1. எதேச்சிகாரத்தை வீழ்த்துவதும், அரசியல் சுதந்திரம் பெறுவதற்காகப்பாடுபடுவதுதான் கம்யூனிஸ்டுகளின் உடனடிக் கடமை என்றார் லெனின்.
2. ஜனநாயகத்தை மறுக்கும் எதேச்சிகரமான முறையில் ஆட்சி நடக்கும்இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் எதேச்சிகார ஆட்சியை அம்பலப்படுத்தி மக்களைத் திரட்டி எதேச்சிகாரத்துக்கு எதிராக போராடவேண்டும். அந்த வகையில் இந்தியாவை ஆண்ட மற்றும் தற்போதுஆண்டுகொண்டு இருப்பவர்களும் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் இங்கேகாலனி ஆதிக்கம் செய்வதற்காக உருவாக்கிய சட்டமான 124ஏ போன்ற கறுப்புச் சட்டங்களையும், தடா, பொடா போன்ற மக்கள் விரோத ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகாரச் சட்டங்களைக் கொண்டே ஆளுகின்றனர். தற்போதைய மோடி கும்பலின் ஆட்சியிலும் எதேச்சிகரமானசட்டங்களை தினம் தினம் போட்டு உழைக்கும் மக்களின் மீது சர்வாதிகாரத்தை ஏவிக்கொண்டு இருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள்இத்தகைய சூழலில் நடந்துகொண்டிருக்கும் எதேச்சிகார ஆட்சியை தொடர்ந்து மக்களுக்கு எடுத்துரைத்து மக்கள் நடத்தும் பொருளாதாரப் போராட்டங்களோடு கூடவே இந்த எதேச்சிகாரத்தை எதிர்த்தும் போராட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி போராட வேண்டும்.
3. தற்போது விவசாயிகள் ஓர் ஆண்டு போராடிய போதும் அவர்களின்கோரிக்கைகள் நிறைவேறவில்லை. அதற்கு காரணம் இந்தவிவசாயிகளுக்கு அரசியல் சுதந்திரம் இல்லை. ஆகவே கம்யூனிஸ்டுகளின் நோக்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற போதிலும், நிலவுகின்ற அமைப்பிற்குள்ளேயே உடனடிப் போராட்டமாக விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அரசியல் சுதந்திரம் வேண்டும் என்று போராட வேண்டும். அதாவது இந்திய ஆட்சியாளர்கள் எவ்வகையான சட்ட திட்டத்தை கொண்டுவர வேண்டுமானாலும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் அல்லது விவசாயிகளின் கருத்தை அறிந்துதான், அவர்களின் ஒப்புதலோடுதான் சட்ட திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று போராட வேண்டும். அதற்கு மாறாக பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சட்ட திட்டங்களை கொண்டுவரக் கூடாது என்று மக்களைத் திரட்டி கம்யூனிஸ்டுகள் போராட வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.
4. பொருளாதாரப் போராட்டமே முதன்மையானது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பணிகள் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இது தவறானது என்றார் லெனின். இப்போதும் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் தொழிற்சங்கங்கள் மூலமாக தொழிலாளர்களைத் திரட்டி கூலி உயர்வு போனஸ் போன்றகோரிக்கைகளை முன்வைத்து பொருளாதாரப் போராட்டங்களையே நடத்திக்கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம். இதற்கு காரணம் தொழிலாளர்கள் அரசியல் போராட்டத்திற்கு தயாரில்லை என்று தொழிலாளர்களின் மீதே குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கிறார்கள். அது போலவே விவசாயகளின் சங்கத்தையும் மாணவர்களின் சங்கத்தையும் பொருளாதாரப் போராட்டத்திற்கே வழிநடத்துகிறார்கள். இந்த வர்க்கங்களுக்கு இந்த அரசைப் பற்றியும், அரசு நிறுவனங்களைப் பற்றியும், அரசு அதிகாரிகளுக்கும், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சுரண்டும் முதலாளிகளுக்கு இடையிலான உறவுகள் பற்றியும் இந்த நிறுவனங்களெல்லாம் முதலாளிகளின் நலன் காக்க எவ்வாறெல்லாம் செயல்படுகிறார்கள் என்பதையும் உழைக்கும் மக்களை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் என்னென்ன வகையான சதித்திட்டங்கள் தீட்டி செயல்படுகிறார்கள் என்பதை விளக்கி இந்த பாராளுமன்ற ஆட்சி முறையின் மூலம் மக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்காது ஆகவே உழைக்கும் மக்களுக்கு நன்மை கிடைப்பதற்குத் தேவையானஅரசானது எப்படி இருக்கும் என்பதை விளக்கி அத்தகைய அரசை உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து பாடுபட்டுத்தான் உருவாக்க வேண்டும் என்று மக்களுக்கு விளக்கி மக்களை அணிதிரட்டிய வேண்டியது கம்யூனிஸ்டுகளின் பணியாகும். இத்தகைய அரசமைப்புக்கான அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டியது தொழிலாளி வர்க்கத்தின் கடமையாகும். இத்தகைய அரசியல் போராட்டங்களை தொழிலாளர்கள் நடத்தும் பொருளாதாரப் போராட்டத்தோடு இணைத்திட வேண்டும் என்பதே லெனினது வழிகாட்டலாகும்.
5. தொழிலாளர்களுக்கு அல்லது உழைக்கும் மக்களுக்கு என்று சுயேச்சையான அதாவது சுதந்திரமாகச் செயல்படக்கூடிய கட்சி வேண்டும் என்றார் லெனின். அந்தக் கட்சியானது உழைக்கும் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்பதற்கான திட்டத்தைத் தயாரித்து செயல்பட வேண்டும் என்றார் லெனின். இதற்கு எதிராக பொருளாதாரவாதிகள் தொழிலாளர்கள் அரசியலை மிதவாத முதலாளிகளுடன் தொடர்புள்ள அறிவுத்துறையினரிடம் விட்டுவிட்டு பொருளாதாரப் போராட்டங்களை மட்டுமே நடத்திட வேண்டும் என்றனர். இத்தகைய பொருளாதாரவாதிகளை எதிர்த்து லெனின் போராடினார். தற்போது இந்தியாவிலுள்ள சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சித்தலைவர்களே பொருளாதாரவாதிகளின் நிலையெடுத்து தொழிலாளர்களுக்கு பொருளாதாரப் போராட்டங்களுக்கே வழிகாட்டுகின்றனர். அரசு அதிகாரம் தொழிலாளர்களுக்கு வேண்டும் என்ற உணர்வை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்துவதில்லை மாறாக பாராளுமன்றவாத அரசியல் போராட்டங்களையே நடத்திக்கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம். இந்திய திருத்தல்வாதிகளுக்கு மாற்றாக தொழிலாளர்களுக்கென்று ஒரு சுதந்திரமான கட்சியை கட்டியெழுப்பி தொழிலாளி வர்க்கத்திற்கான அரசியல் அதிகாரத்தை படைப்பதை லட்சியமாகக் கொண்ட அரசியல் போராட்டங்களை தொழிலாளர்கள்நடத்திட வேண்டும் என்ற உணர்வை தொழிலாளர்களுக்கு ஊட்டிவளர்க்கும் கட்சியாக வளர்த்திட வேண்டும். இதுவே லெனின் காட்டியவழியாகும்.
6. ரஷ்யாவில் தொழிலாளர்கள் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்றும் அதாவது அரசியலை புரிந்துகொண்டு செயல்படக் கூடிய பக்குவத்தைஅவர்கள் இன்னும் பெறவில்லை என்றும், ஆகவே தொழிலாளர்கள்அரசியல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது பொருளாதாரப் போராட்டத்தை மட்டுமே நடத்திட வேண்டும் என்று பொருளாதாரவாதிகள் புலம்பினார்கள்.இதன் காரணமாக ரஷ்யாவில் தொழிலாளர்கள் பொருளாதாரப்போராட்டங்களை நடத்தினார்கள். அவர்களுக்கு அரசியலை யாரும் போதிப்பதற்கு முன்வரவில்லை. இந்தச் சூழலை எதிர்த்து லெனின் போராடினார். இந்தியாவில் சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சித் தலைவர்கள் தொழிலாளர்களுக்கு மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் அரசியலை போதிப்பதற்கு எவ்விதமான முயற்சியும் எடுக்கவில்லை, அதற்கு காரணம் தொழிலாளர்கள் தங்களது சுயநலன் சார்ந்த பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவே போராட முன்வருகிறார்கள் என்றும் ஆகவேதான் தங்களால் தொழிலாளர்களுக்கு அரசியல் போதனை செய்ய முடியவில்லை என்கிறார்கள். அன்று ரஷ்யாவில் தொழிலாளர்களுக்கு அரசியலை கற்றுக்கொள்ள பக்குவம் இல்லை என்று சொல்லி தொழிலாளர்களுக்கு அரசியலை போதிக்க மறுத்தவர்களைப் போலவே இந்திய இடதுசாரிகளும் தொழிலாளர்களுக்கு மார்க்சிய அரசியலை போதிக்க மறுக்கிறார்கள். மாறாக இவர்கள் தான்தோன்றித்தனமாக கருதும் முதலாளித்துவ வகைப்பட்ட அரசியலையே தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான அரசியலையே தொழிலாளர்களுக்குப் போதிக்கிறார்கள். இத்தகைய திருத்தல்வாதிகளுக்கு மாறாக நாம் தொழிலாளர்களுக்கு மார்க்சிய பொருளாதாரம் மற்றும் அரசியலைப் போதித்து தொழிலாளர்கள் பொருளாதார நலன்களுடன் இணைந்து அரசியலுக்காகவும் போராட வேண்டும் என்பதை உணர்த்திட வேண்டும். இதுதான் லெனின் நமக்கு காட்டிடும் வழியாகும்.
7. ஒரு சமயம் ரஷ்யாவில் தொழிலாளர் இயக்கம் ஊசலாடிக்கொண்டு இருந்தது, தன்னுடை லட்சியங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு தன்னையே இழந்துகொண்டு இருந்தது. ஒரு பக்கம் தொழிலாளர் இயக்கமானது
சோசலிசத்திலிருந்து துண்டித்துக்கொண்டு இருந்தது, மறு பக்கத்தில் தொழிலார்களுக்கு பொருளாதாரப் போராட்டங்களுக்கு மட்டுமே வழிகாட்டப்பட்டுக்கொண்டு இருந்த காரணத்தால் தொழிலாளர்களிடையே சோசலிச உணர்வு மங்கத் தொடங்கிற்று. ரஷ்யாவில் நடந்தது போலவே இந்தியாவிலும் பல காலமாக இடதுசாரித் தலைவர்கள் தொழிலாளர் இயக்கத்தை சோசலிசத்திலிருந்து துண்டித்துவிட்டார்கள். தற்போது தொழிலாளர்களிடம் சோசலிச உணர்வு அறவே இல்லாது ஒழிந்துவிட்டது. சில சமயங்களில் தொழிலாளர்களிடையேயும் உழைக்கும் மக்களிடையேயும் சோசலிசத்தின் மீது நம்பிக்கை இழந்து சோசலிசத்திற்கு எதிரான உணர்வு நிலைக்கு தொழிலாளர்கள் வந்துவிட்ட நிலை காணப்படுகிறது. இதற்கு காரணம் அன்றைய ரஷ்ய திருத்தல்வாதிகளைப் போலவே இந்திய திருத்தல்வாதிகளும் தொழிலாளர்களுக்கு சோசலிசத்தின் மீது நம்பிக்கையைம், சோசலிச உணர்வுகளையும் ஏற்படுத்தும் விதமான மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையிலான சோசலிச அரசியல் கல்வியை போதிக்க தவறியதுதான் காரணமாகும். ஆகவே உழைக்கும் மக்களிடம் மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையில் சோசலிச அரசியல் கல்வியை போதித்து அவர்களிடையே சோசலிச உணர்வை வளர்க்கவும் அதற்காகப் போராட வேண்டியது ஒவ்வொரு உழைக்கும் மக்களின் கடமை என்பதை கம்யூனிஸ்டுகள் உணர்த்த வேண்டும்.
8. ஆரம்ப காலங்களில் ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகள் என்று சொல்லப்பட்ட கம்யூனிஸ்டுகள் சமூக ஜனநாயகத்தைப் பற்றி பிரச்சாரம் செய்பவர்களாக மட்டுமே இருந்தார்கள். இதன் காரணமாகவும் தொழிலாளர்கள் அரசியல் போராட்டங்களில் ஈடுபடாத நிலை உருவாகியதாக லெனின் குறிப்பிடுகிறார். ஆரம்ப காலங்களில் பிரச்சாரப் பணி செய்வது தவிர்க்க முடியாதுதான் எனினும் பிரச்சாரப் பணியோடு தன்னை கம்யூனிஸ்டுகள் கட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது. கம்யூனிஸ்டுகள் பிற பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் கம்யூனிஸ்டுகளின் பணி பல்வகையானது. பல்வேறுவிதமான பணிகளையும் ஒரு தலைமை கமிட்டியின் வழிகாட்டுதலோடு செய்வதன் மூலமே உழைக்கும் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வூட்டி அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கு மக்களுக்கு வழிகாட்ட முடியும்.
9. ஆரம்ப காலங்களில் ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகள் என்று சொல்லப்பட்ட கம்யூனிஸ்டுகள் கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபடும் போது கட்டுபாடில்லாமல் கடைக்கோடி நிலைக்குப் போவதை கட்டுப்படுத்த இயலாதவாறு இருந்தனர் என்றார் லெனின். ஆகவே கம்யூனிஸ்டுகள் கிளர்ச்சி செய்யும் போதும் பிற அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் போதும் உயர்ந்த கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்பதே லெனினது வழிகாட்டுதலாகும். இத்தகைய கட்டுப்பாட்டின் அவசியத்தை தம்மால் திரட்டப்பட்ட மக்களுக்கு போதித்து மக்களை வழிநடத்துவது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.
10. ஆரம்பகாலங்களில் ரஷ்யாவில் நரோத்தினிக்குகள் என்ற அரசியல் பிரிவினரின் செல்வாக்கு மேலோங்கி இருந்தது. நரோத்தினிக்குகள், அரசியலை தொழிலாளர் இயக்கத்திலிருந்து தனிமைப்பட்ட ஒன்றாக கருதினார்கள். அரசியலை முற்றிலும் சதிச்செயல் போராட்டமாகக் கருதினார்கள். இத்தகைய நரோத்தினிக்குகளின் கருத்துக்கள்தான் ரஷ்ய கம்யூனிஸ்டுகளிடமும் செல்வாக்கு பெற்ற கருத்துக்களாக இருந்தது. அதன்காரணமாகவே ரஷ்ய கம்யூனிஸ்டுகள் அரசியலை முற்றிலும் புறக்கணிக்கும் கடைக்கோடி நிலைக்குச் சென்றனர் என்றார் லெனின். இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் ஒரு நாட்டில் எத்தகைய சித்தாந்த அரசியல் செல்வாக்கு பெற்று இருக்கிறதோ அந்த சித்தாந்த அரசியலுக்கு கம்யூனிஸ்டுகளும் பலியாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அன்றைய ரஷ்யாவில் செல்வாக்குற்ற நரோத்தினிக்குகளின் இடது விலகல் போக்குக்கு ரஷ்ய கம்யூனிஸ்டுகள் பலியானது போலவே தற்காலத்தில் செல்வாக்கு பெற்ற திருத்தல்வாதம், கலைப்புவாதம், சீர்திருத்தவாதம், டிராட்ஸ்கியவாதம், அடையாள அரசியல் போன்ற சமூக விஞ்ஞானமான மார்க்சியத்திற்கு
எதிரான கருத்துக்களுக்கு இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் பலரும் பலியாகிக் கிடக்கின்றனர். இந்த இழிவான நிலையைப் போக்குவதற்கு கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டிய பல பணிகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்த ஆர்வமுள்ள பணியை செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் முன்வந்து அந்தப் பணிகளை கூட்டாகவும் கட்டுப்பாட்டோடும் செய்தால் மார்க்சியத்துக்கு எதிரான
கருத்துப் போக்குகளைப் புரிந்துகொண்டு அதனை முறியடிக்க முடியும்.மேலும் தவறான கண்ணோட்டங்களிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள முடியும். அத்தகைய விடுதலையை கம்யூனிஸ்டுகள் அடைந்தால் மட்டுமே நம்மால் மக்களுக்கு பணியாற்ற முடியும். அன்றைய ரஷ்யாவில் லெனினது தலைமையிலுள்ள போல்ஷ்விக்குகள் நரோத்தினிக்குகளையும் பொருளாதாரவாதிகளையும் மட்டுமே எதிர்த்துப் போராடினார்கள. ஆனால் தற்போது பல்வேறு வகையான மார்க்சியத்துக்கு எதிரான சித்தாந்த அரசியலை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டிய கடுமையான பணி இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகளின் முன்னால் உள்ளது. இந்தக் கடுமையான பணியை நிறைவேற்றாமல் எளிதான முறையில் அதாவது நோகாமல் நெங்கு திண்பதற்குத்தான் இங்குள்ள இடதுசாரிகள் செயல்படுகிறார்கள். ஆகவே மக்களை நேசிக்கின்ற உண்மையான கம்யூனிஸ்டுகள் இந்தக் கடுமையான பணியைச் செய்வதற்கு முன்வர வேண்டும். இந்தக் கடுமையான பணியை நாம் செய்யவில்லை என்றால் நமது வாழ்நாள் முழுவதும் அடிமைகளாக வெந்ததைத் தின்று விதிவந்தால் சாக வேண்டியதுதான். நாம் இழிவாக வாழ்ந்து சாகப் போகிறோமா? அல்லது இந்த கடுமையான பணியைச் செய்வதற்கு நாம் ஓர் அணியில் திரளப் போகிறோமா? சிந்தியுங்கள்.
11. ரஷ்யாவில் பொதுவுடமை இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் சிறுசிறு உள்ளூர் தொழிலாளர்களின் குழுக்கள் செயல்பட்டுக்கொண்டு இருந்தன. இந்தக் குழுக்களில் கம்யூனிஸ்டுகள் சிதறிய நிலையில் செயல்பட்டுக்கொண்டு இருந்தார்கள். இந்தக் குழுக்களின் செயல்களை ஒன்றுபடுத்தவும், புரட்சிப் பணிகள் சரியான வழியில் நடைபெற ஏற்பாடுகள் செய்வதற்குத் தேவையான ஒரு ஒன்றுபட்ட புரட்சிகர கட்சி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற அவசியத்தை அன்றைய ரஷ்யகம்யூனிஸ்டுகள் உணர்ந்து அதற்கான கவனம் செலுத்தவில்லை. இதன்காரணமாகவே அங்கே பொருளாதாரப் போராட்டங்களை மட்டும் நடத்துவது அரசியல் போராட்டங்களை புறக்கணிப்பது என்ற பொருளாதாரவாதம் செல்வாக்கு பெற்றதாக லெனினியம் விளக்குகிறது. அன்றைய ரஷ்யா போலவே இன்றைய இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் பலக் குழுக்களாக சிதறுண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம். அன்றை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் செய்த தவறைப் போலவே இந்திய கம்யூனிஸ்டுகளும் இந்தக் குழுக்களின் செயல்களை ஒன்றிணைக்கத் தவறுகிறார்கள் மேலும் முக்கியமாக புரட்சிகரப் பணிகள் சரியான வழியில் நடைபெறுவதற்கு நடைமுறை ஏற்பாடுகள் செய்ய வேண்டுமானால் ஒரு ஒன்றுபட்ட புரட்சிகரமான கட்சி வேண்டும் என்பதை அன்றைய ரஷ்ய கம்யூனிஸ்டுகள் உணர மறுத்ததைப் போலவே இன்றை இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகளும் உணர மறுத்து ஒன்றுபடுவதற்கான முயற்சியில் ஈடுபட மறுக்கிறார்கள். இதற்கு மாறாக சிறு சிறு குழுக்களாகப் பிளவுபட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அன்றைய ரஷ்யாவில் கம்யூனிச இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் இந்த தவறை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் செய்தது இயல்பானதாகும். ஆனால் நீண்ட காலம் இந்தியாவில் செயல்பட்ட பின்பும் தற்போது கம்யூனிஸ்டுகள் பல குழுக்களாக சிதறுண்டு இருப்பது இயல்பான தவறல்ல. விருப்பப்பட்டு, திட்டமிட்டு சுயநல நோக்கத்திலிருந்தே இவர்கள் பல குழுக்களாகச் சிதறியிருக்கிறார்கள். இவர்களுக்கு உழைக்கும் மக்களின் மீது பாசமோ பற்றோ இல்லை. இந்தக் குழுக்களிலுள்ள தலைவர்கள் தனக்கு பேரும் புகழும் வேண்டும் என்றும் தன்னைச் சுற்றி தனக்குத் தாளம் போடுவதற்கு ஒரு கூட்டம் வேண்டும் என்ற அடிப்படையிலேயே பல குழுக்களில் இவர்கள் இயங்குகிறார்கள்.
அன்றைய ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகள் அறியாமையின் காரணமாக தனித்தனி குழுக்களாகச் செயல்பட்டவர்களுக்கு லெனின் போன்ற தலைவர்கள் உண்மையை விளக்கி அந்தக் குழுக்களை ஒன்று சேர்த்து ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்ட முடிந்தது. ஆனால் இன்றை இந்தியாவில் சிதறுண்டு இருக்கும் குழுக்களை ஒன்றுபடுத்துவதற்குத் தடையாக இருப்பது அன்றைய ரஷ்ய கம்யூனிஸ்டுகளிடம் இருந்தது போல அறியாமை அல்ல, மாறாக இந்தத் தலைவர்களிடமிருக்கும் தலைகணம், தான் என்ற அகம்பாவம், தான் சொல்வதுதான் சரி என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டு பிறரது கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுத்து மார்க்சியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் விரிவான விவாதங்கள் நடத்துவதற்கு முன்வராத நிலை போன்ற குட்டிமுதலாளித்துவ குறுங்குழுவாத சிந்தனை முறைதான் மிகப்பெரிய தடையாக உள்ளது. இத்தகைய தவறுகளை இந்தத் தலைவர்கள் களைவதன் மூலமே இந்தத் தலைவர்களுக்கு இடையிலும் குழுக்களுக்கு இடையிலும் ஒற்றுமை ஏற்படும். ஆகவே குழுக்களை இணைப்பதில் ரஷ்ய கம்யூனிச இயக்கத்திற்கும் இந்திய கம்யூனிசஇயக்கத்திற்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகளை கணக்கில் எடுத்து பரிசீலித்து குழுக்களை இணைப்பது என்ற பிரச்சனைக்கு நாம் தீர்வு காண வேண்டும்.
12. அன்றைய ரஷ்யாவின் கம்யூனிச இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்டுகள் பல குழுக்களாக தனித்தனியாக செயல்பட்டுக்கொண்டு இருந்ததால் கம்யூனிஸ்டுகள் ஒரு புறத்தில் மட்டும் அதாவது
பொருளாதாரப் போராட்டங்களில் மட்டும் அவர்களின் கவனம் குவியலாயிற்று. இந்தச் சூழலின் காரணமாக அங்கே பொருளாதாரவாதம் செல்வாக்கு பெற்றது. பொருளாதாரவாதக் கருத்தையே மிகவும் சரியான கருத்து என்று பலரும் நம்பிக்கை வைத்தார்கள். இதன் காரணமாக பழைய முதலாளித்துவ கருத்துக்களுக்கு புதிய பெயரிட்டு உழைக்கும் மக்களிடம் பரப்பட்டது. இதன் காரணமாக ரஷ்யாவில் தொழிலாளர்களின் இயக்கத்துக்கும் அரசியல் சுதந்திரத்துக்காகப் பாடுபடும் கம்யூனிச இயக்கத்துக்கும் இடையிலான உறவு பலவீனப்பட்டது. அது போலவே இன்றைய இந்தியாவிலும் கம்யூனிஸ்டுகள் பல குழுக்களாக சிதறுண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாகவும் கம்யூனிஸ்டுகளின் கவனம் தன்னியல்பான பொருளாதாரப் போராட்டங்களிலேயே கவனம் குவிக்கப்பட்டு இங்கே மார்க்சியத்தை புறகணித்துவிட்டு பொருளாதாரவாதம் சீர்திருத்தவாதம் போன்ற முதலாளித்துவ சித்தாந்தங்கள் செல்வாக்கு பெற்றது.
தற்போது கம்யூனிச இயக்கத்திலுள்ளவர்கள் பொருளாதாரவாதம், சீர்திருத்தவாதம் போன்ற சித்தாந்தங்களே மார்க்சிய சித்தாந்தங்களைக் காட்டிலும் உயர்வானது என்ற கருத்துநிலை உணர்வாளர்களாக மாறிவிட்டனர். இதன் காரணமாகவே இந்தியாவில் தொழிலாளர் இயக்கமும் சோசலிச இயக்கமும் அதாவது அரசியல் சுதந்திரத்துக்கான போராட்ட இயக்கமும் துண்டிக்கப்பட்டு அரசியல் சுதந்திரத்திற்கான போராட்ட இயக்கமே காணாமல் போய்விட்டது.
இத்தகைய அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டத்தை நடத்த வேண்டிய கம்யூனிஸ்டு கட்சியும் காணாமல் போய், திருத்தல்வாத கட்சிகளாகச் சீரழிந்துவிட்டது மேலும் பல குழுக்களாகச் சிதறுண்டு போய்விட்டது. ஆகவே தற்போதுள்ள உடனடியான பணி என்பது புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதும் அதன் தலைமையில் தொழிலாளர் இயக்கத்தையும் சோசலிச இயக்கத்தையும் ஒன்றிணைக்க வேண்டும். இதுதான் இன்று நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய பணியாகும்.
13. தொழிலாளர் இயக்கமும் சோசலிச இயக்கமும் ஒன்றுசேர்ந்ததுதான் சமூக ஜனநாயகம் அல்லது கம்யூனிசம் என்பது லெனினியமாகும். கம்யூனிஸ்டுகளின் பணி என்பது பொதுவாக சும்மாவே இருந்துகொண்டு தொழிலாளர்களுக்கு தேவை ஏற்படும்போது மட்டும் செயல்படுவதல்ல. மாறாக
1. இயக்கம் முழுவதன் நலன்களை பிரதிநித்துவப் படுத்துவது,
2.இயக்கத்தின் இறுதி நோக்கத்தையும் அதன் அரசியல் பணிகளையும் சுட்டிக்காட்டுவது,
3. அதன் அரசியல் சுயேச்சை நிலையை பாதுகாப்பது, போன்ற பணிகள்தான் சமூக ஜனநாயகத்தின் அல்லது கம்யூனிஸ்டுகளின் பணியாகும் என்பதுதான் லெனினியமாகும். ஆனால் இந்தியாவிலுள்ள இடதுசாரிகள் தொழிலாளர் இயக்கத்தை வெறுமனே பொருளாதாரப்போராட்டங்களுக்காகவே, தேர்தல் ஆதாயத்துக்காகவே ஈடுபடுத்துகிறார்கள். தொழிலாளர்களுக்கான பொருளாதாரக் கோரிக்கைகள் உருவாகும் போதும் தேர்தல் காலங்களில் மட்டுமே தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்துகிறார்கள். அத்தகைய போராட்டங்கள் நடைபெறாத காலங்களில் அவர்கள் வெறுமனே சும்மாவே இருக்கிறார்கள். அத்தகைய போராட்டங்கள் இல்லாத காலங்களில் தொழிலாளர்களிடம், நிலவுகின்ற அரசைப் பற்றியும், இந்த அரசு நீடிக்கும் வரை தொழிலாளர்களுக்கு சுதந்திரம் கிடைக்காது என்பதைப் பற்றியும், இந்த அரசை வீழ்த்திவிட்டு தொழிலாளர்களின் மற்றும் பொதுவான உழைக்கும் மக்களின் நலன்களை பாதுகாக்கும் சோவியத்து வடிவத்திலான தொழிலாளி வர்க்க அரசை உருவாக்க வேண்டியது தொழிலாளர்களின் கடமை என்ற அரசியல் விழிப்புணர்வை தொழிலாளர்களிடம் தொடர்ந்து ஏற்படுத்த தவறியது. அதன் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது பிற முதலாளித்துவ கட்சிகளிடமிருந்து வேறுபட்ட தனித்தன்மை வாய்ந்த சுயேச்சையான கட்சியாக வளர்ப்பதற்கு இந்திய இடதுசாரிகள் தவறினார்கள். அதன் மூலம் இடதுசாரிகள் லெனினியத்தை புறக்கணித்துவிட்டு திருத்தல்வாத கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியை சீரழித்துவிட்டார்கள். ஆகவே இளைய சமுதாயமானது இந்தியஇடதுசாரிகள் செய்த இந்த தவறை களைந்து லெனினியம் காட்டும்வழியில் புரட்சிகரமான சுயேச்சையான சோசலிசத்தையும் தொழிலாளர் இயக்கத்தையும் ஒன்றிணைக்கும் கட்சியாக லெனினிய முறையிலான புதிய வகையான கட்சியை உருவாக்க வேண்டும்.
14. தொழிலாளர் இயக்கமானது கம்யூனிச இயக்கத்திடமிருந்துதுண்டித்துக்கொண்டு தனிமைப்படுமானால், தொழிலாளர் இயக்கமானது சிறுமைப்பட்டுவிடுகிறது என்றும் தொழிலாளர் இயக்கமானது தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவ தன்மையுடையதாக மாறிவிடுகிறது என்று லெனினியம் கூறுகிறது. பொருளாதாரப் போராட்டத்தை மட்டும் நடத்தப்படுமானால் தொழிலாளி வர்க்கமானது தனது சுயேச்சை தன்மையையை அதாவது சுதந்திரத்தை இழந்துவிடும் என்றும் பிற முதலாளித்துவ கட்சிகளுக்கு வால்பிடித்துச் செல்லும் நிலை ஏற்படும் என்றும் தொழிலாளர்களின் விடுதலையை தொழிலாளர்கள் போராடி அடைய வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு துரோகம் இழைப்பதாக அமையும் என்கிறது லெனினியம்.
15. லெனினியம் கூறியது போலவே இந்தியாவில் தொழிலாளர்களது இயக்கத்தை கம்யூனிசத்திலிருந்து தனிமைப்படுத்தி தொழிற்சங்கவாத அடிப்படையிலேயே இங்குள்ள இடதுசாரிகள் இயக்கியதால், தொழிலாளர்களின் இயக்கமானது புரட்சிகரமாக வளராமல், சிறுமைப்பட்டு போய்விட்டதை நாம் காணுகிறோம். மேலும் முதலாளிகளுக்கு தொடர்ந்து கூலி அடிமைகளாக இருந்துகொண்டே முதலாளிகளிடம் சலுகைகளுக்காக கையேந்தும் வகையிலான போராட்டங்களை நடத்துவதும் முதலாளிகளும் இந்த அரசும் வழங்கும் சலுகைகளைப் பெற்று அதிலேயே தொழிலாளர்கள் திருப்தியடையும் நிலையைப் பார்க்கிறோம். இதன் விளைவாக தற்போது மோடி அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் போதுதொழிலாளர்கள் அதனை எதிர்த்து போராட முடியாத பரிதாபமான நிலையில் இருப்பதை பார்க்கிறோம். மேலும் தொழிலாளர்களுக்கு வழிகாட்டிய கம்யூனிஸ்ட் கட்சியானது முதலாளித்துவ கட்சியாகவேசீரழிந்துகொண்டு இருப்பதையும் நாம் பார்க்கிறோம். பொருளாதரப் போராட்டங்களை மட்டும் நடத்தியதன் விளைவாக தொழிலாளி வர்க்கமானது தனது சுதந்திரத்தையும் தனித்தன்மையையும் இழந்து முதலாளித்துவ கட்சிகளான காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டு தனது லட்சியமான சோசலிசக் கொள்கைகளை கைவிட்டுவிட்டதையும் நாம் பார்க்கிறோம். தொழிலாளி வர்க்கமானது தனது சொந்த முயற்சியை அடிப்படையாகக் கொண்டு போராட வேண்டும் என்ற கொள்கைக்கு இந்திய திருத்தல்வாத இடதுசாரிகள் துரோகம் செய்துவிட்டதையும் பார்க்கிறோம். ஆகவே தொழிலாளர் இயக்கத்தையும் சோசலிச இயக்கத்தையும் ஒன்றிணைக்கும் பணியை லெனின் காட்டிய பணியை இளைய சமுதாயம் தனதுலட்சியமாகக் கொண்டு செயல்படுவதன் மூலம் புரட்சிகரமான மார்க்சியவகைப்பட்ட தொழிலாளர் இயக்கத்தை நடைமுறையில் செயல்படுத்துவதற்குப் பாடுபட வேண்டும். இதற்குமாறாக சோசலிசத்திலிருந்து துண்டிக்கப்பட்ட நடைமுறையை நாம் எவ்வளவுதான் சிறப்பாகவும், தொழிலாளர்களை அணிதிரட்டி நடைமுறைப் பணியில் ஈடுபட்டாலும் அத்தகைய நடைமுறையால் நல்ல விளைவுகளை நாம் காண முடியாது. இதுதான் இந்தியாவில் நடைமுறையில் ஈடுபட்ட இடதுசாரிகளின் நடைமுறை அனுபவமாக உள்ளது. ஆகவே நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறை லெனினிய நடைமுறையாகும். இதற்கு கடந்த காலத்தில் நாம் செய்த தன்னியல்பு நடைமுறையை, சோசலிசத்திலிருந்துதனிமைப்பட்ட நடைமுறையை நாம் கைவிட வேண்டும்.
16. தொழிலாளர் இயக்கமானது சோசலிசத்திலிருந்து விலகி நின்று இரண்டும் தனித்தனியே அதன் சொந்தப் பாதையில் சென்ற காலக்கட்டம் ஒவ்வொரு நாட்டிலும் இருந்துள்ளது என்றும், அதன் விளைவாக சோசலிச இயக்கமும் தொழிலாளர் இயக்கமும் ஒவ்வொரு நாட்டிலும் பலம் இழந்தது என்றும், சோசலிசமானது தொழிலாளர் இயக்கத்தோடு இரண்டற கலப்பதன் மூலமே ஒவ்வொரு நாட்டிலும் சோசலிசத்துக்கும் தொழிலாளர்இயக்கத்துக்கும் வலிமையான அடித்தளம் உருவானது என்று லெனினியம்கூறுகிறது. இருந்த போதிலும் சோசலிசமும் தொழிலாளர் இயக்கமும் இணைந்து நடைமுறைப் படுத்துவது என்பது ஒவ்வொரு நாட்டின் குறிப்பிட்ட வரலாற்று வழியில் அந்தந்த நாட்டின் தனிச் சிறப்பான தன்மைக்கு ஏற்பவும், காலம், இடம் மற்றும் நடப்பு சூழலுக்கு ஏற்ப இந்த இணைப்பு நடைபெறும் என்று லெனினியம் கூறுகிறது. இந்த இணைப்பை சாதிப்பது என்பது மிகவும் கடினமான பணி என்றும் ஆகவே இந்தஇணைப்புக்கான முயற்சியில் கம்யூனிஸ்டுகள் ஈடுபடும் போது பல்வேறு வகையான சந்தேகங்களும், ஊசலாட்டங்களையும் கம்யூனிஸ்டுகள் சந்திக்க வேண்டும் என்று லெனினியம் எச்சரிக்கிறது.
17. லெனினியம் கூறியது போலவே இந்தியாவில் பல காலம் தொழிலாளர் இயக்கமானது சோசலிசத்திலிருந்து விலகியே நடைபோட்டது. சோசலிச இயக்கத்தையும் இடதுசாரிகள் கைவிட்டு பெயரளவில் சோசலிசத்தைப் பேசிக்கொண்டு திருத்தல்வாத நடைமுறையிலேயே கட்சியை வழிநடத்தியதை நாம் பார்க்கிறோம். இதன் காரணமாக இந்தியாவில் தொழிலாளர் இயக்கமும் சோசலிச இயக்கமும் பலம் இழந்துவிட்டதைநாம் பார்க்கிறோம். இடதுசாரிகளின் இந்த தவறின் காரணமாகவே பாசிசகட்சியான பாஜகாவும், சீர்திருத்த கட்சிகளான திமுக, அதிமுக, சீமான் போன்ற கட்சிகள் மக்களின் செல்வாக்கைப் பெற்று பலமான கட்சிகளாக வளர்ந்துகொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம். இதற்கு மாறாக ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகள் தொழிலாளர் இயக்கத்தையும் சோசலிச இயக்கத்தையும் ஒன்றிணைத்தார்கள், தொழிலாளர்களுக்கு தொடர்ந்து மார்க்சிய தத்துவ அரசியலை போதித்து உழைக்கும் மக்களிடம் சோசலிச விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அதன் பயனாக அந்த நாடுகளில் தொழிலார்கள் மற்றும் விவசாயிகளின் இயக்கங்களும், கட்சியின் சோசலிசம் மற்றும் மக்கள் ஜனநாயக இயக்கத்திற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கி வெற்றி பெற்றார்கள். அந்த கம்யூனிஸ்டுகளின் அனுபவத்தை இந்திய இடதுசாரிகள் பின்பற்றத் தவறினார்கள். அதன் விளைவாக இவர்கள் பலம் இழந்து மக்களின் செல்வாக்கையும் இழந்தார்கள். ஆகவே இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும் இந்திய இடதுசாரிகள் செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தவறுகளை களைந்து லெனினிய முறையை பின்பற்றுவதற்கான பயிற்சியைப் பெற வேண்டும்.
18. ரஷ்ய வரலாறானது எதேச்சிகாரத்தை எதிர்த்தப் போராட்டமாகவும் உழைக்கும் மக்களுக்கு அரசியல் சுதந்திரத்தைப் பெறுவதற்கான போராட்டமாகவே இருந்தது. அதே போலவே இந்திய வரலாறும் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகளின் எதேச்சிகாரத்தை எதிர்தப் போராட்டமாகவும், பிறகு சோசலிச ஜனநாயகவாதி என்ற முகமுடி போட்ட எதேச்சிகாரியான, வீரத் தெலுங்கானாப் போராட்டத்தை நசுக்கிய பாசிச நேரு, மற்றும் நெருக்கடி நிலை கொடுமைகள் செய்த பஞ்சாப்பில் இராணுவ நடவடிக்கை எடுத்த பாசிச இந்திராகாந்தியின் எதேச்சிகாரத்தை எதிர்த்ப் போராட்டமாகவும், தற்போது இந்துக்களின் நண்பன் என்று வேடமிட்டு எதேச்சிகார சட்டங்களைக் கொண்டு இந்திய மக்களை அடக்கிக் கொண்டிருக்கும் பாசிச மோடியின் எதேச்சிகாரத்தை எதிர்த்த போராட்டமாகவுமே இந்திய வரலாறு உள்ளது. ஆகவே ஆரம்ப கட்ட ரஷ்யாவைப் போலவே இந்தியாவிலும் கம்யூனிஸ்டுகளின் உடனடியான கடமையாக எதேச்சிகாரத்தை எதிர்த்துப் போராடுவதும் உழைக்கும் மக்களுக்கான அரசியல் சுதந்திரத்தைபெறுவதற்கானப் போராட்டங்களை நடத்துவதாகவே உள்ளது.தொழிற்சங்கம் மற்றும் விவசாய சங்கம், மாணவர் சங்கம் போன்ற வர்க்க அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் வைக்கப்படும் குறிப்பானகோரிக்கையோடு எதேச்சிகாரத்தை எதிர்த்தும், அரசியல் சுதந்திரத்திற்கான கோரிக்கைகளையும் இணைத்து வைத்தே போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் நடத்திட வேண்டும். மேலும் இந்திய மக்கள் சந்தித்துவரும் பொருளாதாரப் பிரச்சனைகளோடு கூடவே எதேச்சிகாரம் பற்றியும் மற்றும் அரசியல் சுதந்திரத்தின் அவசியம் பற்றியும் போதித்து தொழிலாளர்களிடையே அரசியல் விளிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.
19. ரஷ்யாவில் ஆரம்பகால சோசலிச இயக்கமானது, ஜாரின் எதேச்சிகார ஆட்சிக்கு எதிராக முழு முனைப்புடன் ஈடுபட்டது. மறுபுறத்தில் ஏனைய நாடுகளைக் காட்டிலும் சோசலிச சிந்தனையானது உழைப்பாளி வர்க்கங்களின் முன்னணிப் படையான தொழிலாளர்களின் அமைப்பு பிரதிநிதிகளிடமிருந்து பெருமளவுக்கு தனிமைப்பட்டிருந்தது. இந்த நிலை நீடிக்குமாயின் ரஷ்யாவில் புரட்சி இயக்கம் திறனற்றதாகிவிடும் என்பதை ரஷ்ய கம்யூனிச இயக்கத்தின் வரலாறு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையிலிருந்துதான் ரஷ்ய கம்யூனிஸ்டுகள் அவர்களின் பணியைத்தீர்மானித்தார்கள். 1. சோசலிசக் கருத்துக்களையும், அரசியல் உணர்வையும் பாட்டாளிவர்க்க வெகுஜனங்களுக்கு ஊட்டுவது, 2. தன்னியல்பாக நடந்துகொண்டிருந்த தொழிலாளர் இயக்கத்தோடு பிரிக்க முடியாதவாறு அதனோடு இணைந்து அமைந்த புரட்சிகரக் கட்சியை நிறுவும் பணி. இந்த இரண்டு பணிகளையும் செய்து ரஷ்ய கம்யூனிஸ்டுகள் சாதனை படைத்தார்கள்.
ஆனால் இந்தியாவில் எதேச்சிகாரத்தை எதிர்த்தப் போராட்டத்தில் குறிப்பாக பிரிட்டீஷை எதிர்த போராட்டம் மற்றும் தெலுங்கானா போராட்டம் தவிர்த்து பெரிய அளவில் இந்திய இடதுசாரிகள் எதேச்சிகாரத்தை எதிர்த்துப் போராடவில்லை. எனினும் மிகவும் முக்கியமாக கம்யூனிச இயக்க முன்னணிகளுக்கு சோசலிசம் பற்றியும் வர்க்க அரசியல் உணர்வு வளர்க்க வேண்டியது பற்றியும் போதனைகளை செய்து சோசலிச சிந்தனையை உழைக்கும் மக்களிடமும் அதன் முன்னணிகளிடமும் வளர்க்கவில்லை.
இந்த நிலையானது நீண்டகால அனுபவங்களுக்குப் பிறகும் இந்திய இடதுசாரி அமைப்புகளில் நீடிக்கிறதை நாம் பார்க்கிறோம். சோசலிசஉணர்வும், சோசலிச சிந்தனை முறையும் இல்லாத கம்யூனிச
அமைப்புகளின் முன்னணி செயல் வீரர்களால் மக்களிடம் என்ன வகையான நடைமுறைப் பணிகளை செய்ய முடியும் என்ற கேள்விக்கு, அவர்களால் சோசலிசத்துக்கு எதிரான பணிகளைத்தான் செய்ய முடியும். இந்த உண்மையை நடைமுறை நடைமுறை என்று கூச்சலிடுபவர்கள் உணர மறுக்கிறார்கள் அல்லது மூடிமறைக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்தியாவில் கம்யூனிச புரட்சி இயக்கமானது புரட்சியை நடத்தும் திறனற்றதாக மாறிவிட்டது. ஆகவே இந்தியாவில் கம்யூனிச புரட்சி இயக்கமானது திறன் படைத்த இயக்கமாக வளர வேண்டுமானால் ரஷ்ய கம்யூனிச இயக்க நடைமுறை வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு இந்தியாவிலுள்ள உழைக்கும் மக்களிடம் சோசலிச சிந்தனையை வளர்க்கவும், சோசலிச உணர்வை ஊட்டுவதற்கும் நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும். இரண்டாவதாக இந்தியாவில் ஜனநாயகத்தின் பெயரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எதேச்சிகார ஆட்சியை எதிர்த்து உழைக்கும் மக்களுக்கு உணர்வூட்டி, அணிதிரட்டி தொடர்ந்து போராட வேண்டும். மூன்றாவதாக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள், சாதிகள், மதங்கள், இனங்களின் அரசியல் சுதந்திரத்திற்காக நாம் தொடர்ந்து போராட வேண்டும். இத்தகைய போராட்டங்களை நடத்துவதற்கு பாராளுமன்ற சட்டங்களையும் பயன்படுத்த வேண்டும், அதேவேளையில் சட்டப்பூர்வமான அனுமதி மறுக்கப்படும் போது அந்தத் தடைகளையும் மீறி சட்ட மறுப்பு போராட்டங்களையும் நடத்த வேண்டும். இந்தப் போராட்டங்களை ஆளும் வர்க்கங்கள் வன்முறை கொண்டு ஒடுக்குமானால் மக்களின் விருப்பத்தின் பேரில் மக்களின் ஒத்துழைப்போடு வன்முறையை வன்முறை கொண்டு எதிர்கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுகள் என்ன வகையான ஆயுதங்களை ஏந்துவது என்பதை கம்யூனிஸ்டுகள் தீர்மானிக்க மாட்டார்கள். மாறாக மக்களின் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் என்பதை தெளிவாக கம்யூனிஸ்டுகள் புரிந்துகொண்டு மக்களின் போராட்ட வடிவங்களை தீர்மானிக்க வேண்டும்.
20. ரஷ்யாவில் மக்களுக்கு சோசலிச உணர்வையும், சோசலிச சிந்தனை முறையையும் ஊட்டி தொழிலாளர்களின் இயக்கத்தோடு இணைந்து செயல்பட்டு ஒரு புரட்சிகரமான தொழிலாளர்களுக்கான கட்சி கட்டப்பட்ட பின்பு, இயக்கத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து கம்யூனிஸ்டுகளின் செயல்துறை விரிவடைந்தது. அதாவது பல்வேறுவிதமான புதிய பணிகளில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பிரச்சாரம், கிளர்ச்சி போன்ற அன்றாடப் பணிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் உருவானது. அத்தகைய புதிய பணிகளை நிறைவேற்றுவதற்கு தேவையான முன்னணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேணடிய நிலையும் ஏற்பட்டது. இத்தகைய குறிப்பிட்ட பணிகளும், தனிச் சிறப்பான போராட்டமுறைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கம்யூனிஸ்டுகளின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான முதன்மையான பணிகளில் கவனத்தை குறைத்துக்கொண்டு அல்லது அதனை கைவிட்டுவிட்டு அன்றாடப் பணிகளிலேயே மூழ்கிவிடுவதற்கான அபாயத்தை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்டார்கள். அதனை முறியடித்து அன்றாட பணிகளை ஒருபுறம் செய்துகொண்டே சோசலிச லட்சியத்திற்கான பணிகளையும் சிறப்பு கவனம் செலுத்தி செய்து சாதனைபடைத்தார்கள்.ஆனால் இந்தியாவில் இடதுசாரிகள் கட்சியை கட்டுவதற்கு உழைக்கும் மக்களுக்கு சோசலிச சிந்தனையும் சோசலிச உணர்வையும் ஊட்டி அந்த மக்களிடமிருந்து முன்னணிகளைத் திரட்டி கட்சியை கட்டவில்லை. மாறாகதன்னியல்பான போராட்டங்களில் ஈடுபட்ட முன்னணிகளை திரட்டியே கட்சியை கட்டினார்கள். இந்த முறையிலேயே தற்போதும் அவர்கள் கட்சியைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் காரணமாக இடதுசாரித் தலைவர்களில் பலருக்கு மார்க்சியம் என்றால் என்ன? கம்யூனிசம் என்றால் என்ன? புரட்சி என்றால் என்ன? என்பது பற்றிய குறைந்தபட்ட அறிவு கூட இல்லாதவர்களாக இருப்பதை நாம் பார்க்கிறோம். சோசலிசம் பற்றிய அறிவில்லாத தலைவர்களால் திரட்டப்படும் மக்களுக்கு சோசலிச சிந்தனையும், சோசலிச உணர்வும் இருக்குமா? இல்லை என்பதே நடைமுறை உண்மையாகும்.
இத்தகைய சோசலிச உணர்வு இல்லாத மக்களை அணிதிரட்டி சோசலிசத்துக்காகப் போராட முடியுமா? போராட முடியாது. ஆகவேதான் இந்தியாவில் மக்களிடையே சோசலிச உணர்வுகள் மங்கி மறைந்து வருவதை நாம் பார்க்கிறோம். இதற்கு காரணம் மக்கள் அல்ல, கம்யூனிச தலைவர்களே காரணமாகும். ரஷ்யாவில் புரட்சிகரமான கட்சி கட்டப்பட்ட பின்பும் அன்றாடப் போராட்டங்களில் மூழ்கி சோசலிசத்திற்கான பணிகளை கைவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை உணர்ந்து ரஷ்ய கம்யூனிஸ்டுகள் அன்றாடப் போராட்டங்களில் மூழ்கிவிடவில்லை.ஆனால் இந்தியாவில் அன்றாட தன்னியல்பான போராட்டங்களிலேயே ஈடுபட்டு இந்திய இடதுசாரிகள் அதில் மூழ்கி, சோசலிச லட்சியத்தை அடைவதற்கான முதன்மையான பணிகளில் கவனம் செலுத்த தவறி அதனை மறந்தே போய்விட்டார்கள். ஆகவே நாம் ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் அனுபவத்திலிருந்து அன்றாடப் போராட்டங்களை நடத்திட வேண்டியது அவசியமே ஆனாலும் அதிலேயே நாம் மூழ்கிவிடக் கூடாது. சோசலிசத்திற்கான நமது முதன்மையான பணியை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. சோசலிச சிந்தனையையும் சோசலிச உணர்வையும் தொடர்ந்து மக்களுக்கு நாம் ஊட்டிக்கொண்டே இருக்க வேண்டும் நமது திட்டம், போர்த்தந்திரம், செயல்தந்திரங்களை மக்களுக்கு விளக்கி அதன் அடிப்படையில் மக்கள் செயல்படுவதற்கான பயிற்சியை மக்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே கம்யூனிஸ்டுகள் தங்களது சோசலிச லட்சியத்தை அடைய முடியும்.
21. தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வளர்ச்சிக்கும், அரசியல் நிறுவன ஒழுங்கமைப்புக்கும் உதவுவதுதான் கம்யூனிஸ்டுகளின் முதன்மையான அடிப்படையான பணி என்கிறது லெனினியம். இந்தப் பணியை பின்னணிக்குத் தள்ளுபவர்கள், எல்லா தனிப்பட்ட பணிகளையும் குறிப்பிட்ட போராட்ட முறைகளையும் இதற்கு கீழ்ப்படுத்த மறுப்பவர்கள் தவறான பாதையில் செல்கிறவர்கள் ஆவார்கள். உழைக்கும் மக்களின் இயக்கத்துக்கு தீங்கு விளைவிப்பவர்கள் ஆவார்கள் என்கிறது லெனினியம். இத்தகைய தீங்குகளை முறியடித்துத்தான் ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சி தனதுநடைமுறைப் பணியை அதாவது உழைக்கும் மக்களின் அரசியல் வளர்ச்சிக்கும் உழைக்கும் மக்களின் நிறுவன அமைப்புகளை சரியானஅரசியல் வழியில் ஒழுங்கமைக்கும் நடைமுறைப் பணிகளை செய்துசாதனை படைத்தது.
ஆனால் இந்தியாவில் இடதுசாரிகள் தொழிலாளர்களின் அரசியல் வளர்ச்சிக்கு எவ்வகையான முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. மேலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அமைப்புகளையும் கம்யூனிஸ்டுக் கட்சி அமைப்புகளையும் சரியான விஞ்ஞான வழியில் ஒழுங்கமைப்பதற்கு மாறாக இடதுசாரித் தலைவர்களின் பேச்சை கேட்டு தலையாட்டும் பொம்மைகளாகவே இருக்கும்படி இயக்குகிறார்கள். ஊழியர்கள் ஏதாவது கேள்வி கேட்டுவிட்டால் அவர்கள் மீது முத்திரை குத்துகிறார்கள். கட்சிக் கட்டுப்பாடு என்று சொல்லி கட்சிக்குள் ஜனநாயகத்தை மறுக்கிறார்கள். இத்தகைய முறையையே கட்சிக்குள் ஒழுங்கமைப்பதற்கான வழி என்று சொல்லி இவர்களும் கட்சிக்குள் சோசலிச சிந்தனையை வளர்ப்பதில்லை, சோசலிச சிந்தனையை வளர்ப்பதற்கு முயற்சி செய்பவர்களைப் பார்த்து அவர்கள் மீது வறட்டுவாதிகள் என்றும் கருத்துமுதல்வாதிகள் என்றும் முத்திரை குத்துகிறார்கள். இந்திய இடதுசாரிகள் மக்களின் அரசியல் வளர்ச்சிக்கு பாடுபடுவதைவிட பிரசுரங்கள் விநியோகிப்பது, போஸ்டர் ஒட்டுவது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, தேர்தலில் ஓட்டு சேகரிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதிலேயே தங்களது காலத்தை கடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே லெனின் கூறியது போல சோசலிச சிந்தனை முறையை மக்களிடம் வளர்த்து திட்டம் போர்த்தந்திரங்களை போதித்து விவாதித்து அதனை ஏற்றுக்கொண்ட உணர்வுள்ள தோழர்களை ஒன்றிணைப்பதன் மூலமே ஒரு புரட்சிகர தொழிலாளர்களின் கட்சியை கட்ட முடியும் என்ற உண்மையைபுரிந்துகொண்டு நாம் செயல்படுவதன் மூலமே இந்தியாவில் ஒருபுரட்சிகரமான தொழிலாளர்களின் கட்சியை நம்மால் கட்ட முடியும்.
22. தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வளர்ச்சிக்கும், அரசியல் நிறுவன ஒழுங்கமைப்புக்கும் உதவ வேண்டிய பணியை மறுப்பவர்கள் எத்தகையவர்கள் என்பதை கீழ்கண்டவாறு லெனினியம் பட்டியலிடுகிறது.
1.தொழிலாளர் இயக்கத்திலிருந்து துண்டிக்கப்பட்டு தனிமைப்பட்டுள்ளசதிவேலைக் குழுக்களாகிய சக்திகளை மட்டுமே அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று புரட்சியாளர்களுக்கு அறிவுறுத்துவோர்,
2. அரசியல் பிரச்சாரம், கிளர்ச்சி, நிறுவன ஒழுங்கமைப்பு ஆகிய இவற்றின் உள்ளடக்கத்தையும் வீச்சையும் குறுகச் செய்துவிடுவோர்,
3. தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் சில குறிப்பிட்ட விதிவிலக்கான தருணங்களில் மட்டும் அதாவது விசேச சந்தர்ப்பங்கில் மட்டும் அவர்களுக்கு அரசியலை விளக்குவது அல்லது தெரியப்படுத்துவதுதான் சரியானது பொருத்தமானது என்று கருதுபவர்கள்,
4. எதேச்சிகாரத்துக்கு எதிராக அரசியல் நடத்திட வேண்டும் என்பதற்கு மாறாக, எதேச்சிகாரத்திடமிருந்து தனிப்பட்ட சில சலுகைகளைப் பெறுவதற்கானகோரிக்கைகளை முன்வைத்து செயல்படுவோர்களும்,
5. தொழிலாளர்களின்கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களில் ஈடுபட்டு, எதேச்சிகார எதிர்ப்பு தொழிலாளர் கட்சியின் முறையான விட்டுக்கொடுக்காதபோராட்டத்தின் நிலைக்கு அந்தப் போராட்டத்தை உயரும்படி உறுதிசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட முயற்சிகள் செய்யாதவர்களும், ஆகிய ஐந்துவகையான நபர்களும் அமைப்புகளும்தான் தொழிலாளர்களின்அரசியல் வளர்ச்சிக்கும், அரசியல் நிறுவன வளர்ச்சிக்கும் தடையாகஇருக்கிறார்கள் என்பதை ரஷ்யாவில் லெனினியம் வலியுறுத்தியது. இந்ததடைகளை எல்லாம் உடைத்தெறிந்தே அங்கே போல்ஷ்விக் கட்சி கட்டப்பட்டு புரட்சி நடத்தப்பட்டது.
ஆனால் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகளும் கம்யூனிச அமைப்புகளும் இத்தகைய தடைகளை எதிர்த்துப் போராடவில்லை. மாறாக இதே தவறுகளைத்தான் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார்கள். தொழிலாளர் இயக்கத்திலிருந்து துண்டிக்கப்பட்ட கம்யூனிச குழுக்களை இங்கு நாம் பார்க்கிறோம். இவர்கள் வர்க்க அமைப்புகளை கட்டுவதும் இல்லை, அல்லது வர்க்க அமைப்புகளில் சேர்ந்து செயல்படுவதும் இல்லை. இவர்களுக்கென்று ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு இவர்களால் திரட்டப்படும் ஒருசில நபர்களுக்கிடையே மட்டும் விவாதித்துக்கொண்டு அதுதான் சரியான கொள்கை என்று கருதி செயல்படுகிறார்கள். அந்த ஒருசில உறுப்பினர்களுக்குக் கூட சோசலிச சிந்தனை முறையையும் சோசலிச அரசியலையும் போதித்து வளர்ப்பதும் இல்லை.
இந்திய பொதுவுடமையாளர்களில் பலரும் அரசியல் பிரச்சாரம் கிளர்ச்சி, நிறுவன ஒழுங்கமைப்பில் புரட்சிகரமான உள்ளடக்கத்தை புரிந்துகொண்டு செயல்படுவதற்கு மாறாக புரட்சிகரமான சாரத்தை மறைத்துவிட்டு செயல்படுவதன் மூலம் அணிகளிடத்திலும் மக்களிடத்திலும் புரட்சிகரமான உணர்வை வளர்ப்பதற்கு மாறாக அதனை மழுங்கடித்துக்கொண்டு இருப்பதை பார்க்கிறோம். சில கம்யூனிச குழுக்களின் தலைவர்கள் மார்க்சியத்தை படிப்பதற்கு, ஒவ்வொரு குறிப்பிட்ட பிரச்சனையின் போதும் அந்தக் குறிப்பிட்ட பிரச்சனையை புரிந்துகொள்வதற்காக மட்டுமே மார்க்சியத்தை படிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் மட்டுமே மார்க்சியத்தை புரிந்துகொள்ள முடியும் என்று வாதிடுகிறார்கள். இவ்வாறான கருத்தைக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு சோசலிசத்தையும் அரசியலையும் போதித்து தொழிலாளர்களின் தத்துவ அரசியல் அறிவை வளர்க்க மறுக்கிறார்கள்.
தொழிலாளர்களும் கட்சி அணிகளும் தங்களது அறிவை வளர்த்துக்கொண்டால் இந்தத் தலைவர்களைப் பார்த்து கேள்வி எழுப்பி விமர்சிப்பார்கள் என்றும் அதன் விளைவாக இவர்களது தலைமையே கேள்விக்குள்ளாகும் என்று அஞ்சுகிறார்கள் என்பதை நாம் பார்க்க முடிகிறது. ஆகவே இத்தகைய தலைமையானது தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும், அல்லது அணிகள் இத்தகைய தலைமையை புறக்கணிக்க வேண்டும்.
இந்தியாவில் உழைக்கும் மக்களை ஒடுக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக புரட்சிகரமான அரசியல் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்பதற்கு மாறாக இந்திய இடதுசாரிகளில் பலர் ஒடுக்கும் அரசாங்கங்களிடமிருந்து சில சலுகைகளை பெறுவதற்கான போராட்டங்களையே நடத்திக்கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம். இத்தகைய தன்மை படைத்த இவர்களைப் போன்றவர்கள் ஒருபோதும் இவர்களது அணிகளுக்கோ அல்லது உழைக்கும் மக்களுக்கோ புரட்சிகரமான அரசியலையும் அரசியல் நிறுவன ஒழுங்கமைப்பின் அவசியத்தை போதித்து வளர்க்க மாட்டார்கள் என்பதையும் நாம் பார்க்கிறோம். ஆகவே உழைக்கும் மக்களை ஒடுக்கும் அரசாங்கங்களை எதிர்த்து சலுகைகளுக்காக மட்டுமல்லாது அந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்த அரசியல் போராட்டங்களையும் நடத்திட வேண்டும். அது மட்டுமல்லாது அந்தப் போராட்டங்களை தொழிலாளர்கள் விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடியாக நடத்தி ஒடுக்குமுறையை அரசாங்கம்கைவிடும்வரை நடத்திட வேண்டும் என்ற உணர்வு நிலைக்கு தொழிலாளர்களின் உணர்வு நிலையை வளர்த்திடுவதற்காகப் பாடுபட வேண்டும். அத்தகைய முறையை கையாளுகின்ற கம்யூனிஸ்டுகள் மட்டுமே தொழிலாளர்களுக்கு சோசலிச அரசியல் உணர்வையும் தொழிலாளர்களுக்கு சோசலிச சிந்தனை முறையையும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து உழைக்கும் மக்களிடமும்
அணிகளிடமும் சோசலிச சிந்தனை முறையை வளர்த்து தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வளர்ச்சிக்கும், அரசியல் நிறுவன வளர்ச்சிக்கும் பாடுபடுவார்கள் என்ற உண்மையை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் உணர
வேண்டும்.
23. ரஷ்யாவில் லெனினை எதிர்ப்பவர்கள் “அணிதிரள்க” என்ற முழக்கத்தை திரும்பத் திரும்ப முழங்கிக்கொண்டு இருந்தார்கள். பொருளாதாரவாதிகளும் இந்த அறைகூவலுக்கு ஆதரவு கொடுத்தார்கள். அந்த முழக்கத்தை லெனின் ஏற்றுக்கொண்டார். எனினும் வெகுஜன அமைப்பாகவும், தொழிற்சங்கமாகவும், புரட்சிகரமான அரசியல் கட்சியாகவும் அணிதிரள வேண்டும் என்றார் லெனின். மேலும் எதேச்சிகார அரசாங்கத்தை எதிர்த்தும், முதலாளித்துவ சமுதாயம் முழுவதையும் எதிர்த்து உறுதியாக போராட வேண்டும் என்பதற்காக அணிதிரள வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு அணிதிரள்களுங்கள் என்ற முழக்கத்தோடு நாம் சேர்த்துக்கொண்டு முழங்க வேண்டும் என்றார் லெனின். வெறுமனேஅணிதிளுங்கள் என்பதோடு நமது நோக்கத்தை தெளிவுபடுத்தி மக்களை ஒழுங்கமைக்காமல் இருந்தால் உழைக்கும் மக்களை ஒரு போதும்உணர்வுப்பூர்வமான வர்க்கப் போராட்டத்தை நடத்தும் அளவுக்கு உயர்த்த முடியாது என்றார் லெனின். இத்தகைய ஒழுங்கமைப்பு இல்லையேல்தொழிலாளர் இயக்கம் சக்தியற்றதாக ஆகிவிடும் என்று லெனின் எடுத்துச் சொன்னார்.
ஆனால் இந்தியாவில் இடதுசாரிகளில் பலரும் அன்று லெனினைஎதிர்த்தவர்களைப் போலவே நடைமுறை வேண்டும் என்றுபுலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன வகையானநடைமுறை வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் பேசிக்கொண்டுஇருக்கிறார்கள். ஆனால் லெனினியவாதிகள் இவர்களைப் பார்த்துசொல்வதெல்லாம் ஆம் நடைமுறை வேண்டும் தான். அதில் எவ்விதமானசந்தேகமும் வேண்டாம். ஆனால் லெனின் கூறியது போல இன்றையசமுதாயத்தின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள கருத்துக்கள், சக்திகள்,நிறுவனங்களைப் பற்றிப் புரிந்து கொண்டு இந்தத் தடைகளை எதிர்த்துஎப்படி, எந்த வகையான மக்களை திரட்டிப் போராட வேண்டும் என்றதெளிவான அரசியலை முன்வைத்துப் போராடும் நடைமுறைதான் நமக்குத்தேவை. இதற்கு மாறாக நம்மை ஒடுக்குபவர்களிடம் சலுகை கேட்டும்போராடும் நடைமுறை நமக்குத் தேவையில்லை. ஆகவேலெனினியவாதிகளான நமக்கு நடைமுறை வேண்டும், அதே வேளையில்நாம் என்ன வகையான நடைமுறையில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கைமற்றும் கோட்பாட்டையும் அதனை செயல்படுத்துவதற்கானநிறுவனங்களையும் உருவாக்கி செயல்படுத்துவதற்கு பொருத்தமானமுறையில் நமது நடைமுறை இருக்க வேண்டும். இத்தகையநடைமுறையின் மூலம்தான் உழைக்கும் மக்களுக்கு வர்க்க உணர்வைஊட்டி வர்க்கப் போராட்டத்தை வளர்க்க முடியும். இதற்கு மாறாக கோட்பாடற்ற நடைமுறையினால் உழைக்கும் மக்களுக்கு வர்க்கஉணர்வை ஊட்ட முடியாது, வர்க்கபபோராட்டத்தையும் வளர்க்க முடியாது.எனினும் நாம் உருவாக்கும் கோட்பாடு மார்க்சியத்தை அடிப்படையாகக்கொண்டிருக்க வேண்டும். முதலாளித்துவ சமுதாயத்தை முழுவதையும்எதிர்த்துப் போராடுவதாக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் மனதில்கொள்ள வேண்டும்.
24. ரஷ்யாவில் தொழிலாளி வர்க்கம் தன்னையும் ரஷ்ய மக்கள்அனைவரையும் அரசியல் பொருளாதார அடிமை வாழ்விலிருந்து விடுதலைசெய்ய வேண்டும் என்றார் லெனின். இதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தின்கடமையானது தன்னை மட்டும் விடுவித்துக்கொள்ளும் குறுகிய நோக்கம்கொண்டதாக இருக்கக் கூடாது என்றும் தொழிலாளி வர்க்கத்தின்கடமையானது விரிவாக அதாவது ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும்விடுவிக்கும் நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதேலெனினியமாகும். ஆனால் இந்தியாவில் இடதுசாரிகள் தொழிலாளர்களின்இந்தக் கடமையை எடுத்துச் சொல்லி தொழிலாளர்களின் உணர்வுகளையும்சிந்தனையையும் வளர்க்கத் தவறி தொழிலாளர்களின் வர்க்கஉணர்வுகளையே மழுங்கடித்துவிட்டார்கள். அதன் காரணமாகவேஇந்தியாவில் உழைக்கும் மக்கள் மட்டுமல்லாமல் தொழிலாளர்களும் அரசியல் பொருளியல் அடிமைத் தனத்திலிருந்து விடுபடாமல் கொத்தடிமைகளாக வறுமையிலும் பட்டினிச் சாவிலும் தினம் தினம்செத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த இழிவான நிலை போகவேண்டுமானால் கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களிடமும் மக்களிடமும்நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அரசியல் பொருளியல் அடிமைமுறையை எதிர்த்துப் போராடி அனைத்து மக்களும் விடுதலைஅடைவதற்காகப் போராட வேண்டும் என்ற உணர்வை மக்களிடம்வளர்ப்பதற்கு பாடுபட வேண்டும்.
25. ரஷ்யாவில் பொது நிதிகளையும், குழுக்களையும், பரஸ்பர நலச்சங்கங்களின் துணை இல்லாமல் தொழிலாளி வர்க்கமானது அதன்மாபெறும் வரலாற்றுப் பணியான தன்னையும் ரஷ்ய மக்கள்அனைவரையும் அரசியல் பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கடியாது என்றார் லெனின். இதன் மூலம் இந்தியாவில் தொழிற்சங்கம்,விவசாய சங்கம், மாணவர் சங்கம், இளைஞர் சங்கம், கம்யூனிஸ்ட் கட்சிஆகியவற்றின் துணை இல்லாமல் இந்திய தொழிலாளி வர்க்கமானது தனதுவரலாற்று கடமையை நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்பதைதொழிலாளி வர்க்கம் உணர வேண்டும். இதற்கு மாறாக தொழிலாளிவர்க்கத்துக்கு தொழிற்சங்கம் மட்டுமே போதுமானது என்றும்,விவசாயிகளுக்கு விவசாய சங்கம் மட்டுமே போதுமானது என்றும்கம்யூனிச குழுவில் செயல்படுபவர்களுக்கு அவர்களின் குழு மட்டுமேபோதுமானது என்றும் கருதக்கூடாது. மேலும் இந்த சங்கங்கள், குழுக்கள்தனது சொந்த நலன்களுக்காக மட்டும் போராடினால் போதும் என்றும்கருதக்கூடாது. ஆகவே இந்த சங்கங்களும் கம்யூனிஸ்டு கட்சியும்ஒன்றிணைந்து உழைக்கும் மக்களின் வரலாற்று கடமையான அனைத்துமக்களையும் அரசியல் பொருளியல் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்போராட வேண்டும் என்று உணர வேண்டும். அத்தகைய உணர்வையும்சிந்தனை முறையையும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு உணர்த்திவிழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.இதற்கு மாறாக ஒவ்வொரு கம்யூனிச குழுக்களின் தலைவர்களும்தங்களது சொந்த பெருமைகளையும் சொந்த அறிவையும் பறைசாற்றும்விதமான உணர்வுகளை அணிகளுக்கு ஏற்படுத்துவதால் எவ்விதமானபயனும் உழைக்கும் மக்கள் பெற முடியாது.
26. வரலாற்றில் எந்த வர்க்கமும், ஓர் இயக்கத்துக்கு ஏற்பாடு செய்துஅதற்கு தலைமை தாங்கி எடுத்துச் செல்ல வல்ல தலைவர்களை, தனதுஅரசியல் தலைவர்களை, தனது முக்கியமான பிரதிநிதிகளை உருவாக்காமல் ஆட்சி அதிகாரம் பெற்றதில்லை என்றார் லெனின். இதன்மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?. இந்தியாவில் உழைக்கும்வர்க்கமானது தனது அரசியல் அதிகாரத்தைப் பெற்று வெற்றிபெறவேண்டுமானால், உழைக்கும் வர்க்கத்துக்கு தலைமை தாங்கி வழி நடத்தக்கூடிய தலைவர்கள் வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அத்தகைய தலைவர்கள் இல்லை என்றால் உழைக்கும் வர்க்கம் விடுதலை பெற முடியாது.இந்தியாவில் இன்றுவரை உழைக்கும்வர்க்கமானது அரசியல் பொருளியல் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைபெறமுடியாமல் இருப்பதற்கான பல காரணங்களில் ஒன்றுதான் இந்தஉழைக்கும் மக்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்தும் தலைவர்கள்இல்லை என்பதுதான். உண்மையில் உழைக்கும் மக்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்தும் தலைவர்கள் இந்தியாவில் இருந்திருந்தால் அதாவது ரஷ்ய போல்ஷ்விக் தலைவர்களைப் போல, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைப் போன்ற தலைவர்கள் இருந்திருந்தால் இந்தியாவில் உழைக்கும் மக்கள் மிகவும் இழிவான நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பார்கள்.
ஆகவே இந்தியாவிலுள்ள உழைக்கும் மக்களின் அரசியல், பொருளியல் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கத் தகுதியான தலைவர்கள் உருவாக வேண்டியதன் அவசியத்தை கம்யூனிஸ்டுகள் உணர வேண்டும். அத்தகைய தலைவராக வளர வேண்டும் என்று ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளும் சபதம் ஏற்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு கம்யூனிஸ்டும் மார்க்சிய சோசலிச சிந்தனை முறையை வளர்த்துக்கொள்ள வேண்டும், சர்வதேச புரட்சிகளின் வரலாற்றை படிக்க வேண்டும், மார்க்சிய ஆசான்களது போதனைகளைகளிலிருந்து அதன் பொதுத் தன்மையை நமது சிந்தனைக்கும் நடவடிக்கைக்கும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.தனது அமைப்பின் தலைவருக்கு தலையாட்டி பொம்மையாக இருப்பதிருந்தும், எதற்கும் தமது தலைமையை மட்டுமே சாராமல் மார்க்சிய கண்ணோட்டத்திலிருந்து சுயமாக சிந்திக்கும் அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
முதலாளித்துவ கட்சி போல் ஒரு தலைவருக்கு கட்டுப்பட்ட கட்சி அல்ல கம்யூனிஸ்ட் கட்சி, அதற்கு மாறாக பல
தலைவர்களைக் கொண்ட கட்சிதான் கம்யூனிஸ்டுக் கட்சி என்பதையும் கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள ஒவ்வொருவரும் மக்களுக்கு தலைமை தாங்கி மக்களை திரட்டும் கடமையைச் செய்யும் தலைவர்களாக வளர வேண்டும் என்பதை உணர வேண்டும். அவ்வாறு ஒரு கட்சியில் பல தலைவர்களை உருவாக்கினால் மட்டுமே அந்தக் கட்சியால் உழைக்கும் மக்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்திட முடியும். ஆகவே நாம் மார்க்சிய சோசலிச சிந்தனை முறையை வளர்ப்போம் பல கம்யூனிச தலைவர்களை உருவாக்கி வளர்ப்போம் என்று முழங்குவோம்.
27. ரஷ்யாவில் மார்க்சிய சோசலிச சிந்தனை முறையின் அடிப்படையிலும் ரஷ்யாவின் அரசியல் பொருளியல் வரலாற்றை அலசி ஆராய்ந்து ரஷ்யபோல்ஷ்விக்குகள் ஒரு வேலைத் திட்டத்தை உருவாக்கி அதனைஅணிகளுக்கும் மக்களுக்கும் போதித்து அதன் அடிப்படையில் கட்சியின்பணிகளை தீர்மானித்து உறுதியாகப் பாடுபட்டதாலும், அவர்களதுவேலைத்திட்டம் விஞ்ஞான அடிப்படையில் இருந்ததாலும் ரஷ்ய போல்ஷ்விக்கும் அவர்களது லட்சியத்தில் வெற்றி பெற்றார்கள். ஆனால்இந்தியாவிலுள்ள இடதுசாரிகள் மார்க்சிய சோசலிச சிந்தனைமுறையையும் வளர்த்துக்கொள்ள வில்லை, இந்திய அரசியல் பொருளாதார வரலாற்றையும் புரிந்துகொள்ளாமல் தான்தோன்றித்தனமாக வேலைத்திட்டத்தை உருவாக்கி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.ந்டைமுறையில் அவர்களது வேலைத்திட்டம் தவறானது என்று நிரூபிக்கப்பட்ட பின்பும் ரஷ்ய போல்ஷ்விக்குகள் வேலைத்திட்டத்தைஎவ்வாறு உருவாக்கினார்கள் என்பதை புரிந்துகொண்டு விஞ்ஞானவகைப்பட்ட வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கு முயற்சி செய்ய தொடர்ந்து மறுக்கிறார்கள். ஆகவே இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் ரஷ்ய போல்ஷ்விக்குகளைப் பின்பற்றி தனது வேலைத்திட்டத்தைஉருவாக்கி செயல்பட முன்வராதவரை அவர்களால் இந்திய மக்களை அரசியல் பொருளியல் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க முடியாது. இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல் குறுங்குழுவாதிகள் குண்டுசட்டிக்குள்குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளேயேசொறிந்துவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே இந்தியாவில்தற்போதைய உடனடி அடிப்படை பணியானது அணிகளிடம் மார்க்சியசோசலிச சிந்தனையை வளர்ப்பது அதன் அடிப்படையில் இந்தியப்புரட்சிக்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவது, இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்டுகளை ஒன்றிணைத்து ஒருபுரட்சிகரமான புதிய வகைப்பட்ட கட்சியை கட்டுவதுதான் முதன்மையானஉடனடியான பணியாகும். இதனை உடனடியாக சாதித்துவிட முடியாதுஎன்பது உண்மைதான். இந்தக் கடமையை செய்து முடிக்க வேண்டும் என்றலட்சியத்தை ஏற்றுக்கொண்டு அதற்கான பணியினை தற்போதுள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி செய்துகொண்டே பிற பணிகளை நாம் செய்ய வேண்டும்.
அதற்கு மாறாக பிற பணிகளை மட்டும் செய்துகொண்டு இந்த முதன்மையான அடிப்படையான பணிகளில் கவனம் செலுத்தாமல் புறக்கணித்தால் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்தியாவிலுள்ள உழைக்கும் மக்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைக்காது என்பதை கம்யூனிஸ்டுகள் உணர வேண்டும்.
28. ரஷ்யாவில் தமது ஓய்வு நேரங்களில் மட்டுமல்லாது தனது வாழ்நாள் முழுவதையும் புரட்சிப் பணிகளில் ஈடுபடும் முழுநேரப் புரட்சியாளர்களைநாம் உருவாக்கி பயிற்றுவிக்க வேண்டும் என்றார் லெனின். நமக்கு முன்னால் பலவேறுவிதமான பணிகள் இருக்கின்றன என்றும் ஒவ்வொருவிதமான பணிகளைச் செய்வதற்கு தகுதியான நபர்களை நாம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வேலைப் பிரிவினையின் அடிப்படையில்வேலை கொடுக்கக் கூடிய அளவுக்கு நமது கட்சிக்குள் அணிகளை சேர்த்துகட்சியை வளர்க்க வேண்டும் என்றார். அத்தகைய முறையிலேயே ரஷ்யபோல்ஷ்விக்குகள் செயல்பட்டு வெற்றி கண்டார்கள். ஆனால் இந்தியாவில்ஒருசில பெரிய கட்சிகளைத் தவிர பிற சிறு குழுக்களில் போதுமானஅளவுக்கு முழுநேரப் புரட்சியாளர்கள் கிடையாது. பெரும்பாலான கம்யூனிசஅமைப்புகளில் கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டிய பணிகள் என்னென்னஎன்பதே தெரியாது. அத்தகைய பணிகளைச் செய்வதற்கு தகுதியுள்ளநபர்களை தேடுவதும் இல்லை, அவர்களுக்கு வேலைப் பிரிவினைஅடிப்படையில் பணிகளை ஒதுக்குவதும் இல்லை. இவ்வாறுகம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டிய பல பணிகளை செய்திடாமலேயே பல்வேறுவிதமான பணிகளைச் செய்து உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி சதித்தனமாக ஆண்டுகொண்டிருக்கின்ற பிரமாண்டமான அரசு அதிகார அமைப்பை இந்த இடதுசாரிகளால் வீழ்த்த முடியாது. ஆனாலும் இந்திய அரசெனும் பிரமாண்டமான அமைப்பை வீழ்த்தமுடியாது என்று நம்பிக்கை இழந்த தலைவர்கள்தான் இந்திய இடதுசாரித்தலைவர்களாக உள்ளனர். ஆகவே இளைய சமுதாயத்திலிருந்து உருவாகும்தலைவர்கள் இந்த பிரமாண்டமான அமைப்பை உணர்வுபெற்ற உழைக்கும் மக்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு அதற்காக நாம் செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிட்டு அப்பணிகளைசெய்வதற்கு தகுதி படைத்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குஅந்தப் பணிகளை கொடுத்து அதன் அடிப்படையில் கொள்கை முடிவெடுத்துமக்களை திரட்டிப் போராட வேண்டும். நிச்சயமாக அதன் மூலம் இந்தபிரமாண்டமான அரசு அமைப்பை நாம் வீழ்த்தி உழைக்கும் மக்களின்விடுதலைக்கான பிரமாண்டமான அரசை நம்மால் உருவாக்க முடியும்.
29. ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகள் தங்களது வேலைத்திட்டத்தையும்போர்த்தந்திரத்தையும் உருவாக்கிவிட்டு அதற்குள்ளேயே தங்களதுபணிகளை முடக்கிக்கொள்ளக் கூடாது என்றார் லெனின். சூழ்நிலையைகணக்கிலெடுத்து தனது கட்சியின் வலிமைக்கு ஏற்ப சாத்தியமானஅளவுக்கு சிறந்த பலன்களை கொடுக்கும் வகையில் எல்லா வகையானபோராட்ட முறைகளையும் கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டும் என்பதேலெனினியம் ஆகும். ஆனால் இந்தியாவில் இடதுசாரிகள் இந்த லெனினியமுறையை கடைபிடிக்கவே இல்லை. உதாரணமாக இந்திய விவசாயிகள்ஓர் ஆண்டாகப் போராடினார்கள். அந்தப் போராட்டத்தை இந்தியஇடதுசாரிகள் பயன்படுத்தி இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சனையைஎடுத்துச் சென்று அதற்கு ஆதரவை திரட்டி இந்திய மக்கள் விரோதஆட்சியை அம்பலப்படுத்தவில்லை. கம்யூனிஸ்டுகள் அவர்களுக்குகிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தனது கட்சியின் பலத்துக்கு ஏற்பபயன்படுத்த வேண்டும் என்ற லெனினியக் கொள்கையை இவர்கள்புரிந்துகொள்ளவும் இல்லை, அதனை செயல்படுத்தவும் இல்லை. இங்குள்ளஇடதுசாரிகள் முநூலை பயன்படுத்தக் கூடாது என்றும் அதில்எல்லாவற்றையும் விவாதிக்கக் கூடாது என்கிறார்கள். அதில் அமைப்புபற்றிய சில பிரச்சனைகளை விவாதிக்கக் கூடாது என்பது சரிதான். அதுஎன்ன என்பதை குறிப்பாக நாம் புரிந்திருக்க வேண்டும். அதாவதுஅமைப்பிலுள்ள தனிநபர்களைப் பற்றி விவாதிக்கக் கூடாது. அமைப்பிலுள்ளதனிநபர்களை பாதுகாக்க வேண்டும் என்பது அவசியமே ஆகும். ஆனால்ஒவ்வொரு அமைப்பின் கொள்கைகளை விவாதிக்கக் கூடாது என்றால் அதுதவறானதாகும். ஒவ்வொரு அமைப்பின் நிலைபாடுகளை விவாதிப்பதற்கென்ற ஒரு பொது மேடையை உருவாக்குவதற்கு மறுக்கும் அதற்கான முயற்சியில் ஈடுபடுவதை தவிர்க்கும் இவர்கள்தான் முகநூலைபயன்படுத்தக் கூடாது என்கிறார்கள். ஆனாலும் அவர்களதுநோக்கங்களுக்காக இந்த முகநூலை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே கம்யூனிஸ்டுகளுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதி முகநூலை பயன்படுத்திட வேண்டும் என்பதே லெனினியமாகும். இந்தவாய்ப்பை முதலாளிகள் தொடர்ந்து நமக்கு வழங்க மாட்டார்கள். இந்தியாவில் சில பகுதிகளில் மக்கள் எழுச்சி பெறும் போது வலைதளங்களை முடக்குவதை நாம் பார்க்கலாம். ஆகவே நமக்குகிடைக்கும் வாய்ப்புகளை உழைக்கும் மக்களின் நலனிலிருந்துபயன்படுத்துவதுதான் விஞ்ஞான முறையாகும்.
30. ரஷ்யாவில் பலம்வாய்ந்த அரசை வீழ்த்துவதற்கு நமக்கு ஒருபலம் வாய்ந்த கட்சி அவசியம் என்றார் லெனின். பலம் வாய்ந்த கட்சியால் ஒரு பகுதியில் நடத்தப்படும் சிறு போராட்டம் கூட பெரிய அளவில் நாடு தழுவிய பெரிய போராட்டமாக மாறும் என்றார் லெனின். தனியொருஇடத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறலாம். அதோடு நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது என்றும் இந்த வெற்றியானது போராட்டத்தின் துவக்கம்தான் என்றும் இனிமேல் தான் முழுமையான போரை நாம் நடத்திட வேண்டியுள்ளது என்பதை மக்களுக்குகம்யூனிஸ்டுகள் உணர்த்த வேண்டும் என்றார் லெனின். நமக்கு முன்புபகைவனது கோட்டையானது முழு பலத்துடன் வளர்ந்து நிற்கிறது அந்தக்கோட்டைய தகர்ப்பதன் மூலமே அதற்காக நாம் நடத்தும் போரின் மூலமேநமது வெற்றி உறுதிப்படும் என்றும் அதற்காக நமக்கு பலமான கம்யூனிஸ்ட் கட்சி வேண்டும் என்றும் அந்தக் கட்சியின் தலைமையில்ரஷ்யாவிலுள்ள புரட்சிகரமான, ஜனநாயக சக்திகளையும் இணைத்துப்போராடுவதன் மூலமே மக்களுக்கு எதிராக வளர்ந்துள்ள இந்தக்கோட்டையை தகர்க்க முடியும் என்றார் லெனின். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இந்திய அரசானது இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள பிரமாண்டமான கோட்டையாகும். இந்தக் கோட்டைய தகர்க்காமல் இந்திய உழைக்கும் மக்களின் அரசியல் பெருளியல் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைக்காது. ஆகவே இந்தபிரமாண்டமான கோட்டையை வீழ்த்துவதற்கு நமக்கு பலம்வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சி தேவை. தற்போது பல குழுக்களாக சிதறுண்டுள்ள கம்யூனிச குழுக்கள் எல்லாம் மறைந்திட வேண்டும். கம்யூனிச உணர்வுள்ளவர் அனைவரும் ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்குள் இணைந்திடவேண்டும். கம்யூனிஸ்டுகள் அனைவரும் மார்க்சிய சோசலிச சிந்தனைமுறையை வளர்த்துக்கொண்டு அதன் அடிப்படையில் சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி ஒரு விஞ்ஞானப்பூர்வமான வேலைத்திட்டம்,போர்த்தந்திரம் அமைப்புக் கோட்பாட்டை உருவாக்கி அதனைஏற்றுக்கொண்டவர்களைக் கொண்டு கட்சியை கட்டிட வேண்டும். ஆகவேதொகுத்துச் சொன்னால் அனைத்து கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமையின் அடிப்படையில் ஒரு புரட்சிகரமான கட்சியை கட்டுவதே நமதுமுதன்மையான அடிப்படையான பணியாக நம்முன் உள்ளது. இதற்குத்தடையாக நம்மிடம் குட்டிமுதலாளித்துவ குறுங்குழுவாத சிந்தனைமுறை தடையாக உள்ளது. ஆகவே குறுங்குழுவாத சிந்தனைமுறைக்கு எதிராகப்போராடி ஒரு பலம்வாய்ந்த புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சியை கட்டி எழுப்புவோம்.-தேன்மொழி
நமது நடைமுறைக்கான மார்க்சிய கோட்பாடுகளை புரிந்துகொள்வோம். பகுதி-1 என்ற கட்டுரையில் இறுதியில் இணைக்க வேண்டியது. வெகுஜனங்களிடையை கட்சிப் பணி என்ற லெனினது நூலில் முதல் பதினைந்து பக்கங்களில் எழுதப்பட்ட கருத்துக்களிலிருந்து இந்த கட்டுரை உருவாக்கப்பட்டது. தேன்மொழி.
சில குறுங்குழுவாதிகள் தன்னுடைய குழுவைத் தவிர வேறு குழுக்களோடு இணைவதற்கு முன்வருவதில்லை. ஒரு சமயம் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் இத்தகைய குறுங்குழுவாதிகள் சிலர் இருந்தார்கள் என்றும் அவர்களால் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் வழியில் தடை எற்பட்டது என்று மாவோ விளக்கியுள்ளார்.
இத்தகைய குறுங்குழுவாதத்தை முறியடிப் பதற்கு விரிவான அளவில் கட்சி உறுப்பினர் களுக்கு இடையில் கட்சிக் கல்வியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் மாவோ. இதன் மூலம் குறுங்குழு வாதத்தின் அபாயத்தையும், அதிலிருந்து விடுபட வேண்டுமானால் கட்சியின் அணிகளுக்கு மார்க்சிய போதனையின் அவசியத்தை மாவோ எடுத்துச் சொன்னார். ஒரு பலம் வாய்ந்த கட்சிக்கே ஆபத்தானது இந்த குறுங்குழுவாதமாக இருக்கின்ற போது, இந்தியாவில் நிலவுகின்ற குழுக்களில் இந்த குறுங்குழுவாதம் எந்தளவு பாதிப்பைக் கொடுக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் நீண்ட காலமாக கம்யூனிஸ்டுகள் பிளவுபட்டு இருக்கும் சூழலில், குறுங்குழுவாதத்திற்கு இவர்கள் பழக்கப்பட்டு அது இயல்பானது என்று குறுங்குழுவாதத்தில் ஊறிப்போய்விட்டனர். அதன் விளைவாக உழைக்கும் வர்க்கம் தனது பலத்தை இழந்து மிகவும் பலவீனமான நிலையில் எதிரிகளை எதிர்த்துப் போராட முடியாமல் எதிரிகளுக்கு அடிமைகளாக இருக்கும் ஒரு பரிதாபமான நிலையை இந்த குறுங்குழுவாதிகள் ஏற்படுத்திவிட்டார்கள். அதன் காரணமாகவே பாசிஸ்டுகள் மக்களின் மீது மிகக் கடுமையாக தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். இந்த கொடுமைக்கு பாசிஸ்டுகள் மட்டும் காரணம் இல்லை. கம்யூனிச அமைப்புகளிலுள்ள குறுங்குழு வாதிகளும் ஒரு காரணமாகும். ஆகவே கம்யூனிச குழுக்கள் இந்த குறுங்குழு வாதத்திலிருந்து மீளாதவரை உழைக்கும் மக்களுக்கு வாழ்வு இல்லை. எல்லா வகையான குறுங்குழுவாதத்திற்கும் அகவயவாதமே (எண்ணமுதல்வாதமே) அடிப்படையாகும் என்றார் மாவோ. அதாவது தனது மனதிற்குப் பட்டதே உண்மையானது என்றும் பிறர் சொல்வதில் உண்மைகள் எதுவும் இல்லை என்று கருதும் சிந்தனைப் போக்குதான்இதற்கு காரணம் என்பதாகும். இத்தகைய சிந்தனை படைத்தவர்கள் பிறர் சொல்லும் கருத்துக்களை காதுகொடுத்தும் கேட்க்கமாட்டார்கள். தான் சொல்வதை மட்டுமே பிறர் கேட்க்க வேண்டும் என்று கருதுவார்கள். புறநிலை எதார்த்தத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அதன் காரணமாகவே இவர்கள் பிறறோடு தோழமையாகப் பழக மாட்டார்கள். தனது கருத்துக்கு மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களை எதிரிகளாகவே பார்ப்பார்கள். இத்தகைய சிந்தனைப் போக்குள்ளவர்களால் ஒற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இத்தகைய தன்மை படைத்தவர்களால் ஒரு பலம்வாய்த கட்சிக்கே கேடு விளையும் .
No comments:
Post a Comment