சீர்திருத்தவாத இயக்கம்
புரட்சிகர இயக்கம்
இந்த இரண்டு அம்சங்களையும் ஓர் அரசியல் இயக்கம் எப்படி வெளிப்படுத்தி அவற்றை அடையும் என்பதை இயக்கத்தின் தன்மையை பொறுத்ததாகும்.அரசியல் இயக்கத்தின் தன்மை அதற்கு அடிப்படையாக உள்ள வர்க்கம் வர்க்கங்களின் தன்மையோடு தொடர்பு கொண்டதாகும்.
1). அரசியல் இயக்கம் என்பது ஏதேனும் சில வர்க்கங்களின் நலனுக்கானது.
2). அரசாங்க அதிகாரத்தில் ஏதேனும் ஒரு விதத்தில் தனக்குரிய பங்கிட்டு கோரக் கூடியது.
நவீன அரசியல இயக்கம் என்பது முதலாளித்துவ காலகட்டத்தில் தோன்றியது. மன்னராட்சி முறைக்கும் முடிவு கட்டி மக்களாட்சி என்று பாராளுமன்ற வகைபட்ட மக்கள் பங்கெடுக்கக்கூடிய சீர்திருத்தங்களை கொண்டு வரும் போக்கில் தோன்றியதாகும். இந்த முதலாளி அரசாங்கத்தின் மக்கள் நலன் - விரோத போக்குகளை அம்பலப்படுத்தி உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கோர் ஆட்சி அமைப்பது தான் நமது நோக்கமாகும்.
அப்படி என்னும் பொழுது இங்குள்ள அரசியல் இயக்கங்களை பற்றி நடைமுறையில் அதன் தன்மைகளைப் பற்றி இரண்டு பிரிவுகளாக உள்ளதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அவற்றில் ஒன்று சீர்திருத்தவாத இயக்கம் மற்றொன்று புரட்சிகர இயக்கம்.
சமூகத்தில் உள்ள நிலைமைகளை சீர்திருத்தங்களை மட்டுமே கொண்டு வர விரும்பும் இயக்கங்களை சீர்திருத்தவாத இயக்கங்கள் எனலாம். இங்குள்ள சீர்கேடுகளையும் சுண்டல் முறையும் ஒழிக்க இச்சமுகத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்து முன்னோக்கிய பாய்ச்ச லில் கொண்டுச் செல்லும் இயக்கங்களை புரட்சிகர இயக்கங்கள் என்று குறிப்பிடலாம்.
முதலாளித்துவத்தால் தொழிலாளி வர்க்கம் துன்பப்படுகிறதைவிட போதாக் குறையான முதலாளித்துவ வளர்ச்சியாலேதான் அதிகமாகத் துன்பப்படுகிறது. எனவே, மிகமிக விரிவான, சுதந்திரமான, விரைவான முதலாளித்துவ வளர்ச்சியிலே தொழிலாளி வர்க்கம் மிகமிக நிச்சயமாக அக்கறை கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தின் விரிவான, சுதந்திரமான, விரைவான வளர்ச்சியைத் தடங்கல் செய்யும் பழைய அமைப்பு முறையின் மிச்சசொச்சங்கள் அனைத்தையும் அகற்றிவிடுவது தொழிலாளி வர்க்கத்துக்கு முற்றிலும் அனுகூலமானதாகும். முதலாளித்துவப் புரட்சி என்பது பழங்காலத்தின் மீதமிச்சங்களை, பண்ணையடிமைகளைச் சொந்தமாக வைத்திருக்கும் அமைப்பு முறையின் (இதில் எதேச்சிகார முறை மட்டுமின்றி முடியரசு முறையும் அடங்கும்) மீதமிச்சங்களை மிகவும் உறுதியாக துடைத்தெறிந்துவிட்டு முதலாளித்துவத்தின் மிகவும் விரிவான, சுதந்திரமான, விரைவான வளர்ச்சிக்கு மிக முழுமையாக உத்தரவாதம் செய்கிற புரட்சியெழுச்சியாகும்.(லெனின் நூல் திரட்டு 1 பக்கம் 138)
முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கிப் போகும் அவசியமான மாற்றங்கள் மேலும் மெதுவாக, மேலும் படிப்படியாக, மேலும் எச்சரிக்கையாக நடப்பது, குறைந்த உறுதியுடன் நடப்பது, புரட்சி வழியில்லாமல் சீர்திருத்தங்களின் வழியே நடப்பது முதலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது. பண்ணையடிமை முறையின் "நன்மதிப்புக்குரிய" நிறுவனங்களை (முடியரசு போன்றவற்றை) இந்த மாற்றங்கள் முடிந்தவரை அப்படியே விட்டுவைப்பது., இந்த மாற்றங்கள் சாதாரண மக்களின் -- அதாவது விவசாயிகளின், குறிப்பாகத் தொழிலாளிகளின் -- சுதந்திரமான புரட்சிகரமான நடவடிக்கையும் முன்முயற்சியையும் ஆற்றலையும் முடிந்தவரை குறைவாக வளர்க்கிறவையாக இருப்பது முதலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது. காரணம் பிரெஞ்சுக்காரர்கள் சொல்கிற மாதிரி "துப்பாக்கியை ஒரு தோளிலிருந்து மற்றொரு தோளுக்கு மாற்றுவது" தொழிலாளிகளுக்கு மேலும் சுளுவாயிருக்கும் -- அதாவது, அவர்களுக்கு முதலாளித்துவப் புரட்சி கொடுக்கும் ஆயுதங்களையும் புரட்சி கொண்டுவந்து தரும் சுதந்திரத்தையும் பண்ணையடிமை முறையை ஒழித்துச் சுத்தப்படுத்திய களத்தில் தோன்றுகிற ஜனநாயக நிறுவனங்களையும் முதலாளி வர்க்கத்துக்கு எதிராகத் தொழிலாளிகள் திரும்புவது மேலும் சுளுவாயிருக்கும்.
முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கிச் செல்லும் அவசியமான மாற்றங்கள் சீர்திருத்தங்கள் வழியேயல்லாமல் புரட்சி வழியே நிகழ்வது தொழிலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது ஆகும். ஏனெனில் சீர்திருத்தவாதத்தின் வழி தாமதப்படுத்தும் வழி, தள்ளிப்போடும் வழி, நாட்டின் உடம்பிலுள்ள அழுகிப்போன பகுதிகள் வேதனைமிக்க நிதானத்துடன் இற்றுச்சிதையும் வழியாகும். . பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளுந்தான் அந்த அழுகளினால் முதன்மையாகவும் மிகுதியாகவும் துன்பப்படுகிறார்கள்.புரட்சி வழி விரைவாக வெட்டியகற்றும் வழி,பாட்டாளி வர்க்கத்துக்கு மிகவும் குறைந்த வலி கொடுக்கும் வழி,அழுகிவிட்டதை உடனடியாக அகற்றும் வழி,முடியரசிடமும் அதைச் சேர்ந்த வெறுக்கத்தக்க,இழிந்த,அழுகலான,நாற்றமெடுக்கும் நிறுவனங்களிடமும் மிகக் குறைவான இணக்கும் எச்சரிக்கையும் காட்டும் வழியாகும்.
எனவே,நம் நாட்டு முதலாளித்துவ மிதவாதப் பத்திரிக்கைகள் புரட்சிப் பாதையின் சாத்தியப்பாடு குறித்து வருத்தம் தெரிவிப்பதும் புரட்சிக்கு அஞ்சுவதும் புரட்சி பூச்சாண்டி காட்டி ஜார் மன்னனை பயமுறுத்த முயல்வதும் புரட்சியை தவிர்க்க முயல்வதும் சீர்திருத்த வழிக்கு அடிப்படை என்கிற முறையிலே அற்ப சீர்திருத்தங்களுக்காக முண்டியிடுவதும் கெஞ்சிக் குழைவதும் இவற்றிற்கெல்லாம் காரணம் பத்திரிக்கை தணிக்கை முறையும் "யூதர்களுக்குரிய அச்சமும்" மட்டுமல்ல. ரூஸ்கியே வேதமஸ்தீ, ஸீன் ஒத்ச்செஸ்துவா, நாஷா ஷீஸ்ன், நாஷீ தினீ24 எனும் பத்திரிக்கைகள் மட்டுமல்லாமல் சட்டவிரோதமான சுதந்திரமான ஒஸ்வபஷ்தேனியே பத்திரிக்கையுங்கூட இந்த நிலை எடுத்துக் கொண்டுள்ளன. முதலாளித்துவ சமுதாயத்தில் ஒரு வர்க்கம் என்கிற வகையில் முதலாளி வர்க்கம் வகிக்கும் நிலையின் காரணமாக அது தவிர்க்க முடியாதபடி ஜனநாயகப் புரட்சியில் முரணான நிலை வகிப்பதில் கொண்டுபோய்விடுகிறது. ஒரு வர்க்கம் என்கிற முறையில் பாட்டாளி வர்க்கம் வகிக்கும் நிலையின் காரணமாக அது முரணற்ற ஜனநாயகப் போக்கை பின்பற்றும்படி கட்டாயப்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தின் முன்னேற்றம் பாட்டாளி வர்க்கத்தைப் பலப்படுத்தும் அபாயத்தைக் கண்டு முதலாளி வர்க்கம் திரும்பிப் பின்னோக்குகிறது. இழப்பதற்குத் தன்னுடைய விலங்குகளைத் தவிர பாட்டாளி வர்க்கத்திடம் வேறொன்றும் இல்லை, ஆனால் ஜனநாயகத்தின் துணை கொண்டு வெல்வதற்கு உலகு முழுவதும் இருக்கிறது25. எனவேதான் ஜனநாயக மாற்றங்களைச் சாதிப்பதில் முதலாளித்துவப் புரட்சி எவ்வளவுக்கெவ்வளவு முரணின்றி இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு முதலாளி வர்க்கத்துக்கு மட்டும் அனுகூலமானவையாக இருக்கிறவைகளுடன் நிறுத்திக்கொள்வதும் குறையும். முதலாளித்துவப் புரட்சி எவ்வளவுக்கெவ்வளவு முரணின்றி இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு முதலாளித்துவப் புரட்சியால் கிடைக்கும் ஆதாயங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்கும் விவசாயிகளுக்கும் உத்தரவாதம் செய்யும்.முதலாளித்துவப் புரட்சியிலிருந்து பாட்டாளி வர்க்கம் விலகி நிற்கக் கூடாது,அதன்பால் அசிரத்தையாக இருக்கக்கூடாது,புரட்சித் தலைமையை முதலாளி வர்க்கம் எடுத்துக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது,அதற்கு மாறாகப் புரட்சியைச் சாதித்து முடிவுக்கு கொண்டுவருவதற்கு அதில் தனே சக்திமிக்க பங்காற்ற வேண்டும்,முரணற்ற பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கு மிகுந்த உறுதியுடன் போராட வேண்டும் என்று பாட்டாளி வர்க்கத்துக்கு மார்க்சியம் போதிக்கிறது. (லெனின் நூல் திரட்டு 1 பக்கம் 140-41)
காங்கிரஸ் இயக்கம் தோன்றியதும் அதனுடைய தேவையும்.
1).ஜமீன்தாரி முறையை ஒழிக்க கூடாது.
2).பருத்தி பயிரிடும் நிலத்தைப் பெருக்க வேண்டும்.
3). இறக்குமதியாகும் பஞ்சின் தீர்வையை குறைக்க வேண்டும்.
4). மூலதன இறக்குமதி தேவை.
5).ஆலைகளுக்கு வரி போடக்கூடாது.
இவை போன்ற தேவைகளை பிரிட்டிஷ் அரசிடம் வலியுறுத்திய இவர்கள் ஜமீதார்கள் ஆலை முதலாளிகள் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் இவர்களை உள்ளடக்கியதுதான் காங்கிரஸ் அமைப்பு.
காங்கிரஸ் இயக்கமும் திராவிட இயக்கமும் சமூகப் பொருளியல் நிலைமைகளில் முழு முற்றான மாற்றங்களை கோரவில்லை. அவற்றின் தொடக்க காலம் தொற்று இன்று வரை அவர்களின் நோக்கம் சமூகம் மாற்றம் அல்ல அன்று பதவியில் இடஒதுக்கீடு கேட்டார்கள் இன்று ஏகாதிபத்திய தேவைகளை அறிந்து சேவை செய்து கொண்டு உள்ளார்கள். அதேபோல பிராமணர் அல்லாதோர்க்கு பதவிகளில் இட ஒதுக்கீடு செய் என்ற காலம் முதல் இன்றைய மாநிலத்தில் சுய ஆட்சி மத்தியில் கூட்டாட்சி காலம் வரை திராவிட இயக்கத்தின் இலக்குகளையும் நடைமுறைகளையும் கண்டால் அதன் நோக்கம் சமூகத்தை முற்றிலும் மாற்றி அமைப்பது அன்று எனத் தெரியவரும்.
பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்தின் அடிப்படையில் அன்றைய ஏகாதிபத்திய தேவைகளை அறிந்து செயல்படுத்த அவர்கள் அமைப்பாக்கியதுதான் இவர்கள். இவர்களுக்கிடையில் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை என்பது அமைப்பு முறையை கட்டிக் காத்துக் கொண்டு மாற்றாமல் இருப்பது தான். இந்த அமைப்பு முறை தகர்ந்து விடாமலும் அசைந்து கொடுக்காமல் இருக்க ஆயிரக்கணக்கான சீர்திருத்தங்களை அரசாங்க வடிவிலும் பொருளாதாரத் துறையிலும் சமூகத் துறையிலும் கொண்டு வருவதில் இவர்களுக்கிடையே பல வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் இவர்கள் அமைப்பு ரீதியாக ஒன்றுபட்டு நாட்டைகட்டிக் காப்பதில் எப்பொழுதும் ஒரே நேர்கோட்டில் நின்றார்கள். 1861 இல் இந்திய ஆட்சி மன்றங்கள் சட்டம் (The Indian Council Act of 1861) இயற்றப்பட்டது ராணுவ மைய அரசாங்க வடிவம் நீக்கப்பட்டு சட்டங்களின் படி ஆட்சி கொண்டுவரப்பட்டது. ஒரே நிர்வாக முறை, ஒரே காவல் முறை, ஒரே நீதி முறை, ஒரே கல்வி முறை என்பன போன்ற அரசின் உறுப்புகள் ஒருமுகப்படுத்தப்பட்டன (Indian constitutional history).
அதிகாரங்களை இந்தியர் மயமாக்குவது என்ற கருத்தின் அடிப்படையில் கல்வி வாய்ப்புகள் பரவலாக்கப்பட்டன. 1891 ஆம் ஆண்டு சென்னை மாகாண மக்கள் தொகை கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. இந்து சமயத்தில் பார்ப்பனர், பார்ப்பன அல்லாதோ தாழ்த்தப்பட்டோர்(Depressed) என்று மூன்று பெரும் பிரிவாக கணக்கெடுப்பு குறிக்கிறது. 1903-ல் 45 ஜாதிகளும் 1923 ல் 245 ஜாதிகளும் இதில் சலுகைகள் பெற்றன.பல ஜாதிகளுக்கு அரை சம்பள கட்டணம் சலுகை தரப்பட்டது அரசு பதவிகளிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வந்தது. பொதுவாக வேலை வாய்ப்புக்கும் ஆட்சி நிர்வாகத்திற்கும் ஆங்கில படிப்பு அத்தியாவசியமானதாக இருந்தது. ஆங்கில கல்வியில் பார்ப்பனர்களை அடுத்து பலிஜா நாயுடுகளும் வேளாளர்களும் அடுத்த நிலையில் இருந்தனர். பொதுக் கல்வியில் ஆர்வம் காட்டிய செட்டியார்களும் நாடார்களும் ஆங்கில கல்விக்கு குறைவாக ஆர்வம் காட்டி அரசு பதிவுகளை விட வணிகத்திலும் தொழிலிலும் அவர்கள் ஈடுபாடு தெரிவித்தனர். வேளாளர்கள் பெரிதும் நிலவுடுமையாளர்கள் என்பதும் குறிப்பாக நீர்ப்பாசன வசதிக்கு பகுதிகளில் உள்ள நில உரிமையாளர் என்பதும் பலியா நாயுடுகள் வணிகத்தில் சிறந்து விளங்கினர் இவற்றை நாம் கருத்தில் கொள்வது அவசியம்.
இந்த காலத்தில் இட ஒதுக்கீடுகளுக்கு பல அரசு ஆணைகள் வெளியிடப்பட்டன என்ன பிரிவினருக்கு இவ்வளவு இட ஒதுக்கீடு என்று ஒதுக்கப்பட்டன. இதனால் அரசு பதவிகளில் பார்ப்பனர் அல்லதோர் சதவீதம் அதிகமானது.
இவ்வாறாக அரசு பதவிகளிலும் மாகாண சட்டமன்ற உறுப்பினர் பதவிகளிலும் பிரிட்டிஷ் அரசின் உறுப்புகளான இந்த பொறுப்புகளில் முன்னர் பார்ப்பனர்கள் மேலாதிக்கும் செய்தது போலவே பின்னர் பல்வேறு பார்ப்பனர் அல்லாத ஜாதியினர் மேலாதிக்கத்திற்கு வந்தனர் இதனால் அவர்களுக்கு இடையிலே தமக்கான பங்கு சண்டை ஏற்படுகிறது.பிரிட்டிஷ் அரசின் சீர்திருத்தங்களால் பெரும் பகுதியான நிலவுடமை சார்ந்த உற்பத்தி முறையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை அதாவது நதியோரங்களிலும் நீர் பாசன வசதிகளும் உள்ள பகுதிகளில். அங்கே நீண்ட காலமாக பிராமணர்களுக்கும் வேளாளர்களுக்கும் இடையில் உள் மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
பிராமணர்களுக்குரிய பொருளியல் தகுதியை காணும் பொழுது நம்மால் வியக்காமல் இருக்க முடிவதில்லை பிராமணர்களை வெறும் புரோகிதர்களாகவும் பூஜாரிகளாகவும் புராண உபதேசர்களாகவும் மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். ஆற்றங்கரை பகுதியில் உள்ள பிராமணர் நிலமுடமையாளர்களாக இருந்தனர் என அறிவோம். இங்கே பார்ப்பனர்களின் பண்பாட்டு பொருளாதார ஆதிக்கம் இருந்தது. பெரும் நிலப்பிரப்புத்துவ உபரியில் இருந்து பிராமண மூலதனம் தோன்றியது.
வட்டி தொழில் ஈடுபட பிராமணர் முனைந்தனர். பிராமணர் மூலதனம் வர்த்தகத் தொழிலும் ஐரோப்பிய நிறுவனங்கட்குத் துணையாய் நின்றது. மற்றொருபுறம் ஆங்கில கல்வி பயின்று அதிகாரத்தை நோக்கி நகர்ந்தனர்.
இந்திய பொதுவுடமை இயக்கமும் சீர்திருத்தவாதம் பற்றி புரட்சியில் தடம் மாறிய பகுதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் முதலே காங்கிரஸின் இடதுசாரி பிரிவாக செயல்படும் போக்கே பொதுவுடமை இயக்கத்தின் பிரதானமாக இருந்தது.எனினும் இதனை மூன்றாம் அகிலம் ஆதரித்தது ஒரு வித எச்சரிக்கையுடன்.முதலாளிய தேசியவாதத்துடன் இணைந்து செயல்படும் பொழுது பொதுவுடமை ஆளர்கள் தனது தனித்தன்மையை நிலை நிறுத்தி ஆக வேண்டும் என்று எச்சரிக்கையை அளித்திருந்தது ஆனால் இவர்கள் அந்த எச்சரிக்கையை புறக்கணித்தே வந்தனர்.
இப்பொழுது வலதுசாரி சந்தர்ப்பவாத போக்காகவும் இடதுசாரி கட்சி முழுமையாக சட்டவாத இயக்கமாக மாற்றிவிட்டது.
எவ்வளவு வலிமையான பொதுவுடமை கட்சியாக இருப்பினும் அது தனித்து போராடி ஏகாதிபத்தியத்தை அழிக்க இயலாது. அதற்கு ஐக்கிய முன்னணி தேவை இவ்விடத்தில் லெனினியமௌ இன்றைக்கும் தேவைப்படுகிறது. முதலாளி சக்தி உடன் ஐக்கிய முன்னணி தேவைக்கான இரண்டு நிபந்தனைகளை லெனின் குறிப்பிட்டுள்ளார்.
1). முதலாளிய சக்தி புரட்சிகரமானதாக இருத்தல் வேண்டும்.
2). மக்களுக்கு புரட்சிகர உணர்வூட்டும் பொழுது முதலாளிகள் தடையாக இருக்கக் கூடாது.
ஆனால் இந்தியாவில் சீர்திருத்துவாத முதலாளியத்தின் தலைமையில் பொதுவுடமையாளர்கள் இணைந்து பணியாற்றினர்.
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் கூட்டு செயல்பாட்டின் வழியாக பிரதான எதிரியை எதிர்த்து தாக்குவதற்கு பதிலாக சீர்திருத்த முதலாளிகள் மற்றும் பாட்டாளி ஆகியோரின் கூட்டுக்கு திட்டமிட்டனர். இங்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை ஒன்றிணைப்பதில் தவறு இழைத்து ஒடுக்கும் வர்க்கத்தின் ஒரு பிரிவோடு இணைந்து செயல்பட்டது புரட்சியின் உந்து சக்தியை கணக்கில் எடுக்க தவறியதோடு லெனின் மதிப்பீடையும் அகிலத்தின் வழிகாட்டுதலையும் புறக்கணித்தது.
தேசிய விடுதலைப் போராட்டத்தில் கூட தன் தலைமையை ஏற்படுத்தவில்லை புரட்சிகரமான ஏகாதிபத்திய எதிர்ப்பு கூட்டணி ஒன்றை தொழிலாளர் மேலாதிக்கத்தின் கீழ் நிறுவ வேண்டும் என்று ஸ்டாலினுடைய (1925) வழிகாட்டுதலை புறக்கணிக்கப்பட்டது இந்த போக்கே சட்டவாதத்துக்குள் அமில செய்து, மக்கள் படையை குறித்த எந்த ஒரு புரிதலும் இல்லாமல் இருந்தது.
பொதுவுடமைக் கட்சிக்கும் சீர்திருத்தவாத முதலாளித்துவத்திற்கும் எவ்வித உறவும் இல்லை என்பது நமது புரிதலுக்கு.
தொடர்ந்து எழுதுவேன்....
No comments:
Post a Comment