சாதியம் தொடர்-6

 சாதியம் தொடர்-6

ஜாதி பற்றி புரிதலற்றே சிலர் ஜாதிக்கு ஆதியும் அந்தமும் இல்லை என்று பிதற்றிக் கொண்டும் ஜாதியை ஒழிக்கவே முடியாது என்றும் கூறிக் கொண்டு திரிகின்றனர் அவர்களுக்காக இந்த பகுதியில் சில சொல்ல நினைக்கிறேன் தோழர்களே

சாதியமைப்பு பற்றிய கருத்தாக்கங்கள்  நான்கு விதமான ஆய்வு விளக்கங்களைகல்வியாளர் மட்டத்தில் பாமரமக்கள்   மட்டத்திலும் நிலவுகின்றன இவை பற்றிப் பார்ப்போம்.

முதலாவதானது மிகவும் பரவலாக இருப்பவை ரிய சித்தாந்தமாகும் இக்கருத்தின் படி ஆரிய படையெடுப்பாளர்கள் சுதேசி மக்களை அடிமைப் படுத்திய விதத்தில் மூலமாக சாதிகள் தோன்றின    என்பதாகும். இதனை ஒருசில மார்க்சியவாதிகள் ஏற்றுக்கொண்ட போதிலும் இதற்கு அடிப்படை தோற்றுவாய் ஜோதிராவ் புலே பெரியார் ஆகியோருடைய எழுத்துக்களும் பிராமண எதிர்ப்பு இயக்கமும் ஆகும்.  சாதிகள் கடவுளால் படைக்கப்பட்டது அவற்றை மாற்ற இயலாது    என்ற பழமையான மதவாதிகள் கூறும் விளக்கத்தை காட்டிலும் முற்போக்கான கருத்தாக இது உள்ளது.

இனக்கோட்பாடு:ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த போது தொல்திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறதுஇனக்கோட்பாடு. "குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாகத் திகழ்ந்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டைக் காட்டத் தொடங்கினர்.

அம்பேத்கரின் கூற்று:ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமணமுறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம் என்று கூறுகிறார்.

இந்திய சமூக அமைப்பை வர்க்கங்களாக ஒன்றிணைக்க முடியாது என்று அம்பேத்கார் முதல் பலரும் வற்புறுத்தி வந்தனர்இன்னொரு பக்கத்தில் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பில் தொடங்கி பல்வேறு விதமான போராட்டங்களில் மக்கள் ஜாதிகளை கடந்து தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி உள்ளனர் என்பதை கண்கூடாக காணலாம்.  இவை ஜாதிகள் இங்கே தடையாக இல்லை என்பது மக்கள் போராட்டங்களை  கட்டமைத்த போது கண்கூடான உண்மை அல்லவா?

சரி,  ஜாதி என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டதுஅகமணமுறை ஏற்றுக்கொண்டது.

இந்தியசாதிஅமைப்புமுறையைஆராய்ந்தபலரும்பல்வேறுகருத்துகளைமுன்வைத்தாலும்மார்க்சியதத்துவம்மட்டுமே இயக்கவியல் பொருள் முதல்வாத அடிப்படையில் விளக்கி கூறியதாகும்.

அதாவது உலகில் உள்ள மற்றச் சமூக அமைப்பு போலவே இந்தியச் சமுக அமைப்பும் வர்க்க அமைப்பே அதில் சில தனிச் சிறப்புகள் உண்டு.

இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி நிலவி வந்தாலும் அதன் செயல்பாடும் வடிவமும் எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியாய் இருந்ததில்லை.

நிலபிரப்புத்துவ அமைப்பு முறையில் தொழிற் பிரிவினை அடிப்படையில் சாதியம் உறுதியாக செயல்பட்டது இன்றோ நடைமுறையில் அவை இருந்தாலும் கோட்பாட்டு அளவில் மறுக்கப் பட்டுள்ளது.

சாதியைஆரியர்கள்தான் (பிராமணர்கள்தான்உருவாக்கினர் என்பதோதிராவிடர்கள் தமிழர்கள்தான் உருவாக்கினர் என்பதோ அறிவியல்பூர்வமான (இயக்கவியல் பொருள்முதல்வாதமார்க்சிய விரோதமான ஒன்றே.

சாதியானது இந்திய சமூக வளச்சிப் போக்கில் இயற்கையாய் கருக் கொண்டு சூழலுக்கேற்ப்ப உருக்கொண்டுஉபரியை உறிஞ்சும் சுரண்டல் வடிவமாக உருபெற்ற போது அதற்கு கோட்பாட்டு நியாயம் வழங்கி சாதியத்தின் இருதலுக்கு பங்காற்றியது இந்து மத பிராமணியமே அதன் கொடிய அம்சம் சுரண்டல் வடிவில் அடங்கி உள்ளதுபிறப்பின் அடிப்படையில் தொழில்களை ஒழுகமைப்பதில் இச்சுரண்டல் அடங்கியுள்ளது.

நிலப்பிரபுத்துவத்திற்க்கு முந்தைய உற்பத்தி முறையிலேயே சாதி கருக் கொண்டிருந்தாலும் அவை திடமாக நிலபிரபுத்துவத்தில்தான் உருக் கொண்டது.

சாதியம் என்பது மக்கள் தோன்றிய காலம் தொட்டே இருந்த ஒன்று அல்ல. இவை தனி உடைமை தேவையை ஒட்டி சொத்து சேர்க்கும் ஒரு கூட்டம் தோன்றிய பொழுது அடுதவர்களின் உழைப்பை சுரண்ட தேவையான பல வகை சுரண்டல் முறை உலகெங்கும் காண முடியும்அதில் இந்திய துணை கண்டத்தில் அந்த சுரண்டல் முறையின் ஒரு வடிவம் சாதியாக உருதிரண்டு நிலவுடைமை சமூகத்தில் அவை உருபெற்றது.

சாதி மற்றும் தீண்டாமைஎன்பதுஇந்துமதம் தனது அடிப்படையாகக் கொண்டுள்ளதுசாதிமுறை என்ற சமூக நிகழ்வுப்போக்கு பரம்பரைத் தொழில் பிரிவினை (Social Division of Labour) அடிப்படையில் தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறதுஆகையால் சாதி மற்றும் தீண்டாமையின் சமூகவேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி  முறையில் அடங்கியிருக்கிறதுசாதியும்தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமண முறைஉயர்வுதாழ்வு கற்பித்தல்படிநிலை முறைபரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவப் பண்பாடே காரணமாகும்.

இன்று இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச் செய்வதால் பழைமையை தூக்கிபிடித்துக் கொண்டே உலகமயமாக்கல் நலன் பேசும் இவர்கள் சுரண்டல் வடிவமான ஜாதி ஏற்ற தாழ்வை போக்கும் திட்டம் எதுவும் இன்மையால் அந்தமுறையை தொடர செய்கிறது..

தோழர்களேசாதிதீண்டாமை  நீடிப்பதற்கான காரணம் மிகத் தெளிவாக கோட்பாட்டு ரீதியில் நிறுவிவிடுவர் ஆனால் இந்த கொடூரமான நிலை இன்றும் ஏன் தொடர்கிறது என்றால் விளக்கும் நாமே மக்கள் மத்தியில் செயல்படாமல் உள்ளதனால் இந்த கொடுமை நிகழ்கிறது என்பேன்.

இதோ நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கீழே:-

1).இடைநிலைச்சாதிகளின் அதிகாரத்துக்கு முட்டுக்கொடுக்கும்கட்சிகள்தொடர்ந்து 60 ஆண்டுகளாக பதவியில் இருப்பதுதான்.

2). சாதி சமூகத்திற்கும்அதனில் ஆதிக்கம் செலுத்தி வந்த சாதிகளுக்கும் தங்கள் கொண்டிருந்த அதிகாரம் கேள்விக்குள்ளாகி வருகின்றன

3). இதனை தாங்கி கொள்ள முடியாத சாதியவாதிகள் வெறியுணர்வோடு செயல்படுகின்றனர்.

4). RSS பிஜேபி சக்திகளின் கிராமப்புற அரசியல் கட்டமைப்பும் வெறுப்பு பிரச்சாரமும், சாதிய கலகமும்,,நமது அரசியல் கட்டமைப்பு தோல்வியும்தான் காரணம்.

5). பாரதிய ஜனதா கட்சியின் பங்களிப்பு மற்றும் நாம் தமிழர் கட்சியின் சாதி பெருமைஇவையெல்லாம்கிராமத்துக்குள் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது

6). போகவேண்டிய பாதையை விட்டு அடையாள அரசியலுக்குள் சமூகத்தை கரைப்பதே.

தோழர்கள் கூறியுள்ள எல்லாம் சரியானவைதான் இருந்தும் அந்த முரண்பட்டுள்ள சூழலை நாம் அணுகி அதற்க்கு தீர்வு தேட வேண்டாமா?

வெட்டிவிவாதத்தில் வீரர்களாக உள்ள பலரும் உண்மையான உழைக்கும் மக்களுக்கிடையிலேன பிரச்சினையை அணுகி புரிந்து செயல்படுவதில்லையே..

அதே நேரத்தில் புரட்சிகர இயக்கங்கள் மக்கள் மத்தியில் இயங்காமையும் ஒரு காரணம் என்பதனை அவர்களுக்கும் தெரியாதவை அல்ல.

சாதி சாயம் பூசி உழைக்கும் மக்களை கூறுபோட்டுஅவர்களின் பிரச்சினைகளை நீர்த்து போக செய்வதுதான் இந்த ஆளும் வர்க்கத்தின் நோக்கம். அதில் வெற்றியும் கண்டுள்ளது. மக்களை மத சாதிய பிரிவினை மூலம் அதனை சாதித்துக் கொண்டும் உள்ளது. அதனை முறியடிக்க முயலுவோர் முதலில் மக்களை படியுங்கள் என்பேன்....

மக்களின்அடிப்படையானபிரச்சினையான கல்விவேலைவாய்ப்புவாழ்க்கையை உத்திரவாதபடுத்தும்உரிமை பிரச்சினையை பற்றி பேசி களத்தில் இறங்கி அவர்களை ஒன்றினைத்து போராடாமல் அவர்களை கைவிட்டுவிட்டுஆளும் வர்க்கம் செயலாற்றும்ஒவ்வொருசெயலுக்கும்  வால் பிடித்துக் கொண்டுள்ளவை சமூக மாற்றதிற்கான வழியில்லையே?.

இங்கேகம்யூனிஸ்ட்என்பவர்களும் பாராளுமன்றதிற்குள்ளே செயல் பட்டிருக்கும் முதலாளித்துவ கட்சிகளாக மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அவர்களும் ஓட்டரசியல் செய்ய தொடங்கிவிட்டனர் வர்க்க அரசியலை கைவிட்டு என்று எண்ண தோன்றுகிறது.

பாராளுமன்ற பாதையில் பயணிக்கும் CPI,CPM,CPI(ML) கனுசன்யால் CPI(ML)லிபரேசன் CPI(ML)ரெட்ஸ்டார் மற்றும் தி.மு.காவின் B -Team மாகசெயல்படும் பல்வேறு மா-லெ பேசும் இயக்கங்கள் இதில் இல்லாத சிலரும் இன்றைய ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு பயந்து தனது அமைப்புகளை பாதுகாப்பாக வைத்துக் கொண்டே மக்கள் மத்தியில் களமாடுகின்றனர்அதனால் ஆளும் வர்க்கம் மக்களுகான வாழ்வியல் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் மூட நம்பிக்கையையும் பிற்போக்கு கலாச்சாரங்களையும் மக்கள் மத்தியில் விதைகிறதுமக்களும் அந்த சிந்தனைக்குஅடிமையாகின்றனர்நிலத்திலிருந்து விடுபடாத கிராம விவசாய மக்கள் தங்களின் இந்நிலைக்கு காரணம் நம்மை ஆள்பவர்களின் சூழ்ச்சி என்று அறியாமல்அவர்கள்விரிதுள்ள விசவலையில் சிக்கியுள்ளனர்உழைக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்சினை முன் வந்துவிட கூடாது என்பதற்கு அவர்களிடையே சாதி பிரச்சினையை தூண்டி விடுவது அதை மிகத் தெளிவாக அந்தந்த ஜாதி கட்சி செய்கிறது என்றால் அதே வேலையை இந்த இடதுசாரி இயக்கங்களும் தெளிவின்றி வால்பிடித்து கொண்டுள்ளது.

கோயில் குடமுழுக்கு மற்றும் செப்பனிட  கோடிக் கோடியாக கொட்டிக் கொடுக்கும் ஆட்சியாளர்கள் மக்கள் வளர்ச்சிபணிக்கென்னவோ நிதியளிப் பதில்லை. வேலையின்றி படித்த கூட்டம் எங்கெங்கும் அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டிய பல்வேறு தொழிற்சாலைகள்மூடிக்கிடக்கிறது அதனை ஏன் ஆட்சியாளர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிபதில்லை?. இன்றைய உலகமய மாக்கலில் பள்ளிகள் தனியார்மயம்; மருத்துவம் தனியார் மயம் ஆனால் கோயில் மட்டும் நிதி ஒதுக்கும் இவர்கள் அந்த மக்களின் வாழ்வியல் பிரச்சினையை தீர்க்க முயலுவதே யில்லை!  இங்கேதான் ஒழிந்துள்ளது இந்த ஏற்ற தாழ்வான சமூகத்தை கட்டிக் காக்கும் தந்திரம்.

கிராமபுறங்களில் ஏற்படும் பூசல்களுக்கு முக்கிய காரணமே மக்கள் வேலையின்றி தவிப்பதுதான் அதற்கு வழிவகை செய்ய வக்கற்ற அரசு ஜாதி கட்சிகளை கையாள்கிறது மக்கள் வயிற்று பிரச்சினையை தீர்க்க வக்கற்ற இவர்கள், ஜாதி பிரச்சினையை முன்னுக்கு கொண்டுவந்து அதை சமூக பிரச்சினையாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சினையாக்கி அந்த மக்களை இந்த சுழலுகுள் சிக்க வைக்கும் தந்திரமே.               

அதில் எல்லா ஜாதி கட்சிகளும் தனக்கு அளித்துள்ளவேலையை கச்சிதமாக செய்து முடிக்கிறதுதன் ஜாதி மக்களின் பிரசினைக்கு காரணம் அந்த ஜாதி மக்கள்தான் என்று திசைதிருப்பி விடுகிறது, அதற்கான கதை களத்தை அமைத்துஉழைக்கும்மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை ஜரூரா செய்கிறனர். மேலும் ஜாதி கட்சி தலைவர்கள் ஏதோ தேவதூதர்கள் போல் வலம் வருகின்றனர் என்றால் ஆங்காங்கே குட்டி தாதாகள் ஊர் மட்டத்தில் எல்லா கட்டை பஞ்சாயித்து வேலைகளையும் ஜாதிக்காக செய்கின்றனர் பின் இந்தஒட்டுண்ணி கூட்டம் அந்த மக்களின் இரத்தத்தை உறிஞ்சவும் செய்கிறது. 

ஜாதியம் என்பது அடிப்படையில் மக்களை பிளவுப் படுத்தி ஒடுக்கும் செயற்பாடுகளுக்கான ஒரு கருத்தியல்.  அதேவேளை பிளவுண்ட குழுக்கள் வேற்றுமைக் கூறுகளைப் பேணியபடி ஒரே சமூக அமைப்பாகச் சேர்ந்து இயங்க வகை செய்வதும் அந்தக் கருத்தியலுக்கான அடிப்படைப் பண்பாகும்.

பிளவுபடுத்தலை முறியடித்து அனைத்து மக்களையும் ஒன்று படுத்துவது சாதியத்தை தவிர்ப்பதன்  முன் நிபந்தனையும் முடிவான இலட்சியம் ஆகும்.  சாதிய உணர்வுகளை விட்டொழிந்து புத்துலகம் படைக்கும் உணர்வுடன் அனைத்து ஜாதியினரும் ஒன்றுபட்டு போராடுவது சாத்தியமானதாசாதியை பேணும் சாதிக்கு எதிராக போராட வேண்டும் என்கிற வகையில் ஆதிக்க சாதி எதுவாயினும்  எதிரி நிலைக்குரியதாக இருக்குமல்லவா?  அத்தகைய ஆதிக்க ஜாதிக்கு எதிராக தானே ஏனைய ஜாதிகளை ஐய்கியப்படுத்தி  போராட முடியும்!!! .

இந்த போராட்டம் ஜாதிக்கு எதிரானதா அல்லது ஒடுகப்பட்ட வர்க்க ஒற்றுமைகானதாஎனும் பொழுது சாதித் தகர்பில்புரிந்து களமாட வேண்டியதுஅதிகார வர்க்கமாக பல்வேறு ஜாதிகளிலிருந்து பிரதிநிதிகள் இருப்பது போல ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களும் அனைத்து ஜாதிகளும் உள்ளனர்அதிகாரத்துவ சமூக அமைப்பு பேணும் ஜாதியத்தை தகர்க்கும் பொருட்டு வர்க்க அடிப்படையிலான பல்வேறு அரசியல் காரணிகள் ஒடுக்கு முறைக்கு ஆட்படுகிற அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த மக்களை ஓரணியில் ஒன்றிணைத்து போராட வேண்டியுள்ளது இதனை மனதில் கொள்ள வேண்டிய விசயம். 

ஆக ஜாதியின் தோற்றம் எப்படி அதன் சமூக தேவைக்காக உருவாக்கப் பட்டதோ அந்த உற்பத்தி முறையை மாற்றி அமைக்கவும் புதிய சமூக உறவுகளிலிருந்து இந்த கேடான தீண்டாமையையும் ஜாதி ஒடுக்கு முறைக்கான எல்லா காரணிகளையும் ஒழிப்பதே தீர்வாகும் சிந்திப்போமா?. தொடரும்…. சிபி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்