நமது சமூகத்தில் கல்விமுறை ஒரு அலசல்

நமது கல்வி

இந்த செய்தியும் உண்மையையும் தேடியே என் கட்டுரை

தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 10.205 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, மனிதவள மேம்பாட்டு துறை செயலர் நந்தகுமார்.

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட 10,205 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் பல்வேறுஅரசுப் பணிகளுக்கு 50,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

தமிழக அரசுப் பணிகளில் குரூப்-4 பிரிவில் உள்ள 10,205 காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு நடத்தப்பட்டது. இதில் 22 லட்சம் பேர் பங்கேற்றனர்.

அதில் இருந்து தகுதிவாய்ந்த 5,278 இளநிலை உதவியாளர்கள், 3,339 தட்டச்சர்கள், 1,077 சுருக்கெழுத்தர்கள், 425 கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓ),67 வரி தண்டலர்கள், 19 கள உதவியாளர்கள் என மொத்தம் 10,205 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில், அவர்கள் அனைவருக்கும் பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாக, 12 பேருக்கு நியமன ஆணைகளைமுதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருபுறம் செவிலியர் வேலைக்கு உத்திரவாதம் அளிக்காத இதே அரசு

நான் இந்திய சாதி அமைப்பு முறையை தேடிய பொழுது அதற்கான பிர்ச்சினை நமது கல்வியிலே உள்ளது என்றறிந்து அதனையும் இதன் ஊடாக அறிந்துக் கொள்ள ஒரு முயற்ச்சியேதான் இந்த கல்வி பற்றி தேடுதலும்

ஆக ஜாதியை பற்றி புரிந்துக் கொள்ள அதன் பல உடன்பிறப்புகளையும் அறிந்தே செல்வோமே என்ற ஒரு தேடுதல் இவை.

தோழர்கள் தங்களின் கருத்துகளை அவசியம் தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

காலனி ஆதிக்கவாதிகளின் கருத்துக்களும் பங்கும்

 கல்விக் கற்றறிதவர்கள் தங்கள் நாட்டின் மரபுவழி வரலாற்றை கையால் எழுதப்பட்ட இதிகாசங்கள் புராணங்கள் வாழ்க்கை வரலாறு எனும் வடிவத்தில் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் பண்டைய கால இந்திய வரலாறு குறித்த தற்கால ஆராய்ச்சி பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பமாயிற்று.

 பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலனி ஆதிக்க நிர்வாகத்தின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு இந்த ஆய்வு தொடங்கியது 1765இல் வங்காளதிலும் பீகாரிலும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகையின் கீழ் வந்தபோது இந்து வாரிசு உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கடினமாக இருந்தது கண்டனர்.

எனவே அந்நாட்களில் மிகவும் அதிகார உரிமை படுவதாக கருதப் பட்ட மனுதருமத்தில் உள்ள கருத்துகளை பிரிட்டிஷ் தங்களின் நலனுக்காக 1776 இந்து சட்டத் தொகுப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர் . இதன் மூலம் பிரிட்டிஷ்சார் இந்துக்களின் சிவில் சட்டங்களை செயல்படுவதுவதற்க்கு இந்து சமய சாஸ்திர வல்லுனர்களையும் பண்டிதர்களும் பயன்படுத்தியது போன்றேமுஸ்லிம் சட்டங்களை செயல்படுத்துவதில் மௌலிகளை பிரிட்டிஷ் நீதிபதிகளுக்கு துணையாக இருந்தனர்.

பண்டைய சட்டங்களையும் பழக்கவழக்கங்களில் புரிந்து கொள்ளும் ஆரம்பகால முயற்சிகள் அனேகமாக 18-ம் நூற்றாண்டு வரை நீடித்தன.

இதன் விளைவாக 1776கல்கத்தாவில் வங்காள ஆசியக் கழகம் நிறுவப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த சர். வில்லியம் ஜோன்ஸ் என்ற அதிகாரி தான் அந்த கழகத்தை நிறுவியவர்.

1785 ல் வில்கின்சால்  பகவத் கீதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

1823 ல் லண்டனில்  பிரிட்டிஷ்  ஆசியக் கழகம் உருவாக்கப்பட்டது. தொடக்க காலத்தில் ஐரோப்பிய மொழிகள் சமஸ்கிருதத்தையும் ஈரானிய மொழியையும் பெரிதும் ஒத்திருந்தன என்று ஐரோப்பிய நாடுகளை இந்தியாவின் மீது பல கருத்துகளை இது தூண்டி பல வேலைகளை செய்தது.

இந்தியவியல் ஆராய்ச்சிக்கு மிகப்பெரும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் ஜெர்மன் அறிஞரான  மாக்ஸ் முல்லர் ஆவர். அவர் தமது வாழ்நாளில் பெரும்பகுதியை இங்கிலாந்தில் கழித்தார். 1857ஆம் வருடம் இந்தியஎழுச்சி பிரிட்டிசு பல உண்மையை உணர்த்துவதாக இருந்தது. ஆகையால் தங்களுக்காக வேண்டிய இந்திய மக்களின் பழக்க வழக்கங்களை சமூக அமைப்புகள் பற்றி மிக ஆழமாக தெரிந்து கொள்ள மிக மிக அவசியம் என்பது பிரிட்டனுக்கு பெரிதும் உணரப்பட்டது. இதேபோன்று கிறிஸ்தவ மதத்துக்கு பல ஹிந்துக்களை ஈர்க்கும் பொருட்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வலுப்படுத்தும் பொருட்டு இந்து சமயத்திலுள்ள பலவீனமான பகுதிகளை கண்டறிய கிறிஸ்தவ சமயப் பரப்பாளர்கள் விரும்பினார்கள்.

இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே மாக்ஸ் முல்லரை கொண்டு பண்டைய இந்து சமய நூல்கள் பிரம்மாண்ட அளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன .

இரத்தின சுருக்கமாக கூறினால் இந்திய வரலாறு குறித்த பிரிட்டிஷ் கண்ணோட்டங்கள் இந்திய குணநலன் வெளிப்படுத்தவும் இந்திய சாதனைகளைச் இழிவுபடுத்தவும் காலனி ஆதிக்க ஆட்சி நியாயப்படுத்தும் ஆக இருந்தன.

இதில் முக்கியமாக வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் எழுதிய இந்தியாவின் ஆரம்ப கால வரலாறு என்ற நூல்.

இவைதான் பண்டைய கால பல்வேறு விதமான கருத்தாக்கங்களை உருவாக்கிய ஏகாதிபத்திய ஆதரவு தன்மை கொண்டதாகவும் இன்றும் பல அதிகார வர்க்கத்தில் உள்ளோர் வாசிக்கும் நூலாக அவை கொண்டுள்ளது என்றால் மிகையன்று.

(ஆதாரம் பண்டைய கால இந்திய ஆர்எஸ் சர்மா பக்கம் 8 லிருந்து 11 வரை சுருக்கம் மாற்றம் என்னுடையவை) 

இன்று நமது சமூகத்தில் படிப்பென்பது எல்லா மட்டத்திலும் தூக்கி நிறுத்தப் படுகிறது ஆனால் கல்வியானது எதற்காக என்று பார்த்தால் வெறும் பொருளாதர தேவையை மட்டுமே முன்னிறுத்தி உள்ளதால் அவை அறிவியல் வளர்ச்சியும் தன் மீது அழுத்திக் கொண்டிருக்கும் சுரண்டலையும் எப்பொழுதுமே புரிந்துக் கொள்வதே இல்லை என்பேன்.

நமது இன்றைய கல்வி முறையானது உண்மையில் ஏன் சமுக பிரச்சினையை தீர்பவனாக இல்லை?அரசு எந்திரமானது தனது ஒடுக்கு முறையை கல்வியில் எப்படி திணிக்கிறது என்பதனை பற்றி பார்ப்போம்.

உற்பத்தி உறவுகளின் மறு உற்பத்தி அதாவது முதலாளித்துவ சுரண்டல் உறவு, அதற்க்கு சேவை செய்யும் கல்வி மிகவும் அமைதியான மற்றும் ஆழமான கருத்தியலாகும்.

சிறுவயதிலே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் படுகிறார்கள் அவர்கள் தாய் தந்தை மற்றும் பள்ளியில் பல விசியங்கள் திணிக்கப் படுகிறது, நடைமுறையில் உள்ள கருத்தியல் கற்பிக்கப் படுகின்றன.

இயற்கை அறிவியல் ,அறிவியல் வகுப்புகளில் பகுத்தறிவுப் பூர்வமாக கற்றுக் கொடுக்கப் படுகிறது.ஆனால் மொழிப் பாடத்தில் மதம் சார்ந்து பகுத்தறிவு மறுப்பு முக்கியமாக உள்ளது.

சமூக அறிவியல் முற்றிலுமாக பகுதறிவு மறுப்பு கண்ணோட்டத்தில் பொய்களை தவறான தகவல்களின் அடிப்படையில் கற்பிக்கப் படுகின்றன.

இத்தகை இரண்டுச் சிந்தனைகளின் மூலவேர் நம் கல்வி அமைப்பில் உள்ளது. இதை திட்டமிட்டு ஆளும் வர்க்கம் செய்கிறது.

இன்றைய ஆளும் வர்க்கம் தனது நலனுக்காக சமூக நிகழ்வுகளை பகுத்தறிவு மறுப்பு கண்ணோட்டத்தில் கொண்டு செல்கிறது..

இன்றைய கல்விமுறையானது வெறும் மனனம் செய்வது மட்டுமே.

இவை சமுக அறிவோ அல்லது அறிவியல் ரீதியான அறிவியல் பூர்வமான சிந்தனை இல்லாத வெறும் கருத்து முதல்வாதிகளாகவும்,

சாதி மத குப்பைகளை சுமந்து திரியும் கீழான சிந்தனையுள்ளவர்களாக அரசே மாணவர்களை வளர்க்கிறது.

இவை ஒருபுறமிருக்க கல்வி என்பது பள்ளியில் மட்டுமல்லாது வீட்டிலும் படிப்பு. இவ்வாறு இளம் வயதினரின் காலமெல்லாம் உழைப்பேயன்றி வெறும் புத்தகப் படிப்பிலும் மனனம் செய்வதிலும் கழிகிறது, இவை அவர்களை ஒரு செக்கு மாட்டுதனத்திற்க்கு கொண்டு போகிறது.

தொழிற்சாலையில் பொருட்களை உற்பத்தி செய்யப்படுகின்றது. அதே போல் இக்கல்விக்கூட தொழிற்சாலைகளில் (கல்லூரிகள் உட்பட) கூலியடிமைச் சந்தைக்கு தயாராகும் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.

சிந்தனை முறையில் இவர்களுக்கு தங்களின் இன்னிலை பற்றிய கல்வி அறிவு போதிக்கப் படுவதில்லை.

முதலாளித்துவத்தின் திட்டமற்ற உற்பத்தியை இங்கும் காணலாம் ஆம் இவர்களை ஒரு கருவியாக சிந்தனையற்ற உழைப்பு கருவியாக வளர்த்தெடுக்கிறது. முதலாளித்துவத்தின் அரச நிர்வாகம்,தொழிற்சாலைகள்,விற்னை,இறக்குமதி ஏற்றுமதி வாணிபம் இன்னும் பல சிறு தொழில்கள் நடத்த படித்த கூலியடிமைகள் தேவைப்படுகின்றனர்,அத்தேவைக்கு சந்தை நிரம்பி வழிவதால் மிக மலிந்த விலையில் கூலி அடிமைகளின் உழைப்பைப் பெறமுடிகிறது.

கல்வி என்பது தனிமனித வளர்ச்சிக்கும்,சமுதாய வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது.

ஆனால் 

இன்றோ உலகமய, தனியார்மயக் கொள்கையால் கல்வி கடை சரக்காக மாறி, யார் வேண்டுமானலும் கல்வி நிலையங்களை துவங்கலாம் என்ற காரணத்தால் பல குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. அப்படியே படித்து விட்டாலும் அவை சார்ந்த வேலை இல்லை.

உலகமய,தனியார்மயக் கொள்கையால் ஏழை மிகவும் ஏழையாக ஆக்கப்பட்டு அவர்களின் குழந்தைகள்,தான் என்ன ஆகப்போகிறோம் என்பதே தெரியாமல் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்று மதவாதிகளின் ஆட்சியில் பகுத்தறிவாதிகள் நாத்திகவாதத்தை தூக்கி நிறுத்த முயற்ச்சிக்கின்றனர் (இவை மக்களை அணுகி உள்ளதா என்பதனை பின் பார்ப்போம்)மதவாதிகளோ மக்களிடம் மண்டிக்கிடக்கும் பழைமைவாதம் மற்றும் மதம் சார்ந்த சிந்தனையை விதைத்து அறுவடை செய்துக் கொண்டுள்ளனர்.

இன்றைய உலக மயம் தனியார் மய சூழலில் எல்லாம் லாபம் கொழிக்கும் தொழிலாகி போயுள்ள போது நாம் எங்கெ தேடுவது தரமான கல்வியை.

உலக மயமாக்கலுக்கு பிறகு கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனித்தனியாக நீயுக்கிளியர் குடும்பங்களாக உள்ள சூழலில் குழந்தை வளர்ப்பு என்பதே பெற்றோருக்கு பெரும் பாரமாகி உள்ளது.

கடன்பட்டாவது தன் குழந்தையை எப்படியேனும் ஒரு நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் அவை விளம்பரத்தில் முன்னணியில் உள்ள பள்ளியாக இருக்க வேண்டும் இப்படிதான் இன்றைய கல்வியின் மோகம்.

அப்படிபட்ட அந்தப் பள்ளியில் சேரும் பிள்ளை வீட்டிலும் பள்ளியிலும் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டால் பதிலளிக்க முடியாத பள்ளி,பதிலளிக்க நேரமில்லாத குடும்பம்,இப்படி சிந்தனை முடக்கப் பட்டு கேள்விக்கு பதிலளிக்க திறனற்ற பள்ளி ஆசிரியர்கள் எடுக்கும் ஆயுதம் ஒடுக்குமுறை அடி உதை குழந்தைகள் ஒருமுறையில் அடங்கி ஒடுங்கி அடிமைதனத்திற்க்கு பயிற்றுவிக்கும் இடமாக பள்ளி இருக்கிறது.

அப்படியே படித்து முடித்து தன் கல்விக்கான வேலை கிடைக்கிறாதா என்றால் இல்லை ஏனெனில் இவை திட்டமிடப்பட்ட கல்வி முறை இல்லை அவர்களுக்கு காசு கொழிக்கும் கல்விகளை சந்தையில் விற்பனை செய்கின்றனர்,காசு கொடுத்து வாங்கும் மக்கள் தலையிலே அரசும் திணித்து விடுகிறது.கல்வியை கொடுக்காத அரசு வேலையையும் கொடுக்க முன் வரவில்லை.

ஆக இந்த கல்வியால் அந்த மாணவன் கற்றவை என்ன?தன் வாழ்க்கைகான கல்வியாக ஏன் இல்லை என்று அவன் சிந்திக்கும் அளவிற்க்கு அவனை ஏன் வளர்க்கவில்லை என்பதே என் கேள்வி.

கல்வி முடிந்து வேலை தேடும் பட்டாளம் சந்தையில் பெருகிக் கொண்டே உள்ளது அவர்கள் விரக்தியடைகின்றனர். அவர்களது விரக்தி பல்வேறு வகையில் ஆளும் வர்க்கத்திற்கு பிரச்சனையாகி விடுகிறது.

படித்த மாணவர்களுக்கும் அரசிற்கும் இடையில் ஏற்படும் முரண்பாடுகள்  பல பயங்கர வடிவங்கள் பெற்றுவருகின்றன.

ஆனால் இந்த அரசு அவர்களுக்கு கொடுப்பது வேலை அல்ல ஒடுக்குமுறை மட்டுமே.

இந்த ஒடுக்குமுறை முதலாளித்துவ சட்டங்களால் தற்காலிகமாக தள்ளிப் போகும், இருந்தும் பல போராட்டங்கள் இந்த அமைப்பில் தீர்வு காண முடியாது இருக்கிறது. அவை நீருபூத்த நெருப்பாக எப்பொழுதும் இருக்கும் அதனை புரிந்து செயல் பட வேண்டியவர்கள் செயல்படல் வேண்டும்.

எல்லா மக்களுக்கான பாட்டாளி வர்க்க பாதையை நோக்கிய புரட்சியால் மட்டுமே புத்தகக் கல்வியால் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்க்கமுடியும்.

சமூக அறிவியல் பூர்வமான சிந்தனை செயல் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் மக்களுக்கான கல்வி ஒரு பொதுவுடைமை சமூக அமைப்பில் மட்டுனே சாத்தியம்.

பள்ளிப் பாடம் என்பது ஒருவித சிந்தனையற்ற மனனம் செய்து ஒப்புவிக்கும் முறையே, இதில் தேர்ச்சி என்பது புத்தக புழுக்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே, இங்கே சிந்தனை எங்கேயும் தேவையின்றி ஒரு நடமாடும் எந்திரமாக்கும் வேலையை செய்கிறது இந்தக் கல்வி முறை. ஆகவே இங்குள்ள சமூக சிக்கலுக்கு காரமாண பல்வேறு பிர்ச்சினை குறித்து நமது கல்விமுறையில் எங்கேயும் போதுப்பதில்லை... இந்த வாழ்க்கை பாடம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாயினும் ஏன் நமக்கு போதிப்பதில்லை? நாம் சிந்தனை அற்ற மூடர்களாக ஆளும் வர்க்க அடிமைகளாக வாழ சொல்கிறது இந்தக் கல்விமுறை..

இதனை நாம் நமது கல்விமுறையில் இருந்து இனம் கண்டால் நலம்.

வெறும் புத்தகக் கல்வியால் மட்டுமே வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் கிடைத்துவிடும் என்று போட்டா போட்டி எங்கும் நீக்கம் மற நிறைந்துள்ளவைதானே. இன்றைய உலகமய தனியார்மய தாராள மய கொள்கையால் அரசு தனது பணியை தனியாருக்கு கொடுத்துவிட்டது. இன்று பெரிய சுரண்டும் இயந்திரங்களாக வளர்ந்து வருகின்றன, இன்று இலவசக் கல்வி என்பது கேலிக் கூத்தாகி வருகிறது.

இன்றைய கல்விமுறையானது வெறும் மனனம் செய்வது மட்டுமே சமுக அறிவோ அறிவியல் ரீதியான அறிவியல் பூர்வமான சிந்தனை அற்ற வெறும் கருத்து முதல்வாதிகளாக சாதி மத குப்பைகளை சுமந்து திரியும் கீழான சிந்தனையுள்ளவர்களாக அரசே மாணவர்களை வளர்க்கிறது. இவை ஒருபுறமிருக்க கல்வி என்பது பள்ளியில் மட்டுமல்லாது வீட்டிலும் படிப்பு. இவ்வாறு இளம் வயதினரின் காலமெல்லாம் உழைப்பேயன்றி வெறும் புத்தகப் படிப்பிலும் மனனம் செய்வதிலும் கழிகிறது, இவை அவர்களை ஒரு செக்கு மாட்டுதனத்திற்க்கு கொண்டு போகிறது.

மேல் படிப்புக்கு பல போட்டிகள் நடத்தப் படுகின்றன இப்போட்டிப் படிப்பில் தேர்ச்சிஅடைந்த போதும் பல்கலைக் கழகப் படிப்பிற்கு நுழைய அவர்கள் பெரும் பொருள் செலவுக்கு பின்னரே கல்விக் கற்க்கின்றனர். இதில் சேர முடியாத மற்றவர்கள் குறைந்த கூலிச் சந்தையில் தள்ளப்படுகின்றனர். ஏற்கெனவே கூலிச்சந்தை நிரம்பி வழிகிறது. இதற்கு மேலும் மேலும் ஆண்டுதோறும் இந்த கூலியடிமைச் சந்தைக்கு படித்தவர் அனுப்பப்படுகின்றனர்.  இதுவே பெரிய வியப்பான செய்தியாகும்.

தொழிற்சாலையில் பொருட்களை உற்பத்தி செய்யப்படுவதுண்டு. இக்கல்விக்கூட தொழிற்சாலைகளில் (கல்லூரிகள் உட்பட) கூலியடிமைச் சந்தைக்கு தயாராகும் பொருட்கள் அனுப்பப்படுகின்றன சிந்தனை முறையில் தங்களின் இன்னிலை பற்றிய கல்வி அறிவு போதிக்கப் படுவதில்லை. முதலாளித்துவத்தின் திட்டமற்ற உற்பத்தியை இங்கும் காணலாம் ஆம் இவர்களை ஒரு கருவியாக சிந்தனையற்ற உழைப்பு கருவியாக வளர்த்தெடுக்கிறது. முதலாளித்துவத்தின் அரச நிர்வாகம், தொழிற்சாலைகள், விற்னை, இறக்குமதி ஏற்றுமதி வாணிபம் இன்னும் பல சிறு தொழில்கள் நடத்த படித்த கூலியடிமைகள் தேவைப்படுகின்றனர், அத்தேவைக்கு சந்தை நிரம்பி வழிவதால் மிக மலிந்த விலையில் கூலி அடிமைகளின் உழைப்பைப் பெறமுடிகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள் முரண்பாடு எழுவதும் தவிர்க்க முடியாததாகும். அதுவே அவ்வமைப்பை உடைத்தும் விடுகிறது.

கல்வி முடிந்து கூலியடிமைத் தொழிலை பெறமுடியாது சந்தையில் நிற்பவர்கள் விரக்தியடைகின்றனர். அவர்களது விரக்தி பல்வேறு வகையில் ஆளும் வர்க்கத்திற்கு பிரச்சனையாகி விடுகிறது.

படித்த மாணவர்களுக்கும் அரசிற்கும் இடையில் ஏற்படும் முரண் பாடுகள் வேறும் பல பயங்கர வடிவங்கள் பெற்றுவருகின்றன. இந்த அரசு அவர்களுக்கு கொடுப்பது ஒடுக்குமுறை மட்டுமே முதலாளித்துவ சட்டங்களால் தற்காலிக ஒடுக்கு முறையால் தள்ளிப் போகும் பல போராட்டங்கள் இந்த அமைப்பில் தீர்வு காண முடியாது இருக்கிறது.

எல்லா மக்களுக்கான பாட்டாளி வர்க்க பாதையை நோக்கிய புரட்சியால் மட்டுமே தேசிய புத்தகக் கல்வியால் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்க்கமுடியும் ... இன்னும் வரும். சிபி. 

உங்கள் கருத்துகளை எதிர் நோக்குகிறேன்

 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்