எப்படி தொடர்கின்றனர். அதாவது நமது நாட்டில் ஐந்து வருட பிரதம மந்திரிப் பதவிக் காலத்தில் செயலாளராக இருந்தவர் முன்னைய ஆட்சிக் காலத்திலும் ஏன் பின்னர் ஆட்சி காலத்திலும்நிரந்தர செயலாளராக எப்படி தொடர முடிகிறது?
இதை வேரு வார்த்தையில் சொன்னால்,” 1947ல் ஆங்கிலேயர் கையிலிருந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது 200 கோடிக்கு அதிபதியாய் இருந்த பெரும் முதலாளி (இதனை உச்சாணியில் இருந்த தரகு முதலாளிகள் என்றெடுத்து கொள்ளவோம்) கூட்டம் இன்றோ பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகள் மறுபக்கம் இரண்டு வேலை உணவுகூட இல்லாமல் வாடும் கூட்டம்”. இதனை புரியும் படி சொன்னால், அந்த பெரு முதலாளிகளின் தேவைக்காக நாட்டின் சட்டம் ஒழுங்கு நீதி மற்றும் இராணுவம் நெகிழ்ந்து போகவும், மொத்த மக்களின் உழைப்பை அந்த முதலாளிகளுக்கு காணிக்கையாக்கதான் அரசின் மொத்த இயந்திரமும் இயங்கி கொண்டுள்ளது”.
ஆங்கில ஏகாதிபத்தியத்தால் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவ, போலீஸ் அதிகாரிகளும் அடிப்படையில் அவ்வாறே இருக்கின்றனர். அவர்கள் அதே எஜமானர்களுக்கு, அதே நலன்களுக்குச் சேவை செய்கின்றனர். அந்த மனிதர்கள் தான் உண்மையில் ஆட்சி செய்கிறார்கள். இவ்வாறான ஓர் ஒடுக்குமுறை முதலாளித்துவ அரசாங்க இயந்திரம் இல்லாமல் சுரண்டல் ஒரு நிமிடத்திற்குமேல் நிலைக்காதென்பது நிச்சயமாகத் தெளிவாகின்றது.
ஆயுதப் படையினரதும், போலீஸ் படையினரதும் கரங்களில் துப்பாக்கியில்லாவிட்டால் சுரண்டும் வர்க்கங்கள் சுரண்டப்படுவோரைக் கீழே போட்டு மிதிக்க முடியாது. அவர்கள் முதலாளியின் உயிரையும், உடமையையும் பாதுகாக்க வந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கியவர்களாக வந்திருக்கின்றார்கள். அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும், அவனது வர்க்கத்தையும் பாதுகாக்கின்றது.
ஆக வர்க்க புரிதலும் பெரும்பான்மையிலான உழைக்கும் மக்கள் அடிமைபட்டு கிடக்கும் பொழுது அவர்களின் விடுதலைகான பாதை என்ன?
இந்த உண்மையை மறைப்பதற்கும், மக்களைக் குழம்பச் செய்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவுமே முதலாளிகளும் மற்றைய பிற்போக்குச்சக்திகளும் பாராளுமன்றம் என்ற ஏமாற்று வித்தையைக் கண்டுபிடித்தனர். பாராளுமன்றம் வெறுமனே ஏமாற்றும் இடம்தானே அன்றி ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்கான இடமன்று.
பாராளுமன்றம் மூலதனத்தின் வெளிப்படையான சர்வதிகாரத்தை மறைப்பதற்கான ஒரு திரை, ஒரு அணிகலனுமாகும். அது மக்களை மடையர்களாக்குவதற்கும், பிளவு படுத்துவதற்கும், பாராளுமன்றம் மூலம் சோஷலிசத்தை அடையலாம் என்ற மாயையைப் பரப்புவதன் மூலம் அவர்களின் வர்க்க உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும், ஆயுதப் படையிற்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறதென்பதை மக்களிடமிருந்து திசைதிருப்புவதற்கும் முயற்சிக்கின்றது. ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்குப் பதில் வெறும் சொற்களால் போராட்டம் நடத்தும் மாற்று யோசனையை கூற முயற்சிக்கின்றது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நம்மீது கொண்டிருந்த பெரும் அன்பினால் வாக்குரிமை வழங்கப்பட்டதா? இல்லை. தாம் என்ன செய்கின்றனர் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். பொது வாக்குரிமையைக் கொடுப்பதன் மூலம் வளர்ந்து வரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கியத்தை இனரீதியிலும், சாதி ரீதியிலும், வேறு வழிகளிலும் பிளவுபடுத்த அவர்கள் எண்ணினர். அவர்களின் எண்ணங்கள் பொய்ப்பிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் அவர்களது அடிவருடிகளும் சகலமக்களையும் ஆட்சி செய்து வருகையில் அவர்களோ சாதி, மத இனரீதிகளில் பிளவுபட்டிருந்தனர்.
நமது நாட்டு மக்கள் இதுவரை எத்தனை தடவைகள் வாக்களித்தனர். இந்த பாராளுமன்றம் சட்டமன்றம் மூலம் சட்டமியற்றும் மெத்த படித்த ஏன் ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் கற்ற திறமைமிக்கோரைப் பாராளுமன்றம் அனுப்பினர். இந்த மனிதர்களும் பாராளுமன்றத் திற்குள்ளேயும் வெளியேயும் திறமையாக சொற்பொழிவுகளை நிகழ்த்தினர்.
ஆனால், இறுதி முடிவுதான் என்ன? அன்றிலிருந்து இன்று வரை பாராளுமன்றத்திற்கு வெளியே நிலவிய உழைக்கும் மக்களைச் சுரண்டும் முறையானது எந்த அளவிலாவது குறைக்கப்பட்டுள்ளதா? திட்டவட்டமான பதில் இல்லை என்பதேயாகும். ஏனெனில் சுரண்டலைப் பாராளுமன்றம் பாதுகாக்கவில்லை. பாராளுமன்றத்திற்கு வெளியே சுயேச்சையாக இயங்கும் முதலாளித்துவ அரசாங்க இயந்திரமே சுரண்டலைப் பாதுகாக்கின்றது. பாராளுமன்றத்தில் நடைபெறும் நாடகமாவது Musical chair விளையாட்டை ஒத்திருக்கின்றது. கட்சி மாறுகிறது ஆம் ஆட்சி மாறுகிறது ஆனால் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர்,சுரண்டலின் தரத்திலென்றாலும் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா? இல்லை. அதே சுரண்டல் தொடர்கின்றது. செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்ற ஏனெனில், முதலாளித்துவப் பராரளுமன்ற ஜனநாயகத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட அரசாங்க மாற்றங்கள் பொருளாதாரக் கட்டுக்கோப்பில் அல்லது அதைப் பாதுகாக்கின்ற முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்திலோ எந்தவித அடிப்படைமாற்றமெதுவையும் கொண்டுவரவில்லை.
அதனால்தான் ஒவ்வொரு புரட்சியாளனும் இப்போதுள்ள ஏகாதிபத்திய பெரும் முதலாளித்துவ பொருளாதாரக் கட்டுக்கோப்பை நொருக்காமலும், அத்துடன் அதன் காவல்நாயாக விளங்கும் ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரத்தைப் பலாத்காரத்தினால் உடைக்காமலும், முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக நாடகத்தின் மூலம் பதவிக்கு வரும் எந்த அரசாங்கமும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கமாட்டாது என்ற உண்மையை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இப்பொழுது ஒட்டு சீட்டு அரசியலுக்கு வரலாம்,” டாட்டா, பிர்லா,அம்பானி,அதானி போன்ற பெரு முதலாளிகலுக்கும் ஒரு ஓட்டுதான், உழைத்தால்தான் உணவு என்று வாழ்கின்ற உழைப்பாளிக்கும் ஒரு ஓட்டுதான், இதனால் இருவரும் சமம் ஆகிவிடுமா?”, இதை ஜனநாயக நாடு எனலாமா? அல்லது பணநாயகமா? அதாவது முதலாளிகளுக்கான ஜனநாயகம்!
இப்பொழுது அமெரிக்காவிற்கும் பன்நாட்டு பெருமுதலாளிகளின் தேவைகளை முன்நிறுத்தி சேவகம் செய்ய அடிமையாக ஓடிக் கொண்டிருக்கும் நடுவண் அரசு, ஊடகங்கள் ஊமைகளாகிக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையை அறிவதே அரிதாய் உள்ள நிலையில். அரசின் அடிமட்டத்தை அசைக்காமல் மேலேறிக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.
தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் தற்போதுள்ள முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை உள்ளவாறே எடுத்துத் தமது நலன்களுக்காக உபயோகிப்பதும் சாத்தியமில்லை. அரச இயந்திரம் முதலாளித்துத்தின் நலன்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டது. அதைத் தொழிலாள வர்க்க நலன்களைப் பாதுகாக்கப் பயன்படுத்த இயலாது. அதனால் தான் மார்க்ஸ், லெனின், மாசேதுங் ஆகியோர் முதலாளித்துவ அரசாங்க இயந்திரம் நிச்சயமாத நொருக்கப்படல் வேண்டும் என வலியுறுத்திக் கூறினர். அதனைச் சீர்திருத்தம் செய்யவோ அல்லது அதன் வரையறைக்குள் அமைப்பில் சீர்திருத்தம் செய்யவோ முடியாது. முதலாளித்துவ அரசு இயந்திரம் இருக்கவேண்டும் அல்லது பாட்டாளிவர்க்க அரசு இயந்திரம் இருக்க வேண்டும். இவற்றிற்கு இடைப்பட்டதாக ஒன்றும் இருக்க முடியாது. அதனால்தான் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பலாத்காரத்தினால் நொருக்கி அதனிடத்தில் பாட்டாளிகளின் அரசு இயந்திரத்தை தொழிலாளிவர்க்கமும் அதன் நேச அணிகளும் ஏற்படுத்தவேண்டியது பொறுப்பென மார்க்சிய - லெனினிய - மாவோ சிந்தனை போதிக்கின்றது. பாட்டாளிகளின் அரசாங்க இயந்திரத்தை மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என விவரித்தார்.
இந்தக் கடமையைச் சரிவரச் செய்த புரட்சிகள் வெற்றி பெற்றன. அக்டோபர் புரட்சியும் சீனப் புரட்சியும் இதற்கு உதாரணங்களாகும். இந்த இரண்டிலும் பழைய அரசியல் அதிகாரத்தின் அழிவில் புதியது பெறப்பட்டது. பழைய அரசு இயந்திரத்தை அல்லது அதன் ஒரு பகுதியையாவது உபயோகிக்கும் முயற்சி நடைபெறவில்லை. ஜேர்மன் ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புக்கெதிராகப் போராடி நகரத்தைக் காப்பாற்றுமாறு லெனின் கிராட் தொழிற்சாலைகளிலிருந்த தொழிலாளர்களுக்கு லெனின் அறைகூவல் விடுத்து துப்பாக்கிகளை அவர்களுக்கு வழங்கியதன் மூலமே சோவியத் செஞ்சேனை உருவாகியது.
அவர்கள் பழைய நீதித்துறையை தொடர்ந்தும் வைத்திருக்கவோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பற்றியோ அதிகம் புலம்பிக்கொண்டிருக்கவில்லை.
ஆக தோழர்களே புரிந்துகொள்ளதான்...
எந்த அரசு முதலாளிகளின் தேவையை முன்னிருத்துகின்றதோ?
எந்த அரசு ஏகாதியபத்தியத்தை முன்னிருத்துகின்றதோ?
எந்த அரசு மக்கள் நலன் இன்றி முதலாளிகளின் சிறுபான்மையினரின் உயர்வை தூக்கிபிடிக்கிறதோ?அவை எல்லா மக்களின் அரசாக இருக்க முடியாது, இவற்றை அடியோடு மாற்றினால் மட்டுமே மக்களுக்கான விடிவுகாலம் வரும்!
ரஷ்ய முதலாளித்துவ வளர்சியின் போது குருசேவ் வகையறாக்கள் கூறியது "தற்போதைய தேசிய மற்றும் சர்வதேச நிலைமைகள் பல முதலாளித்துவ நாடுகளில் சமாதான முறையில் சோசியலிச புரட்சி நடத்த பாட்டாளி வர்க்கதிற்கு சாதகமாக உருவாகி வருகின்றன" என்கின்றனர். (மாபெரும் விவாதம் நூல் 677 பாரா 3).
இதைத்தான் நமது இந்திய நாட்டில் உள்ள இடதுசாரி இயக்கங்கள் சமாதான முறையில் பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதைப் பற்றி செயல்பட்டுக் கொண்டுள்ளனர் இதில் இன்றுள்ள சில பல மார்க்சிய -லெனினிய குழுக்களும் கட்சிகளும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இவை திருத்தல்வாதம்தான் என்பத்னை புரிய வைக்கவும் உலக் அளவில் ஏகாதிபத்தியத்தின் சூழ்சிகள் வலைபின்னல் நடவடிக்கைகள் சிலவற்றை அவர்களுக்கு புரிய வைக்க அவர்கள் நிலைப்பாட்டின் மீது கேள்வியாக இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். இத்ன் மீதான விமர்சனத்தை வரவேற்கிறேன்.ஏகாதிபத்தியம் மூர்க்கத்தனமானது என்று நாம் சொல்லும் போது, அதன் இயல்பு ஒருபோதும் மாறாது என்பதையும், இறுதிவரை ஏகாதிபத்தியவாதிகள் தங்களது கசாப்பு கத்தியை கீழே போட மாட்டார்கள் என்பதையும், அவர்கள் தங்கள் அழிவை சந்திக்கும் வரை ஒருபோதும் புத்தராக மாற மாட்டார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றோம்" மாவோ (தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தொகுதி 4 பக்கம் 428).
ஏகாதிபத்தியமும் பிற்போக்கு வாதமும் என்றுமே தனது இயல்பை மாற்றிக் கொள்ளமாட்டாது என்ற விதியை மா-லெ வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். தன் நாட்டின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப புரட்சிக்கான தயாரிப்புகளை செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக ஏற்பட்டுள்ள நிலைமைகளை கணக்கில் கொண்டு புரட்சியை கைவிட்டு ஏகாதிபத்தியத்தின் சதிதனத்தை புரிந்துக் கொள்ளாமல் சமாதான முறையில் வர்க்கப் போராட்ட விதிகளை மாற்றிவிடலாம் என்றும் மார்க்சிய லெனினிய கொள்கை இன்று மாற்ற வேண்டும் முடிவுக்கு வருவது திருத்தல்வாதமே அன்றி மார்க்சிய லெனினியமல்ல.
ஆகவே குருசேவின் வாரிசுகளான இன்றைய திருத்தல்வாதிகளுக்காக எதார்த்த நிலைமையோடு அறிதல் வேண்டும் அல்லவா?இரண்டாம்உலக யுத்திற்கு பின் ஏகாதிபத்தியவாதிகளும் பிற்போக்குவாதிகளும் எல்லா இடங்களிலும் கொடூரமான முறையில் மக்களை அடக்கி ஒடுக்க தங்களின் அடக்குமுறை இயந்திரங்களை பலப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தங்களின் ராணுவ மற்றும் போலீஸ் படையை பன்மடங்கு பெருக்கி உள்ளது ஏன் ஏகாதிபத்தியம் இல்லாத முதலாளித்துவ நாடுகளும் கூட மிகப்பெரிய அளவில் ஆயுதப்படைகளையும் போலிஸ் படைகளையும் அதிகரிப்பதில் விதிவிலக்காக இல்லையே. "
இன்று ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான ஆயுதப் போட்டியும் பலாத்கார அடக்குமுறை கருவிகளும் விரிவாக்கப்பட்டு வளப்பட்டுக் கொண்டுள்ளது காண முடிகிறது.
எதற்காக இந்த முதலாளித்துவவாதிகள் சமாதான காலத்தில் தனது ராணுவ போலீஸ் படைகளை விரிவாக்கி பெரிதுபடுத்திக் கொண்டுள்ளனர்.
உழைக்கும்மக்களின் வெகுஜன இயக்கங்களை ஒடுக்குவது அன்றி சமாதான முறையில் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு உத்தரவாதம் அளிப்பதாக அவர்களின் நோக்கம் இருக்க முடியுமா?
இதுவரைநடந்தேறிய பல்வேறு போராட்டங்களில் வேலை நிறுத்தங்களில் ஜனநாயக உரிமைக்கான போராடும் மக்களை இந்த போலீசும் ராணுவமும் கடுமையாக அடக்கி ஒடுக்கி வந்திருக்கிறது அல்லவா???
இவைஉள்நாட்டு போலீஸ் ராணுவத்தின் செயல் என்றால், அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகில் பல நாடுகளில் தனது ராணுவ தளங்களை அமைக்க உடன்படிக்கை செய்து முதலாளித்துவ உலகின் அனைத்து பகுதிகளிலும் கிட்டத்தட்ட 2,200 (இன்று கூடுதலாக இருக்கலாம்) ராணுவ தளங்களையும்படை முகாம்களையும் அமெரிக்க உருவாக்கியுள்ளது.10 லட்சத்துக்கு மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் அமெரிக்காவை விட்டு வெளி நாடுகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின்தரைப்படை விமானப்படை உலகின் எந்த இடத்துக்கும் அனுப்பி மக்களுடைய புரட்சியை அடக்கி ஒடுக்க தயாறாக இருந்து வருகிறது.
இரண்டாம் உலகப் போருக்கு பின் அமெரிக்காவும் பிற ஏகாதிபத்திய நாடுகளும் பல்வேறு நாடுகளில் உள்ள பிற்போக்குவாதிகளுக்கு உதவியும், ஆதரவும் வழங்கியதோடு மக்களின் புரட்சிகளை அடக்குவதற்கும் உதவியும் செய்துள்ளனர். எண்ணற்ற எதிர் புரட்சி ஆயுதம் தாங்கி ஆக்கிரமிப்புகளையும் தலையீடுகளையும் நேரடியாக திட்டமிட்டு நிறைவேற்றிக் கொண்டுள்ளனர் அதாவது எதிர் புரட்சியை அவர்கள் ஏற்றுமதி செய்து கொண்டுள்ளனர். அமெரிக்க தலைமையிலான பன்நாட்டுப் படைகள் பல்வேறு நாடுகளின் உள்விவாகாரங்களில் தலையிட்டும் தாக்குதல் செய்தும் ஆக்கிரமிப்பு போரை கட்டவிழ்த்து விட்டு உள்ளது.கிரீஸ் தொடங்கி பாலஸ்தீன் வரை உள்நாட்டுப் போரை தொடர்ந்து நடத்த ஆயுத உதவி செய்து பிற்போக்குவாதிகளை வளர்பதும், அந் நாடுகளில் நடக்கும் இறையாண்மைக்கான பாதுகாப்பிற்கான நியாயமான தற்காப்பு போராட்டங்களை கூட ஆயுதப் படை கொண்டு அடக்குவது தான் இவர்களுடைய செயலாக உள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் மக்களின் புரட்சிகளையும் தேசிய சுதந்திரத்தான இயக்கங்களையும் அடக்கவும் தலையிடவும் உறுதியான நடவடிக்கை எடுப்பதோடு தேசியத் தன்மையின் சாயல்கள் காணப்படும் முதலாளித்துவ நாடுகளின் ஆட்சிகளை கூட அப்புறப்படுத்த முயல்கிறது.
அமெரிக்க அரசாங்கம் ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்காவின் எண்ணற்ற நாடுகளில் எதிர் புரட்சிகர ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளையும் ஏற்பாடு செய்துள்ளது. தானே உருவாக்கிய பொம்மை அரசுகள் தனது தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது போய்விட்டால் அவற்றை நீக்குவதற்கு பலாத்காரத்தை கூட பயன்படுத்தி உள்ளது. ஈரத் தொடங்கி ஆப்கான் வரை கண்முன் கண்டது தானே.
இன்றைய காலகட்டத்தில் புரட்சிகளை வெற்றிகரமாக நடத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் நாடுகளின் விடுதலை சாதிக்க உள்நாட்டில் உள்ள பிற்போக்கு ஆளும் வர்க்கங்களின் கடுமையான ஒடுக்கு முறைகளை எதிர்த்து நின்று சமாளிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியத்தின் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆயுத தலையிட்டையும் எதிர்த்துப் போராட முழுமையாக தயாராக இருக்க வேண்டி இருக்கும் என்பதுதான் இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் நமக்கு விளக்குகின்றன. இதுபோன்ற தயாரிப்புகள் இல்லாமல் எதிர்ப்பு புரட்சிகளின் பலாத்காரத்தை அவசியமானபோது புரட்சிகர பலாத்காரத்தால் தீர்க்கமாக முறியடிக்காமல் புரட்சி என்பது சாத்தியம் இல்லை. வெற்றி என்பது நிச்சயமாக சாத்தியம் இல்லை.
ஏகாதிபத்தியம் மற்றும் எல்லா பிற்போக்குவாத ஆட்சியின் அரசியல் அஸ்திவாரம் "போலீஸ் படை" இதைத் தவிர வேறொன்றுமில்லை. அஸ்திவாரம் வலிமையாக அசைக்க முடியாமல் இருக்கும் வரையில் வேறு எதுவும் முக்கியமில்லை சாத்தியமில்லை. அவர்களுடைய ஆட்சியையும் அசைக்க முடியாது. முதலாளிகள் தங்களின் ஆட்சி பாதுகாக்க பலாத்காரத்தை சார்ந்துள்ளார்கள் என்ற உண்மையை மறைக்கும் "நவீன திருத்தல்வாதிகள்" முதலாளித்துவம் மிகவும் ஏற்புடைய சமாதான மாற்றம் என்பது புரட்சி எதிர்ப்பதில் ஏகாதிபத்தியத்தின் நெருங்கிய நண்பர்களாக செயல்படும் தங்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.
ஓடுகாலி காவுத்ஸ்கி பற்றி விமர்சித்து லெனின் கூறினார் " 1870 களில் மார்க்ஸ் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளில் சோசலிசம் சமாதானம் மாற்றம் பற்றிய சாத்திபட்டையே ஏற்றுக் கொண்டார் என்ற குதர்க்கவாதமும் இன்னும் சொல்லப்போனால் பச்சையாக மேற்கோள்களையும் குறிப்புகளையும் வைத்துக் கொண்டு செப்புவித்தை காட்டுகிற ஏமாற்றுப் பேர்வழிகளின் வேலையாகும். மார்க்ஸ் முதலாவதாக இந்த சாத்தியப்பாட்டை விதிவிலக்கு என்ற அளவில்தான் ஏற்றுக்கொண்டார் இரண்டாவதாக அப்பொழுது ஏகபோக முதலாளித்துவம் அதாவது ஏகாதிபத்தியம் இருக்கவில்லை மூன்றாவதாக அப்போது இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்று வளர்ந்துள்ளது போல முதலாளித்து அரசு இயந்திரம் முதன்மையான கருவியாக பணிபுரியக்கூடிய ராணுவம் இருக்கவில்லை " (லெனின் நூல் திரட்டு 23 பக்கம் 233).
அடுத்து இரண்டாம் உலக யுத்ததிற்கு பிறகுஅதாவது சீனாவில் இருந்து கியூபா வரை எல்லா நாடுகளிலும் நடைபெற்ற புரட்சிகள் விதிவிலக்கன்றி ஆயுதம் தாங்கி போராட்டத்தின் மூலமே ஏகாதிபதிக்கு எதிர்ப்பு ராணுவ ஆக்கிரமிப்புக்கும் தலையிட்டுக்கும் எதிராக போராடியதன் மூலமாக வெற்றி அடைந்திருக்கின்றன ( மாபெரும் விவாதம் நூல் பக்கம் 695 புதுமை பதிப்பகம் வெளியீடு ).
1945 ஆகஸ்டில் வியட்நாம் மக்கள் அரசியல் அதிகாரத்தை ஆயுதம் தாங்கி எழுச்சியின் மூலம் கைப்பற்றினர்.
1953 ல் கியூபா மக்கள் ஆயுதம் தாங்கி எழுச்சியை தொடங்கினார்கள் கியூபாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொம்மை ஆதரவாளர்களை தூக்கி எறிந்து புரட்சிகரமான ஆட்சி நிறுவினர் .
இவ்வாறாக இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பல நாடுகளில் ஆயுதப் போராட்டம் மூலமாக தான் சோசலிச நாடுகள் நிறுவப்பட்டன .
ஆக நமது படிப்பினைகளை சீர் செய்ய பாட்டாளி வர்க்க புரட்சி போர்களின் வெற்றியிலிருந்து நமக்கு கிடைப்பதை புரிந்து கொள்ளவே ...
பாராளுமன்றபாதைக்கு மறுப்பானது இரண்டாம் அகிலத்தின் திருத்தல்வாதிகளால் விளம்பரப்படுத்தப்பட்ட பாராளுமன்றபாதை என்ற கருத்து லெனினால் முறியடிக்கப்பட்டது நீண்டகாலத்திற்கு முன்பே செல்லாக்காசாகிவிட்டது . ( அதே நூல் பக்கம் 682 ).
இரண்டாம் உலகப்போருக்கு பின் நடந்த நிகழ்வுகள் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராளுமன்ற பாதையை நம்பி பாராளுமன்றமாயை என்ற தீர்க்க முடியாத நோய்க்கு பலியாகி விட்டனர் அவர்கள் இயல்பாகவே எதையும் சாதிக்க முடியாது என்பதோடு தவிர்க்க முடியாத படி திருத்தல்வாத சகதியில் புதைந்து பாட்டாளி வர்க்க புரட்சி இலட்சியத்தை சீரழிப்பவர்கள் என்பதை தான் காட்டுகின்றன. முதலாளித்துவ பாராளுமன்றதின் பால் கடைபிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்து மார்க்சிய லெனினிய வாதிகளுக்கும் பிற சந்தர்ப்பவாதிகளுக்கும் மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் இருந்து வந்திருக்கிறது முதலாளிகளின் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும் புரட்சிகர வலிமை சேகரித்துக் கொள்ளவும் உதவும் குறிப்பான சூழ்நிலைகளில் பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும். தேவைப்படும்போது இந்த சட்டப்பூர்வமான போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும். ஆனால் பாட்டாளி வர்க்க கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாறாக பாராளுமன்ற போராட்டத்தை கருதக்கூடாது அல்லது சோசலிசத்திற்கான மாற்றாக பாராளுமன்ற பாதை மூலம் சாதித்து விடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது. அதாவது எல்லா சமயங்களிலும் வெகுஜன போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். லெனின் கூறினார் "புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு முதலாளித்துவ பாராளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் தேர்தலின் போதும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போராட்டங்களின் போதும் அவ்வாறு செய்ய முடியும். ஆனால் வர்க்கப் போராட்டத்தை பாராளுமன்ற போராட்டமாக குறுக்கி விடுவது பாராளுமன்ற போராட்டத்தை உயர்ந்த பட்ச தீர்மானகரமான வடிவமாக்கி அனைத்துப் போராட்ட வடிவங்களையும் இதற்கு உட்பட்டவே ஆக்குவது உண்மையில் பாட்டாளி வர்க்கத்துக்கும் எதிராக முதலாளிதுவத்தின் பக்கம் ஓடி விடுவதாகும்" ( லெனின் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலும் பாட்டாளி மக்கள் சர்வாதிகாரம் பக்கம் 36 ஆங்கில பதிப்பு மாஸ்கோ).
இன்னும் சில ... முதலாளித்துவ அரசு இயந்திரத்தை வலுக்கட்டாயமாக அழித்து அதன் இடத்தில் எங்கெல்ஸின் கூற்றுப்படி "சொல்லின் சரியான அர்த்தத்தின் படி இனிமேலுல் அரசாக இல்லாத புதியது ஒன்றை நிறுவாமல் பாட்டாளி வர்க்க புரட்சி சாத்தியமல்ல (பக் 21)
பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான பலாத்காரமே; இத்தகைய பலாத்காரத்தின் அவசியம் ஏற்பட பிரத்யேக காரணம் மார்க்சும் எங்கெல்சும் விவரமாக திரும்பத் திரும்ப விளக்கி உள்ளது படி (குறிப்பாக பிரான்சில் உள்நாட்டு போர் மற்றும் அந்த நூலின் முகவுரையில்) ராணுவ கோஷ்டியும் அதிகார வர்க்கம் நிலவுவதே ஆகும்.
தமது கொள்கை துரோகத்தை மூடி மறைப்பதற்காக உள்ளபடியே ஒவ்வொரு படியிலும் காவுத்ஸ்கி மோசடியை கையாளா வேண்டி இருக்கும்! அமைதி வழியில் அதாவது ஒரு ஜனநாயக வழியில் என்று அவர் எழுதும்போது அவர் தன்னை அறியாமலேயே தனது வஞ்சகத்தினை அம்பலப்படுத்திக் கொள்வதை பாருங்கள்! !சர்வாதிகாரத்தின் இலக்கணத்தை வகுக்கையில் இந்த கருத்துறையின் அடிப்படை அம்சமான புரட்சிகர பலாத்காரத்தை வாசகர்களிடமிருந்து மறைத்து வைக்க உச்சபட்ச முயற்சி செய்தார்.லெனின் (இபாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும் நூலிலிருந்து)
உலகமயம் 1980 இல் துவங்கியது இது ஒரு பன்முக நிகழ்ச்சி போக்கு. பொருளாதார சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களில் உலகமயமானது ஒரு குறிப்பிட்ட திசையில் செயல்படுகிறது. இந்த உலகமயமானது உலக நாடுகளையே தீர்மானிக்கும் சக்தியாக பொருளாதார மாற்றங்களில் விளங்குகின்றன. இன்றைய உலகமயமானது ஏகதிபத்தியத்தின் உலகமயம் இது முதலாளித்துவதற்கான ஒரு புதிய கட்டமாகும்.உலகமயம் பற்றிய அரசியல் பொருளாதார ஆய்வை முதலாளித்துவத்தின் இயல்புகளில் ஒன்றாக அணுகி விளக்கியவர்கள் காரல் மார்க்சும் எங்கல்ஸ் மட்டுமே.
உற்பத்தி கருவிகளை தொடர்ந்து மேலும் மேலும் உற்பத்தி திறன் உள்ளதாக மாற்றி அதன் விளைவாக உற்பத்தி உறவுகளை மாற்றி .... சமூகத்தின் ஒட்டுமொத்த உறவுகளை மாற்றினால் .... என்று தொடங்கும் சமூக விதிகளை பற்றிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசித்த முதலாளித்துவம் தனக்கான விதிகளை உலகமயமாக்கல் மூலம் செயல்படுத்திக் கொண்டுள்ளது.
ஆக புரட்சிக்கு கீழான எவையும் சமுக மாற்றதிற்கானவை அல்ல!
அதற்கான தத்துவ நடைமுறை பற்றி சற்று அலசுவோம் வரும் இதழ்களில் தோழர்களே.
No comments:
Post a Comment