சித்தாந்த போராட்டத்தின் அவசியம்-2

 

சித்தாந்த போராட்டத்தின் அவசியம்-2

பொதுவுடமைக் கட்சியின் நோக்கம் சமூக மாற்றமே. இது செயல்பாட்டுக்கான இயக்கமாகும் கட்சி என்பது பிழைப்புவாதிகளின் கூடாரம் அல்ல. அப்படியெனும் பொழுது பொதுவுடமை கட்சியின் நோக்கம் கம்யூனிசத்தை வளர்பதுதானே முதன்மையான நோக்கம் தோழர்? மறுப்பவர்களும் விரோதிகளும் இதற்கெதிரான கருத்துகளை பரப்புவர்கள்தானே தோழர்களே?
பொதுவுடைமை இயக்கம் பாட்டாளி வர்க்க தத்துவத்தால் தலைமை தாங்கப்படும் இயக்கமாகும் . ஒரு பொதுவுடமை கட்சி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுதலோடு தொடர்பு படுத்தி காண வேண்டும் சமூக மாற்றத்திற்குரிய குறிக்கோள்களை வரையறை செய்தலை கட்சியின் திட்டம் ஆகும். புரட்சிக்கான திட்டத்தை வழிமுறைகளை கண்டறிந்து அதனை வழிகாட்டியாக கொண்டு மக்களை புரட்சிகர இயக்கத்தின் பால் இருக்கும் நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகள் தான் நடைமுறை தந்திரம் ஆனால் இங்கு என்ன நடக்கிறது பாருங்கள் தோழர்களே?
இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனங்களான என் சி பி எச் ம் பாரதி புத்தகாலயமும் கம்யூனிசத்தை வளர்க்கும் கம்யூனிஸ்ட் ஆசான்களின் நூல்களை வெளிக்கொணர மறுக்கும் அதே வேளையில் கம்யூனிச விரோத கொள்கை கொண்டோரின் நூல்களை மூட்டை மூட்டையாக கொண்டு வருகிறது ஆக இதன் நோக்கம் என்ன என்று நீங்களே தெரிந்து பேசுங்கள் தோழர் இவர்கள் யார்?
புரட்சிக்கான கட்சியாக உதித்த நக்சல்பாரியின் வாரிசாக கூறிக் கொள்ளும் பலர் இங்கு மார்க்சியத்தை விட மார்க்சியம் அல்லாத போக்கில் செயல்படும் பொழுது இவர்களைப் பற்றி நான் என்ன சொல்வது சொல்லுங்கள் தோழர்களே? (விதிவிலக்கை கணக்கில் கொள்ளவில்லை).
குருங்குழுவாத போக்கானது இடதுசாரி கட்சியிலிருந்து இடதுசாரி குழுக்கள் வரை எல்லாருக்கும் பொருந்தும் எப்படி எனில் நாங்கள் மட்டும் தான் சரியானவர்கள் என்று தனித்தனியாக இயங்கும் போக்கை என்ன சொல்ல? சில குறுங்குழுவாதிகள் தன்னுடைய குழுவைத் தவிர வேறு குழுக்களோடு இணைவதற்கு முன்வருவதில்லை. ஒரு சமயம் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் இத்தகைய குறுங்குழுவாதிகள் சிலர் இருந்தார்கள் என்றும் அவர்களால் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் வழியில் தடை எற்பட்டது என்று மாவோ விளக்கியுள்ளார். இன்னும் பின்னர் தோழர்.
ஆக முதலில் உழைக்கும் மக்கள் மட்டுமின்றி சமூக விடுதலைக்கான கட்சியை பற்றி பொதுவான வரையறை நமது முன்னோடிகளின் வழிகாட்டுதலில் பார்ப்போம் பின்னர் விவாதிக்க செல்வோம்.
பாட்டாளி வர்க்க விடுதலைக்கான சூழ்நிலைகள் குறித்த போதனைகளின் தொகுப்பே கம்யூனிசம் என்று எங்கெல்ஸ் கூறுகிறார்.
சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தான் வாழ்வதற்காக கடுமையாக போராடுகிறான். குடும்பத்தை பராமரிக்கவும் தனது குழந்தைகளின் கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் ஒரு எளிய வாழ்க்கைக்காக போராடிக் கொண்டுள்ளான் ஆனால் இறுதிவரை அவன் போராட்டம் நிறைவடைகிறதா என்பதுதான் கேள்வியாக உள்ளது. நமது சமூகத்தின் பல்வேறு விதமான பொய்த்தோற்றங்களில் ஆட்பட்டுள்ள உழைக்கும் மக்கள் எதார்த்த சூழ்நிலையில் இருந்து மறந்தே ஆளும் வர்க்கத்தின் பல்வேறு பிற் போக்குத்தனங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். அதிலிருந்து விடுபடாத உழைக்கும் மக்களுக்கு வர்க்க உணர்வை ஊட்டுவதும் கடினம்தான்(இதனைப் பற்றி வேறொரு நேரத்தில் பிரிவாக பார்ப்போம்).
கம்யூனிசம் பற்றி புரிதலுக்கு முன் சோசலிசம் பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.
எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒழுக்கங்களும் கருத்துக்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கருத்தும் ஒழுக்கமும் தோன்றுவது பற்றி தெரிந்து கொள்ளுவோம்.
மனித சமுதாய வரலாற்றை அறிஞர்கள் பல கட்டங்களாக பிரிக்கின்றார். அவை புராதன பொதுவுடமை சமூகம், அடிமை சமூகம், நில உடமை சமூகம், முதலாளிய சமூகம், பொதுவுடமை சமூகம் என்பதாகும்.
இவற்றுள் முதலாளிய சமூக அமைப்பில் இருந்து பொதுவுடமை சமூக அமைப்பினை நோக்கி செல்லும் பொழுது ஏற்படும் இடைநிலை அமைப்பாக சோசலிஸ அமைப்பு உள்ளது.
சோசலிச உற்பத்தி முறை தோன்றும் முன்னரே சோசலில கருத்துக்கள் தோன்றி விட்டன.(இதனைப் பற்றி விரிவாக வேறொரு பகுதியில் பார்ப்போம் - தற்போது புரிதலுக்கு மட்டும்) .

பொதுவுடமை இயக்கத்தின் பணி

பொதுவுடமை இயக்கம் அதன் பெயரிலே ஒரு குறிக்கோளை தாங்கியுள்ளது. அது பொதுவுடமை சமூக அமைப்பை தோற்றுவிப்பதை இறுதி லட்சியமாக கொண்ட ஒரு அரசியல் இயக்கம் ஆகும். அது புரட்சியாளர் சமூகத்தை மாற்றும் இயக்கமாகும். மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைகளை ஒழித்துக் கட்டி சிதறுண்டு கிடக்கும் மனிதர்களை ஒழுங்குப்படுத்தி முழுமையான மனிதனாக உருவாக்கும் பண்பாட்டு இலக்கு கொண்ட இயக்கம் தான் பொதுவுடமை இயக்கம்.
இந்திய பொதுவுடமை இயக்கத்தின் வரலாற்றில் சர்ச்சைகளையும் பிளவுகளையும் அதிகம் காணலாம். அதனைப் பற்றி விரிவாக பிறகு பார்ப்போம் முதலில் பொதுவுடமைக் கட்சி என்பது என்ன என்று பார்ப்போம்.
பொதுவுடமை இயக்கம் (கம்யூனிஸ்ட் கட்சி)
பொதுவுடமை இயக்கம் பாட்டாளி வர்க்க தத்துவத்தால் தலைமை தாங்கப்படுகிற இயக்கம். இதன் வர்க்க அடிப்படை பாட்டாளி வர்க்கமாகும் இதனால் இது பாட்டாளிகளுக்கு மட்டுமானது என சுருக்கி கொள்ளக்கூடாது. முதலாளித்துவ சமூகத்தில் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையை ஒட்டியே அனைத்து மக்களின் விடுதலையும் உள்ளது.
முதலாளித்து சமூகத்தில் பாட்டாளி வர்க்கம் மட்டுமே இழப்பதற்கு ஏதும் இல்லாத வர்க்கமாகும். எவ்வித உற்பத்தி சாதனங்களும் உற்பத்தி கருவிகளும் இல்லாத தன் உழைப்பு ஆற்றலால் மட்டுமே வாழும் தன் உழைப்பு சக்தியால் முதலாளிக்கு உபரி மதிப்பை தோற்றுவிக்கும் திறமை உள்ளவன். இன்னும் கூடுதலாக சொல்லப்போனால் ஒரு ஆலைத் தொழிலாளி தனக்கான சொந்தமான இயந்திரமோ கருவி இல்லாமல் வெறுங்கையை கொண்டு முதலாளியின் இயந்திரங்கள் மற்றும் கச்சா பொருள்கள் மூலம் தன் உழைப்பால் முதலாளிக்கு உபரி மதிப்பை உண்டு பண்ணுகிறான்.மேலும் இவன் பயன்படுத்தும் பல்வேறு இயந்திரங்கள் அவனுடைய செயல் வளர்ந்த அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தேவை ஏற்படுகிறது. அதனால் அவன் உயர்ந்த கண்ணோட்டத்தை கொண்டவனாக இருப்பதோடு வேலை பிரிவினை காரணமாக பல தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொருளை உருவாக்குகின்றனர். எனவே அவர்களிடத்தில் கூட்டுதுவம் (COLLECTIVISM) உண்டு. ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் பணி புரிவதாளும் ஒன்றாக பணிபுரிவதால் அமைப்பாக திரள்வதற்கு தொழிலாளர்களுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.
எனவே இழப்பதற்கு ஏதும் அற்ற விஞ்ஞான மனோபாவம் மிக்க கூட்டுத்துவம் உடைய அமைப்பாகத் திரளும் நிலையில் உள்ள பாட்டாளி வர்க்கமே (தொழிலாளர்) சமூக மாற்றத்திற்கான புரட்சியில் தலைமை தாங்கும் தகுதி உடையதாக ஆகும்.
இத்தகைய இயக்கத்தின் அமைப்பு கோட்பாடுகள் நடைமுறைகள் மூலம் கடுமையான உட்கட்சிப் போராட்டம் மூலம் உருவாக்கப்படுகிறது. இதை தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தொடங்கி ரசிப் புரட்சியின் ஊடாக நமக்கான படிப்பினையிலிருந்து சற்று விவாதிப்போம்.
பொதுவுடமைக் கட்சியின் சில பண்புகள் பார்ப்போம்
1).கட்சியின் நோக்கம் சமூக மாற்றமே. எனவே இது செயல்பாட்டுக்கான இயக்கம் ஆகும். இதில் சம உரிமை பெற்ற உறுப்பினர்கள் மக்களிடையே கடும் அரசியல் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது அவர்கள் முழு நேர உறுப்பினராகவும் பகுதியி நேர உறுப்பினராகவும் பிரிந்து செயல்படுகின்றனர்.
2). கட்சி என்பது புரட்சிகர தத்துவத்தை கருவியாக கொண்டுள்ளது- இது புரட்சிகர இயக்கத்தின் அவசியமாகும். மார்க்சிய லெனினியம் எனும் புரட்சிகர தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வறட்டுவாதத்தையும் (DOGMATISM) சந்தர்ப்பவாதத்தையும்(OPPORTUNISM) தவிர்த்து குறிப்பிட்ட நாட்டின் தனித்துவ நிலைகளுக்கு பொருந்தும் வகையில் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.
3). கட்சிக்குள் ஜனநாயக மத்தியத்துவம் பேணப்படல்- கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் அனைத்து திறன்களும் கட்சிக்கு பயன்படும் விதத்தில் கட்சிக்குள் ஒரு வித சுதந்திரம் தேவைப்படுகிறது. விவாதங்களின் முழுமையான -சுதந்திரமான - வெளிப்படையான விவாதமுறை பின்பற்ற பட வேண்டும். கட்சிக்குள் கருத்துக்கள் மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டு சுதந்திரமான விவாதம் இல்லை எனில் கட்சிக்கு அதிகார போக்கில் எதேச்சதிகாரக நிலைக்கு சென்று விடுகிறது. எனவே அடி முதல் தலைமை வரை கருத்துகளை விவாதிக்கவும் முடிவெடுக்கவும் ஜனநாயக உரிமை தரப்பட வேண்டும். உள் கட்சி ஜனநாயகத்தின் இன்னொரு அம்சம் அனைத்து பதவிகளும் முறையான தேர்தலால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் தம் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கீழ் மட்டத்துக்கு விளக்குதலும் ஆகும்.
கட்சி தலைமை பொறுப்பு கட்சி உறுப்பினர்கள் கட்சியின் அரசியல் இதனையும் வேறொரு இடத்தில் பேசுவோம் இப்பொழுது தேவையில்லை.

கொள்கையும் நடைமுறையும்

மாநாட்டு தீர்மானங்களிலும் மேடை பேச்சுகளிலும் ஒரு கொள்கை முன்வைத்து இன்னொரு நடைமுறையை பொதுவுடமை இயக்கம் செயலாக்க முடியாது. இங்குள்ள முதலாளிதுவ கட்சிகளின் இரட்டை தன்மை இதுதான் மேடையில் ஒன்றும் நடைமுறையில் ஒன்றும் உள்ளதை காணலாம். தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளும் மக்களின் நலனுக்காக செயல்படுவது போல் அவர்களுடைய பேச்சும் நடைமுறையில் பொய்யாக போவதை காணுகிறோம். அதனுடைய சொல்லும் செயலும் வேறுபட்டு இருப்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம். ஆனால் பொதுவுடமை இயக்கத்தில் நடைமுறை என்பது நிகழ்கால சமூக யதார்த்தத்தில் இயங்கிக் கொண்டே எதிர்கால லட்சியத்தை அடைவதற்காக துரிதப்படுத்தும் முயற்சியாகும். அதாவது சமூகம் கட்சியின் விருப்புக்கு வெறுப்புக்கு அப்பாற்பட்டு இயங்கி கொண்டிருக்கிறது இப்புறநிலைத் தன்மைகளை மாற்றுவதற்கானதே கட்சியின் நடைமுறை. இன்றைய காலத்தில் எந்த ஒரு நாட்டிலும் நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் சர்வதேச தன்மை பெற்று விடுகிறது. அந்த அளவிற்கு ஏகாதிபத்தியம் பல்வேறு நாடுகள் அதன் உட்புகுந்து தனது பணியை செயலாற்றிக் கொண்டுள்ளது. ஆக பொதுவுடமைக் கட்சி சர்வதேச நிலைமைகளோடு தன்னுடைய நாட்டின் நிலைமைகளும் புரிந்திருத்தல் அவசியம். கட்சியானது மக்கள் திரளிடையே செயல்பட்டு கலந்திருத்தல் அவசியம். மக்கள் திரளுக்கு தலைமை தாங்க வேண்டும் என்றால் அதற்கு சேவகம் செய்தாக வேண்டும். மக்கள் திரளுக்கு தேவையான மாற்றங்களை கொடுக்க விரும்புவோர் அதே மக்கள் திரளிடம் கற்று இருக்க வேண்டும். இங்கு பல்வேறு மக்கள் திரளுடன் பணி செய்பவர்களின் நோக்கம் அந்த மக்கள் திரளின் மாற்றத்தை அல்ல அந்த குறிப்பிட்ட மக்களின் செயலாற்றத்தை தங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுகின்றனர் ஆனால் பொதுவுடமை இயக்கத்தின் பணியானது அந்த மக்களுக்கு சேவகம் செய்வதே.

அரசியல் அதிகாரம்

அரசியல் அதிகாரம் என்பது அரசாங்கப் பங்கேற்பது மட்டும் அல்ல. சமுதாயத்தின் அடித்தளமான உற்பத்தி முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்து சமூக உறவுகளை முற்றிலும் மாற்றி அமைப்பதற்கு தேவையான சகலவித அதிகாரங்களையும் கை கொள்ளுதல் ஆகும் இதற்கு உகந்த வகையில் அரசாங்கம் ராணுவம் நீதிமன்றம் போன்ற அரசின் சட்டமியற்றும் சபைகளையும் வன்முறை அமைப்புகளையும் தம் ஆணைக்குக்கு கொண்டு வருதல் ஆகும். இவ்வளவையும் உள்ளடக்கி செறிவான பொருளில் வரும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுதலையே பொதுவுடமை இயக்கம் மையமாகக் கொள்ள வேண்டும் இதுதான் ஒரு பொதுவுடமை கட்சிக்கும் பொதுவுடமை அல்லாத கட்சிக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.
இதனைப் பற்றி தொடர்ந்து விவாதிப்போம் பல்வேறு பகுதிகளை பற்றி தற்பொழுது சுருக்கமாக இங்குள்ள பொதுவுடமை கட்சியில் நிலைப்பாடு தான் என்ன?
அதனைப் பற்றி சற்று தெரிந்து கொள்ளுவோம்.
இந்தியாவில் தோன்றிய முதல் முதலான கம்யூனிஸ்ட் கட்சி எனப்படும் CPIன் நிலைப்பாடு என்ன? பாராளுமன்றம் மூலம் சோசலிசத்தை கண்டடைவது. அதே போல சிபிஎம்மின் நிலைப்பாடும் இதேதான். ஆக இருக்கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்றே தான் அப்படி எனும் பொழுது இன்று இவர்களுடைய பணியை பற்றி பார்ப்போம்.
கம்யூனிஸ்ட் கட்சி என்று சொல்லிக்கொண்டு கம்யூனிச ஆசான்களின் எழுத்துக்களை இருட்டிப்பு செய்கின்றனர் கம்யூனிச விரோதிகளின் எழுத்துக்களையும் போதனைகளையும் கட்சிக்கு தன்னுடைய அணிகளின் கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கு போதிக்கின்றனர் . பொதுவுடமை தத்துவத்தை மறுத்துவிட்டு பொதுவுடமை அற்ற பல்வேறு விதமான பிற்போக்குத்தனமான முதலாளித்துவ சித்தாந்தங்களை அணிகளுக்கு போதித்து கம்யூனிசத்துக்கு விரோதமான செயலில் செயல்படுவதை கண்மூடித்தனமாக அணிகள் பின்பற்றுவதற்கு ஏதுவாக செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள் இதனையும் விரிவாக பார்ப்போம் பிறகு ...
இங்கு தோன்றிய புரட்சிக்கான கட்சியின் நிலைப்பாடும் என்ன? புரட்சிகர கட்சியின் பணி அதனைப் பற்றி சற்றுப் பேசி விட்டு நிறுத்திக் கொள்கிறேன். ஒரு சில அமைப்புகளை தவிர்த்து மார்க்சியத்தை கைவிட்டுவிட்டு மார்க்சியம் இல்லாத எல்லா போக்குகளை கைக்கொள்ளும் போக்குதான் இங்குள்ள நடைமுறையாக அவர்கள் மத்தியில் உள்ளது
சில பார்ப்போம்.
மார்சியம் போதாது அம்பேத்கரும் பெரியாரும் வேண்டும்.
மண்ணுக்கேற்ற மார்க்சியம்தான் சரியானது
ஜாதிப் பிரச்சனை மட்டும்தான் பிரச்சனை
அடையாள அரசலில் மூழ்கியே போய்விட்டனர்
இவ்வாறான பல போக்குகளை காணும் பொழுது இவர்கள் கம்யூனிசத்தை விட கம்யூனிசம் அல்லாத போக்கில் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள் என்பது வருத்தமாக உள்ளது நாளை விரிவாக விவாதிப்போம் உங்களின் கருத்துகளை தெளிவுப்படுத்துகள் தோழர்களே

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்