மார்க்சியம் சில போக்குகள் அதில் "தமிழக மார்க்சியம்" குறித்த சில

 மார்க்சியம் சில போக்குகள் அதில் "தமிழக மார்க்சியம்" குறித்த சில

++++++++++++++++++++++++++++++++++++++++++

மார்க்சியம் தமிழகத்தில் பரவத் தொடங்கிய காலத்தில் இருந்தே மார்க்சியத்தை அதன் கோட்பாடுகளை கட்சியின் பிரதான பணியாக செயல்பட்டாலும் அவை முழுமையாக நாடு தழுவிய அளவில் செயல்பட வில்லைகட்சிஅணிகளுக்குமார்க்சியத்தின் அடிப்படைகளை பரப்புவது பிரதான பணியாகமேற்கொள்ளப்பட்டதுஇருந்தும்அவற்றின் வீச்சு இருக்க வேண்டிய அளவிற்கு இல்லை என்பேன்.

இவர்களைத் தவிர திராவிட இயக்கங்கள் காங்கிரஸ் இயக்கங்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் மார்க்சியத்தை பரப்பினர்கள்.மார்க்சியத்தைமுழுமையாக அவர்கள் உள்வாங்காமலேயே மேலோட்டமாக மார்க்சியத்தை அவர்கள் பரப்பினர்.மார்க்சியத்தின் பல கூறுகளில் ஏதாவது ஒன்றை வலியுறுத்தி மற்றவற்றை விட்டு விட்டுப் போகும் போக்கானது மேலை நாடுகளிலே வளர்ந்து வந்துள்ளது. அதனை தூக்கி பிடிக்கும் போக்கை புரிந்துக் கொள்ள...

இத்தாலிய மார்க்சியம், பிரான்ஸ் மார்க்சியம், பிரிட்டிஷ் மார்க்சியம், பிராங் பர்ட் மார்சியம் என்று சில கிளைகளை பரப்பி உள்ளது. அது போலவே தமிழகத்திலும் கோவை ஞானி, என் எஸ் நாகராஜன் எஸ்வி ராஜதுரை அ. மார்க்ஸ் இன்னும் சிலர் எழுதியுள்ளவை மார்க்சியத்திற்கு முரணானவிளக்கங்களையும் குழப்பமான படைப்புகளையும் ஆராய்ச்சி என்ற பெயரில் மார்க்சிய விரோதமாக 1980 களுக்கு பின்னர் ஜார்ஜ் லூக்காஸ் தொடங்கி அல்தூசர், வால்டர் பெஞ்சமின், சார்த்தர் என்று பல பெயர்கள் இதில் அடங்கும். ஜெர்மனியில் துவங்கி அமெரிக்காவில் வலுவாக இயங்கும் பிராங்க்பர்ட் குழுவை இதில் அடைக்கலாம். இவர்களின் எழுத்துகளை இங்கே கடை பரப்புவது என்ன நோக்கம் நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள்?

மார்க்சிய தத்துவத்தின் அடிப்படை இயங்கியல் பொருள் முதல் வாதம். இந்த அடிப்படையில் தான் மார்க்சியம் உலக நிகழ்ச்சிகள் அனைத்தையும் காண்கிறது. இதன் காரணமாக கருத்து முதல்வாதிகளுக்குஎதிராக மார்க்சியர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்.கருத்து முதல்வாதிகள் மனமே பிரதானம் என்கின்றனர். மனிதன் அறிவுப்பெறும் வழியில் தான் உணர்வின் பங்கினை அதிகமாக வலியுறுத்துகின்றனர். எதார்த்தம் என்பது மனம் அல்லது உணர்வு தான் என்கின்றனர். இதன் வெளிப்பாடுதான் ஹெகலின் முழு முதற்கருத்து(Absolute idea) ஆதிசங்கரர் பரமாத்மா; ராமானுஜரின் பரபிரம்மம் ஆகியவை ஆகும்.

புதிய இடது (மார்க்சியவாதிகள்) மார்க்சியத்தில் இருந்து விலகி மனதிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். மேலேய(புதிய இடது) மார்க்சியவாதிகள் ஹெகலின் கருத்துகளில் அனுதாபம் உள்ளவர்கள் மார்க்சியத்தின் இயங்கியல் பொருள் முதல்வாதத்தை கடுமையாக விமர்சிப்பவர்கள்.

இதன் காரணமாகவே அவர்கள் மார்க்சிய அறிவு தோற்றக் கொள்கை புதிய இடது கொள்கையுடன் முரண்படுகிறது அவர்களால் இயங்கியல் பொருள் முதல் வாத கண்ணோட்டத்துடன் இயந்து போக முடியவில்லை.

ஹெகலின் கருத்துகளை மார்க்சின் பெயரால் புத்துயிர் ஊட்ட விரும்புகின்றனர். கிராம்ஸி, நீட்ஷே, சிம்மல்,டில்திஆகியோரின் கருத்துக்களை இணைத்துக் கொள்கின்றனர்.

மார்க்ஸ் வெபர் என்பவரின் சமூகவியல் கொள்கை, பிராய்டின் உளப்பகுப்பாய்வு கொள்கை, பின் நவீனத்துவக் கொள்கை இன்னும் சிலவற்றை மார்க்சியம் என்று மார்க்சியத்தில் கலக்கின்றனர்.

மார்க்சியம்முதலாளித்துவகருத்துக்களை விமர்சிக்கிறது. அதன் உடன்பாடான அம்சங்களைதன்வயப்படுத்திக்கொள்கிறது. இங்கே மார்க்சியம் பேசும் புதிய இடதுகள் அவ்வாறல்ல. புறசித்தாந்த கருத்துக்களைஏற்றுக்கொள்ளும் பொழுது மார்க்சியத்தின் அடிப்படையையே மாற்றி விடுகின்றனர். தமிழகத்தில் அ.மார்க்ஸ் பெரும்கதையாடல்என்றுமார்க்சியத்தையே மறுக்கிறார். அதற்கும் ஒருப்படி மேலே சென்று மார்க்சியம் அம்பேத்கரியம் பெரியாரியம் ஆகியவற்றை ஒன்றிணைத்து காண வேண்டும் என்று கூறுகிறார். இங்கேதான் இவர்களின் நிலைப்பாடு அடங்கியுள்ளது தோழர்களே. "ரஷ்ய மார்க்சியம் சீன மார்க்சியம் போன்று இந்திய மார்க்சியம் தமிழக மார்க்சியம் பாவம் இல்லை" என்பதே ஞானியின் அருள்வாக்கு. லெனினியம் ரசிய மார்க்சியம் என்றும் மாவோ சிந்தனை வெறும் சீன மார்க்சியம்  என்றும் குறிப்பிடும் வாதங்கள் எல்லாம் என்றோ பொய்யாய் பழங்கதையாய் போனது. இந்த விமர்சனங்கள் மார்க்சியத்தின் மீது வைக்கப்பட்டது. மார்க்ஸ் ஐரோப்பிய கால சூழலுக்கு மட்டுமே பொருந்தக் கூடியவர் என்று வெங்கட் சாமிநாதன் குறிப்பிட்ட கருத்துகள் எல்லாம் இன்று முனை மழுங்கி முறிந்து போயின. எனினும் இப்பொழுதுபுதியவெங்கடசுவாமிநாதன் புறப்பட்டு உள்ளனர்.

இவர்கள் எழுப்பும் பிரச்சினை பொதுத்தன்மைக்கும் குறிப்பான தன்மைக்கும் இடையிலான உறவு குறித்து தாகும். மார்சியம் என்பதே பொதுத்தன்மையை குறிப்பான தன்மையுடன் இணைப்பதாகும். அந்தந்த நாடுகளில் உள்ள குறிப்பான தன்மைக்கு ஏற்ப பொதுவான தன்மைகள் பொருத்தப்பட வேண்டுமே தவிர குறிப்பான தன்மைகளுக்கு முதன்மைகொடுத்துபொதுத்தன்மைகளை மறந்து விடக்கூடாது - மாவோ.

ஆனால் எஸ்சிஎஸ்,ஞானி போன்றோர் இந்த பொதுத்தன்மைகளை புறக்கணித்து விடுகின்றனர். தேசிய கலாச்சார சூழலில் இருந்து அந்தந்த தேசத்துக்குரிய மார்க்சிய இலக்கிய விமர்சனத்தை  உருவாக்க வேண்டும் என்கிறார். அனைத்தும் தழுவிய மார்க்சிய கோட்பாடுகளை தமிழ் கலை இலக்கியத்துக்குப்  பொருத்தி காணுவதன் மூலமே நாம் உண்மைகளை கண்டறிய முடியும் இதுவே பொது தன்மையை குறிப்பான தன்மையுடன்பொருத்திக்காணுவதாகும். இதை விடுத்து தமிழக சூழலுக்கு என்று தனித்த மார்க்சிய இலக்கிய விமர்சனக் கோட்பாடு என்றோ ஆந்திர சூழலுக்குஎன்று தனியான இன்னொரு கோட்பாடு என்றோ கிடையாது. ஆனால் எஸ்சிஎஸ் கருத்து இதற்கு வழிவகுக்கிறது.  ஞானியோ இலக்கிய விமர்சன கோட்பாடு மட்டுமல்லாமல் மார்க்சியமே ஒவ்வொரு தேசிய இனத்திற்கு என்று தனித்தனியாக இருக்க வேண்டும் என குறிப்பிடுகிறார். மார்க்சியத்தில் ரஷ்ய மார்க்சியம் சீன மார்க்சியம் தமிழக மார்க்சியம் என்று இல்லை. மார்க்சிய கோட்பாடுகளை அந்தந்த நாட்டின் பருண்மையான குறிப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயன்படுத்துவதலே நடைமுறையாகும். இந்தப் பருண்மையான குறிப்பான சூழ்நிலைக்களுக் கேற்பப் ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுபடுமே தவிர ஒவ்வொரு நாட்டுக்கும்தனித்தனியான மார்க்சியம் என்பது இல்லை. ரஷ்யாவின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப அங்கு ஆயுத ரீதியிலான குறுகிய கால எழுச்சி பாதைமேற்கொள்ளப்பட்டது.  குடியேற்ற அறைகுடியேற்ற நிலஉடமை தன்மைகொண்ட சீனாவில் நீண்ட கால மக்கள் யுத்தபாதை மேற்கொள்ளப்பட்டது.இன்னும் சொல்லப்போனால் சமன்அற்ற வளர்ச்சி தன்மை கொண்டும் பல தேசிய இனங்களைக் கொண்டும் உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில் குறிப்பிட்ட வரலாற்று சூழல் கருதி தேசிய இனங்களின் குறிப்பான தன்மைக்கு ஏற்ப விடுதலைப் பாதைகள் மாறுபடலாமே தவிர ஒவ்வொரு தேசிய இனத்திற்கென தனித்தனியான மார்க்சியம் என ஆவது இல்லை. இவ்வாறாக ஞானி மார்க்சிய அரசியலின் பொதுத்தன்மையை மறுக்கின்றார்.

 

மூலதனத்தின் பிரதான சக்தி அதன் சொந்த பலத்தில் அதாவது அரசு இயந்திரத்தை தலையாய அங்கமாய் கொண்டு இருக்கிற அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது. அதுபோலவே உழைப்பின் சக்தியும் அந்த சொந்த பலத்திலேயே அதாவது பாட்டாளி வர்க்க கட்சியை தலையாய அங்கமாய் கொண்டுள்ள அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது.

மார்க்சிய தத்துவம் இதர தத்துவங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுகிறது மற்ற மார்க்சியமல்லாத தத்துவங்கள் எல்லாம் அரசியல் அதிகாரத்தில் உள்ள அறிவாளிகளுடன் ஒன்று கூடியுள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய மேட்டுக்குடி அறிவாளிகளோடு மட்டுமே சுருங்கிக் கொண்டுள்ளது. இவர்கள் தங்களது வர்க்க நலனை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளும் பொருட்டு தமது பிரஜைகள் மீது தமது தத்துவங்களை திணிப்பார்கள். ஆனால் மார்க்சிய தத்துவம் பரந்துபட்ட மக்களுடையது. உண்மையில் இந்த தத்துவமானது பெரும்பான்மையான உழைக்கும்ஒடுக்கப்பட்டமக்களினுடைய தத்துவ  கண்ணோட்டம் ஆகும்.

பாட்டாளி வர்க்க சித்தாந்தம் மக்கள் திரளை ஒன்றிணைப்பதும் இந்தத்துவத்தின் பால்  அவர்களை  கிரகித்து அவர்களை புரிய வைத்தலும். உழைக்கும் மக்கள் தமக்கு சொந்தமான தத்துவத்தை கிரகித்துக் கொண்டு அதன்படி நடக்கத் துணியும் போது தமது குருதியை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சுக்கிருமிகளையும் மாபெரும் புயலென சீறி எழுந்து ஒரே அடியாகத்  துடைத்தொழிப்பர். மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தை கிரகிக்க முடியாது. உழைக்கும் மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலனை பற்றி போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பு ரீதியான திரட்டுவதுமான இந்த இமாலய பணியை மக்களுடைய பணிஎன்கின்றோம். மக்களிடையேலான பணியின் பாத்திரம் தத்துவார்த்த ரீதியில் நிலைநாட்டல் தான் நடைமுறை பிரச்சனை. இக்கடமையை ஒரு பொதுவுடைமை கட்சி நேர்மையான முறையில் கடமை ஆற்ற வேண்டியுள்ளது. அந்தக் கட்சியின் ஊழியர்களுடைய பணிதான் நடைமுறை.

ஆக மார்க்சியவாதிகள் இயக்க இயல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் தங்களது அணிகளுக்கு மட்டும் இன்றி பரந்த பட்ட திரளான மக்களுக்கு பிரசாரம் செய்ய வேண்டும் உழைக்கின்ற மக்கள் பெருந்திரளாக இந்த கண்ணோட்டத்தை கிரகித்து முதலாளித்துவ கண்ணோட்டத்தை நிராகரிக்காத வரையில் எதிரியை தோற்கடிப்பதுஎன்பது அசாத்தியமாகும்.

அதாவது மக்களிடையே நடைமுறை பிரச்சனை என்பது ...

மக்கள் என்பவர் யார்

மக்களிடையே கம்யூனிஸ்டுகள் கடைப்பிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்க வேண்டும்?

மக்களைப் பயிற்றுவிப்பதிலும் அமைப்பு ரீதியாக திரட்டுவதில்  என்ன முறைகளை கையாள வேண்டும்?.

மக்கள்தான் உண்மையான இரும்பு கோட்டை இதை உலகில் எந்த சக்தியாலும் தகர்ப்பது சாத்தியமாகாது என்ற மாவோ கூற்றை புரிந்துகொண்டு இந்த இரும்பு கோட்டை உருவாக்கும் இரும்பு கற்கள் தனித்தனியாக ஒன்று சேர்க்கப்பட்டு பூசப்படாமல் உள்ளது. இந்த இரும்பு கற்களை அடுக்கி பூசி உலகில் உள்ள எந்த சக்தியாலும் நொறுக்கப்பட முடியாத அளவிற்கு ஒரு சக்தியாக வாய்ந்த இரும்புக்கோட்டையாக நிறுவ வேண்டும்.இவைதான் கம்யூனிஸ்டுகள் நடைமுறையில் செய்ய வேண்டிய பணியின் முக்கியமானதாகும்.

பின்னர் பார்ப்போம்-சிபி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்