PDF வடிவில் இந்த லிங்கை அழுத்தி இலக்கு 32 இணைய இதழை தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்
இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள் கீழே:-
1).அரசும் புரட்சியும் 1871 ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூனது அனுபவம்,மார்க்சின் பகுத்தாய்வு - பாகம் 2.
2). மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் பயிலுவோம். பகுதி – 7
3). இன்றைய சமூகத்தில் பெண்
4). மார்க்சிய வாதிகளுகிடையிலேயான பணி-6
5). சாதியம் தொடர்-6
மனிதகுலத்தின் வரலாற்றுவளர்ச்சியில் தனிச்சொத்துடமையின் தோற்றம் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வினையும் வர்க்கங்களையும் உருவாக்கியது. இத்தகைய வர்க்கங்களிடையிலான முரண்பாடுகளும் போராட்டங்களும் பொதுவாகி போனது.மனிதகுலத்தின் வரலாறு வர்க்கபோராட்டங்களின் வரலாறாகிக் கொண்டது. வர்க்க முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கின் விளைவுகளால் அரசு தோன்றியது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் மார்க்ஸ் விளக்கியது போன்று அரசென்றால் ஒரு வர்க்கம் வேறு ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான ஒரு கருவியாகும். அது வர்க்கங்களுக்கு மேலே, சமுதாயத்திற்கு மேலே உள்ள ஒரு நடுநிலைஅமைப்பல்ல. சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை அடிமைத்தனமாக வைத்திருப்பதற்கான ஓர் அடக்குமுறைச் சாதனமே அரசு ஆகும். சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை கீழே வைத்திருப்பதற்காகப் படிப்படியாகக் கட்டப்பட்டசாதனமே அரசு. வர்க்கசமுதாயத்தில் ஆட்சி செலுத்துவது உண்மையில் அதுவே. கட்சிகள் வரலாம் போகலாம். ஆனால் சுரண்டும் அமைப்புமுறை இருக்கும்வரை அரசு இயந்திரம் அவ்வாறே இருக்கும்.அவர்கள் முதலாளியின் உயிரையும், உடமையையும் பாதுகாக்க வந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கியவர்களாக வந்திருக்கின்றார்கள். அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும், அவனது வர்க்கத்தையும் பாதுகாக்கின்றது.
“தற்கால இயக்கத்தின் பலம் மக்களின் (முதன்மையாக, தொழில் துறைப் பாட்டாளி வர்க்கத்தின்) விழிப்புணர்வில் அடங்கியிருக்கிறது, அதன் பலவீனம் புரட்சிகரமான தலைவர்களின் உணர்வு இன்மையிலும் முன்முயற்சி இன்மையிலும் அடங்கியுள்ளது, இதை யாரும் இதுவரை சந்தேகித்ததில்லை” தொழிலாளர்கள், நேரடியாகப் பிரச்சினைகளைச் சந்திப்பதனால் அவர்கள் அதனை உணர்ந்து, உடனடியாக எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். நிச்சயமாக அது தன்னியல்பான போராட்டமாகதான் இருக்கும். தன்னியல்பான போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக மாற்றுவது கம்யூனிஸ்ட் கட்சியின் பணி. -என்னசெய்ய வேண்டும் நூலில் லெனின்.
முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் பெயரளவிலான ஜனநாயகத்தைப் பற்றி பேசி சொத்துடையவர்கள் மற்றும் சொத்தில்லாதவர்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை அதாவது வர்க்கப் பகைமையிலான வேறுபாடுகளை பாதுகாத்துக்கொண்டே சமத்துவம் பற்றி கருத்தியலாக வாய்ச்சவுடால் அடிக்கிறார்கள். ஆகவே மனிதர்களுக்கு இடையே உண்மையான சமத்துவமானது வர்க்க வேறுபாடுகளை அதாவது ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதன் மூலமே அடைய முடியும். சீர்திருத்தங்களின் மூலம் சமத்துவம் என்று பேசுவது நம்மை முட்டாள்களாகக் கருதி ஏமாற்றும் வேலையாகும்.
“புரட்சிகர கோட்பாடு ஒன்று இல்லாமல் புரட்சிகர இயக்கம் எதுவும் இருக்க முடியாது"ஆக மிக முன்னேறிய கோட்பாடுகளால் வழிகாட்டப்படும்கட்சியினால் மட்டுமே முன்னணிப் போராளி என்ற பாத்திரத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும்"-லெனின்.
No comments:
Post a Comment