இலக்கு 48 இணைய இதழ் PDF வடிவில்

இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்

1). கம்யூனிஸ்ட்டுகள் என்பவர்கள் இங்கே எப்படி உள்ளனர்?

2).அரசு தேர்தல் பற்றி ஓர்தேடல்

3). மொழி இனம் பற்றிய மார்க்சிய கண்ணோட்டம்

4).நமது நடைமுறைக்கான மார்க்சிய கோட்பாடுகளை புரிந்து கொள்வோம். பகுதி-1

5). மார்க்ஸிய தத்துவம்

6).இந்திய தத்துவங்கள் ஓர் மார்க்சிய பார்வையில்

 இலக்கு இணைய இதழ் 48 அய் PDF வடிவில் பெற இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்

தொடர் விவாதங்களுக்கு விடை தேடி வந்துள்ள இலக்கு 48 இணைய இதழ்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1). பாராளுமன்றம் மூலதனத்தின் வெளிப்படையான சர்வதிகாரத்தை மறைப்பதற்கான ஒரு திரை, ஒரு அணிகலனுமாகும். பாராளுமன்றம் மூலம் சோஷலிசத்தை அடையலாம் என்ற மாயையைப் பரப்புவதன் மூலம் அவர்களின் வர்க்க உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும், ஆயுதப் படையில்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறதென்பதை மக்களிடமிருந்து திசைதிருப்புவதற்கும் முயற்சிக்கின்றது. ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்குப் பதில் வெறும் சொற்களால் போராட்டம் நடத்தும் மாற்று யோசனையை கூற முயற்சிக்கின்றது.
2).மார்க்ஸ் முதல் மாவோ வரை மார்க்சியத்தின் வழியில் செயல்பட்டு உலகில் மார்க்சியத்தை நிலை நாட்ட பாடுபட்டனர். மார்க்சியம் வளரும் சூழ்நிலைக்கேற்ப லெனினியமாகவும் மாவோ சிந்தனையாகவும் வளர்ந்தது. ஆக மார்க்சிய ஆசான்களை தங்களின் ஆசான்களாக ஏற்பவர்கள் மட்டுமே உண்மையாலும் மார்க்சியத்தை நடைமுறைக்கான தத்துவமாக ஏற்று நடத்தும் சித்தியுள்ளவர்கள் இவர்களை ஏற்காதவர்கள் எப்படி மார்க்சியவாதியாக முடியும்.
3)மொழி என்பது மூளையிலிருந்து பிறக்கின்றது அது மக்களின் தொடர்பிற்கான கருவியாக பணியாற்றுகிறது. மொழி சிந்தனையின் வெளிப்பாடு ஆகும். சிந்தனை என்பது இயற்கை பொருள்கள் மீதான புலன் உணர்வுகளின் பிரதிபலிப்பு. எனவே மொழியையும் சிந்தனையும் பிரிப்பது கருத்து முதல் வாதமாகும். கருத்து முதல்வாதிகளின் சிந்தனைகளும் கூட மூளை எனும் பொருளிலிருந்து தான் உதிக்கின்றன.
4).கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் ஒரு நாட்டில் எத்தகைய சித்தாந்த அரசியல் செல்வாக்கு பெற்று இருக்கிறதோ அந்த சித்தாந்த அரசியலுக்கு கம்யூனிஸ்டுகளும் பலியாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அன்றைய ரஷ்யாவில் செல்வாக்குற்ற நரோத்தினிக்குகளின் இடது விலகல் போக்குக்கு ரஷ்ய கம்யூனிஸ்டுகள் பலியானது போலவே தற்காலத்தில் செல்வாக்கு பெற்ற திருத்தல்வாதம், கலைப்புவாதம், சீர்திருத்தவாதம், டிராட்ஸ்கியவாதம், அடையாள அரசியல் போன்ற சமூக விஞ்ஞானமான மார்க்சியத்திற்கு எதிரான கருத்துக்களுக்கு இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் பலரும் பலியாகிக் கிடக்கின்றனர்.
5).மார்க்சியம் என்பது நாம் வாழும் உலகையும், அதன் அங்கமான மானுட சமூகத்தையும் குறித்த ஒருபொதுவான கோட்பாடாகும், அல்லது சித்தாந்தமாகும்.இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால் தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும், அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது ,மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல்பாடுகளின் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. ஆகவேதான் சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலை, அவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது.
6).இயற்கையை எதிர்த்து மனிதன் நடத்திய போராட்டத்தில் உருவானதே தத்துவஞானம். இயற்கை, மனிதன், சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின் உறவுகளையும் அதன் தன்மைகளையும் ஆராய்வதே தத்துவஞானம்.
முழுமையாக இதழில் வாசித்து கருத்திடுங்கள் தோழர்களே

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்