பெரியாரின் பகுத்தறிவாதம் இயக்க மறுப்பியல்தன்மையிலானதே
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதனை பெரியாரின் நீண்ட பகுத்தறிவாத இயக்க நடைமுறையில் சில அறிந்துக் கொள்ள பயன்படுத்த நினைக்கிறேன். ஏனெனில் இயக்க மறுப்பியல் என்ன அவை என்ன செய்துக் கொண்டுள்ளது என்பதனை தெளிவடைய பயன்பெறும் என்ற நோக்கில் இதனை பேசுகிறேன். இங்கே பெரியாரின் அரசியலை அல்ல தத்துவத்தை மட்டுமே பேசுகிறேன். என் கருத்தில் முரண்படும் தோழர்கள் அதற்கான சான்றாவணங்களில் இருந்து தெளிவடைந்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.
பெரியாரின் தத்துவ விளக்கமானது மனித அமைப்பு பற்றி பேசும்போது அவர் உலகில் உள்ள பொருள்கள் எல்லாமே பல்வேறு பொருள்களின் கூட்டுப் பொருள் என்றும் அவை அனைத்தும் இயங்குவது இயங்காத ஜீவன் உள்ளது ஜீவன் இல்லாதது என பிரிக்க முடியும் என்றும் கூறுகிறார். இந்த பகுப்பாய்வு முறை மார்க்சிய தத்துவ ஞானம் இயற்கை விஞ்ஞானம் நிரூபித்து உண்மைகளுக்கு எதிரானதாகும் பதினெட்டாம் நூற்றாண்டின் இயந்திர வகைப்பட்ட பொருள்முதல்வாதம் அதாவது இயக்கம் மறுப்பியல் கண்ணோட்டத்திற்கு உட்பட்டது, இதையே நாம் கொச்சை பொருள்முதல்வாதம் இயக்க மறுப்பியல் என்கிறோம்.
பெரியார் மார்ஸ்க்கும் எங்கெல்சுக்கும் பிந்திய காலத்தைசேர்ந்தவர். அவர்காலத்தில் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இன்னும் பல படிகள் வளர்ந்த காலத்தை சேர்ந்தவர். என்றாலும் அவர் வளர்ந்த விஞ்ஞான கோட்பாடுகளையோ மார்க்சும் எங்கெல்சும் வகுத்த இயங்கியல் பொருள்முதல்வாத (வரலாற்று பொருள்முதல்வாத) விதிகளையோ அறிந்து கொள்ளவில்லை,அவரைப் பொறுத்தவரை சமுதாய வரலாற்றில் தத்துவஞான துறையில் ஏற்பட்ட வளர்ச்சியுடன்தன்னை இணைத்துக் கொள்ளாமல் பதினெட்டாம் நூற்றாண்டின்நிலையில் தன்னைப் பின் தள்ளி இருக்கச் செய்து கொண்டார். இதனால் அவருடைய தத்துவக் கண்ணோட்டம் முழுவதும் கொச்சை பொருள்முதல்வாத அடிப்படையில் அமைவது தவிர்க்கவே முடியாதவையே.
கடவுள் மத நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமானால் மனிதனாலேயே உருவாக்கப்பட்ட அந்த நம்பிக்கைகளை ஒழிப்பது சாத்தியமா?
இன்றையமதநம்பிக்கைமனிதனுக்கு அன்னியமாக நின்று மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது அதாற்க்கு ஆளும் வர்க்கம் துணைப்போகிறது அப்படியெனில் வெறும் கருத்தால் மதம் கடவுள் நம்பிக்கைகளை ஒழித்து விட முடியுமா?
முதலாளித்துவ உற்பத்தி முறை ஒழிக்கப்படவேண்டும் உற்பத்தி சாதனங்களில் தனியுடைமை ஒழித்து எல்லா உற்பத்தி சாதனங்களையும் சமுதாயமே தன் உடைமையாக்கிக் அவற்றை திட்டமிட்ட அடிப்படையில் உபயோகிப்பதன் மூலம் சமுதாயம் தன்னை தானே விடுவித்துக் கொள்ளும் போது அதாவது சமுதாயத்தோடு விடுதலை பெற முடியும். அப்போதுதான் மனிதன் வெறுமனே நினைப்பதோடு மட்டுமல்லாமல் நினைப்பதை அவனே முடிப்பதாக முடியும். அந்த காலத்தில்தான் மதத்தில் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்ற அந்நிய மயமான அந்த கடைசி சாத்தியம் அறிந்துகொள்வதுடன் மதத்தின் பிரதிபிம்பம் தானே மறைந்துவிடும் ஏனெனில் அதற்கு பிரதிபலிப்பு எதுவும் இருக்காது.
“ஆனால் இதை சாதிப்பதற்கு அதாவது சமுதாய சக்திகள் சமுதாயத்தின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது வெறும் அறிவு மட்டும் போதாது அதற்கு எல்லாவற்றையும் விட மிகவும் அவசியமான சமுதாய செயல்முறை தான்” என்று ஏங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.
அதாவது உற்பத்தி சாதனங்களில் தனியுடைமை ஒழித்து சமுதாய உடைமையாக்கிக் திட்டமிட்ட பொருள் உற்பத்தியின் கீழ் விடுதலை பெற்ற சமுதாயம் திட்டமிட்ட பொருள் உற்பத்தியில் விடுதலைப் பெற்ற சமுதாயத்தையும் சமுதாயத்தின் அங்கத்தவர்களையும் வழிநடத்துவதற்கு வெறும் அறிவு மட்டும் போதாது மாறாக தனியுடைமை சக்திகளுக்கு எதிரான போராட்டம் வர்க்கப் போராட்டம் என்ற சமுதாய செயல்முறை அவசியமாகும். முதலாளித்துவத்தை வர்க்கத்தை எதிர்த்து அதை தூக்கி எறிந்து முற்றாக ஒழித்துக் கட்டும் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தின் கீழ் மட்டுமே அதை சாதிக்க முடியும் இதுதான் அந்த சமுதாய செயல்முறையாகும்.
ஆனால்இங்கேபெரியாரின்நிலைசீர்திருத்தம்மட்டுமேஉண்மையில் வர்க்கப் போராட்டத்தை புறக்கணித்து விடுகிறார்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதம் பெரும்பாலும் இயந்திர வகைப்பட்டதாக இருந்தது ஏனென்றால் அப்பொழுது உயிரியல் ரசாயன விஞ்ஞானங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தது.இயந்திரவியல் அடிப்படையில் தத்துவஞானிகள் விளக்கம் அளித்தனர். இவை இயக்க மறுப்பியலை அடித்தளமாக கொண்டிருந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் பல துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது குறிப்பாக மூன்று முக்கியமான மகத்தான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன
1). உயிர்ச் செல் பற்றிய கண்டுபிடிப்பு, 2).சக்தி இடைவிடாது மாறிக் கொண்டே இருக்கிறது.
3). பரிணாம கோட்பாடு டார்வின் கண்டுபிடிப்பு, இவை இயந்திர வகைப்பட்ட பொருள் முதல்வாத குறைபாடுகளை களைந்து இயக்கவியல் பொருள்முதல்வாத கோட்பாடுகளை மார்க்சும் எங்கெல்சும் உருவாக்குவதற்கு இக் கண்டுபிடிப்புகள் இடமளித்தன.
பெரியாரின் தத்துவக் கண்ணோட்டம் இயந்திர வகைப்பட்ட பொருள்முதல்வாதம் என்று சொன்னோம் அவர் மனிதனின் உயிரியல் பண்பையும் சமூகவியல் பண்பையும் அறியாதவராக மனித உயிரின் இயக்கம் மனிதனின் குணாம்சம் மனிதனின் உணர்வு பேச்சு மற்றும் சிந்தனை பற்றி தத்துவ விளக்கம் அளிப்பது இதற்கு மேலும் சான்றாகும்.
மனிதன் பிறப்பில் இருந்து வேறுபடும் ஒரு உயிர் பிராணி அவன் பிற பொருள்களில் இருந்து வேறுபடும் ஒரு இயக்கம் வடிவத்தை உயிரியக்க வடிவத்தை கொண்டிருக்கிறான் உயிரில் இயக்கம் என்பது வளர்சிதை மாற்றம் கொண்டது இனப்பெருக்க சக்தி கொண்டது உறுத்துணர்ச்சியும்(Irritability) உலகின் மீது விளைவும் எதிர்வினையும் கொண்டது. இப்பண்புகள் எவையும் இயந்திர இயக்கத்தில் இல்லை, எனவே பெரியாரின் இயந்திர இயக்கத்தினோடு உயிருள்ள மனிதனை சமன்படுத்திய பண்பானது இயக்கியலை புரிந்துக் கொள்ளாத போக்கே ஆகும்.
பெரியார் கூறுகிறார் "உயிர் என்பது பொருள் தன்மையற்றது பொருள் தன்மையற்றது என்றால் இயங்கும் தன்மையுடையதாகும். இயங்கும் தன்மை உடையது என்றால் அதற்கு வேலை செய்து கொண்டிருக்கும் இயந்திரத்தை அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் தன்மை சொல்லலாம் .எது போல என்றால் ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போலவும் ஒரு எஞ்சின் ஓடிக் கொண்டிருப்பது போலவும் ஒரு எஞ்சின் இயங்கிக் கொண்டிருப்பது போலவும் அசைவின் காரணமாக அதனுடன் இணைக்கப்பட்ட பல இயந்திர சாதனங்கள் இயங்குவது போல இயங்கும் தன்மை உயிருக்கு இருப்பதாக...." ( பெரியாரின் தத்துவ விளக்கம் பக்கம் 35-38).
பெரியாரைப் பொருத்தவரை ஒரு இயந்திரம் பல்வேறு பாகங்களை உருவாக்கப்பட்டிருப்பது போல மனிதன் ஒரு சரீர கூட்டமைப்பு ஆகும் இயந்திரங்கள் மின்சாரம் அல்லது டீசல் மூலம் இயங்குவது போல மனிதனின் ஆகராதிகள் மூலம் இயங்குகின்றன அவ்வளவுதான் பெரியாரின் தத்துவ கண்ணோட்டத்தில் மனிதன் உயிரியல் இயக்க வடிவம் எவ்வித முக்கியத்துவம் பெறவில்லை .அது மட்டுமன்றி மனிதனின் சமூகவியல் இயக்கம் கூட பெரியாரின் தத்துவ கண்ணோட்டத்தில் எவ்வித முக்கியத்துவம் பெறுவதில்லை மனிதன் பிற பொருள்களில் இருந்து வேறுபட்ட ஒரு உயிரினம் என்பது மட்டுமல்ல பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்ட ஒரு சமூக பிரியாணியும் ஆவான் .அவன் ஒரு சமூக வாழ்க்கை வாழ்கிறான் அவனுடைய வாழ்க்கை உழைப்பு உற்பத்தி செய்யும் முறை உணர்வுபூர்வமான பாத்திரமாகி அவனுக்கே உரிய பண்புகள் ஆகும்.
அவனுடைய சமூக வாழ்க்கை பொருளாதார வாழ்க்கை கலாச்சார ஆன்மீக வாழ்க்கை என இரு பக்கங்களாக கொண்டிருக்கிறது. மனிதன் ஒரு உயிர் பிரியாணி என்ற முறையில் அவன் உயிரற்ற பிற பொருள்கள் இருந்து வேறுபட்ட முறையில் உயிரியக்க வடிவத்தை கொண்டிருப்பது போல அவன் ஒரு சமூக பிரியாணி என்ற முறையில் பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்ட முறையில் சமூகவியல் இயக்க வடிவத்தையும் கொண்டிருக்கிறான்.
பெரியார் கூறுகிறார், "இன்றைய தினம் மனித சமுதாயத்திற்கு ஒன்று கூடி வாழ்வதற்கு அரசனும் சட்டமும் தண்டனையும் இல்லாவிட்டால் பாதுகாப்புடனும் சாந்தியும் சமாதானமும் சிறிதாக இருக்க முடியுமா நாம் யாவரும் இந்த அளவுக்கு வாழ்வது அரசாங்கம் சட்டம் தண்டனை ஆகியவை பாதுகாப்பு நிலை மனித சமுதாய கூட்டு வாழ்க்கைக்கு இவை போதும் என்றாலும் ஒரு அளவுக்குதான் போதுமானதாகும்....( பெரியாரின் தத்துவம் நூல் பக்கம்..(17-19)
பகைவர்கங்கள் தத்தம் நலனுக்காக மோதிக் கொண்டதன் விளைவாக குறிப்பாக சுரண்டும் ஆதிக்க வர்க்கங்கள் எதிராக ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் மோதி இதன் விளைவாக சமுதாயம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது என்பதே வரலாறு. ஆண்டைகளின் நலனுக்கு எதிராக அடிமைகள் மோதி இதன் விளைவாக ஆண்டான் அடிமை சமுதாயம் வீழ்ந்தது அதனை விட உயர்வான நிலப்பிரபுத்துவ சமூகம் தோன்றியது நிலப்பிரபுக்களுக்கு எதிரான பண்ணை அடிமைகளின்போராட்டத்தால் நிலப்பரப்பு சமூகம் வீழ்ந்தது அதனிடத்தில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றியது.
முதலாளி வர்க்கத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் போராட்டம் இதன் விளைவாக முதலாளித்துவ சமுதாயம் வீழ்ந்து சோசலிச சமுதாயம் மலர்ந்தது, இங்கெல்லாம் நாம் காண்பது என்னே அடிமைகளும் பண்ணையடிமைகள் தொழிலாளி வர்க்கமும் போராடியதன் விளைவாக ஓர் உயர்வான சமூகம் மலர்ந்தது. இவை கேடு விளைவிப்பதாக இல்லை எனலாம்.
மனிதனை அச்சுறுத்தி நேர் பாதையில் செலுத்துவதற்காக கடவுளையும் மதத்தையும் சமுதாய நலனில் அக்கறை கொண்ட பெரியோர்கள் படைத்தார்கள் என்று கூறும் பெரியார் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கும் மதத்திற்கும் தீவிரமான எதிரியாக திகழ்ந்தார் ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பு கடவுள் மதம் தோன்றுவதற்கு நிலவும் காரணமாக இருக்கும் அடிப்படைகளுக்கு எதிராகத் இல்லை. ஏன் அதைப் புரிந்து கொண்டதாக கூட தெரியவில்லை.
கடவுளும் மதமும் சில பெரிய மனிதர்களால் படைக்கப்பட்டு பரப்பப்பட்டது என்று அதன் தோற்றம் வளர்ச்சி பற்றி பெரியார் கருதுகிறார் எனவே அதற்கு எதிரான பிரசாரங்கள் மூலமே கடவுளையும் மதத்தையும் ஒழித்துவிட முடியும் என அவர் நம்புகிறார் ஆனால் கடவுளும் மதமும் தோன்றுவதற்கும் அது நிலவுவதற்கான காரணம் அவ்வளவு எளிமையானது அல்ல.
"எல்லா மதங்களும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை கட்டுப்படுத்தும் புற சக்திகளைப் பற்றி அவர்களின் மனதில் ஏற்படும் வினோதமான பிரதிபிம்பமே மண்ணுலக சக்திகள் இயற்கை கடந்து சக்திகளின் வடிவத்தை ஏற்க்கும் ஒரு பிரதிபிம்பம்" என்று எங்கெல்ஸ் கூறினார்.
எனவே கடவுள் மத நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமானால் மனிதனாலேயே மதம் உருவாக்கப் பட்டது என்றாலும் மனிதனுக்கு அன்னியமாக நின்று மனிதன் மீது ஆதிக்கம் செலுத்திவரும் முதலாளித்துவ உற்பத்தி முறை ஒழிக்கப்படவேண்டும் உற்பத்தி சாதனங்களில் தனிஉடைமையை ஒழித்து எல்லா உற்பத்தி சாதனங்களையும் சமுதாயமே தன் உடைமையாக்கிக் அவற்றை திட்டமிட்ட அடிப்படையில் உபயோகத்தின் மூலம் சமுதாயம் தன்னை தானே விடுவித்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் சமுதாயத்தின் அங்கத்தினர்களும் சமுதாயத்தோடு விடுதலை பெறமுடியும் அப்போது தான் மனிதன் வெறுமனே நினைப்பதோடு மட்டுமல்லாமல் நினைப்பதை அவனை முடிக்க முடியும் அந்த காலத்தில்தான் மதம் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் என்ற கடைசி சக்தியும் மறைந்துவிடும்.
எனவே உண்மையிலேயே கடவுளையும் மதத்தையும் ஒழிக்க விரும்புபவர் ஒருவர் தனியுடமை ஒழித்து பொதுவுடமை சமூகத்தை படைப்பதையே நோக்கமாகக் கொண்டு முதலாளி வர்க்கத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை கட்டமைப்பதாக இருக்க வேண்டும்.
ஆனால் பெரியாரை பொருத்த வரையில் அவருடைய நிலை இதற்குத் தலைகீழானதாகும் அவர் பல சமயங்களில் தனியுடமை ஒழிப்பிலும் சம தர்மத்திலும் நம்பிக்கையும் ஆர்வம் தெரிவித்து இருக்கிறார் என்பது உண்மை என்றாலும் , புதிய சமுதாயத்திற்கான வர்க்கப் போராட்டத்தை கடவுள் மத ஒழிப்புக்கான முன்நிபந்தனையாக எங்கும் கருதவில்லை மாறாக கடவுள் மத ஒழிப்பைப் மட்டுமே போராட்டவடிவமாக கொள்வதன் மூலம் உண்மையில் வர்க்கப் போராட்டத்தை புறக்கணித்து விடுகிறார்.
இதனால்தான் பெரியாரின் பொருள்களைப் பற்றிய விளக்கம் “ஒவ்வொரு பொருளும் அவற்றின் உள் முரண்பாடுகளின் சுயமாக இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டு உயிரியல் பண்பை பெற்றிருப்பதைக் காணமுடிகிறது மனிதன் உழைப்பு உற்பத்தி செய்யும் முறை உணர்வுபூர்வமான பாத்திரம் மாற்றுவது ஆகியவற்றால் மற்ற உயிரினங்களை விட வளர்ந்தும் வேறுபட்டும் ஒரு சமூக வாழ்க்கை பெற்றிருப்பது” காண மறுக்கிறது.
இந்த இயக்க மறுப்பியல் சிந்தனை போக்கே பெரியாரை சாதியதை பார்ப்பனர்கள் படைத்தாகக் கருதிக் கொண்டு, அதன் தோற்திற்கான பொருளாதாரப் போக்கை முறியடிப்பதற்கு முயலாமல், தோன்றிய சாதியத்தைக் காப்பாற்றும் பார்ப்பனர்களை முதன்மைப்படுத்தி அவர்களை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் பணம் படைத்தவர்களின் சுரண்டலை நீடிக்கச் செய்கிறார், அதாவது காப்பாற்றுகிறார்.
இன்றைய வர்க்க முரணுக்குக் காரணமான தனிச்சொத்துடைமையை ஒழிக்க முயற்சிக்காமல், அந்தத் தனிவுடைமையைக் காப்பாற்றுகிற சிந்தனையை முதலில் ஒழிக்கப் பெரியார் முயற்சிக்கிறார். கம்யூனிசத்தை வந்தடைதல் என்பது அறிவு வளர்ச்சியாகப் பார்க்கிறார். அதற்கான பொருளாதார வளர்ச்சியும், அதனை ஒட்டிய தத்துவப் போக்கையும் பெரியார் கண்டுகொள்ளவே இல்லை.
இன்றும் மக்களின் வறுமைக்கும் பசி பட்டினிக்கும் காரணமான ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்க்காமல் பார்பனர்களை குறைக்கூறி வாழ்ந்து வருகின்றனர். இவை சமூக வளர்ச்சிப் போக்கை கணக்கில் கொள்ளாமையே என்பேன்.
இந்தப் பகுதியை தெரிந்த தோழரோடு விவாதித்த பொழுது அவரின் விளக்கம் பின் வருமாறு.
நீங்கள் அனுப்பி வைத்த பெரியார் பற்றிய கருத்து பார்த்தேன். பெரியாரின் நாத்திகம் இயக்க மறுப்பியல் கண்ணோட்டத்தை கொண்டது என்பது சரியே.கடவுள்,மதம் ஆகியவற்றை திட்டமிட்டு மனிதர்கள் உருவாக்கினார்கள் என்ற அவரது கருத்து அபத்தம் .மனிதன் உற்பத்தி நடைமுறையில் ஈடுபடும்போது இயற்கை விதிகளை புரிந்து கொள்ளாதபோது உண்டானது கடவுள் நம்பிக்கை. அந்த மூட நம்பிக்கையை பலப்படுத்தி மனிதனை தனக்கு அடிமையாக்க சுரண்டும் வர்க்கமும் ஆளும் வர்க்கங்களும் மதத்தை உருவாக்கின என்பதே உண்மை. இந்தியாவில் பார்ப்பனர்கள் அதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதும் உண்மை. ஆனால் கடவுள் நம்பிக்கையை அவர்கள்தான் உருவாக்கினார்கள் இல்லையென்றால் மக்களுக்கு கடவுள் நம்பிக்கையே வந்திருக்காது என்பது அபத்தம் ஏற்கத்தக்கதல்ல.
மனிதனின் கடைசி புகலிடம் மதம் என்று மார்க்ஸ் கூறுவதன் அர்த்தம் என்ன? மனிதன் தான் நினைத்தது நடக்காத போது வேறுவழியின்றி கடவுளைநாடிச் செல்கிறான் என்பதே இதன் அர்த்தம். அப்படி தேவைகள் பூர்த்தியாகி அவன் நினைத்தபடி நடக்கும் போதும் அவன்கடவுளை நாட வேண்டிய அவசியம் இல்லை என்றுதானே இதற்கு அர்த்தம்.
மனிதனின் தேவை நிறைவு பெற்று அவன் நினைத்தபடி வாழ்க்கை அமையும்போது அவன் கடவுளை நாடவேண்டிய அவசியம் இருக்காது. இயற்கை விதிகளை புரிந்து கொள்ளும் பொழுது மூடநம்பிக்கையும் ஒழிந்துபோகும்.ஆகவே மூடநம்பிக்கை,கடவுள்,மதம் ஆகியவை ஒழிந்து போக பார்ப்பானை ஒழித்துவிட்டால் ஒழிந்து போகாது. மனித வாழ்க்கைக்கு உகந்த சோசலிச சமுதாய மாற்றமே இதற்கு தீர்வாகும்.
இன்றைய வகுப்பை இதனோடு நிறைவு செய்ய நினைக்கிறேன் தோழர்களே… இன்னொரு வகுப்பில் மீண்டும் சந்திப்போம் தோழர்களே.
இந்த தொடரில் நான் பயன்படுத்திய நூல்கள்
1). தமிழர் தத்துவம் –தேவ பேரின்பன்
2). அடியும் முடியும்- க. கைலாசபதி
3). மார்க்சிய மெய் ஞானம்-ஜார்ஜ் பொலிட்சர்
4). பெரியார் தத்துவம்
5). பெரியார் தத்துவம் மார்க்சிய விமர்சனம்- கார்முகில்.
6). பெரியார் ஒரு பொருள்முதல்வாதி-ப.செங்குட்டுவன்
===============================================================================================இயக்கவியல்
+++++++++++++
இயக்கவியலின் வரலாறு ஹேகலின் தத்துவ முறையிலிருந்து பிறந்தது அதுபற்றிய தோழர் ஸ்டாலின் கூற்று இது”அதன் முக்கியமான அம்சங்களை ஹெகல் எனும் தத்துவத்வதியே உருவாக்கினார் என்று மார்க்சிய ஆசான்கள் வழக்கமாக குறிப்பிடுகின்றனர். எனினும் மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் இயக்கவியல் அணுகுமுறையும் ஹெகலின் இயக்கவியல் அணுகுமுறையில் ஒன்றுதான் என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது உண்மையில் சொல்லப்போனால் ஹெகலின் தத்துவம் கருத்துமுதல்வாதம் என்ற கூண்டுக்குள் சிக்கிக் கிடந்தது. இந்த கூண்டைத் திறந்து ஏகலின் அணுகுமுறையில் இருந்த பகுத்தறிவுப் பூர்வமான சாராம்சத்தை மட்டும் மார்க்சும் எங்கெல்சும் எடுத்துக்கொண்டு நவீன அறிவியல் வடிவம் கொடுக்கும் நோக்கத்தில் அந்த சாராம்சத்தை மேலும் வளர்த்தனர்”.
(இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் நூலிலிருந்து).
பதினெட்டாம் நூற்றாண்டில் இயக்கம் மறுப்பியலில் சிக்கிக் கிடந்தது என்று மேலே பார்தோம் அல்லவா அதே காலத்தில் வரலாற்றின் வளர்ச்சியில் அறிவியல் துணைக் கொண்டு இந்த பேரண்டத்தில் உள்ள எல்லா பொருட்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்ற முக்கிய மான முடிவை தந்தார்.
ஆன்மீக வாதியான ஹேகல் அறிவியலின் துணையோடு இயக்கவியல் விளக்கினார்.
இயங்கியலை விதியை காண்போம்
1).ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்வை தனித்த ஒன்றாகக் காணாமல் அதை ஏனைய வற்றோடு இணைத்து ஒரு முழுமையின் பகுதியாகவும் பல்வேறு பொருள்களோடும் அல்லது நிகழ்வுகளோடும் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்படுவதாகவும் காணல் வேண்டும்.
2).எல்லாப் பொருள்களும் அல்லது நிகழ்வுகளும் எப்பொழுதும் இடையறாது இயங்கிக்கொண்டு இயக்கப் போக்கில் இருக்கின்றன. அவை மாறுகின்றன வளர்கின்றன அல்லது சிதைகின்றன.
3).ஒரு பொருளில் அல்லது ஒரு நிகழ்வில் ஏற்படும் அளவு மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் பண்பு மாற்றமாக உருப் பெற்று வேறு ஒரு பொருளை அல்லது நிகழ்வை தோற்றுவிக்கும்.
4). எல்லாப் பொருள்களுக்குள்ளும் அல்லது நிகழ்வுகக்குள்ளும் முரண்பாடுகள் இருந்து கொண்டே இருக்கும் இந்த முரண்பாடுகளுக்கு இடையில் ஒற்றுமையும் போராட்டமும் எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கும்.
இவைதான் இயங்கியல் கண்ணோட்டமாகும்.
இனி இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் பற்றி
1).உலகம் என்பது அதன் தன்மையிலேயே பொருளியலானது. பொருள்கள் நம் உணர்விற்கு அப்பாற்ப் பட்டு புறவயகமாக இயங்குகின்றன.
2).பொருள்கள் முதன்மை வகைப்பட்டவை கருத்துகள் சார்புநிலை பட்டவை அதாவது பொருள்கள் மனித எண்ணங்களின் சார்பின்றியும் இயங்க வல்லவை ஆகும். கருத்துக்கள் மனித மனதில் எதிரொளித்து படிமங்களாக உருப்பெறுபவை, அவை பொருள் இன்றி இல்லை.
3). பொருளிலிருந்து உருவெடுத்த கருத்துக்கள் மீண்டும் பொருள்களை தாக்குகின்றன
4).ஒரு பொருளைப் பற்றிய பரிபூரண அறிவு இன்றுவரை அறியப்படவில்லை எனினும் உலகப் பொருள்கள் அனைத்தும் அறியப்பட முடிந்தவையே. மாயை என்பதும் அறிய முடியாது என்பதும் இல்லை.
ஒரு தத்துவத்துக்கு இரண்டு பயன்கள் உண்டு இயற்கையையும் சமூகத்தையும் விளங்கிக் கொள்வதும் அவற்றை மாற்றுவது என்ற இரண்டு பயன்கள் உண்டு இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டதாகும் விளங்கிக் கொள்தல் என்பது மாற்றுவதற்குரிய முதற்படியாகும் இவ்வாறு விளங்கிக்கொள்ளும் நெறிமுறைகளும் அவற்றின் வழி பெறப்பட்ட அடிப்படைக் கருத்துகளும் அக்குறிப்பிட்ட தத்துவத்தின் முறையிலாக அமைவதுண்டு.
இம்முறையில் உள்ள சிறுசிறு கூறுகள் மாற்றம் பெற்று காலப்போக்கில் செழுமை அடையும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் ஒருமுறையியலுக்குரிய அடிப்படை அம்சங்களை மாற்றத்திற்கு உள்ளாகிவிடின் மாறிய அம்சங்கள் பழைய முறையியலுக்கு உரித்தாக இராது. அவ்வாறு அடிப்படையில் மாறி அம்சங்கள் புதிய தத்துவத்துக்குறிய புதிய முறையியலாக அமையும் பழைய தத்துவத்தின் நீட்சியாக இருக்காது இது அனைத்து தத்துவத்திறக்கும் பொருந்தும்.
எடுத்துக்காட்டாக ஆத்திகம் என்பது இயற்கையையும் சமூகத்தையும் விளங்கிக்கொள்ளும் ஒரு நெறிமுறை ஆகும். மனித முயற்சிக்கும் செயல்திறனுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆற்றல் உலகை கட்டுப்படுத்துகிறது என்பது இதன் அடிப்படைக் கருத்து ஆகும் . இதை கடவுள் என்றும் தலைவிதி என்றும் மூலக் கருத்து என்றும் பல பெயர்களில் அழைப்பர்.
இது ஆத்திக முறையில் ஆகும் இதை விடுத்து விட்டு கடவுள் இல்லை என்பதும் மனித முயற்சி முதன்மையானது என்பதும் தலைவிதி பொய்யானது என்பதும் ஆத்திகத்தில் இவற்றை அடக்க முடியுமா முடியாது அப்பொழுது நமக்கு வேறு ஒரு தத்துவம் அதற்குரிய முறையியலில் தோன்றுகின்றன இப்படி ஒவ்வொரு தத்துவத்துக்கும் உரிய அடிப்படை அம்சங்கள் உண்டு.
இவ்விதத்தில் மார்க்சிய முறையிலுக்கானஅடிப்படை அம்சங்கள் உண்டு இது தனக்கென உரித்தான வழியில் உலகை விளக்கிக் கொள்ளவும் மாற்ற முனைகின்றன.இந்த அடிப்படை அம்சங்களில் சிற்சில மாற்றங்கள் காலப்போக்கில் ஏற்பட்டு உள்ளன ஆனால் அவை அடிப்படை அம்சங்களை தலைகீழாக மாற்றி விடவில்லை. இந்த அடிப்படை அம்சங்கள் முற்றிலும் மாறினவெனில் அவை மார்க்சியத்தின் எல்லையை கடந்து விடுகின்றன.மார்க்சிய மற்ற கருத்துகளை தோற்றுவிக்கின்றன. இவ்விடத்தில் மார்க்சியத்தையும் மார்க்சியம்அற்றபோக்கையும் பிரிக்கும் எல்லைக்கோடு தென்படுகிறது.
மேலும்
” இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது மார்க்சிய-லெனினியக் கட்சியின் உலகக் கண்ணோட்டம் ஆகும். இயற்கைத் தோற்றங்களை அணுகும் முறையிலும் அவற்றைக் கூர்ந்து பரிசீலித்து மனதால் உணரும் முறையிலும் இயக்கவியலைப் பயன்படுத்துவதாலும், இயற்கைத் தோற்றங்களை விளக்குவதிலும் அவற்றுக்குக் கருத்து உருவம் கொடுப்பதிலும் பொருள்முதல்வாதத்தைப் பயன்படுத்துவதாலும், இந்த உலகக் கண்ணோட்டம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றழைக்கப்படுகிறது.”
மார்க்சின் ஒரு புதிய சித்தாந்தம் அதுவே இயக்கவியல் பொருள் முதல் வாதமாகும். இச்சித்தாந்தம் மார்க்ஸ் கண்ட மனிதவரலாற்றுடன்,வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்ற விஞ்ஞானத்துடன் இணைந்தது. சமுதாயத்தின் இயங்கியல்,அதனால் ஏற்படும் சிந்தனை மாற்றம், முரண்பாடுகள், அவற்றால் ஏற்படும் வளர்ச்சிப் போக்குகளை விஞ்ஞான பூர்வமாக விளக்குவது. மதம் சார்ந்த கருத்தியல் வாதத்திற்கு இது முரணானது.
இயக்கவியல் பொருள் முதல் வாதம் என்ற சித்தாந்தத்தைக் கிரகிப்பதில் பலருக்கு சிரமம் ஏற்படலாம்.
லெனின் இச்சித்தாந்தத்தை மிக எளிமையான முறையில் விளக்கி உள்ளதை பாருங்கள்.
“எல்லாச் சித்தாந்த வாதிகளும் உலகத்திற்குப் பல்வேறுவகையாக விளக்கம் கூறியவர்களே. அதை எவ்வாறு மாற்றுவது என்பதே எமது வினா" என்றார் மார்க்ஸ். உலகை மாற்றியமைக்கக் கூடியது அரசியல் செயற்பாடே. இது ஒரு புதிய நடைமுறை கொண்ட சித்தாந்தம். ஆகவே இயக்கவியல் பொருள் முதல் வாதம் என்பது அரசியற் செயற்பாடு. ‘புரட்சிகர அரசியற்கோட்பாடின்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது’ என்றார் லெனின்.
மார்க்சினுடைய இப்புதிய நடைமுறை கொண்ட சித்தாந்தம் உலகை வேகமாக மாற்றக் கூடிய உந்து சக்தியாக விளங்குகிறது. பாட்டாளிகளுக்காகவே கண்டு பிடிக்கப்பட்ட இச்சித்தாந்தத்தைப் பாட்டாளிகளே விரைவில் கிரகித்துக் கொள்ளுகின்றனர். இச்சித்தாந்தத் தைக் கிரகித்துக் கொண்டதும் அது ஓர் உந்து சக்தி ஆகிறது. புரட்சிகர நடைமுறைக்குத் தூண்டுகிறது;வேகமாகப் பாட்டாளிகள் உலகை மாற்றி வருகின்றனர், தம் விலங்குகளை ஒடித்து.
மார்க்சின் சித்தாந்தத்தின் மிகப் பெரிய வெற்றி இதுவே ஆகும். உலக சமூக அமைப்பை வேகமாக மாற்றுவதற்குரிய விஞ்ஞான நடை முறையைக் கண்டவர் மார்க்சே.அதையே யுகம்யுகமாக அவரது பெயரும் சேவையும் நீடிக்கும் என்று எங்கெல்ஸ் கூறினர்.
சமுதாயத்தை அறிவியல் நோக்கில் - அணுகுமுறையில் பார்ப்பதும் படிப்பதும் சரியான முறையாகும். அறிவியல் இரு வகைப்படும் இயற்கை அறிவியல், சமூக அறிவியல் என்பன அவை,
இயற்கை அறிவியல்:
இயற்பியல் (Physics), வேதியல் (Chemistry) போன்றவை. உற்பத்தி சக்திகளைப் பற்றி விளக்குவன. பொருள் உற்பத்தியைப் பெருக்கவும் பெரும் பொருளீட்டவும் பயன்படும். ஆளும் வர்க்கமும் அரசும் இதில் பெருங் கவனம் செலுத்துதலும் பெரும் பணச் செலவிடலும் இயல்பே.
சமூக அறிவியல்
மானிடவியல், தொல்பொருளியல், பொருளாதாரம், வரலாறு, கலை இலக்கியம், நீதி போன்றவை இவற்றுள் அடங்கும். இவை அறிவியல் முறையில் கற்றுத்தரப்படுவதில்லை. ஏன்? இவை உற்பத்தி உறவுகளைப் பற்றியும் அதைப் பாதுகாத்து நீதிப்படுத்தும் மேல்மட்ட அமைப்புக்களைப் பற்றியும் அல்லவா பேசுகிறது.
பயன்பட்ட நூல்கள்.
தோழர்களே நான் இதனை தயாரிக்க பயன்படுத்திய நூல் விவரங்களை இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்று பொருள்முதல்வாதமும் (NCBH), மார்க்சிய திறனாய்வுச் சிக்கல்கள் கோ.கேசவன், இயக்கவியல் பொருள்முதல் வாதம் ஏ. நிசார் அகமது பாரதி புத்தகாலயம்…. இன்னும் சில இதில் உள்ள கருத்துகள் எல்லாம் நமது முன்னோடிகளினுடையவையே.
No comments:
Post a Comment