இன்றைய கம்யூனிஸ்ட்டுக கட்சியினை பற்றி

பொதுவுடமைக் கட்சியின் நோக்கம் சமூக மாற்றமே. இது செயல்பாட்டுக்கான இயக்கமாகும் கட்சி என்பது பிழைப்புவாதிகளின் கூடாரம் அல்ல.

பொதுவுடைமை இயக்கம் பாட்டாளி வர்க்க தத்துவத்தால் தலைமை தாங்கப்படும் இயக்கமாகும் . ஒரு பொதுவுடமை கட்சி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுதலோடு தொடர்பு படுத்தி காண வேண்டும் சமூக மாற்றத்திற்குரிய குறிக்கோள்களை வரையறை செய்தலை கட்சியின் திட்டம் ஆகும். புரட்சிக்கான திட்டத்தை வழிமுறைகளை கண்டறிந்து அதனை வழிகாட்டியாக கொண்டு மக்களை புரட்சிகர இயக்கத்தின் பால் இருக்கும் நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகள் தான் நடைமுறை தந்திரம்

இன்றைய விவாதத்திற்கு

இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனங்களான என் சி பி எச் ம் பாரதி புத்தகாலயமும் கம்யூனிசத்தை வளர்க்கும் கம்யூனிஸ்ட் ஆசான்களின் நூல்களை வெளிக்கொணர மறுக்கும் அதே வேளையில் கம்யூனிச விரோத கொள்கை கொண்டோரின் நூல்களை மூட்டை மூட்டையாக கொண்டு வருகிறது ஆக இதன் நோக்கம் என்ன என்று நீங்களே தெரிந்து பேசுங்கள்

புரட்சிக்கான கட்சியாக உதித்த நக்சல்பாரியின் வாரிசாக  கூறிக் கொள்ளும் பலர் இங்கு மார்க்சியத்தை விட மார்க்சியம் அல்லாத போக்கில் செயல்படும் பொழுது இவர்களைப் பற்றி நான் என்ன சொல்வது சொல்லுங்கள்

குருங்குழுவாத போக்கானது இடதுசாரி கட்சியில் இருந்து இடதுசாரி குழுக்கள் வரை எல்லாருக்கும் பொருந்தும் எப்படி எனில் நாங்கள் மட்டும் தான் சரியானவர்கள் என்று தனித்தனியாக இயங்கும் போக்கை என்ன சொல்ல?

 சில குறுங்குழுவாதிகள் தன்னுடைய குழுவைத் தவிர வேறு குழுக்களோடு இணைவதற்கு முன்வருவதில்லை. ஒரு சமயம் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் இத்தகைய குறுங்குழுவாதிகள் சிலர் இருந்தார்கள் என்றும் அவர்களால் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் வழியில் தடை எற்பட்டது என்று மாவோ விளக்கியுள்ளார்.

இத்தகைய குறுங்குழுவாதத்தை முறியடிப்பதற்கு விரிவான அளவில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கட்சிக் கல்வியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் மாவோ. இதன் மூலம் குறுங்குழுவாதத்தின் அபாயத்தையும், அதிலிருந்து விடுபட வேண்டுமானால் கட்சியின் அணிகளுக்கு மார்க்சிய போதனையின் அவசியத்தை மாவோ எடுத்துச் சொன்னார். ஒரு பலம் வாய்ந்த கட்சிக்கே ஆபத்தானது இந்த குறுங்குழுவாதமாக இருக்கின்ற போது, இந்தியாவில் நிலவுகின்ற குழுக்களில் இந்த குறுங்குழுவாதம் எந்தளவு பாதிப்பைக் கொடுக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் நீண்ட காலமாக கம்யூனிஸ்டுகள் பிளவுபட்டு இருக்கும் சூழலில், குறுங்குழுவாதத்திற்கு இவர்கள் பழக்கப்பட்டு அது இயல்பானது என்று குறுங்குழுவாதத்தில் ஊறிப்போய்விட்டனர். அதன் விளைவாக உழைக்கும் வர்க்கம் தனது பலத்தை இழந்து மிகவும் பலவீனமான நிலையில் எதிரிகளை எதிர்த்துப் போராட முடியாமல் எதிரிகளுக்கு அடிமைகளாக இருக்கும் ஒரு பரிதாபமான நிலையை இந்த குறுங்குழுவாதிகள் ஏற்படுத்திவிட்டார்கள். அதன் காரணமாகவே பாசிஸ்டுகள் மக்களின் மீது மிகக் கடுமையாக தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். இந்த கொடுமைக்கு பாசிஸ்டுகள் மட்டும் காரணம் இல்லை. கம்யூனிச அமைப்புகளிலுள்ள குறுங்குழு வாதிகளும் ஒரு காரணமாகும். ஆகவே கம்யூனிச குழுக்கள் இந்த குறுங்குழு வாதத்திலிருந்து மீளாதவரை உழைக்கும் மக்களுக்கு வாழ்வு இல்லை. எல்லா வகையான குறுங்குழுவாதத்திற்கும் அகவயவாதமே (எண்ணமுதல்வாதமே) அடிப்படையாகும் என்றார் மாவோ. அதாவது தனது மனதிற்குப் பட்டதே உண்மையானது என்றும் பிறர் சொல்வதில் உண்மைகள் எதுவும் இல்லை என்று கருதும் சிந்தனைப் போக்குதான்இதற்கு காரணம் என்பதாகும். இத்தகைய சிந்தனை படைத்தவர்கள் பிறர் சொல்லும் கருத்துக்களை காதுகொடுத்தும் கேட்க்கமாட்டார்கள். தான் சொல்வதை மட்டுமே பிறர் கேட்க்க வேண்டும் என்று கருதுவார்கள். புறநிலை எதார்த்தத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அதன் காரணமாகவே இவர்கள் பிறறோடு தோழமையாகப் பழக மாட்டார்கள். தனது கருத்துக்கு மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களை எதிரிகளாகவே பார்ப்பார்கள். இத்தகைய சிந்தனைப் போக்குள்ளவர்களால் ஒற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இத்தகைய தன்மை படைத்தவர்களால் ஒரு பலம்வாய்த கட்சிக்கே கேடு விளையும் .

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்