மார்க்சியவாதிகளுகிடையிலே -யான பணி-6
புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தேவையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுருக்கமான வரலாறு…..
என்ற நூலிற்கு எழுதப்பட்ட பகுதியிலிருந்து சில பகுதி விவாததிற்காக பகிர்கிறேன் தங்களின் மேலான கருத்துகளை அவசியம் பதிவு செய்யும் படி அழைக்கின்றோம் இலக்கு ஆசிரியர் குழு சார்பாக….
திரிப்புவாதிகள் பல்வேறு போராட்ட வடிவங்கள் குறித்து பேசினாலும் உண்மையில் அவர்கள் போராட்ட வடிவத்தை மாற்றுவது என்ற பெயரில் சட்டவாதத்தில் ஊன்றி நின்று பாட்டாளிவர்க்கபுரட்சியின் குறிக்கோளையே கைவிட்டுவிடுகிறார்கள் இன்று லெனினியதிற்கு பதிலாக காவுட்ஸ்கியத்தை பின்பற்றுவது தான் இது காட்டுகிறது.
திருத்தல்வாதிகள் லெனினுடைய "இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு" எனும் மாபெரும் படைப்பினை தங்களின் தவறான பாதையை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தி மார்க்சிய-லெனினியத்தை குறுக்கி பயன்படுத்தி வருகின்றனர்.
உண்மையில் "இடதுசாரிகம்யூனிசம் இளம் பருவ கோளாறு" என்ற நூலில் சர்வதேச பாட்டாளிவர்க்க இயக்கத்தின் முதன்மையான எதிரி அந்த சமயத்தில் காவுட்ஸ்கியவகைப்பட்ட சந்தர்ப்ப வாதம் என்பதை குறிப்பிட்டு இருந்தார் லெனின். மேலும் அவர் திருத்தல்வாதத்திலிருந்துமுழுமையாக முறியடித்துக் கொள்ளாதவரை புரட்சிகரப் போர் தந்திரங்கள் தேர்ச்சி பெறுவது எப்படி என்று பேச்சுக்கே இடம் இருக்க முடியாது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.
லெனின் தனது விமர்சனத்தை சரியாகவே சுட்டிக்காட்டியபடி காவுட்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் முதலாளித்துவ சட்டவாதத்தால் இழிவுக்கும் அவமதிப்பும் உள்ளாக்கப் பட்டார்கள் தற்போதைய போலீஸ் சட்டத்தினால் அங்கீகரிக் கப்பட்ட நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மொந்தை கூழுக்கு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிசெய்யும்உரிமை விற்கப்பட்டு விட்டது (லெனின் இரண்டாம் அகிலத்தின் தகர்வு தொகுதி 18 பக்கம் 314).
இன்னொறு போக்கு ட்ராட்ஸ்கியம், பல்வேறுபிரச்சனைகளை பல்வேறுவித மாக வெளிப்படுகிறது ட்ராட்ஸ்கியம்; அது அடிக்கடி "தீவிர இடதுசாரி" முகமூடி அணிந்து கொள்கிறது; ஆனால் அதன் சாரம் புரட்சியை எதிர்ப்பதும்புரட்சியை மறுப்பதுமே யாகும்.
ஓடுகாலி காவுட்ஸ்கி பற்றி தனது விமர்சினத்தில் லெனின் கூறினார்" 1870 களில் மார்க்ஸ் இங்கிலாந்தில் அமெரிக்க போன்ற நாடுகளில் சோசலிசம் சமாதானம் மாற்றம் பற்றிய சாத்திபாட்டை ஏற்றுக் கொண்டார் என்ற குதர்க்க வாதமும் இன்னும்சொல்லப்போனால்பச்சையாக மேற்கோள்களையும் குறிப்புகளையும் வைத்துக் கொண்டு செப்புவித்தை காட்டுகிறஏமாற்றுப்பேர்வழிகளின் வேலையாகும், மார்க்ஸ் முதலாவதாக இந்த சாத்தியப்பாட்டை விதிவிலக்கு என்ற அளவில் தான் ஏற்றுக் கொண்டார்இரண்டாவதாகஅப்பொழுது ஏகபோக முதலாளித்துவம் அதாவது ஏகாதிபத்தியம் இருக்கவில்லை மூன்றாவதாக அப்போது இங்கிலாந்து அமெரிக்க போன்ற நாடுகளில் இன்று வளர்ந்துள்ளது போல முதலாளித்து அரசு இயந்திரம் முதன்மையான கருவியாக பணிபுரியக்கூடிய ராணுவம் இருக்க வில்லை" (லெனின் நூல் திரட்டு 23 பக்கம் 233).
தனது அடிப்படை பொருளாதாரக் குணாம்சங்களின் காரணமாக ஏகாதிபத்தியமானது சமாதானம் மற்றும் சுதந்திரத்தின் மீதான அதன்குறைவானபற்றுதலேனாலும் ராணுவ வல்லாட்ச்சி கொள்கையின் அனைத்தும் தெளிவு வளர்ச்சியின் மீதான அதன் அதிகபட்ச பற்றுதலினாலும் பிரித்தாளப்படுகிறது என்று லெனின் கூறினார். சமாதான முறை மாற்றமும் அல்லது பலாத்கார முறை மாற்றம் என்ற கேள்வி பற்றிய விவாதத்தில் இதை கவனிக்க தவறுவது என்பது முதலாளித் துவத்தின் ஒரு சாதாரண அல்லது தோட்டக்காரனைபோன்றுஅடிவருடியின் நிலைக்குத் தாழ்ந்து விடுவதாகும்" (லெனின் நூல் திரட்டு 23 பக்கம் 357).
1917 அக்டோபரில் லெனின் போல்ஷ்விக்கட்சியின்தொழிலாளர்கள் படைவீரர்கள் ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கு தீர்மானகரமாக தலைமை தாங்கிஅரசுஅதிகாரத்தைகைப்பற்றினார்கள். சிலர் கூறுவதைப் போல் புரட்சியில் ரத்தம் சிந்தாமல் மாற்றம் அதாவது புரட்சி கிட்டத்தட்ட சமாதான முறையில் சாதிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள் அவர்களுடைய கூற்றுகள் யாவும் வரலாற்று உண்மைகளுக்கு மாறுபட்டவையாகும் உலகத்தின் முதல் சோசலிச அரசின் உருவாக்குவதற்காக ரத்தம் சிந்திய புரட்சிகர தியாகிகளுக்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.
உலக வரலாறு இதுவரை முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசம் சமாதான முறையில் மாற்றம்தானாகவே நடந்தேறியதாக எந்தமுன்மாதிரியும் உருவாக வில்லை என்பது வரலாற்று உண்மை…
முதலாளித்துவ பாராளுமன்றதின் பால் கடைபிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்து மார்க்சிய லெனினிய வாதிகளுக்கும் பிற சந்தர்ப்பவாதிகளுக்கும் மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் வந்திருக்கிறது முதலாளிகளின் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும் புரட்சிகர வலிமை சேகரித்துக் கொள்ளவும் உதவும் குறிப்பானசூழ்நிலைகளில் பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும். தேவைப்படும்போது இந்த சட்டப்பூர்வமான போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும். ஆனால் பாட்டாளி வர்க்க கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாற்றாக பாராளுமன்ற போராட்டத்தைகருதக்கூடாது, அல்லது சோசலிசத்திற்கான மாற்றாக பாராளுமன்றபாதைமூலம் சாதித்து விடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது. அதாவது எல்லா சமயங்களிலும் வெகுஜன போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்” லெனின் கூறினார் "புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி மக்களை விழிப்படையச்செய்யும் பொருட்டு முதலாளித்துவ பாராளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் தேர்தலின் போதும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு இடையில்நடக்கும் போராட்டங்களின் போதும் அவ்வாறு செய்ய முடியும் ஆனால் வர்க்கப் போராட்டத்தை பாராளுமன்ற போராட்டமாக குறுக்கிவிடுவது பாராளுமன்ற போராட்டத்தை உயர்ந்தபட்ச தீர்மானகரமான வடிவமாக்கி அனைத்துப் போராட்ட வடிவங்களையும்இதற்கு உட்பட்ட தாகவே ஆக்குவது உண்மையில் பாட்டாளிவர்க்கத்துக்கும் எதிராக முதலாளி வர்க்கதினத்தின் பக்கம் ஓடி விடுவதாகும்" (லெனின் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பக்கம் 36 ஆங்கில பதிப்பு மாஸ்கோ). பாராளுமன்றவாதத்தின் நிழலை பின்தொடர்ந்துசென்றதற்காகவும் அரசு அதிகாரத்தைகைப்பற்ற வேண்டிய புரட்சிகரகடமை கைவிட்டதற் காகவும் லெனின் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதிகளை கண்டித்தார். அவர்கள் பாட்டாளி வர்க்க கட்சியை ஒரு தேர்தல் கட்சியாக ஒரு பாராளுமன்ற கட்சியாக முதலாளிகளின் தொங்கு சதையாக முதலாளித்துவ சர்வாதிகாரத்தை காக்கும் ஒரு கருவியாகமாற்றி விட்டார்கள் பாராளுமன்ற பாதையை ஆதரிப்பதன் மூலம் இரண்டாம் அகிலத்தின் திரிபுவாதிகள் அடைந்த கதியே அவரை பின்பற்றுபவர்களும் அடைவார்கள் என்றார்.
ஆக தோழர்களே நாம் வாழும் சமூகத்தில் இரு வேறு வகைப்பட்ட சித்தாந்தங்களும் செயல்களும் உள்ளன அதில் ஏகாதிபத்திய முதலாளித்துவ போக்கானதும் பாட்டாளிவர்க்க சோசலிச கம்யூனிச போக்கானதும் இரு வேறு வகைபட்ட பாதைகளாக உள்ளன .
அக்டோபர் புரட்சியின் ஊடாக உலகிற்கு சோசலிசத்தின் நன்மைகள் கலங்கரை விளக்காக ரஷ்ய புரட்சி எடுத்துகாட்டியது. ரசிய புரட்சியை அடிவொற்றி உலகில் உள்ள பல்வேறு மார்க்சிய லெனினிய புரட்சியாளர்கள் தமது நாட்டில் புரட்சி நடத்தினார்கள்.
அதாவது சீனாவிலிருந்து கியூபா வரை எல்லா நாடுகளிலும் நடைபெற்ற புரட்சிகள் விதிவிலக்கின்றி ஆயுதம் தாங்கி போராட்டத்தின் மூலமே ஏகாதிபத்திய எதிர்ப்பு ராணுவ ஆக்கிரமிப்புக்கும் தலையிட்டுக்கும் எதிராக போராடியதன் மூலமாக வெற்றி அடைந்திருக்கின்றன ( மாபெரும் விவாதம் நூல் பக்கம் 695 புதுமை பதிப்பகம் வெளியீடு).சீன மக்கள் மூன்று வருட மக்கள் விடுதலை யுத்தம் உட்பட 22 வருடங்கள் புரட்சிகளை யுத்தத்தை நடத்திய பிறகு புரட்சியில் வெற்றி பெற்றனர். மக்கள் விடுதலை இயக்கத்தில் இறுதிவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு பெற்ற சீயாங்கே ஷேக் ஆதிக்க வாதிகளை அவர்கள் முழுமையாக ஆயுதம் தாங்கிய போரட்டத்தின் மூலமே தோற்கடித் தனர். கொரிய மக்களும் ஜப்பான் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆயுதப்படைக்கு எதிராக போராடி அதனைத் தோற்கடித்த பின்னரே புரட்சி உறுதியாக நிலை நிறுத்த முடிந்தது.
1945 ஆகஸ்டில் வியட்நாம் மக்கள் அரசியல் அதிகாரத்தை ஆயுதம் தாங்கி எழுச்சியின் மூலம் கைப்பற்றினர்.1953 ல் கியூபா மக்கள் ஆயுதம் தாங்கி எழுச்சியை தொடங்கினார்கள் கியூபாவில்அமெரிக்கஏகாதிபத்தியத்தின் பொம்மை ஆட்சியை அதன் ஆதரவாளர்களையும் தூக்கி எறிந்து புரட்சிகரமான ஆட்சி நிறுவினர்.
இவ்வாறாக இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பல நாடுகளில் ஆயுதப் போராட்டம் மூலமாக தான் சோசலிச நாடுகள் நிறுவப்பட்டன.
ஆக நமது படிப்பினைகளை சீர் செய்ய பாட்டாளி வர்க்க புரட்சி போர்களின் வெற்றியிலிருந்து நமக்கு கிடைப்பதை புரிந்து கொள்ளவே .
பாராளுமன்ற பாதைக்கு மறுப்பு:- இரண்டாம் அகிலத்தின் திருத்தல்வாதிகளால் விளம்பரப் படுத்தப்பட்ட பாராளுமன்றபாதை என்ற கருத்து லெனினால் முறியடிக்கப்பட்டது நீண்டகாலத்திற்கு முன்பே செல்லாக்காசாகி விட்டது. (மேற்கண்ட அதே நூல் பக்கம் 682).இன்று பாராளுமன்றத்தை தூக்கி நிறுத்துபவர்கள் குருசேவின் வாரிசுகளன்றி வேறல்ல.தொடரும்
++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment