நமது படிப்பைச் சீர்செய்வோம்-மாவோ அதன் தொடர்ச்சியே
நடைமுறைப் போராட்டங்களின் வளர்ச்சிப் போக்கில் அதனைப் படித்துப் பின் பொதுக் கருத்துக்களை உருவாக்கினார். பிறகு அந்த முடிவுகளை நடைமுறைப் போராட்டங்களில் உரசிப்பார்த்து சோதித்துக் கொண்டார். இதைத்தான் நாம் கோட்பாட்டு வேலை என்கிறோம்.
இவ்வகையில் வேலைகளை எப்படிச் செய்வது என்பதை அறிந்த, அதிகமான தோழர்கள் நமது கட்சிக்குத் தேவை, இவ்வகையான கோட்பாட்டு ஆய்வினைக் கற்றுள்ள அதிகமான தோழர்கள் நமது கட்சியில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோனர் முன்னேறக் கூடிய அறிவாளிகள் நாம் அவர்களை மதிக்க வேண்டும். ஆனால் அவர்கள் சரியான கொள்கைகளை கைக்கொள்ள வேண்டும் கடந்தகாலத் தவறினைத் திரும்பவும் செய்யக் கூடாது. அவர்கள் வறட்டுவாதத்தை மறுத்து ஒதுக்க வேண்டும். புத்தகங்களிலுள்ள முன் தயாரிக்கப்பட்ட “சொற்றொடர்க”ளுக்குள் சிக்குண்டவர்களாகத் தம்மைக் குறுக்கிக் கொள்ளக் கூடாது.
“உலகில் ஒரே ஒரு உண்மையான கோட்பாடுதான் உள்ளது. அது புறவய யதார்த்தத்திலிருந்து பெறப்பட்டு புறவய யதார்த்தத்தினால் சரிபார்க்கப்படுவதாகும். இதைத்தவிர மற்றவையெல்லாம் நம் கருத்தியல் கோட்பாடு என்று சொல்லத்தக்கதல்ல. கோட்பாடு நடைமுறையோடு சம்பந்தப்படாதபோது அது இலக்கற்றுப் போய்விடும என்று ஸ்டாலின் கூறினார். இலக்கற்ற கோட்பாடு பயனில்லாதது. பிழையானது அதனை நாம் ஒதுக்கிவிட வேண்டும். இலக்கற்ற கோட்பாடுகளை உருவாக்குப வர்களை நாம் இகழ்ச்சியோடு சுட்டிக் காட்ட வேண்டும். புறவய யதார்த்தத்தில் தோன்றி அதனால் சோதித்தறியப்பட்டமார்க்சிய லெனினியம், மிகச்சரியான அறிவியல் ரீதியான புரட்சிகரமான உண்மையாகும்.
ஆனால் மார்க்சிய லெனினியத்தைப் படிக்கும் மிகப்பலர், அதனை உயிறற்ற வறட்டுச்சூத்திரமாக எடுத்துக்கொள்வதன் மூலம் அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துகிறார்கள். இதனால் நமக்கும், அதே வேளையில் மற்ற தோழர்களுக்கும் ஊறுவிளைவிக்கிறார்கள்.
“மறுபக்கம் நடைமுறை வேலையில் பங்கெடுக்கும் தோழர்கள் தங்கள் அனுபவத்தைத் தவறான பாதையில் செலுத்தினால் வருந்த வேண்டி நேரிடும். இவர்கள் அனுபவத்தில் வளமானவர்கள், இது மதிப்புமிக்க ஒன்றுதான், ஆனால் தங்களது அனுபவத்தோடு திருப்தியடைந்து விட்டால் அது ஆபத்தான ஒன்று. அவர்கள் தங்கள் அனுபவம், புலனறிவு, ஒருபக்கமானது என்பதைஉணர வேண்டும் இந்த வகையில் அவர்கள் முழுமையான பகுத்தறிவில் குறைபாடுகள் உள்ளவர்கள் ஆவார்கள். வேறு வார்த்தையில் சொல்வதானால் அவர்கள் தத்துவக் குறைபாடுள்ளவர்கள். அவர்களின் அறிவு முழுமையற்றது. ஒப்பீட்டளவில் முழுமையான அறிவில்லாமல் நல்ல முறையில் புரட்சிகர வேலை செய்வதென்பது முடியாத ஒன்று. ஆகவே முழுமையற்ற அறிவில் இரண்டு வகை உண்டு. ஒன்று புத்தகங்களில் காணப்படும் முன் தயாரிக்கப்பட்ட அறிவு, மற்றது பெரும்பாலும் புலனுணர்வான பகுதி அறிவு. இரண்டுமே ஒருதலைப் பட்சமானது. இந்த இரண்டின் இணைவில்தான், பலமான ஒப்பீட்டளவில் முழுமையான அறிவைப் பெற முடியும். எப்படியிருந்த போதிலும் தத்துவத்தைப் படிப்பதற்குதொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியிலிருந்து வந்த நமது தோழர்கள் முதலில் அடிப்படைக்கல்வியைப் பெற வேண்டும். அதில்லாமல் அவர்கள் மார்க்சிய லெனினியக் கோட்பாட்டைக் கற்றுக்கொள்ள முடியாது. இதைப் பெறுவதன் மூலம் அவர்கள் எந்த நேரத்திலும் மார்க்சியம் லெனினியத்தை கற்றுக்கொள்ள முடியும். எனது குழந்தைப் பருவத்தில் மார்க்சிய லெனினியப் பள்ளியில் கலந்துகொள்ளவில்லை. ஆசிரியர் சொன்னார் கற்றுக்கொள்வதும், கற்றதை இடையறாது நினைவுகூர்வதும் எவ்வளவு இனிமையான ஒன்று. “இம்மாதிரிதான் எனக்கும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இந்தப் படிப்பு முறை பழமையானதாக இருந்த போதிலும் இது எனக்குச் சிறிது நல்லது செய்துள்ளது. ஏனெனில், இதிலிருந்து தான் படிப்பதற்கு கற்றுக் கொண்டேன். தற்போது நாம் கன்பூசியஸ் இலக்கியம் படிக்க இயலாது. ஆனால் நவீன சீனாவில் வரலாறு, புவியியல், அடிப்படை இயற்கை அறிவியல் போன்ற புதிய பாடங்கள் ஒருமுறை படித்து எல்லாவகைக்கும் உதவுகிறது இப்பொழுது நமது கட்சியின் மையக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வது இதுதான்: தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியிலிருந்து வந்தவர்கள் அடிப்படைக் கல்வியைப் பெற வேண்டும். ஏனெனில் அதிலிருந்துதான் அவர்கள் ஏதாவது ஒரு வகையான அறிவை - அரசியல், இராணுவ அறிவியல் அல்லது பொருளியல் அறிவை - தொடர முடியும். மற்றபடி, வளமான அனுபவம் இருந்தும் கோட்பாட்டை கற்றுக்கொள்ள இயலாமல் போய்விடும்.
இதிலிருந்து பெறுவது என்னவெனில் அகநிலைவாதத்தை எதிர்கொள்ள இந்த இருவகையான பிரிவினரை, அவர்கள் எதில் குறைவாக உள்ளனரோ, அதை நோக்கி வளர்க்கவும் மற்ற பிரிவினரோடு ஒன்றிணையவும் செய்ய வேண்டும். புத்தகப் படிப்பிலுள்ளவர்களை நடைமுறை திசை நோக்கி வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வகையில் மட்டும்தான் அவர்கள் புத்தகத்தோடு திருப்தியடைவது நிறுத்தப்பட்டு வறட்டுவாதத் தவறுகள் இழைப்பது தவிர்க்கப்படும். நடைமுறை வேலையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கோட்பாடு படிக்க வேண்டும். தீவிரமாகப் படிக்க வேண்டும். அதன் மூலம்தான் அவர்கள், தங்களதுஅனுபவத்தை ஒழுங்கமைக்கவும் தொகுக்கவும்சர்வவியாபக உண்மைக்காக தங்கள் பகுதி அனுபவத்தைத் தவறாகப் பயன்படுத்த மாட்டார்கள். வறட்டுவாதமும், அகவயவாதம் போன்றதே. எதிரெதிரான நிலையிலிருந்து மையம் கொள்வதுதான்.
“ஆகவே இரண்டு வகையான அகவயவாதம் - வறட்டுவாதம், அனுபவ வாதம் – நமது கட்சியிலுள்ளது. ஒவ்வொன்றும் பகுதியைத்தான் பார்க்கிறறு. முழுமையை அல்ல. மக்கள்விழிப்போடு இல்லாமல் இருந்தால், பகுதி என்பது ஒரு குறை என்பதை அறியாமலிருந்தால், அதிலிருந்து மீள்வதற்கு முயற்சிக்காமல் இருந்தால், திசைமாறுதல்களுக்குஆட்படுவார்கள். ”எப்படியிருந்த போதிலும், இந்த இருவித அகவயவாதத்தில் வறட்டுவாதம் என்பது, நமது கட்சியில் இன்னும் பெரிய அபாயமாக உள்ளது. வறட்டுவாதிகள் தங்களுடைய அரைவேக் காட்டுத் தனத்திற்கு, மார்க்சிய வேடமிட்டுக் கொள்வதன் மூலம் தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியிலிருந்து வந்த ஊழியர்களை தன் வயப்படுத்தி எளிதாக தங்கள் வேலைக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். வாய்ப்பந்தல் அடித்து அப்பாவி இளைஞர்களைபொறியில் சிக்க வைத்து விடுவார்கள். நாம் வறட்டு வாதத்தை வெற்றி கொண்டால் புத்தக அறிவுள்ள தோழர்கள், அனுபவ அறிவு கொண்டவர்களோடு இணைந்து கொண்டு, நடைமுறைப் பொருள்களை அல்லது பிரச்சனைகளைப் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். பிறகு பல சிறந்த ஊழியர்கள் கோட்பாட்டை நடைமுறையோடு இணைப்பார்கள். அதே சமயத்தில் சில உண்மையான கோட்பாட்டாளர்களை உருவாக்குவார்கள். நாம் வறட்டுவாதத்தை வெற்றி கொண்டால் அனுபவ அறிவைக் கொண்டுள்ளவர்கள் தங்கள் அனுபவத்தை கோட்பாட்டு நிலைக்கு உயர்த்த உதவும் நல்ல ஆசிரியர்களாக மாறுவார்கள். ஆகவே அவர்கள் அனுபவவாதத் தவறுகளை தவிர்ப்பார்கள்”.
”கோட்பாடு மற்றும் அறிவுஜீவி குறித்த குழப்பமானகருத்துக்களுடன்கோட்பாட்டைநடைமுறையோடு இணைப்பது குறித்தும் பெரும்பாலான தோழர்களிடையே குழப்பம்உள்ளது.அன்றாடம் கோட்பாட்டை நடைமுறையோடு இணைப்பது குறித்து உதட்டளவில்பேசி,செயலில்பிரித்தலையே செய்கிறார்கள். ஏனெனில் இணைப்பது குறித்து எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மார்க்சிய லெனினியக் கோட்பாட்டை எப்படிச் சீனப் புரட்சி நடைமுறையோடு இணைப்பது? வழக்கு மொழியில் சொல்வதனால் ““இலக்கை நோக்கி அம்பை எய்வதன் மூலம்” என்பது போல சீனப் புரட்சியை நோக்கி மார்க்சிய லெனினியத்தைச் சில தோழர்கள் மனம் போனவாறு “இலக்கற்று எய்கிறார்கள்”. இவ்வகையானவர்கள் புரட்சிக்கு ஊறுவிளைவிப்பவர்கள். மற்றவர்கள் அம்பை விருப்பத்தோடு தடவி “என்ன அருமையான அம்பு” என்று வியக்கிறார்கள். ஆனால், எய்வதற்கு முயற்சிப்பதே இல்லை. இவர்கள் புதுமை
குறித்த கலை வல்லவர்கள்தான். உண்மையில் புரட்சிக்கு ஒன்றுமே செய்வதில்லை. மார்க்சிய லெனினிய அம்பை, சீனப் புரட்சி என்ற இலக்கை நோக்கி எறிய வேண்டும். இந்த விசயம் தெளிவாகமல் நமதுகட்சியின் கோட்பாட்டு அளவை உயர்த்த முடியாது. சீனப் புரட்சி வெற்றியடைய முடியாது.
“நாம் மார்க்சிய லெனினியத்தைப் படிப்பது பகட்டுக்காக அல்ல. மாறாக முழுக்க முழுக்கத் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர லட்சியத்தை, வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும் அறிவியல் என்பதால்தான் படிக்கிறோம். ஒரு முறை கற்றுக் கொண்டால், எளிதாக அனைத்து நோய்களையும் தீர்த்துவிடும் காயகல்பமாக மார்க்சிய லெனினிய மேற்கோள்களைக் கருதும் நபர்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவர்கள் குழந்தைத் தனமான அறியாமையை வெளிப்படுத்து கிறார்கள். அவர்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டும். முக்கியமான இந்த வகையான அறியாமையிலுள்ள நபர்கள்தான், மார்க்சிய லெனினியத்தை ஒரு வறட்டு வாதமாகக் கையாளுகிறார்கள். அவர்களுக்கு நாம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
“உங்கள் வறட்டுவாதம் பயனற்றது”. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் நமது தத்துவம் வறட்டுவாதமல்ல; செயலுக்கான வழிகாட்டி எனத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்த வகையான மனிதர்கள் மதிப்பு வாய்ந்த, உண்மையில்மிகவும் முக்கியமான இந்தக் கூற்றை மறந்துவிடுகிறார்கள். மார்க்சிய லெனினிய நிலையினை நோக்கு நிலையை வழிமுறையை, லெனின், ஸ்டாலின் பாடங்களைச் சீனப் புரட்சி குறித்து,நல்ல முறையில் கையாள்வதன் மூலம்தான் சீனக்கம்யூனிஸ்டுகள் தத்துவத்தை நடைமுறையோடு இணைத்துள்ளனர் எனக் கருத முடியும். மேலும், சீன வரலாறு புரட்சி குறித்த யதார்த்தங்களின் மீது தீவிர ஆய்வினைச் செய்வதன் மூலம் பல துறைகளில் சீனாவின் தேவைகளைச் சந்திக்கும் ஓர் ஆக்கப்பூர்வமான கோட்பாட்டு வேலையைச் செய்ய முடியும்.
பெயரளவில் கோட்பாட்டை நடைமுறை யோடு இணைப்பதென்று பேசுவதால் மட்டுமே -நூற்றாண்டுகளுக்கு பேசிக் கொண்டிருந்த போதிலும் - எந்தப் பயனும் விளையாது. அகவயவாதத்தையும், ஒரு தலைப்போக்கையும் வேரறுக்க வேண்டும்.
“அகவயவாதத்தை எதிர்ப்பதற்கு கட்சி முழுவதிலும் உள்ள படிப்பு முறையை சீர் செய்வது பற்றி இன்று இது போதும்”.
No comments:
Post a Comment