இயக்கவியலின் உதாரணங்கள்.(சுருக்கப்பட்ட தொகுப்பு) மாவோ. பாகம் 1 இலக்கு 49 இதழிலிருந்து

 1. பகுப்பாய்வைப் புரிந்துகொள்வதற்கு இயக்கவியலைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்மறைகளின் ஒற்றுமை தத்துவமாக இயக்கவியலைத் தொகுத்துரைக்கலாம் என்று லெனின் கூறினார். இந்த நிலையிலிருந்து இயக்கவியலின் கருப்பொருளை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த தத்துவத்தை விளக்குவதும் மேம்படுத்துவதும் அவசியம்.

எதிர்மறைகளின் ஒற்றுமை என்பது நிபந்தனைக்குட்பட்டது,தற்காலிகமானது, மாறகூடியது, சார்புத் தன்மையானது, பரஸ்பரம் தனித்தன்மையானது. மறுபக்கத்தில், வளர்ச்சியும் இயக்கமும் எல்லையற்றது என்பதைப் போலவே எதிர்மறைகளின் போராட்டமும் எல்லையற்றது. எனவே வேறுபாடு தற்காலிகமானது; தகர்த்தெறிய முடியும்; ஒவ்வொரு நாளும் கூடுதல் நிதானத்தோடு வேறுபாட்டைக் கண்டறிதல் நமது பொறுப்பாகும். அது திறமையான ஒரு நபரைப் பொறுத்தவரை, கிளர்ச்சியிலிருந்து ஹங்கேரி மற்றும் போலந்து சம்பவங்களை அவரால் தடுத்திருக்க முடியுமா முடியாதா என்பதைச் சார்ந்ததல்ல; ஆனால் சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அவர் வழிவகைகளைக் கொண்டிருக்கிறாரா இல்லையா என்பதைச்சார்ந்திருக்கிறது.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? ஒரு பொருளைப் பற்றியோ அல்லது ஒரு பிரச்சனையைப் பற்றியோ அல்லது அதனை மாற்றியமைப்பது பற்றியோ நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் அதனை பகுத்து ஆராய வேண்டும். அவ்வாறு நாம் பகுத்து ஆராய வேண்டுமானால் அதற்கு இயக்கவியல் என்ற விஞ்ஞான அணுகுமுறையை நாம் அறிந்திருக்க வேண்டும். அதாவது ஒரு பிரச்சனையை இயக்கவியல் என்ற விஞ்ஞான ஆய்வு முறையைக் கொண்டு பகுத்தாராய்ந்தால் மட்டுமே அந்தப் பிரச்சனையை உள்ளது உள்ளபடி உண்மையாகப் புரிந்துகொள்ளவும் அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான தேவையான வழிமுறையையும் நாம் அறிந்துகொள்ள முடியும்.

இயக்கவியல் என்பது எதிர்மறைகளின் ஒற்றுமைக்கான தத்துவம் என்றார் லெனின். இவ்வாறு எதிர்மறைகளின் ஒற்றுமை என்று கூறுவதை சிலர் தவறாக அதாவது எதிர்மறைகளுக்கு இடையே வேறுபாடில்லாத ஒற்றுமை இருக்கிறதாக கருதுகிறார்கள். இது தவறான கண்ணோட்டமாகும். ஆனால் ஒரு பொருளுக்குள் அல்லது ஒரு பிரச்சனைக்குள் ஒன்றை ஒன்று புறக்கணிக்கும் அல்லது எதிர்க்கும் எதிர்மறைகள் இருக்கிறது, அதே வேளையில் இந்த எதிர்மறைகள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன, அதாவது ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்ற பொருளிலேயே எதிர்மறைகளின் ஒற்றுமை என்று இங்கு கூறப்படுகிறது. உதாரணமாக சமூகத்தில் முதலாளிகளும் தொழிலாளிகளும் இருக்கிறார்கள். இவைகள் சமுதாயத்திலுள்ள எதிர்மறையாகும். இதில் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் பகைமையான போராட்டங்கள் நடந்துகொண்டு இருக்கும் போதே முதலாளிகள் தொழிலாளர்களையும், தொழிலாளர்கள் முதலாளிகளைச் சார்ந்தும் இருக்கிறார்கள் என்பதை நாம் காணலாம். ஆகவே முதலாளிகளுக்குத் தொழிலாளிகளுக்கும் ஒற்றுமை நிலவுகின்றதாக கருதுவது தவறாகும். அவர்களுக்கு இடையில் பகை இருக்கிறது அதே வேளையில் முதலாளிகளால் தொழிலாளர்களை தவிர்க்க முடியாது அதே போலவே தொழிலாளர்களால் முதலாளிகளைத் தவிர்க்க முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவேதான் முரண்பாட்டு விதியில் சொல்லப்படும் எதிர்மறைகளின் ஒற்றுமை என்றால், அந்த ஒற்றுமையானது நிபந்தனைக்கு உட்பட்டது, அதாவது எதிர்மறைகளுக்கு இடையில் ஒற்றுமையானது நிபந்தனை இல்லாமல் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. உதாரணமாக தொழிற்சாலையில் உற்பத்தி நடக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையில் உறவு உள்ளது. இந்த உறவானது தற்காலிகமானது புதிய சூழலில் இந்த உறவில் புதிய மாற்றம் ஏற்படும், ஆகவே இந்த உறவு அல்லது ஒற்றுமையானது தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும். மேலும் இந்த ஒற்றுமையானது சார்புத் தன்மையாகவும் தனித்தனைமையானதாகவும் இருப்பதை நாம் பார்க்கலாம்.

ஆகவே எதிர்மறைகளின் ஒற்றுமை என்பதை வறட்டுத்தனமாக ஒற்றுமை என்று பார்க்காமல் தனித்தன்மையான தற்காலிகமானது என்றும் மாறக்கூடியது என்றும் விரிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அதே வேளையில் ஒரு பொருளின் அல்லது பிரச்சனையின் வளர்ச்சியும், இயக்கமும் எல்லையில்லாமல் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். உதாரணமாக மனித சமூகமானது வரலாற்றில் பல பிரச்சனைகளை கண்டுள்ளது. அந்தப் பிரச்சனைகளில் பலவற்றை போராடி தீர்த்துள்ளது. எனினும் ஒரு பிரச்சனை தீர்ந்தவுடன் வேறு பிரச்சனை ஏதும் வராது என்பதல்ல. மாறாக புதிய பிரச்சனைகளை மனித சமூகம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறது அதனை தீர்ப்பதற்கான போராட்டங்களும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு பிரச்சனைகளும் அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து எல்லையில்லாமல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும் .எதிர்மறைகளுக்கு இடையிலான ஒற்றுமையானது தற்காலிகமானதாக இருக்கும் அதே வேளையில் இதற்கிடையிலான போராட்டமானது எல்லையற்று தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். ஆகவே எதிர்மறைகளுக்கு இடையிலான வேறுபாடு தற்காலிகமானதே, அதாவது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையிலான வேறுபாடு தற்காலிகமானதே, எனினும் இதனை தகர்த்தெறிய முடியும், அதாவது இந்த முரண்பாட்டுக்கு தீர்வுகாண முடியும். ஆகவே ஒவ்வொரு நாளும் முரண்பாட்டில் காணப்படும் எதிர்மறைகளை அதாவது தொழிலாளர்களின் இயக்கத்தையும் முதலாளிகளின் இயக்கத்தையும் நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதன் அடிப்படையில் முரண்பாட்டின் ஒரு அம்சமான முதலாளிகளின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை ஒழித்துவிட்டு எதிர்மறை அம்சமான தொழிலாளிகளின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை நிறுவதன் மூலம் இந்த முரண்பாட்டை தீர்க்க வேண்டும். எனினும் இதற்கான முயற்சியில் நாம் ஈடுபடும்போது தொழிலாளர்கள் போராட்டத்தில் தோல்வி அடையலாம், இந்த தோல்வியைக் கொண்டு ஒருவர் அல்லது ஒரு கட்சியை நாம் மதிப்பீடு செய்யக்கூடாது. எனினும் இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிக்காக புதிய வகையான கொள்கைகளை இயங்கியல் முறையில் தயாரித்து செயல்படுகிறாரா என்பதைக் கொண்டே ஒரு அமைப்பு சரியானதா இல்லையா என்று மதிப்பிட வேண்டும். இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் இந்திய சமூகப் பிரச்சனைகளை இயங்கியல் முறையில் பகுத்தறிவதற்கு முயற்சி செய்யவில்லை. இந்திய சமூக இயக்கத்தில் காணப்படும் முரண்பாடுகளைப் புரிந்துகொண்டு எந்த முரண்பாட்டை என்ன முறையான போராட்டத்தின் மூலம் தீர்க்க வேண்டும் என்பதற்கு இயங்கியல் விஞ்ஞானத்தை இவர்கள் தொடர்ந்து பயன்படுத்தவில்லை.

மேலும் இவர்களது நடைமுறைக் கொள்கையை செயல்படுத்தி முரண்பாடுகளை தீர்க்கவில்லை என்பது எதார்த்தமான உண்மையாகும். இதனை தவிர்க்க முடியாததுதான் எனினும் இந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு புதிய கொள்கை வகுத்து முன்னேறவில்லை என்பதும் எதார்த்த உண்மையாகும். ஆகவே ஒவ்வொரு கம்யூனிஸ்டும் சமூகப் பிரச்சனைகளை அலசி ஆராய்வதற்கு இயங்கியல் முறைகளை நமது மார்க்சிய ஆசான்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணரவேண்டும்.

2. இயக்கவியல் என்பது ஒவ்வொரு விஷயத்திலும் ஒப்பீட்டுக்கு இரண்டு வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்ச உண்மையான மார்க்சியம் - லெனினியம் மற்றும் சீனாவின் குறிப்பிட்ட நடைமுறையின் ஒருங்கிணைப்பே பொருள்முதல்வாதமாகும். இரண்டுமே எதிர்மறைகளின் ஒற்றுமையாகும். இதுதான் இயக்கவியல். வாதம் ஏன் வற்புறுத்தப்படுகிறது?. இயக்கவியல் பற்றி விவாதிப்பதை மிக எளிதாக தவிர்ப்பதற்கு சோவியத் யூனியன் தனக்கேயுரிய பாதையைக் கொண்டுள்ளது. சோவியத் யூனியனின் அனுபவங்கள் ஒரு பக்கம் இருக்கின்றன. சீனாவின் நடைமுறையும் கூட ஒரு பக்கத்தில் இருக்கிறது.

இதுதான் எதிர்மறைகளின் ஒற்றுமை. சோவியத் யூனியன் தனது அனுபவங்களிலிருந்து நல்லவற்றை தெரிவு செய்து கொண்டு, அவற்றைப் பின்பற்ற வேண்டும். தவறானவைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை அழித்துவிட வேண்டும். சோவியத் யூனியனின் அனுபவங்களைத் தனிமைப்படுத்தி, சீன அனுபவத்துடன் அவற்றை ஒருங்கிணைக்காதது நல்ல அனுபவங்களை தெரிவு செய்து அவற்றை பின்பற்றுவதாக இருக்காது. ஒருவர் ஒரு செய்தி ஏட்டை வெளியிட்டு பிராவ்தாவின் வழியிலேயே விவாதித்துக்கொண்டு இருந்தால் அது பகுப்பாய்வாக இருக்காது. எல்லா இடத்திலும் ஆதரவை நாடுகிற சுயேச்சையான சிந்தனையை இழந்துவிட்ட 3 வயது குழந்தையைப் போல்தான் அவர் இருப்பார். எல்லாவற்றிலும் ஒப்பீட்டுக்கு இரண்டு வழிமுறைகள் இருப்பது அவசியம். இதுதான் இயக்கவியல். இல்லை என்றால் அது கற்பனாவாதம்.

இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? உலகைப் பற்றிய அறிவதற்கும் அதனை மாற்றுவதற்கும் பயன்படும் தத்துவமான மார்க்சியம்- லெனினிய தத்துவமும் சீனாவின் குறிப்பிட்ட நடைமுறையும் இணைத்துப் பார்ப்பதுதான் பொருள்முதல்வாதமாகும். தத்துவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நடைமுறையை புறக்கணிப்பதோ, அல்லது நடைமுறையை மட்டும் எடுத்துக்கொண்டு தத்துவத்தை புறக்கணிப்பதும் பொருள்முதல்வாதப் பார்வை ஆகாது என்கிறார் மாவோ. இவ்விரண்டையும் எதிர்மறைகளின் ஒற்றுமை என்கிறார் மாவோ. அதாவது தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையிலான உறவானது இயங்கியல் உறவாகும் என்றுமாவோ கூறுகிறார். இந்த இயங்கில் உறவானது ஒற்றுமையையும்

வேற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது. அதாவது நடைமுறை அனுபவத்திலிருந்து நாம் சிந்தித்து முடிவெடுக்கும் கருத்துக்கள் எல்லாம் நடைமுறை எதார்த்தத்தை பிரதிபலிக்கிறது என்று சொல்ல முடியாது. இந்த வேறுபாட்டை தீர்ப்பதற்கு நடைமுறையில் சோதனை மேற்கொண்டு உண்மையை நாம் அறிந்து நாம் நமது கருத்தை அறிய வேண்டும். இதுதான் சிந்தனைக்கும் நடைமுறை வாழ்வுக்கான முரண்பாடாகும் என்கிறார் மாவோ.இயக்கவியல் பற்றி விவாதிப்பதை குருஷேவ் தலைமையிலான சோவியத் யூனியன் தந்திரமாக மறுத்ததை மாவோ குறிப்பிட்டு விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உண்மையை யாரும் புரிந்துகொள்ளக் கூடாது என்றும், கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டு ஒரு கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகிவிடக்கூடாது என்றும், இவ்வாறு உருவாக்கப்படும் ஒரு கருத்தின் அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதே குருஷேவ் திருத்தல்வாதியின் விருப்பமாக இருந்தது. இதே நோக்கத்தோடுதான் இந்தியாவிலுள்ள இடதுசாரித் தலைவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு இடையே விவாதங்கள் நடப்பதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார்கள். ஒவ்வொரு அமைப்புத் தலைவர்களும் தங்களது கருத்துதான் சரியானது என்றும் பிறரது கருத்துக்களை பரிசீலிக்காமலேயே அது தவறான கருத்து என்று அவர்களது அமைப்பைச் சார்ந்த அணிகளிடம் பேசி அணிகளையும் பிறரோடு விவாதத்தில் ஈடுபடவிடாமல் தடுத்து, சமூகம் பற்றியஉண்மையை யாரும் அறிந்துவிடாமல் தடுத்துக்கொண்டு அவர்களைச் சார்ந்த அணிகளையும் மக்களையும் செம்மறி ஆட்டுக் கூட்டம்போல் முட்டாள்களாகவே வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே உண்மையான கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும் மாவோ சொல்லியவாறு விவாதங்களில் ஈடுபட வேண்டும். நூறு பூக்கள் பூக்கட்டும் நூறு கருத்துக்கள் மோதட்டும் என்ற மாவோவின் வழிகாட்டுதலை பின்பற்றுபவரே உண்மையான கம்யூனிஸ்ட் ஆவார்.

சோவியத் யூனியனின் அனுபவம் ஒரு பக்கம் இருக்கிறது சீனாவின் நடைமுறையும் ஒரு பக்கத்தில் இருக்கிறது. இவ்விரண்டிற்கும் இடையில் இயங்கியல் உறவு இருக்கிறது. இதுதான் எதிர்மறைகளின் ஒற்றுமை என்று சொல்லப்படும் முரண்பாடாகும். சோவியத் யூனியனின் அனுபவத்திலிருந்து நல்லவற்றை நாம் எடுத்துக்கொண்டு பின்பற்ற வேண்டும், அதே வேளையில் தவறானவற்றைப் புரிந்துகொண்டு அதனை நாம் புறக்கணிக்க வேண்டும் என்றார் மாவோ. இவ்வாறில்லாமல் சோவியத் யூனியனின் அனுபவத்திலிருந்து விஷயங்களை புரிந்துகொண்டு சீன அனுபவத்தோடு நாம் இணைக்கத் தவறினோம் என்றால் சோவியத் யூனியனின் அனுபவத்திலிருந்து கிடைத்த நல்ல விஷயங்களை சீனக் கம்யூனிஸ்டுகள் புறக்கணிக்கிறார்கள் என்பது பொருளாகும். இதனை புரிந்துகொள்ள மறுக்கும் இந்திய இடதுசாரித் தலைவர்கள் ரஷ்ய மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனுபவங்கள் எல்லாம் அந்தந்த நாடுகளுக்குப் பொறுத்தமாக இருக்கலாம் என்றும் இந்தியாவுக்கு அது பொருந்தாது என்றும் கூறி, ரஷ்ய சீனப் புரட்சியின் அனுபவத்திலிருந்து நாம் பின்பற்ற வேண்டிய நல்ல விஷயங்களை கைவிட்டுவிட்டு இந்தியத் தனித்தன்மைக்கான கொள்கை வகுத்து செயல்படுவதாகச் சொல்லி, இந்தியப் பொதுவுடமை இயக்கத்தை சீரழித்து நாசப்படுத்திவிட்டார்கள்.

ஆகவே இனிவரும் காலங்களில் தலைமை தாங்க வேண்டிய இளைஞர்கள் மாவோ சொன்னபடி ரஷ்யா மற்றும் சீனப் புரட்சியின் அனுபவங்களிலிருந்து சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து இந்திய நடைமுறைக்குப் பயன்படுத்த வேண்டும். ஒரு அமைப்பில் செயல்படும் தலைவர்கள் ஒரு கொள்கை முடிவெடுத்து அந்தத் தலைவர்களைப் பின்பற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மத்தியில் மட்டும் விவாதிப்பது விவாதம் ஆகாது. இதற்கு மாறாக அந்தத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்தை மறுத்து மற்றொரு கருத்தை சிலர் வெளியிடும் போது, அந்தக் கருத்தையும் கணக்கிலெடுத்து விவாதிப்பதே விவாதம் ஆகும். மேலும் ஒரு கருத்தை ஒரு அமைப்பிற்குள் மட்டும் விவாதிப்பது அந்தப் பிரச்சனையின் உண்மைத் தன்மையை அறிவதற்கான பகுத்தாய்வாக இருக்க முடியாது என்கிறார் மாவோ.

ஆகவே இந்திய சமூகம் பற்றிய உண்மையான நிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால் ஒவ்வொரு கம்யூனிஸ்டும், ஒவ்வொரு கம்யூனிச அமைப்பும் தங்களது கருத்துக்களை பகிரங்கமாக முன்வைத்து வெளிப்படையான விவாதங்களில் ஈடுபட வேண்டும். இத்தகைய விவாதங்கள் நடத்துவது அமைப்பின் இரகசியத்தை பாதுகாப்பதற்கு எதிரானது என்பது கம்யூனிஸ்டுகள் தங்களது கொள்கைகளை மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகிறார்கள் என்ற மார்க்சியக் கோட்பாட்டை மறுப்பதாகும். ஆகவே மார்க்சிய லெனினியத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் சிந்தித்து செயல்படுவதில் உறுதியாக இருப்பவர்கள் தங்களுக்கு இடையில் முதலில் விவாதம் நடத்த முன்வர வேண்டும். மேலும் நம்முடைய கருத்தைஎல்லோரும் ஆதரிக்க வேண்டும் என்று விரும்புவது தவறாகும் என்கிறார் மாவோ ஏனெனில் பிற்போக்கு வர்க்கங்களும் அதன் அரசியலை ஏற்றுக்கொண்டவர்களும் நமது கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆகவே பிற்போக்காளர்கள் நமது கருத்தை ஏற்கவில்லை என்றால் நமது கருத்து சரியானது என்று உணர்ந்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டும், மாறாக வருத்தம் அடையக் கூடாது. மார்க்சிய ஆசான்களது போதனைகளை புரிந்துகொள்வதிலிருந்து இந்த சமூகத்தை ஆய்வு செய்து நடைமுறைக்குப் போவது வரையில் நாம் ஒவ்வொருவரும் நமது சுய சிந்தனையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றார் மாவோ.

அதற்கு நாம் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக எல்லாவற்றையும் நமது தலைவர் பார்த்துக்கொள்வார் என்று கருதக் கூடாது. மேலும் நாம் எதை ஒப்பிட வேண்டுமானாலும் அங்கு இரண்டு வழிமுறைகள் இருக்க வேண்டும் என்றார் மாவோ.

அதாவது ஒரு கருத்தை நாம் ஒப்பிட வேண்டுமானால் அதனை மற்றொரு கருத்தோடுதானே ஒப்பிட வேண்டும். ஆகவே நாம் எது உண்மை என்பதை புரிந்துகொள்வதற்கு ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம் என்கிறார் மாவோ.

இதன் தொடர்ச்சியாகவே ஒரு இயக்கத்துக்கு முரண்பாடு அவசியம் என்றும், ஒரு கட்சிக்குள் முரண்பட்ட கருத்துக்கள் இருக்க வேண்டும் என்றும் அதனை தீர்ப்பதற்கு ஜனநாயக வழியிலான போராட்டம் அவசியம் என்றார் மாவோ. இத்தகைய முரண்பாடு இல்லை என்றால் கட்சிக்கு இயக்கமே இருக்காது அது செத்துவிடும் என்றார் மாவோ.ஆனால் இங்குள்ள இடதுசாரிகள் கட்சிக்கு மாறான கருத்துக்களை கட்சி உறுப்பினர்கள் பேசவே கூடாது என்கிறார்கள். இந்த இடதுசாரிகள் வளராததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

தொடரும்- தேன்மொழி

பிழைப்புவாதி

 தென்னாப்பிரிக்காவின்  கிரிக்கெட் அணித்தலைவரான ஹான்சி குரோனியே, கிரிக்கெட் சூதாட்டத்திற்காக பிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். குரோனியே தன் குற்றத்தைச் சட்டப்படி ஒத்துக் கொண்டார்; தார்மீக ரீதியாக ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் புள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது நம்மூர் அற்பவாதிகளின் இலக்கியம்.

நான் தேசத்தை நேசிக்கிறேன். பணத்தையும் நேசிக்கிறேன்” என்று விசாரணை நீதிபதியின் முன் வாக்குமூலம் அளித்திருக்கிறார் ஹன்சி குரோனியே. “நாட்டை நேசிக்கிறேன் நோட்டையும் நேசிக்கிறேன்.” அடடா, இது ஒரு கவிதை! லட்சோப லட்சம் மனச்சாட்சிகள் குரோனியேவின் இந்தக் கவிதை மூலம் பேசுகின்றன. “நான் மனைவியை நேசிக்கிறேன், காதலியையும் நேசிக்கிறேன்.”, “நேர்மையை நேசிக்கிறேன், லஞ்சத்தையும் நேசிக்கிறேன்.”, “புரட்சியை நேசிக்கிறேன், சொத்தையும் நேசிக்கிறேன்.”, “சேவையை நேசிக்கிறேன், சன்மானத்தையும் நேசிக்கிறேன்” என்று பலவாறாக நம் காதில் ஒலிக்கிறது இந்தக் கவிதை!

போவோர் வருவோரெல்லாம் குரோனியேவைக் காறித்துப்புகிறார்கள். எப்போதுமே கூட்டத்தோடு கூட்டமாக தரும அடி போடுவது மிகச் சுலபமான காரியம். இப்படித்தான் ஒரு விலை மாதுவுக்கு தரும அடி போட்டுக் கொண்டிருந்த கூட்டத்தாரிடம் ஏசு சொன்னார், “உங்களில் பாவம் செய்யாதவர்கள் அவள் மீது கல் எறியுங்கள்.” உடனே அந்த யோக்கியர்கள் அனைவரும் கல்லைக் கீழே போட்டு விட்டார்கள். தானும் பாவிதான் என்றால், கல்லை தன்மீதே எறிந்து கொள்ளலாமே என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. ஏன் தோன்றவில்லை? “அடுத்தவர்களை விமரிசனம் செய்வது எளிது. தன்னைத்தானே விமரிசனத்துக்கு உட்படுத்திக் கொள்வதென்பது தன்மீதே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்வதைப் போன்றது” என்றார் மாவோ. நெருப்பு மேலே பட்டால் சுடும் என்பது இரண்டாவது பிரச்சினைதான். அந்த நெருப்பை எடுப்பதற்கே நமக்குக் கை வருவதில்லையே, அதுதான் மூல முதல் பிரச்சினை.

குரோனியே நிறவெறி பிடித்த தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் ஆட்டக்காரன். விளையாட்டையே ஒரு பணம் கறக்கும் தொழிலாகக் கொண்டவர்கள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள். இத்தகைய பேர் வழிகளுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதும் பரிசீலனை செய்வதும் நியாயம்தானா என்று சிலர் கருதக் கூடும். நேர்மை, தியாகம், உழைப்பு போன்ற சிறந்த பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு உன்னதமான மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து கற்பது சரியென்றால், இழிந்த பண்புகளைக் களைந்து கொள்வதற்கு இழிந்தவர்கள் எனப்படுவோர் அந்நிலையை எங்ஙனம் அடைந்தனர் என்று அறிந்து கொள்வதும் சரியானதுதான். எனவே, குரோனியே மீதான விசாரணையின் ஊடாக நம்மை நாமே குறுக்கு விசாரணையும் செய்து பார்த்துக் கொள்வோம்.

ஒரு இளைஞனாக தென் ஆப்பிரிக்க அணியில் சேர்ந்தபோது இப்போது கூறுவதைப்போல தேசத்தை, ஆட்டத்தை, அணியை குரோனியே நேசித்திருக்க மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்? நேசித்திருப்பார். அன்று ஒருவேளை யாரேனும் ஒரு சூதாட்டத் தரகன் தோற்பதற்காகக் காசு கொடுக்க முன் வந்திருந்தால் அதை அவன் முகத்தில் எறிந்திருக்க மாட்டார் என்றா நினைக்கிறீர்கள்? எறிந்திருப்பார். இன்றோ, அவருடைய பணத்தாசை கூண்டில் ஏற்றப்பட்டவுடன் அவருக்குத் தனது அன்றைய நாட்டுப் பற்று நினைவுக்கு வருகிறது.

கருணாநிதிக்கு அந்த நாளில் அரைக்கால் சட்டையுடன் திருவாரூரில் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்திய காட்சிகள் நினைவுக்கு வருவதைப் போல. காங்கிரசுக்குத் தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சுர்ஜித் போன்றோருக்கு விடுதலைப் போராட்ட காலத்தில் அனுபவித்த போலீசு சித்திரவதைகள் நினைவுக்கு வருவதைப் போல. ஒரு மாதிரியாக ஓய்வு பெற்று உறங்கும் முன்னாள் புரட்சிக்காரர்களுக்குத் தாங்கள் ஓய்வு உறக்கமின்றிப் பாடுபட்ட நாட்கள் கனவில் வருவது போல.

தான் இன்னமும் தேசத்தை நேசிப்பதாகத்தான் கருதுகிறார் குரோனியே. “பணத்துக்காக நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகி” என்று தன்னைத்தானே அவரால் மதிப்பிட்டுக் கொள்ள முடியவில்லை. “சூதாடியிடம் கை நீட்டிய அந்தத் தருணம் என்பது கம்பீரமான வாழ்க்கையில் நேர்ந்த ஒரு எதிர்பாராத சறுக்கல். நீண்ட தெளிந்த நீரோடையில் கலந்த சிறு கசடு” என்று அவர் தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறார். நம்மையும் நம்பச் சொல்கிறார். தவறிழைத்தவர்கள் பலரும், “அது தனக்கே தெரியாமல் தன்னில் நிகழ்ந்த விபத்து” என்றே நிரூபிக்க முயல்கிறார்கள். தன்னுடைய இயல்புக்கே முரணான இந்த இழிசெயலை எப்படிச் செய்தேன் என்று தனக்கே புரியவில்லை என்கிறார்கள். இப்படியொரு பதிலால் திகைத்துத் தடுமாறும் மனைவிமார்கள் “எம் புருசன் சொக்கத் தங்கமாச்சே. அந்தச் சிறுக்கி என்ன மருந்து வைத்து மயக்கினாளோ” என்று மந்திரவாதியிடம் ஓடுகிறார்கள். நாம் மந்திரவாதியிடம் ஓடத் தேவையில்லை. அதைவிட சூதாட்டத் தரகனிடம் கை நீட்டிக் காசு வாங்கும்போது குரோனியே எப்படிச் செயல்பட்டிருப்பார் என ஆய்வது பயன் தரும்.

ஒரு ஊழல் சிந்தனை செயல் வடிவம் பெறும்போதுதான் சம்பந்தப்பட்ட மனிதனின் ஆகக் கீழ்த்தரமான குணாதிசயங்கள் அனைத்தும் ஆகத்துல்லியமான விழிப்புணர்வுடன் இயங்குகின்றன. அவன் ஒரு கம்யூனிஸ்டாகவோ, பொதுநலவாதியாகவோ, மக்களிடையே நற்பெயரெடுத்த தலைவனாகவோ இருக்கும் பட்சத்தில். அவன் தனது நடைமுறைத் தந்திரத்தில் நரியை விஞ்சி விடுகிறான். குரோனியே ஒரு தூய கிறித்தவ நல்லொழுக்க சீலர். கிரிக்கெட் அணிக்குள்ளேயே இருந்த பைபிள் குழுவின் தலைவர். எனவே அணியில், தான் மட்டும்தான் சபல புத்திக்காரனா, தனக்கு ‘தோழர்கள்’ இருக்கிறார்களா என்று அவர் அறிய விரும்புகிறார். “இந்த ஆட்டத்தில் தோற்றால் இத்தனை ஆயிரம் டாலர் கிடைக்கும் என்ன சொல்கிறீர்கள்” என்று போகிற போக்கில் ஒரு நகைச்சுவை போல சக வீரர்களிடம் எடுத்து விடுகிறார். இவன் கிண்டல் செய்கிறானா ஆழம் பார்க்கிறானா என்று புரிந்து கொள்ள முடியாதவர்கள் அதை சிரித்து ஒதுக்குகிறார்கள், புரிந்தவர்கள் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்கள்.

இப்போது குரோனியே தனி ஆள் இல்லை. அணிக்குள் ஒரு ஊழல் அணி இருக்கிறது. ஊழல் அமைப்பு ரீதியாகத் திரண்டு விட்டது. இனி அது தன்னுடைய தரும நியாயங்களைப் பேச வேண்டும். “நான் காசு வாங்கியது உண்மை. ஆனால், அதற்காக எந்த ஒரு ஆட்டத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை” என்று விளக்கமளிக்கிறார் குரோனியே. அதனால்தான் “தேசத்தை நேசிக்கிறேன் பணத்தையும் நேசிக்கிறேன்” என்று கவிதை சொல்கிறார்.

ஒரு போலி கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவருடைய மகனுக்கு நிர்வாகம் ஒரு வேலை போட்டுக் கொடுக்கிறது. ஒரு விசேடச் சலுகையாகத்தான் நிர்வாகம் அதைச் செய்கிறது. ஆனால், அதற்காகத் தொழிலாளர்களின் கோரிக்கை எதையும் அவர் விட்டுக் கொடுத்ததாக நிரூபிக்க முடியாது. விட்டுக் கொடுக்கவில்லை என்றே கொள்வோம். அவ்வாறு விட்டுத் தரவில்லை என்பதே அவர் பெற்ற சலுகையை நியாயமாக்கி விடுமா? மற்ற தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குக் கிடைக்காத அந்தச் சலுகை தனக்கு அளிக்கப்படுவது குறித்து அவர் கூச்சப்படவில்லை; அதைப் பெறுவதற்காக அவர் வெட்கித் தலைகுனியவுமில்லை. தொழிலாளர் கோரிக்கையை விட்டுத் தரவில்லை எனும்போது இந்தச் சலுகையைப் பெறுவதில் தவறென்ன என்று கேட்கிறார். அனைவருக்கும் வேலை என்பதுதானே கட்சியின் முழக்கம், அதில் என் மகன் மட்டும் கிடையாதா என்று தன்னைத் தேற்றிக் கொள்கிறார். இப்படிப் பேசுவதற்காக அவர் கடுகளவும் கூச்சப்படவில்லை என்பதுதான் அவருடைய தரத்துக்குச் சான்று. ஒரு வரியில் சொன்னால், குரோனியே கூறுவதைப் போல, இவர் சேவையையும் நேசிக்கிறார், சன்மானத்தையும் நேசிக்கிறார். திருவாரூரில் புறப்பட்ட கழகத் தொண்டர் சன் டிவி அதிபரான கதையும் இதுவேதான்.

தி.மு.க. ஆட்சியைப் பற்றி ஒரு அடிமட்ட கட்சித் தொண்டனிடம் கேளுங்கள். எல்லாவற்றையும் தலைவர்களே சுருட்டிக் கொள்கிறார்களென்றும் தன்னைப் போன்ற தொண்டனுக்கு ஆட்சியால் பயனில்லை என்றும் அலுத்துக் கொள்வான். “ஒரு வேலைவாய்ப்பு, ஒரு புறம்போக்கு நிலம், ஒரு காண்டிராக்டு… எதுவுமே இல்லையென்றால் எதற்காகத்தான் பாடுபட்டோம்?” என்று மிக யதார்த்தமாகக் கேட்பான். “தம்பி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதல்லவா உன் லட்சியம்” என்று கேட்டால், “நானும் ஏழைதான்; என்னுடைய சிரிப்பில் இறைவனைப் பார்த்துக் கொள்” என்பான். பதவியை மேல்துண்டு என்றும், கொள்கையை வேட்டியென்றும் உவமானம் சொன்னவர்கள் இன்று ஊரறிய அம்மணமாக நிற்கும்போதும் தங்கள் இடுப்பில் வேட்டி இருப்பதாகத்தான் விளக்கம் சொல்கிறார்கள்.

தெலுங்கானா உழவர் போராட்டத்தைச் சித்தரிக்கும் ‘மாபூமி‘ என்ற திரைப்படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. நிலமற்ற ஏழை விவசாயியின் மகனான கதாநாயகன், விவசாயிகளுக்கு நிலத்தைப் பிரித்து விநியோகம் செய்கிறான். தனக்கும் நிலம் ஒதுக்குமாறு மகனிடம் கெஞ்சுகிறான் தந்தை. ஊருக்கெல்லாம் கொடுத்து முடித்தபின் எஞ்சியிருக்கும் ஒரு துண்டு நிலத்தைத் தந்தைக்குக் காட்டுகிறான் மகன். முதலில் தந்தைக்கு நிலத்தை ஒதுக்கி விட்டு, “நான் தந்தையை நேசிக்கிறேன் மக்களையும் நேசிக்கிறேன்” என்று அவன் கவிதை சொல்லியிருக்கலாம். சொல்லியிருந்தால் அந்தக் கவிதை அவனை வில்லனாக்கியிருக்கும். குரோனியேவைப் போல. குற்றவாளிக் கூண்டில் நிற்கும் குரோனியே பணத்துக்காக நாட்டுக்கும் அணிக்கும் துரோகம் செய்து விட்டதாக இந்தக் கணம் வரை ஒப்புக் கொள்ளவில்லை. அதுவும் இதுவும்தான் என்கிறார்.

காசுக்குப் பாய் விரிப்பவள் காதலி அல்ல, சன்மானத்திற்கு எதிர்பார்த்து செய்யும் வேலை சேவை அல்ல என்று தெரிந்தும் ‘அதுவும் இதுவும்தான்’ என்கிறார்கள் போலி கம்யூனிஸ்டு தலைவர்கள். அதுவும் இதுவும் என்ன இன்னும் பலதும் சேர்ந்ததாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. கொள்கைக்கும் நடைமுறைக்கும், ஆசைக்கும் அறநெறிக்கும், காதலுக்கும் கசப்புக்கும், தோழமைக்கும் பகைமைக்கும், தோற்றத்துக்கும் உண்மைக்கும் இன்னும் பலவிதமான எதிர்மறைகளுக்கிடையிலான போராட்டம்தான் வாழ்க்கை. இவற்றில் அதுவா இதுவா என்று தெரிவு செய்ய வேண்டிய தருணங்கள் பல வருகின்றன. பல நேரங்களில் அந்தத் தெரிவு வாழ்க்கையின் திசையையே மாற்றி விடுகிறது. சிறியதொரு சறுக்கல் என்று நீங்கள் கருதுவது உங்களைத் திரும்ப முடியாத அதல பாதாளத்திலும் கூடத் தள்ளி விடுகிறது. நெறி பிறழ்தல் என்பது எதிர்பாராத சறுக்கலல்ல; நெறி பிறழாமை தற்செயலான சாதனையுமல்ல.

உடலில் நுழையும் கிருமியைப் போன்றதல்ல உங்கள் சிந்தனையில் நுழையும் கிருமி. அதன் வரவையும் வளர்ச்சியையும் நீங்கள் அறிவீர்கள். நீங்கள் போற்றும் மதிப்பீடுகளை அந்தக் கிருமி மெல்ல மெல்ல அரிப்பதையும் நீங்கள் அறிவீர்கள். சொல்லப் போனால் நீங்கள் மட்டுமே அறிவீர்கள். நீங்கள் அறுந்து விழும்போதுதான் உலகம் நிமிர்ந்து பார்க்கிறது. ஆய்வு தொடங்குகிறது. இந்த ஆய்வின் சோதனைச் சாலை சமூகம். நீங்களோ நோயாளி அல்ல குற்றவாளி.

உங்கள் வீழ்ச்சியை நோயென்று கருதும் பக்குவமிருந்தால் வீழ்ந்த பாதையைத் திறந்து காட்டுவீர்கள். இல்லையேல் குற்றத்தையே புதியதொரு ஒழுக்கம் என்று நிலை நாட்ட முயல்வீர்கள். ‘அதுவும் இதுவும் தான்’ என்று குரோனியே சொன்னதைப் போல நீங்களும் ஒரு புதிய கவிதை சொல்லக் கூடும்.


சூரியன், புதிய கலாச்சாரம், ஜூலை, 2000

நமது நடைமுறைக்கான மார்க்சிய கோட்பாடுகளை புரிந்துகொள்வோம். பகுதி-2.இலக்கு 49 இதழிலிருந்து

 வெகுஜனங்களிடையை கட்சிப் பணி என்ற நூலில் பக்கம் 16 லிருந்துபக்கம் 18 வரையிலான பக்கங்களிலிருந்து இந்த கட்டுரைதயாரிக்கப்பட்டுள்ளது..

சமூகத்திலுள்ள மக்களின் எதிரிகளை எதிர்த்து உறுதியாகப் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் பிரிவினரை ஆளும் வர்க்கங்களாலும், அதன் அரசுகளாலும் அடக்கி ஒடுக்கி நசுக்கிவிட முடியாது. ஆனால் மக்களின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு மக்களுக்கு துரோகம் செய்பவர்களால், அதாவது கருங்காலிகளால் புரட்சிகரமான மக்களை குழப்பி, பிளவுபடுத்தி, சீரழிக்க முடியும் என்பதுதான் வரலாறு. இத்தகைய துரோகிகள் சமூகத்திலுள்ள பிற்போக்கான மூர்க்க குணம் படைத்தவர்களிடமும், பிற்போக்கான உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான முதலாளித்துவ அரசியல் நிறுவனங்களுடனும், கூடிக்குலவுவார்கள். இந்தியாவில் இராணுவ வீரர்கள் பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு ஒதுதுழைப்பு கொடுப்பதை மறுத்து பிரட்டீஷ் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடினார்கள்.. பிரிட்டீஷ் ஆட்சியால் இந்தப் போராட்டத்தை நசுக்க முடியவில்லை அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் தொழிலாளர்களும், விவசாயிகளும் பிரிட்டீஷை எதிர்த்து உறுதியுடன் போராடினார்கள். அதன் விளைவாக பிரிட்டீஷார் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள். அதற்குப் பிறகு இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின்

போர்க்குணம் மழுங்கடிக்கப்படதற்கு யார் காரணம்? மேலே லெனின் கூறியது போலவே தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தலைமை தாங்கிய துரோகத்தனமான தலைவர்கள்தான் காரணம். இந்தத் தலைவர்கள்தான் பிற்போக்காளர்களுடனும், முதலாளித்துவ ஆளும் வர்க்க கட்சிகளுடனும் கூடிக்குலாவி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் குழப்பத்தை உருவாக்கி, சாதி மதம் இனம் போன்ற பேதங்களை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தி சீரழித்துவிட்டார்கள். இப்போதும் தொழிலாளர் வர்க்க அமைப்பில் செயல்படும் தலைவர்களில் சிலர் பிற்போக்கு முதலாளித்துவ அரசியல் கட்சிகளோடு பாசிச எதிர்ப்பு ஐக்கியமுன்னணி என்ற போர்வையில் கூடிக்குலாவி உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்யத் துடித்துக்கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம்.

ஆகவே கம்யூனிஸ்டுகளின் இன்றைய உடனடியான கடமையானது உழைக்கும் மக்களிடம் சோசலிச உணர்வையும், சோசலிச சிந்தனைமுறையையும் ஊட்டி, உழைக்கும் மக்களின் எதிரிகளை சுட்டிக்காட்டி எதிரிகளை உறுதியுடன் எதிர்த்துப் போராட வேண்டும் என்பதையும் உழைக்கும் மக்களின் உண்மையான நண்பர்களை அடையாளம் காண்பதற்கு மக்களுக்கு உதவி செய்து, மக்களின் நண்பர்களோடு உறுதியான ஒற்றுமையை உழைக்கும் மக்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி புரட்சிகரமான பலம்வாய்ந்த அமைப்பை உருவாக்க வேண்டியது கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமையாகும். சுரண்டும் வர்க்கங்கள்தான் உலகில் பல நாடுகளில் நீண்டகாலம் ஆட்சியில் இருக்கிறது. சுரண்டப்படும் மக்களை ஆளுவதற்கான பயிற்சி பெற்று நீண்டகால அனுபவங்களை கொண்ட அறிவுத் திறமை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக சுரண்டும் வர்க்கத்தின் ஆட்சிக்கு எதிராக செயல்பட முனைபவர்களை ஆரம்பத்திலேயே ஒடுக்கி நசுக்கி டுவதற்கான செயல்தந்திரத்தை நடைமுறைப் படுத்துகிறது. அதன் மூலம் புரட்சிகரமான உழைக்கும் மக்களை அச்சுறுத்தி, உழைக்கும் மக்கள் செய்ய வேண்டிய கடமையிலிருந்து அவர்களை திசைதிருப்புகிறது .மக்களிடையே குறிப்பாக மெய்யான புரட்சிகர வர்க்கங்களுக்கு இடையே புரட்சிகரமான கருத்துக்களை பரப்பி, அவர்களிடையே புரட்சிகரமான உணர்வுகளை ஏற்படுத்தி செயல்படும் அமைப்பின் செல்வாக்கு வளரும் போது, புரட்சிகர அமைப்பைச் சேர்ந்தவர்களின் மத்தியில் ஆத்திரமூட்டி அவர்களை தேவையற்ற வன்முறையில் இறங்கச் செய்வதன் மூலம் புரட்சியாளர்களை மக்களிடமிருந்து பிரித்து புரட்சிகர அமைப்பின் செல்வாக்கை இழக்கச் செய்யும் தந்திரத்தை ஆட்சியாளர்கள் எப்போதும் கையாளுவார்கள் என்பதை பல நாடுகளில் நடந்த புரட்சிகளின் அனுபவங்களிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் லெனின்..

இவ்வாறு ஆளும் வர்க்கமும், முதலாளித்துவ அரசும் நமக்கு ஆத்திரமூட்டும் போது அதற்கு நாம் பலியாகிவிடக்கூடாது. எங்காவது ஒரு இடத்தில் மக்கள் ஒன்றுகூடி புரட்சிகரமான போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றுவிட்டால், அதைக்கண்டு நாம் உணர்ச்சிவசப்பட்டு மதிமயங்கிவிடக்கூடாது, மேலும் நமது நிதானத்தை இழந்துவிடக் கூடாது என்கிறார் லெனின். மேலும் நமது சிந்தனையை சீர்படுத்துவதற்காக ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் நடந்த புரட்சியின் அனுபவத்தையும், திட்டவட்டமான சோசலிச கொள்கையின் மீதான நமது நம்பிக்கையும், நடைமுறைக்கு சாதகமான நமது கொள்கையின் மீதான நம்பிக்கையும் சாகசவாதத்தை எதிர்த்து நமது தலைவர்கள் போடிய அனுபவத்தையும் நாம் ஒருபொழுதும் மறந்துவிடக் கூடாது மேலும் அதனை நாம் கைவிட்டுவிடக் கூடாது என்றார் லெனின்..

இதன் மூலம் உழைக்கும் மக்களை ஆள்பவர்களின் அறிவு மற்றும் திறமையை நாம் புரிந்துகொண்டு அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

ஆனால் நமது நாட்டிலுள்ள மக்களின் முன்னணிகள் இந்த ஆளும் வர்க்க அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் புரிந்துகொள்ளாமல் அப்பாவித்தனமாக இருப்பதை பார்க்க முடிகிறது இவ்வாறு புரியாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது என்பதை நாம் உணர வேண்டும்.

இந்த அரசானது நமக்கு ஆத்திரமூட்டும் போது நமது நிதானத்தை இழக்காமல் சரியான செயல்தந்திரம் வகுத்து செயல்படுவதன் மூலம் இந்த அரசு அதிகாரிகளின் சதியை முறியடித்து, உழைக்கும் மக்களிடம் இந்த அரசை அம்பலப்படுத்த வேண்டும். இந்தியாவில் நடந்த வர்க்கப் போராட்ட வரலாற்றை நாம் படிக்க வேண்டும். அதில் ஈடுபட்ட நமது தலைவர்களின் தியாகத்தைப் போற்றி அவர்களின் லட்சியத்தை அதாவது இந்தியாவில் உழைக்கும் மக்களின் அரசியல் அதிகார அமைப்பை உருவாக்கும் கொள்கையை நிறைவேற்றுவதற்கு நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமது தலைவர்கள் செய்த தவறுகளையும் துரோகங்களையும் புரிந்துகொண்டுஅத்தகைய தவறுகளையும் துரோகங்களையும் நாம் இனிமேல் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த தவறுகளைத்தான் தறபோதைய திருத்தல்வாத, கலைப்புவாத, குறுங்குழுவாதிகளும் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே புரட்சியாளர்கள் இந்த உண்மைகளை எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட மக்களிடம் செல்ல வேண்டும். ஆகவே எத்தகைய உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்ற தத்துவ அரசியல் புரிதல்களை வளர்த்துக்கொண்டு அத்தகைய தத்துவ அரசியல் புரிதல் கொண்டவர்களாக மக்களை மாற்றக் கூடியவர்களால் மட்டுமே மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்ய முடியும். இந்தப் பணியானது சில குறிப்பிட்ட நாட்களுக்குள்ளேயே செய்து முடிக்கக் கூடிய பணி இல்லை. இது கம்யூனிஸ்டுகளின் தொடர்ச்சியான வாழ்நாள் பணியாகும். ஆகவே கம்யூனிஸ்டுகள் சமூகத்தைப் பற்றியும் அதனை மாற்றுவது பற்றியும் சமூக மாற்றத்தில் உறுதியாக பங்கெடுத்த வர்க்கங்கள் பற்றியும் சமூக மாற்றத்துக்கு எதிராகவும் தடையாக இருக்கின்ற வர்க்கங்கள் பற்றியும் தொடர்ந்து படித்தும் அனுபவத்தின் மூலமும் தெரிந்துகொண்ட விசயங்களை அவ்வப்போது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்தப் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும்.. அதே வேளையில் பிற பணிகளையும் செய்ய வேண்டும். பிற பணிகளிலேயே நமது கவனத்தை குவித்துவிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பணியை தொடர்ந்து செய்வதில் கவனத்தை குறைத்துவிடவோ அல்லது புறக்கணிக்கக்வோ கூடாது என்பதுதான் ஒரு புரட்சிகர கட்சி செய்ய வேண்டிய பணியாக கடமையாகும் என்று லெனின் குறிப்பிடுகிறார்.

இதன் மூலமே கம்யூனிச உணர்வுள்ளவர்கள் அனைவரையும் ஓர் அமைப்புக்குள் திரட்டி ஒரு பலம்வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட முடியும் என்று நமக்கு லெனின் போதித்தார்.. கம்யூனிஸ்டுகளாகிய நாம் செய்ய வேண்டிய முதன்மையான பணி என்ன?

1. இதுவரை நாம் செய்துவந்த, தற்போதும் செய்துகொண்டிருக்கும் தவறுகளை வெளிப்படையாக அறிவித்து களைந்துகொள்ள முன்வர வேண்டும். நாம் இதுவரையிலும் சரி, தற்போதும் சரி தவறே செய்யவில்லை என்று கருதுவது நாம் மக்களை மட்டுமல்ல நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். இவ்வாறு மக்களையும் நமது அணிகளையும் நம்மையும் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டு இருந்தால் நாம் நிச்சயமாக மக்களின் நலன்களுக்கு பயன்பட மாட்டோம். மாறாக மக்களின் எதிரிகளுக்கே பயன்படுவோம், பயன்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இது நமது மக்களுக்கு மட்டுமல்ல நமது குடும்பத்தவர்களுக்கும் நமது வருங்கால சந்ததியினருக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். மேலும் நமது தவறுகளை நாம் புரிந்துகொண்டு நமது தவறுகளை களைந்தால் நாம் நமது லட்சியத்தில் பகுதி வெற்றியடைந்தவர்கள் ஆவோம் என்று மாவோ நமக்குப் போதித்துள்ளார். ஆகவே நமது குறைகளை வெளிப்படையாக அறிவித்து களைவது மிகமிக முக்கியமான கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். அதே போலவே நம்மைப் பார்த்து பிறர் நமது குறைகளைச் சுட்டிக்காட்டினால் ஆத்திரப்படாமல் அதனை மார்க்சிய சிந்தனை முறையினை அடிப்படையாகக் கொண்டு பரிசீலிக்க வேண்டும், உண்மையில் நாம் தவறு செய்கிறோம் என்று உணர்ந்தால் அதனை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு நமது தவறுகளை களைய வேண்டும்..நமது தவறுகளை களைகிறோம் என்று வார்த்தையில் சொல்லிவிட்டால் மட்டும் போதாது. அந்த தவறை களைவதற்காக நாம் நடைமுறையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நாம் முடிவு செய்து, அந்த முடிவை செயல்படுத்த வேண்டும். ஆனால் உதாரணமாக ஒரு புரட்சிகர அமைப்பானது தொடர்ந்து குழுக்களாக பிளவுபட்டுக்கொண்டு இருப்பதற்கு முடிவு கண்டு, குழுக்களை இணைப்பதற்கு குழுக்களுக்கு என்று ஒரு பொதுவான பத்திரிக்கை நடத்த வேண்டும் என்றும், அந்தப் பத்திரிக்கையில் ஒவ்வொரு குழுவும் தனது கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பது என்றும் அதன் மூலம் குழுக்களுக்கு இடையில் உள்ள கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொண்டு நாம் ஒன்றுபடலாம் என்ற முடிவை எடுத்தது. அதன் மூலம்அந்தக் குழுவானது சிதறிக்கிடக்கும் குழுக்களினால் பயனில்லை என்பதை உணர்ந்து இந்த தவறை களைய வேண்டும் என்ற முடிவை எடுத்ததை நாம் வரவேற்க வேண்டும். அதற்கான நடைமுறைப் பணியை தீர்மானித்ததும் சரியானதே ஆகும். எனினும் இந்தப் பணியை அந்தக் குழு இதுவரை செயல்படுத்த முயற்சி செய்யவில்லை என்பது தவறானதாகும். ஆகவே நமது தவறை களைந்துகொள்கிறோம் என்று சொல்லிவிட்டால் மட்டும் போதாது அதனை நடைமுறையில் களைவதற்கான முயற்சிகளை நாம் செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் நாம் உண்மையான கம்யூனிஸ்டாக இருக்க முடியும். இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது இத்தகைய ஒற்றுமையை உருவாக்குவதற்கு முயற்சி செய்யும் கம்யூனிச அமைப்புகள் எதுவும் நமது கண்களுக்குத் தென்படவில்லை என்பதுதானே உண்மையாகும்.

இந்திய பொதுவுடமை இயக்கத்திற்குள் ஆரம்பகாலங்களில் திருத்தல்வாதம், மற்றும் சீர்திருத்தவாதம் போன்ற முதலாளித்துவ சித்தாந்தங்கள் ஊடுருவி பொதுவுடமை அமைப்பை சீரழித்தது. அதனை எதிர்த்த போராட்டத்தின் காரணமாக கம்யூனிஸ்டுக் கட்சி பிளவுபட்டு மார்க்சிய லெனினிய கட்சி உருவானது. எம்.எல் கட்சியானது திருத்தல்வாதத்தை எதிர்த்து புரட்சிப் பாதையில் பொதுவுடமை இயக்கம் நடைபோட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து உழைக்கும் மக்களிடம் செல்வாக்கு பெற்று, அந்த கட்சியைச் சேர்ந்தவர்களில் பலர் பல தியாகங்கள் புரிந்தனர். எனினும் அந்த அமைப்பிலுள்ளவர்கள் சோசலிச சிந்தனை முறையை வளர்த்துக்கொள்ளத் தவறினார்கள். அதன் காரணமாக அவர்களால் திருத்தல்வாதத்தையும், சீர்திருத்தவாதத்தையும் எதிர்த்து சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி அதனை வீழ்த்த முடியவில்லை. அதனால் பொதுவுடமை இயக்கத்துக்குள் திருத்தல்வாதம், சீர்திருத்தவாதம் போன்ற தவறுகள் தொடர்ந்தன. மேலும் மா.லெ.யின் தலைவர்களால் சோசலிச சிந்தனைமுறையையின் குறைபாட்டின் காரணமாக அவர்களால் 1970ஆம் ஆண்டுகளில் ஒரு விஞ்ஞானப்பூர்வமான திட்டத்தை உருவாக்க முடியவில்லை. மேலும் திட்டத்தில் குறைகள் உள்ளது என்பதை கட்சிக்குள் இருந்த சில தோழர்களும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களும் சுட்டிக்காட்டிய பின்பும் அதனை கட்சி முழுக்க சுற்றுக்குவிட்டு குறைகளை களைந்துகொள்ள மா.லெ. கட்சித் தலைவர்கள் மறுத்துவிட்டனர். தற்போது பொதுவுடமை இயக்கத்துக்குள் புதிய வகையான முதலாளித்துவ சந்தர்ப்பவாத சித்தாந்தங்கள் ஊடுருவியுள்ளன. பின்நவீனத்துவம் அடையாள அரசியல், தலித்தியவாதம், டிராட்ஸ்கியவாதம், தேசிய இனவாதம், குட்டிமுதலாளித்துவ குறுங்குழுவாதம் போன்ற மார்க்சியத்துக்கு எதிரான புதிய சித்தாங்களும் பொதுவுடமை இயக்கத்துக்குள் ஊடுருவி செல்வாக்கு செலுத்துகின்றதை நாம் பார்க்கிறோம்.

இவ்வாறு பழைய மற்றும் புதிய மார்க்சியத்துக்கு எதிரான சித்தாந்தங்களை கட்சிக்குள் ஊடுருவதற்கு ஏற்றார் போல கட்சியின்கதவுகளை திறந்துவிடும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சியின்

வேலைத்திட்டமும் அதன் நடைமுறையும் அதாவது கட்சியானது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு இருக்கக் கூடாது என்று லெனின் போதித்தார். இந்த போதனையை இந்திய பொதுவுடமையாளர்கள் பின்பற்றத் தவறியதால்தான் இந்திய பொதுவுடமை இயக்கத்துக்குள் மார்க்சிய லெனினிய சித்தாந்தத்துக்கு எதிரான பல்வேறு சித்தாந்தங்களும் ஊடுருவி கம்யூனிஸ்டு அமைப்புகள் தனது நிறத்தை இழந்து பல்வேறு வண்ண நிறங்களாக மாறி முதலாளித்துவத்தையும் அதன் சதிகளையும் எதிர்த்துப் போராடும் பலத்தை இழந்து நிற்கின்றன. ஆகவேதான் இன்றைய கம்யூனிஸ்டுகளின் உடனடியான கடமையாக பொதுவுடமை இயக்கத்துக்குள் ஊடுருவியுள்ள மார்க்சியத்து எதிரான சித்தாந்தங்களை அணிகளுக்கும் மக்களுக்கும் அம்பலப்படுத்தி அந்த தவறான சித்தாந்தங்களை வீழ்த்திட வேண்டும். இத்தகைய தவறான சித்தாந்தங்களை கட்சிக்குள் வைத்துக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியால் மக்களை திரட்டிப் போராட முடியாது. கம்யூனிஸ்டுகளால் குறிப்பாக சிறிய குழுக்களால் இத்தகைய சித்தாந்தப் போராட்டத்தையும் உறுதியான மக்கள் திரள் போராட்டங்களையும் நடத்திட முடியாமல் பலவீனமாக இருப்பதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று அவர்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டிருப்பதுதான். ஆகவே கம்யூனிஸ்டுகள் மக்கள் திரள் வர்க்க அமைப்புகளில் இணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றார் லெனின்.

லெனினது இந்த போதனையை கம்யூனிஸ்டுகள் பின்பற்றத் தவறினார்கள். மக்களிடம் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபடும் போது மக்களின் நிலைக்கு தன்னை தாழ்த்திக்கொள்ளாமல் கம்யூனிஸ்டுகளின் நிலைக்கு அதாவது சோசலிச சிந்தனை முறையை வளர்க்கும் விதமாக செயல்பட வேண்டும். அதன் மூலம் மட்டுமே கம்யூனிஸ்டுகள் அவர்களது அமைப்பிற்குள் ஊடுருவியுள்ள மார்க்சிய விரோத சித்தாந்தத்தை விரட்டியடிக்க முடியும். இந்திய பொதுவுடமை இயக்கத்தை மார்க்சிய சோசலிச சிந்தனை முறையின் அடிப்படையில் வளர்ப்பன் மூலமும், அதன் அடிப்படையில் இயக்கத்தை கொண்டுசெல்வதன் மூலமே கம்யூனிஸ்டுகள் மக்களிடத்தில் தனது தொடர்பை வளர்த்துக்கொள்ள முடியும் என்றார் லெனின். ஆகவே லெனினை பின்பற்றி இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் கட்சியின் பலத்தை வளர்ப்பதற்கு 1. கட்சிக்குள் புகுந்துள்ளமார்க்சியத்துக்கு எதிரான சித்தாந்தங்களை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்

2. உழைக்கும் மக்களிடம் மார்க்சிய சோசலிச உணர்வையும் சிந்தனை முறையையும் வளர்க்க வேண்டும்.

3. சோசலிச சிந்தனை முறையின் அடிப்படையில் இந்திய சமூகத்தை பகுத்தறிந்து ஒரு விஞ்ஞானப்பூர்வமான திட்டத்தை வகுத்து அதனை சோதித்து அதன் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

4. இந்த அடிப்படையில் பொதுவுடமை இயக்கத்தை கொண்டு செல்வதன் மூலம் மக்களிடம் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு மக்களிடம் ஐக்கியப்பட வேண்டும். இதனை சொல்வது எளிது ஆனால் நடைமுறையில் செயல்படுத்துவது மிகவும் கடினமாகும். இந்த கடுமையான பணிகளை கம்யூனிஸ்டுகள் செய்யாமல் அவர்களது லட்சியத்தில் வெற்றி அடையமுடியாது. தொழிலாளர் இயக்கம் ஒன்றுதான் சமூகத்தில் புரட்சிகரமான இயக்கமாகும் என்றார் லெனின்.. ஏனெனில் அந்த இயக்கம் ஒன்றுதான் சமூகத்தினால் பாதிக்கப்பட்டு நிலவுகின்ற இழிவான சமூகத்தை மாற்றுவதற்கு விரும்புகின்ற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை விழித்தெழச்செய்கின்றது என்றார் லெனின். அதன் மூலம் தொழிலாளி வர்க்கத்திற்கான அரசியல்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக மட்டுமல்லாமல் சமூகச் சூழலால் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரிவினரின் நலன்களுக்காகவும் பாடுபட வேண்டும், மேலும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களிடம் விழிப்புணர்வும் ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே லெனினது போதனையாகும்.

தொழிலாளிவர்க்கமானது இழப்பதற்கு ஏதுமில்லாத வர்க்கமாக இருக்கிறது, மேலும் கூட்டாக சிந்திக்கிறது, கூட்டாக முடிவெடுக்கிறது, கூட்டாக கட்டுப்பாடோடு செயல்படுகிறது, இதன் காரணமாகவே தொழிலாளி வர்க்கமானது புரட்சிகரமான வர்க்கமாக இருக்கிறது என்று மார்க்சிய

ஆசான்கள் கூறினார்கள். இந்த கருத்தை பலரும் வறட்டுத்தனமாக எடுத்துக்கொண்டு தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் புரட்சிகரமானவர்கள் என்று கருதுகிறார்கள். அது தவறானதாகும். ஏனெனில் தொழிலாளி வர்க்கத்தை எத்தகைய பண்பின் காரணமாக அந்த வர்க்கத்தை புரட்சிகரமான வர்க்கம் என்று மார்க்சிய ஆசான்கள் வரையறுத்தார்களோ, அத்தகைய பண்புள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் புரட்சிகரமானவர்களே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் மார்க்சிய அடிப்படையில் விசயங்களை புரிந்துகொள்ளும் முறையாகும். உதாரணமாக எங்கெல்ஸ், சூயென்லாய் போன்ற கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்கள் அல்ல, மாறாக செல்வந்தர்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் மார்க்சியம் வரையறுத்த புரட்சிகர பண்புகளைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்ததால் அவர்களை நாம் புரட்சியாளர்கள் என்றே மதிப்பிட வேண்டும். இதற்கு மாறாக ஒரு தொழிலாளியிடம் உதாரணமாக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவராக இருந்த குருஷேவ் தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரிடம் தொழிலாளி வர்க்கப் பண்புகளுக்கு எதிரான முதலாளித்து பண்புகளும் நடைமுறையுமே இருந்தது. ஆகவே குருஷேவ் போன்ற தொழிலாளிகளை நாம் புரட்சியாளராக மதிப்பிடக் கூடாது. ஆகவே மார்க்சியம் வரையறுத்த இத்தகைய புரட்சிகரமான மனிதர்களை நாம் ஓர் அமைப்பில் திரட்ட வேண்டும். அவர்களுக்கு சர்வதே புரட்சியின் வரலாற்றையும் சமூகத்தை சோசலிச சமூகமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் போதிக்க வேண்டும். இந்த வகையிலேயேதான் உண்மையான புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியை நம்மால் கட்ட முடியும். இத்தகைய புரட்சிகரமான அமைப்பில் சேர்ந்து செயல்பட்டால்தான் நாம் நமது புரட்சிகர உணர்வைப் பெறுவதோடு கூடவே புரட்சிகரமான உணர்வை இழந்துவிடாமல் வளர்த்துக்கொள்ள முடியும். இத்தகைய கட்சியில் சேர்ந்து செயல்படுவதன் மூலமே சமூகத்தில் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் கட்சியின் தலைமையில் ஒருங்கிணைக்க முடியும். இத்தகைய கட்சியினால்தான் புரட்சிகரமான ஜனநாயகத்துக்காவும், சோசலிசத்துக்காகவும் நாம் ஒன்றுபட்டு மக்களை போராட வைக்க முடியும். இத்தகைய புரட்சிகரமான கட்சியால் மட்டுமே, அனைத்து முற்போக்கான உழைக்கும் மக்களையும் புரட்சிக்கு அணிதிரண்டு வாருங்கள் என்று அழைக்க முடியும். ஆகவே இத்தகைய புரட்சிகரமான போல்ஷ்விக் பாணியிலான புரட்சிகரமான பலம்வாய்ந்த கம்யூனிஸ்டுக்

கட்சியை கட்ட வேண்டும் என்பதே லெனினது போதனை ஆகும். ஆகவே தோழர்களே லெனினது போதனையைப் பின்பற்றி போல்ஷ்விச பாணியிலான புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதே நமது பணியாகும் என்பதை உணர்ந்து அத்தகைய கட்சியை கட்டுவதற்கு முன்வர வேண்டும் என்று தோழர்களிடம் முன்மொழிகிறோம். ஆனால் இங்குதான் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதே என்று பலரும் கருதலாம். ஆனால் அவைகள் லெனினால் வரையறுக்கப்பட்ட போல்ஷ்விக் பாணியிலான கட்சியாக இருக்கவில்லை என்பதே எதார்த்தமான உண்மையாகும். இந்த அமைப்புகளுக்குள் மேசமான ஊழல் பேர்வழிகள் உள்ளனர், அகம்பாவம் கொண்டவர்கள் உள்ளனர், சாதிய உணர்வுள்ளவர்கள் உள்ளனர், இந்த கட்சிகளிடம் விஞ்ஞானப்பூர்வமான திட்டம் இல்லை, பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்துவதற்கான முயற்சி இல்லை, ஏன்நாட்டிலுள்ள கம்யூனிச உணர்வாளர்களை ஒன்றுபடுத்துவதற்கான முயற்சி கூட இல்லை, பிற்போக்காளர்களுடனும் பிற்போக்கு அமைப்புகளுடனும் கூடிக்குலாவுகிறார்கள், கட்சி அணிகளுக்கும் மக்களுக்கும் சோசலிச உணர்வையும் சோசலிச சிந்தனை முறையையும் வளர்ப்பதற்கான திட்டமும் இல்லை, நடைமுறையும் இல்லை, இது போன்று பல குறைகளைக் கொண்டவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள். ரஷ்ய போல்ஷ்விக் கட்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதனை புரிந்துகொள்ள முடியும். இவர்களில் பலர் சிறு குழுவாகவே இருக்கிறார்கள்.

இவர்களையும் இவர்களது அமைப்பையும் போல்ஷவிக் என்றும் போல்ஷ்விக் பாணியிலான அமைப்பு என்று கூற முடியுமா? முடியாதுஎன்பதுதான் எதார்த்த உண்மையாகும். ஆகவே போல்ஷ்விக் பாணியிலான புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கு இவர்களில் யார் முன்வருகிறார்களோ அவர்களை இணைத்துக்கொண்டு நாட்டிலுள்ள ஏராளமான மக்களில் பொதுவுடமையை விரும்புபவர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்களிடம் புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியத்தை விளக்கிக் கூறி புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கு உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் முன்வர வேண்டும் என்று வேண்டுகிறோம்.- தேன்மொழி

வர்க்க அமைப்பு

தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் தற்போதுள்ள முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை உள்ளவாறே எடுத்துத் தமது நலன்களுக்காக உபயோகிப்பதும் சாத்தியமில்லை. அரச இயந்திரம் முதலாளித்துத்தின் நலன்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டது. அதைத் தொழிலாள வர்க்க நலன்களைப் பாதுகாக்கப் பயன்படுத்த இயலாது. அதனால் தான் மார்க்ஸ், லெனின், மாசேதுங் ஆகியோர் முதலாளித்துவ அரசாங்க இயந்திரம் நிச்சயமாத நொருக்கப்படல் வேண்டும் என வலியுறுத்திக் கூறினர். அதனைச் சீர்திருத்தம் செய்யவோ அல்லது அதன் வரையறைக்குள் அமைப்பில் சீர்திருத்தம் செய்யவோ முடியாது. முதலாளித்துவ அரசு இயந்திரம் இருக்கவேண்டும் அல்லது பாட்டாளிவர்க்க அரசு இயந்திரம் இருக்க வேண்டும். இவற்றிற்கு இடைப்பட்டதாக ஒன்றும் இருக்க முடியாது. அதனால்தான் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பலாத்காரத்தினால் நொருக்கி அதனிடத்தில் பாட்டாளிகளின் அரசு இயந்திரத்தை தொழிலாளிவர்க்கமும் அதன் நேச அணிகளும் ஏற்படுத்தவேண்டியது பொறுப்பென மார்க்சிய - லெனினிய - மாவோ சிந்தனை போதிக்கின்றது. பாட்டாளிகளின் அரசாங்க இயந்திரத்தை மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என விவரித்தார்.

இந்தக் கடமையைச் சரிவரச் செய்த புரட்சிகள் வெற்றி பெற்றன. அக்டோபர் புரட்சியும் சீனப் புரட்சியும் இதற்கு உதாரணங்களாகும். இந்த இரண்டிலும் பழைய அரசியல் அதிகாரத்தின் அழிவில் புதியது பெறப்பட்டது. பழைய அரசு இயந்திரத்தை அல்லது அதன் ஒரு பகுதியையாவது உபயோகிக்கும் முயற்சி நடைபெறவில்லை. ஜேர்மன் ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புக்கெதிராகப் போராடி நகரத்தைக் காப்பாற்றுமாறு லெனின் கிராட் தொழிற்சாலைகளிலிருந்த தொழிலாளர்களுக்கு லெனின் அறைகூவல் விடுத்து துப்பாக்கிகளை அவர்களுக்கு வழங்கியதன் மூலமே சோவியத் செஞ்சேனை உருவாகியது. அவர்கள் பழைய நீதித்துறையை தொடர்ந்தும் வைத்திருக்கவோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பற்றியோ அதிகம் புலம்பிக்கொண்டிருக்கவில்லை.

சீனாவைப் பொறுத்தமட்டில் விடயம் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகவுள்ளது. சீனாவை முழுமையாக விடுதலை செய்யுமுன்னர் சீனக் கம்யூனிஸ்டுகள் சீனப் புரட்சியின் தொட்டில் எனஇன்று அழைக்கப்படும் யெனானில் 13 வருடங்கள் தோழர் மாவோ தலைமையில் தளமாக செயல்பட்டது. புதிதாக விடுதலை செய்யப்பட்ட பிரதேசங்களின் ஆளுமை மேற்கொள்ளும் பொருட்டு மக்கள் விடுதலைச் சேனையின் பின்னால் செல்வதற்காக ஒரு புதிய பாட்டாளி வர்க்க பரிபாலன அமைப்பை இங்கே பயிற்றுவித்துக் கட்டி அமைத்தனர். இது ஒரு முழுமையான புதிய பரிபாலன அமைப்பு. அது பழைய அமைப்புடன் எந்தவித தொடர்பையோ, உறவையோ வைத்துக்கொளாதது மட்டுமல்ல, பழைய ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரத்தை அடித்து நொருக்குவது என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டது..

புரட்சியின் வெற்றிக்கு முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரம் அடித்து நொருக்கப்படுவது எவ்வளவு அவசியமோ, அதே போல புதிய பாட்டாளி வர்க்க அரசதிகாரம் நிலைத்து நிற்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியமாகும். லெனின் காலத்தில் அராஜக வாதிகள் எனப்பட்ட ஒரு பகுதியினர் முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசு அதிகாரத்தை புரட்சிமூலம் நிர்மூலமாக்கியபின் ஒரு பாட்டாளி வர்க்க அரசதிகாரம் வேண்டியதில்லை எனக் கூறினர். இந்தக் கோட்பாட்டின் பிரயோசனமற்ற தன்மையை லெனின் தனது பிரசித்தி பெற்ற “அரசும் புரட்சியும்” என்ற நூலின் ஒரு பகுதியில் விமர்சித்திருக்கின்றார். சந்தேகத்திற்கு உரிய வகையில் இந்தக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் கிட்டத்தட்ட ஒருவருமே இல்லையெனக் கூறலாம். ஆனால், நாம் பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகார உருவத்தில் முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் இடத்திற்கு வர வேண்டும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.. லெனின் குறிப்பிட்டதுபோல, வெற்றியடைந்த சகல புரட்சிகளும் சர்வாதிகாரத்தால் பின் தொடரப்பட்டன. ஏனெனில் தோற்கடிக்கப்பட்ட வர்க்கம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதும் இல்லை அல்லது இசைந்து போனதும் இல்லை. அது எப்பொழுதும் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக சதி செய்தும், சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கும். இம்மாதிரியான சகல முயற்சிகளும் ஓர் உருக்குப் போன்ற சர்வாதிகாரத்தினால் மட்டுமே அடக்கப்பட முடியும். அதனால்தான் தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை அழித்ததும் அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் தோற்கடிக்கப்பட்ட வர்க்கங்களினால் தூக்கியெறியப்படாமல் இருக்கவும், புரட்சியைப் பாதுகாக்கவும் முடியும். இதைச் செய்யத் தவறினால் புரட்சியின் வெற்றி பலவீனமடையும்.

குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்.-எங்கெல்ஸ்- பாகம்-1 இலக்கு 49 இதழில்

 குடும்பத்தின் பரிணாம வளர்ச்சியை நாம் வரலாற்று பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தி லிருந்து புரிந்துகொள்ள வேண்டும். குடும்பம் என்பதை ஒரு வரலாற்று கருத்தினமாக நாம் அணுக வேண்டும். குடும்பமானது பல்வேறு வடிவங்களாக மாறி வரலாற்றில் வளர்ந்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பண்டைய காலத்தில் குழுமண வடிவத்தில் குடும்பம் இருந்தது, பின்பு தனிவுடமை தோன்றி வளர்ந்த போது ஒருதாரக் குடும்பமாக குடும்ப வடிவம் மாறியது. சமுதாய வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களுக்கும் இடையிலான அங்கக ரீதியான தொடர்பையும், இந்தவடிவங்கள் உற்பத்தி முறையின் மாற்றங்களை எப்படி சார்ந்துள்ளன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்..

உற்பத்தி சக்திகள் வளர வளர சமுதாய அமைப்பின் மீது இரத்த உறவு முறையின் தாக்கம் அதாவது அண்ணன், தம்பி, தாய் தந்தை, பிள்ளைகளுக்கும், இடையிலான தாக்கம்எப்படியெல்லாம் குறைந்துகொண்டே சென்றது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தனிவுடமை வெற்றி பெற்ற பின்பு சொத்துடமை அமைப்பானது குடும்ப அமைப்பின் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் நிலையாக எப்படி மாறுகின்றது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தனிவுடமை தோன்றிய பின்பு சமுதாயத்தில் என்ன வகையான மாற்றங்கள் நிகழ்ந்தது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.. அதற்கான அறிவை பெறுவதற்கு குடும்பம், தனிச்சொத்து, அரசு

ஆகியவற்றின் தோற்றம் என்ற எங்கெல்சால் எழுதப்பட்ட நூலை நாம் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்..

தற்போதைய முதலாளித்துவ சமுதாயத்தில் குடும்பங்களின் நிலையை நாம் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். தனிவுடமை ஆதிக்கம் செலுத்தும் இன்றைய சூழலில் பொருளாதாரத்தின் அடிப்படையில் பெண்களுடைய சமமின்மையை நாம் விரிவாக அலசி ஆராய வேண்டும். முதலாளித்துவ உற்பத்தி முறையை சமூகத்தில் ஒழித்துக்கட்டினால்தான் பெண்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும் என்தற்கான ஆதாரங்களை நாம்தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டு உருவாக்கப்படும் சோசலிச சமூகத்தில்தான் பொண்கள் சமூக உற்பத்தியில்பரவலாக ஈடுபடுத்தப்படுவதற்கான விரிவான வாய்ப்புகள் ஏற்படுகிறது. அதன் காரணமாக சமுதாய வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முழு சமத்துவம் அளிக்கப்படும். கட்டாயமான வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்படுவார்கள். வீட்டு வேலைகள் என்ற இந்தப் பணியை சமுதாயத்திலுள்ள ஆண் பெண் வேறுபாடுகள் இல்லாமல் சமுதாயத்திலுள்ள அனைவரும் எடுத்துச் செய்யும் நிலையை ஏற்படுத்தப்படும். அதன் மூலம் அப்பொழுதுதான் ஆண் பெண் வேறுபாடுகள் நீங்கி அனைத்து மனிதர்களுக்கு இடையிலான முழு சமத்துவம், பரஸ்பரமான ஒருவரை ஒருவர் மதிக்கக்கூடிய நிலை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உண்மையான அன்பு நிலைபெறும். இந்த வகையில்தான் சோசலிச சமுதாயத்தில்தான் சமூகத்தில் மிகமிக உயர்வான குடும்பங்கள் உருவாகி நிலைபெறும் என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய சமுதாயத்தில் குடும்பங்களில் நிலவும் பல்வேறுவிதமான தீய தன்மைகளை ஒழிப்பதற்கு சமூகத்தை சோசலிச சமூகமாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் பிற்போக்கு முதலாளித்துவ சிந்தனையாளர்களும், பெண்ணியவாதிகளும் குடும்பத்தை சமூகத்திலிருந்து தனியாகப் பிரித்து குடும்பத்தை சீர்திருத்தவது என்று மட்டும் செய்து குடும்பத்தை சிறந்த குடும்பமாக மாற்றிவிடலாம் என்று கருதுகிறார்கள். அதாவது நிலவுகின்ற முதலாளித்துவ சமூகத்தை ஒழித்துக்கட்டாமல் குடும்பத்தை மட்டும் சீரமைத்துவிடலாம் என்று கருதுகிறார்கள். சமூகத்தை மாற்றியமைக்காமல் குடுபத்தை சீரமைப்பதன் மூலம் மட்டுமே அதாவது கணவனின்ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டுமே பெண்களுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று கருதுகிறார்கள். பெண்கள் குடும்பத்தின் உறுப்பினர்கள் மட்டுமல்ல, ஆண்களைப் போலவே இந்த சமூகத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார் என்பதையும், குடும்பச் சூழலால் மட்டுமல்ல நிலவுகின்ற சமூகச் சூழலாலும் ஆண்களைப் போலவே பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இவர்கள் பார்க்க மறுக்கிறார்கள். ஆகவே இந்த பெண்ணியவாதிகள் பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தும் இடையிலான ஒருபக்க உறவை மட்டும் பார்த்து பெண்களுக்கும் இந்த சமூகத்துக்கும் இடையிலான மறுபக்க உறவை இவர்கள் பார்க்க மறுக்கிறார்கள். ஒரு பொருளின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள அதனோடு தொடர்புடைய அனைத்தையும் பார்த்து பரிசீலிப்பதன் மூலமே அந்தப் பொருளின் உண்மையான இயக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்ற இயங்கியல் கண்ணோட்டத்துக்கு எதிரான இவர்களது பார்வையானது இயங்காவியல் பார்வையாகும். ஆகவேதான் பெண் விடுதலை பற்றிய முதலாளித்துவ சீர்திருத்தவாதிகள் மற்றும் பெண்ணியவாதிகளின் கொள்கைகளும் கருத்துக்களும் விஞ்ஞானத்துக்கு எதிராக அமைந்து இவர்கள் பெண் விடுதலைக்கான போராட்டத்தில் தொடர்ந்து தோல்வியடைகிறார்கள்.

தற்போது நிலவும் சொத்துடமை வடிவம் தோன்றுவதற்கு முன்பு மனித சமூக வரலாற்றில் பல்வேறுவிதமான சொத்துடமை வடிவங்கள் உலகில் நிலவி இருந்தது. ஆகவே வரலாற்றில் நிலவிய பல்வேறுவிதமான சொத்துடமை வடிவங்களையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இத்தகைய பல்வேறு வகையான சொத்துடமை வடிவங்கள் எவ்வாறு மாற்ற மடைந்தன அல்லது வளர்ந்தது என்பதையும், இத்தகைய மாற்றங்களுக்கும் வரலாற்றில் நிலவிய சமூக அமைப்புகளுக்கும் இடையிலான உறவைப் பற்றியும், இந்த உறவின் காரணமாகவே பல்வேறுவிதமான சொத்துடமை வடிவங்கள் சமுதாயத்தில் உருவானது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே தற்போது நிலவுகின்ற சொத்துடமை வடிவங்களைப் புரிந்துகொள்வதன் மூலமே நிலவுகின்ற சமூக அமைப்பின் வடிவத்தையும் நாம் புரிந்துகொள்ளவும் அவற்றுக்கு இடையிலான உறவையும் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய புரிதல் இல்லாமல் சமூகத்தை மாற்றியமைப்பதற்கான புதிய வகையிலான சொத்துடமை உறவை நம்மால் ஏற்படுத்துவதற்கான கொள்கை முடிவை நாம் எடுக்க முடியாது..

ஆகவேதான் சமூக மாற்றமானது நிலவுகின்ற உற்பத்தி உறவைஒழித்துவிட்டு புதிய வகையிலான உற்பத்தி உறவை ஏற்படுத்துவதுதான் என்று மார்க்சியம் தெளிவுபடுத்துகிறது. இந்த அடிப்படையில் நமது சிந்தனையை அமைத்துக்கொள்ளாமல் ஜனநாயகப் புரட்சி என்றும் சோசலிசப் புரட்சி என்றும், பாசிச எதிர்ப்பு என்றும் வார்த்தை விளையாட்டுகளில் பலரும் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். ஆகவே நமது முதன்மையான வேலை நிலவுகின்ற வர்க்கங்களையும், வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகளையும், சொத்துடமை உறவுகளையும் அலசி ஆராய்ந்து நிலவுகின்ற சொத்துடமை உறவையும் வர்க்கங்களுக்கு இடையிலான உற்பத்தி உறவுகளைப் பற்றி புரிந்துகொள்வதற்கு வர்க்க ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு வர்க்கமும் என்ன வகையான பொருளியல் வாழ்க்கை வாழ்கிறார்கள் அவர்கள் ஒவ்வொருவரும் என்ன வகையான பொருளியல் வாழ்க்கை அவர்களுக்குத் தேவை என்று கருதுகிறார்கள், அதற்காக என்ன வகைகளில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள், அவர்களின் போராட்ட உணர்வுகளையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும், அதன் மூலமே நாம் மக்களிடம் இருந்துகற்றுக்கொள்ள வேண்டும்.. மேலும் என்னவையான புதிய உற்பத்தி உறவு அல்லது சொத்துடமை உறவை நாம் உருவாக்க வேண்டும் என்பதைமுடிவு செய்து புதிய உற்பத்தி உறவை உருவாக்குவதற்கான திட்டம்

மற்றும் போர்த்தந்திரத்தை உருவாக்க வேண்டும். இந்த அடிப்படையை புரிந்துகொள்ளாமல் வெறும் வார்த்தை விளையாட்டுகளால் பயன் இல்லைஎன்றே நான் கருதுகிறேன்..

சமூகத்தில் தற்போது நிலவும் தனிவுடமையும் சரி இதற்கு முன்பு நிலவிய பல்வேறு வகையான தனிவுடமையும் சரி, எக்காலத்திலும் நிரந்தரமாக நிலவக்கூடியது அல்ல. நீண்ட பழங்காலத்தில் மனிதர்களின் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் பொதுவானதாக பொதுவுடமையாகவே இருந்தது. மனிதகுல வரலாற்றில் நீண்டகாலத்தில் தனிவுடமை என்ற நிலை ஏற்படவே இல்லை. உற்பத்தி சக்திகள் அதாவது உழைப்பு கருவிகள், தொழிற்சாலைகள், தொழில்நுட்பங்கள், நிலங்கள், போக்குவரத்து சாதனங்கள் போன்றவைகளையே உற்பத்தி செய்வதற்கான சக்திகள் என்று சொல்லப்படுகிறது. இந்த உற்பத்தி சக்திகள் வளர்ந்ததால் மனிதர்களின் உற்பத்தி திறன் அதிகரிக்கிறது, அதனால் அதிக அளவிலான உற்பத்தி நடைபெற்றது. உபரியான உற்பத்தியின் விளைபொருளை சிலர் அபகரித்து தனக்கு மட்டும் சொந்தமாக மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகியது. இத்தகைய வாய்ப்பை பயன்படுத்தி ஒருசிலர் அவர்களின் தனிவுடமையை வளர்த்துக்கொண்டார்கள். தொடர்ந்து அவர்களின்தனிவுடமையை அதிகரிக்க பிறரது உழைப்பின் பலன்களை சுரண்டுவது தீவிரமடைந்தது. அதன்காரணமாக சமுதாயத்தில் பிறரது உழைப்பை சுரண்டுபவர்கள் ஒருவிதமான வர்க்கமாகவும், இவர்களின் சுரண்டலுக்காக உழைப்பவர்கள் வேறுவிதமான வர்க்கமாக மாறி மனித சமூகத்தில் எதிர்எதிரான பகைமையான வர்க்கங்கள் உருவாகின. இந்த பகைமையான வர்க்கங்களுக்கு இடையில் மோதல்கள் உருவானது. இந்த மோதல்களை சுரண்டும் வர்க்கங்களின் நலன்களிலிருந்தும் சுரண்டும் வர்க்கங்களை பாதுகாப்பதற்காக ஆயுதம் தாங்கிய வன்முறை கருவியான அரசு, சமூகத்தில் உருவானது. ஆகவே உற்பத்தி கருவிகளின் வளர்ச்சியினால் மனிதர்களின் உற்பத்தி திறன் அதிகரித்தது, அதனால் உற்பத்தி அதிகரித்தது, அதனை தொடர்ந்து உபரி உற்பத்தியை சிலர் கைப்பற்றிக்கொண்டு உடமை வர்க்கமாக மாறினார்கள், அதனை தொடர்ந்து இவர்கள் உற்பத்தியில் ஈடுபட்ட உழைக்கும் மக்களை சுரண்டி சொத்து சேர்த்தனர். மனிதசமூகம் பகையான வர்க்கங்களாக பிளவுபட்டது. இந்த வர்க்கப் பகைமையை அமைதியான வழியில் தீர்க்க இயலாததன் காரணமாக சுரண்டும் வர்க்கங்களை பாதுகாக்கவே வன்முறை கருவியான அரசு உருவானது. இந்த உண்மையை ஒவ்வொருவரும் மிகவும் ஆழமாகப் புரிந்துகொள்ளவேண்டும்..

அரசின் தோற்றம், அதன் சாராம்சத்தை பன்முக ரீதியில் ஆராய்ந்து, அரசு பற்றிய தெளிவான கோட்பாடுகளை மார்க்சிய ஆசான்கள் உருவாக்கினார்கள். அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களதுபோதனைகளை நாம் கற்று அறிய வேண்டுமானால், மார்க்சிய ஆசான்கள் எழுதிய லூயி போன்ப்பார்ட்டின் பதினெட்டாம் புரூமேர், பிரான்சில் உள்நாட்டுப் போர், டூரிங்குக்கு மறுப்பு, குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், அரசும் புரட்சியும் போன்ற மார்க்சிய ஆசான்களது நூல்களை நாம் படிக்க வேண்டும். இந்தியாவிலுள்ள இடதுசாரிகளில் பல பேர்களுக்கு அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகள் தெரியாது. இடதுசாரி தலைவர்களும் அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இல்லை. அதன்காரணமாக இடதுசாரி அமைப்பிலுள்ள பலருக்கும் நடைமுறையிலுள்ள அரசைப் பற்றியும் தெரியாது உழைக்கும்மக்களுக்கு எந்தவகையான அரசு தேவை என்பதும் தெரியாது. அரசு பற்றி முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு என்ன தெரியுமோ அந்த அளவிலேயே இடதுசாரிகளும் தெரிந்து வைத்துள்ளார்கள். ஆகவேதான் இடதுசாரிகளும் முதலாளித்துவ அரசியல்வாதிகளைப் போலவே இருக்கிறார்கள். இடதுசாரிகளுக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கும்எவ்விதமான வேறுபாட்டையும் இங்கு காணமுடியவில்லை. அவர்களுக்கு இடையிலான வேறுபாடு அவர்கள் ஏந்திக்கொண்டிருக்கும் கொடிகளில் மட்டுமே காண முடிகிறது. அரசு பற்றிய கொள்கையில் இவர்களுக்கு இடையில் எவ்விதமான வேறுபாட்டையும் காணமுடியவில்லை. ஆகவே உண்மையான இடதுசாரிகள் அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை படித்து புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் தங்களது அரசியல் கொள்கையை வகுத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இடதுசாரிகள் உண்மையான மார்க்சிய லெனினியவாதிகளாக மாறி வளரமுடியும்..

அரசு என்பதை வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களுக்கும் பொதுவான நிறுவனமாக அடையாளப்படுத்தும் சித்தாந்தவாதிகளும் அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றி உற்பத்திச் சாதனங்களை அதாவது மூலதனத்தை உடமையாகக் கொண்ட வர்க்கங்கள், உடமையற்ற வர்க்கங்களின் உழைப்பு சக்தியை சுரண்டி அதாவது திருடி தனது மூலதனத்தை அதாவது சொத்துக்களை குவிக்கும் நோக்கத்திற்காக உடமையற்ற உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான கருவிதான் இந்த அரசு என்பதை மூடிமறைக்கிறார்கள். பண்டைய ஏதென்ஸ், ரோமாபுரி, ஜெர்மனி, இந்தியாவிலும் தோன்றிய அரசுகளின் வரலாறறை நாம் ஆய்வு செய்தால், இந்த அரசுகள் தோன்றியபோதே சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களை உடமையாகப் பெற்ற வர்க்கங்களுக்கு ஆதரவாக ஆதிக்க சக்தியாகவே அரசுகள் தோன்றியதை நாம் புரிந்துகொள்ளலாம். இந்த உண்மையை வரலாற்றிலிருந்து தகுந்த ஆதாரங்களோடு நிறுவியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற மார்க்சிய ஆசான்கள் ஆவார்கள். அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டும்தான் மார்க்சியவாதிகள் ஆவார்கள். இதனை மறுப்பவர்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரும் மார்க்சியத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் எதிரானவர்களே ஆவார்கள். உலகில் தோன்றிய அரசுகள் பல வடிவங்களில் தோன்றியது. இவ்வாறு அரசானது பல வடிவங்களைக் கொண்டிருந்தாலும் அனைத்துவகையான அரசுகளுக்கும் நோக்கம் ஒன்றுதான். அதாவது உற்பத்திச் சாதனங்களை உடமையாகக் கொண்ட வர்க்கங்களின் நலன்காப்பதுவே ஆகும். மேலும் இந்த வர்க்கங்களை எதிர்க்கும் வர்க்கங்களை ஒடுக்கும் நோக்கம் கொண்டதே ஆரசாகும். ஆகவேதான் தற்போது சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகும் உழைக்கும் வர்க்கமானது உற்பத்திச் சாதனங்களுக்கு உடமையாளனாக மாற்றப்பட வேண்டும். அவ்வாறு உழைக்கும் வர்க்கமானது உற்பத்திச் சாதனங்களுக்கு உடமையாளனாக மாற்றப்பட்டுவிட்டால் இந்த உடமையை அதாவது உழைக்கும் மக்களின் உடமையை பாதுகாப்பதற்கான அரசு அதற்குத் தேவைப்படும் அல்லது இந்த பொதுவுடமையை ஒழிப்பதற்கான வேலைகளில் ஈடுபடும் முதலாளிகளின் எதிர்ப்புரட்சியை நசுக்கவும் உழைக்கும் மக்களுக்கு அரசு தேவைப்படுகிறது. இந்த அடிப்படை கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் நிலவுகின்ற பாராளுமன்ற ஆட்சி முறையானது எவ்வளவுதான் ஜனநாயகம் என்று பேசினாலும், அது சாராம்சத்தில் சுரண்டும் வர்க்கங்களின் குறிப்பாக முதலாளிகளின் சர்வாதிகார ஆட்சியாகவே இருக்கிறது என்பதை மார்க்சிய ஆசான்கள்

தகுந்த ஆதாரங்களோடு நிறுவினார்கள். மேலும் உழைக்கும் வர்க்கத்திற்கான அரசானது முதலாளிகளின் எதிர்ப்புரட்சியை ஒடுக்குவதற்கான பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசாகவே இருக்க வேண்டும் என்றும் மார்க்சியம் போதிக்கிறது..

கம்யூனிஸ்ட் தலைவர்களிடையே சில தலைவர்கள் பாராளுமன்ற அமைப்பின் மீது நம்பிக்கை வைக்கும் கற்பனையை மக்களிடம் விதைத்தார்கள். அவர்களை எதிர்த்து மார்க்சிய ஆசான்கள் கடுமையாகப் போராடினார்கள். மூலதனத்தின் ஆதிக்கம் நீடிக்கும் வரை எல்லாவிதமான ஜனநாயகமும், சுதந்திரமும் உழைக்கும் மக்களுக்கு உண்மையான விடுதலையை கொண்டுவராது என்பதை மார்க்சிய ஆசான்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்..ஆகவே மூலதனத்தின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்குஉழைக்கும் வர்க்கமானது தொடர்ந்து போராட வேண்டும் என்றும், அதற்குஉழைக்கும் வர்க்கமானது மூலதனத்தை அதாவது உற்பத்திச் சாதனங்களைஉழைக்கும் மக்களுக்குச் சொந்தமான உடமையாக ஆக்க வேண்டும் என்றும்அதற்காக நிலவுகின்ற முதலாளித்துவ அரசை அடித்து நொறுக்கிவிட்டு உழைக்கும் மக்களின் பொதுவுடமையை பாதுகாப்பதற்கான அரசை உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. எனினும் முதலாளித்துவ நாடுகளில் நிலவும் முதலாளித்துவ ஜனநாயகத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு கம்யூனிஸ்டுக் கட்சியானது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. இங்கே இரண்டு வகையான எதிர்மறைகளைப் பற்றி மார்க்சியம் போதிக்கிறது. ஒன்று முதலாளித்துவ ஜனநாயகத்தின் மூலம் உழைக்கும் மக்கள் முழுமையான விடுதலை அடைய முடியாது என்கிறது. அதே சமயம் இதற்கு எதிராக முதலாளித்துவ ஜனநாயகத்தை உழைக்கும் வர்க்கமானது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறது. இதனை புரிந்துகொள்வதில் பலருக்கும் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் மார்க்சிய கண்ணோட்டம் உள்ளவர்களால் இதனை குழப்பமில்லாமல் புரிந்துகொள்ள முடியும். அதாவது முதலாளித்துவ ஜனநாயகத்தின் மூலம் உழைக்கும் மக்கள் தங்களது கருத்துக்களை பிரச்சாரம் செய்வதற்கு சுதந்திரம்கிடைக்கிறது, ஆகவே தனது கருத்தை உழைக்கும் மக்களிடையே

பரப்புவதற்கான சுதந்திரத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்று உணர்ந்து அந்த சுதந்திரத்தை பயன்படுத்துவதுதான் அறிவுடமை ஆகும். அதேபோல் உழைக்கும் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான சுதந்திரத்தையும் நாம் பயன்படுத்துவது அவசியமே என்பதை உழைக்கும் மக்கள் உணர்ந்து சட்டப்பூர்வமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. அதே வேளையில் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பயன்படுத்தியே உழைக்கும் மக்களுக்கான முழுமையான விடுதலையை அடையமுடியும் என்று கண்மூடித்தனமாக நம்பி நமதுநடைமுறையை வகுத்துக்கொள்ளக் கூடாது என்று மார்க்சியம் எச்சரிக்கிறது. இந்த கண்ணோட்டத்தை சரியாகப் புரிந்துகொள்பவரே சிறந்த மார்க்சியவாதி ஆவார். இதற்கு மாறாக முதலாளித்து ஜநாயகத்தையே முழுமையாக நம்பி செயல்படுவதும், முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு முடிவுகட்டிவிட்டு பாட்டாளிவர்க்க ஜனநாயகத்தை நிறுவ மறுப்பதும் தவறுஆகும்,

இதற்கு எதிராக பாட்டாளிவர்க்க ஜனநாயகத்தை நிறுவுவதற்கான செயல்பாட்டில் மட்டும் ஈடுபட்டுக்கொண்டு முதலாளித்துவ ஜனநாயகத்தை பயன்படுத்த மறுப்பதும் தவறாகும் என்று மார்க்சியம் போதிக்கிறது. ஆகவேதான் ஒரு பாட்டாளிவர்க்க கட்சியானது சட்டப்பூர்வமான போரட்டங்களை நடத்தும் அதே வேளையில் சட்ட மறுப்பு போராட்டங்களையும் நடத்திட வேண்டும் என்றே மார்க்சியம் போதிக்கிறது. இந்திய முதலாளிகளுக்காகப் பாடுபட்ட காந்தி கூட சட்டப்பூர்வமான போராட்டத்தையும் சட்ட மறுப்பு போராட்டங்களையும் நடத்தினார் என்பதை கவனத்தில் கொண்டால் இதனை நாம் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு மார்க்சியத்தின் போதனைகளில் காணப்படும் எதிர்மறைகளுக்கான நிபந்தனைகள் மற்றும் சூழலைக்கொண்டு புரிந்துகொள்பவரே சிறந்த மார்க்சியவாதி ஆவார். உதரணமாக தேர்தலில் பங்குகொள்ள வேண்டும்என்று லெனின் சொல்லியுள்ளார் என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு தேர்தலில் ஏன் பங்கு கொள்ள வேண்டும் என்பதையும் தேர்தல் மூலம் கம்யூனிஸ்டுகள் என்ன பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதையும் சில சமயங்களில் தேர்தல்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என்பதையும் கண்டுகொள்ளாமல் தேர்தல் பாதையிலேயே மூழ்கிவிடுவதும் தவறு அதே போல் தேர்தலை முழுமையாகப் புறக்கணிப்பதுவும் தவறாகும். சரியான மார்க்சிய கண்ணோட்டம் இல்லாதவர்களே மார்க்சிய ஆசான்களின் போதனைகளை சரியாகப் புரிந்துகொள்ள தவறுவதை நாம் பார்க்கிறோம்.

இத்தகைய தவறுகளை எதிர்த்து போராட வேண்டியது மார்க்சிய லெனினியவாதிகளின் கடமையாகும். உற்பத்தி சக்திகள் அதாவது உற்பத்தி கருவிகள், தொழிற்சாலைகள், தொழில்நுட்பங்கள், போக்குவரத்து சாதனங்கள், போன்றவைகள் அனைத்தும் வளர வளர சமூகத்தின் உற்பத்திமுறையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில்தனிவுடமை தோன்றியது. அதற்கு முன்பு சமூகமானது பொதுவுடமையாக

இருந்தது. இந்த பொதுவுடமைச் சமூகம் தகர்ந்து தனிவுடமை தோன்றியது. இந்த தனிவுடமை சமூகத்தில்தான் அதுவரை மனிதர்களிடம் எவ்விதமான பிளவுகளும் இல்லாமல் ஒற்றுமையாக இருந்த மனிதர்கள் வர்க்கங்களாக பிளவுபட்டு மனிதர்களுக்கு இடையிலான ஒற்றுமை தகர்ந்தது. இவ்வாறு மனிதர்கள் வர்க்கங்களாக பிளவுபட்டது தவிர்க்க முடியாததாகவே அப்போது இருந்தது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிதான் இந்தப் பிளவுக்கு அடிப்படையாக இருந்தது. முதலாளித்துவ சமுதாயத்தில் உற்பத்தி சக்திகள் மேலுமேலும் வளர்ச்சியடைகின்றது. இந்த வளர்ச்சியின் காரணமாக தனிவுடமையும் சுரண்டும் வர்க்கங்களும் சமுதாயத்தின் உற்பத்தியின் வளர்ச்சிக்கு தடையாக மாறுகிறது. முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்தில் முதலாளித்துவ தனிவுடமையும் சுரண்டும் வர்க்கங்களும் உற்பத்தி சக்திகளை வளர்க்கின்றன, அதன் பயனாக சமூக உற்பத்தி அதிகரித்து வளர்க்கப்படுகிறது, சமுதாயமும் வளர்ந்தது. ஆனால் இந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினால் உற்பத்தி அதிகரித்த போதும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் சந்தையில் விற்க முடியாமல் தேங்குகிறது. அதனால் முதலாளிகள் உற்பத்தியை தொடராமல் உற்பத்தியை குறைக்கிறார்கள். ஆகவே இவர்கள் உற்பத்தி சக்தியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறார்கள்இவ்வாறு முன்பு சமூகத்தின் உற்பத்தி வளர்ச்சிக்கும் பொதுவாக சமூகத்தின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்த முதலாளிகள், தற்போது சமூகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக மாறிவிட்டார்கள். ஆகவே சமூகத்தை வளர்ப்பதற்கு இந்த முதலாளிகளின் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டியது அவசியமாகிறது. இந்த அவசியத்தின் காரணமாகவே இந்த முதலாளிகளின் நலன் காக்கும் அரசை எதிர்த்து புரட்சி நடத்திட வேண்டியது அவசியமாகிறது என்று மார்க்சிய ஆசான்கள் தொடர்ந்து போதித்தார்கள்..

அதாவது நிலவுகின்ற அரசு இயந்திரத்தை அடித்து நொறுக்குவது அவசியம் என்று தொடர்ந்து மார்க்சிய ஆசான்கள் வலியுறுத்தினார்கள். இத்தகைய புரட்சியின் மூலம் மட்டுமே நிலவுகின்ற முதலாளித்துவ ஜனநாயக அரசு இயந்திரம் அடித்து நொறுக்கப்பட்டு முதலாளித்துவ ஜனநாயகத்தைக்காட்டிலும் மிகவும் உயர்ந்த பாட்டாளி வர்க்க ஜனநாயக அரசு உருவாக்கப்படும் என்று மார்க்சிய ஆசான்கள் போதித்தார்கள். இந்த உண்மையை மறுக்கும் திருத்தல்வாதிகள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டே நிலவுகின்ற முதலாளித்துவ ஜனநாயகத்தை மெச்சி புகழ்ந்துகொண்டே இந்த முதலாளித்துவ அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தியே பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை நிறுவ முடியும் என்று சொல்லி நம்மை ஏமாற்றுவதற்காகவே தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்து முதலாளிகளுக்கு சேவை செய்ய துடிக்கிறார்கள். ஆகவே பொதுவுடமை இயக்கத்திலுள்ள இந்த திருத்தல்வாதிகளின் துரோகத்தை

நாம் புரிந்துகொண்டு நாம் புறக்கணிக்க வேண்டும். ஆகவே நமக்குத் தேவை முதலாளித்துவ ஜனநாயக அரசு அல்ல, மாறாக பாட்டாளி வர்க்க ஜனநாயக அரசுதான் நமக்குத் தேவை என்பதையும், பாட்டாளி வர்க்க அரசு மட்டுமே உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மிகச் சிந்த ஜனநாயகத்தை வழங்கக்கூடிய அரசாக இருக்க முடியும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து அத்தகைய அரசை உருவாக்குவதற்காகப் பாடுபட வேண்டும்..

தேன்மொழி.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இலக்கு இணைய இதழில் இரண்டு ஆண்டுகளில் நாங்கள் செய்தவை

 தோழர்களே நாங்கள் இரண்டு ஆண்டுகளாக சமூகத்தில் தினம் நடக்கும் பிரச்சினைகளை குறித்து விவாதிப்போதும் அதே காலத்தில் நமது மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல் என்ன? அவை எப்படி நமது நாட்டு சூழலில் பொருத்தி பார்ப்பது என்பதோடு மூல நூல்களை அதன் சாரத்தை அப்படியே கொண்டு வர முயற்சித்துள்ளோம்.

அவை ஒரு சிறிய பணியே என்றாலும் எங்களின் முன் பெரிய பணியே ;ஆசான் களின் நூல்களை வாசிக்க வேண்டும் அதே நேரத்தில் மார்க்சிய விரோதிகளின் மார்க்சிய விரோத கருத்துகளுக்கும் பதிலடி தர் வேண்டும் இவ்வாறாக எங்களின் பணி தொடர்ந்துக் கொண்டுதான் உள்ளது நீங்களும் இதில் உள்ள தலைப்புகள் கட்டுரைகள் வாசிக்க விவாதிக்க அழைக்கிறோம் தோழர்களே. 

இதை எழுத்து வடிவில் குறிபிட்ட பிளாகர்களில் உள்ளன நூல் வடிவில் பிடிஎப்பாக உள்ளன. தேவைபடும் தோழர்கள் அந்த குறிப்பிட்ட கட்டுரைகளை எங்கள் இணைய பகுதியில் சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் தோழர்களே.  

இலக்கு இதழ் தொடங்கி மூன்றாம் ஆண்டை தொடுகிறோம். நாங்கள் கொணர்ந்த பல்வேறு படைப்புகளும் அதன் மூலமும் ஒரு பார்வைக்கு.

1). அரசும் புரட்சியும்- லெனின் நூலின் அடிப்படையில் எழுதிய தொடர் கட்டுரைகள் நம் நாட்டிற்கு தேவையான வடிவில்.

2). சமூக ஜனநாயகவாதத்தின் இரண்டு போர் தந்திரங்கள் அதன் மூலம் நமது நாட்டில் உள்ள கட்சி பற்றிய மதிப்பீடு.

3). மார்க்சியம் என்றால் என்ன?-தோழர் அ.கா. ஈஸ்வரனின் கட்டுரை தொடர்

4). மார்க்சியம் என்றால் என்ன?(தத்துவம்)-தோழர் அ.கா. ஈஸ்வரனின் கட்டுரை தொடர்

5). இந்திய தத்துவங்கள் -தோழர் அ.கா. ஈஸ்வரனின் கட்டுரை தொடர்

6). மதம் பற்றி மார்க்சிய அடிபடைகள்

7). இந்திய பாசிசம் பற்றி

8). கலையின் தோற்றம் வளர்ச்சி இன்றைய நிலை

9). சின்னதிரை சினிமா செல்போன் சீரழிவை பரப்பும் ஆளும் வர்க்க கருவியாக

10). வரலாற்றில் மூன்றாம் அகிலத்தின் பணி- லெனின்

11). மார்க்சியத்தின் தோற்றம் வளர்ச்சி

12). சீர்திருத்தவாதம் குறித்து லெனின் இந்தியாவில் சீர்திருத்தங்களின் விளைவு

13).ஐ.நா உருவாக்கத்தில் தோழர் ஸ்டாலின் செயல்தந்திரம் வரலாற்றுப் பொருள்முதல்வாத வகைப்பட்டதே.

14). சமூகவியல்

15). அரசியல் பொருளாதாரம் ஒரு அறிமுகம்

16).குறுங்குழுவாதம் பற்றி மாவோ மற்றும் நமது நாட்டில் உள்ள குறுங்குழுவாத போக்கு

17). தோழர் அப்பு பாலன் நினைவுநாள்

18). அடையாள அரசியல் என்பது மார்சியதிற்கும் மக்களுக்கும் எதிரான அரசியல் சித்தாந்தமே

19).கம்யூனிசதிற்கு எதிரான துரோகிகளை முறியடிப்போம்

20). ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கமும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கமும் ஓர் ஒப்பீடு

21).மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்-லெனின்

22).பாட்டாளி வர்க்க கட்சியும் ஊழியர் கோட்பாடுகளும்

23).ரசிய புரட்சியை நினைவில் ஏற்றுவோம்

24).கம்யூனிஸ்ட்டுகள் செய்யும் தவறுகள் என்ன? அதனை எவ்வாறு திருத்தி உழைக்கும் வர்க்க இயக்கத்தை முன்னெடுத்து செல்வது?

25).உட்கட்சி ஒற்றுமையை கட்டுவதற்கான இயக்கவியல் அணுகுமுறை-மாவோ

26) ரசிய புரட்சியும் இன்றைய உலக சூழலும்

27).உழைக்கும் மக்களுக்கான தத்துவ கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதம்

28) 21 நூற்றாண்டின் பொருளாதாரம்- மறைந்த தோழர் சுகுந்தன் அவர்களின் கட்டுரை தொகுப்பு

29).லெனினிய கண்ணோட்டத்தில் ஏகாதிபத்தியம் புரிந்துக் கொள்வோம்

30).மனித சமூக சாரம்

31). மாசேதுங் (1893-1976)

32).இருவேறு இந்தியா

33).பாராளுமன்றத்தை கையாளுவதை பற்றி லெனின் மற்றும் மாவோ

34).பாரிஸ் கம்யூன் படிப்பினைகள்

35).இந்திய பட்ஜெட் 2023-24

36).லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள்

37). சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்- அலெக்ஸாந்தரா கொலந்தாய்

38).பல்வேறுவகைபட்ட சோசலிசம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து

39).சமரசங்கள் குறித்து

40).அய்ந்து அரங்குகளில் தேர்வை எதிர்க் கொள்வோம்-சௌ-என்-லாய்

41). முரண்பாடுகள் பற்றி மாவோ

42). இந்திய விவசாயிகள் பிரச்சினை

43).மேதின வரலாறு

44). இந்திய இடதுசாரி இயக்கங்கள் மீதான் ஓர் ஆய்வு

45). நாட்டுபுற ஏழை மக்களுக்கு-லெனின் நம் நாட்டின் தேடல்

46). சோவியத் சோசலிச குடியரசும் இந்திய பிற்போக்கு அரசும்

47).சமூகத்தில் ஜாதியம் ஓர் தேடல்

48). மனித குலத்தின் வரலாறு

49). முலதனம் பற்றிய அறிமுகம்

50).ரசிய புரட்சியின் தாக்கமும் நமது இடதுசாரி இயக்கங்களுக்கு இடையிலேயான படிப்பினைகளும்.

51).இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவகோளாறு

52).சோவியத் யூனியன் உடைவுக்கான விளக்கமும் குழப்பமும்-நூலுக்கான விமர்சனம்

53).மார்க்சியவாதிகளுக்கிடையேயான பணி

54). இன்றைய சமூகத்தில் பெண்

55). சீர்திருத்தவாத இயக்கமும் புரட்சிகர இயக்கமும்

56).மார்க்சியம் சில போக்குகள் அதில் தமிழக மார்க்சியம் குறித்த சில

57). மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்-லெனின்

58).மார்க்சியத்தை மறுக்கும் சில போக்குகள்-NGO,பின்நவீனத்தும், சந்தர்ப்பவாதம்.

59). நமது படிப்பைச் சரிசெய்வோம்-மாவோ

60). மனிதர்களின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன?-மாவோ

61). ரசிய புரட்சியும் லெனினும்

62). நடைமுறை பற்றி-மாவோ

63). ரசிய புரட்சியும் நமக்கான வழிகாட்டுதலும்

64).கம்யூனிஸ்ட் கட்சியும் அமைப்பு கோட்பாடுகளும்

65).உயிரின் தோற்றம் -ஏ.ஐ.ஓபரின்

66).நமது இயக்த்தின் அவசர அவசிய பணிகள்-லெனின்

67).மார்க்சியமும் மார்க்சியத்தை மறுக்கும் போக்குகளும்

68).போஸ்ட் மார்டனிஸம்.குளச்சல் மு. யூசுப்

69). ‘அடியும்முடியும்’- முனைவர் க.கைலாசபதி பற்றிய- ஓர் ஆய்வு

70). கே.டானியல் அரசியல் களம் ஓர் தேடல்

71). விஜய்காந்த் என்பவர் புரட்சியாளரா? சமூக மாற்றதிற்கனவரா?

72). பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுஸ்த்கியும்- லெனின்

73).பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்-லெனின்

திறந்த நிலை மார்க்சியம் பேசுவோரின் நிலைப்பாட்டை விமர்சித்து ஓர் தேடல்

74).திறந்தநிலை மார்க்சியம் யாருக்கான மார்க்சியம்?-தொடர்

75).இந்திய பாராளுமன்றமும் ஊழல் ஆட்சியாளர்களும்

79).குறுங்குழுவாதம் பற்றி மார்க்சியம் - தேன்மொழி

80).தத்துவமும் நடைமுறையும்- நமது நாட்டில் உள்ள நடைமுறையை விமர்ச்சித்து நம் ஆசான்களின் போதனைகளிலிருந்து நமக்கான தத்துவம் எவை அதனை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறீர் விவாதமே இந்தக்கட்டுரை

81). புரட்சியை மறுக்கும் திருத்தல்வாதம் சீர்திருத்தவாதம் அடையாள அரசியல்

82).பெண்விடுதலையும் மார்க்சியமும்

83). இந்தியாவில் தோன்றிய பொதுவுடமை கட்சிகள் பற்றி ஓர் தேடல்

84).கம்யூனிஸ்ட்டுகள் என்பவர்கள் இங்கே எப்படி உள்ளனர்

85).மொழி இனம் பற்றிய மார்க்சிய கண்ணோட்டம்

86).இந்திய தத்துவங்கள் ஓர் மார்க்சிய பார்வையில்

87).குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்.-எங்கெல்ஸ்

89). ஜாதி பிரச்சினை ஏன் மேலெழுகிறது?

90). சமுதாய வர்க்கங்கள் - அவசியமானவையும் அவசியமற்றவையும் -எங்கெல்ஸ்

-----------------------------------------------------------------------------------------------------------------------------

இதுவரை வெளியான இலக்கு இணைய இதழ்கள் கீழே

இலக்கு இதழ் PDF வடிவில்

வர்க்கங்களும், வர்க்க முரண்பாடுகளும் சோசலிசப் புரட்சி நடைபெற்றவுடன் மறைந்து விடுவதில்லையென்று தோழர் மாவோ குறிப்பிட்டுள்ளார். முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கான மாற்றத்தின் வரலாற்றுக் கால கட்டம் ஒரு கணிசமான நீண்டகாலமாகும். இந்த முழுக் கால கட்டத்தில் வர்க்கங்களும், வர்க்க முரண்பாடுகளும் இருக்கும். ஆகவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இருப்பது மட்டுமல்லாமல் பலப்படுத்தப்படவும் வேண்டும். சோசலிச அரசாங்கம் உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளுக்கெதிராகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவைப்படும் இக்காலகட்டத்தில் வர்க்கப் போராட்டங்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரச்சூழலில் இடம்பெறும்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்