நமது மூத்த தோழர்களே மார்க்சியத்தை குழப்பும் வேலையில் ஈடுபட்டுள்ள போது நமக்கான சரியான புரிதலை நமது ஆசான்களிடமிருந்தே கற்க வேண்டிய தேவை உள்ளது. அதில் ஒன்று மொழி...
இதனை பற்றி விரிவாக பேச வேண்டும் தற்பொழுது சுருக்கமாக இங்கேப்பார்ப்போம்.
மொழியின் அடிப்படையில் நாம் தமிழகத்தில் தினம் தினம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்கு முதலில் மொழியை பற்றி மார்க்சிய- லெனினிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் தெரிந்துக் கொள்ள முயற்சிப்போம்.
மொழி என்பது மூளையிலிருந்து பிறக்கின்றது அது மக்களின் தொடர்பிற்கான கருவியாக பணியாற்றுகிறது. மொழி சிந்தனையின் வெளிப்பாடு ஆகும். சிந்தனை என்பது இயற்கை பொருள்கள் மீதான புலன் உணர்வுகளின் பிரதிபலிப்பு. எனவே மொழியையும் சிந்தனையும் பிரிப்பது கருத்து முதல் வாதமாகும். கருத்து முதல்வாதிகளின் சிந்தனைகளும் கூட மூளை எனும் பொருளிலிருந்து தான் உதிக்கின்றன.
"சிந்தனையின் நடைமுறை வடிவமே மொழி" என்கிறார் மார்க்ஸ். மொழி என்பது எல்லா சமூகத்திலும் அந்த குறிப்பிட்ட சமூகத்தின் பொதுவானது மொழி சமூகம் உருவாகும்போது உருவாகிறது. சமூகம் அழியும் போது மொழியும் அழிகிறது. இதன் மூலம் மொழியானது அனைத்து வர்க்கங்களுக்கும் பொதுவானது என்பதை அறியலாம்.
அடிக்கட்டுமானத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மொழியின் அடிப்படைகளை மாற்றி விடுவதில்லை மாறாக மொழியின் சில சொற்தொகுதிகள் இலக்கண அமைப்புகள் மட்டுமே சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. மொழியானது வர்க்க சார்பற்றது எல்லா வர்க்கங்களுக்கும் பொதுவானது.
சுரண்டும் வர்க்கம் சுரண்டப்படும் வர்க்கம் இரண்டிற்கும் மொழி பொதுவானது. இரண்டு வர்க்கங்களுக்கு இடையில் மொழி பயன்பாடு மாறுமேயன்றி மொழி அன்று. சுரண்டும் வர்க்கம் எதிர் புரட்சிகர கருத்துகளை பேசினால் சுரண்டப்படும் வர்க்கம் புரட்சிகர கருத்துக்களை பேசும் அவ்வளவுதான்.
தோழர் ஸ்டாலின் புதிய சோசலிச அமைப்பின் எழுச்சியால் அரசு, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தொடர்புடைய சில சொற்களில் மாற்றம் நிகழ்ந்ததே தவிர மொழியின் அடிப்படையில் ஏதும் மாற்றம் ஏற்படுவதில்லை என்று சுட்டிக் காட்டுகிறார். புரட்சிக்கு முன்னும் பின்னும் நீர் நிலம் வானம் பறவை போன்ற பல சொற்கள் மாறாமல் உள்ளது போலவே இந்த சொற்கள் எல்லா வர்க்கத்திற்கும் பொதுவானது தான். மொழியை உற்பத்திக் கருவியோடு ஒப்பிடுகிறார் ஸ்டாலின் மொழி மேற்கட்டுமானத்திலிருந்து அடிப்படையில் மாறுபட்டாலும் உற்பத்தி கருவியிலிருந்து மாறுபடுவதில்லை . உற்பத்தி கருவி எங்கனம் எல்லா வர்க்கங்களையும் சமமாக பாவிக்கின்றதோ அங்கனமே மொழியும் எல்லா வர்க்கங்களையும் சமமாக பாவித்து பணியாற்றுகிறது. ஆனால் இதைத் தாண்டி உற்பத்திக் கருவிக்கும் மொழிக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை என்கிறரார் ஸ்டாலின்.
ஏனென்றால் மொழியானது சொற்தொகுதிகளையும் இலக்கண அமைப்புகளும் தவிர வேறு எதையும் உற்பத்தி செய்வதில்லை. ஆக மொழி சமூகம் முழுமைக்குமானது இந்தப் பண்பில் இருந்து மொழி விலகுமானால் அல்லது விலக்கிவைக்கப்படுமானால் மொழி அழியத் தொடங்குகிறது என்பது தெளிவு.
மேற்கட்டுமானம் உற்பத்தியோடு நேரடியாக தொடர்புடையது அன்று; அது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை பொறுத்து மாற்றத்திற்கு உள்ளாகிறது ஆனால் மொழி உற்பத்தியோடு நேரடியாக தொடர்புடையது.
அதாவது மொழி அடிக்கட்டுமானத்தில் ஏற்படும் மாற்றங்களுக்காக காத்திருப்பதில்லை மாறாக உற்பத்தியால் ஏற்படும் மாறுதலுக்கேற்ப தன்னை பிரதிபலிக்கின்றது. விவசாயம், வர்த்தகம், தொழில்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப மொழியானது நேரடியாக தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. புதுப்பித்துக் கொள்ளாமல் தவறுமேயானால் மொழியில் சீர்குலைவு ஏற்படும்.
பூர்ஷ்வா கலாச்சாரம் பாட்டாளி வர்க்க கலாச்சாரம் என கலாச்சாரத்திற்கு வர்க்க பண்பு உண்டு என்ற லெனின் மேற்கோளை, மொழிக்கும் பொருத்தி அதற்க்கும் வர்க்க தன்மை உண்டு என்று வாதிடுவர்களை ஸ்டாலின் கண்டிக்கிறார்.
இந்தியாவில் வர்க்க தன்மை கொண்ட கலாச்சாரத்தை வர்க்க தன்மையற்ற மொழிக்கு பொருத்தி அன்றைய காலனி ஆதிக்கவாதிகளின் ஒடுக்குமுறையை இன்றைய சமஸ்கிருத மயமாக்கள் தேசிய மொழிகளை ஒடுக்கும் வேலை செய்கிறது.
காலனிய ஒடுக்குமுறை மற்றும் தேசிய இன ஒடுக்குமுறை நிலவுகின்ற அரசமைப்பில் மொழி கலப்பு மற்றும் மொழி ஆதிக்கம் நிகழ்கிறது. ஆனால் அவை புதிய மொழியை உருவாக்குவதில்லை வெற்றி பெரும் மொழி வாழும், தோல்வியடையும் மொழி வீழும். இதையையே, "மொழிக்கலப்பால் மூன்றாவது மொழி உருவாகாது" என்கிறார் தோழர் ஜே.வி. ஸ்டாலின்.
இங்கே ஆரிய திராவிட சண்டையில் மக்களை மூடர்களாக வைத்துள்ள சில முற்போக்காளர்கள் அன்றைய ஏகாதியபத்திய கருத்தாங்களை கூர்முனை தீட்டி தங்களின் முற்போக்கிற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர் உண்மையாலுமே மார்க்சியம் மொழியை பற்றி மிகத் தெளிவாக பேசும் பொழுது சில மார்க்சிய பூசாரிகளும் ஆரிய திராவிட ஆங்கிலேய ஆட்சியர்களின் கருத்தில் மருவி. மார்க்சிய மொழியியல் கொள்கையை புரிந்துக் கொள்ளாமல். காலனிய ஆதிக்கவாதிகளின் இனவியல் கோட்பாட்டிற்கு இறையாகி. ஆரிய இனம் திராவிட இனம் ஆரிய மொழி திராவிட மொழி என்ற அவர்களின் திணிப்பை ஏற்று மக்களை ஏய்த்துக் கொண்டுள்ளனர். மொழி பற்றி அடிப்படை புரிதல் அற்ற இவர்கள் பல்வேறு மொழிகளை ஒன்றிணைக்கும் காலனிய கருத்தாக்கத்தை எற்கும் சுமக்கும் அவலம்... விரிவாக பின்னர் தொடர்வோம் அதற்குமுன் இங்கு பயன்பாட்டில் உள்ள ஆரிய இனம் திராவிட இனம்- ஆரிய திராவிடம் பற்றி சற்று தெளிவடைவோம் அடுத்த பகுதியில் தோழர்களே.
இங்கே ஆரிய இனம் திராவிட இனம் தேடும் தோழர்களுக்கு ஒரு சிறிய பதிவு இனம் பற்றி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மோடி ஆட்சியின் கொடுமையால் பல தோழர்கள் அவனின் சித்தாந்ததை எதிர்பதன் பெயரில் அவனின் பிரிவினர்களை ஒரு இனமாக சுருக்கி விடுகின்றனர். இது எவ்வளவு அபத்தம் என்று விளக்க சில நாட்களுக்கு முன்னர் முயற்சித்தேன் இருந்தும் நேரமின்மையால் உடனடியாக எழுத முடியவில்லை.
பிராங்க்பார்ட்டின் ஒரு பேராசிரியை இனங்களை பற்றி ஒரு முகநூலில் ஒரு பதிவு எழுதியிருந்தார் நமது சில தோழார்களும் அதில் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர். ஆனால் என்னிடம் அப்பொழுது நேரமின்மையால் வாசித்து கடந்து சென்றுவிட்டேன் முடிந்தால் அந்த பகுதியை பகிர்ந்து அந்த பகுதியோடு விவாதிப்போம்.
சரி விவாதிக்க வேண்டியது என்ன? இனம் என்பதனை பற்றி சற்று புரிந்துக் கொள்ளுங்கள்.
ஒரே மூலத்தில் பிறந்தவர்கள் பல்வேறு காரணங்களால் உலகெங்கும் வாழ முனைகின்றனர். காலனிய சுரண்டல்வாதிகள் தங்களை மேலானவர்களாக காட்டிக் கொள்ளவும் ஆங்காங்கே இருந்த மக்களை பிரித்து வைக்கவும் வகுத்த கொள்கைதான் இவை என்று மாஸ்கோவில் கம்யூனிஸ்ட் கட்சி 1969 வெளியிடுகிறது அதேபோல் யூனஸ்கோ 1964ல் மனித இனப் பிரச்சினையின் உயிரியல் அம்சங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று அதன் அடிப்படையிலே தற்கால மனிதர்கள் அனைவரும் HOMO SAPIENS எனும் ஒரே வகையை சேர்ந்தவர்களே என்று உலகில் எல்லா நாடுகளுக்கும் அறிவிக்கிறது. இதனை இதுவரை புரிந்துக் கொள்ள முயற்சிக்காத நமது தோழர்கள் இன ஆராய்ச்சியில் இறங்குகின்றனர். அவை யாரின் நலனுக்கானது என்று புரியாமலே மக்களை பிரிவினை ப்டுத்தும் அவர்களுக்கு துணை போகின்றனர்.
சரி நமக்கான புரிதலுக்கு சில தேடல்.
இன்று மனிதன் உலகெங்கும் பரவி பல்வேறு சூழல் காரணமாக பிரிந்து வாழும் பொழுது ஏற்பட்டுள்ள புறகாரணங்களை கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது தோழர்களே.
மனித குல வளர்சியை புரிந்துக் கொள்ள ஒரு குழந்தையின் தேடுதலும் ஆழ்ந்த விருப்பமும் இருந்தால் மட்டுமே இவை சாத்தியம் என்று நினைக்கிறேன் தோழர்களே...
விஞ்ஞான வளர்ச்சியும்,புதிய கண்டுபிடிப்புகளும் உலகத்தை மின்னல் வேகத்தில் முன்னெடுத்துச் சென்றுக் கொண்டுள்ளது. ஆனால் அவை அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளதா என்றால்? இல்லை எனலாம்; அதில் சில பயன்கள் எல்லோருக்கும் இருந்தாலும் கூடுதலாக முதலாளித்துவ வாதிகளின் சுரண்டலுக்கு அதி முக்கியதுவமாக இருக்கிறது.
ஒடுக்கும் ஆளும் வர்க்க தேவைக்காக நாட்டில் பெரும் பகுதி மக்கள் ஜாதி, மத நம்பிக்கை மூடப்பழக்க வழக்கங்களின் காரணமாக அறியாமையில் மூழ்கடித்துள்ளுது என்பேன்.
மனித குலத்தின் ஆரம்பகாலம்
மனிதனின் வளர்ச்சி போக்கை அறியும் நாம் மனிதன் மூலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அவன் விலங்கினத்தை சேர்ந்தவன் என்பதில் ஐயமில்லை. அவன் ஹோமோசெபியன் (Homo sapien) எனும் வகையினத்தை சார்ந்தவன். ஆதியில் ஒரே பூர்வமனித குலத்தின் வழிவந்த மனிதன் அதன் ஒவ்வொரு நிகழ்விலும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறியும் வளர்ந்தும் வந்துள்ளான். அவன் ஒன்று கலந்து வளர்ச்சியில் இன்று பல பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து இனம், மதம், மொழி, பிரதேசம், ஏன் ஜாதி என்று பிளவுண்டு கிடக்கிறோம். இயற்கையின் இந்த நியதிப்படி அனைத்து மனிதர்களும் ஒரேவகைபிரிவை(இனத்தை) சேர்ந்தவர்கள். விலங்கு இனங்களின் சில வகையினம் வேறு வகையினதுடன் சில வேளைகளில் சேரக்கூடும், ஆனால் அவ்வாறு சேர்ந்தால் அவைஅவையாக இருப்பதில்லை வேறாகதான் இருக்கும்; அத்துடன் அவை அநேகமாகக் கலந்து உருப்பெறுவதில்லை. ஆனால் மனித வகைகள் அல்லது இனங்கள் பொதுவாகக் கலந்து உருவாகக்கூடியன. ஒரேவகையை சேர்ந்தவர்கள் எனும் அடிப்படையில் ஒரேபிரிவின் (இனத்தின்) எந்த ஆணும் எந்த பிரிவு பெண்ணுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்யமுடியும். அதாவது இவ்வாறு வெவ்வேறு பிரிவினர்(இனங்கள்) கலப்பதனால் மலட்டுத்தன்மை எங்காயினும் உண்டாவதாகத் தெரியவில்லை.
இன்று தூயஇனவாதம் பேசும் பலர் மறந்தே போனயிடம் இன்று வெவ்வேறு பிரிவாக(இனமாக) காணப்படும் இவர்கள் முந்தைய நகர்வுகளில் கலப்புற்றுப் பிறந்தவர்களேயென்பதை இதிலிருந்து தெளிவாக நாம் புரிந்துக் கொள்ள முடியும் மனிதகுலமான ஒரே தொப்பூல் கொடி உறவுதான் என்பதனையும்.
அறிவியல் ஆய்வுகள் மனிதர்கள் விலங்கினத்தின் ஒரு வகை ஆனால் சில சிறப்பம்சங்கள் தனிவகை என்பதை உணர்த்துகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், மனிதர்கள் விலங்குளிலும் பார்க்க எளிதாகவும், காலநிலைகள், மற்றும் காரணங்களால் மிக எளிதாக இடம் பெயர்ந்துவிடுவர்; மனிதர் தம் உணவு, உடைகள், உதவிக்கு வேண்டிய கருவிகள், மிருகங்கள் ஆகியவற்றைத் தேவைக்கேற்றவாறு மாற்றிக்கொள்வர். இத்தகைய திறமையும் வாய்ப்பும் விலங்குகளுக்கு இல்லை. அநேகமாக, வெவ்வேறு உபகரணங்களும் அமைப்புகளுமுள்ள தொகுதியான மனிதர் உலகில் ஆர்ட்டிக்கண்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலெல்லாம் வசிக்கின்றனர். ஆதேபோல் விலங்குகளும் இவ்வாறு எங்கும் பரந்துள்ளனவென்று சொல்ல முடியாது. மனிதருடன் சென்ற ஒரு சில விலங்குகள் மாத்திரம் பரந்துள்ளன. விலங்குவகைகள் தனிப்பட்ட இயல்புகளுள்ள தாயகங்களில் மாத்திரம் வசிக்கின்றன. மனித இனங்கள் பெயர்ந்து செல்லும் ஆற்றல் காரணமாக, உலகமெங்கும் பரந்தும், ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் கலந்தும் பின்னிப்பிணைந்து விடுகின்றன. இப்பொழுதுள்ள மனிதவகைகள் யாவும் மனித இயல்புகளையே பெற்றிருந்த ஒருவகைப் பூர்வீக மனிதரிலிருந்தே வந்தவை என்பதில் இப்பொழுது சந்தேகமில்லை; உலகில் இங்குமங்குமாக இவர்கள் இடம்பெயர்ந்து முறையாக அப்பூர்வீக மனிதவகையினரிலிருந்து தோன்றியவர்களே இப்பொழுதுள்ள மனிதவகையினர். அவ்வகையான நகர்வில் இப்பொழுதுள்ள ஆப்பிரிக்க ‘நீக்ரோகள்’, ஐரோப்பிய ‘வெள்ளையர்’ வடசீனவிலுள்ள ‘மஞ்சள்’ நிற மக்கள், மற்றும் உலகெங்கும் சிதறுண்டுள்ள பல்வேறு வகையினர் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை அறியக் கூடியவாறு அந்நகர்வுகள் பற்றி ஆராய்ந்தால் பல குழப்பங்களுக்கு விடை கிடைக்கும்.
இன்று மனிதன் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் ஆதியில் தோன்றிய அந்த மனிதனிலிருந்து வந்தவர்களே ஆம் ஆப்பிரிக்க ‘நீக்ரோகள்’, ஐரோப்பிய ‘வெள்ளையர்’ வடசீனவிலுள்ள ‘மஞ்சள்’ நிற மக்கள் எல்லோர்க்கும் ஒரே மூதாதையர்தான். அவர்களின் நகர்வு சமூக வளர்ச்சி மாற்றம் பிரதேசம், மொழி என்ற பிரிவோடு தன் வளர்ச்சிக்கு தங்களுகுள்ளே நாடுகளாகவும் கண்டங்களாகவும் ஆளுபவர்களாகவும் ஆளாப்படுபவர்களாகவும், சுரண்டுபவர்களாகவும் சுரண்டப்படுபவர்களாகவும் இங்கே ஜாதி ரீதியாக ஏற்ற தாழ்வான சமூகத்தில் மனிதனை மனிதன் பிரித்து ஒதுக்கி அடக்கி ஆளும் கேவலம் தொடர செய்கிறது. ஆனால் எல்லோரும் ஒரு காலத்தில் தோன்றிய அந்த ஆதி மனிதனின் தொப்புழ் கொடி உறவுதான் என்பது தெளிவு.
அறிவியல் ஆய்வுகள் மனிதர்கள் விலங்கினத்தின் ஒரு வகை ஆனால் சில சிறப்பம்சங்கள் தனிவகை என்பதை உணர்த்துகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், மனிதர்கள் விலங்குளிலும் பார்க்க எளிதாகவும், காலநிலைகள், மற்றும் காரணங்களால் மிக எளிதாக இடம் பெயர்ந்துவிடுவர்; மனிதர் தம் உணவு, உடைகள், உதவிக்கு வேண்டிய கருவிகள், மிருகங்கள் ஆகியவற்றைத் தேவைக்கேற்றவாறு மாற்றிக்கொள்வர். இத்தகைய திறமையும் வாய்ப்பும் விலங்குகளுக்கு இல்லை.
மேலும் இதிலிருந்து முன்னேறிய ஓர் ஆராய்ச்சி நான் அண்மையில் வாசித்த மாஸ்கோ நூல் “இனங்களும் இனக் கொள்கையும்” - பேராசிரியர் டாக்டர். மிஹயீல் நைஸ்தூர்ஹ்(மாஸ்கோ) அவரின் எழுத்துக்கள். ஒரே மூலத்தில் தோன்றி ஆதி மனித குலத்தின் கருவில் உதித்த இனங்கள் கண்டிப்பான விஞ்ஞான நோக்கில் பார்க்கும்போது உயிரியல் சமத்துவம் உள்ள இன வகைக்கிளை வகைப் பிரிவுகளாக விளங்குகின்றன. எந்த ஓர் இனமும் அதன் பிரதிநிதிகளின் பரிணாம வளர்ச்சியில் மற்ற இனங்களை விட உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. உடல் கட்டமைப்பின் சிறப்பான மனித இயல்புகளில் மட்டும் இன்றி நுட்பமான பெரும்பான்மை அம்சங்களிலும் எல்லா இனத்தினரும் அடிப்படை ஒற்றுமை கொண்டிருப்பதற்கு காரணம் அவர்கள் ஒரே மூலத்திலிருந்தே தோன்றியதே ஆகும். இந்த அடிப்படையில் ஒற்றுமையுடன் ஒப்பிடும்போது ஒரு சில இன வேற்றுமைகள் மிகவும் முக்கியமம் அற்றவையாக இருக்கின்றன.
"வெள்ளை"யினம் "உயர்ந்தது" என்றும் "நிறமுள்ள" (கருப்பு... மஞ்சள்) இனங்கள் தாழ்ந்தவை என்றும் இனக் கொள்கையினர் வழக்கமாக கருதுகிறார்கள்.சில விஞ்ஞானிகள் சிறப்பாக மேற்கு ஜெர்மனிய ஆங்கிலே அமெரிக்க விஞ்ஞானிகள் ஆரிய சித்தாந்தத்தை பரப்புகிறார்கள்.வடக்கு மத்திய ஐரோப்பாவை சேர்ந்த மானிடையில் மாதிரிகளின் ஏதோ ஒரு குழுவோ அல்லது அதன் சந்ததிகளோ தான் உயர்ந்த இனம் என்று கூறுகிறது இந்த சித்தாந்தம். ஆனால் மங்கோலிய அல்லது நீக்ரோ இனமே உயர்வானது என்ற கருத்துக்களும் மீண்டும் மீண்டும் தலை தூக்குகின்றன.
1969 இல் மாஸ்கோவில் நடந்த கம்யூனிஸ்ட் தொழிலாளர் கட்சியின் சர்வதேச மாநாட்டின் முடிவு வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:"மக்கள் இனங்களை தனித்தனியாக பிரிப்பதற்காகவும் தனது ஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்தி வைத்துக் கொள்வதற்காகவும் ஏகாதிபத்தியம் இனக் கொள்கையை பயன்படுத்துகிறது. மக்களின் ஒற்றுமைக்கு விரோதமாக (நான்)மக்கள் திரள்கள் இனக் கொள்கை மறுத்து ஒதுக்குகின்றன. இனக் கொள்கையை வேரறுப்பது ஏகாதிபத்திய முழுவதற்கும் அதன் கொள்கைவாத அஸ்திவாரங்களுக்கு எதிரான போராட்டத்துடன் நெருக்கமாக இணைந்திருக்கிறது என்பதை தங்கள் போராட்ட நடவடிக்கை மூலம் மக்கள் புரிந்து கொள்ளலாம்.
இனக் கொள்கையினர் வரலாற்றை மட்டுமே மீறி உயிரியல் சார்புள்ளதாக ஆக்குகிறார்கள் "இனம்" "நாட்டினம்" என்ற சொற்களை ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள். உண்மையிலேயே "இனம்" என்ற கருதுகோள் உயிரியிலைச் சேர்ந்தது "நாட்டினம்" என்ற கருதுகோளோ சமூகம் பற்றிய விஞ்ஞான துறையைச் சேர்ந்தது. இவற்றை கலப்பவர்கள் படுமோசமான தவறு செய்கிறார்கள்.
இனக் கொள்கையினர் தங்கள் தவறான கருத்துக்களை விடாப்பிடியாக வலியுறுத்துவது ஏன்? இதற்கு விடை எளிது உயர்ந்த இனங்களையும் தாழ்ந்த இனங்களையும் ஓர் இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்த வேறு ஒரு இனத்திற்கு உரிமை உண்டு என்பதை பற்றிய போலி சித்தாந்தத்தின் வாயிலாக அவர்கள் நாட்டினங்களுக்கு இடையே போர்கள் முறையானது என்று காட்ட முயல்கிறார்கள். இந்த போலி சித்தாந்தத்தை ஏகாதிபத்திய (சுரண்டல்) கொள்கையை மறைப்பதற்காக அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
மனித சமூகத்தின் நிலைமைகளில் நிகழும் வர்க்கப் போராட்டத்தை விலங்கு உலகில் நிகழும் போராட்டத்துக்கு ஒப்பானதாக காட்ட இனக் கொள்கையினர் பிற்போக்கான போதனையை பயன்படுத்துகிறார்கள். இந்த போதனை 19ஆம் நூற்றாண்டின் சில பகுதியில் வளர்ச்சி அடைந்தது.
ஆளும் வர்க்கத்தினர் ஆகிய சுரண்டுவோர்களின் சமுதாய கட்டளையை நிறைவேற்றும் போது இனக் கொள்கையினர் உண்மையை விரும்பியம்படி எல்லாம் திரிகிறார்கள். மொழிகள் இனத்தன்மை கொண்டவை என்றும் உளப்பாங்கு இன ஆன்மாவிலிருந்து பிறந்தது என்றும் கூறும் அளவிற்கு அவர்கள் போய் விடுகிறார்கள். இன்னும் இதனை சற்று விரிவாக பார்ப்போம்
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தோ- ஐரோப்பிய மொழி பற்றி ஆய்வுகளை அறிவோம்.அதனை அவர்கள் ஆரிய மொழிகள் என்று குறிப்பிட்டனர்.இவை பல்வேறு மொழியியலாரின் ஆராய்ச்சிகள் பிற்போக்கு சித்தாந்தவாதிகளின் இனக் கொள்கை நோக்கில் விளக்கப்பட்டன.
ஆரிய ஆதி மொழியோ ஆரிய இனமோ சிறப்பு தன்மையை விளக்குவதற்கு ஐரோப்பா முதல் கொண்டு அரேபியா என்று தேடினாலும் அவர்கள் வர்ணிக்கும் ஆரியர்களை ஒத்திருந்த உடல்வாகோ மொழியோ பெற்றிருக்கவில்லை என்பது தெளிவு ஆரிய இன சிறப்பு தன்மை கொண்ட ஆதி மக்கள் இனத்தைப் பற்றி சித்தாந்தம் ஆதாரம் அற்றதாக ஆகிவிடுகிறது. இதனைப் பற்றி தெளிவடைய நீக்ரோக்களின் மொழி இனம் பற்றி புரிந்து கொள்ள பயன்படும் நீக்ரோக்கள் ஆப்பிரிக்காவில் தங்கள் தாய் மொழியை பேசுகிறார்கள் அவர்களே வட அமெரிக்காவில் ஆங்கிலமும் தென் அமெரிக்காவில் ஸ்பானிஷும் பேசுகிறார்கள் எனவே ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு மக்கள் இனங்களையும் நாட்டினங்களையும் சேர்ந்து விடும்போது வெவ்வேறு மொழிகள் பேசுகிறார்கள் என்பது தெளிவு. மொழி இனத்தை சார்ந்ததே அல்ல என்பதை இவை யாவும் காட்டுகின்றன. மொழி என்பது மர்மமான "இன ஆன்மாவில் பிறப்பது" இனத்துக்கு "உயிரில் நோக்கில் இயல்பான" ஒன்று என்னும் விஞ்ஞானத்துக்கு எதிரான கருத்துக்கு மேற்கூறிய சான்றுகள் முரண்படுகின்றன. மொழி மக்களினங்களின் வளர்ச்சி போக்கில் தோன்றுகிறது வாழ்கிறது மடிகிறது உயிரியல் குழு ஆகிய இனத்துடன் மொழி காரணத் தொடர்பு அறவே இல்லாதது.
இனக் கொள்கை என்பது சமூகத்தில் ஒரு பகுதியினரை கீழானவர்கள் என்று காட்டி அவர்களை சுரண்டுவதுதான் இதனை ஏகாபத்தியங்கள் தங்களின் வலிமை பிரயோகித்து எல்லா நாடுகளையும் அடிமைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறது. காலணி ஆதிக்கத்தை புதிய காலனி வகையில் தொடர செய்கிறது. வர்க்கப் போராட்டத்தையும் விடுதலைப் போராட்டங்களையும் நசுக்குவதற்கு பல்வேறு விதமான அடக்குமுறைகளை கையாளுகிறது. இதிலிருந்து இந்தியாவில் தோன்றிய ஆரிய திராவிட காலனிய இனவியலை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். வில்லியம் ஜோன்ஸ் புகுத்திய ஆரிய இனவாதம் ஆகட்டும், கால்டுவெல் புகுத்திய திராவிட இனவாதம் ஆகட்டும் பல்வேறு தேசிய இன போராட்டங்களை மூடி மறைக்கவும் மொழி வழி மாநிலங்களை ஏற்காமல் ஒற்றை ஆட்சிக்காக அன்று பிரிட்டிஷார் செய்த அதே சதி வேலை; இன்றை ஆட்சியாளர்கள் செய்வதற்கு இவை ஏற்றவையாக உள்ளது. விரிவாக பின்னர் தேவைப்படும்போது பேசுவோம். இதற்குப் பயன்பட்ட நூல் மாஸ்கோ பதிப்பகம் மனித இனங்கள் தேவைப்படுவோர் pdf இல் உள்ளது வாசிக்கலாம்
ஆக பிரிவினை பேசி மக்களை ஏய்பதுதான் ஏகாதிபத்தியம் மற்றும் ஆளும் வர்க்க சூழ்ச்சி உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கு ஊருவிளைவிக்கும் எல்லா போக்குகளையும் அம்பலப்படுத்தி உழைக்கும் மக்களாக ஒற்றுமை படுத்துவதுதான் அவர்களின் சுரண்டலின் நுகத்தடியிலிருந்து விடிவிப்போரின் நோக்கமாக இருக்க வேண்டும் .
கிறிஸ்துவ பாதிரியார்களின் வாதங்களையே மேற்கோள்காட்டி கார்ல் மார்க்ஸ், தனது மூலதனத்தின் முதல் தொகுப்பில் 31-வது தலைப்பில் ப-1011-இல் புராதன மூலதனச் சேர்க்கை என்ற பகுதியில், விரிவாக எழுதியுள்ளார். கிறிஸ்துவ காலனியாதிக்கம் பற்றிக் கூறியதை பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறார் மார்க்ஸ்.“கிறிஸ்துவ இனத்தார் எனப்படுவோர் உலகின் எல்லா மண்டலங்களிலும் தம்மால் அடிமைப்படுத்த முடிந்த எல்லா மக்கள் சமூகங்கள் மீதும் காட்டுமிராண்டிச் செயல்களையும், வெறித்தனமான அட்டூழியங்களையும் புரிந்துள்ளனர். வேறு எந்த இனத்தாரும், அவர்கள் எவ்வளவு தான் மூர்க்கமானவர்களாகவும், நெறி புகட்டப் பெறாதவர்களாகவும் இருந்தாலும், கருணை வெட்கம் பற்றியெல்லாம் கவலைப்படாதவர்களாக இருந்தாலும் சரி, உலக வரலாற்றின் எந்தக் காலத்திலும் இவற்றிற்கு இணையான அட்டூழியங்கள் புரிந்ததில்லை.”காலனிய இனவியலை விமர்சனம் செய்யும் பல ஆய்வாளர்களும் இனவியலின் இந்தப் பொருளியல் அடித்தளத்தை எடுத்துக் காட்டுவதில்லை. அதை வெறும் மத அடிப்படையில், மத ஒடுக்குமுறை வடிவமாக மட்டுமே இக்கொள்கைகள் செயல்படுத்தப்படுவதாக பார்க்கின்றனர்.
“தூய இனவாதத்தை” கோபினியு தனது “மனித இனங்களின் சமத்துவமின்மை குறித்த கட்டுரைகள் (1853-55)” எனும் நூலில் முன்வைத்தார். அவர் பின்வருமாறு கூறுகிறார்: “வெள்ளை இனம்தான் அனைத்து பண்டைய நாகரிகங்களுக்கும் ஆதாரமானது. வெள்ளை இனத்துடன் பிற இனங்கள் கலந்ததே அனைத்து நாகரிகங்களும் அழிவதற்குக் காரணம். இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மானிய இனம் மட்டுமே தூய்மையானது”. இந்தக் கோட்பாடே, நாஜிக் கட்சி உருவாவதற்கு காரணம் ஆனது. இதைக் கொண்டே கோல்வால்கர் இங்கு இனத்தூய்மையைப் பேண இஸ்லாமியர்களை அழிக்க வேண்டும் என இந்துத்துவ பாசிசம்-இந்து ராஷ்டிரத்தை முன்வைத்தார்.
கால்டுவெல், ஜோன்ஸ், முல்லர் போன்ற காலனியாதிக்கவாதிகள் ஆரியர்கள் இங்கேயே இருந்தவர்கள் அல்ல என்றும், வெளியில் இருந்து படையெடுத்து வந்தவர்கள் என்ற நிலைபாட்டை முன்வைத்தனர். ஆரியர்கள் திராவிடர்கள் என இரண்டு இனங்களாக வரையறுத்து, இந்திய வரலாற்றையே ஆரிய-திராவிட வரலாறாக முன்வைத்தனர். இவர்கள்தான் மொழியியல் அடிப்படையில் இனத்தை வகைப்படுத்தியவர்கள் ஆவர். அதாவது ஆரிய மொழிகள் பேசுவோர் ஆரிய இனம், திராவிட மொழிகள் பேசுவோர் திராவிட இனம் என வகைப்படுத்தினர். இதனடிப்படையில்தான் பூலேவும், பெரியாரும் நிலை எடுத்தனர். அதாவது ஆரியர்கள் வந்தேறிகள்; படையெடுத்து வந்து இந்திய பூர்வகுடிகளை வென்று அடிமைப்படுத்தினார்கள்; ஆரிய திராவிடப் பகைமை தான் இந்திய வரலாறு என்ற காலனியாதிக்க கோட்பாட்டை ஏற்றனர்.
ஆரிய-திராவிடம் இரண்டுமே அன்றும் இன்றும் என்றும் காலனிய இனவியலுக்கு சேவை செய்பவையே ஆகும். அன்று பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு சேவை செய்தன; இன்று அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் சேவை செய்கின்றன. வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கின்றன. ஆரியம் திராவிடம் இரண்டும் ஏகாதிபத்தியம் கள்ளத்தனமாக ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகள் ஆகும். இவையிரண்டையும் முறியடிப்பதன் மூலம் மட்டுமே மொழிவழி தேசியத்தை கட்டியமைக்க முடியும்; கட்டியமைக்க வேண்டும். இதை ஆழமாக மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும் நன்றி சமரன் இணையதளம் குறிபிட்ட பகுதியை புரிந்துக் கொள்ள உதவியமைக்கு. நாம் இதில் தெளிவடையாவிட்டால் எதிரியிடம் வெற்றி பெறமுடியாது.-சிபி
தனிப்பட்ட ஒருவரின் திரிபுணர்ச்சி அல்லது மருள்(Delusion) இரங்கதக்கதாயினும் அதிகம் அஞ்ச வேண்டிய ஒன்றன்று; ஆனால் ஒரு கூட்டத்தவரது அல்லது சமூகத்தினரது பொய்மை (Illusion) அச்சம்முகத்திற்கு மாத்திரமல்லாது பிறருக்கும் பேராபத்தை விளைவிக்க கூடியதாகும்.
ஜெர்மனியர் ஆரிய இனத்தவர் என்றும் உலகை ஆளப் பிறந்தவர் என்றும் இரண்டு ஒரு எழுத்தாளர்கள் பிதற்றிய மயக்க மொழிகள், நாஜிக்களின்(Nazis) உத்தியோகபூர்வமான தத்துவமாகிய பொழுது, சாதாரண ஜெர்மனிய மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் அதனை நம்பினார்கள். விஞ்ஞானிகள் சிலரும் அதனை உண்மை என ஏற்றுக் கொண்டனர் அதன் விளைவு உலகும் நன்கு அறிந்ததே.
இத்தகைய அமைப்பில் உள்ள பேராபத்து யாதெனில் ஒத்து போதல் என்ற கொள்கை அடிப்படையில் எதிரான அல்லது மாறுபட்ட சிந்தனைகளை அடக்கி ஒடுக்கப்படுவதாகும். க. கைலாசபதி அடிய முடியும் நூலிலிருந்து
No comments:
Post a Comment