ஜாதியம் தொடர்-7 ஜாதியின் தொடக்கம் தீண்டாமையும் ஜாதி ஒழிப்பு

 தமிழ்நாடுமுழுவதும்445கிராமங்களில்தீண்டாமைக்கொடுமை நிலவுவதாகவும்தமிழ்நாடுகாவல்துறை அடையாளம்கண்டுள்ளது. பதிவானவை மட்டுமே 445 கிராமங்கள் என எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் பதிவாகாமல் நூற்றுக் கணக்கான கிராமங்கள் இருக்கலாம். பிபிசி செய்தியின் அடிப்படையில்.

இன்று தீண்டாமை குறித்து அக்கரையும் கரிசனமும் சமூகத்தில் மற்ற தீண்டத்தகும் சாதியைனரிடையே ஏற்படுள்ளது. தீண்டாமை ஒழிப்பு சாதி ஒழிப்பு இப்படி பல இயக்கங்கள் இன்று நம்மிடையே செயல்படுகிறது. உண்மையில் தீண்டாமை பட்டியலின மக்களின் பிரச்சினை மட்டுமில்லை, அது இந்த சமுக பிரச்சினையாகும். சமூகத்தின் ஒரு பகுதியினறான பட்டியலினமக்கள் அடிமை மனநிலையிலிருந்து விடுபடவும் ஆதிக்க சாதியினர் என்போர் ஆதிக்க மன நிலையிலிருந்து விடுபட வைப்பதுமே முதன்மையான பணியாகும். மேலும், உழைக்கும் ஏழை எளிய மக்கள் வர்க்கரீதியாக ஒன்றுபட தடையாகவும் உள்ள இவை வர்க்க போராட்டத்தின் ஊடாக ஒற்றுமையின் அவசியத்தை உழைக்கும் மக்களுக்கு போதிக்க வேண்டியது கட்டாயம். உழைக்கும் மக்கள் வர்க்கமாக ஒன்றுபடாத வரை சுரண்டலாளர்கள் அடக்கியும் ஒடுக்கியும்ஒட்டசுரண்டிகொண்டேதான் இருப்பர் ஆக ஜாதிய தீண்டாமை கொடுமைக்கான காரணிகளை தூக்கியெறிய உழைக்கும் மக்கள் புரிந்து செயலாற்ற வேண்டியுள்ளது. ஜாதியத்தின் அம்சங்களில் தீண்டாமை முனைப்பாக விளங்குவதால் தீண்டாமை ஒழிப்புக்கான இயக்கமும் முழக்கங்களும் உடனடிதன்மை பெற்று விடுகின்றன.ஆனால்ஜாதிஒழிப்பையும்  தீண்டாமை ஒழிப்பையும் தனித்து துண்டித்து காண இயலாது. நமது சமூகத்தில் பரவலாக இன்று ஜாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு இயக்கங்கள் முனைப்பாக நடந்து கொண்டு வருகின்றன. தீண்டத்தக்க ஜாதியில் உள்ள ஜனநாயக சக்திகளும் தீண்டாமை ஒழிப்பு ஜாதி ஒழிப்பு முன்னெடுத்து செயல்படுகின்றார்கள்.  பட்டியலின மக்கள் தனித்துவமான அடையாளங்களை இழந்து பொது அடையாளமான சமூக அடையாளம் பெற வேண்டும். சமூகத்தில் சரிநிகர் சமமாக வரவேண்டும்(தேவையை பொருத்து விரிவாக பின்னர்).

 இந்தியாவில் காணப்படும் ஜாதி அமைப்பு பற்றி ஒரு தெளிவான கருத்துருவாக்கம்.

நில உடமை சமூக அமைப்பின் தொடக்கத்தில் வேளாண்மை வேளாண்மை சார்ந்த கைவினை ஆகியோர் மட்டுமின்றி தொண்டு ஊழிய தொழிலும் இருந்தன, இவை பாரம்பரியமாக கையளிக்கப்பட்டன. இவற்றிற்குரிய தொழில்நுட்பம் ஒரு கலையாக மட்டுமின்றி அந்த தொழில் வகுப்பு மட்டுமே தெரிந்ததாக இருந்தது. இதில் கூட ஆணாதிக்கத்தை உற்பத்தி சாதனஉரிமை சாதிகளோடு இணைத்து காண வேண்டும்.நிலஉரிமை கொண்ட சாதிகளில் பெண்கள் முற்றாக சமூக உற்பத்தியில் இருந்து விலக்கப்பட்டனர்.ஆனால் கைவினை ஜாதிகள், சேவை ஜாதிகள் ஆகியவற்றில் குடும்ப உழைப்பு இருந்ததனால் அங்கு சமூக உற்பத்தில் பெண்கள் ஓரளவு ஈடுபட நேர்ந்தது. எனவே அத்தகைய தொழில்நுட்பத்தை அந்த தொழில் வகுப்பு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு தமக்குத்தானே ஒரு வேலியிட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த விதத்தில் தொழில் வகுப்புகள் அகமன முறையில் இறுக்கத்தோடு ஜாதியம் நிறுவனம் ஆகியது. மேலும் நில உடமை உற்பத்தி முறையில் ஒவ்வொரு தொழிலும் முழுமையான ஒரு வித சுய உள்ளாற்றலையும் இயங்குதல்களையும் கொண்டிருந்தது. அதே நேரத்தில் ஒரு பொது பொருளாதார அமைப்பின் கட்டமைப்புக்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தொழிலும் தம்சுயேச்சைத் தன்மையை பேணிக் கொண்டிருப்பதோடு நிலவுடமை பொருளாதாரத்தில் ஒரு கண்ணியாகவும் உள்ளது.இதற்கு உகந்த விதத்தில் தொழில் வழி வகுப்புக்குள் அகமண முறை அழுத்தம் பெற்று சாதியமயமாயிற்று.ஒவ்வொரு தொழில்களிலும்வகுப்பும் உற்பத்தியில் தனித்தன்மைசுயேட்சியை பேணிக் கொண்டு ஒரு ஜாதியாக இருக்கவும். பொது பொருளாக அமைப்பில் உள்ள ஜாதி சமூகத்தில் ஓர் அங்கமாக இருக்கவும் முடிகிறது.ஒரு தொழில் வகுப்பு இன்னொரு தொழில் வகுப்பில் தொழில் ரீதியில் ஒன்று கலக்க இயலாது.ஆனால் ஒரு தொழில் வகுப்பின் உற்பத்தி திறனில் உருவான முழு பண்டமும் இன்னொரு தொழில் வகுப்புக்கு நுகர் பொருளாகவோ அல்லது அதன் உற்பத்தி ஆதார பொருளாகவோ அமைய இயலும்.

ஒரு தச்சர் கலப்பை செய்து தர இயலும் ஒரு வேளாளர் இதில் தலையிட இயலாது. ஆனால் தச்சரின் கலப்பையைவேளாளரும் வேளாளரின் விளைச்சலை தச்சரும் பயன்படுத்த இயலும்.ஒரு தச்சரின் ஏர் கலப்பையை ஒரு குயவர் நேரடியாக நுகர முடியாது. ஆனால் கலப்பை பயன்படுத்தி உருவான  வேளாண்மை விளைச்சல் நுகர இயலும்.

தொழில் வழி வகுப்புகள் அமைந்த அகமனமுறை தொழில்நுட்ப ரகசிய காப்பீடு சாதிகளின் சுயக்கத்தோடும் இணைந்து காணும் பொழுது அதை நிலஉடமை உற்பத்தி முறியோடு இணைந்தே காண வேண்டி உள்ளது.  வேலாண்மை சமூகத்தில் பிரதான உற்பத்தி சாதனம் நிலம், புதிது புதிதாக பயன்படுத்தப்பட்டுவந்து கொண்டிருந்த காலங்களில்; உடல் உழைப்பும் உடல் உழைப்புக்கு திட்டமிடும் மூளை உழைப்பு வெகுவாக பயன்பட்டன.  பிராமணர்கள் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டியதில்லை இவை நிலஉடமை சமூகத்தில் சமூக மரபாக இருந்தது.

அதே நேரத்தில் உடலுழைப்பை மட்டுமே நம்பி வாழும் சேவை சாதியினர் உற்பத்தி சாதனங்கள் உரிமையின்மை உற்பத்தியில் கருவிகள்இன்மை ஆகிவற்றோடு குடும்ப உழைப்பும் வளர்ச்சியடையாத தொழில்நுட்பம் கொண்ட சேவை சாதியில் ஈடுபடும் அவசியம் அவர்களை இழிநிலைக்கு கொண்டு சென்றது.

சேவை சாதியில் அகமனம் முறை நிறையவிதிவிலக்குகள்நெகிழ்ச்சியாக செயல்பட்டது. இருந்தும் இங்கு அரசு அதிகாரத்தின்வன்முறைபயன்பாட்டையும் கருத்துருகத்தின் ஆதிக்கத்தையும் காண இயலும். மேல்நிலை ஜாதியில் தொழில் வகுப்புகள் தமக்குள் அகமன முறை உருவாக்கி தம்மில் முற்றாக சிறையில் அடைத்துக் கொண்ட பின்னர். சேவை சாதியினருக்கும் அதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை.

இன்று நாம் புரிந்துக் கொள்ள

இந்தியாவில் காணப்படும் ஜாதிப் பிரிவினையானது சமூக அமைப்பில் பாரம்பரிய வேலை பிரிவினையாக அகமணமுறை தொடர்வதாலும் படிநிலைமுறை தீண்டாமை ஆகிய கூட்டு துவத்திலும்காண்கிறோம்.

தொழில் பிரிவினை அடிப்படையில் தோன்றிய ஜாதியானது குறிப்பிட்ட சமூகத்தில் வர்க்கமாகவும் சமூக வளர்ச்சி போக்கில் பல்வேறு மாற்றங்களினால் சிதைவுகள்உள்ளாகி இன்று ஒரே ஜாதிக்குள் பல ஏற்றத்தாழ்வுகளை காண முடியும்.

சோழர் காலத்தில் முழு முற்றான நிலயுடமைக் காலத்தில் சாதியின் பாரம்பரிய வேலை பிரிவினை கராராக இருந்தது.நாயக்கர் காலத்தில் ஜாதி ஆதிக்கத்தில் நெகிழ்ச்சியடைவதன் தொடக்கத்தை  காணலாம்.

பிரிட்டன் ஏகாதிபத்திய நலன்களை ஒட்டி ஏற்பட்ட மாற்றங்கள் பாரம்பரிய உற்பத்தி முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியதால் பிரதேச ஒருமை, தொழில் ஒருமை, பண்பாட்டு ஒருமை ஆகியவற்றில் சிதைவுகளை ஏற்படுத்தின.

இத்தகைய மாற்றங்கள் சமூகத்தில் உயர் ஜாதியில் இருந்தவர்களுக்கு அதிகமானதாகவும் கடைநிலை ஜாதிகள் இருந்தவர்களுக்கு மிக குறைவாகவும் ஏற்பட்டன.

ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் இன்று வர்க்கங்களாக பிரிந்து விட்ட பின் ஒரேவர்க்கம் பல்வேறு ஜாதியில்பிரிந்துக்கிடப்பதால்அந்த  வர்க்கங்களுக்கு இடையிலான ஒற்றுமையானது ஜாதி அடிப்படையில் முரணாக உள்ளது.இருந்தும் மேல்நிலை(ஒடுக்கும்) வர்க்கங்கள் தேவையை கருதி ஒன்றுபடுவதும் சாத்தியமாக உள்ளது.இருந்தும் இந்த ஜாதிகள் இடையேயான பண்பாட்டு மதிப்புகள் அவர்களுக்கு இடையிலான இணக்கத்துக்கு தடையாக உள்ளது. தேவைக்கருதி ஒடுக்கும் வர்க்கமாக ஒன்றிணையவேசெய்கிறது; அதே நேரத்தில் பல்வேறு ஜாதிகளில் உள்ள உழைக்கும் (ஓடுக்கப்பட்டவர்க்கம்) மக்களுக்களுக்கு இடையிலான வர்க்க ஒற்றுமைக்கும் பல்வேறு தடைகள் உள்ளதை காணலாம்.அவை சாதிய பண்பாட்டுமதிப்புகள் கருத்துருவாக்கங் களும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றுநாட்டில்ஏற்பட்டுள்ளசமூகவளர்ச்சிமுதலாளிய மாற்றங்களை மேலும் கீழும் குறுக்கும் நெடுக்குமாக ஆழப்படுத்தி முழுமை அடைய செய்து நிலவுடமை உறவுகளை முற்றாகச் சிதைப்பதற்கான போராட்டத்துடன் சாதிய பண்பாட்டு மதிப்புகளை எதிர்த்துப்போராட்டங்களைஇணைப்பதன் மூலமே பட்டியலின மக்கள் உழைக்கும் வர்க்கத்தின் வர்க்க உணர்வோடு ஒன்றிணைந்த போராட்டத்திற்கு ஒன்றுபடுவர்.

வேலையின்மை கொடூரமாக உள்ள இந்த நாளில் கூட ஜாதி அடிப்படையில் சில தொழில் நிர்ணயிக்கப்படுகிறது.உயர்வு தாழ்வு கற்பிக்கப்படும் வழக்கம் வெறும் கலாச்சாரப் போராட்டத்தினால் உடைத்தெறிய முடியாது.சாதிய வேர்களைகலைந்தெறியும்போராட்டமாக புரட்சிகர போராட்டமாக இருக்க வேண்டும்.பார்ப்பனர்களின்தனிஉரிமைக்குஎதிரான போராட்டமாக சுருக்கி காண்பது கூட நிலஉடமை பிற்போக்குகளைஎதிர்த்தபோராட்டத்தை பார்ப்பன எதிர்த்த போராட்டமாக சுருக்கி காண்பது ஆகும்.

அன்றைய ஜாதி ஒழிப்பு போராட்டம் நமது புரிதலும் பெரியாரின் ஜாதி ஒழிப்பு பற்றி சில புரிந்துக் கொள்வோம்:- சுயமரியாதை இயக்கத்தின் லட்சியங்களாக வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பிராமணர் கலாச்சார எதிர்ப்பு அரசு ஆதரவுபார்ப்பனர்அல்லாதவர்களிடையே ஜாதி வேறுபாடு கலைதல் சமய சீர்திருத்தங்கள் வர்ணசிரம ஒழிப்பு என்பனவாக இருந்தன. காலனி ஆதிக்க ஆதரவு என்ற பரந்தபட்ட அடைப்புக்குறிக்குள்ளே காண வேண்டும். நிலஉடமை கலாச்சாரத்தை பார்ப்பனர்களோடு மட்டுமே சுருக்கி கொள்வது.நிகழ்வுகளின் சாராம்சத்தில் இருந்து உண்மைகளை கண்டறியாமல் அவற்றின்வெளிப்புறதோற்றத்திலிருந்து கவனித்ததனால். பார்ப்பனர்களே எதிரிகளாவும் பார்ப்பனியத்தை எதிரியாகவும் கண்டனர். நில உடமை சமூக கலாச்சார குணங்கள் நாம் வாழும் சமூகத்தில் பரவி கிடக்கிறது வெறும் பார்ப்பனர்களை மட்டும் குறை கூறி ஒன்றும் ஆவது இல்லை.

ஒரு ஜாதியில் இருக்கும் மக்கள் அனைவரும் ஒரே தொழில் பார்ப்பவர்களாக  இன்றைக்கு இல்லை

ஒரு ஜாதிக்குள் இருந்த சிறுபான்மை யினரை இவ்வாறு புதிய வர்க்கமாக உருவெடுத்துள்ளனர்.எல்லாஜாதியிலும் உள்ள ஏகாதிபத்தியம் சார்ந்த ஆளும் முதலாளித்துவநலம் சார்ந்த அறிவு ஜீவிகளாகட்டும்அரசு அதிகாரிகளா கட்டும் அதன் பிரதிநிதிகள் ஆகட்டும் அரசு அதிகாரத்தை எதிர்க்காமல் உடனடி முரணான பிராமினியத்தை மட்டுமே முரண்  கொள்ளும் போக்கானது ஆட்சியாளர்களின் ஆதரவு பிராமணர்களின் கலாச்சார எதிர்ப்பு சில சீர்திருத்தங்களுக்காக சமரசம் இவைதான் இன்று வரை நாம் கண்டுள்ள சாதி ஒழிப்பிற்கான சீர்திருத்த வகைப்பட்ட வழியாக உள்ளது.

ஒரே ஜாதிக்குள் தோன்றிய புதிய வர்க்கங்கள் தனது ஜாதி அடையாளத்தை இழந்து விட முயற்சிக்கவில்லை. தனது ஜாதி மக்களின் பலத்துடன் தனது வர்க்கத்திற்கு என்று புதிய கோரிக்கை முன்வைக்கபயன்படுத்திக்கொண்டுள்ளனர். அதாவது அந்தந்த ஜாதிகளில் தோன்றிய புதிய வர்க்கத்தினர் அதிகாரியாகவும் முதலாளியாகவும் வணிகர்களாகவும் ஏன் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவும் வளர்ந்துள்ளனர். பல்வேறு ஜாதிகளில் தோன்றிய புதிய வர்க்கங்கள் தேவைப்படும்நேரத்தில்ஒருங்கிணைந்துசெயல்பாட்டையும்மேற்கொள்கின்றனர். புதிய மேல்நிலை வர்க்கங்கள் ஜாதிகளை கடந்து தமக்குள் ஒருங்கிணைவு ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதுவே பிராமணர் அல்லாதவர் என்ற  பெயரிலும் ஒளிந்துக்கொள்கின்றனர். தேவைப்படும்போது பிராமணர் இடத்தில் மட்டுமல்லாது  எல்லா மேல்நிலை  வர்க்கத்தோடும் உறவு கொள்ள தவறுவதும் இல்லை.

இந்த நிலையில் உழைக்கும் ஏழை எளிய பல்வேறு ஜாதிகள் உள்ள மக்கள் ஒன்றுபடுவதற்கு தடையாக இதே மேல் நிலையில் உள்ள  ஜாதியில் உள்ள ஒடுக்கும் வர்க்க பிரதிநிதிகளே என்றால் மிகையில்லை.

ஒரே ஜாதிக்குள் இருக்கும் முதலாளியை,அதிகாரியை ஆளும் வர்க்கபிரதிநிதியை…….முதலாளியாகவும் அதிகாரியாகவும் ஆளும் வர்க்க பிரதிநிதியாகவும் பார்க்காமல் தன் ஜாதிகாரனாக மட்டுமே பார்க்கும்படி பாமர மக்கள் பழக்கப்படும் வரையில் ஜாதியையும் வர்க்கத்தையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் (விரிவாக வேறோரு நேரத்தில் பேசுவோம்).

தாழ்த்தப்பட்டோர் வாழ்வியல் பற்றி ஒரு பொது கருத்து

இந்தியா முழுவதிலும் ஏறத்தாழ 1000 ஜாதிகளாகபிரிந்துள்ளனர்தாழ்த்தப்பட்டோரே, அதாவது ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே 10 கோடி பேர் உள்ளதாகவும் அதில் 84 சதவீத மக்கள் கிராமத்திலும் 16சதவீத மக்கள் நகரங்களில் உள்ளதாகவும் அதேபோல ஒருகோடி பேர் நிலவுடமையாளர் குடும்பங்களாக இருப்பதாகவும் அதில் 70%குடும்பங்கள்  2.5ஏக்கருக்கு குறைவாக 16சதவீத குடும்பங்களும் 2.5லிருந்து 5ஏக்கர் வரையுள்ள நிலங்களைகையகப்படுத்திஉள்ளதாகவும்.இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள சிறியஅளவிலானநிலம்சார்ந்தவர்களே தாழ்த்தப்பட்ட மக்களிடையே தோன்றியுள்ளனர்.நகரங்களில் வசிக்கும் 16சதவீத தாழ்த்தப்பட்ட மக்களின் பெரும்பகுதியினர் அமைப்பற்ற தொழில்களான மூட்டை தூக்குதல் வண்டி இழுத்தல் சுகாதாரப்பணி இப்படி திறனற்ற உடல் உழைப்பு  பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர்.எஞ்சிய சிறுபான்மை யினர்அமைப்புசார்ந்த தொழில்களிலும் உள்ளனர்.(இந்திய கணக்கெடுப்பில்).

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் தொகுப்பில் மொத்தம் 67 ஜாதிகள் உள்ளன. பல்லவர் காலம் தொட்டு 500ஆண்டுகளாக பல்வேறு பகுதியில் இருந்து ஆதிக்கவாதிகளின் குடியேற்ற பகுதியாக தமிழ் பேசும் பகுதி விளங்கியது.பல்லவர் காலம் தொட்டு சோழர் காலம் வரை உருவாக்கித் திடப்படுத்தப்பட்டு ஜாதிமுறையும் அதன் உடன் தோன்றிய தீண்டாமையும் நிலஉடமை கிராமிய சமூகத்தில் ஒரு இறுக்கம் அடைந்த வேலை பிரிவினை உணர்த்துகிறது.இவை ஆரியரால் உருவாக்கப்பட்டது திராவிடர் உருவாக்கப்பட்டது என்பது ஆதாரமற்றவை. இவை கிராமிய நிலவுடமை சமூகத்தின் ஒரு வடிவமாக காண்பதே பொருத்தமாக இருக்கும்.

அரசு அதிகாரத்தையும் கோயில் அதிகாரத்தையும் மையமாகக் கொண்ட நில உடமை கிராமிய சமூகத்தில் இந்த இரண்டு அதிகாரங்களிலிருந்தும் தீண்டதகாத வர்கள் விலக்கி வைக்கப்பட்டனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தமிழக தாழ்த்தப்பட்டோர் பொது அரங்கிற்கு ஈர்க்கப்பட்டனர். இவர்களின் முன்னேற்ற வரம்புகள் மிகமிக குறைவாக இருப்பினும் சமூக வரலாற்றில் முதன் முதலில் பொதுவான சமூக கட்டமைப்புக்குள்  இழுக்கப்பட்டனர்.

1833 ல் பிரிட்டனில் அடிமுறை ஒழிக்கப்பட்ட பின்னர் இங்கும் சட்டமாக்கப்பட்டது (1843).

முதலாளித்துவ சமூகத்தின் தொடக்கத்தில்உருவானஉள்ளிழுக்கப்படல் வரம்புக்கு உட்பட்டதாக இருப்பினும் ஆளும் வர்க்கத்தால் நிர்ணயிக்கப்பட்டதாக இருப்பினும் குறிப்பிட்ட அளவிற்கு பயன்பட்டது.  நிலம் அதிகாரம் வேலைவாய்ப்பு கல்வி ஆகியவற்றில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட கட்ட வளர்ச்சிக்கு பின்னர் தாழ்த்தப்பட்டவர்களுக்குள் உருவான நடுத்தரவர்க்கசக்திகள்உள்ளடக்கப்படுதலின் வரம்புகளை விரிவாக்கப்பட்டு உந்துவிசை கொடுப்பவர்களாக பரிணாமை வளர்ச்சி பெற்றனர்.கிழக்கு இந்திய வணிக நிறுவனத்தின் படைகளிலும் பிரிட்டிஷாரிடம் வீட்டு வேலைக்காகவும் பணியிலும் இன்னும் சில ஆங்கிலேயர்களின் தேவைக்கான பணியில்அமர்த்தபபட்டனர். இவர்களின் வேலைவாய்ப்பு பணப்புழக்கத்தையும்  சமூக இயங்குதலுக்கு இவர்கள் நிலத்தின் பக்கம் இழுத்தது.மேலும்அரசானது புறம்போக்குநிலம்தாழ்த்தப்பட்டோருக்கு கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது(30.09.1892).அரசாணை கிடைத்தும்நிலம் கையகப்படுத்துவதில் பெரிய இடைவெளியும் பாரதூரமான தடைகளும் இருந்தது. இருந்தும் அவை இந்த வளர்சிக்கும் சமூகத்தில் சலனத்தை ஏற்படுத்தியது எனலாம்.

பார்ப்பனர்கள் கிராமங்களை விட்டு அரசு அதிகாரத்திற்காக நகரத்தை நோக்கி நகர்ந்த பின் ஆங்காங்கே பார்ப்பனர்களின் கீழ்  குத்தகை யாளர்களாக இருந்தவர்கள் பார்ப்பனர்களின் நிலங்களில் அமர்ந்து கொள்ளஅவர்களிடம்குத்தையாளர்களாக பறையர் பள்ளர் பெருமளவில் நகர்ந்தனர். இப்படி நிலத்தை சுற்றி சிறு உரிமையும் வளையமும் உருவாயிற்று.

கல்வி கற்பதில் கற்றுக் கொடுப்பதில் பல்வேறு தடைகள் இருந்தன. உயர் ஜாதியினரே கல்வி கற்கும் நிலையில் இருந்ததால்.தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கல்விக்காக தனிப் பள்ளிகள் உதவித்தொகை இரவு பள்ளி,பள்ளிக்குரிய இலவச நிலம் பல சலுகைகள் அளிக்கப்பட்டன.

(இன்னும் பின்னர் விரிவாக பார்ப்போம் )

இந்திய வரலாறு ஏகாதிபத்தியம் பெரும் முதலாளியம் நிலப்பிரப்புத்துவம் ஆகியவற்றின் கூட்டினைவாகும்.இந்தக் கூட்டுக்குள் முதலாளியத்தின் வளர்முக நிலையோடு  மட்டும் இன்றி ஏகாதிபத்தியத்தால்நிர்ணயிக்கப்பட்ட அதன் குறுக்கப்பட்ட தன்மையும் காண்பிக்கிறது. இதில் சமூக கட்டுமானத்தின் அடிப்படை அகன்று விரிந்து போய்விடாத அளவுக்கு வரம்புக்கு உட்பட்ட விதத்தில் பல ஜாதிகளுக்கு ஊடான அரசியல் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டு இருக்கின்றன.

(எழுத பயன்பட்ட நூல்கள் கோ. கேசவனின் ஜாதியம், தீண்டாமை குறித்த சில சி என் அண்ணாதுரை அவரின்  நூல்.)

தொடரும் சிபி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்